*
I.S.L. 2014 அதிகமாகவும் பார்க்கவில்லை. அந்த அளவு அப்போது ஆர்வமில்லாமல் போனது. ஆனால் இந்த லீக் விளையாட்டுகளில் கண்ணில் தென்படுமளவிற்கு கால்பந்து விளையாட்டு அங்கங்கு கண்ணில் படுகிறது மகிழ்ச்சியளிக்கிறது. ஏதோ சினிமாக்காரர்கள், கிரிக்கெட் விளையாட்டுவீரர்கள் தயவில் கால்பந்து விளையாட்டும், கபடியும் தொலைக்காட்சிகளில் வருகின்றன. பெரிய அதிசயம் தான். கால்பந்து விளையாட்டுன்னு ஒண்ணு இருக்குன்னு சின்ன வயசு பிள்ளைகளுக்கும் தெரிய வந்திருக்கு. தொடரட்டும்.
கால்பந்து பார்ப்பதில் ஒரு குறை எனக்கு. யார் பெயரும் தெரியவில்லை. வெளியூர் ஆட்டக்காரர்கள் மட்டுமல்ல... நம்ம ஆளுகளும் யாரும் தெரியவில்லை. பரிச்சயமில்லாத முகங்கள் ... யார் யார் எப்படி விளையாடுவார்கள் என்பதும் தெரியாமல் ஆட்டத்தைப் பார்ப்பதில் விறுவிறுப்பு மிகவும் குறைந்து விடுகிறது. பெயர் தெரிந்த விளையாட்டுக்காரர்களும் இணைந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
சென்ற ஆண்டு எப்படி இருந்ததோ... இந்த ஆண்டில் ஒவ்வொரு அணியிலும் ஆடுபவர்களில் ஐந்து பேராவது நம்மூர் பசங்களா இருக்கணும்னு ரூல் இருக்கு. தெரிந்தவர்களோ தெரியாத முகங்களோ விளையாட்டு நன்றாக போகின்றன. ஆனால் எதிர்பார்ப்புகள் மாறி மாறி நடக்கின்றன.
விளையாட்டு ஆரம்பிப்பதற்கு முன் கல்கத்தா, கோவா, கேரளா அணிகள் நன்றாக விளையாடும் என்று நினைத்திருந்தேன். அதோடு நம்மூர் என்பதால் சென்னை அணியையும் எதிர்பார்த்திருந்தேன். அதில் முதல் குண்டு முதல் நாள் முதல் ஆட்டத்திலேயே நடந்தது. சென்னைக்கு விழுந்த முதல் கோல் very unlucky goal. கோல் கீப்பர் பந்தைப் பிடித்து விட்டார். ஆனால் அவர் மேலும் பந்தின் மேலும் ஒரு டிபன்ஸ் ஆட்டக்காரர் விழுந்து தொலைக்க, பந்து நழுவி கோலுக்குள் சென்றது. ஆனாலும் அடுத்து இரு கோல்கள் விழுந்தன. முதல் கோல் இல்லாமல் இருந்திருந்தால் முதல் ஆரம்பம் 2:2 என்று சரியாக ஆரம்பித்திருக்கும். சரி...சென்னையைக் கழுவி ஊத்தி விட்ற வேண்டியது தான்னு நினைச்சேன். ஆனாலும் துளிர் விட்டுடிச்சி.
நான் நினைத்த நாலு அணிகளையும் விட புனே அணி நன்றாக வென்று கொண்டு வந்தன. கேரளா அணி கீழே போய்க்கொண்டிருந்தது. அதிக ஏமாற்றம் North east அணி தான். எழுந்திருக்கப் போவதில்லை என்று தெரிகிறது.
தெரிந்த இரண்டே இரண்டு கோச் நம்ம ஆளு கார்லோஸ். மும்பை அணியை நடத்துகிறார். இன்னொருவர் சிக்கோ. இருவரும் ப்ரேஸில் காரர்கள்.
இனி வரும் மோதல்கள் இன்னும் நன்றாக இருக்குமென நம்புகிறேன். தொடர்ந்து பார்க்கணும் - டாக்டரும் சொல்லிட்டார்ல ....
*
நீங்க உங்களுக்கு பிடித்த விளையாட்டுகளை பார்ப்பது மகிச்சியாக உள்ளது. கால்பந்து விளையாட்டுகளை தொலைகாட்சியில் காட்டுவது நல்லது. அக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை பெண்கள் ஜரோப்பிய கால்பந்து போட்டி 2017க்கு தகுதியடையும் போட்டி ஜெர்மனி- துருக்கி நடந்திச்சு. ஜெர்மனி அணி 7-0 வெற்றி பெற்றாலும் பர்தா அணியாமல் துணிவுடன் விளையாடிய துருக்கிய பெண்கள் அணியை தான் பாராட்ட வேண்டும்.
ReplyDeleteஆஹா ....மறுபடியும் புத்துணர்ச்சியோடு வந்து விட்டீர்கள் . கால் பந்தாட்டக்காரர்கள் போல நீங்களும் இனி விளையாடுவீர்கள். அதான் டாக்டரே சொல்லிட்டாருல....!
ReplyDeleteநானும் இதைப்பற்றி நண்பர்களிடமிருந்து அப்டேட் செய்துகொள்வதுண்டு இனி உங்கள் மூலமாகவும் அய்யா ... நான் தங்கள் தளத்திற்கு புதியவன் என்னுடைய வலைப்பூ ethilumpudhumai.blogspot.in
ReplyDelete