எப்படிங்க இப்படி..? எப்படி நமக்குள் இப்படி ஒரு உறவு? புரியவேயில்லை...The chemistry of our relationship is a mystery.
பின் எப்படி இந்த கீழ்க்கண்ட நிகழ்வுகளைப் புரிந்து கொள்வது...நீங்களே சொல்லுங்கள்.
1. 3 மணிக்கு சந்திப்பதாகக் கூறியிருந்தோம். சரியாக 3 மணிக்கு நாங்கள் நால்வர் மட்டுமே சேர்ந்திருந்தோம். அப்போது ஒரு தொலை பேசி அழைப்பு எனக்கு. அடுத்த முனையிலிருந்து - சென்னையிலிருந்து சிவஞானம்ஜி. எங்கள் கூட்டம் இனிது நடந்தேற வாழ்த்துக்கள் கூறினார். the mysterious chemistry?!
2. 8 பேர் வந்துவிட கல்பெஞ்சுகளில் போய் உட்காருகிறோம்... அடுத்த அழைப்பு முத்து(தமிழினி)யின் கைத்தொலைபேசிக்கு. அழைத்தவர் ஓகை. முத்துவிடம் மட்டும் பேசாது, முத்துவின் தொலைபேசி வலம் வர, வந்துள்ள ஓவ்வொருவரிடமும் சில நிமிடங்கள் பேசி வாழ்த்து கூறி விடை பெற்றார் ஓகை
- the mysterious chemistry?!
3. நாங்கள் மொத்தம் 10 பதிவர்கள் சேர்ந்து கூட்டம் களை கட்டுகிறது... இன்னொரு overseas call..from Australia..பொட்டீக்கடையிடமிருந்து வரவனையானுக்கு . நானும் அவரிடம் பேசுகிறேன். வரலாறு படம் பார்த்துக்கொண்டே இந்த அழைப்பைக் கொடுத்து எங்கள் கூட்டத்திற்கு வாழ்த்து கூறுகிறார். - the mysterious chemistry works again ?!
4. இதுவரை எனக்கு மட்டுமே வெகு சில பின்னூட்டங்கள் இட்டுள்ள non-பதிவர் நாராயணசாமி என்னும் சின்னக் கடப்பரை சென்னையிலிருந்து என்னை அழைக்கிறார் - மதுரையில் இருந்திருந்தால் எப்படி தானும் கலந்து கொண்டிருக்க முடியும் என்று சொல்லி வாழ்த்து சொல்லுகிறார் - the mysterious chemistry works again and agian ?!
ஒரு பின்குறிப்பு:
கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நான் ஒரு முடிவெடுக்கிறேன் - எவ்வளவு விரைவில் என் ப்ளாக்கில் உள்ள என் புகைப்படத்தை எடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுத்து விட வேண்டும்.. :) அதுதான் மரியாதை...!!!
எவ்வளவு விரைவில் என் ப்ளாக்கில் உள்ள என் புகைப்படத்தை எடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுத்து விட வேண்டும்.. :) அதுதான் மரியாதை...!!!//
ReplyDeleteஏன் அப்படி...? யாருமே ஒரு 55 வயது தோலுக்கு கீழ் ஒரு டீனேஜரன உங்களை எதிர்பார்க்கவில்லையோ... ;-))
எனக்கும் கூப்பிடத்தான் ஆசை, ஆனா வேற மாதிரி Chemistry was on the move :-D over here...
//எவ்வளவு விரைவில் என் ப்ளாக்கில் உள்ள என் புகைப்படத்தை எடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுத்து விட வேண்டும்.. :) அதுதான் மரியாதை...!!!//
ReplyDeleteஇது என்ன mysterious biology-ஆ? :-))
சந்திப்பின் துளிகளை தெரிந்துகொள்ள மிக ஆர்வமாய் - வெங்கட் ஸ்ரீதர்
//
ReplyDeleteகூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நான் ஒரு முடிவெடுக்கிறேன் - எவ்வளவு விரைவில் என் ப்ளாக்கில் உள்ள என் புகைப்படத்தை எடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுத்து விட வேண்டும்.. :) அதுதான் மரியாதை...!!!
//
அது உங்க படம் தானே...இல்ல நீங்க அப்படி இருக்கணும்னு நெனச்சு போட்ட படமா?
ஏதோ, உங்களுக்குன்னு ஒரு வாய்ஸ், ஒரு முகம் கற்பனை செய்து உங்கள் Blog படிக்க அது ஏதுவாக இருந்தது...ஆனால் அதில் பலருக்கு ஏமாற்றம் இருந்தால் அதில் உங்கள் தவறு என்னவாக இருக்க முடியும்?
தருமி,
ReplyDeleteவணக்கம். நலமா?
என்னதான் ஆயிரம் வலை மாநாடு கொண்டாடி இருந்தாலும், மதுரையில் நடந்த 'முதல்' வலை மாநாடு மாதிரி வருமா? :-)))))))))))))))))
சரி. இந்த கெமிஸ்ட்ரியை இன்னும் கொஞ்சம் விவரமா எழுதுங்க.
//கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நான் ஒரு முடிவெடுக்கிறேன் - எவ்வளவு விரைவில் என் ப்ளாக்கில் உள்ள என் புகைப்படத்தை எடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுத்து விட வேண்டும்.. :) அதுதான் மரியாதை...!!!//
ReplyDeleteஎல்லாம் சரி, ஏன் இந்த முடிவு?
இந்த போட்டொவ பாத்துதாங்க நான் உங்க பதிவ படிக்கவே வந்தேன்.
நல்லாத்தான இருக்கு!
அது என்ன வலைப்பதிவர் சந்திப்புக்கு அப்புறம் போட்டோவ தூக்கணும்னு சொல்றிங்க?
//எவ்வளவு விரைவில் என் ப்ளாக்கில் உள்ள என் புகைப்படத்தை எடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுத்து விட வேண்டும்.. :)//
ReplyDeleteஏன்? உங்களை யாருமே கண்டுபிடிக்கவில்லையா?
ட்ரெயிலர்-லாம் ஓகே .படத்த போடுங்கப்பா!
ReplyDeleteஎது புரிஞ்சதோ இல்லையோ..
ReplyDelete//எவ்வளவு விரைவில் என் ப்ளாக்கில் உள்ள என் புகைப்படத்தை எடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுத்து விட வேண்டும்.. :) அதுதான் மரியாதை...!!!//
இது மட்டும் தான் புரிஞ்சது. :-).
இவ்வளவு சீக்கரம் பதி போட்டதிற்கு காரணமும் வெளங்குது.
:-)))
அட! நாந்தான் மொத ஆளா? நன்றி தருமி அவர்களே!எல்லோருடனும் பேசவும் நினைத்தேன். பறவைகளின்
ReplyDeleteஇசையினூடே என்னால் தொலைபேசியில் தொடர்ந்து பேசுவது கடினம்........
சரி, மெயின் படம் எப்போங்க?
//எவ்வளவு விரைவில் என் ப்ளாக்கில் உள்ள என் புகைப்படத்தை எடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுத்து விட வேண்டும்.. :) அதுதான் மரியாதை...!!!//
ReplyDelete:)))))))))))))))))))))))
வீடியோ எங்கே?
தருமி ஞாயிறு அன்று திரும்பி வர வேண்டி இருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை வருகிறேன் என்று மின்னஞ்சல் அனுப்பினேன் வரவில்லை என்று அனுப்பவில்லை. தவறாக எண்ண வேண்டாம்.
ReplyDeleteவிரிவான ஒரு பதிவை எதிர் பார்க்கிறேன்.
// ஒரு பின்குறிப்பு:
ReplyDeleteகூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நான் ஒரு முடிவெடுக்கிறேன் - எவ்வளவு விரைவில் என் ப்ளாக்கில் உள்ள என் புகைப்படத்தை எடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எடுத்து விட வேண்டும்.. :) அதுதான் மரியாதை...!!! //
ஏங்க? புதுப்படம் போடப் போறீங்களா? அதுவும் கலர்ப் படமா!
தருமி, மற்ற தகவல்களில் என்ன கருமியா?....
ReplyDeleteயாரெல்லாம் வந்தது, போண்டா உண்டா?.....அனானிகள் எதிர்ப்பு தீர்மானம் அங்கும் வாசிக்கப்பட்டதா?... (இப்பொல்லாம் அனானிகள் எதிர்ப்பு தீர்மானம் என்பது, எல்லா பதிவர் சந்திப்பிற்க்கும் வந்தே மாதரம்..சாரி, சாரி, தமிழ்த்தாய் வாழ்த்து, ஜனகனமன மாதரி) வேகமா சொல்லுங்க சார்.
தெக்ஸ், வெங்கட் ஸ்ரீதர், வஜ்ரா - மறுபடி அந்த சோகத்தை ஏன் கிளறி விடுறீங்க. என்னமோ போங்க...மனசே சரியில்லை.. ;)
ReplyDeleteதுளசி,
ReplyDelete//மதுரையில் நடந்த 'முதல்' வலை மாநாடு மாதிரி வருமா? :-))))))))))))))))) //
என்ன அப்படி சொல்லிட்டீங்க...என்னதான் இருந்தாலும் அது international meet, அதுவும் முதன் முதல் international meet ஆச்சே!
அது சரி வரிசையா இத்தனை ஸ்மைலிகள் எதுக்கு? நீங்க என்ன இல்லாததையா சொல்லீட்டீங்க!
எப்பவாச்சும் உங்க பதிவை படிப்பவருக்கு,
ReplyDeleteஇப்படி ஒரு பெயரா? அதுவும் இம்மா நீளத்துக்கு...!
//அது என்ன வலைப்பதிவர் சந்திப்புக்கு அப்புறம் போட்டோவ தூக்கணும்னு சொல்றிங்க? //
ஏங்க மறுபடி மறுபடி சோகத்தை கிளர்ரீங்க...விடுங்க அந்த சோகத்தை...
சந்தோஷ்,
ReplyDelete//ஏன்? உங்களை யாருமே கண்டுபிடிக்கவில்லையா? //
அதெல்லாம் கண்டு பிடிச்சாங்க; ஆனா கண்டு பிடிச்சதும் அவங்களும் சோகமாகி, அந்த சோகம் என்னையும் தாக்கி...ஏரியாவே சோகத்தில ஆழ்ந்து போக...விடுங்க...இது மனிதர்கள் (பதிவர்கள்)புரிந்து கொள்ளும் விஷயமில்லை; அதையும் தாண்டி...
ஜோ,
ReplyDeleteமூணாவது பெல் அடிச்ச பிறகுதான் மெயின் படம். வேணும்னா நீங்க வெளிய போய் ஒரு தம் போட்டுட்டு வாங்க.. சும்மா உள்ள உக்காந்துட்டு விசில் அடிக்கக் கூடாது.
i strongly condemn the removal of your profile photo.
ReplyDeleteஅய்யய்ய... நீங்களும் செகப்பு சட்டைக்காரரா...!
ReplyDelete//அதெல்லாம் கண்டு பிடிச்சாங்க; ஆனா கண்டு பிடிச்சதும் அவங்களும் சோகமாகி, அந்த சோகம் என்னையும் தாக்கி...ஏரியாவே சோகத்தில ஆழ்ந்து போக...விடுங்க...இது மனிதர்கள் (பதிவர்கள்)புரிந்து கொள்ளும் விஷயமில்லை; அதையும் தாண்டி...//
ReplyDeleteதருமி சார்,
உங்கள் costume பார்த்த உடனே எனக்கு 50:50 சந்தேகம் இருந்தது... தீர்த்துக் கொள்ளத்தான் கைப்பேசியில் கூப்பிட்டேன்..
மாமாங்கம் கடந்து தமிழ்மணத்தை எட்டிப் பார்த்தால் உங்கள் வலைப்பதிவர் மாநாடு செய்தி. ஆனாலும் எல்லோர் ஆர்வத்தையும் தூண்டிவிட வேண்டுமென்றே எழுதப் பட்டடு போலிருக்கும் கடைசி செய்திக்குத்தான் முன்னுரிமை கிடைத்திருக்கிறது!
ReplyDeleteமுத்து,
ReplyDelete//i strongly condemn ...//
போட்டாலும் திட்டுறீங்க; போடட்டாலும் திட்டுறீங்க
ஐயோ, இப்படி மத்தளமானேனே. இருதலை கொள்ளியிரும்பானேனே...மண்டபத்தில புலம்ப விட்டுட்டீங்களே.. :(
வஜ்ரா,
ReplyDeleteஇல்லீங்க..நான் கருப்பு சட்டைக்காரன் !
ராஜ்வனஜ்,
ReplyDelete//உங்கள் costume பார்த்த உடனே எனக்கு 50:50 சந்தேகம் இருந்தது... //
அப்போ, தருமி மாதிரி 50% மட்டும் இருந்தேன்னு சொல்றீங்க; அப்படித்தானே?
பொன்ஸ்,
ReplyDeleteவீடியோ போடறேன்னு சொன்னவங்கள கேளுங்க'மா...