Sunday, December 21, 2014

810. INDIAN SUPER LEAGUE





*  

ISL போட்டிகள் முடிவடைந்தன.

அரையிறுதி ஆட்டங்களில் பாவம் ... நம்ம சென்னையின் அணி. லீக் ஆட்டத்தில் இரு முறை கேரளா அணியை வென்றிருந்தார்கள். மறுபடி அரையிறுதியில் இரு ஆட்டங்கள். நன்றாக ஆடியும் முதல் ஆட்டத்தில் மூன்று கோல்கள் வாங்கினார்கள். இரண்டாம் சுற்றில் மூன்றுக்கு மூன்று என்று கொண்டு வந்தார்கள், ஆனால் கடைசியில் கேரளா அணி 3:1 என்று கடைசி கோலடித்து இறுதிப் போட்டிக்குத் தேர்வானது. விரும்பிய சென்னை அணி தோற்றது.

அடுத்த அரையிறுதியில் கொல்கத்தா அணியும் கோவா அணியும் மோதின. இரண்டு சுற்றிலும் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. இரண்டாவது சுற்றில் கோவா அணியின் கையே --- இல்லை..இல்லை... காலே மேலோங்கியிருந்தது. ஆனாலும் ஒரு கோல் மூலம் கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு வந்தது.

இறுதிப் போட்டி கொல்கத்தா அணிக்கும் கேரளா அணிக்கும்.  முதலிலிருந்தே கேரளா அணியின் பக்கமே பந்து இருந்தது. அவ்வப்போது இரு கோல்கள் பக்கம் பந்து அயாயகரமாகச் சென்று ஆர்வத்தைத் தூண்டியது. வழக்கமாக பந்து ஒரு அணியிடமே அதிகமாக இருக்கும் போது சடாரென எதிர்த்த அணி பக்கம் கோல் விழுவதுண்டு. அதே போல் இந்த முறையும் நடக்கும் என்று என்  கோழி சொல்லியது.  புள்ளி விவரம்கேரளா: கொல்கத்தா  70:30 என்ற கணக்கு காட்டியது. இருந்தும் பந்து கோவா அணிக்கும் அவ்வப்போது பயம் காட்டியது. கோல்கள் விழாமல் கடைசி வரை போராட்டம் நீடித்தது. நீட்டிப்பு காலம் மட்டும் மிஞ்சியிருந்தது. அதில் முதல் நிமிடத்தில் ரபீக் தலையால் மோதி கோவாவிற்கு கோல் போட்டார்; வெற்றி கல்கத்தாவிற்கு. இப்போட்டியிலும் விரும்பிய கேரளா அணி தோற்றது.

அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் விரும்பிய அணிகள் தோற்றன.ஆனாலும் எல்லாவற்றையும் கூட்டிக் கழித்த பின், கால்பந்தில் ஆர்வம் மிக்க மாநிலங்களே வெற்றி பெற்றுள்ளன. இரு பெரிய அணிகள் வைத்து முழு ஆர்வம் காட்டும் கொல்கத்தா அணிக்கு முதலிடம். அதன் பின் கேரளா. அடுத்து கோவா. ஒரு சந்தோஷம் நாலாவது இடம் நமது மாநிலத்திற்கு! கணக்கு சரிதான்!

இதில் ஆச்சரியப்பட வேண்டிய பல விஷயங்கள் நடந்துள்ளன.

*  விஜய் டிவி நேரடி ஒலிபரப்பை எடுத்துக் கொண்டது. ஆச்சரியாக இருந்தது.. இருந்திருந்து கால்பந்திற்கு நேரடி ஒலிபரப்பா ...? அதுவும் தமிழ் நாட்டில்...! அடடே... என்ன ஆச்சரியம். இதற்காகவே விஜய் டிவிக்கு நன்றி.

*  என்னங்க இது ... அரங்கம் முழுவதும் நிரம்பி வழிந்தது. மக்களிடம் கால்பந்திற்கு இவ்வளவு ஆர்வமா! ஆச்சரியம் ... மகிழ்ச்சி. It is not the end; it is not even the beginning of the end; but just end of the beginning ....என்ற சர்ச்சிலின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.கால்பந்து விளையாட்டுக்கும் காலம் வரும் போலும்.

*  கால்பந்து விளையாட்டை இவ்வளவு ஆர்வத்துடன் மேலெடுத்து வந்த ரிலையன்ஸ், ஹீரோ போன்ற ஆர்வலர்களுக்கு நிச்சயம் எதிர்காலத்தின் நன்றி இருக்கும் என்று நம்புகிறேன்.

*  ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு எப்படி இவ்வளவு கால்பந்து பரவுவதில் ஆர்வம். ஆயினும் அவர்கள் நம் நன்றிக்குரியவர்களே.

*  இந்தி நடிகர்கள் பலரும் ஆர்வம் கொண்டிருந்தனர். நம்மூர் ஆட்கள் யாரும் இதில் கலந்து கொண்டார்களா என்று தெரியவில்லை; கலந்து கொண்டு சிறப்பித்த நடிகர்களுக்கும் நன்றி.

*  கால்பந்து வீர்ர்களுக்கான பரிசுகள் ஆயிரங்களில்  இருந்தன. ஒரு வேளை கிரிக்கெட் போட்டி வீரர்களை இந்த இடத்தில் வைத்துப் பார்த்தேன். அவர்களுக்கு லட்சங்களில் பரிசு வரலாம். பாவம் .. கால்பந்து வீரர்களுக்கு ஆயிரத்தில் மட்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

*  போட்டியில் தரம் சிறப்பாக இருந்தது என்றே நினைக்கின்றேன். ஆனாலும் ஒரே வருத்தம். நம்மூர் ஆட்கள் மிகவும் கம்மியான எண்ணிக்கையில் இருந்தார்கள். இந்த போட்டி இனி ஒவ்வொரு வருடமும் நடக்கலாம்; நடக்க வேண்டும். அப்போதெல்லாம், நம்மூர் ஆட்களுக்குக் கட்டாயம் இந்த அணிகளில் கட்டாயம் இடம் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 50:50 என்றாவது இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அணியில் கணக்கிற்காக மட்டுமல்லாமல் விளையாட்டிலும் அவர்கள் ஈடுபட வேண்டும்.

இப்போட்டிகளில் பங்கெடுப்பதற்காக ISLக்கு முன்பாகவே பல போட்டிகள் நடந்து அவைகளில் நம்மூர் வீரர்கள் பங்கெடுத்து, அதன் மூலம் இப்போட்டிகளில் இடம் பிடிக்க வேண்டும். .......... எல்லாம் ஆசை தான். எவ்வளவு தூரம் நடக்குமோ.... காத்திருந்து பார்க்க வேண்டும்.



... *

4 comments:

  1. //கால்பந்திற்கு நேரடி ஒலிபரப்பா ...? அதுவும் தமிழ் நாட்டில்...! அடடே.
    என்னங்க இது ... அரங்கம் முழுவதும் நிரம்பி வழிந்தது. //
    :)

    அப்புறம் காணாமல் போனவங்க பட்டியலில் சகோ சார்வாகனை சேர்த்திருந்தீங்க குறைந்தது மாதம் ஒரு பதிவாவது எழுதுவதாக சகோ உறுதி அளித்தது. குறைந்தது குவார்ட்டலி ஒரு பதிவு எழுதினாலே கூட வாசகர்களுக்கு நல்லாயிருக்கும்.

    ReplyDelete
  2. சார்

    எல்லாவற்றையும் பார்ப்பதற்கு உங்களுக்கு நேரம் இருக்கிறதா ? ஒரு விசயத்தையும் விட மாட்டேங்கறீங்களே!

    ReplyDelete
  3. //ஒரு விசயத்தையும் விட மாட்டேங்கறீங்களே! //
    பணிஓய்வு காலத்தை மேலை நாட்டவங்க மாதிரி அருமையாக என்ஜாய் பண்ணிட்டு இருக்கிறார். கால்பந்து விளையாட்டை ரசிக்கிறார். உல்லாச பிரயாணம் செல்கிறார். இசை பிரியராக இருக்கிறார்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நாம் எதிர்பார்ப்பதில் தவறில்லை. தங்களுடைய பரந்துபட்ட விவாதம் பாராட்டத்தக்கது.

    ReplyDelete