Saturday, November 04, 2006

186. அமெரிக்கத் துளிகள் - II

.

.

இப்பதிவோடு தொடர்புள்ள ஏனைய பதிவுகள்:--


Don’t be nice to Desis -- ப்ரேமாலதா
Won’t Smile Back Syndrome - ஹேமந்த்.


Niceties and not so nice NRIs in US -- பாஸ்டன் பாலா

அமெரிக்காவில் இந்தியர்கள் : தருமியின் கவனத்திற்கு...! -- தெக்ஸ்

பேரா. தருமி அய்யா இந்த கதை தெரியுமா? -- பால பாரதி

அமெரிக்கத் தமிழனின் அவலம்! -- செல்லா

அமெரிக்க வாழ்க்கை -- அவிட்டம்

எனது முந்திய பதிவு.


மகள் தொலைபேசியில் சொன்ன ஒரு சேதியை வைத்தும், என் நேரடி அனுபவத்தையும் வைத்து ரொம்பவும் சீரியஸாக இல்லாமல் எழுதிய முந்திய பதிவுக்கு வந்த எதிர்வினைகள் (reactions) இதைப் பற்றி சீரியஸாகவே என்னை நினைக்க வைத்துள்ளன.

ப்ரேமலதா வின் பதிவில் அவரது சொந்த அனுபவம் - மிக மிக கசப்பானவைதான் - எழுதியுள்ளது பற்றி பாஸ்டன் பாலாவின் பதிவிலிருந்தே தெரிந்தது. பிரேமலதாவின் பதிவிற்குப் பதில் ஏதும் தர முடியாதுதான். On day 1, she has met a fellow too nasty and the other guy on the second day was both cruel and stupid. She was so unlucky to have met guys of this sort. அதன் பின் வந்த பதிவுகள் அவைகளுக்கு வந்த பின்னூட்டங்கள் "இது ஒரு நல்ல மனோ தத்துவம் சார்ந்த ஆராய்ச்சிக்கு உகந்த விசயமாக படவில்லையா?" என்ற தெக்கிக்காட்டானின் கேள்வியை மிகவும் பொருளுள்ளதாக ஆக்குகின்றன.


என் முதல் பதிவிற்குக் காரணம் - நாம் பட்டிக்காட்டுத் தனம் என்று எள்ளி நகையாடியவைகள் இன்று நல்ல பண்புகளாக நமக்குத் தெரிய ஆரம்பிக்கிறதே என்பதே அது. நகரங்களில் அடிக்கடி அடிபடும் ஒரு ஜோக் - தியேட்டரில் யாரையும் பார்க்கும்போது 'என்ன சினிமா பார்க்க வந்தீங்களா?' என்று யாரும் கேட்பதோ, ஹோட்டலில் பார்க்கும்போது 'என்ன சாப்பிட வந்தீங்களா?' என்று யாரும் கேட்பதோ ஒரு பெரிய ஜோக்காக நமக்கு இன்று இருக்கிறது. ஆனால்,இன்னும் நம் கிராமப் பகுதிகளில் தினமும் பார்க்கும் ஒருவர், மண்வெட்டியோடு இல்லை வேறு விவசாயக் கருவிகளோடு எதிர் வரும்போது எல்லோருக்கும் தெரியும் அவர் வயல் வேலைக்குத்தான் போகிறார் என்று. ஆனாலும் 'என்ன'பா, வயல் வேலைக்கி கிளம்பியாச்சா?' என்றோ, வெள்ளையுஞ் சள்ளையுமா கிளம்பின ஆள பார்த்து 'என்ன,டவுனுக்குப் போறாப்பலையா?' என்றோ, அல்லது 'என்ன'பா, ரொம்ப தூரமா?" (எங்கே போகிறாய் என்று கேட்கக் கூடாதல்லவா?!) என்றோ கேட்பது வழக்கம். ஊர்க்காரரோடு புதிதாக யாரும் வந்தாலும், 'தம்பி, புதுசாயிருக்கே!' என்று பூடகமாகக் கேட்பதும் பல காலத்து வழக்கம். இதில் கேள்வி கேட்பதும், கேட்கப்படுவதுமே முக்கியம். தரப்படும் பதில்கள் இரண்டாம் பட்சம்தான். பட்டினத்து ஆட்கள் இதை 'சுத்தப் பட்டிக்காட்டுத் தனம்' என்று சொல்வதும் வழக்கம். இது போன்ற கேள்விகள் நம்ம மாடர்ன் ஸ்டைலில் 'Good morning', 'Hi!', Long time no see!, 'So long' என்று சொல்வதற்கு ஒப்பானது என்று இப்போதுதான் எனக்கும் புரிகிறது. இதுதான் எதிர்த்தாற்போல் வருபவரை நம் மக்கள் 'கண்டுகொள்ளும்'முறை.

ஆனால் இந்த நடப்புகளை முழுவதுமாக இழந்துவிட்டு இன்று "இந்தியாவில் எதிர்ப்படுவோரிடம் முகமன் கூறும் பழக்கம் இருந்ததில்லை ( பாஸ்டன் பாலா )" என்ற நகர்ப்புற வழக்கத்தை வைத்து ஒரு முடிவெடுக்கிறோமா? மேலை நாட்டுக்காரர்களின் thank you என்பதற்கு பதில் நம்மூரில் ஒரு புன்னகை இருந்தது; அனேகமாக அந்தப் பழக்கம் போயே போய்விட்டது. sorry-என்பதையும் சில body languages மூலமாகச் சொல்லி வந்தோம். யார் காலையாவது மிதித்து விட்டால், இன்னும் பலர் செய்வோமே அதுதான் நம்ம ஊர் sorry / excuse me. ஆனால் அவைகள்"'பட்டிக்காட்டுத்தனம்" என்பதாக முற்றிலும் மறக்கப்பட்டு விட்டன. சரி, புதிதாக வந்த மேலை நாட்டு பழக்கங்களையாவது பற்றிக் கொண்டோமா என்றால் அதுவும் இல்லை. இதனாலேயே நான் என் மாணவர்களிடம், Try to learn to say 'sorry' and 'thanks'. It would make your life happier.என்று சொல்வதுண்டு.

//நம்மவர்களின் பிரச்சினையே தானாகவே இல்லாமல் மற்றவரைப் பார்த்து காப்பியடிப்பது … கலாச்சாரம் முதல் மொழி வரை .. இது நம்மவரின் inferiority complex !?? - செல்லா. செல்லா இதை முடிவாகச் சொல்லவில்லையா என்று தெரியவில்ல; ஏனெனில் அவர் கூற்றிற்குப் பிறகு !?? போட்டு விட்டார் ??! Chella, whether we like it or not, the world is going and has gone all the way of the West - whether it is our jeans or our mental makeup. We have to accept it? Right? ஜப்பானில் எல்லோரும் அது என்ன, கிமோனாவையா அணிகிறார்கள்? நாம் என்ன நம்ம தாத்தா கட்டிய நாலு முழ அல்லது அதைவிடக் குறைந்த துணியையா கட்டிக் கொண்டிருக்கிறோம். ஆகவே இது தன்னிச்சையாக - நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் - நடக்கும் ஒரு காரியம். no chance for any rewinding...! அதனால் இதை நீங்கள் சொல்வது போல் inferiority complex என்று கூற முடியவில்லை. We ape, of course. but who else does not?

இல்ல, செல்லா. இந்த inferiority complex என்பதெல்லாம் எங்க காலத்து விஷயம். உங்களுக்கு அந்த good old joke தெரியுமில்லையா? அமெரிக்க அம்மா தன் குழந்தையிடம் அந்தக் காலத்தில் - அதாவது எங்க காலத்தில - சொன்னது: ஒழுங்கா சாப்பிடு; இல்ல, the hungry children of India would snatch away your meal. ஆனா இப்போ உங்க காலத்தில அந்த அமெரிக்க அம்மா: ஒழுங்கா படி; இல்ல the intelligent guys from India would snatch away your jobs! - இப்படி மாறிப்போச்சு, செல்லா. அதனால உங்களுக்கெல்லாம் இன்னுமா எங்களுக்கு இருந்தது போல inferiority complex இருக்குங்றீங்க? அப்படியே இருந்துதுன்னா ரொம்ப தப்பு. We have proved what we are - at least we are not second to none. Skin colour does not matter at all. இல்லீங்களா? எங்களுக்கெல்லாம் அவங்க 'துரை மார்கள்'; உங்களுக்கு just colleagues. இல்லியா?

ஆயினும் எனக்கு விடைதெரியாத ஒரு கேள்வி: நம் ஆங்கில மோகத்திற்கு british legacy என்று ஒரு வரி விளக்கம் கூறுவதுண்டு. ஆனால் அது எப்படி நமக்கு மட்டும் இந்த மோகம்; நம் அடுத்த வீட்டு, மலையாளிகளுக்கோ, ஆந்திரர்களுக்கோ, கன்னடத்துக்காரர்களுக்கோ இல்லாதபடி நாம் மட்டும் ஏன் இந்த "மோகவலை"யில் சிக்கிக் கொண்டுள்ளோம்? என் மாணவர்களிடம் பரிட்சித்துப் பார்க்க சொன்ன ஒரு விஷயம்: ஒரு நாள் தொடர்வண்டி நிலையத்தில் சாதாரணமாக pants போட்டுக் கொண்டு தமிழில் ஒரு தொடர்வண்டி வரும் நேரத்தை அங்கு வேலை செய்யும் ஒருவரிடம் கேட்க வேண்டும்; அடுத்த நாள், சட்டையை tuck செஞ்சி,ஷூ எல்லாம் போட்டுக்கிட்டு (வேற ஆள்கிட்டதான்!) கேட்கணும்; அடுத்த நாள் அதே மாதிரி உடையோடு, eh..excuse me ...ah.. could you please tell me ..ehh.. (இவ்வளவு ஆங்கிலம் போதும்; அதன் பிறகு நம்ம தமிழ் போதும் !) இந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு வரும்...? என்று கேட்கணும். - மூன்றில் எதற்கு மரியாதை கிடைக்கிறது என்று பார் என்று. நிச்சயம் இந்த மூன்றிற்கும் நம்மூரில் நல்ல வித்தியாசமான பதில்கள் வரும். ஆனால் அடுத்த ஊர் கேரளாவில் அப்படி நிச்சயமாக இல்லை; வேட்டிக்கு இன்றும் மரியாதை உண்டு; மலையாளத்துக்கும்தான். ஏன் இப்படி?

பால பாரதி, இன்னும் பலரும் சொல்லுவதை வைத்து நான் வைத்திருந்த ஒரு கருத்தை மாற்றிக் கொள்கிறென். நான் என்னவோ இது அமெரிக்காவில் உள்ள நம் மக்கள்தான் இப்படி 'பாராமுக"வித்தை பயின்றுள்ளார்கள் என்று நினைத்திருந்தேன். பாலபாரதியின் நேரடி அனுபவமும், மற்றும் வந்துள்ள பலப்பல பின்னூட்டங்களிலிருந்தும் இது தவறு; நம் ஊரிலும் அப்படித்தான் என்ற கருத்தை - கொஞ்சம் அரைகுறை மனத்துடன், அதாவது with some reservation - ஒப்புக் கொள்கிறேன். முழுமையாக ஒப்புக் கொள்ள மனம் மறுக்கிறது. இன்றும் ரயில், பஸ் பயணங்களில் அடுத்து அமர்ந்திருப்பவரோடு, அவர் நம் frequency-க்கு ஒத்து வரும் ஆளாக இருக்கும் பட்சத்தில், விடை பெறும்போது ஒருவரிடம் ஒருவர் சொல்லிக்கொண்டு செல்லும் அளவுக்கு நட்பு பாராட்ட என்னால் முடிந்திருக்கிறது. ஒரு ரயில் பயண நட்பு பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலும் இன்றும் நீட்டிக்கிறது. இருப்பினும் ஒப்புக் கொள்கிறேன். ஆகவே இதை அமெரிக்கத்தனம் என்று கூறாமல் பால பாரதி சொன்னது போல, பட்டணத்து ராசா கேட்டதை ஒத்துக் கொண்டு, "தமிழ்த்தனம்" என்று அழைக்கிறேன். ஆயினும்,மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எழுதியுள்ள நெல்லை கிறுக்கன், ஹரிகரன் அங்கேயெல்லாம் அப்படி இல்லை என்று கூறுவதற்கு என்ன விளக்கம் கூறுவதென்பது தெரியவில்லை. அதேபோல் ஒட்டு மொத்தமாநம் இலங்கைத் தமிழர்கள் பற்றி எல்லோரும் ஒருமித்துக் கூறும் நல்ல கருத்துக்காக அவர்களுக்கு ஒரு " ஓ " போடுவோம்!

அடுத்த கேள்வி: ஆங்கில மோகம் நமக்கு மட்டும் இவ்வளவு ஏன் என்று கேட்டேன்; அதோடு இப்போது இன்னொரு கேள்வி - மற்ற மாநிலத்தவர் போலன்றி நாம் மட்டும் ஏன் நம் 'அயலானை நேசிக்க முடியவில்லை?

//இன்று நாம் வலைப்பதிவின் மூலம் அறிமுகமாகி, முகம் பார்க்காமல் தினமும் சாட்டிங்கும் போனும் செய்து நெருக்கமான நண்பர்களாக இருக்க முடிகிறது. அது போலத்தானே நேரில் பார்க்கும் நேரங்களிலும் இருக்க வேண்டும்? //- கொத்ஸ் எல்லோரும், எல்லோருடனுமா அப்படி இருக்கிறோம்; இருக்க முடியும்? ஒத்தக் குணம், கருத்துக்கள் இவை எல்லாம் கூடி வந்தால்தானே தெரிதல் நட்பாகி அதன் பின் நெருக்கமெல்லாம் வருகிறது. ஆனால் நீங்கள் சொன்ன ஒரு கருத்தோடு நான் முழுமையாக உடன் படுகிறேன்: "அது நம் வளர்ப்பின் வெளிப்பாடு. There seems to be an inherent mistrust about others in our minds."

அப்சல் விஷயமோ, இடப் பங்கீடு போலவோ, மத விவகாரம் போலவோ இல்லாமல் நான் எழுதிய ஒரு விஷயத்தில் அதிக மன வேறுபாடின்றி நாம் இந்த சமூக நிலைப்பாட்டில் பின் தங்கியுள்ளோம் என்பதில் நமக்கு ஒத்தக் கருத்திருப்பதாக உணர்கிறேன்! அப்பாடா...!!

ஒத்தக் கருத்து ஒரு விஷயத்தில் வந்திருச்சின்னா, அப்ப அடுத்த ஸ்டெப் - இதுக்கு நாம என்ன செய்றது? இங்க இந்த அளவு விவாதம் நடந்ததே பலருக்கும் ஒரு கண் திறப்பாக பல காரியங்கள் இருந்திருக்கும். குற்றமுள்ளவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ளவும், குற்றம் சாட்டுவோர் வேறு ஒரு கோணத்தில் (perspective) இதைப் பார்க்கவும் முடியுமென நினைக்கிறேன். KVD சொல்வது போல '... this as a "socio psychological issue",.." என்ற அளவில் நாம் ஒவ்வொருவரும் இந்த inherent mistrust-யை விலக்க முயலமுடியாதா?


தமிழ்த் தனத்தை மாற்றுவோமா?...please.


.

.

.

18 comments:

  1. தருமி சார்,

    கண்டிப்பா மாத்தணும்.

    குறைந்தபட்சம் அறிமுக சமயங்களிலேயே புதிய நபர் பற்றிய எல்லா விஷயங்களையும் அறிந்தே தீரவேண்டும் என்ற "வம்பு" புத்தியை விட்டுவிட முயற்சிக்க வேண்டும்.

    கூடியமட்டும் தனித்தன்மையோடு சிறு சிறு விஷயங்களிலும் பப்ளிக் ரிசோர்சஸைப் பயன்படுத்திக் கொள்ளப்பழகவேண்டும்.

    பார்த்த அடுத்த நிமிடமே உரிமையோடு உரிமைமீறல் செய்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

    எங்கே எப்படிப் போகணும்னு தமிழ்ல கேட்டா பதில் சொல்லணும்.. அதே மாதிரி நம்மாள மடக்கிக் கேட்குறதுக்கு முன்னாடி முடிந்த அளவுக்கு பப்ளிக் ரிசோர்ஸ்ல தகவல்கள் திரட்டவேண்டும்.

    ReplyDelete
  2. Hatiharan சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  3. தருமி ஐயா,
    மிக நன்றாகச் சொல்லி உள்ளீர்கள், உங்களது முந்தைய பதிவை படித்துவிட்டு எங்கே நீங்களும் நம்மவர்களை குறை கூறுகிறீர்கள் என நினைத்தேன் , ஆனால் அது தவறு என
    //"என் முதல் பதிவிற்குக் காரணம் - நாம் பட்டிக்காட்டுத் தனம் என்று எள்ளி நகையாடியவைகள் இன்று நல்ல பண்புகளாக நமக்குத் தெரிய ஆரம்பிக்கிறதே என்பதே அது."//
    உங்களது இந்த பதிவின் மூலம் அரிந்த்து கொண்டேன்.

    நீங்கள் கூறிய படி தமிழ்த்தனத்தை கண்டிப்பாக மாற்ற வேண்டும். நானும் ஒரு பட்டிக்காட்டான்தான், எனது கல்லுரி நாட்களில் எனது பட்டிக்காட்டுத் தனத்துக்காக நண்பர்க்ளால் கேலி செய்யப்பட்டு , நானும் அவைகளை எல்லாம் விட்டு விட்டு நடித்துகொண்டு இருந்தேன். அண்மையில் தான் பிரான்ஸ் நாட்டிற்க்கு வந்தேன், இங்கு எனது முதல் அணுபவம் வேறு மாதிரியாக இருந்தது. நான் முதன் முதலில் சந்தித்த ஒரு இந்தியர் , யரென்றே தெரியாது, முதன் முதலாக என் ந்ண்பர்கள் இரண்டு பேர் என இரயில் நிலைய வாசலில் சந்திகிறோம். சிரிது நேர அறிமுக உரையாடல் களுக்கு பிறகு அன்றே எங்களை அவர் வீட்டிற்கு அழைத்தார்.(எங்களுக்கு சிறிது அதிர்ச்சி தான் ஏனெனில் நாங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களை பற்றி கேள்வி பட்டிருந்தது அப்படி...), அவருடைய காரில் அழைத்து சென்றார் முன் அறிவிப்பின்றி மூன்று விருந்தினருடன் வந்த அவரை அவருடைய மனைவி சினிமா, சீரியல் மனைவிகள் போல் திட்டவில்லை, மிக அருமையான இந்திய உணவு கிடைதுதது. அன்று நாங்கள் மூவரும் முடிவு செய்தோம் நாமும் நமது தமிழ்த்தனத்தை மாற்ற வேண்ட்டும் என...

    ReplyDelete
  4. தருமி ஐயா,
    மிக நன்றாகச் சொல்லி உள்ளீர்கள், உங்களது முந்தைய பதிவை படித்துவிட்டு எங்கே நீங்களும் நம்மவர்களை குறை கூறுகிறீர்கள் என நினைத்தேன் , ஆனால் அது தவறு என
    //"என் முதல் பதிவிற்குக் காரணம் - நாம் பட்டிக்காட்டுத் தனம் என்று எள்ளி நகையாடியவைகள் இன்று நல்ல பண்புகளாக நமக்குத் தெரிய ஆரம்பிக்கிறதே என்பதே அது."//
    உங்களது இந்த பதிவின் மூலம் அரிந்த்து கொண்டேன்.

    நீங்கள் கூறிய படி தமிழ்த்தனத்தை கண்டிப்பாக மாற்ற வேண்டும். நானும் ஒரு பட்டிக்காட்டான்தான், எனது கல்லுரி நாட்களில் எனது பட்டிக்காட்டுத் தனத்துக்காக நண்பர்க்ளால் கேலி செய்யப்பட்டு , நானும் அவைகளை எல்லாம் விட்டு விட்டு நடித்துகொண்டு இருந்தேன். அண்மையில் தான் பிரான்ஸ் நாட்டிற்க்கு வந்தேன், இங்கு எனது முதல் அணுபவம் வேறு மாதிரியாக இருந்தது. நான் முதன் முதலில் சந்தித்த ஒரு இந்தியர் , யரென்றே தெரியாது, முதன் முதலாக என் ந்ண்பர்கள் இரண்டு பேர் என இரயில் நிலைய வாசலில் சந்திகிறோம். சிரிது நேர அறிமுக உரையாடல் களுக்கு பிறகு அன்றே எங்களை அவர் வீட்டிற்கு அழைத்தார்.(எங்களுக்கு சிறிது அதிர்ச்சி தான் ஏனெனில் நாங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களை பற்றி கேள்வி பட்டிருந்தது அப்படி...), அவருடைய காரில் அழைத்து சென்றார் முன் அறிவிப்பின்றி மூன்று விருந்தினருடன் வந்த அவரை அவருடைய மனைவி சினிமா, சீரியல் மனைவிகள் போல் திட்டவில்லை, மிக அருமையான இந்திய உணவு கிடைதுதது. அன்று நாங்கள் மூவரும் முடிவு செய்தோம் நாமும் நமது தமிழ்த்தனத்தை மாற்ற வேண்ட்டும் என...

    ReplyDelete
  5. :-) என்ன தருமி....ரொம்ப ஆவேசமா இருக்குறாப்புல இருக்கு. என்ன செய்றது? ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை. எத்தனை மனங்களுண்டோ அத்தனை குணங்களுண்டுன்னு எழுதியிருக்காரே கவியரவர். (நான் கவியரசர்னு இவர் ஒருத்தரத்தான் சொல்றது).

    ReplyDelete
  6. எல்லாம் சரிதான். ஆனா ஊர் விட்டு வெளியே இந்தியாவிலேயே எந்தப் பெரு நகரங்களுக்குப் போனாலுமே இந்த நிலை தான் வந்து விட்டது.

    இன்னும் கொஞ்ச வருடங்களில் கிராமங்களிலும் இது ஆக்ரமித்துவிடும் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.

    ஆமா அதுக்காக நீங்க ஏன் திரும்பி நிற்கிறீங்க:-)

    ReplyDelete
  7. ஒத்த கருத்தோ இல்லையோ, நிறைய புன்னகைக்கணும், பார்க்கும் போது வணக்கம் அப்படின்னு வாய் நிறைய சொல்லணும், ஒரு உதவி கேட்கும் போது தயவு செய்து என்றும் உதவி கிடைத்த பின் நன்றி எனவும் வார்த்தைகளை செலவு செய்யணும், கண்ட இடத்தில் குப்பை போடாம இருக்கணும்- இது எல்லாம் செஞ்சாலே ஒரு பெரிய ஆரம்பம்தான். செய்வோமா?

    (இன்னும் கொஞ்சம் இருக்கு, அது பத்தி பேசினா பதிவை ஹைஜாக் செஞ்ச பாவம் வரும், அது எனக்கு இப்ப வேண்டாம்!)

    ReplyDelete
  8. தருமி அதெல்லாம் சரித்தான். இப்ப என்னோட ஃஎப்.பி.ஐ தொலைபேசி விசாரிப்பை பற்றி என்ன சொல்றீங்க. இன்னமும் படிக்கலேன்னா, ஒரு பின்னூட்ட பதிலில் என் பதிவில் சொல்லி இருக்கேன், படிச்சுட்டு நான் என்ன பண்ணணுமின்னு சொல்லுங்கய்யா... ;-)

    என்ன நம்ம வீட்டு பக்கமே காணோம். வீட்டுல வேற விசேஷம், இந்த ஒரு வாரத்திற்கு, வர வேண்டியவுகளே அந்த பக்கம் வராம இருந்த எப்படி... :-))

    ReplyDelete
  9. முன்பு படித்த இன்னொரு தொடர்பான பதிவு + பின்னூட்ட கருத்துகள்:

    Instant Kaapi » Blog Archive » Won’t Smile Back Syndrome

    ReplyDelete
  10. நீங்க சொன்னதை அப்படியே ஆமோதிக்கிறேன்.
    இதோ நான் மாறியாச்சு.

    ஏம்ப்ப்பா... வலைஞர்களே எல்லோரும் சுகமா?

    சரி, இன்னிக்கு சமையல் என்ன?:-)))

    ReplyDelete
  11. My thanks and appreciation for taking this subject and making a discussion on this. Although, I'm with you in analyzing this topic, I have strong objection against the final outcome of this article and most of the comments(I&II) - that projecting this as: "தமிழ்த் தனம்","inherent mistrust".

    Thanks to "கொத்ஸ்", "தெக்கிக்காட்டானின்" - they seem to approach this in a more relevant direction.

    My context behind these kind "human behaviors" would have relevance to following factors than any (tamil) communal factor.
    1. socio psychological issue
    2. lack of (social) skill
    3. நம் வளர்ப்பின் வெளிப்பாடு (or) a habit never been taught in our childhood.
    4. Few freaks show off this due their attitude in status, caste, etc (we can ignore these freaks as they are not the focus of subject here)

    Projecting this as a habit/character of Tamil community is no different than making fun of Sikhs as stupids (through jokes).
    Although I typed more stronger words to respond...I edited myself and have the following final say on this subject:
    I'm *strongly condemn* these manipulative ways to color a/any community, in this case my Tamil community.

    More relavent to this article...I totally agree with "கொத்ஸ்" comment:
    /*
    ஒத்த கருத்தோ இல்லையோ,..........
    */
    Again, nothing personnel here or not against any person.

    Thanks,
    KVD.

    ReplyDelete
  12. mine was posted a long time before your post.

    ReplyDelete
  13. first thing i observe when i go to india is that people don't smile. (but I get a hell a lot of smile when i go to kombai.)
    second thing, people who start conversation do not know/care what is the decent limit.
    thirdly, I never liked bus talks when i was india also. mostly because i used to travel alone and everyone in the damn world used to consider they have every right to question me how on earth i am travelling alone and they would immediately imply many wrong things. then they would ask many personal questions. i do not like bus talks. i generally read books when i travel.

    ReplyDelete
  14. mine was posted a long time before your post. //

    yep, so also Hemanth. that's why i grouped you two and placed them separately on top.

    so also i have tried to put that meaning in this sentence: ப்ரேமலதா வின் பதிவில் அவரது சொந்த அனுபவம் - மிக மிக கசப்பானவைதான் - எழுதியுள்ளது பற்றி பாஸ்டன் பாலாவின் பதிவிலிருந்தே தெரிந்தது.

    ReplyDelete
  15. btw, in blogworld, whosover living in london/uk, i have been inviting them all the time and they all think i am "pattikkaadu" who doesn't understand staying impersonal. :)

    recently i had culture clash with a fellow female blogger from uk, and another non-blogger female friend (acquaintance, according to her, and I thought she was friend, as we both came to uk around same time, lived/studied in same university, exchanged quite a lot of life-events together, have been for each other several times... eight years relationship, but she thinks i am crazy to think that she is my friend, but demands emotional support whenever she is in trouble !!!).

    in Uk also, people from London (white or dark) do not smile at each other. they are all the time busy running to catch something or the other. whereas if you go outside london everyone will stop what they are doing and come out of the way to greet you or do something for you. for eg. in hemel car park it is a regular habit of giving parking ticket to new entrants if there is any time left. sometimes we may have hour or even couple of hours left in the ticket. so we give it to newly enetering car so that they do not have to buy one. this surprised one of indian friend when they saw that.
    then yesterday when i was buying ticket, my coin didn't go through. i was disussing with another lady who was waiting to buy ticket. then she tried, the machine worked, and then i tried, it worked... then in few minutes another lady, seems a friend of the other lady who bought ticket, came and asked me that did it go through for me. i said yes. but again she went chatty and said spit on the coin and it works sometimes. i really laughed. it was nice to see that sort of coversation. not about what is your job, what is your salary, i cook better than you, எங்கதில நாங்கல்லாம் இப்படி செய்வோம், எங்கதில நாங்கல்லாம் .... don't get me started.

    ReplyDelete
  16. wait a minute for five minutes. Before y'all finish blasting on bloody indians and their manners, please listen to my Indian manners and blast those manners too. ungala mathiri periyavanga kandikama than nan eppadi kettu poi alaiuren.

    when I first came to USA to do my masters at ISU, I had to go to a lot of places to register fro classes, get my RA, blah, blah, blah. Its an university town and they gave me a map and thats all i need. But still americans will come towards me and ask if i need help(thiruvila kutathule tholintha kulanthai mathiri mulichikittu eruntha). I guess thats cos of the map in my hand. Couple of times those good samaritarians were beautifull girls. This is where my Indian manners kicked off. After that, even if i perfectly know where i wanna go i will go and ask for help to an american beauty. She would not only say the route but will also walk me to that place. entha gap'le nama namma kadalai pottukirathu.

    ethukum serthu thitungapa

    what kind of manners is that? how dare an Indian can misuse the helping tendency of others...shame on myself

    ReplyDelete