*
*
தொடர்பான மற்றைய பதிவுகள்:
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
முந்திய பதிவுக்குரிய பின்னூட்டங்களை முடித்துக் கொள்ளலாமென நினக்கிறேன். அதோடு, இத்தலைப்பில் இனி எழுதப்பபோகும் பதிவுகளில் தற்காலிகமாகவேனும் பின்னூட்டங்களைத் தடை செய்ய நினைத்துள்ளேன்.
காரணங்கள்: நான் ஏற்கெனவே கேட்டிருந்தபடி என் பதிவுகளில் வரும் கருத்துக்களை மட்டும் வைத்துப் பின்னூட்டங்கள் வந்தால் அதைப் பற்றி விவாதிக்க எளிதாயிருக்குமென நினைத்தேன். ஆனாலும், வரும் பின்னூட்டங்கள் அந்த LOC-யைக் கடைப்பிடிக்க முடிவதில்லை. அது இயல்பும் கூட. அதோடு, நான் சொல்லவரும் விதயங்களுக்கு முன்பே அதைப்பற்றிய கேள்விகள் வந்து விழுந்து விடுகின்றன. எஞ்சுவது சிறிது குழப்பமும், குழப்பத்தில் "மீன் பிடித்தலுமே'.
ஆகவே, நான் எழுத நினைத்துள்ள பகுதிகளை எழுதி முடித்ததும் I hope to have a refined discussion covering all aspects. ஒருவேளை அப்போது கருத்துக் கலந்துரையாடல் எளிதாகலாம். ஏனெனில், என் பதிவுகள் நான் ஏற்கெனவே கூறியபடி என் பல ஆண்டுகளின் தொடர் தேடலால் வந்த கருத்துக்கள். எந்த குறிப்பிட்ட மதத்திற்கும் அல்லது தனி மனிதனுக்கும் குறிவைத்து எழுதப்பட்டதல்ல.அப்படியான கருத்துக்களை முழுவதுமாகத் தந்த பிறகு மதத்தைப்பற்றிய என் முழு முகமும் உங்களுக்குத் தெரியவரும். அப்போது வரும் கேள்விகள் பொருளோடும், மிகச்சரியாகவும் வரும் என்ற நம்பிக்கை உண்டு.
ஆகவே, இந்தப் பதிவில் ஆர்வம் காட்டி வரும் அனைவரையும் சிறிது பொறுமை காக்கக் கேட்டுக்கொள்கிறேன். எனது பதிவுகள் ஓரளவுக்கு முடிந்ததும் 'அணைக்கதவுகளைத்' திறக்கிறேன். அப்போது உங்கள் கருத்து வெள்ளம் பொங்கிப்பிரவாகமாய் வருமென நம்புகிறேன். அதுவரை பொறுத்துக்கொள்ளுமாய் வேண்டிக்கொள்கிறேன்.
நன்றி.
***********************
இதுவரை முதல் ஐயம் விதையாய் மனத்தில் விழுந்த விதத்தையும், அதை நான் வளர்த்த விதத்தையும் எழுதினேன். முதலில் நம் மதத்தைப்பற்றி ஐயம் எழுப்புகிறோமே என்ற குற்ற உணர்வு; அதனால் 'ஜெபம்'; அது தோற்றதால் ஏன் கேள்விகள் கேட்கக்கூடாது என்ற மனச்சமாதானமும், தைரியமும் வர மேலும் மேலும் கேள்விகளை எனக்கு நானே கேட்க ஆரம்பித்தேன். அதனால் 'விசுவாசம் என்று கிறித்துவர்கள் சொல்லும் 'மத நம்பிக்கை' படிப்படியாகக் குறைந்தது. இந்த நிகழ்வுகளை மூன்று நிலைகளாகப்(Phases) பிரித்துத் தருகிறேன்.
PHASE: I
பள்ளியில் பயிலும்போது வருடத்திற்கு ஒரு முறை எங்கள் பள்ளியின் கத்தோலிக்கக் கிறித்துவ மாணவர்களுக்கு மூன்று நாட்களுக்கு 'தியானம்' கொடுப்பார்கள். இந்த நாட்களில் நாங்கள் கடவுளைப் பற்றியும், மதக்கருத்துக்களைப் பற்றியும் தியானிக்கவேண்டும். ஆனால், எங்களுக்கு ஒத்த வயதினரோடு ஒரே இடத்தில் தங்கி, உண்டு, உறங்கி நாட்களைக் கழிப்பதில் தனி மகிழ்ச்சி. குதித்து கும்மாளத்தோடு வருவோம். ஆனால், முதல் நாள் முதல் 'பிரசங்கத்திலேயே' தியானம் கொடுக்க வரும் குரு (சாமியார்) , 'பாவம்' (sin) என்பது பற்றியும், இந்தப் பாவத்தின் சம்பளமான சாவு பற்றியும், சாவுக்குப்பிறகு கிடைக்கக் கூடிய 'மோட்சம்-நரகம்' (heaven & hell) பற்றிக் கூறுவார். இதில் மோட்சம் பற்றிக் கூறுவதை விடவும், நரகம், அதன் கொடுந்தண்டனைகள் பற்றியும், அது எப்படி 'நித்தியம் (eternal) , என்பது பற்றியும் சொல்லுவார். நன்கு நினைவில் இருக்கிறது; அந்தச் சின்ன வயதில் இந்த சேதிகள் எவ்வளவு ஆழமாகப் பதிந்தது என்று. எல்லோருமே பயந்து நடுங்கியிருப்போம். அன்று இரவு தூக்கத்தில் அவனவன் பயந்து உளறுவது சர்வ சாதாரணம். ஆட்டமெல்லாம் இரண்டாம் நாளிலிருந்துதான் !
1 *** பைபிளில் என்னவோ ஒரே ஒரு 'வசனம்' மட்டுமே வருகிறது (Math. 14:50). ஆனால் அது போதும் - பயங்கரமான ஒரு oral and visual effect கொடுப்பதற்கு!! ஒரு மனிதன் மிஞ்சிப்போனால் எத்தனை ஆண்டுகள் உயிரோடிருப்பான். நூறு ஆண்டுகள்? அதில் அவன் என்ன தவறு செய்தாலும் 'நித்தியத்திற்கும்' அவனுக்குத் தண்டனை என்பது எனக்கு ஒரு பெரிய முரண்பாடாகத் தோன்றியது. கடவுள் கருணை நிரம்பியவர் என்று ஒரு புறம்; ஆனால், மறுபுறமோ eternal punishment! ஒத்து வரவில்லை. இப்படித் தண்டனை அனுபவிப்பதற்கு என்னைப்பொறுத்தவரை மூன்றே மூன்று மனிதர்களுக்கு மட்டுமே தகுதியுள்ளதாகப் பட்டது: ஹிட்லர், போல்பாட், இடி அமின் ! ஆனால், இந்தத் தண்டனை எனக்கும், உனக்கும் என்பது பொருந்தியதாகத் தெரியவில்லை. இதைப் பார்க்கும்போது நீ செய்த 'கர்ம வினை'களுக்கு ஏற்றாற்போல் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து இறுதியில் 'முக்தி' பெறு என்று சொல்லும் இந்து மதக் கோட்பாடில் 'மனித தர்மம்; மனித நீதி' இருப்பதாகப் பட்டது. (அதற்காக அம்மதக் கோட்பாடுகள் அனைத்தும் எனக்கு உடன்பாடு என்று பொருள் கொள்ள வேண்டாம்.) கடவுளின் தர்மமும், நீதியும் நம் தர்மத்தையும், நீதியையும்விட மேலானதாக இருக்கவேண்டாமோ?
2 *** அடுத்ததாக, நாம் நம் சிறுபிள்ளைப் பருவத்திலிருந்து கற்பிக்கப்பட்ட காரியங்களை எந்தவித ஐயமும் இன்றி, தொட்டிலில் தொடங்கியதைக் கடைசிவரை முழுமையாக நம்புகிறோம். அது ஒரு முழுமையான உண்மைதானா என்று நமக்கு நாமே எப்போதாவது கேள்வி கேட்பதுண்டா; இல்லவே இல்லை. பைபிளில் யேசுவால் சொல்லப்பட்ட பல சிறுநீதிக்கதைகள் (parables) மிகவும் பிரசித்தம். அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் பகுதிகள். இப்போது இவைகளில் எனக்கு ஐயம். எல்லோருக்கும் தெரிந்த 'ஊதாரிப்பிள்ளை" (prodigal son) கதையில் தறுதலையாகச் சுற்றி, சொத்தையெல்லாம் அழித்து வந்த சின்ன மகன் திரும்பிவந்து மன்னிப்பு கேட்டதும் தடபுடல் விருந்து - கொளுத்த ஆட்டை அடித்து விருந்து; அப்பாவோடேயே இருந்து கஷ்டப்பட்டு உழைத்த மகன் தன் நண்பர்களோடு விருந்துண்ண தடை. இது கதை. நம் வாழ்க்கையில் இது போல் நடந்தால் பெரியவன் புதிதாகக் கெட்டுப் போவான்; சின்னவன் மீண்டும் கெட்டுப்போவான். தந்தை இருவரையுமே இழப்பதே நடக்கும். நடப்புக்குச் சரியாக வருமா இந்தக்கதை?
3 *** அடுத்து - இன்னொரு கதை. (Math: 20: 1-16) காலையில் வேலை கேட்டுவரும் ஒருவனுக்கு முழுநாள் வேலைக்கு ஒரு பணம் என்று பேசி வேலை பார்க்கச் சொல்லுகிறார் ஒரு முதலாளி. நேரம் கழித்து வேறு சிலரை தாமே அழைத்து வந்து வேலை தருகிறார். அதன் பின்னும் வேறு சிலருக்கு; மதியம் இன்னும் சிலருக்கு; கடைசியாக வேலை முடியப்போகும் மாலையில் வருபவனுக்கும் வேலை. எல்லாம் சரி. வேலை முடிந்ததும் எல்லோருக்கும்ஒரே கூலி! இது நியாயப் படுத்தப்படுகிறது ! முதலில் வந்து வேலை செய்து முறுமுறுப்பவனுக்குக் கொடுக்கப்படும் பதில்: "என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா?" மிக மோசமாக தேர்வு எழுதிய என் மாணவன் ஒருவனையும், நன்கு எழுதிய மாணவன் ஒருவனையும் நான் ஒரேமாதிரியாக மதிப்பிடலாமா? இருவருக்குமே பத்துக்குப் பத்து என்று மதிப்பெண் அளித்தால் என்ன நியாயம்? தொழிலாளி - முதலாளி என்ற உறவை வைத்தே பார்த்தாலும், அந்த முதலாளிக்கு நல்ல தொழிலாளிகளே கிடைக்காதுதான் போகும்! பைபிளில் சொல்லப்பட்டதாலே இக்கருத்துக்கள் சரியாகுமா?
4 *** அடுத்ததாக வந்த ஐயம் ஆழ்ந்த கிறித்துவர்களுக்குக் கோபம் வரவைக்கும் ஐயம்' ஆனால், நானென்ன செய்வது? யேசு இரண்டே இரண்டு வசனங்களைத் தவிர ஏனைய இடங்களில் எல்லாம் தான் இஸ்ரயேலர்களுக்காக மட்டுமே வந்ததாகக் கூறுகிறார்.
Math 10;5, 6:"....பிற இனத்தாரின்எப்பகுதிக்கும் செல்லவேண்டாம்....மாறாக, வழிதவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்
John 17;6 "நான் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன்.
John 17;9 அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். ...
இந்த வசனங்கள் தரும் செய்தி என்ன? அவர் தன்னை ஒரு சாதியினரோடு - இஸ்ரயேலரோடு மட்டும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லையா?
இதைவிட, 'ஐயா, எனக்கு உதவியருளும்' என்று பேய் பிடித்த தன் மகளைக் காப்பாற்ற வேண்டி,தன் முன்னே வந்து நின்ற கானானியப் பெண்ணிடம்(வேற்று ஜாதியைச் சேர்ந்தவள்) "இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்" என்று சொல்ல (Math 15:25) அந்தப் பாவப்பட்ட பெண் மேலும் இரந்து நிற்க, "பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" (Math 15:26)(Mark 7:26)என்று ஒன்றல்ல இரண்டு இடங்களில் தேவகுமாரன் சொன்னதாகச் சொல்கிறது விவிலியம். இந்தப்பகுதிக்கு வழக்கமாகக் கொடுக்கப்படும் விளக்கம் இன்னமும் வேதனையாக இருக்கும். கடவுள் அப்பெண்ணின் நம்பிக்கையைச் சோதிக்கவே அப்படிப் பேசினாராம். எனக்கு இதில் எந்தவித நியாயமோ, லாஜிக்கோ தெரியவில்லை. 'விசுவாசம்' என்ற 'கறுப்புக் கண்ணாடி'யைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் எனக்குத் தெரிவது "ஜாதித் துவேஷமே".
மேலும், வேற்று ஜாதியினரை ஒதுக்கிவைக்கும் யேசு, தன் உறவினர்களான மார்த்தா, மரியாவின் சகோதரனான லாசர் இறந்தது அறிந்து ...யேசு உள்ளங்குமுறிக் கலங்கி...அப்போது யேசு கண்ணீர் விட்டு அழுதார்...யேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்குச் சென்றார்." John 11:33, 35, 38
Rev: 7:4-ல் அவரது குலமான் இஸ்ரயேல் மக்களைச் சேர்ந்த 12 குலத்தவர்களுக்கு, குலம் ஒன்றுக்கு பன்னிரண்டு ஆயிரம் என்ற கணக்கில் மொத்தம் 1,44,000 பேர் முத்திரையிடப்பட்டு மோட்சத்திற்கு வருகிறார்கள்.
மொத்தத்தில், ஒரு ஜாதி அல்லது குலம் காக்க வந்த ஒரு tribal leader என்றே எனக்கு யேசு தெரிகிறார். அவ்ர் நல்லவர் என்பதையோ, சொன்ன கருத்துக்களில் பல கருத்துக்கள் நல்லவை என்பதிலோ எனக்கு மாற்றுக்கருத்துக்கள் கிடையாது.
5 *** அடுத்தது - கடவுளின் படைத்தல் பற்றியது. பல கேள்விகள்; என்ன, கொஞ்சம் ''கண்ணைத்திறக்கணும்".
1. 'எல்லாம் வல்ல' கடவுளுக்கு, படைத்தலுக்கு எதற்காக 6 நாட்கள்? 'வா' என்றால் வந்துவிடாதா எல்லாமே?
2. கடவுளுக்கு இந்த படைத்தல் ஒரு களைப்பு தரும் வேலை போலவும், அவர் அதனால் 'ஓய்வு' எடுத்ததாகவும், அதுவே 'ஞாயிற்றுக்கிழமை' (சிலர், இல்லை..இல்லை..அவர் சனிக்கிழமை ஓய்வெடுத்தார் என்றும்) என்பதாகச்சொல்வது எனக்கு kid stuffபோலத்தான் தெரிகிறது. சிறு பிள்ளைகளுக்குச் சொல்லப் படும் கதைகள் போலில்லை இவை?
3. கடவுள் ஆதாமைப் படைக்கிறார்; ஏதேன் (garden of Eden) அவனிடம் ஒப்படைக்கப்படுகிறது. "பின்பு, ஆண்டவராகிய கடவுள், "மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று ...Gen. 2:18 (on second thought?) ஏவாளைப்(Eve) படைத்தார்.
4. Gen. 1:27-ல் 'தன்னுருவில் ஆணும் பெண்ணுமாய் மானிடரைப்படைத்தார்' என்றும், Gen. 2: 21-ல் ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாள் படைக்கப் பட்டதாகவும் உள்ளது. ஒரே புத்தகத்தில் உள்ள வேறுபாடுகள் இவை.
5. இன்னும்கூட பல கிறித்துவர்களும் தங்கள் வழிபாட்டிடங்களில் ஏவாள் இப்படிப் படைக்கப்பட்டதால் எல்லாஆண்களுக்கும் ஒரு விலா எலும்பு குறைவு என்று சொல்ல நானே கேட்டிருக்கிறேன். விசுவாசம் ?? (சுந்தரேஸ்வரர் பிட்டுக்கு மண் சுமந்த கதை நினைவுக்கு வருகிறது ! )
6. படிமங்களாலும் (fossils), விஞ்ஞானத்தாலும் நிறுவப்பட்டுள்ள extinction of species (examples: dinosaurs ) அழிந்து மறைந்து பட்ட உயிரினங்கள் பற்றி ஒரு கேள்வி: கடவுளால் எல்லாமே படைக்கப்பட்டிருந்தால் ஏன் சில வாழமுடியாது அழிந்துபட்டன. God's misconception or miscalculation?? இவை எல்லாமே கடவுளின் "திருவிளையாடல்" என்று மட்டும் கூறிவிடக்கூடாது.
The philosopher John Dewey (1859-1952) writes in "A Common Faith": “........developments in astronomy and geology had made the genesis story of the seven days of creation seem like a fairy tale, that modern views of the spatiotemporal universe had made the doctrines of 'heaven above and hell below' and christ’s ascension into heaven unacceptable to the modern mind'.
7. ஆதாம் ஏடனில் தனிக்காட்டு ராஜாவாக இருக்கிறான். கடவுள் எல்லாம் உனக்கே என்று சொல்லி, பிறகு ஒரு 'rider' வைத்து விடுகிறார் - ஒரே ஒரு மரத்தின் கனியைப் புசிக்கக்கூடாதென்று! மீதிக்கதை எல்லோருக்கும் தெரியும்தானே. பாம்பு வருகிறது; ஏவாளை வார்த்தைகளால் ஏமாற்றுகிறது. தின்னக்கூடாதென சொல்லப்பட்ட கனி "அறிவு பெருவதற்கு விரும்பத்தக்கதாக இருந்ததாகக்" கூறப்படுகிறது. பிறகு அவர்கள் அந்தப் பழத்தைச் சாப்பிட்டு விட, கடவுள் "நீ எங்கிருக்கிறாய்:" என்று கேட்டார்.(Gen: 3:9). சிறு பிள்ளைத்தனமாய் இருக்கலாம். ஆனாலும், சில கேள்விகள்: கடவுளுக்கு அவர்கள் இருக்குமிடம் தெரியலையா?
கடவுள் இந்தப் 'பரிட்சை'யில் அவர்கள் தோற்றுவிடுவார்கள் என்று தெரிந்தும் ஏன் அந்த பரிட்சை? (வேண்டுமென்றே தேர்வைக் கடினமாக்கி மாணவனைப் பழிவாங்கும் ஆசிரியர் நினவுக்கு வருகிறார்.)ஏற்கெனவே கூறியுள்ள predetermined vs freewill என்ற விவாதத்தை இங்கு நினைவு கொள்வது நலம்.
"......Adam 's decision to disobey God originated with Adam and not with God eluded by the claim that God foreknew from eternity that just that eternity that decision would be made. The ruse here is the insistence that God foreknew from eternity that Adam would freely choose to disobey God. But the very notion of freedom as originative causality loses its meaning in such an interpretation" Reason and Religion: An introduction to the philosophy of Religion by Rem B. Edwards; pp 180
7. யேசுவின் வாழ்க்கையில் 12 வயதிலேயே ஆலயத்தில் உள்ள பெரிய குருமார்களிடம் தர்க்கம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அதன் பிறகு பல வருடங்கள் கழித்து தன் 33-வது வயதில் மறுபடி வெளி வாழ்க்கைக்கு வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. 'மறைந்த ஜீவியம்' என்று சொல்லப்படும் காலத்தின் தேவை என்ன?
8. "கடவுளின்மேல் பயமே ஞானத்தின் ஆரம்பம்" (Prov. 1:9 )
"ஞானிகளின் ஞானத்தைஅழிப்பேன்;அறிஞர்களின் அறிவை வெறுமையாக்குவேன்"(Cor. 1:19 )
"ஞானிகளின் எண்ணங்கள் வீணானவை என் ஆண்டவர் அறிவார்" (Cor. 3:20) இந்த மேற்கோள்கள் ஒரு வினாவை என்னுள் எழுப்புகின்றன: ஏன் (பொதுவாக எல்லா மதங்களுமே ) கிறித்துவம் 'ஞானத்தை', அறிவை (fruit of wisdom was forbidden) ஏன் புறந்தள்ளுகின்றன?
அன்பை மையப் புள்ளியாகவைத்தே கிறித்துவம் இயங்குவதாகக் கூறப்படுகிறது' ஆனால், அன்பு அல்ல கடவுளின் மேல் 'பயமே' ஞானத்தின் ஆரம்பம் என்று விவிலியத்தில் கூறப்படுகிறது. ஏனிந்த முரண்பாடு?
ஏற்கெனவே சொன்னது போல இந்த ஐயங்கள் வர வர ஜெபம் செய்தேன் - ஐயங்கள் விலகட்டும் அல்லது பதில் கிடைக்கட்டுமென்று. இரண்டும் நடக்கவில்லை. அதனல், அடுத்த நிலைக்குச் சென்றேன். அது - கிறித்துவத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் உரசிப்பார்ப்பது என்ற நிலை.
அந்த இரண்டாம் நிலை இனி வரும்...
*
அடுத்த பதிவுக்குச் செல்ல: 5.
*
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeletetest
ReplyDeleteதருமி அவர்களே,
ReplyDeleteஎல்லாம் சரிதான். முதலில் எரிதப் பின்னூட்டங்களை நீக்குங்கள். அனாமத்துப் பின்னூட்டங்களுக்கு வழிவகுத்தால் இப்படித்தான் நடக்கும். அதை எடுத்தாலே பாதி பிரச்சினை தீரும்.
இன்னும் பிரச்சினை வந்தால் automated comments வராமல் தடுக்கலாம். இதைப் பற்றி நான் தனிப்பதிவு போட்டிருக்கிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/08/blog-post_24.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteவேற எதையும் இப்ப நான் கேக்கப்போறதில்லை. முழுசும் படிச்சுட்டுச் சொல்றேன்.
ReplyDeleteநல்ல பதிவு!
தருமி,
ReplyDeleteநன்று.தொடருங்கள்.உங்கள் பல கேள்விகள் (குறிப்பாக இஸ்ரவேல் குறித்தவை)நான் பல முறை பெரியவர்களிடம் கேட்டு இன்னும் பதில் கிடைக்காதவை என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்
தருமி,
ReplyDeleteஉங்கள் எண்ணங்களும், சுய விவாதங்களும் - கடவுள், பக்தி போன்ற வெளிபாடையான கோட்பாடுகள் பற்றி ஓரளவு விளக்க முற்படும்போது , பின்னூட்டங்களின் விவாதங்கள், மூலக் கருத்தையே மூடிவிடுகின்றன. முழு விவாத அலையும் ஓய்ந்த பிறகு உங்களுடன் தனிப்பட விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன். உங்கள் எண்ணங்களின் திசையிலேயே என் சுயவிவாதங்களும் செல்கின்றன. இப்போது நடக்கும் குடுமிப்பிடி சண்டையில் என்னால் தாக்குப் பிடிக்க முடியாது. உங்கள் பரிசீலனைகளைத் தொடர்ந்து எழுதுங்கள். முடிவுரையின்போது தொடர்புகொள்கிறேன்.
இதைப் பற்றி நான் என் அறிவுக்கு எட்டிய அளவுக்கு இங்கு எழுதி இருக்கிறேன். http://ariviyalaanmeekam.blogspot.com/2006/09/4.html
ReplyDeleteநேரம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.
evolution பற்றியும் பின்னூட்டங்களில் சில விஷயங்களை touch பண்ணி இருக்கிறேன்.
http://www.tamilchristians.com/Tamil%20News.htm
ReplyDelete??????????????
//மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;//
ReplyDeleteஆக ஆட்கள் மூவர் என்பது உறுதியாகிறது!
//ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல்உட்கார்ந்தவருடைய//
ஆட்டுக்குட்டி ஒன்று, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்தவர் ஒன்று ... வேறு .. வேறு இல்லையா? (இன்னொருவர் எங்கே?)
//சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும்/
தனித்தனியாக இருவர்....
//தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு//
தேவன் வேறு; ஆட்டுக்குட்டி வேறு.
//இயேசு இறைமைந்தன் என்பதற்கு ஆதாரங்களை கொடுத்தாகிவிட்டது. //
மிகச் சரி! ஏசு இறை மைந்தன்... அதாவது கடவுளின் குமாரன். ஆக இரு வேறு entities!
ராபினின் மகன் பரிசு வாங்கினார் என்றால் அது ராபினே வாங்கியதாகக் கொள்ளலாம் என்பது தவறல்லவா என்பது என் elementary question!