https://www.facebook.com/sam.george.946/posts/pfbid02raCHWn5eJiB5oFxd2oWQzP9CuShkVisdaQGSD62DhyDu5MXAiKQ6EUUBNRTs3NMMl
சநாதனம்னா என்னாங்க ...8
1946ல் அம்பேத்கர் “யாரிந்த சூத்திரர்கள்?” என்ற ஒரு கேள்வியை எழுப்பி, ஒரு புதிய பிரக்ஞ்யை சமுக வெளிக்குக் கொண்டு வந்தார். தாங்கள் யார்?; எங்கே இருக்கிறோம்?; என்னவாக இருக்கிறோம்? என்ற எந்த சுயமதிப்பீடும் இல்லாத “பாவப்பட்ட மக்களாக” இன்னும் இருப்பது தான் அவர்களின் இன்றைய பரிதாப நிலை.
இதைப் பற்றி விரிவாக எழுதப்பட்ட நூலை தமிழில் மொழி பெயர்த்துள்ளேன். விரைவில் அச்சில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
அதிலிருந்து சில பகுதிகளை அவ்வப்போது இங்கு தர நினைத்துள்ளேன்.
****
RSS - BJP அமைப்புகளின் ஆரம்பம், வளர்ச்சி, வரலாறு என்று எல்லாவற்றையும் உற்று நோக்கினால் இந்து ராஜ்ஜியம் அமைப்பதே அவர்களின் இறுதி குறிக்கோள். அப்படி ஒன்று உருவானால் அது சூத்திரர்களுக்கும், தலித்துகளுக்கும், ஆதிவாசிகளுக்கும் மேலும் வேற்று சமய சிறுபான்மையோருக்கும்... ஏன், மதச்சார்பற்ற த்விஜாக்களுக்குக் கூடப் பெரும் கேடே விளையும். குழப்பமே மிஞ்சும்.
RSS தன் இந்து ராஜ்யக் கனவுகளைச் சமயக் கண்ணோடு முன்னிறுத்துவது போல் தோற்றம் தரும். ஆனால் உண்மையில், அடித்தளத்தில் சாதியக் கட்டுப்பாட்டு நிலைகள்தான் உறுதியாக இருக்கின்றன என்பதை ஐயம் ஏதுமின்றி ஆணித்தரமாகக் கூறலாம்.
***
RSS அமைப்பின் முக்கிய முடிவுகளை எடுப்பது அகில பாரதிய பிரதிநிதி சபா (ABPS - AKKIL BHARADHIYA PRADINIDHI SABHA) இதன் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை: 36. இதில் 26 உறுப்பினர்கள் பிராமணர்கள். இவர்களோடு 5 பனியாக்கள், 3 சத்திரியர்கள், 2 சூத்திரர்கள். இதில் கடைசியாக உள்ள இனத்தவர் மக்கள் தொகையில் 52 விழுக்காடு உள்ள மக்கள்.
RSS அமைப்பின் மத்தியச் சூத்திரதாரி சர்சங் சலக் (Sarsangh chalak) என்ற அலுவலகத்தில் உள்ளவர்களே. இதன் தலைவர் யாராலும் கேள்வி கேட்க முடியாதவர். அனைவருக்கும் ஒட்டுமொத்தத் தலைவர். இதுவரை சர்சங் சலக் பதவியில் இருந்த ஆறு பெயர்களில் ஐவர் - K.B. ஹெட்ஜ்வார், M.S. கோல்வால்கர், M.D. டியோரஸ், K.S. சுதர்சன், மோகன் பகவத் - பிராமணர்கள். ராஜேந்திர சிங் என்ற ஆறாவது நபர் ஒரு சத்திரியர். எந்த தலித் அல்லது சூத்திரர் - இவர்களும் இந்துக்களாகவே அழைக்கப்பட்டாலும் - RSS ன் சர்சங் சலக் அமைப்புக்குள் நுழையக் கூட முடியாது.
***
மனு, மிக அழுத்தமாகச் சூத்திரர்களுக்கும் அனைத்துச் சாதி பெண்களுக்கும் முற்றாகப் பலவற்றை மறுத்துள்ளது. அவர்களுக்கு வடமொழி பயிலும் உரிமை கிடையாது; வேதங்களைப் படிக்கவோ ஓதவோ கூடாது; போர், வணிகம் எதிலும் பங்குகொள்ளக் கூடாது. மறுக்கப்பட்ட இவைகள் பிராமணர், சத்திரியர், வைசியர்கள் இனத்து ஆண்களுக்கு மட்டுமே உரித்தானவை. மனு, சூத்திரர்களின் கடமை என்று மிகத் தந்திரமாகச் சிலவற்றைக் கைகாட்டி விடுகிறது. சூத்திரர்கள் கடுமையான உடல் உழைப்பைத் தந்து, த்விஜாக்களுக்குப் பணிந்து, பணிவிடை செய்வதே சூத்திரர்களின் சிறப்பான ஆன்மிகப் பணி என்கிறது.
இத்தகைய ஒரு கீழ்த்தரமான அடுக்குமுறை அமைப்புகளே மிகச் சிறந்தது என்றும், வர்ண தர்மத்திற்கான அடிப்படை என்றும் இன்றுவரை போற்றிப் புகழப்படுகிறது.
Like
Comment
Share
No comments:
Post a Comment