*
செரீனா ... மூன்றாவது
போட்டியில் 5:1 என்றிருந்தும் தோல்வியுற்றது சோகம் தான். இன்னும் ஒரு க்ராண்ட் ஸ்லாம்
வெற்றி பெற்றால் அவருக்கான என் ஆதரவை முடித்துக் கொள்ளலாம் என்றிருந்தேன். முடியாமல்
போனது. கொஞ்சம் சோகம் தான்.
நம்ம ஆளு நடால்,
ஜோக்கோவிச் இருவருமே அரையிறுதி ஆட்டத்தை எளிதாக வென்றார்கள். ஸ்கோர் கூட ஏறத்தாழ ஒரே
மாதிரி. மூன்றே ஆட்டம் ... போட்டி இனிதே முடிந்தது.
இனி இவர்களுக்குள்
போட்டி. நடால் வெல்லட்டும், இன்னும் மூன்று க்ராண்ட் ஸ்லாம் பரிசுகள் (என் கணக்கில்)
அவருக்கு மீதியுள்ளது. வெல்ல வாழ்த்துகள்.
பெண்கள் ஒற்றையர்
ஆட்டம் ... அட உடுங்க... யார் ஜெயித்தால் என்ன!
சீனியர் legends
ஆண்கள் ஆட்டம் ஒன்று நடந்தது. அதிர்ஷ்டம் தான். பார்க்க நன்றாக இருந்தது. நரைத்த பெரிய
மீசை ஆளு அசத்தல். நல்ல sense of humour. அந்தக் காலத்தில் எப்படி ஆடியிருப்பாரோ? நானும்
இப்போது ரொம்ப வயசாயிருக்குமோன்னு நினச்சேன். 63 தானாம்! நம்ம பக்கத்தில நெருங்க முடியுமா?
*
No comments:
Post a Comment