வால்பையன் என்றொரு ப்ளாக்கர். நினைவு வந்தது. சில வரிகள்:
முந்திய பதிவை இப்படி ஆரம்பித்திருந்தேன்: //15 ஆண்டுகளுக்கு
முன் எழுதியது கையிலும் கண்ணிலும் சிக்கியது. மீண்டும் அதைப் பதிவிட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. காலங்கள் கடந்து விட்டன//
அந்தப் பழைய பதிவையும் பின்னூட்டங்களையும் படிக்கும் போது கண்ணில் பட்ட இருவர் - வால்பையன் என்ற அருண்; சீனா என்ற சிதம்பரம். இருவரும் இப்போது இல்லை.
வால்பையன் சின்ன வயதிலேயே போய்ச் சேர்ந்து விட்டான். பயல் மிக நல்ல புத்திசாலி. பள்ளிப் படிப்பு என்று பெரிதாக இல்லை. மதங்களைப் பற்றி நான் எழுதிவரும்போது எனக்கு வரும் கேள்விகளுக்கு என்ன பதில் கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே ‘நச்’சென்று குட்டியாக, ஆனால் மிகுந்த பொருளோடு அவனிடமிருந்து பதில் வரும். வயதுக்கு மீறிய அனுபவங்களோடு
விரைவாகப் போய்விட்டான்.
இரண்டு சின்னக் குழந்தைகள். எப்படிஇருக்கிறார்களோ?
வலைச்சரம் நடத்திய சீனா அக்காலப் பதிவர்கள் அனைவரோடும் தொடர்பு கொண்டவர், வங்கி மேலாளராக இருந்தார். மதுரையைப் பொறுத்தவரை அவரின் மரணம் ப்ளாக்கர்களுக்கு பேரிழப்பு.
No comments:
Post a Comment