*
”திண்ணை” இணைய இதழில் R.கோபால் என்பவர் “கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார்” என்ற தலைப்பில் 11 கட்டுரைகள் எழுதியுள்ளார். பொருளடக்கம் எனக்கு மிகவும் பிடித்தமையால், இக்கட்டுரையை என் இணையப் பக்கத்தில் வெளியிட விருப்பம் கொண்டேன். திரு கோபாலுக்கு தனி மயில் மூலமும், பின்னூட்டம் மூலமும் இக்கட்டுரையைப் பதிவிட சிலமுறை அனுமதி கேட்டேன். இதுவரை பதிலேதும் இல்லை; திண்ணை எடிட்டரிடமும் அனுமதி கேட்டேன். பதிலேதும் இல்லை.
அரை மனத்துடன் அவர் பதிவுகளைச் சிறிது சுருக்கி இங்கு பதிவிடுகிறேன். ஒருவேளை அவர் அனுமதி மறுத்தால் அடுத்த கணம் இதனை எடுத்து விடுகிறேன். திரு. R.கோபாலுக்கு மிக்க நன்றி.
*
மோர்மன் பிரிவு என்பது கிறிஸ்துவ அடிப்படைவாதத்தில் தோன்றி, மருவி தனியொரு மதமாக பரிணமித்த ஒரு அமெரிக்க மதம். இன்று அமெரிக்காவைத் தாண்டி உலகமெங்கும் பரவியிருக்கிறது. இந்த மதத்தை தோற்றுவித்தவர் ஜோஸப் ஸ்மித் ஜூனியர். அமெரிக்காவில், வெர்மாண்ட் மாநிலத்தில், 1805 ஆம் ஆண்டு, ஜோஸப் ஸ்மித் சீனியர் என்பவருக்கும், லூசி மாக் ஸ்மித் என்பவருக்கும் ஐந்தாவது குழந்தையாக ஜோஸப் ஸ்மித் ஜூனியர் பிறந்தார்.
அவருக்கு 17 வயதாக இருக்கும்போது அவருக்கு ”காட்சிகள்” தோன்ற ஆரம்பித்தன. அவரிடம் மொரோனி (moroni) என்ற ஒரு தேவதை வந்து புதைக்கப்பட்டிருக்கும் தங்க ஏடுகளை காண்பிப்பதாகவும், அதன் மூலம் கிறிஸ்துவத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் கோரியது என்று தன் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கூற ஆரம்பித்தார். 1830இல் (அவருக்கு 25 வயதாக இருக்கும்போது) மோர்மன் புத்தகம் (Book of Mormon) என்பதன் ஆங்கில மொழிபெயர்ப்பை பிரசுரித்தார். அதாவது, அதன் மூலம் தங்க ஏடுகளில் இருந்தன. ஒரு எகிப்து மொழியும், எபிரேயமும் கலந்த ஒரு புராதன மொழி என்று கூறிக்கொண்டார். அந்த மொழியை மொழிபெயர்க்க அவருக்கு அந்த தேவதை வலிமை கொடுத்தது என்றும் அந்த தங்க ஏடுகளை மொழிபெயர்த்து அவர் ஆங்கில புத்தகமாக வெளியிடுகிறார் என்றும் கூறினார்.
அவர் தங்கியிருந்த கிராமத்துக்கு அருகே இருந்த குமோரோ என்ற மலையில் ஒரு கல்லாலான பெட்டியின் உள்ளே இந்த ஏடுகள் இருந்தன என்று இவர் கூறினார். இன்றும் அந்த மலை மார்மன் கிறிஸ்துவர்களின் புனிதத் தலமாக இருக்கிறது. மீண்டும் ஆரம்பகால தூய வடிவில் சர்ச்சை நிறுவனப்படுத்த தன்னை கடவுள் தேர்ந்தெடுத்ததாகவும் கூறினார். இந்த சர்ச்சுக்கு சர்ச் ஆஃப் லேட்டர் டே செயிண்ட்ஸ் அல்லது சர்ச் ஆஃப் மோர்மன் என்ற பெயர் சூட்டப்பட்டது.
இந்த காலகட்டம் ஐரோப்பாவிலிருந்து துரத்தப்பட்ட, அல்லது வெளியேறிய ஐரோப்பியர்கள் அமெரிக்கா வந்து குடியேறும் காலகட்டம். இந்த காலகட்டத்தில் ஏற்கெனவே ஒரு இடத்தில் வந்து சேர்ந்தவர்களுக்கும், புதியதாக வந்து சேர்பவர்களுக்கும் இடையே சண்டைகள் அவ்வப்போது நடந்தன. 1831இல் இவரிடம் கணிசமான சீடர்கள் சேர்ந்திருந்தார்கள். ஆகவே ஸ்மித் இவர்களை கூட்டிக்கொண்டு ஒஹையோ மாநிலத்தில் கிர்ட்லாந்த் என்ற நகரில் ( Kirtland, Ohio ) ஜியான் (Zion) என்னும் புனித நகரை ஸ்தாபிக்க அழைத்துச் சென்றார். ஆனால், அங்கே ஏற்கனவே இருந்தவர்கள் இந்த புதிய வரவாளிகளை துரத்திவிட்டனர். ஏற்கெனவே வடக்கு மிஸோரி மாநிலத்துக்கு இவர்கள் சென்றனர். இந்த காலகட்டத்திலேயே, மோர்மன்களின் அதிகரிப்பை கண்டு பயந்தவர்களும் மோர்மன்களோடு போர் புரிந்தனர். இது 1838 ’மோர்மன் போர்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் மோர்மன்கள் தோற்றனர். அதனால், மிசோரியிலிருந்து மோர்மன்கள் துரத்தப்பட்டனர். ஸ்மித் சிறை பிடிக்கப்பட்டார். மிசோரி சிறையிலிருந்து தப்பிய ஸ்மித் மோர்மன்களுடன், இல்லினாய் மாநிலத்தில் நாவோ பகுதியில் (Nauvoo, Illinois) குடியேறினார்கள். அங்கு அவர் மேயராகவும், பிறகு மோர்மன்களின் மிகப்பெரிய போர்ப்படைக்கு தலைவராகவும் இருந்தார்.
1844இல் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார். நாவோ எக்ஸ்போஸிடர் என்ற பத்திரிக்கை ஸ்மித் பலதார மணம் புரிந்திருப்பதை விமர்சித்தது. இதனால், நாவோ நகர கவுன்ஸில் அந்த பத்திரிக்கை அழிக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டது. இதனால் நடந்த குழப்பத்தின் இறுதியில், நாவோ பகுதியில் ராணுவ சட்டம் என்று (martial law) அறிவித்தார். பிறகு இல்லினாய் கவர்னரிடம் சரணடைந்தார். வழக்கை எதிர்பார்த்து இருக்கும்போது அவர் இல்லினாய் மாநிலத்தில் கொல்லப்பட்டார்.
ஸ்மித்தின் சீடர்கள், அவர் எழுதியது எல்லாவற்றையும் இறைவனால் கொடுக்கப்பட்டவையாக கருதுகிறார்கள். கடவுளின் தன்மை, குடும்பம் எப்படி இருக்க வேண்டும், அரசியலமைப்பு, மதம் ஒரு கட்டுக்கோப்பான ராணுவம் போல இருக்க வேண்டும் என்ற எல்லாவற்றையும் இறை வாக்குகளாக கருதுகிறார்கள். மோஸஸ், எலிஜாவுக்கு நிகராக அவரையும் ஒரு தீர்க்கதரிசியாக கருதுகிறார்கள்.
அவரது மறைவுக்கு பின்னால், மோர்மனிஸம் பல பிரிவுகளாக பிரிந்திருக்கிறது. அதன் முக்கிய பிரிவு சர்ச் ஆஃப் ஜீஸஸ் கிரிஸ்ட் ஆஃப் லாட்டர் டே செயிண்ட்ஸ் ( Church of Jesus Christ of Later-day Saints ) என்று அழைக்கப்படுகிறது. மிசோரியில் ஒரு பிரிவு தன்னை கம்யுனிட்டி ஆஃப் கிறிஸ்ட் என்று அழைத்துகொள்கிறது. அதிகாரப்பூர்வமான இந்த இரண்டு சர்ச்சுகளும் பலதார மணத்தை தாங்கள் இனி போதிக்க மாட்டோம் என்று அமெரிக்க அரசாங்கத்திடம் உத்தரவாதம் கொடுத்ததினால், இதிலிருந்து பல மோர்மன்கள் பிரிந்து சென்று பலதார மணத்தை ஆதரிக்கும் பல மோர்மன் உப பிரிவுகளை உருவாக்கிக்கொண்டனர்.
ஜோஸப் ஸ்மித்தின் பெற்றோரும் அவரது தாய்வழி தாத்தாவும், அடிக்கடி தங்களிடம் கடவுள் பேசுவதாக கூறிகொண்டனர். இந்த டெம்போரல் லோப் வலிப்பு மரபணு ரீதியாகவும் வரலாம் என்பதை கருத்தில் கொள்ளலாம். இப்படிப்பட்ட குடும்ப சூழ்நிலையில் வளர்ந்த ஸ்மித் தனக்கும் இந்த டெம்போரல் வலிப்பு வந்ததை இறைவனின் வசனம் தன்னிடமும் இறங்குவதாக கூறிகொண்டதில் ஆச்சரியமில்லை. தன்னிடம் இறைவனின் தூதரும் இறைவனும் வந்து பேசியதாக ஸ்மித் எழுதியிருக்கிறார். இவரிடம் மோரோனி என்ற தேவதை கொடுத்த தங்க ஏடுகளை அவர் ஒரு பாதுகாப்பான அறையில் பூட்டி வைத்ததாகக் கூறிக்கொண்டார். மோரோனி தேவதை அந்த ஏடுகளை யாரிடமும் காட்டக்கூடாது என்றும், அதன் மொழிபெயர்ப்பை மட்டுமே பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று ஆணையிட்டிருப்பதாக கூறிக்கொண்டார். இவரது வார்த்தையை நம்பி பலர் இவரிடம் மொழிபெயர்ப்பு வேலை செய்ய வந்தனர் அப்போதிலிருந்து அந்த பழங்கால ஏடுகளிலிருந்து மொழிபெயர்க்கும் திறன் போய்விட்டதாக கூறினார்.
பிறகு 1828இல் இவருக்கு மீண்டும் அந்த திறன் கொடுக்கப்பட்டதாகவும் கூறிகொண்டார். பலர் இந்த தங்க ஏடுகளை பார்க்க விரும்பினர். ஆனால், மோரோனி தேவதை மற்றவர்கள் பார்க்ககூடாது என்று கூறிவிட்டதால் காண்பிக்கவில்லை என்று கூறிவிட்டார். அவரது நெருங்கிய உறவினர்கள் 11 பேர் அந்த தங்க ஏடுகளை பார்த்ததாக சாட்சியமளித்தனர். இவை இப்போதும் பிரசுரிக்கும் மோர்மன் புத்தகம் என்ற இந்த பிரிவின் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
மொழிபெயர்ப்பு முடிந்ததும், அந்த தங்க ஏடுகளை மோரோனி எடுத்துகொண்டு சென்றுவிட்டதாக ஸ்மித் கூறிவிட்டார். தான் வன்முறையை விரும்பவில்லை என்று ஸ்மித் அடிக்கடி கூறிகொண்டாலும், மோர்மன் மதத்தை காக்கவும், மோர்மன் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக ராணுவப்போருக்கு ஆட்களை அழைக்க வேண்டும் என்றும் விரும்பினார். இவரது சில போதனைகள் பல முன்னுக்குப் பின் முரணாக இருப்பவை. ஒரு காலகட்டத்தில் வந்த போதனைகளை பின்னொரு காலத்தில் அதனை மறுத்து வேறொரு கருத்தை கடவுள் தன்னிடம் சொன்னதாக கூறிவிடுவார். உதாரணமாக அடிமைமுறையை ஆதரித்து 1836ல் பேசினார். பின்னர் கடுமையாக அடிமைமுறையை எதிர்த்திருக்கிறார். அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட போது, 1850ஆம் ஆண்டில் அடிமைமுறையை ஒழிக்கப்போவதாகவும், ஏற்கெனவே அடிமைகளை வைத்திருந்தவர்களுக்கு நஷ்ட ஈடாக, பொது நிலங்களை விற்று பணம் தரப்போவதாகவும் வாக்குறுதி அளித்தார். மோர்மன் மதத்துக்குள் அடிமைகள் வரலாம். ஆனால், அந்த அடிமைகளின் எஜமானர்கள் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதே நேரத்தில் கருப்பினத்தவரும், வெள்ளையினத்தவரும் திருமணம் செய்வதை தடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். ஜனநாயகமே சரி என்று ஒரு சமயத்தில் கூறியிருக்கிறார். பின்னர் மோர்மன் மத அடிப்படையிலான மத அரசாங்கமே ஒரு நாட்டை அரச வம்சத்தால் ஆளப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார். அமெரிக்கா பல நாடுகளையும் ஆக்கிரமித்து ஆள வேண்டும் என்று கூறியிருக்கிறார். பின்னால், அந்த ஆக்கிரமிப்பு என்பது சகோதரத்துவ ஆக்கிரமிப்பு என்று அழைத்திருக்கிறார். மனிதர்கள் உருவாக்கிய சட்டத்தை விட கடவுள் கொடுக்கும் சட்டமே உன்னதமானது என்றும், இறைவசனத்தின் மூலம் வரும் சட்டத்தையே மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இது அவரது கருத்து. ”ஒரு இடத்தில் கொல்லக்கூடாது என்று கடவுள் சொல்லியிருக்கிறார்(பைபிளில்). மற்றொரு இடத்தில் அழித்து முடி என்றும் சொல்லியிருக்கிறார். நேரத்துக்கு தகுந்தாற்போல வரும் இறைவசனங்கள் மூலமாகத்தான் அரசாங்கம் நடைபெற வேண்டும். இந்த அரசாங்கத்தின் மூத்த தலைவர்களுக்கு இறைவனிடமிருந்து வரும் கட்டளைகள் மூலமாகத்தான் அரசாங்கம் நடைபெற வேண்டும். கடவுள் என்ன கேட்கிறாரோ அதுவே சரி. மற்றவர்கள் இந்த கட்டளைகளை என்ன கேவலமாக கருதினாலும்….” என்று கூறுகிறார். பலதார மணமே சிறந்த மணம் என்றும் அதுவே மனிதனை கடவுளாகக்கூட ஆக்ககூடிய விஷயம் என்றும் கூறியிருக்கிறார்.
================
இன்னும் சில கடவுள் தரிசனம் பெற்றோரின் பட்டியல்:
செயிண்ட் பிர்கிட்டா (1303-1373) ஸ்வீடனின் முக்கியமான செயிண்டாக அறியப்படுகிறார். இவர் சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே இப்படிப்பட்ட காட்சிகளை அனுபவிப்பவராக இருந்தார். இவரது கல்லறையில் இருந்த அவரது மண்டையோடு ஆராயப்பட்டிருக்கிறது. அதில் இவருக்கும் மெனிஞ்சியோமா என்ற வியாதி இருப்பது தெரியவருகிறது. இது வலிப்புகளை உருவாக்கும் வியாதி. ஆனால், இது டெம்போரல் லோபுக்கு பரவாமல் இருந்தாலும் அதிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். காட்சி பிரமைகளும் தானாக உருவாக்கிக்கொண்ட psychogenic non-epileptic seizures, or a combination இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
ஜோன் ஆஃப் ஆர்க் (Joan of Arc அல்லது The Maid of Orléans) என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற பிரஞ்சு வீராங்கனையும் இது போல அடிக்கடி காட்சிகளை பிரமையாக கண்டவர் என்று கூறப்படுகிறது.
அவில்லாவின் செயிண்ட் தெரஸா Saint Teresa of Ávila, also called Saint Teresa of Jesus, baptized as Teresa Sánchez de Cepeda y Ahumada, (March 28, 1515 – October 4, 1582) இவர் ஸ்பெயினில் பிறந்தார். மிகச்சிறிய வயதிலேயே நோய்வாய்ப்பட்ட இவர் Tercer abecedario espiritual,” translated as the Third Spiritual Alphabet (published in 1527 and written by Francisco de Osuna) என்ற புத்தகத்தை படிக்கும்போதெல்லாம் காட்சிகளையும் பிரமைகளையும் அடைந்தார். இப்படிப்பட்ட காட்சிகளின் போது பேரானந்தத்தையும் அதீதமான அழகைப் பார்த்ததால் பெருகும் கண்ணீரையும் அனுபவித்ததாக எழுதுகிறார்.
உலக மக்கள் அனைவருக்கும் சொல்வதற்காக, ஒரே மூச்சில் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட செய்தியை, தங்களது சூழ்நிலைக்கு ஒரு சம்பந்தமும் இல்லாத செய்தியை, இப்படிப்பட்ட ”இறைவனால் வழிநடத்தப்படுகிறவர்கள்” சொல்வதில்லை. இவர்களுக்கு வரும் ஒவ்வொரு செய்திக்கும் அந்தந்த சூழ்நிலையே காரணமாகிறது. அந்த தனிநபரின் நெருக்கடிகளின் போது அவருக்கு தோன்றும் கருத்துக்களே இறைவனின் வாசகங்களாக அவர்களால் கூறப்படுகின்றன.
இதுவே ஜோஸப் ஸ்மித், அஹமதியா, ஜோன் ஆப் ஆர்க் இன்னும் இது பலரின் பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுகிறது. முகமதுவிற்கு வஹி தொடர்ந்து வந்தது 23 வருடங்களுக்கு. இதுவே இவர்களை அவநம்பிக்கையோடு மற்றவர்கள் அணுக முகாந்திரமாகவும் அமைந்துவிடுகிறது.
பெந்தகொஸ்தே கூட்டங்களில் கத்துதலும், தாறுமாறாக நடந்துகொள்ளுதலும், அன்னிய பாஷை பேசுவதாக கூறிகொண்டு பேசுவதும், வலிப்பு வந்தாற்போல நடந்துகொண்டு பரிசுத்த ஆவி வந்ததாக கூறிக்கொள்வதும் பார்க்கலாம். இதனை self induced epileptic seizure என்று அழைக்கிறார்கள்.
அன்னிய பாஷை பேசுவதாக கூறினாலும் இது pseudo-language என்று அறிவியல் ஆய்வுகளில் வரையறுக்கப்படுகிறது. இது கிறிஸ்துவத்தின் ஆரம்ப காலத்தில் கிறிஸ்துவ போதகர்கள் தாங்கள் பரிசுத்த ஆவியால் அன்னிய தேசங்களின் பாஷைகளை பேச சக்தி கொடுக்கப்பட்டோம் என்று காண்பிக்க இவ்வாறு பொய்யான மொழி பேசுவது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்று அன்னியபாஷை என்பது உலகத்தில் எங்குமே பேசப்படாத மொழிகளைப்போல பொய்யாக பேசுவது. அதனாலேயே இது பொய்மொழி என்று அறிவியல் வரையறுக்கிறது. இவ்வாறு பொய்மொழியை பேசுவது சில மணிநேரங்கள் பழக்கப்படுத்திகொண்டாலே யார் வேண்டுமானாலும் பேசலாம் என்று ஆராய்ச்சிகளில் நிரூபித்துள்ளனர்.
*
இப்படி பிரித்து பிரித்து , இயேசுவின் வழியினை கெடுத்து விட்டார்களே !!
ReplyDeleteமத போதையில்
ReplyDeleteதனிமனித போதனை- அதுவே
தனித்தனி காட்சிகள்
அல்ல
கட்சிக் கூட்டங்கள்
இப்படி பிரித்து பிரித்துப் பார்ப்பது ஏசு காலத்திலேயே வந்து விட்டதே ... பாருங்களேன் இங்கே!
ReplyDeleteவணக்கம் அய்யா,
ReplyDeleteநான் ஒரு ஆத்திகன் எனவும் இப்படி கேட்கிறேன் என வையுங்கள்.பதில் அளியுங்கள்.
அதாவது மூளையின் டெம்போரல் லோப் பகுதியில் செய்யப்பட்ட சில ஆய்வுகள் , இயற்கைக்கு மேம்பட்ட உரையாடியதாக கூறியவர்களின் மூளையில் சில கோளாறுகள் இருந்தமைக்கான் சான்றுகள் தருகின்றன.
இதனைக் குறைபாடு என்று சொல்லாமல் இறைவன் அருள், அதாவது இறைத் தூதருக்கான இறைவனின் அருள்,வரம் என்று சொன்னால் என்ன?
குறைபாடு என்றால் என்ன? சாதாரண நிலையில் இருந்து மாறுபடல். மாறுபாடு என்பது ஏன் குறை அல்லாமல் நிறையாக,வரப்பிரசாதமாக இருக்க கூடாது?
சிந்திக்க மாட்டீர்களா???
நன்றி!!!!
ஆத்திக சார்வ்ஸ்
ReplyDeleteஇரவு முழுதும் யோசித்து நாளை சொல்லலாமென நினைக்கிறேன். இருந்தும் அதற்கு முன்பாக ...
//இதனைக் குறைபாடு என்று சொல்லாமல் இறைவன் அருள் என்று சொன்னால் என்ன?//
நல்லது. இறைவனின் அருள் என்றே வைத்துக் கொள்வோம்.
ஆனால் இந்த ”அருள்” எப்போதும் ஒன்றாக அல்லவா இருக்க வேண்டும். ஏனென்றால் கடவுள் ஒன்று தானே. அவர் சார்வ்ஸுக்கு ஒரு மாதிரியும், தருமிக்கு வேறு மாதிரியும், சு.பி.க்கு இன்னொரு விதமாகவுமா அருள் செய்வார்?
ஆளாளுக்கு வேறு வேறு வரப்பிரசாதமா சாமி தருவார்.
ஆனால் ‘நோய்வாய்ப்பட்ட” ஆளுகளுக்குக் கொடுத்தது எல்லாமே ரொம்ப diversified வரப்பிரசாதமாக அல்லவா இருக்கிறது. காப்ரியல் மரியிடம் ஒன்று சொன்னார் - உன் பிள்ளை தான் மனித குல இரட்சகர் என்று. ஆனால் அதே angel ஜிப்ரேல் என்ற பெயரில் வந்து வேறு மாதிரி சொல்லிட்டுப் போய்ட்டார். ஆனாலும் இதில் முகமது ஒரு ஸ்பெஷல் கேஸ்! ஏனெனில், நான் தான் கடைசி; இனி யாரும் தூதர் இல்லை என்று ஓங்கி ஒரு போடு போட்டாரே .... அது தான் பெருசு! என்ன மாதிரி ஐடியா !!!
uncontested ஆக இருக்க எப்படி வழி பண்ணி(க்கி)ட்டார்.
//சிந்திக்க மாட்டீர்களா???//
ReplyDeleteசார்வ்ஸ்,
சிந்திச்சிட்டேனா ... ???