*
ஒரே ஒரு சின்னக் கேள்வி.
கேள்விக்கு முன்னால் ஒரு செய்தி.
சுனாமி வந்து ஜப்பான் சமீபத்தில் கஷ்டப்பட்ட போது கடைகளைக் கொள்ளையடிக்காமல் பொறுமையாக வரிசையில் நின்று பொருட்களைப் பெற்றதைத் தொலக்காட்சியில் பார்த்தோம். எங்கிருந்து வந்தது இந்த ஒழுங்கு? நம்ப முடியாத ஆச்சரியம்.
கேள்விக்கு இப்போது வருவோமா?
இந்தக் கேள்வி கேட்டதும் பலருக்கு கோபம் வரலாம். நானென்ன ஒரு ஜப்பான்காரனா?
வெள்ளம் வந்தது. குடியே மூழ்கியது. எதுவும் கிடைக்கவில்லை. பச்சைப் புள்ளைகளுக்குக் கூட குடிக்க பால் கிடைக்கவில்லை. தொலக்காட்சியில் தான் நான் பார்த்தேன். நமது தெருவில் பால் வித்த அதே மனுசப் பிறவிகள் 21ரூபாய் பாலை ஐம்பதுக்கும் நூறுக்கும் விற்றார்களாம். நாங்க அதிக விலை கொடுத்து வாங்கினோம் என்று கடைக்காரகள் சொல்லியிருக்கலாம். ஆனாலும் இந்த நேரத்தில் என்னிடம் கொள்ளையடிப்பது நமது வழக்கமான பால்காரர் தான். அவர் கேட்ட விலையைக் கொடுக்கணுமா?
எனக்குள் தோன்றியது.
பத்து பேர் சேர்ந்து ஏறி மிதித்து .... பாலை சரியான விலைக்குப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
யாரும் அப்படி செய்யவில்லை. ஏன்?
இப்படி செய்திருக்க வேண்டுமென நான் அன்று நினைத்ததும், இன்றதைச் சொல்வதும் பெரும் தவறோ?
அப்படிப் பால் வாங்கியவர்கள் எனக்கு ஒரு விளக்கம் தந்தால் நலம் ... நன்றி....
யாரும் அடிக்க வராதீர்கள். நானென்ன .....!!
*
உண்மையில் அப்படி செய்ய வேண்டுமென ஆவேசம் வந்ததுதான். வழக்கம் போல மனதுக்குள் பொரும மட்டுமே முடிந்தது. விலையை பொருட்படுத்தாது ஐந்தாறு பாக்கெட்டுகள் வாங்கி மற்றவர்களுக்கு கிடைக்காமல் ஒரு சில பிரகஸ்பதிகளையும் காணமுடிந்தது. அதிக விலைக்கு விற்றவனைவிட இவர்கள் மீதுதான் அதிக கோபம் வந்தது.
ReplyDeleteஒரிடத்திலிருந்து மற்றொர் இடத்துக்கு தண்ணீரில் பால் எடுத்து செல்ல ஆகும் செலவு அதிகம். குறிப்பாக சில இடங்களில் கைகளில்லேயே வெகு தூரம் தூக்கி செல்ல வேண்டியிருந்தது. அப்படி தண்ணீரில் நடந்து வெகுதூரம் தூக்கி செல்லக்சுடியவரின் சம்பளத்துக்கான செலவும் இந்த பாலில் சேர்ந்துவிடுகிறது. தேங்கியிருக்கும் மழை நீரினால் வண்டி வாகனம் ரிப்பேர் ஆகும் செலவும் இதில் சேரும். போதாக்குறைக்கு கரண்ட் கிடையாது. அதனால் பிரிஜ் வேலை செய்யாது. அதனால் பாலை இருப்பு வைக்க முடியாது. விற்காத பால் கெட்டுப்போகும். அதனால் அந்த கெட்டுபோகும் பாலுக்கும் சேர்த்து விற்கும் பாலில் விலை வைக்க வேண்டும். இப்படி பல காரணங்கள் அடுக்கடுக்காய் இருக்கின்றன. இதை தவிர காய்கறிகள் வரத்து குறைவு. இதனால் இதிலிருந்து கிடைக்கும் வருமானமும் கடைக்காரர்களுக்கு குறைந்துபோகும். அந்த வருமானத்தையும் ஈடுகட்ட வேண்டும். கடைக்காரர்களுக்கு ஒரு நாளைக்கு நடைமுறை செலவினம் ரூ 1000 செலவாகிறது என்றால்(இது மூலனத செலவு அல்ல என்பதை கவனிக்க) அந்த செலவை கண்டிப்பாக ஈடுகட்ட ஒரு நாளைக்கு ரூ1000 வருமானம் பார்த்தே ஆக வேண்டும். இல்லையென்றால் அது அவர்களுக்கு நட்டம். இது அந்த அந்த தொழிலில் இருப்பவர்கள் மட்டுமே அறிவார்கள்.
ReplyDelete///பத்து பேர் சேர்ந்து ஏறி மிதித்து .... பாலை சரியான விலைக்குப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.///
ReplyDeleteபால்காரனும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் அவனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள அவன் விலையை உயர்த்தி இருக்கலாம் அவனை ஏறி மிதிக்க சொல்லும் நீங்கள் நமக்கா சேவை செய்ய நியமித்த தலைவர்கள் நமக்காக உழைக்காமல் வீட்டில் இருந்த அவர்களை தூக்கி மிதிக்க சொல்லி இருக்கலாமே ஏழை என்றால் தீர்ப்பு வேறு மாதிரிதான் இருக்குமோ
எரிகிற வீட்டில் கொள்ளி பிடுங்குவதும் அதை நியாயப்படுத்துவதும் நடக்கும் விஷயங்களேகேட்டால் மனசாட்சியைத் துணைக்கழைப்பார்கள் ஜப்பான் வேறு இந்தியா வேறு. ஜப்பானிலும் ஊழல் இருக்கிறது. விதி முறைகளை மீறுபவர்களும் இருக்கிறார்கள் நான் ஜப்பான் சென்றிருந்தபோது பார்த்திருக்கிறேன்
ReplyDeleteவெளி ஊர்களில் இருந்தும்,வெளி மாநிலங்களில் இருந்தும்,ஏன் வெளி நாட்டில் இருந்தும் கூட, உதவ வருகிறார்கள், ஆனால் உள்ளூரில் இருப்பவனோ,லாபம் ஈட்டப் பார்க்கிறான்
ReplyDeleteகொடுமை ஐயா
ஊரே வெள்ளத்தில் சிக்கியிருக்க ஒருநாள் லாபத்தை விட்டுக்கொடுப்பதில் குறைந்து போகமாட்டார்கள்! அதிக விலைக்கு விற்றது தவறென்றே படுகிறது!
ReplyDeleteவரிசையில் நின்று வாங்க ஒழுங்கு இல்லாத ஜனங்கள் அடுத்தவன் செய்யும் தவறை தட்டிக் கேட்கும் தகுதி இல்லாதவர்கள். தனக்கு மட்டும் வேண்டும் என்ற சுயநலத்தால் ஒழுங்கை இழந்த பொதுமக்களுக்கு பால் விலையை ஏற்றி விற்கும் நபர்களை கண்டிக்கும் ஒழுக்கம் மட்டும் எப்படி வரும்? தனி மனித ஒழுக்கம் வளராதவரை நாடு எப்படி வளரும் ?
ReplyDeleteஎது எதற்கோ தாமாக முன் வந்து வழக்கு போடும் நீதி மன்றம் , ஏரியை திறப்பதில் செய்த குளறுபடியால் ஆயிரக்கணக்கில் செத்துப் போனதற்குக் காரணமான அத்தனை பேர் மீதும் வழக்கு போட ஏன் இப்போது தாமாக முன் வரவில்லை?
நீங்கள் இன்னும் பல கேள்விகள் கேட்கலாம். தருமிக்கு கேட்க மட்டுமே தெரியும் . பதில் யார் சொல்வது என்பது தெரியவில்லை.
வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களிடமே லாபத்தை சம்பாதிட வேண்டும், வெள்ளத்தால் வரும் பாதிப்புக்களை இவர்களிடமே எடுத்துவிட வேண்டும் என்று செயல்பட்ட விற்பனையாளர்கள், வரிசையில் நிற்க விரும்பாத பெரும்தொகை மக்கள், எல்லமே ரொம்ப கஷ்டம்தாங்க.
ReplyDelete//அதிக விலைக்கு விற்றது தவறென்றே படுகிறது!//
ReplyDeleteஅதை விட அதிக விலைக்கு வாங்கவும், அதைத் தடுக்க மக்கள் ஒன்றுசேராததும் .... அவையே என் கேள்விக்கான காரணங்கள்