*
போன பதிவில் நான் சொன்னதைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். ரொனால்டிகோ இந்த விளையாட்டுக்கெல்லாம் வரணுமான்னு
சொன்னேன். முதல் ஆட்டத்தில் அவ்வளவு சொதப்பலாக விளையாடினார்.
ஆனால் கோவா – பெங்களூரு
விளையாட்டு பார்த்த போது ஆஹா … ரொனால்டிகோ அசத்தி விட்டார். 7:2 என்பது கோல் கணக்கு.
ஏழில் ஐந்தை ரொனால்டிகோ மட்டும் போட்டார். முதல் மூன்றும் hat trick. ஆட்டத்தில் புலி
என்று இன்று காண்பித்தார்.
அதிகமாக ஓடவில்லை. காலுக்குள்
வந்த பந்தை காலுக்குள்ளேயே வைத்துக் கொண்ட லாகவம் … வாவ்! He showed his silky
play with the ball …. so soft … simple nicks .. kicks எல்லாம் இல்லை. Nicks மட்டும்
தான். எளிதாக பந்து கோலுக்குள் சென்றன.
ஒவ்வொரு கோலுக்கும் ஒவ்வொரு ஆட்டம் போட்டார்.
பார்க்க வந்தவர்களும் அவரை அரைத் தெய்வமாக்கி விட்டனர். அதாவது demi-godஆக்கி விட்டனர்.
கட்டாயம் கோவா அணியை
இறுதி விளையாட்டில் வெற்றி பெற வைத்து விடுவார் என்று நினைத்தேன். ஆனால் அடுத்த ஆட்டத்தில்
கொல்கத்தாவோடு விளையாடவில்லை. ஊருக்குப் போய் விட்டாராம்.
ஒரு வேளை நான் ” ரொனால்டிகோ இந்த
முதல் விளையாட்டோடு இந்த போட்டிகளில் விளையாடாமல் ஒதுங்கிக் கொண்டால் எனக்கு
“மகிழ்ச்சி”!” என்று எழுதியது
அவர் கண்களில் பட்டுவிட்டதோ?!
NO “மகிழ்ச்சி”! :(
*
பதிவை ரசித்தேன்.
ReplyDelete