Wednesday, December 16, 2020

1140. AN ARTICLE ON THE IMPOSITION OF SANSKRIT (கிழவனின் புலம்பல்)


TIMES OF INDIA - 16.12.20 

 AN ARTICLE ON THE IMPOSITION OF SANSKRIT

TWO ARTICLES FOR AND AGAINST THIS NEW IMPOSITION

பொதிகை போன்ற மாநில தொலைக்காட்சிகளில் இனி தினமும் ஒரு முறை வடமொழியில் செய்திகளும், வாரமொரு முறை (என்னமோ சொல்றாங்க...) ’வர்த்தவல்லி’ அப்டின்னு ஒரு செய்தித் தொகுப்பும் கட்டாயம் ஒளிபரப்ப வேண்டுமென்று  மத்திய அரசின் பிரசார் பாரதி அமைப்பிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.





(Statements of the authors of the article are given in bracket in this colour and my comments would be in blue..)

DUSHYANTH SRIDHAR (research scholar on indic heritage and culture) supports this order.

I found the arguments of the 'researcher' very funny.

ஆரம்பமே நல்ல ஒரு ஜோக்குடன் ஆரம்பிக்கிறார் ஸ்ரீதர்! நமது முதல்வர்களான காமராஜ், கருணாநிதி, ராமச்சந்திரன், ஜெயலலிதா - எல்லோரது பெயர்களுமே சம்ஸ்கிருத பெயர்கள்  என்று ஒரு பெருத்த உண்மையை முன் வைக்கிறார். அதாவது சமஸ்கிருதம் நம்மோடு இயைந்து விட்டதாம். 

அடுத்ததாக முற்படுத்திக் கொண்டோருக்கு வழக்கமாக வரும் ‘வயிற்று வலி’ அவருக்கும்  வந்து விடுகிறது/. தமிழ்நாட்டில் மட்டுமே 69% இடப்பங்கீடு நடக்கிறதைக் குறிப்பிடுகிறார். (அதெல்லாம் இனி சிறிதே காலம் தான்... அதெல்லாம் பிறப்புரிமை இல்லை என்று சொல்லியாகி விட்டது. எப்போது வேண்டுமானாலும் இந்த உரிமை நம்மிடமிருந்து உச்சநீதி மன்றத்தினால் பறிக்கப்பட்டு விடும் என்பதும் நிச்சயம்.) "அவர்களது “வழக்கமான” ராஜதந்திரம் இங்கே பளிச்சிடுகிறது! (If the present leaders opposing the order are true to their conscience, and believe that the voice of the minorites should be heard, let them lend their ears , now) !!!  ஆஹா .. நல்லதொரு ராஜதந்திரம். ஆடு நினைகிறதே  ... என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது. மைனாரிட்டிகள் மீதுதான் ஸ்ரீதருக்கு எம்புட்டு கருணை!

ஸ்ரீதரே சொல்கிறார் -  இந்த வடமொழி மிக மிகச் சிலரால் மட்டுமே பேசப்படும் மொழி. ஆகவே  அதற்கு பாதுகாப்பு வேண்டுமென்கிறார். அந்த மொழியில் தினமும் பதினைந்தே நிமிடம் (minuscle part)  தொலைக்காட்சியில் பேசப்படுவதால் அம்மொழிக்குக் கிடைக்கும் கால அவகாசம் 0.01% என்று ‘கணக்குப்’   போட்டு சொல்கிறார்,. (Does it not merit this attention?) எம்புட்டு அக்கறை! ஸ்ரீதருக்கு ஒரு கேள்வி: இதே போல் இன்னும் பல மொழிகள், அதுவும் மிகவும் குறைவான மக்கள் தொகையில் உள்ள “ஆதி” மொழிகள் - கூகுள் ஆண்டவர் அழியும் நிலையில் உள்ள 600 இந்திய மொழிகள் பற்றிச் சொல்கிறது.  ஸ்ரீதருக்கு இந்த மொழிகள் மேல் ஏன் அக்கறையில்லாமல் போனது?  இந்த இடத்தில் ஸ்ரீதர் - Every small measure matters to revitalise every endangered language - என்றும் சொல்கிறார். அழிந்து வரும் ஏனைய மொழிகள் மீது இல்லாத ஓர் அக்கறை வெறும் 14,000 மக்களால் பேசப்படும் வடமொழியின் மீது இந்த அளவு அக்கறை காட்டுவது  ஏன் என்று கட்டுரையில் இறுதியில் ஒரு “ஒப்புதல் வாக்குமூலம்” கொடுத்துள்ளார். அதைப் பின்னால் சொல்கிறேன்.

( It could be argued that this is only language jingoism.  jingoism = Fanatical patriotism- அதாவது கண்மூடித்தனமாக உயர்ந்தேற்றுவது.)   


அடுத்து எடுத்து வைக்கும் நியாயம் அம்மொழியில் உள்ள இலக்கியங்களும்,        அறிவியல்களும். ஒரு இளைஞனுக்கு  - 1350-1425- ஆண்டுகளில் இருந்த  மாதவாவின் கணிதப் புலமை வேண்டுமானால் மொழிபெயர்ப்புகளில் படிப்பதை விட  ஒரிஜினலாக வடமொழியில் படித்தால் எவ்வளவு நல்லது என்கிறார். லத்தீன், கிரேக்க   மொழிகளிலும் இலக்கியம், அறிவியல் எல்லாம் இருக்கிறது; அப்போது அவைகளையும் படிக்க வேண்டியது தானே. கற்க வேண்டியதிருந்தால் மொழி ஒரு தடையில்லை என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் ஸ்ரீதர் சொல்வது போல் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும் என்றால் தேவையானவர்கள் படித்துக் கொள்ளட்டும், எல்லோரும் புரியாத சமஸ்கிருததில் செய்தி கேட்க வேண்டியதில்லையே!

அடுத்து ஸ்ரீதர் நம் போன்ற ஆட்களுக்கு வழக்கமாக அவர்கள் சொல்லும் பாணியில் நமக்கெல்லாம் “ஐஸ்” வைக்கிறார். அவர் காத்திருக்கிறாராம்.. எதற்கு. என்றாவது ஒரு நாள் - a child in the remotest villages in Uttarakhand reciting chaste Tamil verses of "Periyazvar... அதாவது நாட்டில் எல்லா மொழிகளும் அப்படிப் பரவலாகப் பேசப்பட வேண்டுமாம்.  (நானும் கூட இந்த வாக்கியத்தைப் படிக்கும் போது  Tamil verses of  Thiruk kural ...என்று சொல்வாரோ என்று நினைத்தேன். ஆனால் அவருக்கு "Periyazvar..  தான் நினைவுக்கு வந்திருக்கிறது, தவறு என் மீது தான்!)    

இறுதியாக இன்னொரு நியாயம் சொல்கிறார், ஸ்ரீதர். The taboo that Urdu is a 'Muslim-language, Hindi is a 'Hindus-only language and Sanskrit is a 'Brahmin-only' language must go. ஸ்ரீதர்   கொடுத்த மூன்று சான்றுகளில் முதலிரண்டும் தவறு. ஆனால் மூன்றாவது முழுவதும் சரி!!! இந்தி இந்துக்கள் மட்டும் தான் பேசுகிறார்களா? இல்லையே. அது போல் தான் உருது மொழியும். ஆனால் சமஸ்கிருதம் ... அது ஸ்ரீதர் மொழியே தான்!! இப்போது புரிகிறதா ஏன் ஸ்ரீதருக்கு இம்மொழியின் மீதுள்ள பாசத்திற்கான காரணம். அவரே சொல்லி விட்டாரே ... Sanskrit is a 'Brahmin-only' language!!!

எனக்கு ஸ்ரீதரிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டும்: பிராமணர்கள் மொத்த மக்கள் தொகையில் 3-4% மட்டும் தான். அப்படி இருப்பினும்  சிறுபான்மையரான  “உங்களின் ஆசைகளும், உத்தரவுகளும்” எப்படி அரசாங்கத்தால் (மோடி பிராமணர் அல்ல) அவைகள் உடனே நிறைவேற்றப்படுகின்றன. அரசின் எல்லா குரலும் ‘பிராமணக் குரலாக’ ஒலிக்கிறதே ... அது எப்படி?                                                                                                                                                                               *****************          

கட்டுரையின் இரண்டாம் பகுதி:

J. RAVINDRAN - Former assistant solicitor general of India for Madras High Court

The recent notification by the country's public service broadcaster is an attempt to rattle the basic structure of the Constitution and hit at the root of the idea of unity in diversity.  இது   எல்லோருக்கும் தெரிந்த உண்மை தான், ஆனால் இப்போதைய மத்திய அரசு எந்தக் கேள்வி முறையும் இல்லாமல் தான் தோன்றித் தனமாக எல்லா அரசியல் மாற்றங்களையும் தொடர்ந்து செய்து வருகிறது. உச்சநீதி மன்றத்திலும் நீதியரசர்கள்  ராஜ்ய சபாவை கண்வைத்தே நடப்பது போல் இருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என்பதே தெரியவில்லையே.



14,000 people said Sanskrit was their primary language, with less than 1000 speakers ... It is mostely used by priests during religious ceremonies. இப்படி அதை ’தேவபாஷை’யாக்கி அதை எல்லோர் தலையிலும் ஏற்றிவைக்க ஒரு சின்ன சமூகம் மட்டும் முயலுகிறது. முயலுவது மட்டுமல்ல .. தொடர்ந்து அரசியலிலும், சமய வழிபாட்டிலும்  வெற்றியும் பெற்று வருகிறது.

In Section 12 of Act 1990 .. the corporation is to gather news not propaganda. Sec 12(m) states: ... distribution of regional broadcasting services in every state in the language of that state".  மாநில தொலைக்காட்சிகள் அந்தந்த மாநில மொழியில் இயங்க வேண்டும் என்பதே இதன் பொருள். 

The present order is in contravention to this law. ஒரு கிழவனாக எனக்கு இப்போதிருக்கும் பெரும் புலம்பல் என்னவெனில் ... நாடு இப்போது செல்லும் வழி சிலருக்கு மிகவும் நன்றாகவும் பொது மக்களுக்கு பெரிதும் கடினமானதாகவும் உள்ளது. சட்டங்களும், புதிய  சட்டங்கள் வரும் முறைகளும், அல்லது பழைய சட்டங்கள் தூக்கியெறியப்படுவதும் மிகுந்த அச்சத்தை அளிக்கின்றன. எதேச்சதிகாரம் தலைதூக்கி நிற்கின்றது. எத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும் அரசு செல்லும் வழி அச்சமுறுத்துகிறது. தற்பொழுது நடந்து வரும் விவசாயப் போராட்டம் எனக்கு அச்சத்தை மட்டுமே அளிக்கிறது. சிறப்பாக தமிழ்நாட்டைக் குறி வைத்தே பல நிகழ்வுகள் நடப்பதாகவும் நினைக்கிறேன்.

The Supreme Court's 1995 judgment ... said "the first facet of the broadcasting freedom is freedom from state or governmental control.
Prasar Bharati making it mandatory for the regional language channels to telecast Sanskrit news. பழைய சட்டங்களைத் தூக்கி எறிதல் என்று சொன்னேனே அதற்கான சான்று இந்தப் புதிய திட்டம். ”மாநில உரிமை”  என்பது என்ன என்பதே யாருக்கும் இப்போது நினைவில் இல்லை. மத்திய அரசு இதனைத் தூக்கியெறிந்து விட்டது. நமது மாநில அரசிற்கோ அப்படி என்று இருப்பதே தெரியவில்லை என் நினைக்கின்றேன். கம்பர் எக்ஸ்ப்ரஸ், பாண்டியன் எக்ஸ்ப்ரஸ், தென்றல் எக்ஸ்ப்ரஸ், ... என்றெல்லாம் பல பெயர்கள் இருந்தன. அந்தக் காலம் முடிந்து விட்டது. இனிவரும் பெயர்கள் எல்லாமே முழு இந்திப் பெயர்கள் தான். வரும் திட்டங்கள் அனைத்தும் நமக்குப் புரியாத மொழியில் வைக்க வேண்டும் என்று மத்திய அரசு திண்ணியமாக இருக்கிறது.

The present circular is a threat to democracy. Whatever is imposed can never be a success and time has come for the people of Tamil Nadu to oppose this in a democratic way.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் நினைவுக்கு வருகிறது.  மீண்டும் ஒரு போரட்டம் தேவை. அது நிச்சயமாக அறுபதுகளில் நடந்த அளவு ஒரு வீரியமான போராட்டமாக இருக்க முடியாது. தமிழ் மக்களுக்குத் தங்கள் தாய்மொழி மீது அப்படி ஒன்றும் பற்றிருப்பது போல் தெரியவில்லை. ஆயினும் மற்ற மாநிலங்கள் இப்போது தான் சிறிதாவது இந்தப் பிரச்சனைக்கு sensitive ஆக மாறுவது போல் தெரிகிறது. பல மாநிலங்கள் இந்தப் பிரச்சனையை ஒன்றாக கையில் எடுத்துக் கொண்டால் ... ஒரு கிழவனின் கனவு.

The journey is long
With miles to go 
Miles to go ............
 
  வரும் அடுத்த தலைமுறையை இந்த நீண்ட நெடிய தூரத்திற்குத் தயாரான மன நிலையில் நான் பார்க்கவில்லை. இது ஒரு கிழவனின் வெற்றுப் புலம்பலாக இருந்தால் நலமே ........

****************

T.O.I. இருபக்கக் கருத்துகளையும் தந்தமைக்கு 
நன்றியும் பாராட்டும் ....







No comments:

Post a Comment