வந்திருந்தோர்:
லிவிங் ஸ்மைல் வித்யா
பிரபு ராஜதுரை
ராம்
முத்து(தமிழினி)
மஹேஷ்
ஞானவெட்டியான்
வரவனையான்
சுகுணா திவாகர்
ராஜ்வனஜ்
ஜீரா
Dr.சைலஸ்
யார் யாரென நீங்களே கொஞ்சம் மனக்கணக்கு போட்டு வையுங்களேன்!
அமெரிக்கன் கல்லூரிக்கு நான் வந்து சேர்வதற்குள் முதல் ஆளாய் முத்து(தமிழினி) வந்து சேர்ந்திருந்தார். வெளியில் மரத்தடி பெஞ்சுகளில் கூட முடிவு செய்திருந்தும், மழை கொஞ்சம் விளையாட்டு காட்டியது - வந்தாலும் வருவேன்; வராமல் போனாலும் போயிருவேன் என்று சொல்லிக் கொண்டிருந்ததால் எதற்கும் இருக்கட்டும் என்று அறைச்சாவி ஒன்றும் தயாராக வைத்திருந்தோம். துணிந்து வெளியிலேயே அமரலாம் என்று முடிவு கட்டி முடிப்பதற்குள் ஒவ்வொரு பதிவராக வந்து சேர்ந்தார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால் என்னையோ, முத்துவையோ முன்பின் பார்த்திராத பதிவர்களே அதிகம் என்பதால் நாங்கள் வாயிலுக்கு அடுத்தே நின்றாலும், வந்தவர்கள் ஏறக்குறைய எல்லோருமே வாயில்காப்போரைத்தாண்டி உள்ளே வந்து, கைத்தொலிபேசியில் அழைப்பார்கள். நான் தொலைபேசியை எடுத்துப் பேசினால் அவர்கள் அனேகமாக எதிர்த்தாற்போல் நிற்பார்கள்.
எங்களுக்கு அடுத்தபடியாக ஞானவெட்டியான் தன் வாடிக்கையான ஐய்யப்பனின் கால் டாக்சியில் வந்து இறங்கினார். முத்துவுக்கு அறிமுகப்படுத்திய அடுத்த நிமிடத்திலிருந்து அந்த இடத்தை கலகலப்பாக்கிக் கொண்டு இருந்தார் ஞானவெட்டியான்.
கூட்டம் மாலை 3 மணியென்று குறிப்பிட்டிருந்திருந்தேன்; ஆனால் காலையில் 11 மணிக்கே ஒரு போன் வீட்டுக்கு. பேசியது யாரென்றேன். "பாகு" என்று 'ஒரு சொல்'. அவ்வளவு எளிதில் மொடாக்கு எனக்குப் புரியுமா என்ன? நோட்ஸ் கேட்டேன்; பாகு அப்டிங்கிறதுக்கு ஜீரா அப்படின்னும் சொல்லலாம் என்றது மறுமுனை. பிடிபட்டது. ஆஹா! சொல்லாமல் கொள்ளாமல் ஒரு ஆள் புதுசா சேருகிறாரென்று நினைத்து, எப்போ வந்தீங்க; மாலையில வந்துருவீங்கல்ல என்று கேட்டதும் மறுமுனைக்குத் தடுமாற்றம். பிறகுதான் தான் தற்செயலாக மதுரை வந்திருப்பதாகவும், பதிவர் கூட்டம் பற்றித் தெரியாது என்றும் சொல்ல, நான் மாலை வந்து விடுங்கள் என்றேன். தலைகாட்டுவேன் என்றார். அதேபோல் 3 மணிக்கு முன்பே ஞானவெட்டியானுக்கு அடுத்து வந்து இறங்கினார் ஜி.ராகவன்.
அடுத்து ஒரு போன். ராஜா என்று ஒரு குரல்; புரியவில்லை. பிறகு ராஜ்வனஜ் என்றதும்தான் புரிந்தது. எனக்கு நேரே நின்று கொண்டுதான் பேசிக்கொண்டிருந்தார். தில்லியில் வேலை செய்யும் இவர், ஓராண்டு கழித்து வீட்டுக்கு இருவார விடுமுறையில் வரும் இவர் அதில் ஒரு நாளை பதிவர் கூட்டத்திற்காக ஒதுக்கி கோவையிலிருந்து வந்தது எனக்கு மிகவும் பிரமிப்பாயிருந்தது. முன்பதிவில் சொன்ன the mystery of that chemistry தான் நினைவுக்கு வருகிறது. அவரை அடுத்து ஒவ்வொருவராக வர, கல்பெஞ்சுகளுக்குப் போய் சேர்ந்தோம்.அங்கே நண்பரும், உடன்வேலை பார்த்தவரும் இப்போது ஒரு விடுதி காப்பாளராகவும் இருக்கும் முனைவர் சைலஸ் எங்களோடு சேர்ந்து கொண்டார். அதைப் போலவே வரவனையானோடு அவரது நண்பர் ;மிதக்கும் வெளி' கவிஞர் சுகுணாவும் வந்திருந்தார்.
படங்கள் கலக்கல்.. ஆனால் சில பேரைத்தான் கண்டுபிடிக்க முடிந்த்தது...
ReplyDeleteபதிவுக்கு நன்றி
சிலபேரை அடையாளந்தெரிகிறது :-). வளர்மதியும் இந்தப்படங்களில் இருக்கின்றாரா?
ReplyDeleteபெரிய கூட்டமாகத்தான் இருந்திருக்கு. இதில ரெண்டு பேர மட்டும் எனக்குத் தெரியுது.
ReplyDeleteஇடது கீழ் முனையில் இருப்பவர் லி.ஸ்மைல் வலது முனையில் பெரிய மீசையும், மூக்கு கண்ணாடியுடன் இருப்பவர் ஞானவெட்டியான் ஐயா... அவ்வளவுதான் தெரியுது...
தருமிசார்.
ReplyDeleteஉங்களை தொடர்புகொண்டேன் கை பேசி கொஞ்சம் பிசியாகவே இருந்தது.
பதிவுகளை பார்க்கும்போது ஆகா எல்லோருடனும் பேசியிருக்கலாமேன்னு தோன்றியது.
அடுத்தமுறை நிச்சயம் கதைப்போம், கலாய்ப்போம்.
:)
மெகா சீரியலை விட உங்க பதிவு மெகா மெகா பதிவா இருக்கும் போல இருக்கு. எல்லாரையும் அறிமுகப்படுத்தல அதுக்குள்ள தொடரும் போட்டுட்டீங்க.
ReplyDeleteஅப்புறம் எல்லோர் போட்டோவையும் காணோம்? வந்திருந்தோர் பட்டியலில் தருமி பேர காணோம்?
இது கொஞ்சம் அநியாயமாத்தான் எனக்கு தெரியுது.
அடடா தெரியாமல் போய்விட்டதே.!
ReplyDeleteநானும் மதுரையில் தான் இருந்தேன்.ஒரு அற்புத வாய்ப்பு தவறி விட்டது. :(
நம்ம மாதவன் எப்ப கண்ணாடி போட்டார்? இதுவரை தெரியாதே?
ReplyDeleteMahesh, Rajavanaj, G.R
ReplyDeleteMuthuthamizini, Gnanavettiyan
Vithya, Raam, Prabhu Rajadurai.
எங்காளுக்கு என்ன கண்ணாடி மாட்டி விட்டு வேடிக்கை பாக்கறீங்க?
ReplyDeleteஉம்ம போட்டோ எங்க?
இந்த ரெண்டு கேள்விக்கும் உடனடி பதில் வரலைன்னா நாங்க போராட்டத்தில் குளிப்போம்.
அப்புறமா ப்ரொபைலில் பழைய படத்தைப் போடுங்க சாமி. எதோ மிஸ் ஆகுற மாதிரி ஒரு பீலிங்.
ReplyDeletethe old photo was good.in this photo you look older,but the laugh[not smile]is really pleasing and friendly.the old photo gave a philosophical look,somewhere nearing Vivekanandha[over ice].try some more photos and go for voting.
ReplyDeleteதருமி ஸாரை ஃபோட்டாவில் காணோமே.
ReplyDeleteவித்யாவின் புன்னகை அழகாக இருக்கிறது. கோபத்தோடு இருப்பார் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றம்.
மீசையில்லாத ராகவனை முதலில் கண்டறிய இயலவில்லை. மீசையில்லாமலும் ஜம்மென்று இருக்கிறார்.
என்ன பேசினீர்கள்?
// குமரன் (Kumaran) said...
ReplyDeleteநம்ம மாதவன் எப்ப கண்ணாடி போட்டார்? இதுவரை தெரியாதே? //
குமரன் அந்தக் கண்ணாடியோட அமைப்பைப் பாருங்க...மாறுபட்ட விதமில்லையா.....எப்படியிருக்கும்னு ஆசையா வாங்குனது....ஆனா கண்ணாடி முகத்தோற்றத்தையே மாத்தீருது. பெங்களூர்ல பஸ்சுல ஆபீசுக்கும் போகையில வெயில்ல கண் கூசுது. சென்னையில இருக்குற டாலர்ஸ் அண்டு பவுண்ட்ஸ்ல நல்ல கலர் கண்ணாடிக இருக்கு. அடுத்த வாட்டி போகும் போது வாங்கனும்.
அதுவுமில்லாம மூனு நாளும் தொடர் அலைச்சல். அளவுக்கு அதிகமாவே சாப்பாடு...அதுவும் கூட தோற்ற மாற்றத்துக்குக் காரணமா இருக்கலாம்.
ஜிரா,
ReplyDelete//மூனு நாளும் தொடர் அலைச்சல். அளவுக்கு அதிகமாவே சாப்பாடு...//
அப்படியிருந்தும் நீங்க எப்படி சார், இப்படி இருக்கீங்க? (அப்டின்னு கேக்கணும?) :)
எனக்கு அடையாளம் தெரிஞ்சவுங்க இவுங்கதான்.
ReplyDeleteவித்யா,
பிரபு,
ராகவன்,
ஞானவெட்டியார்.
சதயம்,
ReplyDeleteசிவபாலன்,
டி.சே.தமிழன் (வளர்மதி எனக்குத் தெரியாதே!),
நன்றி.
நன்றி தெக்ஸ்.
ReplyDeleteசிறில்,
ReplyDeleteஅடடா, மிஸ் பண்ணிட்டோமோ!
அடுத்த தடவை கலாய்க்கிறது நேரிலா, தொலை பேசி வழியாகவா..?
குறும்பன்,
ReplyDelete//வந்திருந்தோர் பட்டியலில் தருமி பேர காணோம்? //
நல்லவங்க நாலு பேரு இருக்கிற இடத்தில அந்த மனுசன் பேரெல்லாம் எதுக்குன்னு விட்டுட்டேன்.
சிவமுருகன்,
ReplyDeleteஉங்க கூட " டூ ".
குமரன்,'
ReplyDeleteஜிரா கண்ணாடி போட்டா என்ன, போடாட்டி என்ன? அவரு அவருதான்!
கொத்ஸ்,
ReplyDelete//இந்த ரெண்டு கேள்விக்கும் உடனடி பதில் வரலைன்னா நாங்க போராட்டத்தில் குளிப்போம். //
உங்க ரெண்டு கேள்விக்கும் பதில் தர்ரதா இல்லை. அப்படியாவது உங்கள குளிக்க வச்சிரலாமுன்னு ஒரு ஐடியா..! :)
நல்ல விஷயம்! தொடர்ந்து சந்தியுங்கள்.
ReplyDeleteமதுரைக்கு சென்னையிலிருந்து 3 1/2 மணி நேரத்தில் செல்லக்கூடிய வேவவவவவக ரயில் விடப்போகிறார்களாமே?
அடுத்த சந்திப்புக்குள் ரயில் ஆரம்பிக்கப்பட்டால் நானும் ஆஜர் ஆகிறேன் :)
சந்திப்பின் details காண காத்திருக்கும்,
-BNI
// Muse (# 5279076) said...
ReplyDeleteமீசையில்லாத ராகவனை முதலில் கண்டறிய இயலவில்லை. மீசையில்லாமலும் ஜம்மென்று இருக்கிறார். //
ஐயோ மூஸ், என்னைய மீசையோட எப்ப பாத்தீங்க? மீசையோட எம்முகம் எப்படியிருக்கும்னு எனக்கே மறந்து போச்சே!
// Dharumi said...
ஜிரா,
//மூனு நாளும் தொடர் அலைச்சல். அளவுக்கு அதிகமாவே சாப்பாடு...//
அப்படியிருந்தும் நீங்க எப்படி சார், இப்படி இருக்கீங்க? (அப்டின்னு கேக்கணும?) :) //
எப்படீங்க? என்ன சொல்ல வர்ரீங்கன்னே புரியலையே! தெளிவாச் சொல்லுங்க சாலமன் பாப்பையா சார்...நோ நோ தருமி சார். புதுப் போட்டோவுல சா.பா மாதிரியே இருக்கீங்க?
ராகவன் தவிர யாரையும் தெரியலை. வீடியோ எடுத்தீங்களா?
ReplyDeleteஇதற்குத்தான் அப்பொழுதே சொன்னேன்!
ReplyDeleteநல்லா புகைப்படம் எடுப்பவராய்ப் பார்த்து புகைப்படம் எடுங்கள் என்று.
பாருங்களேன்; என் சிவந்த முகத்தைக் கருப்பாக்கியும், கருத்த மீசையை வெளுப்பாக்கியும் காட்டிவிட்டார்(தருமி).
ம்..ம்..ம்.. இது இர்ரண்டையும் தவிர என் முகத்தையே காணோம்.
வருந்துகிறேன்!!!
ஸ்...ஸ்...ஞானவெட்டியான்,
ReplyDeleteசத்தம் போடாதீர்கள். கண் பட்டு விடுமே என்று படத்தை இந்த மாதிரி போட்டுருக்கிறேன். கண்டுக்காதீங்க..ஒர்த்தரிடமும் சொல்லாதீங்க... :)
ம்..ம்..ம்..
ReplyDeleteஅப்படியா செய்தி?
என்ன இருந்தாலும் தருமி நம் நண்பரல்லவா?
ஞானம் சார் மீசைக்கு கருப்பு அடிக்காமல் ஏன் சென்றீர்கள்
ReplyDeleteஅன்பு என்னார்,
ReplyDeleteஎப்பொழுதுமே நான் கறுப்புச் சாயம் பூசுவதில்லையே!
கறுப்புதான் அழகு;
அந்த யானையைப் பாருங்கள் அழகு.
ஏன்; இறையே இருள்தானே!!
நான் நானாகவே இருக்க விரும்புபவன்.
அன்பு தருமி,
ReplyDeleteஅய்யய்ய!!
பழைய புகைப்படமே தேவலையே.
பயமுறுத்தாதீர்களேன்.
//
ReplyDeleteசிவமுருகன்,
உங்க கூட " டூ ".
//
:(((((((((((((
அடப்பாவிகளா,
ReplyDeleteநீங்க அவரு மாதிரி இருக்கீங்க...அவரு உங்கள மாதிரி இருக்காருன்னு சொல்லியே...பாருங்க...
அவரு முதுகு காட்ட ஆரம்பிச்சுட்டாருய்யா..
போங்கய்யா நீங்களும் உங்க வலப்பதிவு சந்திப்பும்...