Saturday, June 18, 2022

1266. நடிகர்களின் ரசிகர்கள் எனிப்படி இருக்கிறார்கள்?




*

அம்புலிமாமா கதைகள்

தமிழ்வாணனின் சங்கர்லால் கதைகள்

மு.வரதராசனார்

அகிலன்

கல்கி

நா. பார்த்தசாரதி

.

.

.

ஜெயகாந்தன்

தி.ஜா.ரா.

இந்திரா பார்த்தசாரதி

அதன் பின் .. அசோகமித்திரன், லாசாரா, கி.ரா., சுந்தர ராமசாமி, கோணங்கி, மெளனி, ஜெ.மோ. என்று பலர் எழுத்துகளை ஆங்காங்கே தூவிக்கொண்டதுண்டு. சாரு மாதிரி ஒரு சிலரை ஓரிரண்டு வாசித்து விட்டு சுத்தமாகப் புறந்தள்ளியதுமுண்டு.

ஒரு வாசிப்பாளனின் வாசிப்பின் பரிணாமம் இப்படித்தானே அடுக்கடுக்காய் இருக்க முடியும்.

ஆனால் ஏதாவது ஒரு நடிகரைப் பிடித்துப் போனால் தங்கள் ஆயுள் முழுவதும் அவரின் விசிறியாக மட்டுமே இருப்பது எப்படி? நான் இன்னும் அம்புலிமாமா கதைகளைப் படித்துக் கொண்டு, ‘ஆஹா .. என்னே கதைகள்... என்னா இஸ்டைலு .. என்று சொல்லிக் கொண்டிருந்தால் என்னைப் பார்த்து சிரிக்க மாட்டார்களா? சிவாஜி மாதிரி இன்னும் யாரும் நடிக்க முடியுமான்னு ஒரு கேள்வி மனதிற்குள் இருந்தாலும், இன்று அவர் படங்களைப் பார்த்து முன்பு போல் ரசிக்கமுடியவில்லை; ரசிக்க முடியாது. அடுத்தடுத்து யார் என்று தானே இருக்க வேண்டும்.

இல்லீங்க ... சின்னப் பிள்ளையிலிருந்தே எனக்கு அவரைத் தான் (அவரை மட்டும் தான்) பிடிக்கும்னு யாரும் சொன்னால் ...

.... தள்ளி உட்கார்ந்து அவர்களை வேடிக்கை மட்டும் பார்க்கலாம்.





*

2 comments:

  1. நடிகர் நடித்தப் படங்களை ரசிப்பதற்கு பதில், இக்கால இளைஞர்கள் நடிகர்களை ரசிக்கிறார்கள்.

    ReplyDelete
  2. ரசனை காலத்திற்கேற்ப மாறும் ஐயா. இருப்பினும் நமக்கென்று ஆதர்சன எழுத்தாளர்கள், நடிகர்கள் இருப்பார்களே.
    ஆய்வுப்பணியால் முழுமையாக வலைப்பக்கம் வர இயலவில்லை. பணி ஓரளவுக்கு நிறைவு பெற்றபின் தொடர்வேன்.

    ReplyDelete