அடி ராக்கம்மா!
என்ன ஆரம்பம் இது என்று யோசிக்கிறீர்களா? 'கண்ணம்மா' என்ற பெயர் பிடிக்கும். ஆனால் அந்த 'முண்டாசுக்கவிஞன்' எனக்கு முன்பே பிறந்த ஒரே காரணத்தால் அதை லவட்டிக்கொண்டு போய்விட்டான். என்ன செய்யலாமென யோசிச்சுக்கொண்டிருந்த போது ' பட்டிக்காடா பட்டணமா?'ன்னு ஒரு படம் வந்தது - என்னடி ராக்கம்மா என்றொரு பாட்டோடு. இதில் இன்னொரு விதயம் சொல்லணுமே! சிவாஜி கணேசனுக்கு ஒரு பட்டிக்காடா பட்டணமா? படம்; அவர் மகன் பிரபுவுக்கோ 'சின்னத்தம்பி'ன்னு ஒண்ணு. இந்த இரண்டு படமும் ஏன் இப்படி பிச்சுக்கிட்டு ஓடிச்சின்னு இன்னைக்கு வரை யாருக்கும் பதில் தெரியாது.
எந்த சிறப்பம்சமும் இல்லாமல் - வழக்கமா சிவாஜிக்கின்னாவது இரண்டு மூன்று சீன்கள் இருக்கும் நடிக்கிறதுக்காகவே' அப்படியும் ஏதும் இல்லாமல் - காரணம் தெரியாமலே ஓடிய படம். அதைப்போலவே இந்த 'சின்னத்தம்பி'யும். கதவிடுக்கில மாட்டின எலி கத்துமே அதுமாதிரி பாடுமே ஒரு பொண்ணு, அதாங்க, ஸ்வர்ணலதா- ஆஹா, கருத்தம்மா பாட்டு கேட்டதில்லையான்னு சண்டைக்கு வராதீங்க, ஏதோ அது மாதிரி ஒண்ணு இரண்டு தேரும்; இல்லைன்னு சொல்லலை - அந்தப் பொண்ணு பாடின பாட்டு 'போவோமா?..' அதுவும், 'தூளியிலே..' பாட்டும் தேறும். வேற என்ன இருந்திச்சு அந்தப் படத்தில. வேணும்னா இன்னொண்ணு சொல்லலாம்; குஷ்பூ கடைசி சீன்ல சாமான் செட்டு எல்லாம் போட்டு உடைச்சு ரகளை பண்ணுமே, அப்போ காமிக்கிற அந்த வீட்டுத் தரை ரொம்ப நல்லா இருக்கும் பள பளன்னு. அதென்னமோ ஒரு ராசிங்க இந்த பி. வாசுவுக்கு. அவரு குப்பை நிறைய நல்லா ஓடிருக்கு; நான் ஒண்ணும் 'சந்திரமுகி' பற்றிச் சொல்லலை. பாருங்களேன்; சந்தான பாரதிகூட சேர்ந்து 'பன்னீர்ப் புஷ்பங்கள்'ன்னு ஒரு படம் -நல்ல matured movie ' வந்திச்சு. இரண்டு பேரும் பிரிஞ்சாங்க. அவரு பாவம் அவுட்டு; இவருக்கு ஒரே வெற்றிக் குப்பைதான்.
சரி..சரி... இப்ப என்ன சொல்லவந்தேன். ஆங்...என்னடி ராக்கம்மா பத்தியில்ல. ஆமாங்க...அப்பல்லாம் நான் "கவிதை" எழுதினப்போ (அதையெல்லாம் 'வாக்கியங்களை உடைச்சுப் போட்டுட்டா கவிதையான்னு' ஒருத்தங்க பின்னூட்டத்தில் பின்னிர்ராங்க..என்ன பண்றது. இப்படிதான் பெரிய கவிஞர்களை அவங்க life time-ல் பலர் புரிஞ்சிக்கிறதே இல்லை..போனாப் போகட்டும், விட்டிருவோம் அவங்களை - பொறாமையில் பேசுறாங்கன்னு!) பட். பட். படத்திற்குப் பிறகு ராக்கம்மாதன் நம்ம standard கதாநாயகி..இல்ல..இல்ல..கவிதாநாயகி. ஆச்சா, புரிஞ்சு போச்சுங்களா. இனிமே கவிதைக்கு வருவோமா?
அடியே ராக்கம்மா!
நம் கண்களுக்கு
மட்டுமே தெரியும்
வண்ணங்களில்
நான் வரைந்த சித்திரங்கள்
இன்று
உன் கண்களுக்கே
புரியாமல் போனதென்ன ?
கடைசியிலே ஒரு வரி 'மிஸ்ஸிங்'குபோல இருக்கே தருமி.
ReplyDeleteஉன் கண்களுக்கே
புரியாமல் போனதென்ன
என் கண்களுக்கு
ஆனதைப் போல்?
இது சரியா வருதில்லெ:-))))))))
சரியாதானே இருக்கு. ஏன் மக்கள் இப்படி சொல்றாங்க?
ReplyDeleteஅரிச்சந்திரன கட்டின தாலி மாதிரி நம்ம இரண்டுபேருக்கு மட்டுமே தெரிந்த ஒரு விதயம் இன்னைக்கி உனக்கும் மறந்து/தெரியாம போச்சான்னு கேட்டிருக்கேன். அப்புறம் ஏன் புரியலை,நானென்ன 'எனது ஆறாவது விரலில் ரத்தம் வழிகிறது'' அப்டிங்கிறது மாதிரியா எழுதியிருக்கேன்?
தருமி,
ReplyDelete//இரண்டுபேருக்கு மட்டுமே தெரிந்த ஒரு விதயம் இன்னைக்கி உனக்கும் மறந்து/தெரியாம போச்சான்னு.... //
ஏற்கெனவே நானு மறந்துட்டேன். இன்னிக்கு நீயும் மறந்துட்டேன்னு சொல்லவறீங்களா?
ரொம்ப முக்கியம் பாரு, நினைவு வச்சிக்கன்னு சொன்னாங்களா?:-))))
என் கவிதைக்கு பதவுரையும், பொழிப்புரையும்..( என் நிலமய பாத்தீங்களா, மக்களே! ஒரு 'கவிஞனுக்கு' இது தேவையா?)
ReplyDeleteஅடியே ராக்கம்மா! - அடியே ராக்கம்மா எனப்படும் என் (கற்பனைக்)காதலியே!
நம் கண்களுக்கு - மனமொத்துப் போன நம் இருவர் கண்களுக்கு;
மட்டுமே தெரியும் - வேறெவருக்கும் புரியாத,
வண்ணங்களில் - நமக்குள் மட்டுமே இருந்த ரகசியங்கள்;
நான் வரைந்த சித்திரங்கள் - அந்த ரகசியங்கள் மேல் நான் கட்டிய கற்பனைச்சித்திரங்கள்;
இன்று - today !
உன் கண்களுக்கே
புரியாமல் போனதென்ன ? - நமக்குள் இருந்த உடன்பாடுகள், ஒற்றுமைகள் இன்ன பிற...எல்லாத்தையும் மறந்து போயிட்டியேடி, மடச்சி..(மற்றவர்க்ளுக்குப் புரியாத 'அந்த' விதயங்களை நீயும் மறந்துட்டியா?
பொழிப்புரை:
அது இன்னான்னா, ஒரே ரூட்ல போய்க்கிணு இருந்தமா, இப்ப என்னாச்சி உனக்கு, டர்ருன்னு பிச்சிக்கிணு வேற ரூட்ல போய்ட்டியே'மா, கண்ணு - அப்டீங்கிறார் கவிஞர் !
இன்னா பிரியுதா'மே; சாரி, துளசி, இப்போ புரிஞ்சிடுச்சுங்களா?
ஏண்டா தருமி, இனிம நீ கவித அப்டின்னு ஏதாவது எழுதுவ, மவனே?!
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteயாருக்கும் புரியாட்டிஎன்ன சார்
ReplyDeleteநமக்குத்தேவையே அதானே!
ராக்கம்மாவுக்கு எப்ப கண்ணாலம்..
அவ்வை, நம்ம வலைஞர்களுக்கா அதெல்லாம் புரியாது'ங்ற! எல்லாரும் பயங்கரமான ஆளுகளப்பா. என்னை மாதிரி 'மொடாக்குகள்'னு நினச்சியா?
ReplyDeleteபேருக்கு ஏத்தமாதிரி சரியா சொல்லீட்டீங்க, சித்தன். ஒருத்தருக்குமே புரியாம சித்து வெளையாட்டு காமிக்கிறதுதானே கவிதை, இல்ல?