Monday, August 08, 2016

903. தமிழ் நாளிதழ் இந்துவிற்கு நன்றியும் பாராட்டும்.





நம்மூர் பெயர்களை ஆங்கில ‘துரைமார்கள்” எப்படியெல்லாம் மாற்றினார்கள் என்பது பற்றி தமிழ் இந்துவில் சமஸ் என்ற பத்திரிகையாளர் நடுப்பக்கக் கட்டுரை எழுதியிருந்தார். அந்தப் பட்டியலில் மதுரை வரவில்லை. எனவே நான் என் வலைப்பூவில் ஒரு கட்டுரை “எங்க ஊர் பெயர் தெரியுமா?” என்று எழுதினேன். சரி.. அந்தப் பத்திரிகையாளரும் தெரிந்து கொள்ளட்டும் என்ற சாதாரண நோக்கில் அதை அவரது மெயில் முகவரிக்கு இரவில் அனுப்பினேன். அடுத்த நாள் காலையிலேயே அவரது பதில் எனக்கு வந்தது. அதில் என் கருத்தை ‘ஆசிரியருக்குக் கடிதங்கள் ’பகுதியில் அச்சிடுகிறோம் என்ற தகவலுடன் பதில் எழுதியிருந்தார். 

இதில் நான் மிகவும் ஆச்சரியப்பட்ட விஷயம் என்னவெனில், வேலைப்பளு அதிகமாக இருக்கும் ஒரு பத்திரிகையாளர் என் கட்டுரையை வாசித்து அதற்கு உடனே பதிலும் அனுப்பிய வேகம் தான். 


நானும் ஒரு பதில் எழுதினேன். நமக்கு வால் கொஞ்சம் நீளம் தானே…. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இன்னொரு விஷயத்தையும் அவர் காதிற்குக் கொண்டு போனேன். 


நமது பதிவர்-நண்பர் பிரபு ராஜதுரை குஜராத்தில் தலித்துகளின் போராட்டம் ஒன்றைப் பற்றிக் குறிப்பிட்டு இதை நமது ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன என்று கவலையாக முகநூலில் எழுதியிருந்தார். அதைக் குறிப்பிட்டு சமஸ் அவர்களுக்கு என் பதிலில் சொல்லியிருந்தேன். 


அடுத்த ஆச்சரியம் … இந்தக் கடிதத்திற்கும் உடன் பதில் வந்தது. வரும் திங்களன்று மருதன் என்பவர் இதைப்பற்றிய கட்டுரை ஒன்று தமிழ் இந்துவில் வரும் என்ற தகவலையையும் தெரிவித்திருந்தார்.


தமிழ் இந்துவிற்கு நன்றி. நமது மாநில ஊடகங்கள் இதை இருட்டடிப்பு செய்த போது அதைப் பற்றிய கட்டுரையை மட்டுமல்லாது, இந்தப் போராட்டத்தைப் பற்றி அமெரிக்க The Newyork Times என்ற செய்தித் தாளில் வந்துள்ள தலையங்கத்தையும் தமிழில் மொழிபெயர்த்துப் போட்டிருக்கிறார்கள். மீண்டும் சொல்கிறேன். தமிழ் இந்துவிற்கு நன்றி. அதனோடு கட்டுரை எழுதிய மருதனுக்கும் எமது பாராட்டுகள்.


ஆனாலும் இதிலும் ஒரு சின்ன வருத்தம் உள்ளோடி உள்ளது. மருதன் கட்டுரையிலும், அமெரிக்க ஆங்கிலச் செய்தித்தாளிலும் இந்த “ஆசாதி கூச்” (சுதந்திரத்திற்கான நடைப்பயணம்) எவ்வளவு முக்கியமானது என்று எழுதியிருந்தாலும் இப்போராட்டத்தின் ஆணிவேரான தலித்திய பரிதாபகர நிலை பற்றி கொடுத்த முக்கியத்துவத்தை விட எப்படி இந்த ப் போராட்டம் மோடி இது வரை கண்கட்டி வித்தையாகக் காட்டிக் கொண்டிருக்கும் ‘குஜராத் மாடல்’ என்பதை உடைத்து நொறுக்கி விட்டது என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். 

 “குஜராத்தை ஒரு கனவுப் பிரதேசமாக, இந்தியா முழுமைக்கான ஒரு வலுவான உதாரணமாக முன்னிறுத்தியவர் அவர்தான்.(மோடி). இப்போது நம் கண்முன்னால் அந்தப் பெருங்கனவு சரிந்து கொண்டிருக்கிறது.” 
ஆனால், மருதனின் இந்த வரிகளை விட …

 “மேல்சாதி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, மெய்யான சுதந்திரத்தை அடைய வேண்டும் என்னும் எளிமையான கனவு இதில் புதைந்திருக்கிறது.” என்ற மருதனின் வரிகளே முக்கியம். 


 இன்னொரு “மன்றாட்டு”: தலித்துகளை மேம்படுத்த வேண்டும் என்று உழைக்கும் இடதுகளும், தலித்துகளுக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்று உழைக்கும் திருமாவளவனும் மருத்துவர் கிருஷ்ணசாமியும் ஒரே ஒரு நோக்கத்தில் செயல் பட்டு வெற்றி பெற்றால் மட்டுமே தலித் மக்கள் உயரமுடியும். அதைச் செய்யுங்கள் என்று அவர்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். 


தலித்துகளின் முதல் வேலை … தலையில் சமூகத்தால் கட்டப்பட்ட, தங்கள் பாரம்பரிய, தரம் தாழ்ந்த வேலைகளை விட்டு அவர்கள் விரைவில் வெளியேற வேண்டும். இது ஒன்று மட்டுமே அவர்களை உய்விக்கும் ஒரே வழி. 


தலித் நலம் பற்றி நான் எழுதிய சில பதிவுகளில் இக்கருத்தை மட்டுமே முன்னணியில் வைத்து இதுவரை எழுதியுள்ளேன். 

அந்தக் கட்டுரைகள் கீழே ….. 

http://dharumi.blogspot.in/2016/05/blog-post.html http://dharumi.blogspot.in/2005/06/16_03.html http://dharumi.blogspot.in/2013/02/637.html http://dharumi.blogspot.in/2012/10/597_15.html http://dharumi.blogspot.in/2012/10/596.html http://dharumi.blogspot.in/2011/06/509.html    IN THE HINDU
http://dharumi.blogspot.in/2010/09/438.html http://dharumi.blogspot.in/2006/08/174-if-i-were.html http://dharumi.blogspot.in/2005/11/110.html http://dharumi.blogspot.in/2005/07/25.html








 *






11 comments:

  1. My previous post - a video - is related to this post. better see that also.

    ReplyDelete
  2. நண்பர் தருமிக்கு,
    எழுத்தாளர் சமஸ் அவர்களுக்கு தாங்கள் எழுதிய கடிதமும், மின்னல் வேகத்தில் அவர் எழுதியிருந்த பதிலும் தமிழ் இந்துவில் தங்களுடைய கருத்தை வெளியிட்டதும், உடனே, அவருக்கு ஒரு வேண்டுகோளுடன் அவருக்கு நீங்கள் தெரிவித்ததும், அதற்கும் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் பதில் அனுப்பி இருந்ததும் மகிழ்ச்சியூட்டும் வியப்பைத் தருகின்றன.
    இன்றைய இந்தியாவில் அழுகி நாற்றமெடுக்கும் சமுதாயப் பிரச்சனையான அப்பாவி தலித் சகோதர சகோதரிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; அவர்களின் நேரடிப் போராட்டம் வெற்றி பெறவேண்டும் என்ற தங்களது ஆதங்கம் நன்றாகவே புரிகிறது.

    ReplyDelete
  3. ‘ஆசிரியருக்குக் கடிதங்கள் ’பகுதியில் அச்சிடுகிறோம்----லிங்க் ப்ளீஸ்

    My previous post - a video - is related to this post. better see that also. which video?

    ReplyDelete
  4. இவ்விஷயத்திலும் அரசியல்வாதிகள் ஆதாயத்தைத்தான் தேடுகின்றார்களே தவிர, முடிவு காணவேண்டும் என்பது அவர்களது எண்ணமல்ல என்பதை அவர்களது செயல்கள் உணர்த்திவிடுகின்றன.

    ReplyDelete
  5. which video? -- https://dharumi.blogspot.in/2016/08/meet-jignesh-mevani-man-behind-current.html

    லிங்க் ப்ளீஸ் --- the first phtoto inthe post.not much anyway!

    ReplyDelete
  6. /’தரம் தாழ்ந்த’ வேலைகளை விட்டு அவர்கள் விரைவில் வெளியேற / ’தரம் தாழ்ந்த’ வேலைகளை பட்டியல் இட்டால் எல்லாருக்கும் உபயோகமாயிருக்கும்.

    ReplyDelete
  7. selvaraj sermathi

    இதற்கெல்லாம் பட்டியல் கேட்கும் அளவிற்கு அவ்வளவு “உயரத்திற்கு” போய் விட்டீர்களா? மகிழ்ச்சி!

    ReplyDelete
  8. அதுபோல் தரம்தாழ்ந்த வேலைகள் இந்தியவிற்கே உரியனவா?

    ReplyDelete
  9. இந்தியாவில் மட்டும் தான் இழிவான தொழில்கள் இந்த சாதிக்காரனுக்கு என்று தலையில் கட்டப்பட்டு விட்டன என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன?

    ReplyDelete
  10. இழிவை மனதில் இருந்து முதலில் மாற்றவும்...

    ReplyDelete
  11. யார் மனதிலிருந்து …?
    உங்களால் முடியுமா?

    அதை மனதிலிருந்து எடுத்து விட்டு அந்த ’இழிந்த’ வேலைக்குச் செல்ல நீங்கள் தயாரா?

    ReplyDelete