*
என்னை பெரியார் வசீகரித்ததற்கான சில காரணங்களை இப்பதிவில் இட்டிருந்தேன். மிகவும் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று ஓரளவாவது முன்னேறியிருப்பதும்,
கல்வியறிவில் முன்னேற்றம் கண்டிருப்பதும், பகுத்தறிவு
என்ற ஒரு சொல்லை சரியாகவோ, தவறாகவோ மக்களிடம் எடுத்துச்
சென்றவர் என்பதுவும் அவர் மேல் வைத்துள்ள மரியாதைக்குக் காரணங்களாக இருக்கின்றன.
நிச்சயமாக அடித்தட்டு மக்களுக்கு விழிப்புணர்வு வருவதற்குப்
பெரிய காரண கர்த்தா என்பதில் எனக்கு ஐயமேதுமில்லை. சாதியக் கட்டுப்பாட்டில்
உச்சாணிக்கொப்பில் இருந்து கொண்டு சமுதாய நடைமுறைகளைத் தங்கள் கைக்குள் பலகாலம்
பிராமணர்கள் வைத்திருந்தார்கள் என்பதில் கேள்வி என்பதற்கே இடமில்லை. இதை முதன்
முறையாக ஒரு கேள்வியாக, ஒரு போராட்டத்தின் முதல் புள்ளியாக அவர்
இருந்தார் என்பதை மறுப்பதற்கில்லை.
பிராமணீயம் என்றொரு புதுச்சொல்லும் இப்போது நமது சமூகக்
கோட்பாடுகளிடையே வந்துள்ளது. சாதிகளின் படியடுக்குகளை ஒட்டி இச்சொல் எழுந்துள்ளது.
சாதியில் மேலிருந்தால் கீழே இருப்பவன் தலை மீது தன் காலை வைத்து அழுத்துவதும், கீழேயிருந்தால் மேலேயிருப்பவனின் காலைத் தன் தலையில் வைத்து சுமப்பதும்
ஒரு கலையாகவே வளர்ந்து விட்டது. இந்தக் கலைக்கு பிராமணீயம் என்ற பெயர் பொருத்தமாக
அமைந்து விட்டது. இதனை இப்போது தலை மீது வைத்து ஆடுவது புதிய சத்திரியர்கள் என்பது
நடைமுறையில் நாம் நித்தமும் காணும் சோகச் செய்தி.
ஆயிரம் இருந்தாலும் நானும் ஒரு பிராமணனாகப் பிறந்திருந்தால்
இன்னேரம் பெரியார் என்ற பெயரே எனக்குக் கசந்திருக்கும். பிராமணீயம் என்ற சொல் என்
சாதியை வைத்து வந்த ஒரு கெட்ட சொல்லாக இருந்திருக்கும். ‘தனக்கு வந்தால் தான்
தெரியும் தலைவலி’ என்பது பொது உண்மை தானே. ஆனாலும் அதற்காக இல்லாதததையும்
பொல்லாதததையும் சொல்லியிருப்பேனா என்று தெரியவில்லை.
*******
”தமிழ் பிராமணர்களின் ஆழ்ந்த வேதனை: வாழு … வாழ விடு “ என்ற தலைப்பில் டைம்ஸ் ஆப் இந்தியா என்ற
தினசரியில் பதிவர் பத்ரியின் கட்டுரை
ஒன்று வெளி வந்துள்ளது. அதிலிருந்து சில வரிகள் …. (அவர் வரிகள் சிகப்பில். பதிலாக என் வரிகள் நீலத்தில்.)
1. ஒரு காலத்தில் சாதிய அடுக்கு முறைகளில்
பிராமணர்கள் ஒரு வேளை உயர்ந்த இடத்தில் இருந்திருக்கலாம். – ஒரு வேளையில்
அல்ல; நிச்சயமாகவே அப்படித்தான்! இதில் யாருக்கு
என்ன சந்தேகம்?
2. ஆனால் உண்மையில் அவர்கள் எந்த அதிகாரமும்
இல்லாமல் இருந்துள்ளனர். – அடப் பாவமே ...இது கொஞ்சம் ”அதிகமாக” தெரிகிறதே.
உண்மைக்கு மிகவும் புறம்பான கருத்து.
3.
சுதந்திரத்திற்கு முந்திய மெட்ராஸ் ராஜதானியில் தமிழ், தெலுகு
பிராமணர்கள் அதிகமான பொறுப்புகளில், தங்கள் எண்ணிக்கையையும் மீறி இருந்திருக்கிறார்கள். – ஒத்துக் கொண்டமைக்கு வாழ்த்துகள். ஆனால் அன்று மட்டும்
அல்ல.இன்றும் இடப்பங்கீட்டால் உயர்சாதி மக்களின் விழுக்காடுகள் விழுந்து விடவில்லை.
நிலைத்தே நிற்கிறீர்கள்.
//அன்று பிராமணர்கள் நிறைய பேர் ஆசிரியர்,
பேராசிரியராக இருந்தார்கள். இன்று அந்த நிலை மாறி விட்டது.// நிஜம் தான். ஏனெனில் என் போன்றவர்களும் படித்து அந்த
வேலைகளுக்கு வரும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. What is good for the gander need
not be good for the goose. இல்லையா?
மேற்கூறியவற்றை டைம்ஸ் ஆப் இந்தியாவில் எழுதி விட்டு, இதன் தொடர்பாக இரு பார்ப்பனர்களின் பூணூலை அறுத்தெறிந்த ஒரு
சம்பவம் பற்றியும் பத்ரி தன் பதிவில் எழுதியுள்ளார்.
”வெறுப்புக் குற்றம்: பூணூல் அறுத்தலைத் தொடர்ந்து” என்ற தலைப்பில்
எழுதியுள்ளார். நிஜமான கோபத்துடன் எழுதியிருக்கிறார்.
சரி தான்.... நானும் ஒரு பார்ப்பனனாக இருந்திருந்தால்
இதைவிடக் கடுமையாக எழுதியிருந்திருப்பேன்.
ஆனாலும் every coin has two sides என்று
சொல்வார்களே அது தான் இங்கேயும். ”ஒரு குற்றத்தின் மீது இரு வேறு பார்வைகள்’ என்று நிற்கிறது. .
//தமிழகத்தில் பொதுவெறுப்பின் அடிப்படையில்
மிகப்பெரிய பாதிப்பைச் சந்திப்பது தலித்துகள்தான். சாதி மத பேதமின்றி அனைவரும்
ஒன்றுசேர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தலித்துகளைத் தாக்குகின்றனர். தலித்
மாணவர்களைக் கொண்டு பள்ளிக்கூடக் கழிப்பறையைச் சுத்தம் செய்ய வைத்ததற்காக
கீழப்பத்தை பண்டிதன்குறிச்சி கிராமத்தின் ஒரு பள்ளியில் “தாளாளர் சாலமன் ஜெபா,
அவரது மனைவியும் தலைமையாசிரியருமான ஜெயக்குமாரி, ஆசிரியர்கள் ஹெலன் அருள் எமிமாள், மேரி சுஜித்ரா,
ஏஞ்சலின் ஸ்டெபி, ஜேக்கப், ஆக்னஸ், சரோஜா” ஆகியோர் காவல்துறையால் கைது
செய்யப்பட்டுள்ளனர்.//
அழகாக பத்ரி
எழுதியுள்ளார். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் இப்படிதான்
நடந்து வருகிறது. தலித்துகளின் மீது நடக்கும் தவறுகள் ஆயிரம் ..ஆயிரம். அதன் மேல்
நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களோ பிராமணீயத்தின் மூலம் புதிதாக முளைத்துள்ள “புது
சத்திரியர்கள்”. ஆனால் அவர்கள் கைகள் தலித்துக்கு ஆதரவாக எப்போதும் நீள்வதேயில்லை.
இதை அழகாகப் படம் பிடித்துள்ளார் பத்ரி.
ஆனால் அதோடு ..//சென்னையில் இரு
பார்ப்பனர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலும் அதே வகையின்கீழ் வரும். இவற்றை அனைத்து
மக்களும் கடுமையாக எதிர்க்கவேண்டும். நமக்கென்ன என்று எதிர்க்கத் தவறினால்,
நாம் சமதர்ம சமுதாயம் ஒன்றை உருவாக்கத் தவறிவிடுவோம்.// என்றும் பொதுநலச் சிந்தனையோடு எழுதியுள்ளார்.
இது எனக்குக் கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. தலித்துகளுக்கு
எதிர்த்து நடக்கும் முறை கேடுகள் மிகவும் அதிகம்; மிகவும் கொடூரமானவைகள். இதனோடு பூணூலை இருவருக்கு அறுத்ததைச் சோடி
சேர்ப்பது மலைக்கும் மடுவிற்கும் உள்ள ஒற்றுமை தான். தலித் பற்றி ‘பாவமாக’ ஏதும்
சொல்லி , தன் அக்கறையைக் காண்பித்து விட்டு, தன்கட்சியை முன்னிறுத்தினால் நன்கு எடுபடும் என்பது அவரின் நோக்கமாக
இருக்கலாம். அது மட்டுமைல்ல.
பூணூலை அறுத்ததற்கு பத்ரி தரும் காரணம் சரியா என்றும்
தெரியவில்லை. ஏனெனில் பத்ரியின் பதிவில் பால சுந்தர வினாயகம், வெ. ஜெயகணபதி, Gujaal என்பவர்கள் தங்கள் பின்னூட்டத்தில் இந்த
நிகழ்ச்சிக்கான காரணத்தை எழுதியுள்ளார்கள்.
தெருவிலிருந்த ஒரு பிள்ளையார் சிலைக்கு பிராமணன் அல்லாத, பக்கத்தில்
இருக்கும் குப்பத்தில் வாழும் ஒரு தொழிலாளி மாலையணிவித்து வணங்குவதற்கு எதிர்ப்பு
தெரிவித்த இரு பிராமணர்களுக்கு எதிராக அந்தத் தொழிலாளி இரு பிராமணர்களைத்
தாக்கியுள்ளார். இதிலும் பெரிய விசேஷம் என்னவென்றால், அந்தத் தொழிலாளி சாமிக்கு அப்போது மாலை போட்டிருந்திருக்கிறார். ஆகவே
முதலில் நடந்த தகராறில் அவர் பிராமணர்களின் எதிர்ப்பையும், அடிகளையும் வாங்கிக் கொண்டு அமைதியாகப் போய் விட்டாராம். விரதம்
முடிந்து மாலையைக் கழற்றிய பின் அவர் அந்த பிராமணர்களை எதிர்த்திருக்கிறார். அவ்வளவு சாமி
பக்தி அந்த தொழிலாளிக்கு. ஆனால் அவர் பிள்ளையாருக்கு மாலையணிவித்து பூசை செய்தால்
அந்தப் பிராமணர்கள் அதைத் தடுக்கிறார்கள். தடுப்பது அவர்களா, அல்லது அவர்களது பூணூலா? This is the other side of the coin. காதுள்ளவன் கேட்கக் கடவன்!
இப்பதிவின் பின்னூட்டங்களில் சுந்தர மூர்த்தி, ஷண்முகநாதன்
சுவாமிநாதன் என்ற இருவரின்
பின்னூட்டங்களும் நல்ல நகைச்சுவையோடு உள்ளன:
“பிராமினந்தான் இன்றைக்கும் நேர்மையாகப் பணி
செய்கிறான்”. -- சுந்தர மூர்த்தி – பிடித்த ஜோக்! என்னமா அடிக்கிறாங்க .... B.C.C.I. தலைவர் ஞாபகம் டக்குன்னு வந்திச்சி ...!
”இத்தனை வருடம் திராவிடக் கட்சிகள் மாறி மாறி
ஆண்டபின்னரும் இன்னும் தாழ்த்தப்பட்டவன் தப்படிக்கப் போகிறான் என்றால் .......மலம்
அள்ளச் செல்கிறான் என்றால் .......சாக்கடை, கழிவறையை சுத்தம்
செய்யச் செல்கிறான் என்றால்.... இந்த திராவிட பகுத்தறிவுவாதிகள் என்ன செய்தார்கள்?
-- சுந்தர மூர்த்தி - இந்த நியாயமான கேள்விக்கு நன்றி, சு.மூ. ஆனால் இந்து ஜெயலலிதா போன்ற திராவிட பகுத்தறிவுவாதிகள் நடத்திய, நடத்தும் ஆட்சியில்
மட்டும் தானா இந்த நிலை? இந்தியா
முழுமைக்கும் இதே காட்சிதானே அரங்கேறி வருகிறது - யார் ஆட்சி செய்தாலும்!
”சமூகத்திடம் இருந்து எந்த உதவியும் பெறாமல்,
சமூகத்துக்கு கான்ட்ரிப்யூட் செய்கிறவர்களுக்கு கிடைக்கிற மரியாதை
இதுதான்”. - Shanmuganaathan Swaminathan. – அதானே… மற்றவங்கல்லாம் என்னத்த கான்ட்ரிப்யூட்
பண்றாங்க … இல்லீங்களா...? நீங்க தானே இந்த நாட்டின் தூண்கள் ...
இல்லீங்களா...!?
*
நல்ல பதிவு.
ReplyDeleteஐயா! ஒரு சமூக சேவை செய்யும் ஒரு ஆசிரியரின் கூற்றை விட்டு விட்டீர்களே!
ReplyDelete""பன்றிகளுக்கு இசை கற்றுத்தர முயலவேமுயலாதே! ஏனெனில் - அதனால் உனக்கு ஏற்படும் நேரவிரயத்திற்கு அப்பாற்பட்டு, அவைகளுக்கு அது மகாமகோ கோபத்தையும் ஊட்டும்."
-- ராபர்ட் ஹென்லென்
எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டான் இந்த ஆசாமி!"
கொடுமை!
யதார்த்தத்தைப் பதிந்த விதம் நன்று.
ReplyDelete//Share of Tamil and Telugu brahmins was disproportionately large in the government of pre-independent Madras province.//. இது பத்ரி எழுதியது.
ReplyDelete//சுதந்திரத்திற்கு முந்திய மெட்ராஸ் ராஜதானியிலும் தமிழ் தெலுகு பிராமணர்களின் பொறுப்பு அவர்களது எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் மிகவும் குறையாக இருந்திருக்கிறது.//இது தாங்களின் மொழிபெயர்ப்பு.
எனக்கு ஆங்கிலம் சுட்டுப்போட்டாலும் வராதோ??
நந்தவனத்தான்
ReplyDeleteசுட்டு போடாமலேயே உங்களுக்கு வந்து விடுகிறது. எனக்குத்தான் அவ்வப்போது சூடு போடணும் போலும்.
நடந்த தவறுக்கு எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
மன்னிக்கவும்.
திருத்து சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன்.
தருமி ஐயா, பத்ரி கட்டுரை எழுதி 4 மாதம் ஓடிவிட்டது,அப்போது நீங்கள் அதை படிக்கவில்லை என்பதினால் இதற்கான கீழ்காணும் சுவாரஸ்யமான எதிர்வினையை படித்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
ReplyDeletehttp://contrarianworld.blogspot.com/2014/12/badri-seshadris-brahminical-angst-meets.html
கட்டுரை ஆசிரியர் பார்ப்பனர் அல்லர் என்பதோடு இந்துவே அல்லர் என்பது கூடுதல் தகவல்.(பத்ரி கட்டுரை படித்த போது prejudice-உடன் படித்தீர்கள் என தோன்றியது,மன்னிக்க). கூடவே இக்கட்டுரையில் உள்ள முரசொலி கார்டூனில் முன்பு திமுகவினர் ஈ.வே.ராவை முன்பு எப்படியெல்லாம் கழுவிக் கழுவி ஊத்தியிருக்கிறார்கள்! கூடவே அவரைப் பற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது மாயபிம்பம் என்றும் புரிகிறது - அவரது கூட்டாளிகளே சொல்லும் போது நம்பாமல் இருக்க முடியுமா?
I strongly believe all brahmins are always innocent. There are no spectrum of people when it comes to brahmin and they all have the same "innocent" profile. They never harm anybody physically or mentally ever. Their thoughts are pure and unselfish. They never lie or manipulate the system ever. Trust me, they always care about others more than than themselves. For some reason people misunderstand them and accuse them of something. Because of such misunderstandings poor innocent brahmins are always suffering in this earth. God should do something about it. All Dravidians should pray their God for helping innocent brahmins who all have such a miserable life in this world. I would pray for them if I believed in God. Unfortunately I don't. It is really really sad that such innocent human beings namely "brahmins" are misunderstood all the time! I feel really really sad when I think about them. :(
ReplyDeleteவந்தேன் :)
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி சகோ நந்தவனத்தான்.
varun
ReplyDeletei too share your grief!
ஆதிக்க சாதியினர் ( பிராமணர்கள் மட்டுமல்ல)செய்து வந்த குற்றங்கள் தவிர்க்கப் படவேண்டும் இந்த உயர்வு தாழ்வு சிந்தனையே வரக்கூடாது. என் பதிவு” இனி ஒரு விதி செய்வோம்” நான் எழுதி இருக்கும் தீர்வுக்குக் கருத்து சொல்ல அழைக்கிறேன்
ReplyDeleteநன்றி, சகோ.வேகநரி, குறைந்த பட்சம் நீங்கள் ஒருவராவது இணைப்பை படித்தவகையில் சந்தோசம், இணைப்பிட்ட பயனை அடைந்தேன் ;)
ReplyDeleteநந்தவனத்தான்
ReplyDeleteகோபப் பட வேண்டாம். நானும் வாசித்து விட்டேன்.
இது போன்ற கட்டுரைகளை நிறைய வாசித்திருக்கிறோம். இவைகளில் உள்ள ஒரு குறை - தங்களை மட்டும் கண்ணாடியில் பார்த்துக் கொண்டே அவர்கள் எழுதும் எழுத்துக்கள் இவை.
O.C. ஆட்களெல்லாம் வெளிநாட்டு வேலைகளுக்குப் போய் விடுவோம் / போய் விட்டோம் என்று அவரால் எளிதாகக் கூறி தோளைக் குலுக்கிக் கொண்டு கடந்து போக முடிகிறது.
இந்த எழுத்துக்களில் இல்லாத ஒன்றாக நான் பார்ப்பது - மனித நேயம். இன்னும் பீ அள்ளுவதற்கென்றே சில நர மனிதர்களை வைத்து வளர்த்து வருகிறோம் என்பதை மறந்த வார்த்தைகள் இவை.. ஒரு நொடியேனும் அந்த மனிதர்களைப் பற்றி empathyயோடு நினைத்துப் பார்க்கும் எந்த மனிதராயிருந்தாலும் இப்படி தோள் உயர்த்தி பேச முடியாது என்பது என் நம்பிக்கை.
படித்தற்கு நன்றி ஐயா, உங்க கருத்தை தெரிந்து கொள்வதற்காகத்தான் அந்த இணைப்பினை கொடுத்தேன்.
ReplyDeleteஅந்த பீ அள்ளும் மனிதர்களை பற்றி ஈவேராவும் அவரின் சிஷ்யகோடிகளும் கவலைபட்டதாகவே தெரியவில்லையே? முரசொலி கார்டூன் பார்த்தீர்கள்தானே? மேலும் சுமார் 60 திராவிடர் ஆட்சி செய்துமா மனிதன் பீ அள்ளுவதை ஒழிக்க முடியவில்லை?. இன்னமும் அதற்கு பார்ப்பான்தான் காரணம் என அடுத்த 2000 வருடத்திற்கு சொல்லிக்கொண்டிருப்பார்களா? மேலும் அதற்கு OC கிருத்தவர் எப்படி பொறுப்பாவார்? அவருக்கு ஏன் இட ஒதுக்கீட்டால் தண்டனை? இதற்கு விடை கிடைக்கவே போவதில்லை என்றாலும் கேட்டு வைக்கிறேன்.
Dharumi Sir: I have tried to educate them, it never worked. They finger at someone and escape! They will find Muslims or Christians or high class dravidians and show them how bad they are to cover their bottom and ESCAPE. Now after doing that they will pretend that they are much better than others and ESCAPE from the point we are bringing up!
ReplyDeleteLet us segregate all the "brahmins" in one city or town. All are brahmins. Lakhs of crores of brahmins in ONE CITY> Nobody else is allowed there to live or help them clean their toilet! Now they all are going to shit every day and fill up their septic tank. Now no one is allowed in that city but brahmins to live. Who will clean up the septic tank now? Now some "high class" brahmin has to clean the shit pot and the septic tank. They can not escape from this job. Right? That would be wonderful!
The point is if one community lives in whole city. They have to do the best job and also cleaning the toilet job too. Yeah the same brahmin has to clean their own shit from their own septic tank. Right?
Even after giving such lectures, Do you think these guys will understand the POINT that they run away from the problem fingering at others? NOOOOOOO! They will escape from the problem. They dont wnat to learn. Because there are so many madurai tamilans to worry about "poonool issue" rather than some serious issues. These guys will use "madurai tamilans" to escape again. They will find a way to run away problem and plead innocent all the time! They have been running their life like this all these years. It will continue as long as we got madurai tamilans!
//முரசொலி கார்டூன் பார்த்தீர்கள்தானே? //
ReplyDeleteஇல்லை. எங்கே?
// அதற்கு OC கிருத்தவர் எப்படி பொறுப்பாவார்? அவருக்கு ஏன் இட ஒதுக்கீட்டால் தண்டனை? //
என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.
//அந்த பீ அள்ளும் மனிதர்களை பற்றி ஈவேராவும் அவரின் சிஷ்யகோடிகளும் கவலைபட்டதாகவே தெரியவில்லையே? //
ReplyDeleteஉங்களைப் போன்ற ”பெரியார் cum திராவிட பக்தர்களைப்” பார்த்தால் என்ன செய்வதென்றே தெரியவில்லை! எல்லாத்துக்கும் அவங்க தான் கூஜாவைத் தூக்கிட்டு வரணுமா? உங்களைப் போன்றோர் ஒரேயடியாக பெரியாரையும் திராவிட அரசியல்வாதிகளையும் omniscient personality ஆக மாற்றி விடுவீர்கள் போலும். எல்லாத்துக்கும் அவங்கதான் காரணமா? இந்த பெரியார் & Co தான் பீ அள்ளுவது நிறுத்த வேண்டுமா? மத்தவங்கல்லாம் என்ன செய்றாங்க? தமிழ்நாட்டில் பெரியார் & Co இருந்தும் இன்னும் பீ அள்றாங்க. இவங்க இல்லாத மாநிலங்களில் பீ அள்ற பிரச்சனையே இல்லாதது மாதிரியும், பெரியார் & Co இருந்த இடத்தில மட்டும் அவங்க சரி பண்ணாதது மாதிரில்ல பேசுறிங்க.
அது என்னங்க எதுக்கெடுத்தாலும் உடனே திராவிடன் அல்லது பெரியார் & Co கை கால்ல போய் விழுந்திர்ரீங்க? பெரியார் மீது என் மரியாதைக்கான காரணம் நீங்க சொல்ற மாதிரி அவர் ஒரு தெய்வீகப் பிறவி; அவரே எல்லாத்துக்கும் தீர்வு; அவர்தான் பீ அள்றதை நிறுத்தியிருக்கணும் அப்டின்னு நீங்க சொல்ற மாதிரி நான் நினைக்கலை. அவர் என்னை மாதிரி ஒரு சாதாரண மனிதன். நல்லது சொன்னார்; கெட்டதும் செய்தார். ஆனால் விஷ்ணு சாமி மாதிரி முழுத்தூக்கத்தில் இருந்த பலரை எழுப்பி விட்டார் என்பதில் எனக்கு அவர் மேல் மரியாதை. யாரும் நினைக்காத காலத்தில் இந்த உணர்வை முதலில் பரப்பியவர்களுள் ஒரு முக்கிய நபர் அவர். மற்றபடி அவர் ஏன் அதைப் பண்ணலை … இதைப் பண்ணலைன்னு சொல்லிக்கிட்டு இருந்தால்… கீழ்வெண்மணிக்கு ஒண்ணும் சொல்லலை … வயசான காலத்தில கல்யாணம் கட்டிக்கிட்டாரு ..ராமாயணத்தை எரிச்சாரு …இதெல்லாம் வெறும் குப்பை எனக்கு.
//அந்த பீ அள்ளும் மனிதர்களை பற்றி ஈவேராவும் அவரின் சிஷ்யகோடிகளும் கவலைபட்டதாகவே தெரியவில்லையே? // -- இப்படி நான் சொன்னதுக்கு என்ன அர்த்தம்னா … அந்தப் பீ அள்ளும் மனிதர்களை நந்தவனத்தான், பத்ரி, சுந்தர மூர்த்தி, ஷண்முகநாதன் சுவாமிநாதன், Athenaeum, தருமி … இவங்கல்லாம் ஒரு நொடியேனும் அந்த மனிதர்களைப் பற்றி empathyயோடு நினைத்துப் பார்த்திருந்தால் இப்போது நீங்கள் / நாம் தோளைக்குலுக்கிக் கொள்கிறோமே … அதைச் செய்ய மாட்டோம் என்று சொன்னேன்.
பொருள் புரிந்ததா?
nandavanathan
ReplyDeletesaw the cartoons.
my answer to your Q: SO WHAT? I CARE A HOOT ...........
பின்னூட்டத்தை தொடர
ReplyDelete//என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை//
ReplyDeleteகட்டுரையாசிரியர் ஒரு கிறுத்தவர். அவரு பிசி சாதியாகவிருப்பார் என நினைக்கிறேன். மதம்மாறினால் ஓசி-யாக்கிவிடுவார்கள் அல்லவா? அதனால் பார்ப்பனர் மட்டுமல்லாது எண்ணிக்கையில் குறைவாகவிருக்கும் சில சாதிகளுக்கும் இட ஒதுக்கீட்டால் ஆப்பு என்று அவரே கட்டுரையில் சொல்கிறார்.
//முரசொலி கார்டூன் பார்த்தீர்கள்தானே?//
சுத்தம், இணைப்பிட்ட கட்டுரையை நன்றாக பாருங்கள் சார். முரசொலியின் படி பெரியார் சொன்னாராம் வேலையில்லாத் திண்டாட்டதிற்கு காரணம் -"பள்ளு பறையனுங்க படிக்க ஆரம்பிச்சடானுக அதனாலதான் வேலையில்லா திண்டாட்டம்" என்று. ஆக பார்பான்களுக்கும் ஆதிக்க சாதியினருக்கும் ஈவேராவுக்கும் ஓரே மனோநிலைதான். இதுல எல்லாப் புகழும் ஈவேராவுக்கு என புகழ்மாலை, பிற ஆதிக்க சாதிகளுக்கு இட ஒதுக்கீடு சலுகை - ஆனால் பார்ப்பானுகளுக்கு மட்டும் ஏன் தண்டனை?
//சுத்தம், இணைப்பிட்ட கட்டுரையை நன்றாக பாருங்கள் சார். //
ReplyDeleteசுத்தமா ... பாத்துட்டேன் சார். அதுக்கும் எனக்கும் என்ன சார் தொடர்பு?
புரிஞ்சுக்க மாட்டேங்க்றீங்களே!
கடைசியாக, நீங்க கட்டுரையில் எழுதிய ஒன்று மட்டும் உண்மை - "நான் பார்ப்பானாக இருந்திருந்தால் எழுதியிருப்பேன்" என்றீர்கள். அதுதான் பிரச்சனை. பார்ப்பனர்களுக்கு மற்ற சாதியினிர் கஷ்டம் புரிவதில்லை. அதேபோல் தலித்களை சுரண்டி தின்றுவிட்டு மனசாட்சியில்லாமல் இட ஒதுக்கீடும் அனுபவிக்கும் இடைநிலை சாதிகளுக்கு மனசாட்சி உறுத்தவில்லை. நான் தலித்தும் அல்ல! பார்ப்பானும் அல்ல! நானும் பெரியார் அமைப்புடன் சேர்ந்து ஜால்ரா போட்டு நல்லவனாக இருக்க மனசாட்சி ஒத்துக்கவும் இல்லை.பார்ப்பான் அளவுக்கு இரத்தம் என் கையிலும் இருக்கிறது.
ReplyDeleteஎன்னைப் பொறுத்தவரையில் பார்ப்பனர் குற்றம் செய்ய உதவியவர்கள் ஆனால இடைநிலை சாதிகள் - அரச சாதிகள்தான் உண்மையான குற்றவாளிகள். அவர்களிடம் சாதியை ஒழிக்க அதிகாரம் இருந்தது, ஆனால் செய்யவில்லை. தங்களுக்கு ஆபத்து என்ற போது மட்டும் பார்ப்பரை ஒடுக்கினார்கள்,( உ-ம்) இந்துதுவாவின் மஸ்காட் சிவாஜி 10,000 பார்பனரை கொன்றார், பாலகாட்டு மன்னர் நம்பூதரிகளை விரட்டி தமிழ் பார்பான்களை வேலைக்கு வைத்தார்- இப்படி பல உதாரணம் உண்டு. ஆனால் தலித்களை ஒடுக்குவதில் பார்ப்பானுடன் கூட்டுக்களவாணிகள். முன்பு வரை இந்த இடைநிலை சாதிகளுக்கு ஜால்ரா அடித்த பார்பான்கள், பிரிட்டீசாருக்கு ஜால்ரா அடித்து உயர்வை பார்க்க ஆரம்பித்ததும் பொறுக்காமல் வந்ததுதான் ஜஸ்டிஸ் பார்ட்டி - பெரியார் அமைப்பு.கூட்டுகளவாணிகளில் ஒருவருக்கு இட ஒதுக்கீடு சலுகை, இன்னொருத்தனுக்கு மட்டும் தண்டனையா? இதை மட்டும் சாதித்ததுதான் பெரியாரின் சாதனை. அவர் யாரையும் விழிக்க வைத்தது மாதிரி தெரியவில்லை.
தென்னிந்தியாவில் சாதிவெறி அதிகமாக இருக்கும் மாநிலமே தமிழ்நாடுதான். ஏனெனில் எல்லாப் பழியையும் தூக்கி பார்ப்பானுக மேல போட்டுவிட்டு அதிக எண்ணிக்கையில் இருக்கும் இடைநிலை சாதிகளிடம் குற்றவுணர்வே இல்லாமல் பண்ணிவிட்டார் ஈவேரா. ஆனால் எது நல்லது நடந்தாலும் அவருதான் காரணம் என சும்மா கிளப்பிவிட்டே மாயபிம்பம் உருவாகிவிட்டது, உருவாக்கப்பட்டது. எப்படி மற்றவருக்கு வீடில்லை என்கும் பார்பானர்கள் அமெரிக்காவில் அதை செய்தால் சிறையிலிருப்பார்களோ, அதேபோல் பெரியாரும் அவர் தமிழ்நாட்டில் பேசியதை அமெரிக்காவில் பேசியிருந்தால் சிறையில்தான் இருந்திருப்பார். அவரை முற்றிலும் ஒன்றுமே செய்யவில்லை என்று நானும் சொல்லவில்லை,ஆனால் அவர் ரொம்ப over-rated சீர்திருத்தவாதி. இந்த விடயத்தில் நான் அம்பேத்கரின் மிகவும் மதிக்கிறேன், அவரை போன்றவர் ஈவேராவுக்கு பதிலாக தமிழ்நாட்டில் பிரலபமாகயிருக்கவேண்டும் எனவே விரும்புகிறேன். நன்றி.
//கட்டுரையாசிரியர் ஒரு கிறுத்தவர். அவரு பிசி சாதியாகவிருப்பார் என நினைக்கிறேன். மதம்மாறினால் ஓசி-யாக்கிவிடுவார்கள் ’’
ReplyDeleteஇது உங்கள் சொந்தக் கதையா? அவர் தன்னை ஒரு பார்ப்பனல்லாத பெருங்குடி மகன் என்றல்லவா சொல்லியிருக்கிறார். நீங்கள் ஏன் தேவையில்லாமல் புதிதாக ஏதோ திரிக்கிறீர்கள்? எனக்குத் தெரிந்த வரையில் எஸ்.சி கிறித்துவரானால் அவர் பி.சி. ஆக்கப்படுகிறார். மதத்தால் யாரும் நீங்கள் சொல்வது போல் ஓ.சியில் வர முடியாது. பி.சி. கிறித்துவர் பி.சி. தான். ஓ.சி அல்ல.
இது பற்றி என் சொந்தக் கருத்து: எஸ்.சி. கிறித்துவர்கள் சமுதாய,கல்வி, பொருளாதாரச் சூழலில் இந்து எஸ்.சிக்களை விட மேம்பட்டவர்கள். அதனால் இந்த ‘ஆப்பு’ வைக்கப்பட்டிருக்கலாம். அவர்கள் போராடுகிறார்கள். கிடைத்தால் நலமே.
//இதுல எல்லாப் புகழும் ஈவேராவுக்கு என புகழ்மாலை,//
ReplyDeleteபெரியாரை “முழுவதுமாக’ போற்றுகிறேன் என்பவர் சொல்லும் சொல்லை என்னிடம் சொல்லி என்ன ஆகப் போகிறது?
// பார்ப்பானுகளுக்கு மட்டும் ஏன் தண்டனை?//
இதற்குப் பதில் இங்கும் சொல்லியுள்ளேன். என் இடப்பங்கீடு கட்டுரையிலும் சொல்லியுள்ளேன்.
// பார்ப்பானுகளுக்கு மட்டும் ஏன் தண்டனை?//
பார்ப்பானுக்கு மட்டுமல்ல இன்னும் பலருக்கும் தான். அதை ஏன் விட்டு விட்டு பார்ப்பானுக்கு மட்டும் வக்காலத்து வாங்குகிறீர்கள்?
SO WHAT? I CARE A HOOT .........//
ReplyDeleteYou meant I do not care a hoot? If so -- Similar way one can revere anyone in world - Hitler to the cop Patrick Cherry! After all we belong to the second most racist country in the world, we can create anything, from Casteism to leaders like EVR!
இரண்டாம் பத்தியில் நீங்கள் சொன்னதைத் தான் நானும் சொல்லியுள்ளேன் -//சாதியில் மேலிருந்தால் கீழே இருப்பவன் தலை மீது தன் காலை வைத்து அழுத்துவதும், கீழேயிருந்தால் மேலேயிருப்பவனின் காலைத் தன் தலையில் வைத்து சுமப்பதும் ஒரு கலையாகவே வளர்ந்து விட்டது. இந்தக் கலைக்கு பிராமணீயம் என்ற பெயர் பொருத்தமாக அமைந்து விட்டது. இதனை இப்போது தலை மீது வைத்து ஆடுவது புதிய சத்திரியர்கள் என்பது நடைமுறையில் நாம் நித்தமும் காணும் சோகச் செய்தி.//
ReplyDelete//we can create anything, from Casteism to leaders like EVR!//
ReplyDeleteதலைவரே... இப்படியெல்லாம் சொல்லிட்டா நான் ஒண்ணும் offend ஆயிட மாட்டேன். பெரியாரைத் துதிப்பவர்களிடம் போய் இதைச் செய்யுங்கள்.
//இது உங்கள் சொந்தக் கதையா? அவர் தன்னை ஒரு பார்ப்பனல்லாத பெருங்குடி மகன் என்றல்லவா சொல்லியிருக்கிறார். நீங்கள் ஏன் தேவையில்லாமல் புதிதாக ஏதோ திரிக்கிறீர்கள்? எனக்குத் தெரிந்த வரையில் எஸ்.சி கிறித்துவரானால் அவர் பி.சி. ஆக்கப்படுகிறார். மதத்தால் யாரும் நீங்கள் சொல்வது போல் ஓ.சியில் வர முடியாது. பி.சி. கிறித்துவர் பி.சி. தான். ஓ.சி அல்ல.//
ReplyDeleteஅவரு கிறுத்தவர்தான். இந்த ஒரு கட்டுரை மட்டுமா எழுதியிருக்கிறார்? வேறு தரவுகளின் அடிப்படையில்தான் சொல்கிறேன். அவர் ஓசி + கிருத்தவர் என்பதினால் அவரது ஒரிஜினல் சாதி ஓசியாகவோ அல்லது பிசி யாவோ இருக்கலாம் என்பதுதான் எனது யூகம். ஆகவே பிசியாக இருக்கலாம் என நினைக்கிறேன் என்றுதானே எழுதினேன்? இந்துக்கள் கிறுத்தவராக மதம் மாறினால் ஓரு லெவல் அப்கிரேடு ஆகிவிடுவார்கள் என்று பள்ளியில் இருந்த போது கேள்விபட்டேன், அந்த அடிப்படையில் சொன்னேன். அதற்கப்புறம் எனது கம்யூனிட்டி சர்டிபிகேட்டைக்கூட உபயோகிக்க வேண்டிய தருணமே வாய்க்கவில்லை.
ஆனால் நீங்கள் சொன்ன பிறகுதான் கிருத்தவர்கள் எல்லோரும் பிசி என்று இணையத்தில் படித்தறிந்தேன் - கிருத்துவரானால் SCக்கள் மட்டும் அப்கிரேடு ஆகி பிசியாவார்கள், பிசிக்கள் அப்படியே இருப்பார்கள் என்பதறிந்தேன். தவறுக்கு வருந்துகிறேன். மற்றபடி திரித்து பொய் பேசி உங்களிடம் பைசாவா தேற்ற வந்தேன்? இதேமாதிரிதான் பத்ரி மீது மனசாட்சி இல்லாதவர் என்பது போல குற்றம் சாட்டினீர்கள்.பத்ரியுடன் கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனால் அவர் கருத்தளவில் நேர்மையானவர் என எண்ணுகிறேன். இதனால்தான் அவர் பாப்ரி மஜ்த் இடிப்பு குறித்தான தனது தவறை ஒப்புக்கொள்ளப்போய் மாட்டிகிட்டு முழிக்கிறார்! நீங்கள் அவரவர் தம்மிடம் உள்ள தகவல்+புரிதலுக்கு ஏற்பவே பேச வாய்ப்புள்ளது என எண்ணக்கூடாதா? Doubting Thomas ஆக இருக்கிறீர்கள்!
//இப்படியெல்லாம் சொல்லிட்டா நான் ஒண்ணும் offend ஆயிட மாட்டேன்.//
ReplyDeleteமரியாதைக்குரிய தாங்களை offend செய்வது எனது நோக்கமல்ல. அப்படி நேர்ந்திருப்பின் மன்னிக்கவும். மற்றபடி அமெரிக்கா வந்த பிறகு ஈவேரா அவர்களை குறித்த புரிதல் மாறிவிட்டது, அதுதான் அந்த எழுத்தாளருக்கும் நேர்ந்திருக்கலாம். ஈவேரா பரப்பியது வெறுப்புணர்வு, அது தவிர்க்கப்படவேண்டியது. இட ஒதுக்கீட்டில் கூட BC, MBC இட ஒதுக்கீட்டை ஒழித்துவிட்டு கலப்புத்திருமணம் செய்யும் மக்களுக்கும் தலித்களுக்கும் மட்டும் இட ஒதுக்கீடு கொடுத்தால் மகிழ்வேன். ஆனால் திராவிட அரசியல் சூழலில் அது சாத்தியமே அல்ல என்பது தெரியும்.
கடைசியாக தில்லியில் 70% பீ அள்ளுபவர்கள் பார்பனர் + உயர்சாதியினராம். https://www.youtube.com/watch?v=P7Xgc4ljHKM இது முன்னேற்றமா அல்லது பின்னேற்றமா? இந்த புரட்சிகூட (?) வடக்கேதான் சாத்தியமாகியிருக்கிறது, பெரியாரின் பக்தகோடிகள் கவனிப்பார்கள் என்று நினைக்கிறேன்.
நன்றி சார்!
நீங்கள் பெரும் கற்பனாவாதியோ என்னவோ? ஏன் நீங்களாகவே எதையாவது கற்பனை செய்து கொள்கிறிர்கள்? --//இதேமாதிரிதான் //பத்ரியுடன் கருத்து வேறுபாடு இருக்கலாம் // இது உங்களது சுத்தமான கற்பனை. உங்கள் கற்பனைக்கு என்னை ஆளாக்காதீர்கள்.?/
ReplyDelete//பத்ரி மீது மனசாட்சி இல்லாதவர் என்பது போல குற்றம் சாட்டினீர்கள்.// ஒரு புதுக் குற்றச்சாட்டு. அப்படியேதுமில்லை.. அப்படி ஏதும் இருந்தால் அவர் கேட்கட்டுமே .... நீங்கள் ஏன் இதில் இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள்?
//அவர் கருத்தளவில் நேர்மையானவர் என எண்ணுகிறேன். //
அவரவர் கருத்துக்கு அவரவர்கள் நேர்மையானவர்களே.
நான் அழுத்தமாகச் சொல்ல வந்த விஷயத்தை மட்டும் விட்டு விட்டீர்கள். மனித நேயம் இருப்போருக்கு மலம் அள்ள என்று ‘பொட்டுக் கட்டி’ விட்டவர்களைப் பார்க்கும் போது மனம் வருந்தும் என்பதே அது.
மிக மிக நன்றி சார்.
சார்
ReplyDeleteமனிதன் உருவான காலத்திலிருந்தே உயர்ந்தவன் தாழ்ந்தவன் பாகுபாடு உருவாகிவிட்டதோ? அதுதான் சாதியாக மாறியதோ? சாதிக்கு நதிமூலம் தெரியவில்லை. என்று தணியும் இந்த சாதிய தாகம்? ஒரு விஷயம் நான் கண்டிருக்கிறேன் . தாழ்ந்த குலத்தவருக்குள்ளேயே பாகுபாடு உண்டு. உயர்ந்த கீழ் சாதி , தாழ்ந்த கீழ் சாதி ...எப்படி !?
//ஈவேரா பரப்பியது வெறுப்புணர்வு. அது தவிர்க்கப்படவேண்டியது.//
ReplyDeleteநந்தவனத்தான் அவர்களே,
ஈ வே ரா பரப்பியது வெறுப்புணர்வு என்றால், அது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அவர் வாழ்ந்த காலம் போன நூற்றாண்டு. அவர் வாழ்ந்த காலத்தில் உள்ள சூழ்நிலையைப் பொறுத்துதான் நாம் அவர் கருத்தை மதிப்பிட வேண்டும். அவர் வாழ்ந்த காலத்தில் ஆற்று நீரை கூட கீழ் சாதியினர் குடிக்க அனுமதிக்கப் படவில்லை. அதை கருத்தில் கொள்ளவும். அந்த காலத்தில் நீங்கள் இருந்திருந்தால் கூட உங்களுக்கும் அவர்கள் மீது வெறுப்புணர்வு தான் இருந்திருக்கும். இந்த ஈ வே ரா இப்போது இருந்திருந்தால், அவர் கருத்து இப்படி இருந்திருக்காது என்று நான் நினைக்கிறேன்.
Dr. Babasaheb Ambedkar (English) என்ற movie-யை youtube இல் பாருங்கள். அப்போது உங்களுக்கு புரியும். ஈ வே ரா காலத்து கொடுமையை.
சானல் செய்தியில் காட்டுகிறார்கள், ஜெயலலிதாவின் தெருவில் உள்ள படத்தை தமிழர்கள் வணங்குகிறார்கள் கோவிலில் எப்படி சாமி சிலையை வணங்குகிறர்களோ ஆதே மாதிரியே 66 கோடி மோசடி செய்து சம்பாதித்த சர்வாதிகாரியை தமிழகத்தில் வணங்குகிறார்கள். இதுவும் பார்ப்பான் சொல்லியா செய்கிறார்கள்!
ReplyDelete