*
சத்தீஸ்கர் மாநிலம் பற்றிய சில குறிப்புகள்.
இந்தியாவில் சத்தீஸ்கர் |
சத்தீஸ்கர் மாவட்டம் |
மத்திய பிரதேசத்திலிருந்து பிரிந்த மாநிலம் சத்தீஸ்கர். காங்கிரஸ், பாஜக பிரதானக் கட்சிகள். பாஜகவின் கோட்டைகளில் இம்மாநிலமும் ஒன்று. பாஜக
முதல்வர் ரமண் சிங் தொடர்ந்து மூன்று முறை வென்று ஆட்சியில் இருக்கிறார். மொத்தம்
உள்ள 90 இடங்களில், பாஜக 49 இடங்கள், காங்கிரஸ் 39 இடங்களைக்
கடந்த சட்ட மன்றத்தில் கையில் வைத்திருந்தன.
மாநிலப் பின்னணி: பரப்பளவு 1,35,192 ச.கி.மீ.
மக்கள்தொகை 2.56 கோடி. பரப்பளவில் நாட்டில் 10-வது இடம். மக்கள்தொகையில் 17-வது இடம். வட மேற்கில்
மத்திய பிரதேசமும், மேற்கில் மஹாராஷ்டிரமும், தெற்கில் ஆந்திரமும், கிழக்கில் ஒடிஷாவும், வட கிழக்கில் ஜார்க்கண்டும் இதன் எல்லைகள். ஜிடிபி ரூ.3.26 லட்சம் கோடி. வளர்ச்சிவீதம் 6.7%. எழுத்தறிவு 70%.
ஆட்சிமொழி இந்தி. 27 மாவட்டங்கள். சட்ட மன்றத்
தொகுதிகள் 90. மக்களவைத் தொகுதிகள் 10. இந்துக்கள் 97%. மக்கள்தொகையில் 34% பழங்குடிகள்.
பொருளாதாரம்: கனிம வளங்கள் நிறைந்த சத்தீஸ்கரில் சுரங்கத் தொழில்
பிரதானம். பெரு நிறுவனங்களின் வேட்டைக்காடு என்ற பெயரும் உண்டு. நாட்டின் உருக்கு
உற்பத்தியில் 15% இங்குதான். ஆண்டுக்கு 54 லட்சம்
டன் உருக்கும், 6 லட்சம் டன் அலுமினியமும் உற்பத்தியாகின்றன.
நாட்டின் சிமென்ட் உற்பத்தியில் 20% பங்களிப்பு
இம்மாநிலத்துடையது. நிலக்கரி வளம் கணக்கிலடங்காதது. இரும்பு, சுண்ணாம்புக்கல், டோலமைட், பாக்ஸைட்,
வைரம் என்றெல்லாம் இங்கிருந்து கனிமங்கள் உலகம் முழுக்க
அனுப்பப்பட்டாலும் ஏழ்மை பீடித்திருக்கும் மாநிலம். 57.88 லட்சம்
ஹெக்டேரில் ஒருபோக சாகுபடிதான். சுமார் 70,000 ஹெக்டேரில்
மட்டும் இருபோக சாகுபடி. நெல், சோளம், பருப்பு
வகைகள், சிறுதானியங்கள், நிலக்கடலை,
சோயாபீன்ஸ், சூரியகாந்தி முக்கிய சாகுபடி.
விவசாயத்தையே 80% மக்கள் சார்ந்திருக்கிறார்கள்.
கிராமம் - நகரம்: தலைநகரம்
ராய்ப்பூர். பிலாய், கோர்பா, பிலாஸ்பூர்
உள்ளிட்ட முக்கிய நகரங்கள் உண்டு. மகாநதியின் படுகைப் பிரதேசம். சோன் நதியின்
உபநதியான ரிஹந்த், இந்திராவதி, ஜோக்,
அர்பா, ஷிவ்நாத் ஆகிய ஆறுகள் பாய்கின்றன.
மத்தியப் பகுதியில் உள்ள ராய்ப்பூர் – பிலாய் – துர்க் நகரங்கள் தொழில்மயமாகியிருக்கின்றன என்றாலும், தென்பகுதியில் வறுமை நிலவுகிறது. 45% மேற்பட்ட
நிலப்பரப்பு வனப்பகுதி. நகர்மயமாதல் விஷயத்தில் பின்தங்கிய மாநிலம். வறுமையும்
வேலைவாய்ப்பின்மையும் வசதிக் குறைவும் சேர்ந்து மாவோயிஸ்ட்டுகளை செல்வாக்கு பெற
வைத்திருக்கின்றன. மாநிலத்தின் பல வனப்பகுதிகள் அவர்களுடைய ஆதிக்கத்தின் கீழ்
இருக்கின்றன.
பேசுபொருள்: காங்கிரஸிலிருந்து பிரிந்துசென்ற முன்னாள் முதல்வர்
அஜீத் ஜோகியின் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜுடன்
கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது மூன்றாவது சக்தியாகிறது. ரமண் சிங் ஆட்சியில்
தொடர்ந்து தொடரும் பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்புகள் பெருகவில்லை. மாநிலத்தில்
ஜனநாயக சூழல் இல்லை. ஊழல் மலிந்த ஆட்சி ஆகியவற்றை காங்கிரஸ் பேசியது. பாஜகவோ
மாநிலத்தில் ஆற்றியிருக்கும் பணிகளையும் மாவோயிஸ்ட்டுகள் ஒடுக்கப்பட்டிருப்பதையும்
சுட்டிக்காட்டிப் பேசியது. மூன்றாவது சக்தியாக உருவெடுத்திருக்கும் அஜீத் ஜோகி
ஜெயிக்கிறாரோ இல்லையோ காங்கிரஸை காலிசெய்யும் வகையில் பேசினார்.
===
2018 தேர்தல் முடிவுகள்
மூன்று
முறையாக தொடர்ந்து ஆட்சியமைத்த ரமன் சிங்கிற்கு இம்முறை ஆட்சியமைக்கும் வாய்ப்பு
இல்லை.
90
தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வென்றது 15 இடங்கள் மட்டுமே. ஜனதா காங்கிரஸ் ஐந்து இடங்களையும் பகுஜன் சமாஜ் இரண்டு
இடங்களையும் வென்றுள்ளன. காங்கிரஸ் 67 இடங்களில்
வென்றுள்ளது. ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.
சத்தீஸ்கரில் காங்கிரசுக்கு 43% வாக்குகளும்
பாஜகவுக்கு 33% வாக்குகளும் ஜனதா காங்கிரசுக்கு 7.6% வாக்குகளும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 3.9% வாக்குகளும்
கிடைத்துள்ளன.
*
சத்தீஸ்கரைப் பற்றிய இந்த அறிமுகம் நூலை வாசிக்கும் ஆவலைத் தூண்டியுள்ளது. வாழ்த்துகள்.
ReplyDelete