*
இது ஒருபுது யுகம். கிரிக்கெட் மட்டுமே கோலோச்சிக்கொண்டிருந்த நம்மூரில் புதியதாகத் தோன்றியுள்ள லீக் ஆட்டங்கள் புதிய விளையாட்டுகளையும் அதன் வீரர்களையும் மக்களிடையே பிரபலமாக்கிக் கொண்டு வருகின்றன. கபடி விளையாட்டும் தொலைக் காட்சியில் வரும்போது புதியதாக பலரும் விளையாட்டு ஆர்வலர்களாக ஆவதைக் காண முடிகிறது.
நான் பார்த்த ஒரு பெரிய மாற்றம்.... பலரும் விளையாட்டின் மீது புது ஆர்வம் காண்பிக்கிறார்கள். வயசான பலரும் shuttle cock விளையாடுவதும், இளைஞர்கள் அதுவும் சின்னப் பசங்க கால்பந்து விளையாடுவதும் சாதாரணமாகக் காணக்கூடிய காட்சியாகி விட்டது. பெரும் மகிழ்ச்சி. கால்பந்து விளையாட்டிற்குக் காரணம் I.S.L. போட்டிகள் என்றால் மிகையில்லை.
கால்பந்து போட்டிகள் இவ்வளவு தீவிரமாகப் பரவ காரணமாயிருந்தவர்களுக்கு பெருத்த நன்றியும் வணக்கமும்.
திருமதி நிடி அம்பானி
ஹீரோ கம்பெனி
மற்றும் பல ஆதரவாளர்கள்....
.... இவர்களோடு மிக மிக முக்கியமாக நமது கிரிக்கெட் வீரர்கள் - selling coal in New Castle என்பதற்கு எதிர்ப்பதமாக இவர்கள் வினையாற்றியிருக்கிறார்கள். அவர்கள் விளையாட்டு இந்த அளவு பிரபலமாக இருக்கும் போது அவர்களே அடுத்த ஒரு விளையாட்டை ‘வாங்கி’ அதனைப் பிரபலப்படுத்துகிறார்கள். நிச்சயம் அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். I.S.L-ல் அவர்களின் பங்களிப்பும், ஈடுபாடும் பலரையும் இந்த விளையாட்டின் மீதும் ஆர்வம் கொள்ள வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
கிரிக்கெட் வீரர்களோடு, நடிகர்களும் இதில் கலந்து கொண்டது பெரும் வீச்சை கால்பந்து விளையாட்டிற்குக் கொடுத்துள்ளது. Celebrity Cricket என்பது போல் celebrity foot ball என்றும் ஒன்று ஆரம்பித்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். அடடா ... கால்பந்து விளையாட்டு எங்கோ போய் விடும்! நடிகர்களை வைத்து ஒரு போட்டியை யாராவது ஆரம்பயுங்களேன் ... ப்ளீஸ்.
மேற்சொன்ன அனைவருக்கும் ஒரு கால்பந்து ரசிகனான எனது பணிவான நன்றியும், வணக்கங்களும், பாராட்டும்.
இன்னும் சில சிந்தனைகள்:
நிச்சயமாக I.S.L, 3 அடுத்த ஆண்டு நடக்கும். இப்போதுள்ள நியதிப் படி ஒவ்வொரு அணியிலும் 6 இந்திய விளையாட்டு வீரர்கள் இருக்க வேண்டும். அதைக் கொஞ்சம் மாற்றினால் இன்னும் ‘சூடு’ பிடிக்கும்.
6 இந்திய விளையாட்டு வீரர்கள் என்பதை 3 + 3 என்றாக்கலாம். அதாவது 6 இந்திய வீரர்கள் என்பதைவிட எந்த மாநிலத்தின் பெயரில் அணி இருக்கிறதோ அந்த மாநில வீரர்கள் மூவரும், மீதி மூவர் மற்ற மாநிலங்களிலும் இருக்கலாம். இன்னும் மூன்று பேர் வெளிநாட்டுக்காரர்களாக இருக்கலாம். ஆக விளையாடும் போது 3 மாநில வீரர்கள் + 3 வேற்று மாநில வீரர்கள் + 3 வெளிநாட்டு வீரர்கள் + 2 from any category
சென்னைக்கு எதிரே நமது மாநில மோகன்ராஜ் கொல்கத்தா அணியில் அழகாக ஆடிய போது, ஆஹா... இந்த ஆள் நம் அணியில் ஆடியிருக்கக் கூடாதா என்று தான் தோன்றியது.
இப்படி நமது மாநிலம், அடுத்த மாநில வீர்ர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்க I.S.L. தவிர அடுத்த போட்டிகள் பலவும் நடக்க வேண்டும். கிரிக்கெட்டில் ராஞ்சி போட்டி நடப்பது போல் inter state tournaments கால்பந்து விளையாட்டிற்கும் நடக்க வேண்டும். இப்போட்டியின் முடிவின் படி எத்தனை அணிகள் வேண்டுமோ அத்தனை அணிகளை, இதில் விளையாடும் வீர்ர்களை ஏலத்தில் எடுத்து அமைக்கலாம்.
எல்லோரும் சொல்லும் grass root level அளவிலேயே கால்பந்திற்கு இந்த வழிமுறை மூலம் சிறப்பிடம் கிடைக்கும்.
I.S.L. போல் மற்ற விளையாட்டிற்கும் பெரும் அளவில் போட்டிகளும் ஆரம்பிக்க வேண்டும்.
ஒரு கிழவனின் கவலை ...
இது பல இளைஞர்கள் கண்களிலும், கருத்துகளிலும் போய்ச் சேர வேண்டுமென்ற ஆவலில் இதனை எழுதுகிறேன்.
*
தருமி சார்! நலமா? கால் பந்து,குண்டு(கோலி)பேந்தா,கபடி கபடி,ஆமணக்கு மரத்துல அது காயா,பூவா அதுல ஒரு குச்சியை விட்டா ஒரு காத்தாடி,ஆற்றுல ஒரு துண்டை இரண்டு பசங்க அல்லது ஒரு பையன் இன்னொரு பாவாடை சேர்ந்து துண்டில் மீன் பிடிப்பது,கூட்டாஞ் சோறு,ஆத்துப்பாலத்தின் ஒரு புறம் காகித கப்பல் விட்டு மறுபக்கம் கப்பல் மிதக்கிறதா என்று பார்க்க ஆவல் என ஆட்டம் நல்லாத்தான் போயிட்டிருந்தது. இந்த கபில்தேவ் செய்த வேலை ஒரு கப்,ரவி சாஸ்திரி ஒரு ஆடி கார் என ரோட்டில் வலம் வர இந்திய இளைஞர்களுக்கு பிடிச்ச நோய் விடவேயில்லை. அரபிக்காரன்கிட்ட கிரிக்கெட்ன்னு சொன்னால் அப்படின்னா என எதிர்க்கேள்வி போடறான். உலகம் முழுவதும் வியாபித்து நிற்கும் கால்பந்தை வரவேற்போம். குறைந்த பட்சம் சோம்பேறியா நின்னு 10 அடி ஓடுவதை விட கால்பந்து ஓட்டத்துக்கு இணையான ஹாக்கியாவது புது பொலிவு பெறட்டும்.
ReplyDeleteநியாயமான கவலை தான். ரஞ்சி ட்ராஃபி போல உள்ளூர் கால்பந்து போட்டிகள் நிச்சயம் நல்ல பலனைத்தரும். கால்பந்து ரசிகனாக உங்களது கருத்துக்களை வரவேற்கிறேன்.
ReplyDeleteகிரிகெட்டை போற்றுகிறார்கள்,ஊடகங்களின் ஊக்குவிப்பும்,அரசின் உதவிகளும் கிரிகெட்டுக்கே.மற்ற விளையாட்டுகளுக்கு
ReplyDeleteஆதரவு கொடுப்பதே இல்லை என்று புலம்பியர்களுள் நானும் ஒருவன்.இருட்டு இருட்டு என்று புலம்புவதை விட உன்னால் முடிந்த ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வை,என்பதைப் போன்று கபடிக்கும் கால்பந்திற்கும் கிடைத்த இந்த வாய்ப்பு பாராடுக்குரியதே.அதன் காரணமானவர்களை உளம் திறந்து பாரட்டலாம்.வாழ்த்துகள்.
இருட்டு,இருட்டு என்று சொல்லிக்கொண்டிருந்த போது ஒருவன் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தாற்போல் கபடிக்கும்,கால்பந்திற்கும் உருவாக்கிய இந்த வாய்ப்பு மனதார பாராட்டுக்குரியது.
ReplyDeleteBetter they change the cup for the next tournament. looked so lousy!
ReplyDeleteராஜ நடராஜன் சொன்னது போல் உலகம் முழுவதும் வியாபித்து நிற்கும் கால்பந்தை வரவேற்போம்.தமிழில் கால்பந்து பற்றிய தருமி அவர்களது பதிவுகளே வர தொடங்கிவிட்டது! அரபிக்காரன் தங்க நாட்டு பெண்களை பர்தாவை தூக்கி எறிய அனுமதிப்பார்களாயின் அரபுநாட்டு பெண்கள் கால்பந்து அணி உலகில் முன்னணிக்கு போட்டியாளராக வரும்.
ReplyDeleteஒரு கிழவனின்(??) கவலை தீர எனது வாக்கு கால் பந்திற்கே. காலம் ஒருநாள் மாறும் உங்கள் கவலைகள் யாவும் தீரும்.
ReplyDeleteநன்றி
கோ
தருமி அவர்களது பதிவுகளே ...........ஏகாரங்கள் ....??
ReplyDeleteவேகநரி! பின்னூட்ட விளையாட்டு வீரர்கள் யார் யார் என பார்க்க வந்தேன். வளைகுடா நாட்டுப் பெண் ஒருவர் ஏதோ விளையாட்டில் கலந்து பரிசு பெற்றதை அறிந்தேன். எந்த நாட்டு பெண் என்று நினைவில் இல்லை.
ReplyDeleteநான் நல்லாத்தான் இருக்கேன்.மருத்துவ மனைப் பக்கம் போவதேயில்லை. என் மனைவி சமைக்கும் உணவே மருந்து. ஆனால் மனைவி உடல் நலன் குறித்த என் பேச்சை கேட்பதில்லையென்பதால் மருந்தே உணவு. எப்பொழுதாவது மருத்துவ மனை சென்றால் அதிகமாக போன தலைமுறை முக்காட்டுப் பெண் நோயாளிகளையே காண்கிறேன். இதற்கான காரணம் அவர்கள் வாழ்க்கை முறையாக இருக்கலாம். புதிய தலைமுறை பெண்கள் கார் ஓட்டுகிறார்கள்,உடற்பயிற்சி,உடல் அழகு கவனம் என இருப்பதால் கொஞ்சம் உடல் சுகாதார வாழ்க்கை வாழ்கிறார்கள் என நினைக்கிறேன்.
குவைத் 60000 பேர் உட்காரும் நவீன ஸ்டேடியத்தை உருவாக்கியிருக்கிறது.தருமி போன்ற ரிட்டையர்டு முன்னாள் உலக கால் பந்து விளையாட்டு வீரர்கள்
Ronaldinho Robert Pires Carles Puyol Gianluca Zambrotta Paul Scholes Deco Luís Figo Andriy Shevchenko Alessandro Nesta Steven Gerrard Mohamed Aboutrika ஒரு புறம்,மண்ணின் மைந்தர்கள் ஒரு புறம் என ஆரம்ப விழா கலை கட்டியது.
பெண்கள் விளையாட்டு ஏதாவது நிகழும்போது கேட்டு சொல்கிறேன்.
//தருமி அவர்களது பதிவுகளே ......//
ReplyDeleteகால்பந்து என்ற விறுவிறுப்பான விளையாட்டு உலகத்திற்கான அனைத்து மக்களுக்குமான அருமையான விளையாட்டு,உங்க கால்பந்து பதிவுகள் தமிழிலேயே பல வர ஆரம்பித்து தமிழர்களை போய்ச் சேரதொடங்கியாச்சு என்று தான் சொல்லவந்தேன்.
ராஜ நடராஜன்,
யோகா செய்து,நல்ல உணவு உண்டு ஆரோக்கியமாக இருக்கும் நீங்க எதற்கு மருத்துவமனை போகபோறிங்க!
வளைகுடா நாட்டுப் பெண்களும் அவர்கள் மதம் அனுமதித்தால் கால்பந்து விளையாடி மற்றய பெண்கள் மாதிரி சானை படைக்க முடியும்.