16.6.24
ஸ்விட்சர்லாண்ட் - ஹங்கேரி –
3:1
93 நிமிடம் விழுந்த 3வது கோல் அழகு.
ஸ்விட்சர்லாண்ட் சிகப்பு வண்ணச் சட்டை
போட்டு விளையாடினர். அடுத்தவர்கள் வெள்ளைச் சட்டை. ஆனால் போட்டி பார்க்க வந்தவர்கள்
அனைவரும் ஒரேயடியாக மேல்மருத்துவ பக்தர்கள் மாதிரி சிகப்பாக வந்திருந்தார்கள்.
ஏன் அப்படி?
17.6.24
உக்ரைன் - ருமேனியா - 0:3
என்ன ஆச்சரியம் என்றால், உக்ரைனில் போர் நடக்கிறது. இதில் அவர்கள்தேர்வுப் போட்டிகளில் வென்று இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறார்கள். ஆச்சரியமாக இருந்தது.
விளையாட்டு உற்சாகமில்லை
பிகு.
பல குட்டி குட்டி நாடுகள். இத்தனூண்டு நாடுகள்.அதுக ஜெயிச்சி உலகக் கால்பந்து, ஐரோப்பிய கால்பந்துன்னு விளையாடுதுக..
ஆனா நாம எம்புட்டு பெரீஈஈஈஈய நாட்டுக்காரவுக ... பின் ஏன்?
17.6.'24 பிரான்ஸ் - ஆஸ்ட்ரியா 1-0
எம்பாப்வே ஆடுகிறாரே என்ற நினைப்பில் உட்கார்ந்தேன். அழகாகவே விளையாடினார். ஆஸ்ட்ரியா கோலுக்கு வலது பக்கம் பந்தை அழகாக வாங்கி, தன் தொழிலை அழகாகச் செய்து பந்தை கோலுக்கு முன்னாலிருந்த வீரர்களுக்கு அனுப்பினார். ஆனால் ஆஸ்ட்ரியா வீரர் ஒருவர் 'தலை சுற்றி' தன் கோலுக்குள் அனுப்பி விட்டார்.
இரண்டாம் பகுதியில் எம்பாப்வே ஏறத்தாழ தனியாக பந்தை எடுத்து எதிராளி கோலுக்குச் சென்றார். அவரும் எதிரில் நிற்கும் கோல்கீப்பர் மட்டும் தான். அந்தப் பந்தை வெளியே அடித்து, நல்ல தருணத்தைத் தவற விட்டு விட்டார்.
'எப்படியோ' பிரான்ஸ் வென்றது.
20.6.24 SPAIN - ITALY : 1 : 0
கால்பந்தில் இத்தாலி பெயரே அதிகமாகத் தென்பட்டதால் அதுதான் வெல்லும் என நினைத்தேன்.
ஸ்பெயின் தூள் கிளப்பியத்து. அதில் விளையாடி, கோலும் போட்ட வில்லியம்சின் தலையலங்காரத்தை விட அவர் விளையாட்டு பிடித்தது.
21.6.24 UKRAINE - SLOVAKIA 2 : 1
உக்ரைன் அணியைப் பார்க்கும்போது பாவம் போல் இருந்தது. ஆட்டமும் குறையாகவே தோன்றியது. ஆனால் கடைசியில் ஆட்டத்தில் வென்றது
No comments:
Post a Comment