***
***
இந்து மதம் எங்கே போகிறது?
அக்னிஹோதரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்
*****
ஆண் தெய்வம், பெண் தெய்வத்தை வைத்து பல வழிபாட்டு முறைகளை வகுத்தனர் ஆகமக்காரர்கள். (176)
உற்சவங்களில் ஆண் மகன் எங்கே வேண்டுமானாலும் போவான். ஆனால் பெண்ணானவள் அதையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டும். தெய்வங்களிடையிலேயே கூட இப்படித்தான் நடக்கிறது.
பாரிவேட்டை படித்திருப்பீர்கள். அதாவது ஆண் தெய்வம் கோவிலை விட்டு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் இதை சகித்துக் கொண்டு பெண் தெய்வங்கள் கோவிலுக்குள்ளேயேதான் இருக்க வேண்டும். (179)
பிராட்டிக்குப் புறப்பாடு என்றால் கோவில் பிரகாரத்தைச் சுற்றி வருவது தான். அதற்கு மேல் எங்கேயும் வெளியே போகக்கூடாது என்பது தான் பொது விதி.
பெண் தெய்வங்களுக்கு எவ்வளவு கட்டுப்பாடுகள்.
இதெல்லாம் எதற்கு?
தெய்வ விஷயத்திலேயே இப்படித்தான் இருக்கிறது. பெண் தெய்வம் படி தாண்டக் கூடாது என சாஸ்திரம் கோடு போட்டு வைத்திருக்கிறது.
பெண்ணை ஆண் எப்படி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தன் போகத்துக்காக இஷ்டப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற போதனையும் தெய்வங்களிடமிருந்தே ஆரம்பித்து விட்டனர். (180)
ஸ்ரீரங்கம் கோவிலில் ரங்கநாதனின் சன்னதியிலிருந்து இரவு நேரத்தில் அவரது ஆனந்த நாடி அதாவது தேக சம்பந்தம் வைத்துக் கொள்வதற்கு உபயோகப்படுத்துகிற அங்கத்தை ரங்கநாயகி சன்னதிக்குள் அனுப்பி தன் இச்சையைத் தீர்த்துக் கொண்டுவிடுகிறார் என்பதை குணரத்தின கோசத்திலேயே கூத்தாழ்வாரின் மகன் பராசரபட்டர் விளக்கியுள்ளார்.
இப்படியெல்லாம் பெண்களை போகப்பொருளாகக் காட்டுவது வைணவமும் மட்டுமல்ல ... சைவமும் இதற்கு சளைத்ததில்லை. (182).
இன்றும் ‘அத்வைதம்’ என்று பேச்சுக்குப் பேச்சு பேசும் காஞ்சி சங்கராச்சாரியர்கள் எங்கெங்கே போய் வருகிறார்கள்? சென்னை, பம்பாய், காசி, டெல்லி என டூர் அடித்து, அதோடு கோர்ட் வரைக்கும் போய் விட்டார்கள்.
ஆனால் ... அவர்கள் பூஜிக்கும் காஞ்சி காமாட்சியம்மன் கோவில் பிரகாரத்தைத் தாண்டி வெளியே வந்திருக்கிறாளா என்று விசாரித்துப் பாருங்களேன்.
ஆண் பெண் ஏறத்தாழ்வுகளை ஏற்படுத்தி வைத்திருந்த ஆகம சம்பிரதாயங்கள், தெய்வங்களிலும் வர்க்க பேதங்களையும் வகைப் படுத்தி வைத்திருக்கின்றன. (183)
சைவத்தில் எப்படி?
பரமசிவனும் தில்லை காளி இருவருக்குள்ளும் நடனப் போட்டி. காளியின் நடன அசைவுகளும் நர்த்தன நுட்பங்களும் பார்ப்பவர்களை வசீகரித்தன. சிவனின் தாண்டவம் காளியின் தாண்டவம் முன்பு தோற்றுவிடும் நிலைமை.(191)
ஒரு பெண்ணிடம் தோற்பதா? இனியும் இவளை ஆட விடக்கூடாது என முடிவு கட்டிய சிவன் தன் இடது காலை சற்றே தூக்கினார். வலது காலை ஊன்றி இடது காலை உயர தூக்கிக் கொண்டே போக, சபையே ஒரு கணம் அதிர்ந்தது. ஏன்..? வேண்டுமென்றே சிவனின் சிஷ்டம் (அதாவது ஆணுறுப்பு) வெளியே தெரியும்படியானது. இதற்காகத்தான் இடது காலை விலக்கி தூக்கியிருக்கிறார் சிவன்.
வெற்றியின் விளிம்பில் நடனமாடிக்கொண்டிருந்த தில்லை காளி இக்காட்சியைப் பார்க்க வேண்டிய கட்டாயம் நேர்ந்து விட்டது. பொட்டென அவளது நர்த்தனம் நின்றது. தலை குனிந்தாள். ஆனால் சிவபெருமான் தொடர்ந்து தாண்டவமாடிக் கொண்டிருந்தார். ஆக, சிவன் ஜெயித்தார் என்றாகி விட்டது. ...
இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ?
ஆணிடம் பெண் போட்டி போடக்கூடாது. அப்படியே திமிராக போட்டி போட்டாலும் ஜெயித்து விடக்கூடாது. அவளைத் தோற்கடிக்க ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். (192)
முருகன் என்றால் யார்?
சமஸ்கிருதத்தில் கந்தன், சரவண பவ என்றெல்லாம் அழைக்கிறார்கள்.
வடக்கிலுள்ள கதை:
சிவன் பார்வதி மேல் ஒரு நாள் காமமுற்று அவளை அழைக்கிறான். இப்போது வேண்டாமென்று பார்வதி மறுத்தும், சிவன் தொடர்கிறார். சிவன் பார்வதி மேல் பாய்ந்து படர்ந்தார். (194)
அந்த ஷணத்தில் பார்வதி விலகிக் கொள்ள, பரமசிவனின் உயிர்த்துளிகள் அப்படியே ஆகாயத்திலிருந்து கங்கையிலிருந்து விழுந்தன. ஆற்றோடு போன துளிகள் நாணல் காட்டுக்குள் தேங்கி ... குழந்தையாக அவதரித்தது. நாணலுக்கு சமஸ்கிருதத்தில் சரம் என்று பெயர். காட்டுக்கு வனம். இது சரவனம் என்றாகி, இப்போது சரவணனாகி விட்டது. (195)
ஏன் கந்தன் என்ற பெயர். அது கந்தன் அல்ல; ஸ்கந்தன். ஆணுடைய சுக்லம் – உயிர்த்துளிகள் என்பது அதன் பொருள்.(196)
பிள்ளையார் என்பது தமிழ் வழியில் ஒன்று. ஆனால் சமஸ்கிருதத்தில் கதை வேறாகிறது.
பார்வதி குளிக்கும் போது மறைவாக பரமசிவன் அவளை நோட்டமிடுகிறார். தன்னை யாரோ பார்த்துக் கொண்டிருப்பதைத் தன் சக்தியால் புரிந்த பார்வதி உடுத்திக்கொண்டு, தன்னைப் பார்த்தவனைக் கண்டுபிடிக்கப் புறப்படுகிறார். (197)
பரமசிவனைக் கண்டுபிடித்த பார்வதி, இது உமது திருவிளையாடல் என்றால் என் திருவிளையாடலைப் பாரும் என்று சொல்லி, ‘நான் குளித்ததைப் பார்த்த நீர், யானைத் தலையனாகவும், மனித உடம்பனாகவும் மாறக்கடவது’ என்று சாபமிட்டார். (198)
இன்றும் ஆற்றங்கரையில் பிள்ளையார் இருப்பது எதற்கு என்றால், ‘டேய்! குளிப்பது உன் பத்தினியாகவிருந்தாலும் எட்டிப் பார்த்தால் என் கதிதான் உனக்கும்’ என்று சொல்வதற்குத்தான்.
பிள்ளையார் வேதத்திலேயே வந்தார்; இவர்தான் உலகத்தின் தொடக்கம்; என்றெல்லாம் பின்னால் பிள்ளையார் சுழி போட்டார்கள். ஆனால் அதெல்லாம் கிடையாது. கூட்டமான மக்கள் இருந்த போது அவர்களுள் உள்ள சிறு கூட்டங்களுக்குத் தலைவர்களாக பலர் இருந்திருப்பார்கள். அவர்களே கணபதிகள்.(199)
இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் நமக்கெல்லாம் ஒழுக்கத்தையும் சத் நெறிகளையும் வழங்க வேண்டிய தெய்வங்கள் எப்படி சித்தரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை உணர்த்ததான்.
நவராத்திரி, கொலு என்பதெல்லாம் பெண் தெய்வங்களான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர்களின் ஆராதனைக்காக நடத்துவது என்பது இப்போது பொதுவான நம்பிக்கை. ஆனால் விசேஷம் வேறு.
மகிஷாசுரன் என்றொரு அரக்கன். எருமைத் தலையை உடையவன். (200) இவனை அழிக்க பெண்களால் தான் முடியும். பெண் தெய்வங்கள் ஒன்று கூடி இவனை அழிக்க திட்டமிடுகிறார்கள். ஆனால் வேதம் பெண்களுக்குக் கொடுத்த பலத்தை புராணம் பலவீனமாக்கியது. (202)
பெண்களின் வேண்டுகோளின் படி தேவர்கள் தங்கள் பலத்தையெல்லாம் பராசக்தியிடம் கொடுக்கிறார்கள். அவளும் அரக்கனை அழிக்கிறாள். இப்போது அவளை எல்லோரும் புகழ வேண்டும். ஆனால் யாரும் புகழவில்லை. ஏனெனில் தேவர்கள் அனைவரும் பலத்தைக் கொடுத்து விட்டதால் அப்படியே அசைவற்று பொம்மைகளாய் நின்றார்கள். (203)
புராணக்காரர்கள் பல ஜோடனைகள் பண்ணி கொலுவின் உண்மையான த்த்துவத்தையே கொன்று விட்டார்கள்.
பழங்காலத்தில் மன்னர்கள் மழைக்காலத்தில் தங்கள் படை ஆயுதங்களை பாதுகாத்து, நிறுத்தி வைத்து, அவைகளுக்கு வணக்கம் செலுத்துவார்கள். மழை முடிந்ததும் போரெடுத்து வெல்வார்கள். இது தான் கொலுவின் உண்மையான மூலம். (206)
கொலு கோவில்களில் வைப்படுவதில்லை. அவரவர் வீட்டுக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஐதீகம். ஒருவேளை, ‘பெண்களைப் போற்றினாலும் வீட்டுக்குள்ளே வைத்துப் போற்றிக் கொள் .. வெளியே வேண்டாம்’ என்று சொல்லாமல் சொல்கிறதோ!(207)
ஆயுதம் என்பது மனிதர்களுக்குத் தானே வேண்டும்; தெய்வங்களிடமும் எதற்கு ஆயுதம் இருக்க வேண்டும்?
இதற்கான பதிலையும் வேதத்திலேயே தேடுவோம்.
ரிஷிகள் வேதத்தில் இருவகை தெய்வங்களைப் பற்றிக் கூறுகிறார்கள். அதில் ஒன்று ருத்ரன். (208)
இவன் கையில் எப்போதும் வில்லும் அம்பும். இவனுக்கு எதிர்மறையாக ருத்ரனின் இன்னொரு வடிவமாக சாந்த சொரூபன் – விஷ்ணு. (210)
இவர் கையில் பஞ்சாயுதம் – ஐந்து ஆயுதங்கள் – சங்கு, சக்கரம், கதை, சாரங்கம், கட்கம். இதில் சங்கு, சுதர்சனார் என்று மரியாதையாக அழைக்கப்படுகிறது. சக்கரத்தாழ்வார் என்றும் மரியாதையாக அழைக்கப்படுகிறார். இவரது கையில் 16 வகை ஆயுதங்கள்! (213)
யாகங்களுக்கு பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளம் தான் தட்சணை. ருத்ரன் அழுகும் போது அவனது கண்ணீர் வெள்ளியாக மாறி விடும். இதனால் வெள்ளி தட்சணையாகக் கொடுக்க முடியாது. ஆகவே வீடு, ஆஸ்ரமம் இவைகளோடு தங்கம் கொடுக்கலாம். (219)
யாகங்களின் முக்கியத்துவம் என்ன? அவைகள் நம் பாவங்களைன் தொலைக்கப் பயன்படுகிறது. (222)
பாவங்கள் எல்லாம் வேத மந்த்ரங்களை உச்சரிக்கும் போது அழிந்து விடும். (225)
பாவ மன்னிப்புக்கான ஒன்று சந்தியாவந்தனம். காலையில் எழுந்த்தும் சூரிய தேவனிடம் வேண்டுவது. (226)
நித்தமும் மூன்று முறை இதைச் செய்ய வேண்டும். கிறிஸ்துவர்களின் பாவமன்னிப்பு பழக்கத்தை ஜெயேந்திர்ர் போன்றவர்கள் தூற்றுகிறார்கள் என்றால் ... அவர்கள் வேதம் அறியாதவர்கள். (229)
*
தருமிய்யா,
ReplyDeleteஅக்னிஹோத்திரம் புக்கை முழுசா படிக்கலையேனு நினைச்சுப்பேன் , ஹி...ஹி படிக்காத வரைக்கும் நல்லது தான்!
என்னா ஒரு கப்சா?
அவரு என்ன தான் சொல்லவராருனே புரியலை, இது கப்சானு சொல்லிட்டு இன்னொரு கப்சாவை விடுறாரே அவ்வ்!
#//வெற்றியின் விளிம்பில் நடனமாடிக்கொண்டிருந்த தில்லை காளி இக்காட்சியைப் பார்க்க வேண்டிய கட்டாயம் நேர்ந்து விட்டது. பொட்டென அவளது நர்த்தனம் நின்றது. தலை குனிந்தாள். ஆனால் சிவபெருமான் தொடர்ந்து தாண்டவமாடிக் கொண்டிருந்தார். ஆக, சிவன் ஜெயித்தார் என்றாகி விட்டது. ...//
அப்போ உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போல டான்ஸ் போட்டியா நடந்துச்சு அவ்வ்!
இல்லை சாமிகள் எல்லாம் வந்து டான்ஸ் ஆடுவது வழக்கமா?
அப்படியே ஆடினாலும் "பெண்களுக்கு" அப்போ மாரக்கு இல்லை , அப்போ கொங்கைகள் குலுங்க ஆடினாங்கனு சொல்லுவாரா அக்னிஹோத்திரம் அவ்வ்!
வவ்வாலின் கருத்தை வழி மொழிகிறேன்! மெத்த படிக்காவிட்டாலும் இந்த புத்தகம் ஒரு பப்ளிசிட்டிக்காக எழுதப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. எல்லாமே கப்சா ரகமாக இருக்கிறது! காஞ்சியில் மீனாட்சி இல்லை! காமாட்சிதான்! இது அக்னிஹோத்திரத்தின் தவறா? உங்கள் தவறா?
ReplyDeleteமன்னிக்கணும் தளிர் சுரேஷ்
ReplyDeleteஅது காமாட்சி அம்மன் தான். ஏதோ மறந்து போய் எங்க ஊரு மீனாட்சியம்மன் பெயரைத் தவறாக எழுதி விட்டேன். திருத்தி விட்டேன். நன்றி
தருமிய்யா,
ReplyDelete//முருகன் என்றால் யார்?
சமஸ்கிருதத்தில் கந்தன், சரவண பவ என்றெல்லாம் அழைக்கிறார்கள்.//
ஸ்கந்தம் என்றால் இடுப்பு என்றும் ஒரு பொருள் உண்டு, ஆறு தனிக்குழந்தையாக பிறந்த முருகனை ஒன்றாக இடுப்போடு சேர்த்து தூக்கியதும் ஒரே வடிவமாகி ஆறு தலையராக முருகன் ஆகியதால் "ஸ்கந்தன்" இடுப்பில் ஒன்றானவன் என பேராம், நல்லா விளக்கம் கொடுக்கிறாங்க இல்ல :-))
# முருகன் என்ற பெயருக்கு உரிய கடவுள் தமிழ்நாட்டுக்கு அல்லது தென்னாட்டுக்கு மட்டுமே உரியது.
ஷண்முகன்,சுப்பிரமணியன், ஸ்கந்தன் என்பதாக பெயரை மாற்றி சமஸ்கிருதமாக்கி 'இந்து வைதீக மதத்தில் சேர்த்துக்கொண்டார்கள்.
அதனால் தான் வட இந்தியாவில் முருகன் கோயிலே பார்க்க முடியாது ஆனால் நிறைய பிள்ளையார் கோயில் பார்க்கலாம், அது எப்படி சிவனோட ரெண்டு பசங்க கதை உண்மைனா ,வட இந்தியாவில் முருகனுக்கு கோயிலே இல்லாம போச்சு?
பிள்ளையாரை பல்லவர்கள் தான் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார்கள், வாதபி படை எடுப்பின் போது ,அங்கிருந்து வாதபி கணபதியை தூக்கி வந்ததாக சொல்கிறார்கள், அதுக்கு முன்னாடி வரைக்கும் தமிழ்நாட்டில பிள்ளையாருக்கு கோயிலே கிடையாது.
# முருகன் "மலைவாழ் மக்களின்" குல தெய்வம் ,அதனை அப்படியே சமஸ்கிருதமாக்கி சிவனுக்கு மகனாக்கிட்டாங்க, மலைவாழ் மக்களின் தெய்வம் என்பதால் தான் குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கிறான்.
முருகனை ,அருக்கன் என சமண சமயத்தோடும் தொடர்பு படுத்துகிறார்கள், மதுரை திருப்பரங்குன்றம்ம் முருகன் கோயிலில் கூட சுவற்றில் சமண புடைப்பு சிலைகள், ஓவியங்கள் இருக்கு என்கிறார்கள், எனவே அங்கே சமணர்களும் வழிப்பட்டிருக்க வேண்டும் அல்லது அது சமணக்கோயிலாக இருந்து ,முருகன் கோயிலாக மாறி இருக்க வேண்டும் என்கிறார்கள்.
# முருகனைப்பற்றி இன்னொரு தகவல் என்னனா , மீனவர்களும் முருகனை வணங்கியுள்ளார்கள், மகாபலிப்புரம் அருகே சலுவன் குப்பன் என்ற இடத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல் வேல் பதிக்கப்பட்ட பீடம் கண்டுப்பிடித்து இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் கிடைத்திருப்பதிலேயே மிக பழமையான கோயில் வழிப்பாட்டின் அடையாளம் ,சலுவன் குப்பம் முருகன் கோயில் என தொல்லியல் துறை சொல்கிறது. மேலும் அக்காலத்திலேயே ஒரு சுனாமி வந்து மண் மூடியதாக கண்டுப்பிடித்து இருக்கிறார்கள், அக்கோயில் மீண்டும் இப்ப வந்த சுனாமியின் போது தான் வெளியில் வந்துள்ளது.
link:
http://en.wikipedia.org/wiki/Subrahmanya_Temple,_Saluvankuppam
தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில் இந்தியாவில் வேறு எங்குமே பழமையான முருக கோயில்களே இல்லை, முருகன் , சிவனுக்கு பையன் என்றால் ஏன் இந்தியாவின் மற்றப்பகுதிகளில் கோயில்களே இல்லாமல் போச்சு?
இதனால் தான் முருகனை தமிழ்க்கடவுள் என்கிறார்கள், ஆரிய மயமாக்கலின் போது சிவனுக்கு தத்துக்கொடுத்துவிட்டார்கள் போல அவ்வ்!
கொஞ்சம் விட்டுப்போச்சு,
ReplyDeleteஉலகிலேயே பழமையான இந்து கோயில் என அறியப்படுவது மா முண்டேஷ்வரி கோயில், இது பீகாரில் உள்ளது, முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அங்கு இருப்பதும் லிங்கமே. மேலும் முண்டேஷ்வரி என சக்தி வடிவ(காளி) பெண் தெய்வம்.
http://en.wikipedia.org/wiki/Mundeshwari_Temple
நடராஜன்,பெருமால் என மற்றவர்களுக்கெல்லாம் இத்தகைய பழைய கோயில்களே இல்லை.
7 ஆம் நூற்றாண்டுக்கு பின்னரே பெருமால்,சிவன் ,இன்னப்பிற உருவ வழிப்பாடுகள் கிளம்பி இருக்க வேண்டும்.
மாமுண்டேஷ்வரி கோயிலேயே 7 ஆம் நூற்றாண்டில் பிற தெய்வ சிலைகளை வைத்துள்ளதையும் இந்திய தொல்லியல் துறை ஆய்வுகள் சொல்லுது.
எனவே இந்தியாவில் இருந்த பழைய தொன்ம லிங்க,முருக கடவுள் வழிப்பாட்டில் சமஸ்கிருத திணிப்பாக மற்றக்கடவுள்களை உருவாக்கி வைத்துவிட்டார்கள் எனலாம்.
http://thamilkalanjiyam.blogspot.in/2014/03/blog-post_9510.html
ReplyDeleteKarttikeya with Vel and Seval (rooster), coin of the Yaudheyas 200 BCE.
http://en.wikipedia.org/wiki/Murugan
அன்னையிடம் வேல் வாங்கி, முதன் முதலாக, திருக்கையில் வேல் ஏந்திய நாளே = தைப்பூசம்!
-Karttikeya_shrine_with_anteloppe_Yaudheya_Punjab_2nd_century_CE.jpg
வட இந்தியாவில் இஸ்லாமையரால் அழிக்கப்பட்ட கோவில்கள் மிக அதிகம், எனவே அதை வைத்து நாம் கூற முடியாது.
ReplyDelete