ஆச்சு...
நாலு வருஷம் முடிஞ்சி அடுத்த உலகக் கோப்பையும் வந்தாச்சு. 86ல் ஓசி டிவியில் பார்க்க ஆரம்பித்து .. . இன்னைக்கி 55 இன்ச் அகலத்தில் பார்க்கத் தொடர்ந்தாச்சு.
முதல் தடவையாக உலகக் கோப்பையை 86ல் பார்க்கும் போது, விளையாட்டில் ரிப்பீட் வருமே அதைப் பார்க்கும் போது அன்று அத்தனை ஆச்சரியமாக இருந்தது. அதுவரை அப்படியெல்லாம் தொலக்காட்சியில் பார்த்ததே கிடையாதே.
14.6.2018 ஆட்டம் ரஷ்யாவில் ஆரம்பித்தது. அன்று சென்னை பயணம். திறப்பு விழா பார்க்க முடியாது போனது. ஆனால் முதல் ஆட்டமான ரஷ்யாவும். சவுதியும் மோதிய முதல் ஆட்டத்தை அடுத்த நாள் சென்னை போனதும் பார்த்தேன். ரஷ்யா நடத்தியதால்தான் அதற்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது என்றார்கள். ஒரு ஆட்டத்திலும் வெல்ல முடியாத அணி என்றார்கள். ஆனால் பசங்க கிளப்பி விட்டனர். 5:0 என்று அடுக்கடுக்காய் கோல் போட்டு சவுதியை வென்றார்கள். (சரி ... முதல் சுற்றில் தான் இப்படி என்றால் இரண்டாவது சுற்றிலும் அதே கிளப்பல் ஆட்டம் தான். எகிப்துவிற்கு 3 கோல் போட்டு வென்றது. இரண்டே ஆட்டத்தில் மொத்தம் போட்ட கோல்கள் 8!!)
முதல்
வாரம் .. முதல் சுற்று முடிஞ்சாச்சு.
இந்த
தடவை ஜெர்மனி, ஸ்பெயின், ப்ரேசில், ப்ரான்ஸ் என்ற நாலு அணிகளுக்குள் ஒன்றுதான் வெல்லும் என்பது பரவலான கருத்து. ஆனால் நடந்து முடிந்த முதல் சுற்றில் என்னென்னமோ நடந்து கொண்டிருக்கிறது. ரஷ்யா, விருந்தாளி என்ற முறையில் மட்டுமே போட்டியில் கலந்து கொள்கிறது என்றார்கள். ஆனால் முதல் இரண்டு ஆட்டத்திலும் அமோக வெற்றி. அடுத்து
ஸ்பெயின் போர்த்துகல்லுடன் விளையாடி 3 : 3 என்று ட்ரா மட்டுமே செய்ய முடிந்தது. இந்த ஆட்டமே ரொனால்டோவின் ராஜ்ஜியம் தான். முதல் ஹேட் ட்ரிக். கோலுக்கு அருகிலேயே இரண்டு தப்பாட்ட்த் தண்டனை ஷாட்கள் கிடைத்தன. வளைந்து நெளிந்து அழகாக கோலாகின; நடுவில் ஒரு பெனல்ட்டி ஷாட்.
அடுத்து
நம்ம ஆளுக ப்ரேசில் - நெய்மர் நம்ம பையன நினச்சி உட்கார்ந்தேன். சுவிட்சர்லாந்துடன் போட்டி. எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான். பந்து காலுக்கு வந்ததும் பையன் சில வினாடிகள் தியானத்தில் மூழ்கி விடுவது போல் இருந்தது. பந்து வந்ததுமே கொஞ்சம் யோசிப்ப்பது போலிருந்தது.
ஆனாலும் பையன் பாவம் தான். எப்போதும் மூன்று அல்லது நான்கு ஆட்கள் அவரை அரண் கட்டி நிற்கிறார்கள். அது பத்தாது என்பது போல் ஓடும் போது சட்டையைப் பிடித்து இழுக்கவே எதிராளிகள் தயாராக இருக்கிறார்கள். மூன்று அல்லது நான்கு முறை சட்டை இழுக்கப்பட்டு கீழே தள்ளப்பட்டார். He did not have any space at all. பாவம். ஆனாலும் ரஷ்யா 5 கோல் போட்ட்தைப் பார்த்த பிறகு ப்ரேசிலும் நாலைந்து கோல் சுவிட்சர்லாந்திற்குப் போட்டு விடும் என்று நினைத்து உட்கார்ந்தேன். 1 : 1 என்ற கோல் கணக்கு ரொம்ப உதைக்குது. எல்லாமே short passes தான். ப்ரேசிலும், நெய்மரும் எதிர்பார்க்கும் அளவிற்கு வரமாட்டார்களோ என்ற அச்சம் வர ஆரம்பித்தது.
ஸ்பெயின்,
ப்ரேசில் இரண்டும் இப்படி என்றால் அடுத்து மிக அதிகமாக எதிர் பார்க்கப்படும் ஜெர்மனி மெக்சிகோவிடம் 0 :1 என்ற கணக்கில் தோற்றது என்பது அடுத்த அதிர்ச்சியாக இருந்தது. அதோடு இதுவரை பார்த்த அனைத்து ஆட்டங்களிலும் மெக்சிகோவின் ஆட்டம் தான் எனக்குப் பிடித்தது. passes எல்லாமே சரியாக இருந்தன.
இரண்டு
அணி இப்படி போச்சேன்னு பார்த்தால் அர்ஜெண்டினா நிலை படு மோசமாகி விட்டது. ரஷ்யா சவுதிக்குப் போட்டது போல் நிறைய கோல்களை ஐஸ்லாந்திற்குப் போட்டு விடும்.... ரொனால்டோ ஹேட்ரிக் மாதிரி மெஸ்ஸி கோல் போடப்போகிறார் என்று உட்கார்ந்திருந்தால் கிடைத்த ஒரு பெனல்டி கிக்கை வெளியே அடித்து எல்லோரையும் அடித்து நொறுக்கி விட்டார் மெஸ்ஸி! ஐஸ்லந்தின் 7ம் நம்பர் ஆட்டக்காரர் மிக நன்றாக விளையாடினார். ஆனால் பாவம் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இல்லை போலும். பல முறை அவரது கோலடிக்கும் முயற்சி தப்பிப் போனது.1 : 1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா தப்பித்தது.
No comments:
Post a Comment