*
சில மாதங்களுக்கு முன் ஒரு மருத்துவரைப் பார்க்கப் போயிருந்தேன். சின்ன நோவு. ஒரு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றார். நோயின் நிலை குறித்து எனக்கு விளக்கம் சொல்லி விட்டு, மருந்துச் சீட்டு எழுதிக் கொடுதார். அவருடைய பீஸ் எவ்வளவு என்று கேட்டு, கொடுத்தேன். பணத்தை வாங்கி உள்ளே போட்டவர் மேசையின் மேலிருந்த சில உறைகளில் ஒன்றைத் தேடி எடுத்து என்னிடம் கொடுத்தார். ’என்ன இது?’ என்றேன். ’நீங்கள் ஸ்கேன் எடுத்ததற்காக அவர்கள் எனக்குக் கொடுத்த கமிஷன். வழக்கமாக இதை நான் அவரவர்களிடம் கொடுத்து விடுவேன்’ என்றார்.
இப்படி ஒரு டாக்டர்.
கமிஷன் வேண்டாமென்றால் அதுவும் ஸ்கேன்காரர்களிடமே போய் விடும். அதை வாங்கி நம்மிடமே கொடுப்பதே அவர் வழக்கமாம். அவர் பெயரைச் சொன்னாலும் இந்த நல்ல விஷயம் முடிவுக்கு வந்து விடும்.
*****
ஆனால் இன்னொரு டாக்டர் பெயர் கேட்டாலும் சொல்வேன். தனது மருத்துவ மனையில் கிருபானந்த வாரியாரின் படம் தொங்கும். அவருக்காகவே தான் இந்த ‘சேவையைத்’ தொடர்ந்து செய்வதாக என்னிடம் சொன்னார். ஆனால் என் முதல் heart attackற்குப் பிறகு இரு முறை அவரது ‘சேவை’ நாடிச் சென்றேன். இரண்டாம் முறையே நன்றாக அவர் முகத்துக்கெதிரேயே சில கேள்விகள் கேட்டேன். ’உங்கள் சேவை’ இன்னும் பலருக்குக் கட்டாயம் heart attack வர வைத்து விடும்’ என்று சொல்லி விட்டு வந்தேன்.
இப்படியும் ஒரு டாக்டர்!
******
எங்கள் கல்லூரி சுயாட்சிக் கல்லூரி. நாங்களே கேள்வித்தாள் எடுத்து, நாங்களே திருத்தி மதிப்பீடு செய்ய வேண்டும். இம்முறையில் ஆசிரியர் ட்யூஷன் எடுப்பது போன்றவை மிகவும் தப்பானவை.முன்பு என் மைத்துனன் இப்படி ஒரு ஆசிரியரிடம் ட்யூஷன் எடுத்திருப்பான் போலும். சில நாட்களுக்குள் அவன் என் உறவினன் என்பது அவருக்குத் தெரிய வர அவனை நீ வரவேண்டாம் என்று சொல்லி நிறுத்தி விட்டார். மைத்துனன் என் தங்க்ஸிடம் ‘உங்க ஆளால் எனக்குல்ல நஷ்டம்’ என்றானாம்.
இன்னொரு முறை கேள்வித்தாளைக் காசு கொடுத்து வாங்கிய ஒரு மாணவன் மற்ற நன்கு படிக்கும் சில மாணவர்கள் மூலம் என்னிடம் மாட்டிக் கொண்டான். நேரே கல்லூரித் தலைவரிடம் சென்றேன். அவர் புது விதமான தண்டனை ஒன்று சொன்னார் - பையனைத் தண்டிப்போம் என்றார். பையன் புத்திசாலி ... எந்த வாத்தியார் எப்படி என்று தெரிந்து அவரிடம் சென்றிருக்கிறான். இங்கே குற்றவாளி ஆசிரியர். அவரைத் தண்டிக்காமல் மாணவனைத் தண்டித்தால் நான் அவன் பக்கம் நிற்பேன் என்றேன்.
*****
பக்கத்தில் ஒரு பள்ளியில் ஒரு மாணவன் பணம் கொடுத்து அவனுக்கு வேண்டிய ஆசிரியரை 12ம் இறுதித் தேர்வுக்கு supvervisionக்கு வரவைத்து, அறை மாணவர்கள் அனைவரும் காப்பி அடித்தார்கள் என்று கேள்விப்பட்ட போது, ‘இது போன்ற ஆசிரியர்கள் பேசாமல் ..... செய்து காசு சம்பாதிக்கலாமே!’ என்றேன்.
இப்படியும் சில ஆசிரியர்கள்.
******
நேற்று whats upல் ஒரு audio clipping ஒன்று வந்தது. ’நீயா .. நானா’ நிகழ்ச்சி பற்றி யாரோ ஒரு டாக்டர் பேசியிருக்கிறார்’’ அதில் பல மருத்துவ தொடர்பான வார்த்தைகளைப் போட்டுப் பேசியதால் அவர் ஒரு மருத்துவராக இருக்கலாம் என்று அனுமானித்தேன். .மற்றபடி அது ஒரு பண்பட்ட மருத்துவரிடமிருந்து வந்த வார்த்தைகள் அல்ல. மிகவும் தரம் தாழ்த்திப் பேசினார்.கோபியின் தொப்பையிலிருந்து எல்லாவற்றையும் ‘குழாயடிச் சண்டையில்’ பேசுவது போல் பேசினார். அல்லது ஒரு வேளை மருத்துவர்களிடமிருந்து சில வார்த்தைகளைப் போட்டு யாரோ ஒரு ஆள் அப்படி தரம் கெட்டும் பேசியிருக்கலாம்.
விஜய் டிவியின் TRP பற்றி அதிகம் கவலைப்பட்டார். இதைப் போல் தானே மருத்துவ பில்களைப் பார்க்கும் போது மக்களுக்கும் இருக்கும் என்று அவர் நினைக்கவில்லை.
******
எங்கள் குடும்ப டாக்டரும், டாக்டரம்மாவும் எங்கள் குடும்பத் தோழர்கள் போல் உள்ளனர். வீட்டு விஷயங்கள், பிள்ளைகள் விஷயங்கள் வரை எல்லாம் பேசுவோம். டாக்டரம்மாவின் பருத்திச் சேலைகள் மீது தங்க்ஸிற்கு எப்போதும் ஒரு கண்!
******
உலகமயமாக்கலின் தொடர்புடையதாக மருத்துவம் ஒரு தொழிலாக, சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் - it is a pucca business - மாறி விட்டது. இதை நீயா நானில் வந்த மருத்துவர்களே ஒப்புக்கொண்ட விஷயம். ஒப்புக்கொண்டார்களோ இல்லையோ... அது தான் உண்மை என்பது நன்கு தெரிந்த விஷயம்.
ரமணா கதையில் வருவது போல் கோமாவில் இருந்த ஒரு உறவினனை மருத்துவ மனையிலேயே வைத்திருந்து..... சில லட்சங்கள் கைமாறின.
தேவையில்லாத அளவிற்கு மாறி மாறி மருத்துவ சோதனைகள், அதுவும் மருத்துவர் சொல்லும் சோதனைச் சாலைகளில் மட்டும். மதுரையில் உள்ள பெரிய மருத்துவ மனையில் இரு முறை சர்க்கரை அளவிற்கு சோதனியிட்ட போது இரு முறையும் 120 தாண்டியது. அச்சத்தோடு பக்கத்திலிருந்து சிறு சோதனைச் சாலையில் பார்த்தேன். 100தான். feed back கொடுத்தேன். என்ன பயனோ? அடுத்த முறை போகும் போது தான் தெரியும்.
எல்லாவற்றையும் விட குழந்தைப் பேறு மருத்துவர்கள் ஒரு தனி சாதி போலும்! என் மகளுக்கு தேவையில்லாமல் அச்சம் ஊட்டிய டாக்டரம்மா பெரிய மருத்துவ மனை வைத்திருந்தார்கள். முதல் முறையோடு அந்த டாக்டர் வேண்டாமென்று முடிவெடுத்தோம். அவர்கள் அச்சமுறுத்தியது போல் ஏதுமில்லை.
*******
ஒரு ஆசிரியன் தவறுதலாக நடக்கிறான் என்று சொன்னால் அதை இன்னொரு ஆசிரியனாக என்னால் அதை முழுமையாக ஒத்துக் கொள்ள முடியும். ஆம் .. அவன் தவறு செய்திருக்கிறான் என்று என்னால் தலை நிமிர்ந்து சொல்ல முடியும். திருத்தப் பட வேண்டும்; தண்டிக்கப்பட வேண்டும் என்று நிச்சயம் உறுதியாகச் சொல்வேன்.
அதை விட்டு விட்டு, அவனும் நானும் ஒரே ‘ஜாதி’ என்ற ஒரே காரணத்தால் நான் அவனை நல்லவன்; ஆசிரியர்கள் என்றாலே கடவுளோட ஜாதி... தொழிலும் மிகுந்த உயர்வான தொழில் ... அப்படியே நாங்கள் எங்கள் மாணவர்களை mould செய்கிறோம் ... அவர்களை எப்படி நீ குறை சொல்லலாம் என்று நான் கூரை மீதேறி கத்தினால் ....
நான் நல்ல மனிதனல்ல.
*******
After Dr. Bruno's accusation that i had given a fiction regarding a doctor who gave me the commission ...
Sorry, tamil
font does not work properly now. So in English.
// பெரும்பாலான மருத்துவர்கள் பணத்தின் மேல் ஆசைப்படுவதில்லை.
தங்களிடம் வருபவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கிறார்கள்//
தங்களிடம் வருபவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கிறார்கள்//
They
give very nice medical certificates too for a handsome money. Our class time
was between 8 to 12 noon. Between 9-10 I had an internal test – which carries
weight in the internal assessment. A student didn’t turn up. Normally I never go
for certificates for giving a retest. Not knowing my practice, a student came
with a certificate from a govt doctor. He had certified that the boy had chest
pain and was treated by him. The poor boy had attended classes in the other
three periods. I sent a letter ‘appreciating’ the doctor for his miraculous
treatment, which cured the boy’s chest pain within an hour since he was able to
attend his classes very immediately.
This
may too be considered by my very well educated blogger friend Dr. Bruno as a “fiction”.
He can hold on to that since I don’t have any evidence with me now for that
incident which took place nearly some 20 or 25 years back.