*
அவன் கட்டை விரலை மட்டும் கொடுத்தான்.
இவர்கள் ஏன் உயிரையே கொடுக்கிறார்கள்?
குருகுலம் ..?
பாத்திமா என்ற பெண் ஐ ஐ டியில் தற்கொலை செய்து கொண்டதை எதிர்த்து என் முகநூலில் இதைப் பதிவிட்டேன். வந்த ஒரு பின்னூட்டம் இப்பதிவை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.
வந்த சில பின்னூட்டங்கள் கீழே .........
Avudaiyappan Arunachalam அவர்கள் துரோணர்களாக இருக்கும் வரை ஏகலைவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
Srini Vas அது அப்போ.. இப்ப விலைவாசி அதிகமாயிட்டுது
Vijayakumar Periyakaruppan இவர்களுக்கு கொடுத்தது போதும். அவர்களிடமிருந்து நமக்கானதைப் பிடுங்குவோம்!
Prakash Karath ஏகலைவனுக்கு நல்ல சிந்தனை தெளிவும் தன்மானமும் இருந்தது.
Nattarasan Nattarasan காலம்மாறவில்லை!
G Sam George //Srini Vas அது அப்போ.. இப்ப விலைவாசி அதிகமாயிட்டுது//
ஒரு மனசாட்சியற்ற கொடூரமான பதில் நீங்கள் சொல்லியிருப்பது. ...
Srini Vas G Sam George ஐயா, அந்த காலத்தில் கட்டை விரல் கேட்டதும் பெற்றதும் மஹா தவறு. எனக்கு ஒப்புதல் இல்லை. இருந்தாலும் அது அரசியல் ரீதியான முடிவு எனக் கட்டமைத்தார்கள்.. அதை விடுங்க..
இந்தப் பெண்ணிடம் எந்த ஆசிரியரும் உயிரைக் கேட்கவில்லை. அவராகவே எடுத்த அந்த முடிவு விபரீதம். ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஐஐடிக்குள் வந்து மூன்று மாதங்களில் அங்குள்ள போட்டிகளைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அங்கு சராசரி மாணவனே அதிபுத்திசாலி. ஆசிரியர்களும் அதற்குக் குறைவான மாணவர்களைக் கண்டிருக்க வாய்ப்பில்லை. நான் சொல்ல வருவது ஒரு ஆசிரியராக உங்களுக்குப் புரியுமென நம்புகிறேன்.
வெளியுலகம் அந்தப் பெண்ணுக்கு மனோதைரியத்தை வளர்க்கவில்லை. முதன் முதலாக ஒரு இஸ்லாமியக் குடும்பத்திலிருந்து மேற்படிப்பு படிக்க வரும் மாணவிக்கு அதிகப்படி ஆதரவு தந்து ஊக்குவிக்க வேண்டுமென்று அந்த ஆசிரியருக்குத் தெரிந்திருக்க வில்லை. அது அவர் தவறில்லை. ஐஐடிக்குள் வரும் இஸ்லாமியர்கள் மிகக் குறைவு. அதிலும் பெண்கள் அரிதினும் அரியவர்.
இந்த தற்கொலை சம்பவம் நட ந்திருக்கக் கூடாது. விதி. மற்றபடி ஆசிரியர்களையோ ஐஐடியையோ கழுவேற்றாதீர்கள். உங்கள் பதிவு தவறு. என் பதில் தவறுக்கான தவறு.
மூன்று பெண்களின் தகப்பனாக எனக்கு அந்த பெற்றோரின் வலி புரிகிறது. அவர்கள் இந்த இழப்பின் வலியிலிருந்து மீண்டு வர என் பிரார்த்தனைகள்.
இதயம் முழுக்க பிராமண வெறுப்பு கொண்டிருந்த என் ஆசிரியர்கள் சிலர் கூட என் மீது அன்பு பாராட்டினார்கள். அது போல் பிராமண ஆசிரியர்களும் மற்ற மாணவர்களை அன்புடனே நடத்தினர். அம்பேத்கர் முதல் அப்துல் கலாம் உட்பட எல்லோரும் அதை அனுபவித்து வளர்ந்திருக்கிறார்கள்..
ஆசிரியரைப் போற்றுவோம்.
G Sam George ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் சொல்ல முடியும். கொஞ்சம் நீண்டு விடும். அதற்கு முன் ... நீங்கள் தங்களையே உச்சாணிக் கொம்பில் உட்காரவைத்துக் கொண்ட குழுவில் ஒருவர். ஆகவே உங்கள் பதில் இப்படித்தான் இருக்க முடியும். So subjective ! ஆச்சரியமில்லை. அது தானே மனித இயல்பு. நம் முதுகு நமக்குத் தெரியாதல்லவா? இங்கே நான் .. கொஞ்சம் வித்தியாசம் .. பழிப்பவனும் நானல்ல... பழிக்கப்படுபவனும் நானல்ல ... logically i could be more objective than you, sir.
// அது அரசியல்
ரீதியான முடிவு// உங்களால் எப்படியெல்லாம் அந்தத் தப்புக்குக் கூட காரணம் கண்டுபிடிக்க
முடிகிறது. ஆச்சரியம். .. இயல்பு தானே!
// உயிரைக் கேட்கவில்லை.//
எவ்வளவு எளிதாகக் கடந்து விடுகிறீர்கள்! ஒன்று நிச்சயம். உங்களுக்குத் தெரியுமோ என்னவோ
.. துரோணர்களின் அந்தக் காலம் முடிந்து விட்டது.
தெரியாதா? (மன்னிக்கணும் .. அவசரப்பட்டு சொல்லி விட்டேன். அந்தக் காலம் இன்னும் அதிகக் கொடூரமாகத் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது. இன்னும் எத்தனை காலமோ உங்கள் ஆட்சி?)
// அங்கு சராசரி
மாணவனே அதிபுத்திசாலி// அப்பாடா ... ஒருவேளை அங்கு வரும் உங்க குழுவை மட்டும் சொல்லாமல்
பொதுவாகச் சொல்லியுள்ளீர்கள். நல்ல மனதிற்கு மகிழ்ச்சி. அங்கு வரும் மாணவர்கள் பெரு
முயற்சியெடுத்து. தங்கள் அறிவுப் புலமை மூலம் வருகிறார்கள். (வழக்கமான
“merit" பற்றிய விவாதம் இங்கே வேண்டாம்.)
நிச்சயம் குட்டை நெட்டை இருக்கலாம். குட்டையெல்லாம் போய் குதிங்கடா என்று எந்த வாத்தியானு(ரு)ம்
சொல்லக்கூடாது. இல்லையா?
//மாணவிக்கு அதிகப்படி
ஆதரவு தந்து ஊக்குவிக்க வேண்டுமென்று அந்த ஆசிரியருக்குத் தெரிந்திருக்க வில்லை. அது
அவர் தவறில்லை// மிகப் பெரிய தவறு நீங்கள் சொல்வது.
ஏட்டுப் படிப்பை மட்டும் தரும் ஓர் ஆசிரியன் அந்த வேலைக்குத் தகுதியில்லாதவன். குட்டையாக இருப்பவனை நிமிர்த்துவது அந்த ஆசிரியனின் பணி. I I T வாத்தியார் என்றாலும் ஓர் ஆசிரியன் எப்படியிருக்க வேண்டும் என்றி இதைச் சொல்கிறேன். I just quote: //. நான் சொல்ல வருவது ஒரு ஆசிரியராக உங்களுக்குப் புரியுமென நம்புகிறேன்.//
ஏட்டுப் படிப்பை மட்டும் தரும் ஓர் ஆசிரியன் அந்த வேலைக்குத் தகுதியில்லாதவன். குட்டையாக இருப்பவனை நிமிர்த்துவது அந்த ஆசிரியனின் பணி. I I T வாத்தியார் என்றாலும் ஓர் ஆசிரியன் எப்படியிருக்க வேண்டும் என்றி இதைச் சொல்கிறேன். I just quote: //. நான் சொல்ல வருவது ஒரு ஆசிரியராக உங்களுக்குப் புரியுமென நம்புகிறேன்.//
// விதி. // எது
உங்களைப் போல் பிறக்காததா?
////மற்றபடி ஆசிரியர்களையோ
ஐஐடியையோ கழுவேற்றாதீர்கள்.// ஏங்க? அது உங்க
ராஜ்யம் என்பதால் வரும் கோபமா? இந்தக் கோபம் உங்களுக்கு வருவதும் இயல்பு தானே!
// மூன்று பெண்களின்
தகப்பனாக எனக்கு அந்த பெற்றோரின் வலி புரிகிறது// இரண்டு பெண்ணின் தகப்பனாக எனக்கு
வலி மட்டுமல்ல .. கோபமும் வருகிறதய்யா?
இந்தச் சமுகம்
என் இன்னும் இப்படி சாதி வெறி பிடித்து, கழுசடையாக இருக்கிறதே என்ற கோபம்.
ஆசிரியர்கள் என்ற
நிலைக்கு மாறாக அன்றைய துரோணர்கள் இன்னும் வேறு வடிவில் உங்கள் ஐ.ஐ.டியில் மட்டும்
முளைத்து வளர்கிறார்களே என்ற கோபம்.
// அது போல் பிராமண
ஆசிரியர்களும் மற்ற மாணவர்களை அன்புடனே நடத்தினர்.// ஏன் ஐ ஐ டி ஆசிரியர்களுக்கு மட்டும்
அப்படி கொம்பு முளைத்து விடுகிறது என்ற கோபம்.
ஒவ்வொரு ஐ ஐ டியிலும் ஏன் தலித் மாணவர்களின் தற்கொலை
தொடர்ந்து நீடிக்கின்றது என்ற கோபம்.
ஏன் உங்கள் குழுக்காரன்
எவனும் அங்கே தற்கொலை செய்து கொள்ளாமல் எங்கள் பிள்ளைகள் மட்டும் கழுவேற்றப்படுகிறார்கள் என்ற கோபம்.
இது போல் வரிசையாக
பல கேள்விகளும் .. கோபங்களும் தொடர்கின்றன.
உங்களுக்கு நீங்கள் இருக்கும் கொம்பில் இருந்து பார்த்தால் இதெல்லாம் புரியாது. புரிந்தாலும் ஒப்புக்
கொள்ள மாட்டீர்கள்?
ஓர் ஆசிரியனாக சாதி பார்க்கும் ஈனப் புத்தி என்றும் என்னுள் எட்டிப்
பார்த்ததில்லை. Inferiority உணர்வுகளோடு தனித்து நிற்பவனை அழைத்து அணைத்தது மட்டுமே
உண்டு. அவர்கள் மீண்டு நின்றதைக் கண்டு ஆனந்தப் பட்ட நாட்களும் உண்டு.
ஆனால் நீங்கள்
சொல்வது போல் // ஆசிரியரைப் போற்றுவோம்.// என்பது எல்லா ஆசிரியர்களுக்குமானது
அல்ல. சாதிக் குழு ஆசிரியர்களைத் தூற்றுவோம்.
வசந்த தேவி அங்கே ஆசிரியர். அவர் கதை ஐ ஐ டி
நிறுவனங்களுக்கு ஒரு ”நல்ல” சாட்சி. இல்லையென்பீர்களா?
என்னுடன் வேலை பார்த்த தலித் நண்பனின்
மகள் முதுகலை முடித்து மிக நல்ல மதிப்பெண்களோடு ஆய்வு மாணவியாகச் சேர்ந்தாள். தொல்லைகள்.
அதை விட்டு விட்டு ஒரு பேராசிரியராகி, தன் ஆய்வை முடித்து பட்டம் பெற்றாள். எல்லாம்
உங்கள் குழுவின் சதிராட்டமும், கொடூரமும் தான் காரணங்கள். அவள் ஐ ஐ டி விட்டு வந்த
போது மிகவும் கோபப்பட்டேன் முதலில் - நல்ல வாய்ப்பைத் தவற விடுகிறாளே என்று. நல்ல வேளை அவள் எடுத்த முடிவு நல்லபடியாக முடிந்தது.
எனக்கு ஒரு சின்ன வருத்தம். இதை வெளியில் சொல்லக்கூடாது
தான். என் மன அழுத்தம் .. சொல்லி விடுகிறேன். என்னை ஒரு ஆசிரியர் தாழ்மைப்படுத்தி என்னை
தூக்குக் கயிற்றை நோக்கி நடக்க வைத்தால் .. போறதோ போறோம் .. அதுக்கு முன் முடித்து விட்டுப்
போவோம்னு நினைத்து ... தொங்குவேன் அப்புறம்!
*
Kathiresan Natarajan It is an invisible network in IITs and other so called elite institutes. It’s difficult to explain the experience. The students who get admission from SC/ST and minorities are above brilliant than average students from general categories then only they can get admission in IIT. For getting into IIT they should be above talented than general category. Then how they commit suicide? Here is how the invisible network or trick operates. Generally IITs questions will be asked from only from the class notes they are teaching not from reference books. Mostly problem solving type. General category students have aversion towards SC/ST and minority students. The general thinking that they come through reservations although they are more talented than average general category students. The same thinking exists among professors. For solving problem solving type questions group studies needed. The general category students easily form groups and exchange their notes and study materials and do group studies. For minorities and SC/ST students can not form group because of less number and afraid of their caste identity. Although they want to mingle among general group, the general students discuss bad about reservations and minorities all the time . This is a general trend in so called elite institutions. The Professors also indirectly support and encourage such kind of things. As a result, the SC/ST and minority students get isolated eventually. These students try to study themselves facing all these mental struggles and sometimes results in low scores in exams. IIT internal exams consists of assignments and problem solving which need group efforts. If they score low scores in internal exams then second level of bullying happens pointing reservations from both general category students and professors. There is no psychological counseling or support system in those institutes. These students undergoes lot of mental struggles. Only few people can withstand these high mental torture others will eventually will pushed to commit suicide. This is how suicide happens in those so called elite institutes of India.
ReplyDeleteA Prabhakar TheKa Kathiresan Natarajan சொல்றதைப் பார்த்தா, இத்தனை உளவியல் சிதைவுகளையும், சித்திரவதைகளையும் தாண்டி வளாகத்திலிருந்து உசிரோட அல்லது பைத்தியம் பிடிக்காம வெளிக்கிடுவதே பெரிய வேலையா இருக்கும் போலயே...
ReplyDeleteஅப்படியே வெளிய வந்தாலும் ஓர் அப்துல் கலாமத்தான் வெளியில வாழ்க்கையை ஓட்டணும் போலவே
A Prabhakar TheKa
ReplyDeleteKathiresan Natarajan but at that age with our own pre existing psychological issues could possibly be haunting us, on top of it this new issues added to that one, may no matter how bad arse person we are, still possibily be shaken up a bit psychically. so sad that we got to go through it! :(
Natarajan A Prabhakar TheKa Yes, I was too. If I was shaken by the mental pressure, then think about the magnitude of mental pressure these young students from poor or middle class family background face.
ReplyDeleteA Prabhakar TheKa Kathiresan Natarajan pretty scary to put up in that environment, man! 🙈
ReplyDeleteKathiresan Natarajan
ReplyDeleteA Prabhakar TheKa These young students know nothing about the cunning and cowardly environment they are going to enter. They are very innocent at their age. It’s difficult to handle these kind of mental torture unless they are grown up bold by parents to face these kind of situations or having some political awareness. Hence it’s essential to teach political awareness from the young age to those kids in addition to IIT coaching.
Srini Vas
ReplyDeleteI am not able to see Prabhakar's comments. Kathiresan நீங்க ஐஐடியில் படிச்சிருக்கீங்களா? எந்த ஐஐடி..
Srini Vas நான் ஐ ஐ டி பக்கம் போனதில்லைங்க. அதுனால நான் இதை ஒரு வேளை பேசக்கூடாது என்பீர்களோ?
ReplyDeleteKathiresan Natarajan
ReplyDeleteSrini Vas yes, I have studied in IIT. which IIT is irrelevant, all the IITs and so called other elite institutes the same trend.
Nandhini Venkat
ReplyDeleteUnbelievable response...kids should be prepared to face all the filth happening in all these so called high standard institutions?
A Prabhakar TheKa
ReplyDeleteNandhini Venkat read the above string of comments.. you will come to know what kind of situation they are facing.
ReplyDeleteNandhini Venkat
A Prabhakar TheKa read... படிச்சுட்டு தான் வந்தேன்
A Prabhakar TheKa
ReplyDeleteNandhini Venkat oh ok... so tragic, isn't it?
Nandhini Venkat
ReplyDeleteA Prabhakar TheKa yes
Srini Vas
ReplyDeletePrabhakar Theka உங்கள் கமெண்ட்ஸ் எனக்குத் தெரியவில்லை. He may not see mine either. He might have blocked me. Can some one cut and paste it?
Nattarasan Nattarasan
ReplyDeleteவாத்தியாரை கைது செய்யவில்லையா இன்னும்!
Nattarasan Nattarasan ஐ ஐ டியைச் சேர்ந்த அந்த பெரும் பேராசிரியரைச் சொல்கிறீர்களா? எஸ்.வி.சேகர், கே. ராஜா போன்றவர்களை அரசு அவசரமாகக் கைது செய்தது போல் இந்தப் பேராசிரியரைக் கைது செய்வார்களோ என்னவோ? அதெல்லாம் நடக்கிற காரியமா,வக்கீலய்யா? அவர்களெல்லாம் அரெஸ்ட்டுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று உங்களுக்குத் தெரியாததா?
ReplyDelete//Can some one cut and paste it?// it is all in my blog: dharumi.blogspot.com
ReplyDeleteSrini Vas
ReplyDeleteதருமி ஐயா.. உங்களுக்கு அவசியம பதில் எழுதுகிறேன். அதற்கு முன் இந்த வீடியோ வை ஒரு முறை பொறுமையாகப் பார்த்து விடுங்கள். Whatever he says apply to IITs as well. G Sam George
https://youtu.be/kJGupYFaCGs
there was nothing like partiality, caste, creed, religious problems, uneven treatments by faculty, intimidation, insults on caste basis and so on. it just deals with a person's academic problems alone. have you ever thought at least for a second why no "upper caste" student had such untimely suicides while there were many from "lower" castes, again and again in higher institutions? dont say that teachers and institutional environs were not responsible.
ReplyDelete”மனுஷன்னா .. ஒருத்தர் வலிய ஒருத்தர் உணரணும். தனக்கு வலிச்சாதான் உணருவேன்னா ... என்ன மனுஷங்கய்யா நீங்களெல்லாம்?//
ReplyDelete”இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” படத்தில் வரும் வசனம். புரிபவர்களுக்குப் புரிந்தால் நலம். காதிருப்பவர்கள் கேட்கட்டும்.