*
நம் நாட்டுக்கு சுயராஜ்யம் கொடுக்கலாம் என்று யோசித்த போது
தஞ்சாவூர் ஜில்லா ஆடுதுறைப்பக்கமுள்ள ஒரு சின்ன கிராமத்தில் ... ஒரு ரகஸ்ய
கூட்டம். அதற்குத் தலைமை தாங்கியவர் மகாப் பெரியவர்.(335)
ஹிந்து தர்ம்த்தை, சனாதன தர்மத்தை, வர்ணாஸ்ரம மநு தர்மத்தை
காப்பாற்றியாக வேண்டும் என்பதற்காகத்தான் அந்த கூட்டம்.
பெண்களுக்கு 8 வயதிற்குள் கல்யாணம் பண்ண வேண்டும்.
இல்லையென்றால் அவளுடைய ‘பஹிஷ்டையில்’ வெளிப்படுவதை அவளுடைய அப்பனே சாப்பிட
வேண்டும் என்ற அருவெறுக்கத்தக்க கட்டளையை மநு போட்டிருப்பதை ஏற்கெனவே பார்த்தோம்.
(336)
1929-ல் பிரிட்டிஷ்காரர்கள் குழந்தைகளுக்கு கல்யாணம் கட்டி வைக்கக் கூடாது.
அப்படி செய்து வைத்தால் தண்டனை தான். ஜெயில் தண்டனை தான்.
ஏற்கெனவே பிரிட்டிஷ் ஆட்சியில் மநு வர்ணாஸ்ரம தர்மங்களை
சற்று தலை தட்டி வைப்பது போன்ற சட்டங்கள் போடப்பட்டிருந்தன. அப்போது parliamentary delegation ஒன்று பிரிட்டிஷ் நாட்டிலிருந்து இங்கு
வந்திருந்தது.
‘ஏற்கெனவே பால்ய விவாஹத்துக்கு தடை பண்ணிட்டா
… இன்னும் என்னவெல்லாம் நம்ம சம்ப்ரதாயத்து மேல் அட்டாக் பண்ணப் போறாளோ.
அதனால் இப்ப வந்திருக்கிற அந்த டெல்கேஷன் கிட்டே சனாதன வர்ணாஸ்ரம தர்மத்துக்கு
எந்த பாதிப்பும் வரக்கூடாதுன்னு நாம சொல்லியாகணும். என்ன சொல்றேள்’
என மகாபெரியவர் கேட்க,
சிஷ்யாளோ, ‘ஸ்வாமி,
இப்படியெல்லாம் அவாளை கேட்கறது எங்களுக்கு என்னமோ உசிதமா படல.
அவர் செய்த செய்யட்டும். சில விஷயங்களை மாத்தறது
நல்லது தானே’ என்றனர்.
வெளியே உட்கார்ந்திருந்த என்னிடம் வந்த சங்கராச்சாரியார் ‘தாத்தாச்சார் .. நீரும் நானும் தான் மிச்சம்’
என்றார். அந்த பிரிட்டிஷ் டெலிகேஷனுக்கு மெமோரண்டம் கொடுக்கப் போறோம். அதுக்காக உம்மைத்தான் செலக்ட் பண்ணியிருக்கேன் என்றார். (338) அந்த ராத்திரி 11 மணிப்பொழுதில் நூறு தந்திகளை தேசத்தின்
பல இடங்களிலிருந்து கொடுக்க ஏற்பாடு செய்தோம்.(339)
‘பாரத தேசத்தின் மதாச்சார கர்மானுஷங்களுக்கு பாதுகாப்பு
வேண்டும். புது அரசியல் மூலம் எங்கள் மத ஸ்வதந்த்ரம் பாதிக்கப்படக்
கூடாது’ என்பது தான் தந்தி வாசகம்.
தந்தியடித்த பிறகு மகா பெரியவர், ‘நாம அவாளை நேர்ல பார்த்து நம்ம மத சம்ப்ரதாயத்தைப் பத்தி பிரஸ்தாபிக்க
சனாதன மதத்துக்கு ஸ்வதந்த்ரம் கேக்கணும். அதை நீர் தான் பண்ண்ணும்’
என்றார்.
டெலிகேஷன் சென்னை இந்து ஆபிசுக்கு வந்தது. நான் பார்க்க சென்றேன்.’இவர் மதாச்சாரியர்களின்
பிரதிநிதி’ என்று அறிமுகப்படுத்தப்பட்டேன். டெலிகேஷனில் இருந்த சோரன்சன் என்ற பாதீயாரும் நானும் பரஸ்பர வணக்கத்தை பரிமாறிக்
கொண்டோம். 100 தந்திகளை ஞாபகப்படுத்தினேன். அன்று இரவு சோரன்சன்னை சந்தித்தேன்.
(340)
Give me a memorandum and meet me in Delhi என்றார்
சோரன்சன். மகாப்பெரியவாளிடம் விஷயத்தைச் சொன்னேன். சில அட்வகேட்கள், சம்ப்ரதாயஸ்தர்கள் ஆகியோரை வைத்துக்
கொண்டு ‘வர்ணாஸ்ரம தர்மத்துக்கு முழு சுதந்திரம் வேண்டும்’
என்று ஒரு மெமோரண்டம் தயாரித்தோம். டெலிகேஷன் அஸ்ஸாம்
சென்றிருப்பதாக அறிந்து, மெமோரண்டத்தின் ஒரு காப்பியை அஸ்ஸாமிற்கு
அனுப்பி வைத்தோம்.
பிறகு டெல்லி போனேன். அங்கே வக்கீல் சிவராவின் வீட்டில், காங்கிரஸ் தலைவர்களான
அச்சுத பட்டவர்தன், ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகியோர் டெலிகேஷனைச்
சந்திக்கக் காத்திருந்தார்கள். அவர்களுக்குப் பின்
டெலிகேஷனைச் சந்தித்தேன்.
‘வர்ணாஸ்ரம கதாச்சாரத்தைப் பின்பற்ற ஜீவாதார உரிமை
வேண்டும்’ என்ற மெமோரண்டத்தை கொடுத்தோம்.
வாங்கிக் கொண்டு போனார்கள்.
இதன்பின் பிரிட்டிஷ் நாட்டிலிருந்து Cabinet delegation வந்தது. அவர்களோ, ‘உங்கள் அரசியல் சாதனத்தை
உங்கள் தலைவர்கள் தான் உருவாக்கப் போகிறார்கள். அதனால் உங்கள் தேசத் தலைவர்களையே
பாருங்கள்’ , என்று சொல்லி விட்டார்கள்.
தேஸத் தலைவரான சர்தார் வல்லபாய் பட்டேலை பார்க்கச் சென்றோம்.
(341)
பட்டேல், ‘மடாதிபதிகள் தங்களுடைய ஸ்தாபனத்தின் கீழ்
ராஜபோகத்தை அனுபவிக்கிறார்கள். வெளியுலகத்தில் மக்களோடு உறவே இல்லை. முக்கியமாக
ஹரிஜனங்களுடைய முன்னேற்றத் திட்டத்தில் மதமும் மடாதிபதிகளும் முக்கியத்துவம்
காட்டவே இல்லை. முதலில் மக்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்குப் பணி செய்ய
மதாச்சாரியார்களை வரச் சொல்லுங்கள்’ என்று கண்டிப்பாக என்னிடம் கூறினார் பட்டேல்.
இதை மகா பெரியவரிடம் கூறினேன். இது முழுவதும் உண்மைதான்
என்றார்.
அடுத்து பண்டிட் நேருஜியைப் பார்த்தேன். அதற்கு முன் பல
ஆச்சாரியார்களிடம் ஆலோசனை பண்ணி அவரைப் பார்க்க போனேன். (342)
மெமோரண்டத்தின் சாரத்தை எடுத்துச் சொல்ல ஆரம்பித்த்துமே கேட்டு
விட்டு, உடனே நிமிர்ந்தவர் என்னைப் பார்த்து, ‘If you
want to talk about religion you go outside from this nation. We don’t allow
specialty to any religion. Here all are equal …. Don’t talk about religion …
understand?’ என்றார் ரோஜாவின் ராஜா. நான் அதிர்ந்து விட்டேன்.
இவ்வளவு நடந்தும் சங்கராச்சாரியார்கள் அலட்டிக் கொள்ளவில்லை. மதத்துக்குத் தான் தனியுரிமை கிடைக்கவில்லை. மடங்களுக்காவது தனியுரிமை கிடைக்குமா என்று பார்ப்போம் என்று சொல்லி களத்தில்
இறங்கினார். அதன்படி அகில பாரதிய மடங்கள் மாநாட்டை டெல்லியில்
கூட்டச் சொன்னார். சங்கராச்சாரியாவிடம் அபார பக்தி கொண்ட குளித்தலை அண்ணாதுரை அய்யங்கார் முன்
வந்தார். (343)
சைவ, வைணவ மடங்கள் பலவற்றை நாடு முழுவதும் போய் பார்த்தோம்.
யாரும் எங்களுக்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஆனால்
கூட்டத்திற்கு கராச்சி சிந்துநகர மடாதிபதியைத் தவிர. அம்மாநாட்டில்
Freedom of relation and maintaining religious institutions … வேண்டும்
என்று ஒரு தீர்மானம் போட்டோம். இதன் பிறகும் மடங்களுக்கான தனியுரிமை
குறித்து, Parliament Bill ஒன்று கொண்டு வர முயற்சித்தோம். அந்த பில்லை
யாரும் கண்டு கொள்ளவில்லை.
இந்தியா பிளவு பட்டுப் பிரிந்தது.
நமது மதாச்சாரப்படி தர்மம் எல்லோருக்கும் ஒன்றுதான்.
அரசனும் தர்மத்துக்குக் கட்டுப்பட வேண்டும். ஏன் பகவானே கூட தர்மத்துக்கு, தர்ம
நெறிகளுக்கு எதிராக நடந்தால் பகவானையே தண்டிக்கவும் நமது மதக் கலாச்சாரம் கற்றுத்
தருகிறது. இதனைத் தான் ‘தர்மவிதிக்கரமம்’ என்கிறோம். (346)
இதனை இரு பகவான் கதைகளைச் சொல்லி விளக்குகிறேன்.
முதல் கதை பாகவதத்தை பரிட்சித்து ராஜாவுக்காகச் சொல்லும்
போது நடந்தது. கிருஷ்ணன் கோபியரோடு ஆடிக்கொண்டிருக்கிறான். அப்போது ஒரு கோபியை
கிருஷ்ணன் தூக்கிக் கொண்டு போய் லீலை கொண்டாடுகிறான் என சுகப்பிரம்மன்
சொல்கிறார். இதை கேட்ட பரிட்சித்து
’புருஷன் இருக்கும் போது ஒரு பத்தினியுடன் ஆடிப்பாடி அவனை கவர்ந்து கடத்திச்
செல்வது .. அந்தப் புருஷனுக்கு பாவம் இழைப்பாகாதா? நியாயமா இது? என்று கேட்கிறார்.
(347)
இதற்கு சுகப்பிரம்மம் ‘பகவானாகிய கிருஷ்ணரே செய்தாலும் அது
தப்பு தான். அவனுக்கு இதற்கான தண்டனை உண்டு’ என்கிறார்.
இன்னொரு புராணக் கதை:
பஞ்சாப் மாநிலத்தில் ஓரிடம். ஜலந்தர்-பிருந்தா என்ற தம்பதி
வாழ்ந்து வந்தனர். இருவருக்குள்ளும் கடவுளைப் பற்றிய விஷயத்தில் வித்தியாசம்.
பிருந்தா விஷ்ணு பக்தை. ஜலந்தரோ சிவ பக்தன். நடுவில் நாரதர் விளையாடுகிறார்.
நாரதர் ஜலந்தரிடம், ‘உன் சிவ பக்தியால் நீ சிவனின் மனைவி
பார்வதி தேவியையே அடையலாமே .. ஏன் இந்த பிருந்தாவுடன் போராடிக் கொண்டிருக்கிறாய்’
என்று கொளுத்திப் போடுகிறார். (349)
நாரதர் யோசனையும் கொடுக்கிறார். சிவனுக்கு சாம்வேதம்
என்றால் உயிர். அதைக் கேட்டு சிவன் மயங்கி இருக்கும் வேளையில் கைலாயத்துக்குச்
சென்று காரியத்தை முடித்து விடு’ என்கிறான்.
இந்த யோசனையின் படி ஜலந்தர் கைலாயம் சென்று பார்வதியைக் கட்டிப்
பிடிக்கிறாம். ‘ஸ்வாமி...’ என்று கொந்தளித்து பார்வது கத்துகிறாள்.
ஆனால் இதே நேரத்தில் பிருந்தா தனித்துத் தவித்திருக்கிறாள்.
நமது பக்தைக்கு நாம் ஏன் இன்பம் தரக்கூடாது என்று ஜலந்தர் உருவில் அவளிடம்
செல்கிறார். பிருந்தாவும் தன் கணவன் என நினைத்து இஷ்டமாக இழைந்து கொண்டிருக்கும்
தருணத்தில் இருவருக்கும் நடுவே ஒரு தலை ரத்தம் வடிய வந்து விழுந்தது. அது ஜ்லந்தரின் தலை. (350)
சிவன் வெட்டியெறிந்த தலை அது. பிருந்தா தடுமாறுகிறாள்.
அப்போது விஷ்ணு தன் ரூபத்தைக் காண்பிக்கிறார். பொங்கியெழுகிறாள் பிருந்தா. ‘என்
கணவன் ரூபத்தில் வர நீ யார்? தவறு செய்து விட்டாய்; பகவானாக இருந்தாலும் தவறு
தான். உனக்குச் சாபமிடுகிறேன். கடவுளாக இருந்தாலும் நீ கல்லாய் போவாயாக’ என
சபிக்கிறாள். இந்த சாபத்தால் தான் பகவான் சாலக்ராமம் என்ற சிலையாகி விட்டார்
என்கிறது புராணம்.
கடவுளே தவறு செய்தாலும் தண்டனை உண்டு என்பது தான் இக்கதை
சொல்லும் நீதி.
இப்போது நம் தேசத்தில் சட்ட பூர்வமாக தீண்டாமை
ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் ஆகம ரீதியாக இன்னும் அது உயிர் வாழ்ந்து வருகிறது.
ப்ராமணியத்தின் படி பிராமணன் தான் தெய்வம். இது இப்போதைய நமது தேச தர்மத்துக்கு
முரணானது. அதனால் All are equal என்ற தர்மம் தான் இப்போது நம் மதத்தைக் காப்பாற்ற ஒரே வழி.(351)
விவேகானந்தர் சிகாகோ
மாநாட்டில் பேசிய பின் சென்னை வந்த போது அவர் ஆற்றிய உரையில் சிலவற்றை
உங்களுக்குத் தருகிறேன்.
“இளைஞர்களே! இதை நினைவில்
கொள்ளுமாறு தனிப்பட்ட முறையில் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இந்திய ஆன்மீக சிந்தனைகளால் உலகத்தை நாம் வெல்ல வேண்டும்.
ஆன்மீகச் சிந்தனைகள் என்று நான் கூறியது – உயிருணர்வு அளிக்கக்கூடிய கோட்பாடுகளையே தவிர, நாம் நெஞ்சோடு நெஞ்சாக இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிற மூட நம்பிக்கைகளை அல்ல.
கண்ட கண்ட மூட நம்பிக்கைகளை எல்லாம் மதம் என்ற பெயரில் அனுமதித்து தன்னைத்தானே
பாழ்படுத்திக் கொண்டிருக்கிற மூளையிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்த மூட நம்பிக்கைகளின் பின்னால் ஓடாதீர்கள். அதைவிட நீங்கள் உறுதியான நாஸ்திகர்கள் ஆகி விடுங்கள். இது உங்களுக்கு நல்லது. உங்கள் இனத்துக்கும் நல்லது.
..... முற்றும்
தருமிய்யா,
ReplyDeleteஅக்னிஹோத்ரம் அந்தக்காலத்தில "வர்ணாசிரம சங்க்ராச்சாரிய்ருக்கு" தானே கொடிப்பிடிச்சிருக்கார், அப்புறம் புக்குல மட்டும்"நல்லவரா"பேச ஆரம்பிச்சுட்டார் ஒன்னுமே புரியலையே அவ்வ்!
அது போன மாசம் .. இது இந்த மாசம் .........
ReplyDelete