நேற்று ஒரு வங்கி சென்றிருந்தேன். மேலாளரின் அறையில் அமர்ந்து அவரிடம் ஒரு சின்ன ஐயம் கேட்டுக் கொண்டிருந்தேன். கல்லூரி மாணவி ஒருவர் அவரது தாயுடன் அந்த அறைக்குள் நுழைந்து தன் முதுகலை வகுப்பிற்காக கல்விக் கடன் வேண்டுமென்று கேட்டார். மேலாளர் இணைய தளம் ஒன்றின் பெயரைச் சொல்லி அதன் மூலமாகத்தான் கடன் உதவி பெற வேண்டும். அதில் நீங்கள் எந்த வங்கியைக் குறிப்பிடுகிறீர்களோ அந்த வங்கியின் மூலம் உங்களுக்குக் கடன் கிடைக்கலாம் என்று சொல்லி அனுப்பினார்.
அப்பெண் சென்றதும் நான் மேலாளரிடம் வங்கிக் கடன்கள் எல்லாமே மத்திய அரசின் பொறுப்பில் உள்ளதா என்று கேட்டேன். ஆம் என்றார். ஒவ்வொரு மாநிலத்திற்குமான எண்ணிக்கைகள் என்று ஏதாவது குறிப்பிட்டுள்ளார்களா என்று கேட்டேன். அப்படியேதுமில்லை என்றார். அப்படியானால் மொத்த வங்கிக் கடன் கொடுப்பதில் குஜராத்திற்கு 100 கொடுத்து நம் மாநிலத்திற்கு 10 மட்டும் கொடுக்கலாமே என்று கேட்டேன்.
என்னடா இந்த ட்ரவுசர்காரன் இப்படிக் கேட்கிறானே என்று யோசித்திருப்பார் போலும். இளையவர். நான் இருக்கும் இடத்திலிருந்து இதற்குப் பதில் சொல்ல முடியாது. வெளியே வேண்டுமானல் இதைப் பற்றிப் பேசலாம் என்றார் சிரித்துக் கொண்டே. நீங்கள் என்னவாக வேலை பார்த்தீர்கள் என்றார். சொன்னேன்.
அதோடு நீட் தேர்வைப் பற்றி கோடிட்டுக் காண்பித்தேன். அங்கு பொதுத் தேர்வுகள் நடக்கும் “அழகு” பற்றிச் செய்தித்தாள்களில் வந்த செய்திகளைச் சொன்னேன். அடுத்து, வினாத்தாளில் தவறான மொழிபெயர்ப்புகள் இருந்தால் அதைப் பற்றி எங்களுக்குத் தெரியாது என்கிறது தேர்வு மையம். எல்லாம் நாடு எங்கே போகிறது என்றே தெரியவில்லையே, ஐயா என்று சோகமாகச் சொல்லிவிட்டு வந்தேன்.
******
நமக்குத் தெரிந்தும், தெரியாமலும் பல மாற்றங்கள் நடந்து வருகின்றன. நீட் தேர்வு பற்றி அநியாயமாக பொய் சொன்ன பாதுகாப்பு அமைச்சர், தேர்வு நடந்தபோது நம்மூரில் நடந்த அநியாயங்கள், தேர்வுத்தாளில் இருந்த தவறுகள், அதற்குத் தன் கைகளை கழுவிக்கொண்ட மத்திய தேர்வு மையம் ... தொடர்ந்து பல தொல்லைகள். கேட்பாரில்லை ...
முன்பெல்லாம் ரயில் பெட்டிகளில் இல்லாதபடி இப்போது பல அறிவிப்புகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் உள்ளன. கேட்பாரில்லை ...
பல இடங்களிலும் இந்தித் திணிப்பு வன்மையாக நடைபெறுகின்றன. யாரும் கேட்பாரில்லை ...
அட.. இதையெல்லாம் விடுங்க. கைத்தொலைபேசி எடுத்தால் பல முறை இந்தியில் ஏதேதோ பேசுகிறார்கள். நடப்பது அவர்களது வியாபாரத்திற்காக. இருந்தும், நமக்குப் புரியாது என்று தெரிந்த போதும், நமக்கு அது எரிச்சலை அளிக்கும் என்று தெரிந்த பிறகும் இந்தியை இறுகப் பிடித்து நம்மை நோகடிக்கிறார்கள்.
சத்தமின்றி .. யுத்தமின்றி ...
வடக்கு வளர்கிறது ... தெற்கு தேய்கிறது .... யாரும் கேட்பாரில்லை ...
*
உண்மை,உண்மை,உண்மை. 1965, இந்தி எதிர்ப்பு போராட்டம்போல் மாணவர்கள் முன்னிலையில் நின்று, அரசியல் தலைவர்களின் துணையுடன்,வன்மையான போராட்டம் நடத்த வேண்டும். அன்றைய " உயிர் தமிழுக்கு, உடல் மண்ணுக்கு" என்ற உணர்வுபூர்வமான முழக்கம் நம்மை தட்டிஎழுப்பட்டும். இல்லையேல், ஒரே,நாடு, ஒரே மதம்,ஒரே பண்பாடு, ஒரே மொழி,ஒரே சாப்பாடு என்று ஒரே அடியாக நம்மை அடித்து, கடித்து விழுங்கிவிடுவார்கள். அதுதான் சாணக்கியதனத்துடன், அமைதியாக, நடந்துகொண்டிருக்கிறது. காலம் கடப்பதற்குமுன்னால், உடனே போராட்டத்தை ஆரம்பிப்போம்.
ReplyDeleteOne more Anti-Indian...!
ReplyDeletehttps://jayabarathan.wordpress.com/2011/11/04/anti-nuclear-power-activities/#comments
ReplyDeleteவடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! அணுமின் உலை எதிர்ப்பாளிகள்! அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்!
Posted on November 4, 2011