Wednesday, October 08, 2014

792. IT'S A TURNCOAT








*


எழுபதுகளில் கல்லூரிகளில் நடக்கும் போட்டிகளில் TURNCOAT என்றொரு போட்டி இருக்கும். ஆங்கிலத்தில் மட்டுமே இது நடக்கும். பேச்சாளர் முதல் 3 அல்லது 5 நிமிடங்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பின் ஒரு பக்க கருத்துக்களைக் கூற வேண்டும். மணி அடித்ததும் அடுத்த பக்கக் கருத்தை அடுத்த நேரக்கட்டுப்பாட்டில் கூற வேண்டும். அணு உலைகள் வேண்டும் / வேண்டாம்  என்ற தலைப்பு என்றால் முதல் காலக் கெடுவில் வேண்டும் என்றும் அடுத்ததில் வேண்டாம் என்றும் பேச வேண்டும். சினிமாவிற்கு சென்சார் வேண்டும் / வேண்டாம் என்றோ, தாய்மொழிக் கல்வி வேண்டும் / வேண்டாம் என்றோ ... இப்படிப் பல விதமான தலைப்புகள் ஆளாளுக்குத் தரப் படும். வேடிக்கையாக இருக்கும். இந்தப் போட்டிகளுக்கு நல்ல வரவேற்பும் இருக்கும். பேசுபவர்கள் மாணவர்களே ... ஒருங்கிணைப்பவர்கள் ஆசிரியர்களோ மாணவர்களோ இருப்பதுண்டு.

(இப்போதெல்லாம் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடப்பதில்லை. இப்படி மாற்றி மாற்றிப் பேசுவதற்கு, அதிலும் ஆங்கிலத்தில் பேசுவதற்கும், அதைப் பொறுமையாக உட்கார்ந்து கேட்பதற்கும் இப்போது மாணவர்கள் தயாரில்லை. இந்த அளவிற்கு ஆங்கிலத்தில் பேச இப்போதுள்ள மாணவர்களால் முடியாது என்றே நினைக்கிறேன். நமக்குத் தான் டமிலும் வராது; ஆங்கிலமும் வராதே...!)

நேற்று தொலைக்காட்சிகளைப் பார்க்கும் போது இந்த விளையாட்டுதான் நினைவுக்கு வந்தது.  பிணை கிடைத்து விட்டது என்ற செய்தி; அது மனதிற்குள் செலவதற்குள் அடுத்த செய்தி. அப்படியே மாறிய செய்தி. முதல் செய்தி வந்ததும் போட்ட ஆட்டமும், வேட்டும் அடுத்த சில நிமிடங்களில் கிடைத்த இறுதிச் செய்தி வந்ததும் எல்லாம் அடங்கி விட்டன. ஒரு மெளன அமைதி. அதுவும் பயமாகத்தான் இருந்தது.

நிகழ்ச்சி பார்க்கும் போது, ‘புரட்சித் தலைவி அம்மா’ என்று ஒரு முறை சொல்ல மறந்து போனாலும் தூக்குத் தண்டனை போட்டு விடுவார்கள் என்ற அச்சத்தோடே அனைவரும் பேசியது போல் தோன்றியது. சிறுசு பெருசு என்ற பாகுபாடு இல்லாமல் கட்சிக்காரர்கள் - வக்கீலாக இருந்தாலும், பாமரனாக இருந்தாலும் - அழுத்தியழுத்தி அதை உச்சரிக்கும் போது வேடிக்கையாகவும் எரிச்சலாகவும் இருந்தது. அப்படியென்ன ஒரு எழுதாத சட்டம்! கேட்டால் அன்பினால் வரும் வார்த்தைகள் என்று அவர்கள் கூறலாம்.

என்னமோ போங்க ....!




*





6 comments:

  1. யம்மா...........யம்மா.... இப்படியெல்லாமா..........

    ReplyDelete
  2. மீடியாக்கள் விளையாட்டுத் தனமாக நடந்து கொண்டதன் விளைவு நேற்றைய செய்தி!

    ReplyDelete
  3. ‘தளிர்’ சுரேஷ்
    மீடியாக்களைக் குறை சொல்ல முடியாது. அதிமுக வழக்கறிஞரே வந்து சொல்லும் போது எப்படி அதை ஒதுக்குவது?

    ReplyDelete
  4. டீச்சர்

    ஆமாமா ...எல்லாமே ‘அம்மா’ தான் ..........

    ReplyDelete
  5. Turncoat... What a fantastic concept? Well, it was there in our college in 80'-90's as well. Those were the days, when you had to create entertainment yourself. The Pre TV days. Once TV's came in, its all gone.
    நேற்றை பொறுத்தவரை, முதலில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. எங்கள் நேரப்படி, இரவு நல்ல ஒரு தூக்கம் போட்டு விட்டு, காலை எழுந்து ஒரு காபி (நரசுஸ்-பேஷா இருக்கேன்னு சொல்லிக்கொண்டே) குடித்து கொண்டு வந்து பார்த்தேன். அம்மையாருக்கு சாரி என்று சொல்லி விட்டார்கள் என்ற செய்தி வந்தது. "அவசரக்காரனுக்கு புத்தி மட்டு".. முன்னோர்கள் - பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்?

    ReplyDelete
  6. // it was there in our college in 80'-90's as well.//

    பரவாயில்லையே...!
    காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணி வரை டைம் எப்படி போச்சுன்னு நினைக்கிறீங்க ... செம டைம் பாஸ்! அதிலும் 4 - 5 க்ளைமேக்ஸ் .... so also anti climax!!

    ReplyDelete