பாபா, நித்தி,
ஈஷா … என்ற மனித-சாமிகளைக் கும்பிடும் அப்பாவி மக்களுக்கு …………
நீங்கள் கட்டாயம் இன்று செய்தித்தாளில் வந்த இந்தக் கட்டுரையை வாசித்தே ஆக வேண்டும், (யார் என்ன சொன்னாலும் நீங்கள் உங்கள் மரத்தை விட்டு இறங்க மாட்டீர்கள்
என்பது தெரியும். இருந்தும் ஒரு முயற்சி ….)
இதையும் கூட
வாசிக்கலாம்.
இதில் முதல்
கட்டுரையை ஷோபா தே என்ற பெண் பத்திரிகையாளர் எழுதியுள்ளார். அதன் சில
பகுதிகளைத் தமிழில் தருகிறேன். நம்பிக்கையாளர்கள் மண்டையில் ஏறுதா என்று பார்ப்போம்:
முதல் பத்தியில்
அசாராம் என்ற சிறைத்தண்டனை பெற்றவனைப் பற்றி பேசுகிறார்: “இவன் முகமுடி போட்டுக்கொண்டு
ஏமாற்றிய கயவன் … 1971. ஆஷ்ரம் ஆரம்பித்து இன்று கோடிக்கணக்கில் ( zillions)
பணம் சம்பாதித்தவன்.
நாம்
ஏன் இவ்வளவு ஏமாளிகளாக இருக்கிறோம்? அடி முட்டாள்களாக இருக்கிறோம்? நமக்கெதற்கு இந்த
“அவதாரங்கள்”? அவர்களில் பலரும் ரெளடிகள் .. பித்தலாட்டக்காரர்கள்… கொலைகாரர்கள் …
காமக் களியாட்டக்காரர்கள். (Why are we so bloody gullible? Such monumental idiots? )
வெறும் மூன்றாம்
வகுப்பு வரை படித்து அஸ்ராம் இன்று கோடி கோடியாய் சம்பாதித்தது எப்படி? நாமும் ஏன்
தொடர்ந்து அவர்களிடம் ஏமாந்து கொண்டே இருக்கிறோம்?
“பாபா” என்பதன்
பொருள் தந்தை; ஒரு மரியாதையான சொல். காந்திக்குப் பயன்படுத்திய சொல். இன்று ஒரு காமாந்தகாரனுக்கும்
அதே சொல்!
மதங்களைப் பற்றிய
எனது நூலில் இரு பெருங்குறைகளை இந்து மதத்தினர் மீது வைத்தேன். ஒன்று: சாதிகளை ஆரம்பித்து வைத்து, காலங்காலமாகக் அவைகளைப்
போற்றிப் பாதுகாத்து வரும் ஒரே சமயம் இந்து மதம். இரண்டாவதாக முப்பது கோடித் தெய்வங்களைக்
கும்பிடுங்கள். போகட்டும், ஆனால் நம்மோடு பிறந்து நம் முன்னால் வளரும் வெறும் மனிதர்களைக்
கடவுளாக, அவதாரங்களாக ஆக்கி அவர்களைத் தெய்வத்திற்கு மேல் கும்பிட்டு வரும் அறிவீனம் பற்றியும் எழுதியிருந்தேன்.
எனக்குத் தெரிந்தவரை
நானறிந்து இந்து மதத்தின் இந்த மனிதக் கடவுள்களின் மேல் தோலை உரித்தால் வருவது முடை
நாற்றம்.
சத்திய சாயி
பாபா -- பல ஒழுக்கக்கேடுகள் .. கொலைகள்.. இறந்த
பின் அறை முழுவதும் தங்க பிஸ்கோத்துகள். இன்று அவையெல்லாம் எங்கேயோ? எங்கிருந்து அவ்வளவு பணம்? உழைத்தாலும் கிடைக்காத பணம். (உதவி செய்தார் என்று சொல்லி கள்ளத்தனத்தை நேர்மையாக்காதீர்கள்.)
நித்தியானந்தா
– பெரும் ஆச்சரியமூட்டும் விஷயம், இப்படி வெளிப்படையாக காணொளியில் அவர் நடிகையோடு போட்ட
ஆட்டம் பார்த்த பிறகும் கூட இன்னும் பெண்கள்
அவர் பின்னால் கூடி கும்மாளமிடுவதைப் பார்க்கும் போது அத்தனை ஆச்சரியம். எத்தனை வழக்குகள்
வந்தாலென்ன … நான் பரம பக்தன் என்று எப்படி
ஒரு கூட்டம் பின்னால் நிற்கிறது, அவர் “வளர்த்து” வரும் பெண்களின் அர்ச்சனை பார்த்துக்
கூட மக்கள் அசரவில்லையே!
கல்கி – புத்தி
நிதானமில்லாமல் பெரும் கூட்டமே அவரது ஆஸ்ரமத்தில் ஆடுவதைப் பார்த்தும் கூட்டம் குறையவில்லை. மர்மங்களுக்குப் பஞ்சமேயில்லை.
ஈஷா – புதிதாக
வந்த அடுத்த கொலைகார சாமி. முதல் மனைவி பற்றி அத்தனை கதைகள். இளம் பருவத்து வாழ்க்கை
பற்றியும் அத்தனை கதைகள்.
நிலத்தைச் சுருட்டியாகி விட்டது,
யானைத் தடம் அழிந்து போனது.
திடீரென்று நதிகளுக்கு வக்காலத்து வாங்கினார்.
அந்தச் சோலி முடிந்தது. அவர் ஆட்சி மட்டும்
ஸ்திரமாக நின்று விட்டது.
சும்மா சொல்லப்படாது.
நல்லா டான்ஸ் கிளப்புறார் நம்ம மாடர்ன் சாமியார்.......
மேல்மருவத்தூர்
– சாதா ஆசிரியர் அன்று … இன்று கோடீஸ்வரன். வருமானவரித் துறையில் இருந்து ரெய்ட் நடந்தது.
வரும் சிகப்புக் கூட்டத்திற்கு அதெல்லாம் கண்ணில் தெரிவதில்லை. ஆணே பெண் கடவுளாக மாறிய
அதிசயம்.
சங்கராச்சாரியார்
--
கொலையே நடந்து முடிந்தது. கொலையைத் தற்கொலையாக
மாற்றியது நீதி. ஆனாலும் பக்தியும் பாலோயர்களும் குறையவேயில்லை. சாதிப் பித்தா இல்லை
மதமா? ஏதோ ஒன்று!
பட்டியல் நீளம்
..
எத்தனை பட்டியல் கொடுத்தாலும் .. நம்பியோர்
நம்பியோரே. மாற்றம் ஏதுமில்லை. ஒரு சாமியார்
செத்தால் நாலு புது சாமியார்கள் முளைக்கிறான்கள். வேறு வழி ஏது.
வருபவன்களுக்கு எல்லாம்
அரசியல் துணை அமோகம். ஏதோ காசை அவர்கள் வெள்ளையாக்க முடியுமாம். சொல்கிறார்கள். கடைந்தெடுத்த
அயோக்கிய அரசியல்வாதிகளுக்கு இந்தப் பெரும் அயோக்கியவாதிகள் புகலிடமாகி விட்டனர். பிழைப்பவர்கள் அவர்கள் ... நம்பி பின்னால் போகும் பாவப்பட்ட மக்களின் கதையும் பெரும் தொடர்கதை தான்.
ஒரு சின்ன சந்தேகம் ... புட்டபர்த்தி சாயி பாபாவைக் கும்பிட்டவர்கள் அவர் செத்த பிறகு இப்போது என்ன செய்கிறார்கள்? அடுத்த ஆளுக்குத் தவ்வி விட்டார்களா? அல்லது அவர் படத்தை வைத்து சாமியாக்கி கும்பிடுகிறார்களா?
(இப்போது சாயி பாபாவில் முதல் பாபாவின் மீது புதிதாக பக்தர்கள் முளைத்து அதிகமாகி விட்டார்கள். நிறைய கோவில்கள் எங்கெங்கும் முளைக்கின்றன. செவ்வாய்க் கிழமை பிரசாதம் நல்லா இருக்குன்னு சொன்னாங்க. ட்ரை பண்ணிப் பார்க்கணும்! வர்ரீங்களா?)
*
Why nothing is written about 10th class fail SriSri? Why this special exception to SriSri to the power of 108..!?
ReplyDeleteநம்மில் பலரும் விழித்துக் கொண்டே தூங்குகிறார்கள்என்னதான் எழுதினாலும் அதையும் கடந்து போவார்கள்
ReplyDeleteநம்பள்கி ...
ReplyDeleteநல்லா தெரிஞ்ச நாலுபேரை வைத்து எழுதியது. மற்றபடி சாய்ஸ் எதுவும் கிடையாதுங்க ...
ஜி.எம்.பி. சார்,
ReplyDeleteநம்மில் பலரும் விழித்துக் கொண்டே தூங்குகிறார்களா அல்லது அப்படியே மயங்கிக் கிடக்கிறார்களா?
தருமி said...
ReplyDeleteநம்பள்கி ...
நல்லா தெரிஞ்ச நாலுபேரை வைத்து எழுதியது. மற்றபடி சாய்ஸ் எதுவும் கிடையாதுங்க ...
____________________
Thrumi...
Americaavil ippo athikama, "overaa" alambal pannu-vathau ivar thaan!--Ellam AVaa seyyum kaing-ariyam!
Sri to the power of 108 will beat hollow Jaggi--as Jaggi was NOT born from Thalai..
இந்த சாதிய வேற்றுமை “அந்த உயர்ந்த மக்களிடம்” இல்லை போலுமே. நீங்கள் சொல்வது போல் ஈஷா இல்லாமல் இருக்கலாம். நித்தியும் அப்படித்தான். திருச்சியில் ஒண்ணு சிறையில செத்துச்சே ... அதுவும் அப்படித்தான். மேல்மருவத்தூர், அந்த ‘அம்மா’ ஒண்ணு இருக்கே ... எல்லாமே தலையில இருந்து வந்த ஜென்மங்கள் இல்லையே!
ReplyDeleteTharumai:
ReplyDeleteEven people with substantial life-experiences seldom notice that while the media [print and visual] may throw flames and flowers [at times] on Eesha, Nithi, Thiruchiyil oru Anandha avthaaram, Ammma, Aayah etc but the media [print and visual] are careful 'enogh" NOT to throw a single flame on Sri to the power of 108
எனக்கு இந்த ஆளைப் பற்றி அதிகமாக தெரியாது. தாஜ்மகலுக்குத் தண்டம் கட்டினார் என்றொரு விசயம் உண்டல்லவா? வேறென்னவென்று தெரியாது. ஒண்ணு பண்னுங்களேன். நாலு வரி இந்த ஆளைப் பத்தி எழுதிடுங்க... போட்டுருவோம்.
ReplyDeleteஅப்படியே அந்த ”Sri to the power of 108”க்கு விளக்கமும் கொடுத்திருங்களேன்.
ReplyDelete