*
பொன்னியின் செல்வன்,
சிவகாமி சபதம் கதைகளை வாசித்த சின்ன வயசிலிருந்தே எனக்கு நம்ம ஊரு மவராசாக்களை நினைத்தால்
பக்தி பெருகும். அவர்கள் மேல் அம்புட்டு மருவாதி எனக்கு. கோன் உயர்ந்தால் கொடி உயரும்
... கொடி உயர்ந்தால் மக்கள் உயரும்னு சொல்லியிருக்காங்களாமே.(கொஞ்சம் மாற்றி சொல்லியிருக்கேனோ
... பரவாயில்லை.) மருவாதி வருவதற்கும் அதான்
காரணம்.
அந்த மரியாதையின் நீட்சியாக இப்போதும் நம்ம அமைச்சர்கள் மேலும் எனக்கு ரொம்ப
மருவாதியா ஆகிப் போச்சு. அவுக நல்லா இருந்தாதேனே நாமளும் உயர முடியும். அவுக நல்லா
இல்லாட்டா நாமளும் நல்லா இருக்க முடியாதுல்லா? அதனால் அவுக நல்லா இருக்கணும்னு நான்
இல்லாத சாமியை எல்லாம் கும்புடறதுண்டு. என் தேச பக்திக்கே இது தான் முக்கிய காரணம்.
இப்படி இருக்கச்சே
... இன்னைக்கி நம்ம சீப் மினிஸ்டர் புதுசா ஒரு செய்தி சொன்னார். அதாவது வெளிநாட்டு
கம்பெனிகள் நிறைய நம் மாநிலத்திற்கு வருகிறார்களாம். அப்டி சொல்லிட்டு, இந்தியாவிலேயே
இது மாதிரி வெளிநாட்டு மக்கள் வியாபாரத்திற்காக வருவதில் நம்ம மாநிலம் இரண்டாம் இடம்
வகிக்கிறது என்று சொன்னார். அதில எனக்கு ஒரு சின்ன வருத்தம்.
நம்ம ஊர் வழக்கப்படி
எல்லா மாநிலத்திலும் தொழில் ஆரம்பிக்கணும்னா அந்த மொதலாளிகள் கட்டாயம் நம் மாநில அமைச்சர்களுக்கு
கமிஷன் கட்டாயம் வழங்கணும். அப்போது தான் கதவுகள் எல்லாம் திறக்கும். நெலமை இப்படி
இருக்கும் போது வெளியில இருந்து பணம் போடுற ஆளு எங்க கமிஷன் குறையா வாங்குவாங்களோ அங்க
தான கட்டாயம் போவாங்க. அப்படிப் பார்த்தால், நிறைய முதலீட்டாளர்கள் வர்ராங்க அப்டின்னா
இங்க கமிஷன் தொகை ரொம்ப கம்மின்னு தானே அர்த்தம். அதுனால் குறையா கமிஷன் வாங்கிறதுல்ல
நம்ம மாநிலம் இரண்டாம் இடத்தில நிக்கிது போலும்.
இந்த ஆங்கிளில்
யோசித்தேனா... அப்போதிருந்து எனக்கு ரொம்பக் கவலையாகப் போச்சு, நம்ம அமைச்சர்கள் குறையா
கமிஷன் வாங்கி ரொம்ப நட்டப் படுறாங்களே அப்டிங்கிற கவலை.
நம்ம அமைச்சர்கள்
என்ன இங்கே நீண்ட நெடுங்காலமாகவா இருக்கப் போகிறார்கள். இருக்கிற கொஞ்ச காலத்தில் அள்ளி
அமுக்கிப் போடாமல் சும்மா இருக்கிறார்களே என்ற கவலை எனக்கு. யாராவது அமைச்சர்கள்ட்ட
சொல்லி சீக்கிரமா எல்லாத்தையும் அள்ளி முடிச்சி செளக்கியமா இருக்கச் சொல்லுங்க.
அவங்க நல்லா இருந்தா தானே நமக்கும்
நல்லது. இல்லையா?
*******
இது எல்லாமொரு ஸ்பெகுலேஷந்தானே
ReplyDelete