*
நேற்று இந்துவில் மெஸ்ஸியின் நேர்காணல். அதில் ஒரு கேள்வி: இறுதிப் பந்தயத்தில் அர்ஜென்டினா - ப்ரேசில் வந்தால் எப்படி இருக்கும்? கேள்வி நன்றாகத்தான் இருந்தது. அந்த இரு நாடுகளும் மோதினால் கால் பந்து ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாகத்தான் இருக்கும். A dream competition!!
ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லாதது போல் மெஸ்ஸி நேற்று இரவு விளையாடினார். அவரும் சரி, அவரது அணியும் ஏன் இப்படி ஆடினார்கள் என்று தெரியவில்லை. இந்த நேர்காணலைப் படித்த பின், இன்று சனிக்கிழமை - வார இறுதி நாள் - ஆகவே நல்ல இரு அணிகள் மோதும் என்று நினைத்து பட்டியலைப் பார்த்தேன். அர்ஜென்டினா - ஈரான் என்று பார்த்ததும் அடடா .. ஒரு பெரிய அணியும் சின்ன அணியும் அல்லவா மோதுகிறது; ஈரானுக்கு பல கோல்கள் அடித்து அர்ஜென்டினா வெல்லுமே என்று நினைத்தேன். ஆகவே ஆட்டம் அப்படியா பெரிதாக இருந்து விடப் போகிறது என்று நினைத்தேன்.
ஆனால் அர்ஜென்டினா இப்படியா விளையாடும்? இன்னும் ஈரானுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்திருந்தால் அந்த அணி வென்றிருந்திருக்கும். மெஸ்ஸி கோல் பக்கம் நிறைய அடித்தார். அனைத்தும் கோலிலிருந்து மைல் கணக்கில் தள்ளி அடித்து முழக்கினார். ஆனால் ஈரான் நன்று தற்காத்துக் கொண்டது. அதிலும் இரண்டாம் பகுதியில் 55வது நிமிடத்திலிருந்து 80வது நிமிடம் வரை ஈராக் அடித்த சில நல்ல பந்துகள் கோலாகாமல் போய் விட்டன.
அர்ஜென்டினா மேல் வந்த எரிச்சலில் ஈரான் ஒரு கோலாவது போட்டுவிடக் கூடாதா என்று ஆசைப்பட்டேன். என்ன நேரமோ... அர்ஜென்டினா பிழைத்தது. காலம் போன காலத்தில் என்பது போல் 91வது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு கோல் போட்டு அணிக்கு வெற்றியளித்தார்.
ஆனால் நேற்று விளையாடியது போல் விளையாடினால் அர்ஜென்டினா பாடு ரொம்பவே கஷ்டம் தான்.
ஆர்ஜெந்டீனாவின் பொற்காலம் மாரடோனாவோடு போய்விட்டதோ என்று நினைக்கிறேன். இரானுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது.
ReplyDeleteஇரான் வெற்றி பெறுகிறதாக என்று பார்க்க வேண்டும்
ReplyDeleteதம 1