Sunday, February 23, 2014

719. இப்பதிவு தமிழ்மண மகுடத்திற்குப் போகுமா ...?







*

இறையச்சத்திற்கு அல்ல ....
வெறும் மனிதத் தன்மைக்கு வாழ்த்து மட்டும்.
***
 40 லட்சம் ரூபாயெல்லாம் நம்மால் கொடுக்க முடியுமா? 
நம்மிடம் என்ன பெட்ரோல் காசு இருக்கா என்ன?




இந்தத் தலைப்பில் இதைப் பற்றி நான் எழுதியதும் மக்கள் நீங்கள் எல்லாம் மகிழ்ந்து அதில் 21 பேர் ஓட்டும் போட்டு, தமிழ்மண மகுடத்தில் இப்பதிவை இடம் பெற வைக்கவா போகிறீர்கள்!

(அதென்ன 21 மட்டும் ஓட்டு போட்டிருக்கிறார்கள். வழக்கமான 35 பேர் மட மடன்னு ஏன் ஓட்டுப் போடவில்லை? அப்பதிவுக்கு ஓட்டுப் போட்டவர்கள் இதற்கும் ஓட்டுப் போடமாட்டார்களோ!!!)

முதற்கண் ஒரு சிறு முன்னுரை.

ஒரு நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களிடமும் நல்ல மனம் இருந்தால் அந்நாட்டில், காவல் துறைக்கோ நீதித்துறைக்கோ சிறைக்கோ தூக்கு மேடைக்கோ எவ்வித வேலையோ அதற்கான அவசியமோ அறவே தேவையே இல்லாமல் போய்விடும்..! இதுதான் நிதர்சனம்..!

நிற்க. இனி விஷயத்துக்குச் செல்வோம்.

தெருவில் கிடந்த நகைப்பையை காவல் துறையிடம் ஒப்படைத்த இரு ஆட்டோ ரிக்‌ஷாகாரர்களைப் பற்றிய செய்தி இங்கே.

இந்த நல்ல மனதுக்காரர்களுக்கு ஒரு வேளை இனிமேல் ஏதேனும் பரிசுத் தொகை சிறிது கிடைக்கலாம். ஆனாலும் அதையெல்லாம் எதிர்பார்க்காமல் தெருவில் கிடைத்த நகைகளைத் திருப்பிக் கொடுத்த இரு மதுரை ஆட்டோ ரிக்‌ஷாக்காரர்களின் பெருமைக்குரிய பண்பு பாரட்டுக்குரியது. வெறும் ஆடு இல்லை அது; அவர்களுக்குக் கிடைத்தது ஒரு தங்கக் குவியல் !

 இவர்கள் நகையைத் திருப்பிக் கொடுத்தது இறை பயத்தினால் என்று சொல்ல வில்லை. மேலிருந்து எங்கள் ‘சாமி’ பார்த்துக் கொண்டே இருக்கும்; அதனால் இதை உரிமையாளர்களிடம் சேர்த்தோம் என்று பணக் கஷ்டம் உள்ள லாரன்ஸும்( father of three daughters), கணபதியும் சொல்லவில்லை!

இதற்கு //இஸ்லாமிய வாழ்வியல் நெறி// மட்டும் தேவை என்று எழுதும் அடிப்படைவாதிகள் நம் ஊரில் நடந்த நல்ல செய்தி இது என்று தெரிந்து கொள்ளவே இந்தச் செய்தியை இங்கு கொடுத்துள்ளேன்..

இதற்கெல்லாம் சூடானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் போக வேண்டுமா என்ன ...!!!?? 

ஆட்டோ ரிக்‌ஷாக்காரர்களின் மனிதப் பண்பே இதற்குரிய காரணம். ஏதோ அல்லா மேலிருந்து பார்ப்பார் என்ற பயத்தினால் இல்லாமல் மனிதத்தன்மையோடு நடந்த இந்த இரு நல்ல “மனிதர்களுக்கு’ நம் பாராட்டு.







இந்த நல்ல இரு மனிதர்களைப் பாராட்ட பெரிய ஆட்கள், சுல்தான்கள்  எல்லாம் வந்து பரிசு தரவில்லை. ஏனெனில் இந்த மண்ணில் இது அப்படி ஒன்றும் காணக்கிடைக்காத விஷயம் அல்ல. இன்னும் இது போல் நிறைய உண்டு. கண்களைத் திறந்து செய்தித் தாள் வாசிப்பவர்களுக்கு இது போல் நிறைய செய்திகள் கண்ணில் படும்.

இதற்காக செளதிக்கெல்லாம் போகத் தேவையில்லை. ஒரு வேளை அங்கெல்லாம் இது ஒரு மிகப் பெரிய விஷயம் போலும். அதனால் தான் அத்தனை பரிசுகளும் பாராட்டும் அங்கே!!!



*

75 comments:

  1. திரு. லாரன்ஸ் அவர்களுக்கும், திரு. கணபதி அவர்களுக்கும் மகுடம் சூட்ட வேண்டும்... இருவருக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //இருவருக்கும் பாராட்டுக்கள்..//

    இது மட்டும் போதுமா, டிடி?!

    ReplyDelete
  3. அடே .. ஒரு மைனஸ் ஓட்டு. நன்றி சகோஸ்!

    ReplyDelete
  4. Tamilmanam +1
    மகுடம் ஏத்துவதற்கு என்னால் ஆன முயற்சி!
    மகுடம் ஏத்துவதும் என் வேலை; வீட்டில் பத்தவைப்பதும் என் வேலை தான்!

    ReplyDelete
  5. எனக்கு பதிவுலகு அரசியல் பற்றி கவலை இல்லை; அது எனக்கு தேவையும் இல்லை. யார் என்னிடம் ஒட்டு கேட்டாலும் நான் போடுவேன் என்று ஒரு அறிக்கையே விட்டு இருக்கிறேன். மறுபடியும் யார் வோட்டு வேண்டுமானலும் தாரளாமாக வோட்டு போடுகிறேன்!

    ReplyDelete
  6. நம்பள்கி
    நீங்கள் போட்ட ஓட்டு எனக்குப் பிடிக்கவில்லை. கேட்டவர்களுக்கெல்லாம் ஓட்டு என்பது என்ன ஒரு பெரிய தத்துவமோ! மிகத் தவறான் ஓட்டு ஒன்று பெற்றதற்கு வருந்துகிறேன்.

    ReplyDelete
  7. ///இதற்கெல்லாம் சூடானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் போக வேண்டுமா என்ன ...!!!?? ///
    அவர்களின் உண்மையான சகோதரர்கள், பரம்பரையினர் சூடானிலும், சவுதி அரேபியாவிலும் தானேயிருக்கிறார்கள். அதனால், வெறும் உதாரணத்துக்குக் கூட அங்கு தானே போகவேண்டும். :-)

    ReplyDelete
  8. I am sorry about that.
    My intention is to prove a farce -- the so-called voting in tamilmanam as well as our Indian elections. இந்திய அரசியல் எனக்கு கத்துகொடுத்த பாடம் தான் இது. எனினும்...!

    இப்போ தமிழ்நாட்டு அரசியல் எப்படி கூட்டு சேருகிறார்கள். எல்லாம் பேரம்! உண்மையில் மனசாட்சி இருப்பவ்ர்கள் யாரும் யாருக்கும் வோட்டு போடக்கூடாது!

    ReplyDelete
  9. மிகச் சிறந்த பதிவு.

    பிறருக்கு உதவுகிற நல்ல மனிதர்களைப் பாராட்டினால் நல்லவர்கள் எண்ணிக்கை பெருகும். ‘அவர்கள்’ ஏன் கடவுளை இங்கே நுழைக்கிறார்கள்?

    மதப் பற்றாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்...........

    கடவுள் நம்பிக்கையால்தான் மனிதன் நல்லவனாக வாழ்கிறான் என்ற போதனையைக் கொஞ்ச காலத்துக்கு நிறுத்துங்களேன். நல்லவர் எண்ணிக்கை குறைகிறதா பார்ப்போம்.


    ReplyDelete
  10. //My intention is to prove a farce//

    my intention here is NOT farce. i mean every word of my post. i am sure that i have been sensible too in every point i have said.
    so i expect people who likes and accepts it to vote for this post.

    for your info - normally i never vote any post ...nor i have asked to vote for me - except this post.

    ReplyDelete
  11. Permit me to conclude with an end statement. Again, you got me wrong. I never questioned your intent. I know your intent is genuine and not a farce. What I am trying to convey is voting in Tamilmanam is a farce.

    By ganging up -- எந்த இடுகையும் மகுடம் ஏத்தலாம் .இப்ப 22 வோட்டு போட்டு மகுடம் ஏற்றப்பட்டுள்ள இடுகையை உங்கள் இடுகைக்கு மேலும் இரண்டு வோட்டு போட்டு அதை இறக்கி விட்டு உங்கள் இடுகையை மகுடம் ஏற்றலாம். என்னுடைய் இடுகைக்கு உங்கள் இடுகையை விட ஒரு வோட்டு போட்டு உங்கள் இடுகையை கீழே இறக்கலாம். இப்படிப்பட்ட வோட்டு முறை தேவையா? கலகம் பிறந்தால் நல்லது பிறக்கும்..இது சரியல்ல--தமிழ்மணம் வோட்டு போடும் முறையை ஒழிக்கணும்!

    ReplyDelete
  12. //கலகம் பிறந்தால் நல்லது பிறக்கும்.//

    நடக்கட்டும்.

    நன்றி

    ReplyDelete
  13. தருமிய்யா,

    # தன்னிச்சையாக "மனசாட்சிக்கு அஞ்சி" நேர்மையுடன் செயல்பட்ட மதுரை ஆட்டோ ஓட்டுனர்கள் பாராட்டுக்குரியவர்கள், ஆட்டோ ஓட்டுனர் என்றால் அடாவடிக்காரர்கள் என்ற பொது நம்பிக்கைக்கிடையில் இப்படியும் சிலர் உள்ளார்கள் என்பதை மறக்கக்கூடாது.

    # ஒரு குப்பை தொட்டியில நிறைய குப்பைய கொட்டிக்கிட்டே இருந்தால் எல்லாம் குமிஞ்சு மகுடம் போல மேல வரும் :-))

    # உங்களுக்கெல்லாம் வானமே எல்லை!

    # ஏழைகள்,எளியவர்களுக்கு இறையச்சம் என்பதை புகட்டி வைத்தால் தான் கீழ்படிதலுடன் இருப்பார்கள் என அதிகாரத்தில் உள்ளோர்கள் நடத்தும் நாடகங்களே "மார்க்கப்பந்துக்கள்" பெருமையாக பேசும் சம்பவங்கள்!

    இந்த இறையச்சம் சூடான் அதிபரோ,சவுதி அதிபருக்கோ இருப்பதில்லை, நாட்டின் இயற்கை வளங்களை அன்னிய நாட்டுக்கு தாரை வார்த்து தாம் சுகமாக அனுபவிக்கிறோமே ,நாட்டு மக்கள் நிலை என்ன என இறையச்சத்துடன் நினைப்பதில்லை.

    சவுதியாவது மக்களுக்கு கொஞ்சம் கிள்ளி கொடுக்குது,சூடானில் சாமனியர்கள் பசிப்பட்டினி தான் எனவே தான் உள்நாட்டுக்கலவரமெல்லாம். உள்நாட்டுக்கலவரத்தில் ஈடுபடும் போராளிகளும் அவங்கப்பங்குங்கு அதிகாரம்ம்,வன்ன்முறை தான் செய்றாங்க, ஐ.நா உணவு வழங்கும் முகாமில் வைத்திருக்கும் உணவை கூட துப்பாக்கி முனையில் கொள்ளையடிப்பது சூடானில் வழக்கம், இறையச்சம் எல்லாம் ஏதும் செய்ய இயலாத அப்பாவிகளுக்கு தான் போலும்!
    --------------------------------

    # இதில இருக்கிறதுலவே பெரிய அல்பங்கள் ,போறப்பதிவுல எல்லாம் த.ம.1 என ஓட்டுப்போட்டு மொய் வச்சதுக்கு பில் போடுபவர்கள் தான் :-))

    ReplyDelete
  14. வவ்ஸ்
    இதில் ‘அல்பங்கள்’ யாரும் இல்லைன்னு நினைக்கிறேன். சரியா?

    ReplyDelete
  15. தருமி ஐயா,

    சில செய்திகளைக் கோர்த்து, கடைசியாக ஒரு மெசேஜும் சொல்லிட்டிங்க. செய்திகளில் வராமல் எவ்வளவோ நல்ல விஷயங்கள் நடக்கின்றன. வெளியே தெரிவதில்லை அவ்வளவுதான். நம்ம ஊரில் நல்லவனாக இருந்தால், அவனை "பேக்கு" அல்லது "கேண" என்று சொல்வார்கள்.

    //இதற்கெல்லாம் சூடானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் போக வேண்டுமா என்ன ...!!!?? //

    இங்கிருப்பவர்கள் அவர்களுக்கு மனிதர்களாய் தெரியவில்லை போலும்.

    //வவ்ஸ்
    இதில் ‘அல்பங்கள்’ யாரும் இல்லைன்னு நினைக்கிறேன். சரியா? //
    இங்கேயும் //

    தவறான விடை. இங்கேயும் அந்த அல்பம் இருக்கு.

    ReplyDelete
  16. சகோ. தருமி அவர்களுக்கும் மற்றும் நம் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உரித்தாகுக.

    ஆட்டோ டிரைவர்களான சகோஸ் லாரன்ஸ் & கணபதி இருவருக்கும் வாழ்த்துகள்.

    உங்கள் பார்வையில் உங்கள் பதிவு உங்களுக்கு சரியாக தோன்றுகிறது.

    ஆனால் எனது பார்வைக்கு உங்கள் பதிவில் உங்களுக்கு ஆழமான முழுமையான புரிதல் இல்லாமல் எழுதி உள்ளீர்கள்.

    ஒருமுறைக்கு நாலு முறை பதிவினூடே என் பதிவுக்கு சுட்டிகள் எல்லாம் தந்து இருப்பதால்... விளக்கம் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளேன்.

    //இவர்கள் நகையைத் திருப்பிக் கொடுத்தது இறை பயத்தினால் என்று சொல்ல வில்லை. மேலிருந்து எங்கள் ‘சாமி’ பார்த்துக் கொண்டே இருக்கும்; அதனால் இதை உரிமையாளர்களிடம் சேர்த்தோம் என்று பணக் கஷ்டம் உள்ள லாரன்ஸும்( father of three daughters), கணபதியும் சொல்லவில்லை!//

    ஆம் சொல்லவில்லைதான்.

    //ஏதோ அல்லா மேலிருந்து பார்ப்பார் என்ற பயத்தினால் இல்லாமல் மனிதத்தன்மையோடு நடந்த இந்த இரு நல்ல “மனிதர்களுக்கு’ நம் பாராட்டு.//

    ---என்று எழுதி உள்ளீர்கள். ஓகே. நானும் அவர்களின் செயலை பாராட்டுகிறேன்.

    ஆனால்... நான் பாராட்டுவதோடு நின்று விடாமல்... சில கேள்விகளை உங்கள் சிந்தனைக்கு வைக்கிறேன்.

    அந்த இரு "மனிதர்களுக்கு" எப்படி "மனிதன்மை" வந்தது..?
    எந்த சித்தாந்தத்தில் இருந்து வந்தது..?
    எந்த புத்தகத்தின் தாக்கத்தின் மூலம் வந்தது..?
    எந்த அறிஞரின் அறிவுரைகள் மூலம் வந்தது..?
    அந்த புத்தகமும் அறிஞரும் எக்காலத்தில் வாழந்தவர்கள்..?
    எங்கிருந்து இத்தன்மையை இவர்கள் பெற்றார்கள்..?
    என்றைக்கு எந்த வயதில் இவர்கள் "மனிதர்கள்" ஆனார்கள்..?

    பதிலலியுங்கள் பேராசிரியரே.
    பதிலை அடுத்த தனிப்பதிவாக நீங்க போட்டாலும் எனக்கு ஓகேதான்.

    ReplyDelete

  17. நல்ல விஷயத்தை எப்பவும் பாராட்டணும் .அவர்கள் இருவருக்கும் .செய்தியை பகிர்ந்த உங்களுக்கும் பாராட்டுக்கள் .... +

    Angel .

    ReplyDelete
  18. ஆஷிக்
    //சில கேள்விகளை உங்கள் சிந்தனைக்கு வைக்கிறேன்.//

    சிந்தனைக்குரிய உங்கள் கேள்விகளுக்கு எப்போதோ பதில் சொல்லியிருக்கிறேன். அது கூட வேண்டாம் .. இந்தப் பின்னூட்டங்களில் காமக் கிழத்தன்சொல்லியுள்ள பதிலைப் படித்துப் பாருங்கள்.

    //பதிலை அடுத்த தனிப்பதிவாக நீங்க போட்டாலும் எனக்கு ஓகேதான்//

    போட்டிருக்கிறேனே - http://dharumi.blogspot.in/2009/06/330-8.html

    அதில் சொல்லியிருப்பதை நீங்களாவது நம்புவதாவது. இருந்தாலும் பதில் கேட்டு விட்டீர்கள் என்பதற்காக மட்டும் அதிலிருந்து உங்கள் காதில் ஏறாத சில கருத்துகள் இங்கே:

    பல நம்பிக்கையாளர்களுக்கு மதங்கள் இல்லாமல் எப்படி ஒருவன் நல்லவனாக இருக்கவோ, அல்லது இருக்கவேண்டுமென்ற நினைவோடு இருக்க முடியுமென நம்புவது மிகவும் கஷ்டம்.
    சுனாமியால் பாதிக்கப்பட்ட யாரோ ஒருவருக்கு உதவட்டும் என்று பணமும், உடையும் அனுப்புகிறோமே அது எதற்கு?

    நல்ல சமாரித்தனாக இருக்க வேண்டும் என்ற நினைவு எப்படி நம்மிடம் வருகிறது?

    இதுபோன்ற நல்ல பண்புகள் இந்த மதத்தினருக்கு மட்டுமே என்பது போலன்றி எந்த மத நம்பிக்கையாளர்களுக்கும், மத நம்பிக்கையற்றோர்களுக்கும் நடுவில் பொதுவாக எங்கும் விரவி இருக்கிறது.
    Hauser-ன் திறனாய்வு மூலம், மத நம்பிக்கையாளர்கள் அவர்கள் மதக் கோட்பாட்டின் படி மத நம்பிக்கையற்றோரை விடவும் தங்களது நன்முறைக் கொள்கைகளில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் இருப்பது இல்லை.


    நம்மை நல்லவர்களாக வைத்திருக்கக் கடவுள் தேவையில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
    தனிமனிதக் குற்றங்களை முன்னிறுத்தும் மதங்களை (ஆப்ரஹாமிய மதங்கள்?) நம்புபவர்கள் எப்போதும் தங்கள் மத நம்பிக்கைகள் மட்டுமே தங்களை மனிதநேயத்தில் முன்னிலைப் படுத்துகின்றது என்று நம்புகிறார்கள்.

    சிறைகளின் உள்ளே இருப்பவரில் கடவுள் மறுப்பாளர்கள் மிகக் குறைவே.
    கடவுள் மறுப்பு மட்டுமே அவர்களை நல்லவர்களாக்குகிறது என்பதற்குப் பதிலாக நான் கூறுவது: மனித நேயம் எப்போதும் கடவுள் மறுப்பாளர்களோடு சேர்ந்து செல்கிறது.

    கடவுள் நம்பிக்கைக்கும், மனிதர்களின் நேர்மைக்கும் ஏதும் ஒரு நல்ல தொடர்பு இருக்குமாயின் அது மிக எளிதில் கண்டுபிடிக்கப்பட்டு விடும். ஏனெனில் பல மதக் குழுக்கள் தாங்கள் காலங்காலமாய் நம்புவது போல் அதுபோன்ற ஒரு நிலைகண்டால் அதை அறிவியல் மூலம் உலகுக்கே அறிவித்து விட மாட்டார்களா?

    ReplyDelete
  19. ஆஷிக்
    உங்கள் பதிவில் வந்துள்ள ’ஆட்டுக் கதையில்’ வந்துள்ள ஒரு பின்னூட்டத்தின் படி காரில் வந்து ஒரு ஆட்டுக்குட்டியை அபேஸ் செய்ய யாரும் திட்டமிட மாட்டார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.
    அதைவிட அல்லாவின் மீதுள்ள அச்சமே தவறு செய்யாமல் ஆட்டுக்காரரைத் தடுத்தது. தங்க நகை கொடுத்தவர்கள் இப்படி தங்கள் ஏசுவையும், கணபதியையும் நினைக்காமல் ‘நல்ல மனிதர்களாக’ இருந்துள்ளார்கள்.

    இவர்களில் யார் நல்லவர்?

    இது போன்ற நொண்டிக் கதைகள் வைத்து ஏன் உங்கள் கடவுளுக்கு இப்படி வக்காலத்து வாங்குகிறீர்கள் என்றுதான் தெரியவில்லை! கிறித்துவ மக்களும் இதில் உங்களுக்குச் சளைத்தவர்கள் இல்லை என்றும் கூறிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  20. அடடா ஆஷிக்
    நீங்கள் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் விட்டு விட்டேனே...
    //அந்த இரு "மனிதர்களுக்கு" எப்படி "மனிதன்மை" வந்தது..?
    எந்த சித்தாந்தத்தில் இருந்து வந்தது..?
    எந்த புத்தகத்தின் தாக்கத்தின் மூலம் வந்தது..?
    எந்த அறிஞரின் அறிவுரைகள் மூலம் வந்தது..?
    அந்த புத்தகமும் அறிஞரும் எக்காலத்தில் வாழந்தவர்கள்..?
    எங்கிருந்து இத்தன்மையை இவர்கள் பெற்றார்கள்..?
    என்றைக்கு எந்த வயதில் இவர்கள் "மனிதர்கள்" ஆனார்கள்..?//

    இத்தனைக்கும் ஒரே பதில் - இருந்தும் சொல்லி விடுகிறேன்.

    இதன் காரணம்

    தனி மனித ஒழுக்கம்

    அது உங்களுக்குத் தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன்!

    ReplyDelete
  21. //இத்தனைக்கும் ஒரே பதில் - இருந்தும் சொல்லி விடுகிறேன்.

    இதன் காரணம்

    தனி மனித ஒழுக்கம்//

    ​சகோ.தருமி... நான் கேட்கும் கேள்விகள் புரியவில்லையா..? ​

    'இந்த செயல்தான் சிறப்பான தனிமனித ஒழுக்கம்' என்று எதை வைத்து முடிவு செய்கிறீர்கள்...?

    உதாரணம் :
    ஒரு நாட்டில் ஓரினச்சேர்க்கை எனும் தனி மனித ஒழுக்கம் சட்டப்படி சரி. இன்னொரு நாட்டில் சட்டப்படி குற்றம்.

    ​ஒரு நாட்டில் போதை மருந்து உண்பது எனும் தனி மனித ஒழுக்கம் சட்டப்படி சரி. இன்னொரு நாட்டில் சட்டப்படி குற்றம்.

    ஒரு நாட்டில் ஆடை இல்லாமல் பொதுவெளியில் திரிவது எனும் தனி மனித ஒழுக்கம் சட்டப்படி சரி. இன்னொரு நாட்டில் சட்டப்படி குற்றம்.

    ஆக... இப்படியான "எது சரி தவறு" என்ற குழப்பங்கள் உள்ள சூழலில்...

    யார் சொன்ன தனிமனித ஒழுக்க சரி என்று எப்படி சரிகாண்பது..?

    நான் கேட்பது தங்களின் தனிமனித ஒழுக்கத்துக்கான உரைகல்..!
    உரைகள் எனக்கு தேவை இல்லை..!

    ReplyDelete
  22. முஹம்மது ஆஷிக்,

    //அந்த இரு "மனிதர்களுக்கு" எப்படி "மனிதன்மை" வந்தது..?//
    அவர்கள் இருவரும் மனிதர்கள். அதனால் மனித தன்மை அவர்களுக்குள்ளேயே இருக்கிறது. அது வேறெங்கிருந்தும் வரத்தேவையில்லை.

    //எந்த சித்தாந்தத்தில் இருந்து வந்தது..? //
    அந்த இவர்களுடைய சொந்த சித்தாந்தத்திலிருந்து.

    //எந்த புத்தகத்தின் தாக்கத்தின் மூலம் வந்தது..? //
    எந்த புத்தகத்தின் மூலமுமல்ல. எந்த புத்தகத்தை படிக்காத மனிதனும் மனிதத்தன்மையோடு வாழ முடியும்.

    //எந்த அறிஞரின் அறிவுரைகள் மூலம் வந்தது..?//
    எந்த அறிஞரின் அறிவுரைகளும் தேவையில்லை. அறிஞரை தெரியாத மனிதனும் மனிதத்தன்மையோடு வாழ முடியும்.

    //அந்த புத்தகமும் அறிஞரும் எக்காலத்தில் வாழந்தவர்கள்..?//
    Not valid, since previous two questions were answered.

    //எங்கிருந்து இத்தன்மையை இவர்கள் பெற்றார்கள்..?//
    எங்கிருந்துமல்ல. தன மனதிலிருந்து மட்டும் தான்.

    //என்றைக்கு எந்த வயதில் இவர்கள் "மனிதர்கள்" ஆனார்கள்..?//
    அவர்கள் சுயமாக என்றைக்கு யோசிக்க ஆரம்பித்தார்களோ அன்றையிலிருந்து.

    இப்போது என் கேள்விகள் உங்களுக்கு.

    உங்கள் கடவுளுக்கு கடவுள் தன்மை எப்படி வந்தது?

    ReplyDelete
  23. மீண்டும் ஒரே பதில்: உரை கல் = அல்லா தான்.

    சரியா? (எதற்கு யார் காதிலோ சங்கு ஊத வேண்டும்.)

    ReplyDelete
  24. தருமிய்யா,

    ஆசிக் அகமது கேட்டக்கேள்வியை எல்லாம் முன்னரே பார்த்தேன்,உபாத்தியார் என்ன சொல்றாங்கன்னு பார்த்துட்டு நம்ம பதிலை சொல்லலாம்னு இருந்தேன், ஹி...ஹி நீங்க "தனி மனித ஒழுக்கம்" என சொன்னால் அது எந்த புக்குல இருக்கு ,யாரு எழுதினானு இன்னொரு கேள்வில கேட்பாரு அவ்வ்!

    ஆசிக்கிற்கு புரியிறாப்போல கொஞ்சம் புட்டு புட்டு வைக்கணும்ல,

    #//அந்த இரு "மனிதர்களுக்கு" எப்படி "மனிதன்மை" வந்தது..? //

    மனிதர்களா பிறந்து,மனிதர்களாகவே வாழ்வதால்!

    #//எந்த சித்தாந்தத்தில் இருந்து வந்தது..? //

    மனிதநேயம் என்ற சித்தாந்ததில் இருந்து!

    #//எந்த புத்தகத்தின் தாக்கத்தின் மூலம் வந்தது..? //

    கண்டிப்பாக குகைல உட்கார்ந்து எழுதுன புத்தகத்தின் மூலம் அல்ல!

    வாழ்க்கை எனும் பள்ளியில் படித்த பாடத்தின் மூலம் வந்திருக்கலாம்.

    #//எந்த அறிஞரின் அறிவுரைகள் மூலம் வந்தது..? //

    உலகமே ஒரு பல்கலை,அதில் வாழ்பவர்கள் எல்லாருமே அறிஞர்கள் என்ற வகையில் "ஞானம்" பெற்றிருக்க கூடும்!

    வானம் எனக்கொடு போதி மரம் நாளும் எனக்கொரு சேதி தரும் எல்லாம் கேட்டதில்லையா?

    #//அந்த புத்தகமும் அறிஞரும் எக்காலத்தில் வாழந்தவர்கள்..?//

    சமகாலத்தில் ரத்தமும் சதையுமாய் வாழ்ந்த மனிதர்களிடம் இருந்து , எழுத்தில் எழுதாத வாழ்க்கைப்பாட நூலில் இருந்து!

    #//எங்கிருந்து இத்தன்மையை இவர்கள் பெற்றார்கள்..?//

    மனசாட்சியிடம் இருந்து இத்தன்மையைப்பெற்றிருக்கிறார்கள்!

    தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின்
    தன்னெஞ்சே தன்னைச் சுடும்!

    #//என்றைக்கு எந்த வயதில் இவர்கள் "மனிதர்கள்" ஆனார்கள்..?//

    பொறக்கும் போதே "மனிதக்குழந்தைகளாக" பிறந்தமையால் வளர்ந்ததும் முழு மனிதர்கள் ஆனார்கள்!

    பின்ன என்னங்கய்யா என்னமோ ஒட்டகக்குட்டியா பொறந்து யாரோ மந்திரம் போட்டு ஒரு நாள் திடீர்னு மனிதர்களாக ஆகிட்டாப்போல என்னிக்கு மனிதர்களாக ஆனார்கள்னு கேட்டுக்கிட்டு அவ்வ்!
    ------------------

    இறைவன்,மதம் என ஒன்றெல்லாம் மனிதனுக்கு புரியும் முன்னரே "அவனை மனிதன்" என உணர்ந்து கொண்டான் ,அது தான் பரிணாமம்!

    இன்னும் சொல்லப்போனால் மூலக்கடவுள் என ஒன்று இல்லாமலே "சித்தாந்த ரீதியாக" மதம் அல்லது மார்க்கம் என ஒன்று உண்டு, மனிதன் இறந்த பின் ஆன்மா எந்த மூலத்தையும் தேடிப்போகாது "ஃப்ரீ வில்" என சொல்வார்கள் அவ்வகை மார்க்கத்தில்.

    அப்படிலாம் இருக்கானு டவுட்டு வருமே, புத்தம்,சமணம் எல்லாவற்றிலும் " மூல கர்த்தா" என கடவுளே இல்லை. மனிதனின் ஆன்மா போகும் வரும் ஆனால் எந்த பரமனிடமும் போய் அடைக்கலமாகாது.

    புத்தரும்,மகாவீரரும் கடளவுளாச்சேனு சொன்னால் ,அம்மார்க்கம் என்ன சொல்லுதுனே தெரியாமல் இருக்கிங்கனு தான் சொல்லனும்!!!

    ReplyDelete
  25. //எந்த புத்தகத்தை படிக்காத மனிதனும் மனிதத்தன்மையோடு வாழ முடியும்.//

    நல்ல வார்த்தை ஏலியன்.

    ReplyDelete
  26. //வானம் எனக்கொடு போதி மரம் நாளும் எனக்கொரு சேதி தரும் எல்லாம் கேட்டதில்லையா?//

    என்ன வவ்ஸ் நீங்க? இப்படி பாட்டு எல்லாம் பத்தி கேக்குறீங்க; அல்லாவுக்கே பாட்டுன்னா பிடிக்காது; பாடக் கூடாதுன்னு சொல்லியிருக்காரு. உங்களுக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது!

    ReplyDelete

  27. உலகில் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் அடிபட்டு மிதிபட்டு நொந்து பலரை பலி கொடுத்து இறுதியில் சாகும்போது எது சரியான தனி மனித ஒழுக்கம் என்று அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இன்றி....

    ​​
    விபரம் அரியம் வயதிலேயே... "தனிமனித ஒழுக்கத்துக்கான உரைகல் இறைவனுன் மனித குலத்துக்கு தந்த வாழ்வியல் மார்க்கமான இஸ்லாம் தான்..!" என்று புரிந்து கொண்டமைக்கு நன்றி சகோ. தருமி.

    ReplyDelete
  28. // (எதற்கு யார் காதிலோ சங்கு ஊத வேண்டும்.)//

    சும்மா சொல்லப்படாது ... தருமி கரெக்டா தான் சொல்லியிருக்கான்.

    ReplyDelete
  29. //உலகில் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் அடிபட்டு மிதிபட்டு நொந்து பலரை பலி கொடுத்து இறுதியில் சாகும்போது எது சரியான தனி மனித ஒழுக்கம் என்று அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இன்றி....//

    இஸ்லாம் மார்க்கத்தை தழுவாத அனைவரும், அதாவது 86.6% இந்தியர்களும், சாகப்போகிற முதியவர்கள் ஏறத்தாள 10% என்று எடுத்துக்கொண்டால், மீதமிருக்கிற 77.94% இந்தியர்களுக்கும் தனிமனித ஒழுக்கம் என்றால் என்னவென்றே தெரியாது. அவர்கள் தனி மனித ஒழுக்கமில்லாதவர்கள். அப்படிதானே ஆஷிக்?

    ReplyDelete
  30. ஆசிக் அகமது,

    //விபரம் அரியம் வயதிலேயே... "தனிமனித ஒழுக்கத்துக்கான உரைகல்//

    விபரம் அறியும் வயதிலேயே "நாலு பொண்டாட்டி" கட்டலாம்னு சொல்லித்தருவது எந்த வகையில தனி மனித ஒழுக்கமா வரும்?

    ஆமாம் தங்களுக்கும் நாலு சம்சாரங்களா?

    -----------------------------

    தருமிய்யா,

    //சும்மா சொல்லப்படாது ... தருமி கரெக்டா தான் சொல்லியிருக்கான்.//

    நான் கூட சரியாத்தான் சொல்லி இருக்கேன், தனி மனித ஒழுக்கம்னு சொன்னால் எந்த புக்கில இருக்கு யார் சொன்னா எனக்கேட்பார்னு அவ்வ்!

    //என்ன வவ்ஸ் நீங்க? இப்படி பாட்டு எல்லாம் பத்தி கேக்குறீங்க; அல்லாவுக்கே பாட்டுன்னா பிடிக்காது; பாடக் கூடாதுன்னு சொல்லியிருக்காரு. உங்களுக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது!//

    அதெல்லாம் பாட்டுப்பாடுவாங்க, டேப் அடிச்சுட்டு ,பச்சக்கலர் தலப்பாக்கட்டுடன் , பாடுறவங்களுக்கு பேரு தான் ஃபக்கீர் , அவங்க அல்லாப்பத்தி மட்டும் பாடலாமாம் :-))

    ஃபக்கீர்களுக்கான குருகுலம் தமிழ்நாட்டுலயே மதுரைல தான் இருக்காம்,அங்கே போனால் டிரெயினிங்க் கொடுத்து , ஃபக்கீர் ஆக்கிடுவாங்க , அவங்க பாட்டுப்பாடிக்கிட்டு வந்தால் இல்லைனு சொல்லாமல் தர்மம் செய்யனும் ,இல்லைனா அல்லா கண்ணக்குத்திடுவார்னு "மார்க்கப்பந்துக்களிடையே ஐதீகமே" இருக்கு அவ்வ்!

    ReplyDelete
  31. 90 விழுக்காடு (அவங்க கணக்கில்) இறையச்சம் உள்ளவர்கள் வாழும் உலகம் ஒழுக்கமாக இருக்கனும், ஆனா அப்படி இல்லையே. மீதம் உள்ள 10 விழுக்காடு நாத்திகர்கள் தான் ஒழுக்கக் கேட்டோடு இருப்பதாக இவங்க சொல்றாங்க.

    ReplyDelete
  32. மனித நேயத்திற்குக் காரணம் இஸ்லாம் மார்க்கமே காரணம் என்று நீங்கள் கூறினால் 40 லட்சம் அல்ல.....4 கோடி கொடுக்க மார்க்க பந்துகள் ரெடியாக உள்ளார்கள்.

    …நம்ம ஒலக சிட்டிசந்தான் ஏஜென்ட்... கொஞ்சம் முன்னப் பின்ன இருந்தாலும் பேசி சரி பண்ணலாம்.

    ReplyDelete
  33. ஆன்மீகத்தில் பழுத்த பழமான இளையராஜா வீட்டிலேயே இஸ்லாம் புகுந்துருச்சுங்கண்ணா! யுவன் சங்கர் முஹம்மது ஹாலிக் யுவனாக வலம் வருகிறார்.

    கோவிகண்ணன், தருமி, வவ்வால் எல்லாம் பெயரை எப்போ மாத்த போறேள்? :-) என்னடா இது? பல வருடங்களாக இஸ்லாத்தை எதிர்த்து பதிவுகளும் பின்னுட்டங்களும் போட்டு விட்டு இப்போ இஸ்லாத்தில் எப்படி நுழைவது என்று சங்கோஜப்பட வேண்டாம். நாங்க பழசை எல்லாம் மற்ந்து விடுவோம். ஓகேவா...:-)

    ReplyDelete
  34. கட்னத மூன்று ஆண்டுகளில் சிரியாவில் 12,000 பச்சைக் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளன. லட்சம் குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளன, பல லட்சம் பேர் வீடுகளை இழந்து வனாந்திரத்தில் உணவு, உடை, நீர், வீடு இன்றி கிடக்கின்றனர்.

    இது இஸ்லாமியருக்குள் நடக்கும் யுத்தம். நல்ல ஒழுக்கத்தையும், இறையச்சத்தையும் இஸ்லாம் கொடுத்திருந்தால், இவ்வாறு நடந்திருக்குமா?

    இதுவே இஸ்ரேலிலோ, எதாவது ஒரு இஸ்லாம் அல்லாத தேசத்திலோ நடந்திருந்தால், இன்று என்னா ஆகி இருக்கும், இஸ்லாமியருக்கு எதிரான போர் என போராடி இருப்பார்கள்.

    ஆனால் இன்று இவர்கள் யாரும் சிரியா குறித்து மூச்சுக் கூட விடுவதில்லை.

    அதே சிரியாவைச் சுற்றி வசதியான வளைகுடா நாடுகள் தான் போராளிக் குழுக்களுக்கு ஆயுதத்தைக் கொடுத்து போராட்டத்தை தூண்டி விட்டுள்ளன. அகதிகளாக வெளியேறி மக்களை தமது நாடுகளுக்கு எடுக்காமல் வெறும் வனாந்திரத்தில் விட்டுள்ளனர்.

    இஸ்லாம் ஏன் இவர்களை நல்லவர்களாக்கவில்லை, போரை நிறுத்தவில்லை, குழந்தைகள் சாவதையும் பட்டினியால் வாடுவதையும் தடுக்கவில்லை... !

    ஏற்கனவே இஸ்லாமில் சேர்ந்தோரையே காப்பாற்ற வக்கில்லாதவர்கள், புதியவர்களை மட்டும் நல்வழிப்படுத்தப் போகின்றார்களா?

    இங்கிருந்த படி வாய்கிழிய பேசுவதும், இணையத்தில் சாகசம் செய்வதால் ஒரு உயிரையாவது சிரியாவில் காப்பற முடிந்தத்தா. இல்லையே.

    :( :( :( :(

    ReplyDelete
  35. சு.பி.சுவாமிகள்,

    வாங்க,,வாங்க! என்ன இது சரியா பேசத்தெரியாத அப்ரண்டீச அனுப்பிட்டீங்களே ,பாவம் மாட்டிக்கிட்டு முழிக்கிறாரே ஆசிக்னு நினைச்சேன்,நல்ல வேளை ,ஜாமின் கொடுக்க வந்தீங்க :-))

    இனிமே தான் ஆட்டம் சூடுப்பிடிக்கும்,சூடாகிடுச்சுனு பாதில கிளம்பிடாதீங்க, உங்களை நம்பி தான் கச்சேரியே இருக்குது!

    //பல வருடங்களாக இஸ்லாத்தை எதிர்த்து பதிவுகளும் பின்னுட்டங்களும் போட்டு விட்டு இப்போ இஸ்லாத்தில் எப்படி நுழைவது என்று சங்கோஜப்பட வேண்டாம். நாங்க பழசை எல்லாம் மற்ந்து விடுவோம். ஓகேவா...:-)//

    ஆன்மீகவாதிக்கு ஒரு மதம் புளிச்சா இன்னொரு மதம் தேடி ஓடுவான்,நாங்க ஏன் சுவாமி அப்படி ஓடப்போறோம்!

    நீங்க வேலைக்கு ஆள் எடுக்கிறாப்போல ஆள்ப்புடிக்கிறதப்பார்த்தால் எனக்கும் கொஞ்ச நாளைக்கு அரேபிய ஷேக்கா உலா வரலாமானு ஆசை வருது, நமக்கு சங்கோஜமெல்லாம் ஒன்னியும் இல்லை, நேரா டீலிங்க் தான், ஒரு ரெண்டு எண்ணக்கிணறு மட்டும் எம்ப்பேருக்கு பட்டா போட்டுக்கொடுங்க, நமாஸ் பாடிடலாம் :-))

    ரெண்டு எண்ணக்கிணறு,நாலு பொண்டாட்டி ,வாயில ஹூக்கானு நெனைச்சாலே கிளுகிளுப்பா இருக்கு, சொகவாழ்க்கை தான் வவ்வாலு!

    அரேபிய இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லைனு நாகூர் அனிபா போல பாடலாம் வராது ,ஏதோ சுமாரா "பக்க வாத்தியம்" வேண்டும்னா வாசிச்சிடலாம் அவ்வ்!

    ReplyDelete
  36. சு.பி.,
    போப் இஸ்லாமுக்கு வந்துட்டார்னு கொஞ்ச நாள் தெறிக்கிறது மாதிரி குதிச்சீங்க.
    அடுத்து பெரியார் தாசன்.
    இந்த சீசன் பாவம் அந்த யுவன்.

    ஒரு சின்ன கேள்வி: கீனாக்கள் (இப்படி ஷார்ட் பார்ம் யூஸ் பண்ணலாமுல்ல...?) ஆஹா எங்க மதத்துக்கு இவங்க வந்துட்டானுக.... அவங்க வந்துட்டானுகன்னு குதிக்கிறதில்லை; இந்த மூனாக்கள் (இப்படி ஷார்ட் பார்ம் யூஸ் பண்ணலாமுல்ல...?) ஏன் இப்படி துள்ளிக் குதிக்கிறீங்க.

    சிம்பு தங்கச்சி கல்யாணம் கீனாக்கள் கோவிலில் நடந்துச்சாம். இதற்காக எந்த கீனாவாவது துள்ளிக் குதிச்சிதா? உங்க சாமி அம்புட்டு பெருசு... அதான் இப்படி துள்றீங்க ... இல்ல.

    என்னைய வேற மூனா வாக ஆகக் கூப்பிட்டீங்களா? நானும் யோசித்தேன். இரண்டு விஷயம் தடையா இருக்கு. கொஞ்சம் சரி பண்ணிட்டா நானும் வந்துர்ரேன். சரியா?

    1. இரா. விவரணன் நீலவண்ணன் சொன்னது மாதிரி //இஸ்லாமில் சேர்ந்தோரையே காப்பாற்ற வக்கில்லாதவர்கள், புதியவர்களை மட்டும் நல்வழிப்படுத்தப் போகின்றார்களா? // என்ற கேள்வி.

    2. IM planned nuke attack on Surat - http://www.thehindu.com/news/national/im-planned-nuke-attack-on-surat/article5723335.ece?css=print
    உங்க மூனா கோஷ்டி இந்தியாவுக்கு அணுகுண்டு வைக்கத் திட்டம் போட்டுருக்கு. அதையும் கொஞ்சம் க்ளியர் பண்ணிடுங்க. வந்திருவோம்.

    எனக்குத்தான் உங்க சுவனம் அம்புட்டு பிடிச்சிப் போச்சே! செம ...!

    ReplyDelete
  37. அட வவ்ஸ்.
    என் பின்னூட்டம் போட்டுட்டு இன்பாக்ஸ் பக்கம் போனா நீங்களும் என்ன மாதிரியே மூனா ஆகுறதுக்கு ரெடியா ஆய்ட்டீங்க.
    என்ன கொஞ்சம் வித்தியாசம். உங்களுக்கு இந்த ஜென்மத்திலேயே ஷேக் ஆகணும்னு ஆசை. எனக்கு சுபி மாதிரி மறுமையில் “72 ஹூரி’ மேல கண்ணு.

    சமாய்ச்சுருவோம் ... அங்க போய்ட்டு. சரியா?

    ReplyDelete
  38. சுபி
    எங்க பொண்டு புள்ளைகள நினச்சாலும் பயமா இருக்கே...

    http://www.vinavu.com/2014/02/25/islamic-fundamentalism-kills-girl-student/

    ReplyDelete
  39. நீலவண்ணன்!

    //மூன்று ஆண்டுகளில் சிரியாவில் 12,000 பச்சைக் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளன. லட்சம் குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளன, பல லட்சம் பேர் வீடுகளை இழந்து வனாந்திரத்தில் உணவு, உடை, நீர், வீடு இன்றி கிடக்கின்றனர்.//

    ஆட்சியாளர் அராஜகம் பண்ணினால் அதை எதிர்த்து மக்கள் கிளர்த்தெழுவது இயல்பே. உக்ரைன், கொரியா லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இது போல் ஆடசியாளர்களால் மக்கள் கொடுமைபடுத்தப்படுவது தினமும் நடந்து கொண்டதானிருக்கிறது. இதற்கு காரணம் இஸ்லாம் அல்ல. இஸ்லாத்தை ஓரளவு கடைபிடிக்கும் சவுதி அரேபியா பல வருடங்களாக அமைதிப் பூங்காவாகத்தான் உள்ளது. சிரியாவில் நடக்கு குழப்பத்துக்கு அமெரிக்காவும் ரஷ்யாவும் மறைமுக காரணம் என்பதையும் மறந்து விட வேண்டாம்.

    ஆனால் நமது இந்தியாவில் சொந்த நாட்டு மக்களால் பார்பனர்களைத் தவிர மற்ற பிற்படுத்தப்பட்ட, மற்றும் ஆதி திராவிட மக்களை தீண்டத்தகாதவர்களாக இன்று வரை மத சட்ட நூல்களும் உயர்சாதியினரும் கூறி அதனை நியாயப்படுத்தியும் வருவதை வசதியாக மறந்து விடுகிறீர்களே!

    ReplyDelete
  40. //சிம்பு தங்கச்சி கல்யாணம் கீனாக்கள் கோவிலில் நடந்துச்சாம். இதற்காக எந்த கீனாவாவது துள்ளிக் குதிச்சிதா? உங்க சாமி அம்புட்டு பெருசு... அதான் இப்படி துள்றீங்க ... இல்ல.//

    ஹி..ஹி அங்கே போனாலும் பாரபனியம் வேறு ரூபத்தில் வந்து பல் இளிக்கும். பெயர்தான் மாறும். ஆதெ வர்ணாசிரமம் அங்கும் வந்து விட்டது. எனவே கிறித்துவம் வளர்வதில் அவாள்களுக்கு பிரச்னை இல்லை. எனவே இதனை பெரிதாக எவரும் எடுப்பதில்லை.

    ஆனால் இஸ்லாத்தில் நுழையும் முன்னரே யுவன் தனது தந்தை வீட்டில் வைக்கும் கொலுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தாராம். எப்படி ஒரு நொடியில் மாற்றுகிறது பார்த்தீர்களா? இது தான் வித்தியாசம்.

    //உங்க மூனா கோஷ்டி இந்தியாவுக்கு அணுகுண்டு வைக்கத் திட்டம் போட்டுருக்கு. அதையும் கொஞ்சம் க்ளியர் பண்ணிடுங்க. வந்திருவோம். //

    இப்படி செய்தி வருவதும் பிறகு விசாரணையில் அசீமானந்தா, பிரக்யாசிங் போன்ற இந்துத்வாவாதிகள் மாட்டி கம்பி எண்ணிக் கொண்டிருப்பதும் வழக்கமான ஒன்று. இதை எல்லாம் சீரியஸாக பார்க்காதீர்கள். நம்ம பத்திரிக்கைகள் அப்படித்தான். உண்மை வேறு.

    ReplyDelete
  41. //வாங்க,,வாங்க! என்ன இது சரியா பேசத்தெரியாத அப்ரண்டீச அனுப்பிட்டீங்களே ,பாவம் மாட்டிக்கிட்டு முழிக்கிறாரே ஆசிக்னு நினைச்சேன்,நல்ல வேளை ,ஜாமின் கொடுக்க வந்தீங்க :-))//

    ஆஷிக் முழிக்கிறாரா? அவர் களத்தில் முழு மூச்சாக இறங்கினால் படு அமர்க்களாக இருக்கும்.

    //ஒரு ரெண்டு எண்ணக்கிணறு மட்டும் எம்ப்பேருக்கு பட்டா போட்டுக்கொடுங்க, நமாஸ் பாடிடலாம் :-))//

    இங்க வந்தால் சில கட்டுப்பாடுகள் உள்ளது. வருமானத்தில் 2;5 சதவீதம் ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும். வட்டி வாங்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. விபசாரம் கூடவே கூடாது. பொய், கொலை, சிலை வணக்கம், போன்ற அனைத்தையும் தூரமாக்க வேண்டும். நமது முன்னோர்கள் பின்பற்றிய 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற மந்திரத்தை வாழ்வில் கடை பிடிக்க வேண்டும். இதற்கெல்லாம் ஓகே என்றால் எங்கும் செல்ல வேண்டாம். நீங்கள் ஒரு முஸ்லிம்.

    ReplyDelete
  42. //இது போல் ஆடசியாளர்களால் மக்கள் கொடுமைபடுத்தப்படுவது தினமும் நடந்து கொண்டதானிருக்கிறது. இதற்கு காரணம் இஸ்லாம் அல்ல. //

    சுவனப்பிரிய சுவாமிகளே!!

    இதற்க்கு காரணம் இஸ்லாம் அல்ல. கரெக்டுதான். ஆனால், ஆனால் இஸ்லாத்தை கடைபிறக்கிற சாதாரண மக்கள் இருக்கிறார்களே. அவர்களை உங்கள் கடவுள் ஏன் காப்பாற்றவில்லை? இதுதான் எங்க கேள்வி. ஆட்ச்சியாளர்கள் கொடுமைப்படுத்தினால், உங்கள் கடவுள் ஆட்ச்சியாளர்களை கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்ற முடியாதா? உங்கள் கடவுளால் முடியும் என்றால் ஏன் இதுவரை காப்பாற்றவில்லை. முடியாது என்றால், அந்த வக்கில்லாத கடவுளை பிடித்து ஏன் தொங்குகிறீர்கள்?

    ReplyDelete
  43. Cooling seat
    closed eyes
    Feel free chest
    Place hand near the heart
    When we sit alone & think
    We realize
    We only have allah swt
    to share our problems

    ---------------------------------------------

    music is my career but islam is my soul and life


    தனது தளத்தில் யுவன் கொடுத்த செய்திகள்.

    ReplyDelete
  44. //கிறித்துவம் வளர்வதில் அவாள்களுக்கு பிரச்னை இல்லை.//

    இங்கே நாம் பேசுவது அவாள்கள் பற்றியல்ல; அத்தாக்கள் பற்றியது.

    கிறித்துவத்திற்குள் வந்தால் கீனாக்கள் துள்ளுவதில்ல;
    இஸ்லாத்திற்குள் வந்தால் மூனாக்கள் துள்ளுகிறீர்கள்.

    ஏன் என்று கேட்டேன். எதுக்கு அவாள்களைப் போய் இழுத்துக்கிட்டு....

    ReplyDelete
  45. //இஸ்லாத்தில் நுழையும் முன்னரே யுவன் தனது தந்தை வீட்டில் வைக்கும் கொலுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தாராம். எப்படி ஒரு நொடியில் மாற்றுகிறது பார்த்தீர்களா? இது தான் வித்தியாசம்.//

    இது தான் வித்தியாசம் இல்லை; இது ஒரு அடி முட்டாள் தனம்; அயோக்கியத் தனம்.

    ஏனெனில் நான் சின்னப்பிள்ளையாக இருந்த போது அம்மா வழியில் இந்துக்கள். அவர்கள் வீட்டு பிரசாதத்தைச் சாப்பிடக் கூடாதுன்னு கீனாக்கள் சொல்லிக் கொடுத்தாங்க. அறிவு வர்ரது வரை நானும் அதைத் தொட்டதில்லை.

    புத்தி வந்த பிறகு ... நீங்கள் என்னமோ ‘சும்மானாச்சுக்கும்’ சொல்வீர்களே ... ’அவர்கள் தீன் அவர்களுக்கு; என் தீன் எனக்கு’ என்பதைப் புரிந்து கொண்டு அவர்கள் வழிபாட்டைச் சிறுமைப் படுத்துவதுமில்லை; எதிர்ப்பதுமில்லை. நான் என் வழியில்; அவர்கள் வழியில் அவர்கள் என்று நினைக்கும் பக்குவமும், அறிவும், பண்பும் வந்து விட்டது.

    உங்களுக்கும் உங்கள் மதக்காரர்களுக்கும் இந்தப் பக்குவம் என்றும் வராது என்பது உங்கள் பதிலிலிருந்து தெரிகிறது.

    ‘இஸ்லாமியத் தத்துவத்தின் பெருமை’யும் நன்றாகப் புரிகிறது.

    ReplyDelete
  46. //விசாரணையில் அசீமானந்தா, பிரக்யாசிங் போன்ற இந்துத்வாவாதிகள் மாட்டி கம்பி எண்ணிக் கொண்டிருப்பதும் வழக்கமான ஒன்று. //

    ஆமா சுபி ... நீங்க போட்ட போடுல இந்துத்துவாதிகளும் ஆரம்பிச்சிட்டாங்க. நீங்க போட்ட ரோடு... அவங்களும் ரோலர் ஓட்டுறாங்க.

    ஆனா...வெளிநாட்ல என்னென்னமோ நடக்குதாமே.. அங்கல்லாம் இந்த அசீமானந்தா, பிரக்யாசிங் ஆளுங்க போகலைங்களே.

    யுவன் கொலுவைக் கேலி செய்தார்னு சொல்றீங்க; இது உங்கள் மதத்தினால் வந்த கேவலம். இதே போல் இன்னொரு நிகழ்வு - அமெரிக்காவில் - A Muslim convert walks into a church service with a Quran and guns down his Christian father while praising Allah. அப்போ அவன் ‘இன்ஷா அல்லா’ன்னு கத்தியிருப்பானே ??!!

    . முந்தியே பல தடவை ஒரு கேள்வி கேட்டுட்டேன். திருப்பிக் கேட்கிறேன். உலகத்தில் எங்காவது ஏதாவது ஒரு மதத்தில் கொலை செய்யும் போது இப்படி அல்லாஹூ அக்பர்னு கத்துற மாதிரி அவங்க சாமியைத் தொழும் மதம் ஏதாவது உண்டா?

    பாஸ்டன்ல குண்டு போட்டாங்களே .. அங்க இந்த அசீமானந்தா, பிரக்யாசிங் ஆளுங்க போகலைங்களே.

    அட அதை விடுங்க... சமீபத்திய இஸ்லாமியத் திருவிளையாடல்களை இங்கே பாருங்கள்.

    ReplyDelete
  47. //யுவன் தனது தந்தை வீட்டில் வைக்கும் கொலுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தாராம்.//

    சகோ.சுவனப்பிரியன் சொன்னது இது..!

    அதை திரித்து.....

    //யுவன் கொலுவைக் கேலி செய்தார்னு சொல்றீங்க; //

    ....என்று பொய் கூறி பட்டப்பகலில் பேராசிரியர் தருமி ஆடி இருக்கும் அக்கிரம திருவிளையாடல் இது..!

    தன்னிடம் வாதிக்க கைவசம் சரியான வாதங்கள் இல்லை என்ற கையறு நிலை படலம் ஏற்படும் போதெல்லாம்...... எதிராளியை எள்ளி நகையாடுதல், பொய் கூறுதல், சொன்னதை நயம்பட திரித்தல் மட்டுமே செய்வதை பல ஆண்டுகள் தருமி சார் செய்வதை பார்த்து வருகிறோம்.

    இப்போதும் அப்படியே...!

    "// (எதற்கு யார் காதிலோ சங்கு ஊத வேண்டும்.)//"
    "//தனி மனித ஒழுக்கம்
    அது உங்களுக்குத் தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன்!//"

    -----என ஆரம்பித்த போதே... நான் உணர்ந்து கொண்டேன்... 'தருமி சார் அடிபடாதது போல நடிக்க ஆரம்பித்து விட்டார்' என்று.

    நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நேரடி பதில் சொல்லாமல் தப்பிக்கிறார்.

    பலர் பல மாதிரி பல விதங்களில் தனி மினித ஒழுக்கங்களை ஒரே விஷயத்தில் சொல்லி இருக்க.... 'எது சரி' என்று அதை அனுபவத்து பட்டு அறிந்து கொள்ளாமலேயே இலகுவாக எப்படி "சரியானதை" அறிந்து கொள்வது..? அதற்கான உரைகல் எது..?

    எனக்கு... இஸ்லாம்..!

    இது எனது சவால்..!

    உங்களுக்கு ------------------------???

    கோடிட்ட இடத்தை மட்டும் நிரப்பினால் போதுமானது..!

    ReplyDelete
  48. அஷீக்
    ரெண்டாவது ரவுண்டல வந்திருக்கீங்க ... வாங்க ..

    ‘பயங்கரமான’ பொய் சொல்லிட்டேன் அப்டீங்கிறீங்க; ஆனா சொன்ன விஷயத்தை உட்டுட்டீங்க.
    ’கேலி’ செய்திருந்தாலும், ’எதிர்த்திருந்தாலும்’ அதற்கு நான் சொல்லும் ஒரே பதில்:
    //இது தான் வித்தியாசம் இல்லை; இது ஒரு அடி முட்டாள் தனம்; அயோக்கியத் தனம்.//

    அதோடு இன்னும் கடினமாக //.உங்களுக்கும் உங்கள் மதக்காரர்களுக்கும் இந்தப் பக்குவம் என்றும் வராது என்பது உங்கள் பதிலிலிருந்து தெரிகிறது. // என்றும் சொல்லிவிட்டேன்.

    இதைப்பத்தி சொல்ல ஒன்றும் இல்லாததால் அந்த ஒற்றை வார்த்தை வைத்து சாமியாடுகிறீர்கள்! பாவம்!!

    அடிபடாமல் நடிப்பது தருமியா, ஆஷிக்&சுபி கோஷ்டியா என்று யாரிடமாவது கேட்டுப் பாருங்களேன்.

    கொடுத்த accusationகளுக்குப் பதில் ஏதும் இல்லையென்றால் இந்தப் பல்லவியை வழக்கம் போல் பாடிவிட்டு போய்விடுவீர்கள் என்று தெரியாதா? நமக்குள் தான் எத்தனை ஆண்டு பழக்கம்!!!

    ReplyDelete
  49. //கோடிட்ட இடத்தை மட்டும் நிரப்பினால் போதுமானது..! //

    அதுதான ஏற்கெனவே சொல்லி விட்டேனே!!! நீங்கள் கூட அந்தப் பதிலுக்கு good என்று டிக் போட்டு விட்டீர்களே!
    பிறகென்ன?

    ReplyDelete
  50. //இது தான் வித்தியாசம் இல்லை; இது ஒரு அடி முட்டாள் தனம்; அயோக்கியத் தனம்.//

    இஸ்லாம் எந்த ஒரு விஷயத்திலும் சமரசம் செய்து கொள்வதில்லை. கடவுள் ஒருவன் என்பதும், மாடு கருடன், மூஞ்சூறு, பிள்ளையார், முருகன், ஏசு, மேரி, பரிசுத்த ஆவி போன்ற எல்லாமே கடவுள் என்பதும் எப்படி ஒன்றாகும்? எந்த ஒரு கருத்திலும் தெளிவு இருக்க வேண்டும்.

    அதே நேரம் தனது தந்தை இஸ்லாத்துக்கு வர விரும்பவில்லை. அவருக்கு நான் பணி விடை செய்யலாமா? என்று ஒரு தோழர் முகமது நபியிடம் கேட்ட பொழுது 'அவரை காப்பாற்ற வேண்டியது உனது கடமை. அவர் இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும் உன் மீது கடமை' என்று சொன்னதை பார்க்கிறோம். இதுதான் இஸ்லாம்.

    ஆனால் இளையராஜா கொலு வைக்க விரும்பியது யுவனின் வீட்டில். தனது வீட்டில் இப்படி ஒரு நிகழ்வு நடப்பதை பார்க்க பிடிக்காமல்தான் அவர் அன்று மும்பை போனது. மறுநாள் இளையராஜாவும் கோபித்துக் கொண்டு கார்த்திக்கின் வீட்டுக்கு சென்றதாகவும் பிறகு சமாதானம் ஆகி விட்டதாகவும் படித்தேன். தனது பேட்டியில் கூட தனது தந்தையை என்றும் போல் மதிப்பேன் என்றுதான் யுவன் கூறியுள்ளார்.

    ReplyDelete
  51. தருமிய்யா,

    //எனக்கு சுபி மாதிரி மறுமையில் “72 ஹூரி’ மேல கண்ணு. //

    நீங்க ஆசையின் எல்லையை கடந்தவராகியிருப்பிங்கனு நினைச்சேன், கடைசியில எங்களோடு போட்டிக்கு வரீங்களே அவ்வ்!

    நல்ல வேளை சுவனத்துல தான்!

    சமாய்ச்சுடலாம் ,நாம்ம போய் தான் " புதுமைப்படைக்கணும்" அரேபிய மார்க்கத்தில் என இறைவிதி இருக்கும் போல :-))
    ------------------

    சுபி.சுவாமிகள்,

    //ஆஷிக் முழிக்கிறாரா? அவர் களத்தில் முழு மூச்சாக இறங்கினால் படு அமர்க்களாக இருக்கும். //

    ஹி...ஹி அதைத்தான் முன்னரே பார்த்திருக்கோமே, மண்ணைவாரி தூத்துவாரு :-))

    //இங்க வந்தால் சில கட்டுப்பாடுகள் உள்ளது. வருமானத்தில் 2;5 சதவீதம் ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும். வட்டி வாங்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. விபசாரம் கூடவே கூடாது. பொய், கொலை, சிலை வணக்கம், போன்ற அனைத்தையும் தூரமாக்க வேண்டும். நமது முன்னோர்கள் பின்பற்றிய 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற மந்திரத்தை வாழ்வில் கடை பிடிக்க வேண்டும். இதற்கெல்லாம் ஓகே என்றால் எங்கும் செல்ல வேண்டாம். நீங்கள் ஒரு முஸ்லிம்.//

    யூத மதக்கட்டுப்பாடை எல்லாம் சொல்லி எதுக்கு இஸ்லாமியர்னு சொல்லுறிங்க அவ்வ்!

    நீங்க சொல்லுறது அத்தனையும் திருவள்ளுவரே சொல்லி இருக்கார், எனவே வாங்க தமிழ் மதத்தில சேர்ந்துக்குவோம் :-))

    //இஸ்லாத்தில் நுழையும் முன்னரே யுவன் தனது தந்தை வீட்டில் வைக்கும் கொலுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தாராம். எப்படி ஒரு நொடியில் மாற்றுகிறது பார்த்தீர்களா? இது தான் வித்தியாசம்.//

    முதலில் ராசா இந்துவேயில்லை, அவரு கிருத்துவக்குடும்பம், டேனியல் ராசையா என்பது தான் பெயர். அவங்க அப்பா பேரு டேனியல் ராமசாமி.

    அவங்க அண்ணன் பாஸ்கர் கடைசிகாலம் வரையில் ராமசாமி டேனியல் பாஸ்கர் என்று தான் வாழ்ந்தார் ,சுருக்கமா ஆர்.டி,பாஸ்கர்னு போட்டிருப்பதால் தெரிஞ்சிருக்காது.

    கொஞ்ச நாள் இந்து மதம் பக்கம் வந்திருந்தாங்க, யுவனுக்கு ரெண்டு மத சம்பிராதயமும் பார்த்து போரடிச்சு இருக்கும் போல ,இப்போ இஸ்லாம் பக்கம் போயிருக்காரு, அப்புறம் இன்னொரு மன வருத்தம் வரும் போது யூதராக கூட மாறுவாராயிருக்கும் அவ்வ்!

    ஆனால் அப்போ மாறவிடமாட்டேனு நீங்க கத்திய தூக்கிடுவிங்களே :-))

    ReplyDelete
  52. இன்றைய செய்தி - சுடச் சுட ...

    http://www.thehindu.com/todays-paper/tp-international/43-killed-as-islamists-target-secondary-school-in-nigeria/article5727590.ece

    இங்கேயும் அசீமானந்தா, பிரக்யாசிங் போகவில்லையாமே! இந்தியா ரொம்ப மோசமான நாடு என்று வைத்துக் கொள்வோம். ஆனால் உலகத்துக்கே மொத்த கான்ட்ராக்ட் எடுத்திருப்பது யார்?

    ReplyDelete
  53. This comment has been removed by the author.

    ReplyDelete
  54. //இஸ்லாம் எந்த ஒரு விஷயத்திலும் சமரசம் செய்து கொள்வதில்லை. //

    நீங்கள் சமரசம் செய்ய வேண்டியதேயில்லை. ஆனால் அடுத்தவன், அது தந்தையோ, மனைவியோ வேறு நம்பிக்கை கொண்டிருந்தால் உங்களுக்கு என்ன? இதைத் தான் சொன்னேன்: //அவர்கள் வழிபாட்டைச் சிறுமைப் படுத்துவதுமில்லை; எதிர்ப்பதுமில்லை. நான் என் வழியில்; அவர்கள் வழியில் அவர்கள் என்று நினைக்கும் பக்குவமும், அறிவும், பண்பும் எனக்கு வந்து விட்டது.


    உங்களுக்கும் உங்கள் மதக்காரர்களுக்கும் இந்தப் பக்குவம் என்றும் வராது என்பது உங்கள் பதிலிலிருந்து தெரிகிறது. //

    அதை நன்கு நிரூபித்து விட்டீர்கள். நல்லவர் நீங்கள்!

    //இளையராஜா கொலு வைக்க விரும்பியது யுவனின் வீட்டில். //

    so what? தகப்பன் ஆசை; வைத்து விட்டுப் போகட்டுமே! இதற்காக அல்லா வீட்டை இரண்டாகப் பிளந்து விடுவானோ? அல்லது அல்லாஹூ அக்பர் என்று சொல்லி யுவன் கழுத்தைச் சீவி விடுவானா?

    மத நல்லிணக்கம் என்றால் வீசை எவ்வளவு என்று வஹாபியர்களுக்கு என்றாவது புரியுமா...?

    என் வீட்டில் இல்லாத கீனா சாமி படமா? தங்ஸிற்குப் பிடிக்கும். இருக்கிறது. அவர்கள் கோவிலுக்குப் போக வேண்டுமா? முதல் ஆளாய் கூட்டிச் செல்ல தயாராக இருப்பேன். அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு. என் நம்பிக்கையின்மை எனக்கு.

    இந்த நாகரீகத்தை உங்களிடம், அதாவது ஒரு வஹாபி இஸ்லாமியரிடம் எதிர்பார்ப்பது தவறுதான்! - மற்ற இஸ்லாமியர்கள் இது போல் இருக்க மாட்டார்கள் என்பது என் நம்பிக்கையும், ஆசையும்.

    ReplyDelete
  55. தருமிய்யா,

    கொஞ்சம் வெயிட் செய்யுங்க, யுவன் ,அப்படியே தர்க்கா பக்கம் போயி துவா செய்வார்,அதுக்கு அப்புறம், யுவனா யாரதுனு சு.பி.சுவாமிகளே கேட்பாராக்கும் :-))

    மத நல்லிணக்கம்னு ஏன் அண்டை அயலார் மதம் எல்லாம் ஒப்பிடணும் ,இஸ்லாமுக்குள்ளவே "ஒரு நல்லிணக்கம்" கிடையாது.

    நைஜீரியால குண்டு வச்சதுலாம் "ஷியாக்கள்" மீதா இருக்கும், மேலும் ஆங்கில கல்வியை வேற எதிர்க்கிறாங்களாம், நல்லா வருவாங்க அவ்வ்!

    # கடவுள் இருக்காரோ இல்லையோ,ஆனால் அவர் இருந்தால் அவர் தான் மக்களை காப்பாத்தணும்,ஆனால் இந்த வஹாபிக்களோ கடவுளையே காப்பாத்திக்கிட்டு இருக்காங்க அவ்வ்!

    # இவர்கள் சிறுபான்மையாக இருக்கும் போது , பெரும்பான்மை மதத்தவர்கள் மதம் பற்றி பேசினால் மதவாதம் என்பார்கள்,ஆனால் இவர்கள் பெரும்பாண்மையாக இருக்குமிடத்தில் மதவாதம் பேசிக்கொண்டு "எங்க மதம் பெரும்பான்மையாக இருக்கும் இடத்தில் கூட பேசக்கூடாதா என்பார்கள். ஒரே குழப்பவாதிகள் அவ்வ்!

    ReplyDelete
  56. //உங்களுக்கும் உங்கள் மதக்காரர்களுக்கும் இந்தப் பக்குவம் என்றும் வராது என்பது உங்கள் பதிலிலிருந்து தெரிகிறது. //

    இளையராஜா எந்த சாமியையாவது வணங்கி விட்டுப் போகட்டும் என்றுதான் தந்தைக்கு மதிப்புக் கொடுத்து அவர் அன்று மும்பைக்கு பயணமானது. ஆனால் இளையராஜா கோபப்பட்டு அவரை திரும்பவும் சென்னைக்கு வரவழைத்துள்ளார். தந்தை தனது மகனை ஏன் இவ்வாறு தனது நம்பிக்கையின் பால் வர வேண்டும் என்று கட்டாயப்படுத்த வேண்டும்? இங்கு தவறு இளையராஜாவிடம் அல்லவா இருக்கிறது!

    ReplyDelete
  57. //தந்தைக்கு மதிப்புக் கொடுத்து அவர் அன்று மும்பைக்கு பயணமானது. //

    என் வீட்டில் சாமி கும்பிட்டால் நான் வெளியே ஓட மாட்டேன். ஓடினால் அது தவறு. அதனால் மீண்டும் சொல்கிறேன்: //உங்களுக்கும் உங்கள் மதக்காரர்களுக்கும் இந்தப் பக்குவம் என்றும் வராது என்பது உங்கள் பதிலிலிருந்து தெரிகிறது. //

    எல்லாமே பக்கத்தில இருந்து பார்த்தது மாதிரி சொல்றீங்களே...

    ReplyDelete
  58. //தவறு இளையராஜாவிடம் அல்லவா இருக்கிறது!//

    யாருக்கும் தங்கள் முதுகு தெரியாது. உங்களுக்கு எப்போதுமே தெரியாது.

    ReplyDelete
  59. //கொஞ்சம் வெயிட் செய்யுங்க, யுவன் ,அப்படியே தர்க்கா பக்கம் போயி துவா செய்வார்,அதுக்கு அப்புறம், யுவனா யாரதுனு சு.பி.சுவாமிகளே கேட்பாராக்கும் :-))//

    யுவனுக்கு தனியாக செய்தியே கொடுத்துள்ளேன். 'நீங்கள் ரஹ்மானை மற்ற எதில் வேண்டுமானாலும் பின்பற்றிக் கொள்ளுங்கள். ஆனால் தர்ஹா சம்பந்தமாக அவர் கூறுவதை பின்பற்ற வேண்டாம். குர்ஆனை பின் பற்றுங்கள்" என்று கூறினேன். அதற்கு லைக்கும் போட்டுள்ளார். எனவே தரஹா பக்கம் செல்ல மாட்டார் என்றே நினைக்கிறேன். ஒரு முறை மக்கா மதினா வந்து விட்டால் இன்னும் பலமான நம்பிக்கை வந்து விடும். மக்கா வருவதாகவும் சொல்லியிருக்கிறார்.

    உங்களுக்கெல்லாம் அந்த ஆசை வரவில்லையா!

    ReplyDelete
  60. என்ன வவ்ஸ்
    உங்களுக்கு சுபி ம & ம வுக்கு டிக்கெட் போட்டுட்டது மாதிரி தெரியுது!

    ReplyDelete
  61. //ஆனால் ”இஸ்லாத்தில் நுழையும் முன்னரே” யுவன் தனது தந்தை வீட்டில் வைக்கும் கொலுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தாராம். ”எப்படி ஒரு நொடியில்” மாற்றுகிறது பார்த்தீர்களா? இது தான் வித்தியாசம்.// இந்த கருத்து இஸ்லாமிற்கு மாறுவதற்கு முன்னர் யுவன் நடவடிக்கையை குறிப்பிடுகிறது அப்போது அவர் இஸ்லாமியர் இல்லை ஆனால் மாறுவதற்கு முன்னரே எப்படி இஸ்லாம் ஒரு நொடியில் மாற்றியது. //யுவன் கொலுவைக் கேலி செய்தார்னு சொல்றீங்க// இது தவறென்னால் மேற்கூறிய முரன்பாடும் தவறுதானே!?

    ReplyDelete
  62. //இது தவறென்னால் மேற்கூறிய முரன்பாடும் தவறுதானே!? //

    அவர் கடந்த ஒரு வருடமாகவே இஸ்லாத்தை பின் பற்றி வருவதாக சொல்லியுள்ளார். வெளியுலகுக்கு அவர் அறிவித்தது போன மாதம் தான்.

    ReplyDelete
  63. சுபி.சுவாமிகள்,
    நீங்கள் என்னுடைய கேள்வியை சாய்ஸில் விட்டுட்டீங்களோ?

    ReplyDelete
  64. alien
    உங்க கேள்வி மட்டுமல்ல ... மொத்தம் 31 கேள்விகள் unanswered ஆக விட்டுப்போச்சு. தொகுத்து வச்சிருக்கேன். இன்னைக்கு மாலை வரை பார்த்து விட்டு நாளை அதை தனியாகப் பதிவிடுகிறேன்.

    ReplyDelete
  65. சு.பி.சுவாமிகள்,

    //யுவனுக்கு தனியாக செய்தியே கொடுத்துள்ளேன். //

    ஆஹாஹ்ஹா யுவனுக்கே நீங்க தான் ஆன்மீகஸ்குருவா, அப்போ நீங்க தான் குருஸ்வாமிகள்!!!

    //உங்களுக்கெல்லாம் அந்த ஆசை வரவில்லையா!//

    எனக்கு தான் ஆசை வந்துப்போச்சுனு, டீலிங்க்க சொன்னேன்ல, ரெண்டே ரெண்டு எண்ணக்கிணரு போதும்,அதிகமா எல்லாம் ஆசைப்படலை, ரெண்டு எண்ணக்கிணறுல எண்னைய ராப்பகலா எறைச்சு ஊத்தி ரெண்டே வருசத்துல ரெண்டாயிரம் எண்ணக்கிணறு வாங்கி ,நான் பெரிய அரேபிய ஷேக்கா ஆகிக்காட்டுறேன், இந்த நாள் உங்க டயரில எழுதி வச்சுக்கோங்க...!!!
    -------------------

    தருமிய்யா,

    //என்ன வவ்ஸ்
    உங்களுக்கு சுபி ம & ம வுக்கு டிக்கெட் போட்டுட்டது மாதிரி தெரியுது!//

    அப்போ ரெண்டு எண்ணக்கிணரு கன்ஃபர்ம் ஆகிடுச்சுனு நினைக்கிறேன். இனிமே சு.பி.சுவாமிகளை நமக்கும் ஆன்மீகஸ்குருவா ஏத்துக்கிட வேண்டியது தான்!

    கவலைப்படாதிங்கய்யா,உங்களுக்கு தான் சுவன நித்தியக்கன்னிகளே போதும்னு சிம்பிள் டீலிங்க் தானே ,எனவே உங்களுக்கும் ம&ம டிக்கெட் போட்ருவாங்க!
    -----------------------------
    வேற்றுகிரவாசி,

    //சுபி.சுவாமிகள்,
    நீங்கள் என்னுடைய கேள்வியை சாய்ஸில் விட்டுட்டீங்களோ?//

    இன்னும் இறைநாடவில்லை போல அதான் பதில் சொல்லவில்லை,இறைநாடிவிட்டால் "ஆணியடிச்சா போல பதில் சொல்லிடுவார் சு.பி.சுவாமிகள் :-))

    இதே போல சாய்சில் எனக்கும் ஏகப்பட்டது விட்டிருக்காருல்ல, உலக குடிமகன் கூட இப்படி சாய்சில் நிறைய விடுவார், நாலு பொண்டாட்டி கட்ட சொல்வது தான் தனிமனித ஒழுக்கமானு கேட்டேன் ,அப்போ எஸ்ஸானவர் தான் :-))

    ஆனாலும் தருமிய்யா விடமாட்டாங்க போல இருக்கு ,சாய்சில் விட்டதெல்லாம் கணக்கு பண்ணி கேட்கிறேன்னு கிளம்பிட்டாரே,அப்போ அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் இன்னும் சூடா இருக்கும்னு நினைக்கிறேன்,தயாராகிடுவோம்!

    ReplyDelete
  66. (படம்: ராமன் அப்துல்லா) ஏய்... எத்தனையோ சித்தனுங்க கத்தியாச்சு... கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியாச்சு... சுத்தமாகச் சொன்னதெல்லாம் போறலையா...? மொத்தமாகக் காதுல தான் ஏறலையா...? உன் மதமா...? என் மதமா...? ஆண்டவன் எந்த மதம்...? நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்...!!! மனசுக்குள்ள நாய்களும், நரிகளும், நால்வகைப் பேய்களும் நாட்டியமாடுதடா...! மனிதனென்னும் போர்வையிலிருக்குது; பார்வையில் நடக்குது நான் கண்ட மிருகமடா...! அட யாரும் திருந்தலையே... இதுக்காக வருந்தலையே...! (2) நீயும் நானும் ஒன்னு - இது நெசந்தான் மனசுல எண்ணு...! பொய்யையும் புரட்டையும் கொன்னு - இந்தப் பூமிய புதுசா பண்ணு...! சும்மா சொன்னதச் சொன்னதச் சொல்லவா...? சொல்லாமல் என் வழி என் வழி செல்லவா...? அட உன்னதான் நம்புறேன் நல்லவா...! உன்னால மாறுதல் வந்திடுமல்லவா...?

    அட...! பேசும் தாய்மொழியின் அருமை பெருமை உட்பட முழுமையாகக் கற்றுத் தேறாதவர்கள், மற்ற மொழிகளை முழுமையாகக் கற்கத் தான் முடியுமா ? அப்படி வல்லவரானாலும், அவ்வாறு முடியவில்லை என்றாலும், இழிவாகப் பேசுவதும், எழுதுவதும், ஏன் நினைப்பதும் கூடத் தான் சரியா...? மொழியை மட்டும் சொல்லவில்லை... பேசும் மொழியே இப்படியிருக்கும் போது பிறந்தநாடு, இன்னும் பலவற்றைப் பற்றிப்ப்ப்ப்ப்...

    நிறுத்து, நீ நினைப்பது சரியா மனச்சாட்சி...?


    இந்த வருடம் காதலர் தினத்திற்கு முன் வெளியிட்ட பகிர்வு... அவரவர் அறிந்து தெரிந்து புரிந்து கொண்ட அளவு தான் எல்லாமே... முழுதாக உணர்ந்து கொண்டவர்கள் மற்றவர்களைப் பற்றியோ, மற்றவர்களை சார்ந்த எந்த விசயத்திலும் பேசவோ, தர்க்கம் செய்யவோ... ஏன் நினைக்கவே மாட்டார்கள்... இதில் "மற்றவர்கள் என்பதையும், மற்றவர்களை சார்ந்த எந்த விசயத்திலும் என்பதையும்" உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்... இவையெல்லாம் வீண் என்பதும் உங்களுக்கும் தெரியும்... மற்றபடி ஜாலியான பொழுதுபோக்கு என்றால் தாராளமாக தொடருங்கள்...

    ஏனென்றால் ஜாலியான சமயத்தில் மறுபடியும் இந்தப் பகிர்வை பார்க்க நேர்ந்தது... அதுவும் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள இனிய நண்பரின் Browsing Center-ல்... அவரும் படித்து விட்டு பல மணி நேரம் சிரித்துக் கொண்டிருந்தார்... இவர்களுக்கு எல்லாம் சிலை வைக்க வேண்டும் என்றார்... வலைத்தளம் என்பது அவருக்கு புதிது... சிலவற்றை சொல்லிக் கொடுத்தேன்... இன்னும் சில தளங்களையும் அறிமுகம் செய்து வைத்தேன்... பலரையும் கேட்டு அறிந்தார்... ஒரு தளத்தில் ஆப்பு கிடைத்தவரும் இதிலும் அதிலும் இருந்தார்... பலரின் Profile-யை பார்த்து முகவரி, தொலைபேசி எண் எல்லாம் இல்லையே என்றார்... "அதான் இப்படி எழுதுகிறார்கள்... கருத்து சொல்கிறார்கள்... சிலை வைப்பதாக இருந்தால் பலருக்கும் சிலை வைக்க வேண்டும்... இடம் பத்தாது... ஹா... ஹா... இவை எல்லாம் கண்டுக்காதீங்க" என்றேன்...

    இனி அவருக்கு இனிதாக பொழுது போக வேண்டும் என்று வேண்டுகிறேன்... ஹிஹி...

    பேசிய இடம் : பேகம்பூர்... நண்பர் பெயர் : சொல்லவா வேண்டும்...? எல்லா நண்பர்களும், எல்லாவித நண்பர்களும் எனக்கு உள்ளார்கள்... முடிந்தால் ஊருக்கு வரும் போது சந்தித்து உரையாடுவோம் ஐயா... நன்றி...

    ReplyDelete
  67. alien, வவ்ஸ்

    உங்க கிட்ட சொல்லியாச்சி .. இனி எதற்கு நாளை வரை காத்திருக்கணும். இப்பவே அந்த பட்டியலைப் போட்டு விடுகிறேன்.

    ReplyDelete
  68. //அவர்களை உங்கள் கடவுள் ஏன் காப்பாற்றவில்லை? இதுதான் எங்க கேள்வி. ஆட்ச்சியாளர்கள் கொடுமைப்படுத்தினால், உங்கள் கடவுள் ஆட்ச்சியாளர்களை கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்ற முடியாதா? உங்கள் கடவுளால் முடியும் என்றால் ஏன் இதுவரை காப்பாற்றவில்லை. முடியாது என்றால், அந்த வக்கில்லாத கடவுளை பிடித்து ஏன் தொங்குகிறீர்கள்?//

    இந்த உலக வாழ்ககை என்பது நிரந்தரமான மறு உலக வாழ்வுக்கு பரீட்சை ஹால் என்று சொல்லலாம். சொற்ப நேரம் இந்த பூமியில் தங்குகிறோம். இங்குள்ள மனிதர்களுக்கு இன்பமும் துன்பமும் மாறி மாறி வருகிறது. நன்மை எது தீமை எது என்பதை பட்டியலிட்டு சொல்லியாகி விட்டது. இந்த பரீட்சையில் உங்களுக்கு சோகமும் கிடைக்கலாம். அந்த சோகத்தைத் தாங்கிக் கொண்டு அந்த நிலையிலும் நீங்கள் இறைவனை நினைக்கிறீர்களா? என்று சோதிக்கவே சிலருக்கு சிரமத்தை இறைவன் கொடுக்கிறான். இந்த உலகில் படும் துன்பங்களுக்கு பகரமாகத்தான் மறு உலகில் அனைத்து சுகங்களையும் தருவதாக வாக்களிக்கின்றான்.

    இந்த பதில் பலமுறை சொன்னதாலேயே சாய்ஸில் விட்டேன். மற்றபடி தருமி சார் கேட்ட பல கேள்விகளுக்கு பல முறை பதில் சொல்லியாகி விட்டது.

    திருப்பி...திருப்பி ....திருப்பி எத்தனை முறை சார். :-(

    ReplyDelete
  69. //அவர் கடந்த ஒரு வருடமாகவே இஸ்லாத்தை பின் பற்றி வருவதாக சொல்லியுள்ளார். வெளியுலகுக்கு அவர் அறிவித்தது போன மாதம் தான். // அப்படியானால் இஸ்லாம் அவரை நொடியில் மாற்றவில்லை (ஒரு வருடமாகியுள்ளது) என்பது நிறுபிக்க படுகிறது, தங்கள் முடிவு தவாறனது.

    ReplyDelete
  70. //அந்த சோகத்தைத் தாங்கிக் கொண்டு அந்த நிலையிலும் நீங்கள் இறைவனை நினைக்கிறீர்களா? என்று சோதிக்கவே சிலருக்கு சிரமத்தை இறைவன் கொடுக்கிறான். இந்த உலகில் படும் துன்பங்களுக்கு பகரமாகத்தான் மறு உலகில் அனைத்து சுகங்களையும் தருவதாக வாக்களிக்கின்றான்.//

    சுபி.சுவாமிகள்,
    உங்க குரூப்லயே நீங்க மட்டும் எப்படி கண்ணியமா மரியாதையா இருக்கீங்க? நிற்க.
    இப்போ விவாதத்திற்கு வருவோம்.

    1. இந்த சிரமத்தை எல்லாம், சோதிப்பதற்காக இறைவனே தன் மக்களுக்கு கொடுக்கிறான். அப்புறம் எதுக்கு ஆட்சியாளர்களையும், அமெரிக்காவையும், ரஷ்யாவையும் குறை கூறுகிறீர்கள்?

    2. உங்கள் புத்தகத்தின் படி, இறைவன் இன்றைக்கு சிரமத்தை கொடுக்கிறான். நாளை சொர்க்கத்தை கொடுக்கிறான். அப்படித்தானே?
    இது எதற்கு சமம் என்றால்,
    ஒரு குழந்தையை எந்த காரணமும் இல்லாமல், கன்னம் பலுக்க நாலு அரை விட்டு, மிதி மிதி என்று மிதித்து, நையபுடைக்க அடித்துவிட்டு, அடுத்த நாள் நிறைய சாக்கலேட் வாங்கி கொடுத்து கொஞ்சுவதற்கு சமம். ஒரு பழமொழி சொல்வார்களே, குழந்தையை கிள்ளி விட்டுட்டு தொட்டிலை ஆட்டுவது. அது போன்று.
    எல்லாம் வல்ல கருணையே வடிவான, இறைவன் இது போன்ற சின்னபிள்ளதனமாக செயல்படுவது, உங்களுக்கே படு கேவலமா தெரியலையா?

    ReplyDelete
  71. ~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

    //விபரம் அரியம் வயதிலேயே... "தனிமனித ஒழுக்கத்துக்கான உரைகல் இறைவனுன் மனித குலத்துக்கு தந்த வாழ்வியல் மார்க்கமான இஸ்லாம் தான்..!" //

    ஒருத்தன் நாலு பொண்டாட்டிய கட்டிக்கலாம் :)
    உறவுக்கு சம்மதிக்கவில்லையென்றால் அடித்து சம்மதிக்க வைக்கலாம் :)
    ஒன்பது வயது பெண்ணுடன் உறவு கொள்ளலாம் :)

    ஆகா என்னே ஒழுக்கத்துக்கான உரைகல்...இஸ்லாம் :)

    காமெடி செய்வதில் ஆஷிக்கே வல்லவர்

    ReplyDelete
  72. //எல்லாம் வல்ல கருணையே வடிவான, இறைவன் இது போன்ற சின்னபிள்ளதனமாக செயல்படுவது, உங்களுக்கே படு கேவலமா தெரியலையா? //

    இப்படி ஒரு விளையாட்டு தேவைதானா? என்ற கேள்வி எழுவது இயல்பே! விதி சம்பந்தமானது உங்கள் கேள்வி. இதற்கான பதிலை நியாயத் தீர்ப்பு நாளில் உலக மக்களுக்கு தருவதாக இறைவன் சொல்கிறான். அது வரை பொறுப்போமே!

    ReplyDelete
  73. //அது வரை பொறுப்போமே! //
    அது வரை பொறுத்திருங்கள் சு.பி.

    உங்கள் இறைவன் மீது ந்மபிக்கையில்லாத நான் என்ன செய்வது? at least கேள்விகள் கேட்கிறேன்.

    ReplyDelete
  74. என்னோட அண்ணாச்சி சுவனப் பிரியன் என்ற மாணிக்கம் அண்ணாச்சி அனைவரது கேள்விக்கும் பதில் சொல்வார். எனக்கு மட்டும் சொல்ல மாட்டார்.

    …அண்ணாச்சி....நம்ம முனியாண்டி சாமியைவிட வேறு இறைவனை வணங்குவது முட்டாள்களின் செயல். நம்ம முனியாண்டிசாமி தான் ஒரே இறைவன். நாம் எப்போதும் ஒரே இறைவனை வணங்குவோம்... அது அந்த முனியாண்டிசாமி மட்டுமே...

    ReplyDelete