விடுதலைப் பயணம்
1. தொடக்க
நூல்
இஸ்ரயேல்
மக்களின் வரலாற்றை மனித இனத்தின் தோற்றத்துடன் இணைத்துக் காட்டுகின்றது. – எல்லா மதங்களுமே
அம்மதங்கள் தோன்றிய ஒரு குறிப்பிட்ட இடத்தையும், அதன் சாதி சனத்தையும் தான் மய்யப்
புள்ளியாக வைத்து கற்பனையின் அடிப்படைகளில் எழுதப்பட்ட என்ற என் விவாதத்திற்கு உரம்
சேர்க்கிறது மேற் சொன்ன வரிகள்: ஒரு குறிப்பிட்ட மக்களின் வரலாறே இங்கு ஒரு மதமாக உருவெடுக்கிறது.
கடவுள்
மனைதன் மேல் தொடர்ந்து கனிவு காட்டுகிறார் என்று இந்நூல் வலியுறுத்துகின்றது. இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகள் இவை; ஆனால்
வாசித்துப் பார்த்தால் நோவாவை மட்டும் விட்டு விட்டு மற்ற உயிரனங்கள் அனைத்தையும் தண்ணீரால்
இந்தக் கடவுள் அழித்தொழித்ததையும், பின்பு இது போல் இனி செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டு
அதன் பின் நெருப்பால்
சோதோம், கொமோராவினை அழிக்கிறார். தான் கொடுத்த உறுதிமொழியைக் கடவுள் இப்படியாக முறியடிக்கிறார்
நியாயாவதியான கடவுள்! இந்தப் பகுதியில் கடவுளை ஒரு “அழிக்கும்” கடவுளாக மட்டுமே பார்க்க
முடிகிறது. ஆனால் இந்த நூலில் கடவுள் கனிவு காட்டுகிறார் என்று கூறப்பட்டுள்ளது வேடிக்கையாகத்தான்
உள்ளது.
கடவுள் ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்து,
அவர் தம் வழி மரம்பினர் வரலாற்றில் தாமே செயல் பட்டுமீட்புப் பணியைத் தொடர்ந்தாற்றுகிறார்
என்று இந்த நூலின் துவக்க உரை கூறுகிஅது.
***
விவிலியத்தில் வரும்
சில வசனங்களும், என் கேள்விகளும்
1:
16 கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார்.
பகலை
ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும்,
இரவை
ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும்
மற்றும்
விண்மீன்களையும் அவர் உருவாக்கினார்.
எனது
கேள்வி: இரவை
ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பு ..அது என்ன? நிலவையா சொல்கிறார்கள்?
1:30 – பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்
என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
2:5 --
வயல்வெளியில் எவ்விதச் செடியும் முளைத்திருக்கவில்லை.
எனது கேள்வி: முதலில் ‘அவ்வாறே ஆனது” ஆனால் இரண்டாம் வசனத்தில்
எவ்வித செடியும் முளைத்திருக்கவில்லை.????
நோவா வெள்ளப் பெருக்கின் முடிவில்
…
7:23 மண்ணில் உயிர் வாழ்ந்த அனைத்தும் அழிந்தன. .. நோவாவும் அவருடன் பேழையில் இருந்தவர்களுமே எஞ்சி
இருந்தனர்.
நோவா பலி செலுத்திய பிறகு …
8: 20, 21 மனிதரை முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்க மாட்டேன்
. … இப்போழுது நான் செய்தது போல் இனி எந்த உயிரையும் அழிக்கவே மாட்டேன்.
என் கேள்வி: எல்லாவற்றையும் அழித்தவர்
தனது இரண்டாம் யோசனையில் (on second
thoughts) இனி இப்படியெல்லாம் செய்ய மாட்டேன் என்று ஒரு சபதமெடுக்கிறார். மனித சிந்தனை
போலவே உள்ள ஒரு கற்பனை இது.
9: 11 நோவா வெள்ளப் பெருகிற்குப் பின் …
சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால்
மீண்டும் அழிக்கப்படாது.
அப்படியா? உடைக்கப்படுவதற்காகவே
உறுதிமொழிகள் மனிதர்களால் மட்டுமல்ல கடவுளாலும் கொடுக்கப்படுகிறது போலும்!
17: 10, 11 உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்து கொள்ள
வேண்டும். …இதுவே உங்களுக்கும் எனக்குமிடையே
உள்ள உடன்படிக்கையின் அடையாளம்.
எப்படி ஏற்பாட்டில் கூறப்பட்ட ஒரு கட்டளை கிறித்துவத்தில்
ஒதுக்கி வைக்கப்பட்டது.
19: 5 (சோதோமின் தீச்செயல் என்ற தலைப்பில்
வரும் ‘கதை’ மிகவும் விரசமான ஒன்றாக உள்ளது.) லோத்தைக் கூப்பிட்டு, “இன்று இரவு உன்னிடம்
வந்த ஆடவர் எங்கே? நாங்கள் அவர்களோடு உறவு கொள்ளுமாறு அவர்களை எங்களிடம் கொண்டு வா”
என்றனர்.
இதற்கு லோத் ஆண் தொடர்பில்லாத தன்
இரு புதல்வியரை அதற்குப் பதிலாகத் தயாராக இருக்கிறார்.
மிக மட்டமான கதை. இந்துப் புராணங்களைப் பார்த்து
கிறித்துவர்கள் முகம் சுழிப்பதுண்டு. இக்கதை பற்றி எத்தனை கிறித்துவர்களுக்குத் தெரியுமோ…
தெரிந்த கிறித்துவர்கள் இதற்குக் கொடுக்கும் விளக்கம் என்னவோ?!
19: 12-22 சதையுள்ள எந்த உயிரும்
வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. என்று 9:11ல் கடவுள் வாக்களித்தார். ஆனால்
இங்கு நெருப்பால் சோதோம், கொமோராவினை நெருப்பினால் அழிக்கிறார்.
எதற்காக அழிக்கிறார்… ஏன் அழிக்கிறார் போன்ற
கேள்விக:ளைக்
கேட்பதே விரையம் தான். இதெல்லாம் கடவுளுக்கு just like that மட்டும் தான் போலும். அதே
போல் அவர் அழித்ததைத் திரும்பிப் பார்த்ததால் பாவம் அந்த லோத்தின் மனைவி. உப்புத்தூணாக
மாறினாள். எல்லாம் நம் அகல்யா கதை போல் இங்கு இன்னொரு கதை. புராணங்களின் அடி மட்ட அழுக்குகள்!
இதன் பின் வரும் ஆபிரகாமின் கதை அடுத்த ஒரு மிகக்
கேவலமான கதை. (முந்திய பதிவில் அதைப் பற்றி எழுதியாகி விட்டது. 20 அதிகாரம்.)
47: 22 அர்ச்சகர்களின் வயல்களை மட்டும் அவர் வாங்கவில்லை.
ஏனென்றால், பார்வோன் அவற்றை அவர்களுக்கு மானியமாகக் கொடுத்திருந்தான்.
ஊருக்கு ஊர் இதே கதை
தான் போலும். அர்ச்சகர்கள் என்றாலே மானியம் தானா?
*
இந்து மதக் கதைகளுக்குள்ளும் இதேமாதிரி பல ஒற்றுமைகள் தெரியும் போல் இருக்கிறதே
ReplyDelete