*
RAMESH KUMAR
*
தருமி அவர்கள் எழுதிய, “மதங்களும், சில விவாதங்களும் “ படித்தேன். மதம்/ இறைவன் என்ற கோட்பாட்டினை நோக்கி கேள்வியை முன்னிறுத்த கூடிய கட்டுரைகளின் தொகுப்பு. பிறப்பால் கிருத்துவராக இருந்தாலும், மத கோட்பாடுகளின் மீது ஏற்பட்ட சாதாரண கேள்விகளால், பல்வேறு படிநிலைகளை கடந்து… இன்று நாத்திகராக மாறி விட்டார்.
சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக, தன்னுடைய மனதில் கேள்விகளுக்கு விடை தேடிய பயணத்தின் வடிகாலாகவே, இந்நூலை வடித்திருக்கிறார். ” தான் எப்படி?? “ மதத்திலிருந்து வெளியே வந்தேன் எனபதை, முதல் பகுதியில் விளக்கம் அளித்துள்ளார். மற்றவர்களின் சில கட்டுரைகளை, இரண்டாவது பகுதியில் இணைந்துள்ளார் .மூன்றாவது பாகத்தில், இந்து, கிருத்துவம் மற்றும் மூஸ்ஸிம் மதங்கள் நோக்கிய கேள்வி கணைகளை முன்னெடுக்கிறார்.
இது முற்று பெற்ற நூலாக தெரியவில்லையென்றாலும், மதம் குறித்த மாற்று தேடலில்… நல்ல நூலாகவே காண்கிறேன்.
-----------------------------------------------------------------------------
எனக்கும்…. இந்து மதம் குறித்த நிறைய கேள்விகள், நித்தம் பாடாய் படுத்துகின்றன. தருமி அவர்களின் புரிதலும், என்னுடைய மனவோட்டத்திற்கு ஒத்திருப்பதாகவே எண்ணுகிறேன். என்னுடைய தேடுதலுக்கு இந்து, கிருத்துவம் மற்றும் மூஸ்ஸிம், பெளத்தம், சமண மதம் மற்றும் நாத்திகம் குறித்த புத்தகங்கள் ஏதேனும் இருப்பின் தெரியப்படுத்துங்கள்!!!
*
கடவுள் அழைப்பு பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நாட்டில், உங்க நூல் பலரின் உள்ளத்தை கவர்ந்து வருவது மிகவும் மகிழ்ச்சி.
ReplyDelete//முற்று பெற்ற நூலாக தெரியவில்லை//
ReplyDeleteமுற்று பெற்ற நூலாக்க முயன்று வருகிறேன்.
/முற்று பெற்ற நூலாக தெரியவில்லை//
ReplyDeleteமுற்று பெற்ற நூலாக்க முயன்று வருகிறேன்..... இந்து, மூஸ்ஸிம் மற்றும் கிருத்துவம் தாண்டி, சமணம், பெளத்தம் மற்றும் கான்பூசியம் என்ற எல்லைகளை விரிவுப்படுத்த வேண்டும் என்பதே என் எண்ணம்... சீக்கியத்தை கூட சேர்க்கலாம்.... (எந்த காலத்திலும், இவ்விவாதம் முற்று பெறுமா.... என்பதும் கேள்விக்குறியே???)