Friday, August 02, 2013

673. எங்கே கொண்டு செல்லும் இந்தத் தீவிரவாதம்?









*



ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு மதுரைப் பல்கலைக் கழகத்தில் ஒரு கலந்துரையாடல் நடந்தது. ஆங்கிலத்தில் SOCIAL HARMONY என்ற தலைப்பும், தமிழில் சமய நல்லிணக்கம் என்றும் தலைப்பிட்டு மாணவர்களும், ஆசிரியர்களும் அழைக்கப்பட்டிருந்தோம். நடத்தியவர் ஒரு கிறித்துவப் பேராசிரியர். சில கிறித்துவ பாதிரிமார்களும், சகோதரிகளும் அழைக்கப்பட்டு வந்திருந்தனர். ஏறத்தாழ நாற்பது விழுக்காடு கிறித்துவர்கள். இந்துக்கள் ஐம்பது விழுக்காட்டுக்கு மேல். நாலைந்து இஸ்லாமியப் பேராசிரியர்கள் வந்திருந்தார்கள்.

பல நிகழ்வுகளில் ஒன்றில் நாங்கள் சில குழுக்களாகப் பிரிக்கப்பட்டோம். ஒவ்வொரு குழுவிலும் ஆசிரியர்கள், மாணவர்கள், எல்லா மதத்தவர் என்று பிரிக்கப்பட்டு எங்களுக்குள் ஏதாவது ஒரு தலைப்பில் விவாதம் நடந்தது. விவாதங்களை ஒவ்வொரு குழுவிலும் ஒரு மாணவர் குறிப்பெடுத்து, பின்பு அதை விவரமாக எழுதி எல்லோர் முன்பும் வாசிக்க வேண்டும். நானில்லாத ஒரு குழுவில் உள்ள மாணவச் செயலர் தன் குழுவின் கருத்துக்களை வாசித்தார். அப்போது இந்து மதத்தைப் பற்றிய ஒரு கருத்து அவர் வாசிக்கும் போது விவாததிற்குள்ளானது. இந்து மதத்தினர் அக்கருத்தை பொதுக்கருத்தாக வைத்துக் கொள்ளக்கூடாது என்று விவாதித்தனர். சில நிமிட விவாதத்திற்குப் பின் பொறுப்பாளராக இருந்த பேராசிரியர் ஒரு ruling கொண்டு வந்தார். குழுவினர் பேசியது படி செயலர் எழுதியுள்ளார். அது அப்படியே இருக்கட்டும். அதில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்று கூறி அவ்விவாதத்தை முடித்தார்.

அடுத்து இன்னொரு குழுவின் செயல் மாணவர் தன் குழுக்கருத்துகளை வாசிக்க ஆரம்பித்தார். அதில் வழக்கமாக சொல்லப்படும் ஒரு கருத்து - இஸ்லாமியர்கள் பாகிஸ்தானும் இந்தியாவும் கிரிக்கெட் ஆடினால் பாகிஸ்தான் வெல்ல ஆசைப்படுவார்கள் - வாசிக்கப்பட்டது. இஸ்லாமியர் அனைவரும் ஒட்டு மொத்தமாக இதை எதிர்த்தனர். எந்தக் குழு இதைப் பேசியதோ அக்குழு இதை யாரும் ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை என்றார்கள். ஆனால் இஸ்லாமிய நண்பர்கள் இதை report-லிருந்து எடுத்து விட வேண்டும் என்று மிக உறுதியாக நின்றார்கள். பொறுப்பாளர் இப்போது தான் முன்பு சொன்ன ruling-யை விட்டு விட்டார். அக்கருத்தை நீக்கி விடுவோம் என்று அவர் சொல்லுமளவிற்கு விவாதம் முற்றியது.

அன்று எனக்குத் தோன்றியதை ஒரு கட்டுரையாக எழுதி வைத்தேன். அன்று எனக்கு ஒன்று புரிந்தது. மத நல்லிணக்கம் என்பது ஒரு மாயை; கானல் நீர். நல்லிணக்கத்திற்காக ஒரு கூட்டம் கூட்டினால், அதன் முடிவில் நிச்சயம் வந்தவர்கள் முன்பிருந்ததை விட கொஞ்சம் கூடிய முனைப்போடு திரும்பிச் செல்வார்கள் என்று தோன்றியது. பலர் கூறியதை விட அந்த நாலைந்து இஸ்லாமியர் அவ்வளவு தீவிரமாக விவாதித்து, தங்கள் கொடியைப் பறக்க விட்டனர். அன்று அது எனக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. இன்று அப்ப்டியில்லை. பழகிப் போய் விட்டது!!

சல்மான் ருஷ்டி ஒரு புத்தகம் எழுதினார். ஒரு பத்வா பிறபிக்கப்பட்டது. மனிதன் பல ஆண்டுகள் உயிர்ப் பயத்தோடு வாழ்ந்தார். பின் எப்படியோ பத்வா திரும்பிப் பெறப்பட்டது. ஆனாலும் பின் தொடரும் எதிர்ப்புகள் ஏதும் குறைந்த பாடில்லை. அதுவும் நமது இந்தியத் தாய் மண்ணின் இஸ்லாமியர்கள்  இந்தியாவிற்குள் அவரை நுழைய விடக்கூடாதென்று ஒரு பத்வா போட்டு விட்டார்கள். அரசும் துணை போனது - எப்போதும் போல்! சென்ற ஆண்டு ஒரு இலக்கிய விழாவிற்கு அவர் முறைப்படி அழைக்கப்பட்டு, அவர் இந்தியாவிற்கு வரும் நேரத்தில் இந்திய பத்வா எதிர்த்து நின்று வெற்றி வாகை சூடியது. முதல் பத்வா போட்டு விலக்கியாயிற்று. ஓரளவு சுதந்திர மனிதனாக இருந்தார்.இருப்பினும் இந்தியாவிற்குள் வரக்கூடாது என்ற் பத்வாதான் வென்றது.

அடுத்து தஸ்லிமா. அவர்கள் புத்தகத்தில் என்ன எழுதினார்கள் என்பதை விட அவர்கள் புத்தகம் எழுதியதே தவறு என்பது போல் சிந்தித்து அவரையும் இந்தியாவிற்குள் வர இஸ்லாமியர்கள் எதிர்த்தார்கள். இன்று ஸ்னோடன், ஜுலியன் அசாங்கே அங்கங்கே தங்கியிருக்க அனுமதி வேண்டுவது போல் அந்த எழுத்தாளரையும் அங்கங்கே ஓட வைத்தார்கள். அவர்கள் இந்தியாவில், அதுவும் வங்காளத்தில் தங்க ஆசைப்பட்ட போதும் நமது அரசு நமது இஸ்லாமியர்களுக்காக அவரை ஓரங்கட்டும்ப்படி ஆயிற்று.

துரத்தப்பட்ட இருவரும் இஸ்லாமியர்கள். ஆயினும் அவர்கள் மதத்தைப் பற்றித் தவறாகப் பேசிவிட்டதாக இஸ்லாமியர்கள் சொல்லி விட்டால் .. முடிந்தது கதை.

இதை விட நம்மூரில் நடந்த இரு நடப்புகள் நமக்கு என்ன சொல்கின்றது என்று தெரியவில்லை.

நீயா நானா நிகழ்வில் பர்க்கா போடலாம்; போடத் தேவையில்லை என்று இரு கருத்துகள். இதை விவாதிக்க வேற்று மதத்தினர் யாரும் வரவில்லை. இஸ்லாமியர்களே விவாதித்தார்கள். விவாதித்ததும் பர்க்கா போடும் பெண் மக்களே. கலந்துரையாடல் படமாக்கப்பட்டு, சில trailer போடப்பட்டன.

தமிழ்  இஸ்லாமியரின் பத்வா இதற்கும் பாய்ந்தது. நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. உங்கள் மக்கள், அதுவும் பர்க்கா அணியும் மக்கள் கூட இதைப் பற்றி விவாதிக்கக்கூட அனுமதிக்க முடியாது என்பது எந்த வகை அடிப்படை வாதம்?

ஒரு சில வாரங்களுக்கு முன்பு ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் ‘தலாக்’ பற்றி ஒரு விவாதம் என்று விளம்பரங்கள் வந்தன. குரான் வாசகத்தை வைத்து அந்த கருத்தரங்கத்தை ஆரம்பிக்கப் போகிறார்கள் என்று நமது பதிவர் ஒருவர் மிகவும் மகிழ்ச்சியாகத் தன் பதிவில் அதை வரவேற்றும் எழுதியிருந்தார். ஆனால் வழக்கம் போல் பத்வா. நிகழ்ச்சி சொன்ன அன்று நடக்கவில்லை. என்ன ஆனது? ஏன்? எதுவும் தெரியவில்லை. மகிழ்ச்சி தெரிவித்த பதிவரிடம் ஏன் இதை நிறுத்தி விட்டீர்களா என்று கேட்டேன். அவர் மற்றொரு நாளில் நடந்தது என்றார், என்றைக்கு என்று சில முறைகள் கேட்டேன். அதற்கு அவரது பதில் தரவில்லை. //என் கேள்விகளுக்கும் பதில் ஏதும் என் கண்ணில் படும்படி தரவில்லை. கேட்டால் ’போய் உன் கண்ணைச் செக் பண்ணிக்கோ’ என்று கேலி மட்டும் செய்கிறீர்கள்! நல்லது; நன்றி.// -- என்று சொல்லி ஒதுங்கிப் போக வேண்டியதாயிற்று. கடைசி வரை நடந்ததாக அவர் சொன்ன புதிய தலைமுறை நிகழ்ச்சி பற்றி அவரேதும் கூறவில்லை. நான் தேடியும் அதுபோன்ற நிகழ்ச்சி நடந்ததாகத் தெரியவில்லை.
நல்ல வேளை .. இந்த அம்மாவுக்கு யாரும் பத்வா கொடுக்கவில்லை ...

கடந்த இரு நாட்களில் இன்னொரு நிகழ்வு. அமினா வாடுட் என்றொரு பெண்மணி. இவர் ஒரு அமெரிக்க-ஆப்ரிக்க பெண்மணி. இவர் மதம் மாறி இஸ்லாமிற்கு வந்த பெண்மணி. இப்போது இவர் கேரளாவில் வசித்து வருகிறார்.  பேச்சின் தலைப்பு: Islam, Gender and Reform. இவர் சென்னைப் பல்கலையில் பேசுவதற்கு எதிர்ப்பு.  
//Ostensibly "Muslim groups" had threatened to protest ....// போலீஸ் ‘வழக்கம் போல்’ பயந்து விட்டது. போலீசே பயந்த பிறகு துணை வேந்தருக்கு எங்கிருந்து தைரியம் வரும்?! முயன்று பார்த்தும் துணை வேந்தர் மறுத்து விட்டார். பத்வான்னா பத்வா தான் போலும்!

// ..it is tragic that fringe groups that purport to represent Muslim opinion in Tamil Nadu seek to overlook their existence. Worse, they seem to not want such views to be broadcast or heard.// I dont know why they call the protestors as FRINGE GROUPS, though every one fears such "FRINGE" groups!!! 

 எனக்குச் சில கேள்விகள்:

1.  மற்ற மதங்களிலிருந்து இஸ்லாமிய மதத்திற்குள் யாரும் வந்து விட்டால் (மைக்கிள் ஜாக்சன்; ஆர்ம்ஸ்ட்ராங்; இப்போது பதவி விலகிய போப் ... லிஸ்ட் ரொம்ப நீநீநீநீளளளளம்ம்ம் ... அடடே.. நம்ம பெரியார் தாசனை விட்டு விட்டேனே ..!) ரொம்ப சந்தோஷப்பட்டு பதிவுகள் எல்லாம் நம் பதிவர்கள் போடுகிறார்கள். நல்லது தான். புதிதாக வருபவர்களை வரவேற்பது நியாயம் தான். ஆக மற்ற மதத்திலிருந்து உங்கள் மதத்திற்கு வந்தால் லாலி பாடுவீர்கள்; ஆனால் உங்கள் மதத்திலிருந்து - நான் கிறித்துவ மதத்திலிருந்து வெளி வந்தது போல் - யாரேனும் வெளியே வர முடியுமா? அப்படி யாரும் மனம் மாறி வெளி வந்தால் ஏன் உங்கள் மதமும், நீங்களும் தடை செய்கிறீர்கள்?

2.  உங்கள் மதத்து ஆட்களே எந்த ஒரு கேள்வியையும் மதத்தில் எழுப்பக் கூடாதா? இது மதமா இல்லை இரும்புக் கோட்டையா? ஏனிந்த இறுக்கம்? அல்லது ஏனிந்த பயம்? அல்லாவைக் காப்பாற்றவா? இஸ்லாமைக் காப்பாற்றவா?

நம் பதிவர்களே தங்களை அடிப்படைவாதிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அது நியாயம் என்பது அவர்கள் தரப்பு. ’அடிப்படை வாதி என்பதற்கு எப்போதும் negative meaning தான் எல்லோரும் கொடுப்பதுண்டு. ஆனாலும் நீங்கள் அதைப் பற்றெனப் பிடித்துகொண்டு விட்டீர்கள். சரி.  ஆனால்

உங்கள் தீவிரவாதம் ஏன் உங்கள் மதத்தினர் மீதும் இப்படிப் பாய்கிறது?

அச்சமூட்டும் தீவிரவாதம் நம்மை, நம் சமூகத்தை எங்கு கொண்டு செல்லும் என்று நினைக்கிறீர்கள்?

அதிலும் பக்கத்திலுள்ள கேரள இஸ்லாமியர்கள் உங்களைப் போல் புனிதர்கள் இல்லையோ? அவர்கள் முழுச்சமயச் சார்புள்ள ஓணம் கொண்டாடுவார்கள். ஆனால்  நீங்கள் பொங்கல் கொண்டாட மாட்டீர்கள். அது தெய்வக் குத்தம் ஆகிவிடும் என்பீர்கள். ’வணக்கம்’ என்றால் காத தூரம் ஓடுவீர்கள்!!!

*

38 comments:

  1. தலைவரே

    ஆர்ம்ஸ்ட்ராங் இஸ்லாமுக்கு மாறியது - புரளி

    போப் இஸ்லாமுக்கு மாறியது - புரளி

    மைக்கேல் (அவரை ஏன் சைக்கிள் மாதிரி மைக்கிள் ஆக்கிட்டீங்க) இஸ்லாமுக்கு மாறியது - புரளி

    பதிவு போடறதுக்கு முன்னாடி ஒரு முறை கூகிளாண்டவரைக் கேட்டு இருக்கலாமே!

    ReplyDelete
  2. அனைத்து மதங்களுமே அன்பை போதிக்கத்தான் பிறந்தன.ஆனால் இன்று மதங்களின் பயணம் எதை நோக்கிப் பயணிக்கின்றது என்பது புரியவில்லை. நன்றி ஐயா

    ReplyDelete
  3. வணக்கம் அய்யா,
    /உங்கள் தீவிரவாதம் ஏன் உங்கள் மதத்தினர் மீதும் இப்படிப் பாய்கிறது?

    அச்சமூட்டும் தீவிரவாதம் நம்மை, நம் சமூகத்தை எங்கு கொண்டு செல்லும் என்று நினைக்கிறீர்கள்?//

    எய்தவன் அரேபிய ஏக இறைவன் இருக்க அம்பான முஸ்லிம்களை நோவது நியாயமா?
    [பல நாட்டு,மொழி ஏக இறைவன்கள் இருப்பதால்,தெளிவாக நாடு சேர்த்து குறிப்பிடுகிறோம்]
    அரேபிய ஏக இறைவன் இறுதி தூதர் மூலம் 23 வருடங்களாக [610_632] இறக்கிய குரானைக் கேள்வி கேட்காமல் பின்பற்றினால் கிளுகிளு சுவனம்,இல்லையே நிரந்தரமாக சித்திரவதை செய்யும் நரகம் என இஸ்லாம் தெளிவாக கூறிவிடுகிறது. ஆகவே குரானின் விள்க்கமாக முல்லாக்கள் சொல்வதை 1400 வருடங்களாக மூமின்கள் கடைப் பிடித்து வருகிறார்கள்.

    இந்த விளக்கங்களுக்கு மாறாக அமீனா வதுத் சொல்லும் பெண்ணிய குரான் விளக்கங்களை வஹாபி முல்லாக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
    Amina Wadud (born September 25, 1952) is an American scholar of Islam with a progressive focus on Qur'an exegesis (interpretation).
    http://home.zcu.cz/~dkrizek/ISPV/texty%20ISPV/8-12/10e%20-%20Wadud.pdf
    இந்தக் கேள்விகளுக்கு குரானில் இருந்து பதில் நான் அளிக்கிறேன்.
    1…. மற்ற மதத்திலிருந்து உங்கள் மதத்திற்கு வந்தால் லாலி பாடுவீர்கள்; ஆனால் உங்கள் மதத்திலிருந்து - நான் கிறித்துவ மதத்திலிருந்து வெளி வந்தது போல் - யாரேனும் வெளியே வர முடியுமா? அப்படி யாரும் மனம் மாறி வெளி வந்தால் ஏன் உங்கள் மதமும், நீங்களும் தடை செய்கிறீர்கள்?
    3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.
    2. உங்கள் மதத்து ஆட்களே எந்த ஒரு கேள்வியையும் மதத்தில் எழுப்பக் கூடாதா? இது மதமா இல்லை இரும்புக் கோட்டையா? ஏனிந்த இறுக்கம்? அல்லது ஏனிந்த பயம்? அல்லாவைக் காப்பாற்றவா? இஸ்லாமைக் காப்பாற்றவா?
    முனாஃபிக்குகள்=முல்லாக்களை கேள்வி கேட்கும்அல்லது நடுநிலை முஸ்லீம்கள்
    33:60. முனாஃபிக்குகளும், தங்கள் இதயங்களில் நோய் உள்ளவர்களும், மதீனாவில் பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்களும் (தம் தீச்செயல்களிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையானால், அவர்களுக்கு எதிராக (நடவடிக்கைகள் எடுப்பதை) உம்மிடம் நிச்சயமாக சாட்டுவோம். பிறகு அவர்கள் வெகு சொற்ப(கால)மேயன்றி அங்கு உமது அண்டை அயலார்களாக (வசித்திருக்க) மாட்டார்கள்.
    4:143. இந்த முனாஃபிக்குகள் முஃமின்களின் பக்கமுமில்லை, காஃபிர்களின் பக்கமுமில்லை; இரு பிரிவினர்களுக்கிடையே தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்; அல்லாஹ் எவரை வழி தவறச் செய்துவிட்டானோ, அவருக்கு (நபியே!) யாதொரு வழியையும் நீர் காணமாட்டீர்.

    சிந்திக்க மாட்டீர்களா!!!????

    ReplyDelete
  4. நல்ல பல கருத்துக்களை பகிர்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  5. எனக்கு கேள்வி மட்டும்தான் கேக்க தெரியும்னு சொல்லிக்கிறது சரிதான் போலருக்கு. நிறையவே கேட்டிருக்கீங்க. அதுக்கு ஒருத்தர் பதிலையும் சொல்லிட்டார்.

    சரி, முந்தைய போல் இஸ்லாம் ஆயிட்டாரா? சொல்லவே இல்ல:))

    ReplyDelete
  6. கொத்ஸ்

    நீங்க சொன்ன புரளியெல்லாம் புரளின்னு இஸ்லாமியர் தவிர எல்லோருக்கும் தெரியுமே. இதுக்கு எதற்கு ஆண்டவரிடம் போகணும்?! ஓ! இவர்களோடு பெரியார் தாசனைச் சேர்த்ததால் சொல்லிட்டீங்களோ? அவரு இப்ப எந்த சைடுல இருக்கார்னு தெரியலையே! ஆனா அவரும் வெளியே போகணும்னு நினச்சார்னா ... சார்வாகன் சொன்னது தான் நடக்குமோ?

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. //அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.//

    அல்லாஹூ அக்பர்! - இப்படி சொல்லுவாங்களே .. அதுவா?

    ReplyDelete
  9. நன்றி சார்வாகன். உங்கள் பின்னூட்டம் என்றாலே புதிதாக சில points கிடைக்குது!

    ReplyDelete
  10. //முந்தைய போப் இஸ்லாம் ஆயிட்டாரா? சொல்லவே இல்ல:)) //

    அடடா .. உங்களை உட்டுட்டாங்களா? அதெல்லாம் இல்லை.. உட்டுட்டேன்னு அவர் இஸ்லாமியர்களிடம் மட்டும் ரகசியமா சொல்லிட்டாராம்!

    ReplyDelete
  11. பொதுவாக உங்கள் பதிவில் ஒரு பெரிய மனுசத்தன்மை இருக்கும். அதாவது வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது போன்ற மெல்லிய நடையை பல பதிவுகளில் படித்துள்ளேன்.

    இந்த பதிவு போல இத்தனை ஆணித்தரமாக எங்கும் நீங்கள் பேசியது இல்லை. உங்களை பார்க்க வேண்டும் போல் உள்ளது.

    நிச்சயம் சந்திப்பேன். ஆங்கில பதிவை படித்தேன். நிறைய நீங்க அதில் எழுதியிருக்கலாமோ?

    இரண்டு பேரும் ஒரே சமயத்தில் வெவ்வேறு விதமாக சிந்தித்துள்ளோம். என் பதிவில் இதைப் பற்றித்தான் பேசியுள்ளேன்.

    இதை கூகுள் ப்ளஸ் ல் முகநூலில் பகிரும் போது நாலு பேரு வந்து என்னை குத்தக்கூடும்.

    பரவாயில்லை. நினைப்பதை சொல்ல இல்லாத உரிமை வேறென்ன என்ன வேண்டிகிடக்கு?

    ReplyDelete
  12. //ஆங்கில பதிவை படித்தேன். நிறைய நீங்க அதில் எழுதியிருக்கலாமோ?//

    ஆளுல்லாத டீக்கடையில் டீ ஆத்தணுமான்னு ஒரு கேள்வி!!

    //இத்தனை ஆணித்தரமாக எங்கும் நீங்கள் பேசியது இல்லை. //

    அப்டியா? இதையே இன்னும் கொஞ்சம் ஆணித்தரமாக எழுதியிருக்கலாமோன்னு நினச்சேன்.

    ReplyDelete
  13. அந்த கருத்தரங்கத்தை நிறுத்தியது சென்னைப் பழ்கலைக்கழகம்! இனி எதிர் காலத்தில் அரசு பின்பற்றுகிற பொருளாதார விசயத்திற்கு எதிராக பேசினாலும் விவாதத்திற்கு பழகலைக்கழகம் இடம் கொடுக்காதோ?

    அடிப்படைவாதிகள் முதலில் பயந்தாகொல்லிகள்!!!

    ReplyDelete
  14. ஐயா வணக்கம்.
    நான் இதுதான் முதல் முறை உங்களின் தளத்திற்கு வருவது.
    திரு ஜோதிஜி ப்ளஸ்-ல் பகிர்ந்ததை பார்த்தேன். என்னுடைய பதிலை இந்த பதிவில் பதித்துள்ளேன்.
    http://saidaiazeez.blogspot.ae/2013/08/blog-post.html
    வந்து பாருங்களேன்.

    ReplyDelete
  15. சைதை அஜீஸ்

    நிச்சயம் உங்கள் பின்னூட்டத்திற்குப் பதில் தருகிறேன். ஆனால் அதற்கு முன்பு ஏன் இந்த கூட்டத்தைத் தடை செய்தீர்கள் .. மற்றும் நீயா நானா நிகழ்ச்சித் தடை; புதிய தலைமுறை நிக்ச்ச்சித் தடை; என்பதற்குப் பதில் தந்து விட்டால் நல்லது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  16. ஆணித்தரமான பதிவு. நியாயமான கேள்விகள்

    ReplyDelete
  17. சைதை அஜீஸ்

    இன்னொரு மகிழ்ச்சியான செய்தி.

    வழக்கமாக ’தமிழ்மண மகுடத்தில்’ இஸ்லாமியப் பதிவுகள் 37 ஓட்டுகள் வாங்கி அடிக்கடி ’மேலெழுந்து’ வரும். ஆனால்(அந்த 37 பேரும் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள தொடர்பால்) இப்பதிவுக்கு அந்த 37-ல் யாரும் வரவில்லையே என்று நினைத்தேன். நீங்கள் வந்து விட்டீர்கள் என்று எனக்கு மகிழ்ச்சி.

    ReplyDelete
  18. தமிழக இஸ்லாமியப் பெண்களின் குரல் கேளுங்கள் http://www.youtube.com/watch?v=v9z7lRB4gQ8

    ReplyDelete
  19. இன்று உலகில் அதிகமாக விமர்சனம் செய்யப்படுவது இஸ்லாம் என்பது தெரிந்த விஷயம்
    இஸ்லாத்தின் கொள்கைகளை விமர்சிக்காமல் முஹம்மத் (ஸல்)அவர்களை கீழ்த்தரமாக விமர்சித்ததால் வந்த பிரச்சினை
    அமீனா வாடுட் பிரச்சினை என்னவென்று எனக்கு முழுவதும் தெரியாது
    ஆனால் ஒரு விஷயம்
    நீங்கள் கிறிஸ்துவம் பிடிக்கவில்லை அதனால் வெளியில் வந்து விட்டேன் என்று சொல்கிறீர்கள் . சரியான கொள்கை .
    எனக்கு இஸ்லாம் பிடித்துள்ளது அதனால் இருக்கிறேன் . இதுவும் சரியானது
    இஸ்லாமில் வணக்கத்தை ஆண்கள்தான் வழிநடத்த வேண்டும் என்பது ஒரு முக்கியமான கொள்கை . இதை விமர்சனம் செய்யலாம் .இல்லாவிடில் வெளியேறிவிடலாம் .ஆனால் நான் இஸ்லாமியன் ஆனால கொள்கைகளுக்கு மாறு செய்வேன் என்றால் பிரச்சினைதான் வரும்.
    இது புகழுக்காக செய்யக்கூடியது. இஸ்லாத்தில் கட்டாயம் கிடையாது .உள்ளுக்குள் இருந்து கொண்டே செய்வதால்தான் பிரச்சினை .இது நபிகள் காலத்தில் இருந்தே நடக்கிறது . இது புதிதல்ல.

    ReplyDelete
  20. இவர்கள் எப்பிடியன்றால் உங்களையும், என்னையும்,இவ்வுலகத்தையும் முட்டாளாக்கி விட்டு , தனித்த அறையில் தன்னந்தனியே சுப்தமிட்டு சிரிப்பவர்கள்

    ReplyDelete
  21. அப்துல்
    உங்கள் இரண்டாவது பின்னூட்டம் புரியவில்லை. யார் அவர்கள்???

    ReplyDelete
  22. அப்துல்,
    //இன்று உலகில் அதிகமாக விமர்சனம் செய்யப்படுவது இஸ்லாம் என்பது தெரிந்த விஷயம் //

    இதுபோன்று சில விஷயங்களைச் சொல்லி வைத்தது போல் நீங்கள் அனைவரும் சொல்வதால் அது உண்மையாகி விடாது. மதங்களை விடவும் அதிகமாக விமர்சனம் செய்யப்படுவது கம்யூனிசம் தான் என்பது என் கருத்து. இஸ்லாமைப் பற்றித் தெரிவதை விட பலருக்கு கம்யூனிசம் பற்றி அதிகம் தெரியும்; அதில் பல கேள்விகளும் எழும்பும்.

    இஸ்லாமில் வணக்கத்தை ஆண்கள்தான் வழிநடத்த வேண்டும் என்று குரானில் சொல்லியுள்ளதா என்று தெரிந்து கொள்ள ஆவல்.

    இது சட்டம். அது அப்படித்தான் என்கிறீர்கள். பெண்கள் தொட்டால் ஐயப்பனுக்குத் தீட்டு என்கிறார்கள். அந்த சட்டமும் சரியா?

    //இது நபிகள் காலத்தில் இருந்தே நடக்கிறது . இது புதிதல்ல//

    இதுவும் புதிதல்ல. சகோக்கள் ஏன் இப்படி ஒரே மாதிரியாக மனப்பாடம் செய்ததை ஒப்புவிப்பது போல் திரும்பத் திரும்ப பேசுகிறீர்கள். மதராசாவின் பாடம் தான் காரணமா?

    //இல்லாவிடில் வெளியேறிவிடலாம் .//

    முடியுமா. சார்வாகன் கூறும் குரான் 3:19.என்ன சொல்கிறது?
    //நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.//

    இது எப்படிங்க?

    அல்லாவை எப்படியெல்லாம் காப்பாற்ற வேண்டியதிருக்கிறது !!!

    ReplyDelete
  23. //இஸ்லாத்தில் கட்டாயம் கிடையாது .//

    நண்பர் அப்துல்,
    என் அலுவலகத்தில் எனக்கு ஒரு நாத்திக முஸ்லிம் நண்பர் உண்டு. அவர் நாத்திகர் என்று என் அலுவலகத்தில் எனக்கு மட்டும் தான் தெரியும். வெளியே அவர் ஒரு சாதாரண முஸ்லிம் தான். நோன்பு கடை பிடிக்கிறார். நமாஸ் படிக்கிறார். நான் அவரிடம், நீங்கள் இதெல்லாம் செய்ய தேவை இல்லையே என்று கேட்டேன். அவர் சொன்னார், நான் நாத்திகன் என்று என் குடும்பத்திலோ அல்லது என் ஊரிலோ தெரிந்து விட்டால், என்னை என் சமூகத்தார் யாவரும் என்னிடம் பேச மாட்டார்கள், ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்று. இப்படி ஒதுக்கி வைக்கப்படுவது நியாயமா? மற்ற மதத்தில் இவ்வாறு வெளியே வந்தால், இவ்வாறு ஒதுக்கி வைக்கப்படுவதில்லை. சைதை அஜீஸ் கூறிய exmaples, சில பிரபலங்களை மற்றும் exceptional cases. நான் இங்கே கூறுவது சாமானியனை பற்றி.

    ReplyDelete
  24. Alien A

    ஒரு நிஜம் சொல்கிறேன்; நம்புங்கள். நேற்றுதான் நினைத்தேன் - உங்களைப்
    ’பார்த்தே’ பல மாதங்களாயிற்றே என்று. இன்று வந்து விட்டீர்கள். நன்றி ..இல்லை .. இல்லை // மகிழ்ச்சி.

    சைதை அஜீஸ் மூன்று மாதக் குழந்தைக்கு பர்க்கா போட்ட படத்தைப் பார்த்தால் கி்ழவியான அன்னை தெரஸா நினைவில் வருகிறதே... அவரிடம் பேசினால் ஏதும் பயனிருக்குமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்!!!

    ReplyDelete
  25. //நேற்றுதான் நினைத்தேன் - உங்களைப்
    ’பார்த்தே’ பல மாதங்களாயிற்றே என்று//

    எனக்கும் மிக்க மகிழ்ச்சி உங்கள் தளத்தில் பின்னூட்டமிடுவது. என்ன பண்றது sir, உங்களுடைய ஒவ்வொரு பதிவையும் படித்துவிட்டு, கமெண்ட் போடுவதற்கு போகும்போது, நான் நினைத்ததை ஏற்கனவே உங்கள் வாசகர்கள் போட்டிருக்கிறார்கள். அதனால் எதற்கு Repeatation என்று சென்று விடுவேன்.

    சைதை அஜீஸ் நண்பரே,

    நீங்கள் கூறியவை சரிதான் என்றாலும், இந்த சுதந்திரம் நீங்கள் கூறிய exceptional people-க்கு தான் கிடைக்கிறது. These people shall be not more than 2-3% of total muslims. what about balance 97% of innocent people? ஒரு தனி மனிதனுக்கு கிடைக்கிற சுதந்திரத்தை வைத்து, அது அந்த இனத்திற்கே கிடைக்கிறது என்று generalize பண்ண முடியாது. உதாரணமாக, ஷாருக்கானுக்கு கிடைக்கிற சுதந்திரம், உசிலம்பட்டியில் இருக்கிற ஒரு பாய்-க்கு கிடைக்காது. ஷாருக்கான் கோவிலுக்கு சென்றால், அவர் முஸ்லிம்களால் மதிக்கப்படுவார். எந்த பத்வா-வும் அவரை கட்டுப்படுத்தாது. அதையே, உசிலம்பட்டியிலிருக்கிற ஒரு பாய் பக்கத்திலிருக்கிற கோவிலுக்கு சென்றால், அவர் மற்ற முஸ்லிம்களால் ஒதுக்கப்படுவார். பத்வா அவரது முழு குடும்பத்திற்கும் பாயும்.

    ReplyDelete
  26. தருமிய்யா,

    நீங்க சொன்னாப்போல இஸ்லாம் நிறைய அடிப்படைவாதக்கருத்துக்களையே இன்னும் முன் வைத்துக்கொண்டுள்ளது, ஹி...ஹி ஆனால் அதெல்லாம் சாமனியர்களுக்கே, சவுதி இளவரசியே குட்டைப்பாவடை தான் அணிந்துக்கொண்டு காட்சி தருகிறார் :-))

    மேலும் இஸ்லாம் என்றில்லாமல் எல்லா மதங்களும் அடிப்படைவாதக்கொள்கையையே முன்னிறுத்துக்கின்றன, என்ன ஒன்று இஸ்லாமில் தீவிரமாக முன்னிறுத்துகிறார்கள்.

    # இஸ்லாமை விட்டு வெளியேறலாம்,ஆனால் வெளியே போயிட்டு சத்தம் காட்டாம இருக்கனும்,

    உ.ம்:

    மாதர்குல மாணிக்கம்,திமுக பிரச்சாரப்பீரங்கி, குசுப்பு மாமியின் பூர்வாசிரமப்பெயர் நக்கத் கான், இப்போ நெற்றி,வகிடு எனக்குங்குமம் தறித்து தமிழ்நாட்டின் மகாலட்சுமியாகிடலையா :-))

    மேலும் சூர்யாவின் சம்சாரம் சோதிகா,"பேரழகி" சகிலா, "நாட்டியத்தாரகை" மும்தாசு எல்லாம் இஸ்லாமியர்களே, ஆனால் கட்டற்ற சுதந்திரத்துடன் "கலைச்சேவை" ஆற்றினார்கள் :-))

    இஸ்லாத்துக்குள்ளவோ,வெளியேவோ இருந்துக்கலாம்,ஆனால் விமர்சனம் மட்டும் செய்யப்படாது என்பது தான் இஸ்லாமிய "ஃபத்வா"க்களின் நோக்கம்.

    # புர்க்கா என்பது பொதுவான அரபிய உடை, இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னரே மக்கள் அணிந்து வந்தார்கள், அவ்வாறு முழுக்க மூடிய உடை அணியக்காரணமே வேறு, அரபிய நிலப்பகுதியில் காற்று வீசும் போது புழுதியும் சேர்ந்து "புழுதிக்காற்றாக அடிக்கும், எனவே புழுதி உடல், மற்றும் தலைமுடியில் ஒட்டிக்கொண்டு ,பிசுபிசுப்பினை உண்டாக்கி அதிக அழுக்கு துர்நாற்றம் வீசும், நீர் ஆதாரம் குறைவாக உள்ள நிலப்பரப்பில் அடிக்கடி குளித்து சுத்தம் செய்ய இயலாது என்பதால் ,புழுதியில் இருந்துக்காத்துக்கொள்ள "முழுக்க மூடிய" ஆடை அவசியம் ஆனது,அரபிய ஆண்களும் அப்படியே அணிவார்கள்.

    புழுதிக்காற்று வீசாத இடங்களிலும் அத்தகைய ஆடை தேவையில்லை,ஆனால் அதனைக்கட்டாயம் ஆக்கியது பின்னாளில் வந்த மார்க்கப்பந்துக்களே, கர்பலா யுத்தத்தின் போது ,முகம்மது அய்யாவின் இளைய மனைவி ஆயீஷா அவர்களும் ஒட்டகத்தின் மீதேறி சன்டையிட்டார்கள், அடுத்த கலிஃபாவினை தேர்ந்தெடுக்கும் அரசியலில் பெண்ணாகிய ஆயிஷா ஆதிக்கம் செலுத்தியது ஆணாதிக்க இஸ்லாமியர்களுக்கு பிடிக்கவில்லை,எனவே கர்பலா யுத்தத்தின் முடிவில் முகமது அய்யாவின் மருமகன் முகமது அலி மற்றும் அவரது சிறுக்குழந்தை என அனைவரையும் கொன்று விட்டு,ஆயீஷாவை வீட்டு சிறையில் அடைத்துவிட்டு, அதன் பின்னரே பெண்கள் பள்ளிவாசல் வரத்தடை,தொழுகைக்கு தலைமை தாங்க தடை, உடைக்கட்டுப்பாடு,எனப்பல பல தடைகள் போட்டார்கள்.அதற்கு ஏற்றார்ப்போல ஹதீத்துகள் உருவாக்கிக்கொண்டார்கள், குரானிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டன,ஆனால் மார்க்குகள் "தீண்டா திருப்புத்தகம்" குரான் என்பார்கள் :-))

    தற்போதுள்ள குரான் "உம்மயத் இனக்க்குழுக்கள்" பிழைத்திருத்தம் செய்த குரான்,ஏனெனில் அப்போதைய கலிபா உத்மான் அக்குழுவை சேர்ந்தவரே.கர்பலா யுத்தத்திற்கு முன்னரே இத்திருத்தங்கள் செய்யப்பட்டன,கர்பலா யுத்தத்திற்கு பின் மேலும் திருத்தங்கள் செய்யப்பட்டன.

    # சின்னக்குழந்தைக்கும் புர்க்கா போடுவது கொடுமை தான்,ஆனால் சின்னக்குழந்தைக்கும் நெத்தியில் ராமம், பட்டை, பூணூல் எல்லாம் அணிவிக்கும் இந்துக்களின் செயலும் இதற்கு சற்றும் குறைவில்லாததே.

    எல்லா மதவாதிகளும் தங்கள் வாரிசுகளையும் மதநம்பிக்கையில் ஆழ்த்திவிட முயல்வதை வழமையாகக்கொண்டுள்ளார்கள்.
    -------------------

    ReplyDelete
  27. அருமையான விளக்கங்கள் ஐயா.
    //நான் கிறித்துவ மதத்திலிருந்து வெளி வந்தது போல் - யாரேனும் வெளியே வர முடியுமா? அப்படி யாரும் மனம் மாறி வெளி வந்தால் ஏன் உங்கள் மதமும் நீங்களும் தடை செய்கிறீர்கள்?//
    ஒரு அமைப்பைவிட்டு வெளியேவராம தடை செய்வது யாராக இருக்க முடியும் என்ற ஒரு கேள்வியை ஒரு சிறுவயது சுதந்திரமான நாட்டில் கல்வி கற்கும் மாணவனிடம் கேட்டால் கூட விடை
    ஒரு பயங்கரவாத இயங்கம் தான் இப்படியான செயல்களை செய்யும்.

    ReplyDelete
  28. நண்பர் Alien A,
    //என் அலுவலகத்தில் எனக்கு ஒரு நாத்திக முஸ்லிம் நண்பர் உண்டு.
    நோன்பு கடை பிடிக்கிறார். நமாஸ் படிக்கிறார். நான் அவரிடம், நீங்கள் இதெல்லாம் செய்ய தேவை இல்லையே என்று கேட்டேன். அவர் சொன்னார், நான் நாத்திகன் என்று என் குடும்பத்திலோ அல்லது என் ஊரிலோ தெரிந்து விட்டால், என்னை என் சமூகத்தார் யாவரும் என்னிடம் பேச மாட்டார்கள், ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்று//
    வெளிநாடுகளில் ஆரோக்கியமான சுதந்திரம் உள்ள படியால் எனக்கு தெரிந்து இங்கே வந்த இஸ்லாமிய பெண்கள் பலர் பர்தா முகமூடியில் இருந்து தப்பிக்கிறார்கள் பலர். நோன்பு பிடிக்காம சுதந்திரமாக சாப்பிடுகிறார்கள். பன்றி இறைச்சி Sausage சாப்பிடுகிறார்கள். இதே போல் தாங்களுக்கு விரும்பியதை செய்யயும் சுதந்திரம் அடிபடை சுதந்திரம் அவர்களுக்கு இந்தியாவிலும் அவசியம் கிடைக்க வேண்டும்.அதற்காக தங்களை மாதிரி உண்மையான பகுத்தறிவாளர்களின் பங்களிப்பை நீங்க உணர்ந்திருப்பீங்க என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  29. தருமி ஐயா, உங்க அருமையான பதிவை பாராட்டி ஒரு முதலே பின்னோட்மிட்டேன் கிடைக்கவில்லை போலும்.

    ReplyDelete
  30. //இதே போல் தாங்களுக்கு விரும்பியதை செய்யயும் சுதந்திரம் அடிபடை சுதந்திரம் அவர்களுக்கு இந்தியாவிலும் அவசியம் கிடைக்க வேண்டும்//

    Excellent point. This is the nutshell of this article. இந்த பதிவின் சாரம்சமே இதுதான். நன்றி நண்பர் வேகநரி.

    ReplyDelete
  31. அய்யா வணக்கம்,

    சகோதரர் சைதை அஜீஸ் ஒரு பெயர் தாங்கி முஸ்லீம். அவரை வாஹபிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க சொல்லவும்.

    சகோதரர் அப்துல்தான் உண்மையான முஸ்லீம்.

    அவருக்கு ஒரு கேள்வி.

    //இஸ்லாமில் வணக்கத்தை ஆண்கள்தான் வழிநடத்த வேண்டும் என்பது ஒரு முக்கியமான கொள்கை . //

    இது அதி முக்கியம் என்றால் அரபி ஏக இறைவன் குரானில் நிச்சயம் சொல்லி இருக்க வேண்டும் . எந்த வசனம் கொடுங்கள்!!!

    குரானில் இருக்கிறதா ??
    காஃபிர்கள் இந்த விக்கிபிடியா படிக்கவும்.

    http://en.wikipedia.org/wiki/Women_as_imams

    :The Quran does not address this issue; relevant precedents are therefore sought for in the hadith, the traditions attributed to Muhammad; the sunnah, his actions, including but not limited to hadith; and the principle of ijma, consensus.""

    நன்றி!!!

    ReplyDelete
  32. நல்ல பதிவு,

    இந்தப் பதிவு இஸ்லாமியர் அனைவரும் படித்து உணர வேண்டியது.புராண நூல்களை- கடவுள் சொன்னார் எனச் நம்பி ஏமாறுபவர்கள் பாவம் தான்.
    http://iraiyillaislam.blogspot.in/2011/09/blog-post.html

    தௌரத் முசா நபிக்கு 1000 வருடம் பின்பு வந்தது என்பதனை பைபிள் வழியில் தேவப்ரியா காட்டுகிறார் இங்கே.
    http://chennaipluz.in/pivotx/?e=2

    ReplyDelete
  33. அஜீஸ்

    காத்திருக்கிறேன் உங்கள் பதிலுக்கு....

    ReplyDelete
  34. வணக்கம் தருமி அய்யா ,

    ரொம்ப காரசாரம எழுதி இருக்கீங்க .....இன்றைய நடைமுறையில் மதம் சார் அல்லது இனம் சார் பிரிவினைவாதம் என்பது வேரோடு அறுக்கப்பட வேண்டியதே....

    அந்த புதிய தலைமுறை நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது ...ஏதோ ஒரு ஞாற்றுக்கிழமை என்று நினைக்கிறேன்...மொவ்லவிகளின் கருத்தை பார்க்கும் முன்பு இஸ்லாமிய பெண் சட்டத்தரணி ஒருவர் இந்த தலாக் கொடுமைக்கு எதிராக தன கருத்துக்களை ஆணித்தரமாக முன் வைத்தார்..எந்த வித கல்வி தகுதிகள் ஏதும் இன்றி ஒரு மதத்தை படித்தார் என்ற காரணத்துக்காக ஒரு நீதிபதிக்கான அதிகாரங்களை இவர்கள் எவ்வாறு பெற்று கொள்ள முடியும்.? என கேள்வி எழுப்புகிறார்.. அது மட்டும் இன்றி பல மொவ்லவிகள் பணத்தை வாங்கி கொண்டு பெண்ணின் பக்கம் உள்ள நியாயங்கள் எதையும் கருத்திட் கொள்ளாமல் தலாக் என 3 முறை சொல்லி விட்டு கணவன் மனைவியை பிரித்து விடுகிறார் ...நாட்டில் சட்டம் ஒழுங்கை கண்காணிக்க நீதி துறை இருக்க வாறவன் போறவன் எல்லாம் நீதிபதி ஆகுறான்...

    இப்போ நம்ம பி ஜே அண்ணன் மற்றும் பலர் கூறிய அறிய கருத்துக்கள் ......
    தலாக் முறை மூலம் பெண்ணின் பாதுகாப்பு உறுதி படுத்த படுகிறது..அந்த பெண்ணுக்கு விருப்பம் (!) இல்லாத ஆணுடன் வாழ தேவை இல்லை ...தலாக் இன் பின்னர் பெண் சுயமாக அவள் வாழ்வை தேர்ந்து எடுத்து கொள்ள முடியும் .....மறுபடியும் பி ஜே ,மதங்கள் அனைத்திலும் திருமணங்கள் மத போதகர் கொண்டே நடத்த படுகின்றன..அதே போல அம் மணமுறிவும் மதத்தின் மேற்பார்வையில் தான் இடம் பெற வேண்டுமாம்....அதே போல இஸ்லாமிய ஜோடியின் மண முறிவை எப்படி ஒரு இந்து கிறிஸ்தவ நீதிபதி தீர்மானிக்க முடியும் ???? என நான் கேக்கலங்க ...நம்ம tntj தல கேக்குறார் ...

    அத்தோட இன்னொரு மொவ்லவி ,தமக்கு கொடுத்து அதிகாரங்கள் போதாது ,,இன்னும் நிறைய அதிகாரங்கள் வேணும்...அதாவது பிரைவேட் கோர்ட் ஒன்னும் ஆரம்பிச்சு இந்தியாலையும் தலை வெட்டு கால் வெட்டு சவுக்கடி போன்ற இன்ன பிற வலி இல்ல தண்டனைகள் கொடுக்கணுமாம் ....

    மனக்குமுறல் :-"அதுக்கு நீ லா காலேஜ்ல படிச்சு வக்கீல் கிட்ட உடனடியா juniora சேரனும் "

    ReplyDelete
  35. எப்படியோ இப்பதிவைப் பார்த்தோர் எண்ணிக்கை ஏறத்தாழ 1000-த்தை (இப்போது 7 கம்மி!) தாண்டிவிட்டது. பல கண்களுக்கு கூகுள்+ மூலம் எடுத்துச் சென்ற ஜோதிஜிக்கு நன்றி.

    அதென்னமோ 34 பேர் + போட்டதாக டாஷ் போர்டில் தெரியுது.

    நன்றி.

    ReplyDelete
  36. http://deviyar-illam.blogspot.in/2013/08/blog-post_6.html

    ReplyDelete
  37. வணக்க்ம் ஐயா அருமையன பதிவு நிறையமுஸ்லிம்கள் இஸ்லாத்தைவெளியேறீயுள்ளனர் தனது கழுத்தை காப்பாற்றீ கொள்வதற்காகமவ்னமாக உள்ளனர்

    ReplyDelete
  38. mohamed sadiq

    கடயத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். முகம் மறைத்து இருப்போரைப்பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    தங்கள் மதத்திற்கு யாரும் வந்தால் விழா எடுப்போர், யாரும் விலகினால் அதைக் காணாமல் இருக்க முடியவில்லையே என்பது தான் ஆச்சரியம்,

    ReplyDelete