Thursday, November 09, 2006

187. CATCH 22* / மதவாதம் - யெஸ்.பா.வுக்கு பதில்

.

.


* the Catch-22 is a no-win situation, much like the "damned if you do, damned if you don't" scenario.

.

// பொதுவாக குழந்தைகளின் மனதில் சிறுவயதில் விதைக்கப்படும் விஷயம் நெடு நாட்களுக்கு பதிந்தே இருக்கும். இதனை மனதில் கொண்டு வி.ஹெச்.பி/ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளும், இசுலாமிய, கிருஸ்துவ அமைப்புகள் சிலவும் காய் நகர்த்தி வருகின்றன.// - எஸ்.பா.

மதங்களைப் பற்றிய என் பதிவுகளின் முதல் பதிவின் முதல் பாராவிலேயே இதைப் பற்றியெழுதியுள்ளேன். ஆனால் அது உங்கள் பதிவில் நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கு மாற்றான ஒரு கருத்தாக இருக்கும்.

இந்து மத தீவிரவாத அமைப்புகள் பலப்பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ள தென்னவோ உண்மைதான். நானே சின்ன வயதில் மதுரையில் சாரணர்கள் மாதிரி காக்கி உடை அணிந்து, கையில் ஒரு குச்சியுடன் physical exercises செய்வதைப் பார்த்திருக்கிறேன். அப்போது எனக்குத் தெரிந்த பகுதியில் ஒரே ஒரு சமூகத்தினர் மட்டுமே மதுரையில் இந்த அமைப்புகளில் இருந்தனர். it was a very very low key affair. ஆனால், அவைகளின் கொள்கைகளும், தீவிரத்தன்மையும் வெளியே தெரிய ஆரம்பித்ததும் அதற்கு ஆதரவு பெருகியதும் மிகவும் சமீபத்திய விளைவுகளே.

இதை 'விளைவு' என்றே கருதுகிறேன்.கிறித்துவமும், இஸ்லாமும் அவைகளின் போதனைகளுமே இதற்குரிய காரணிகளாக நான் நினைக்கிறேன். அவர்களும் இதை நினைத்துச் செய்வதில்லை. அவர்களின் மதக் கோட்பாடுகளைக் குழந்தைப் பருவத்திலேயே சொல்லித் தருகிறார்கள். அவ்வளவே. ஆனால் அந்த மதங்கள் ஏக இறையியல் என்ற கோட்பாடு கொண்டதாகையால் இந்தப் பிரச்சனைகள்.

இந்து மதத்தினரில் இரு வகையுண்டு; ஒரு குழு தீவிரவாதக் குழு; இரண்டாவது அப்படி இல்லாத - மதங்களின் மேல் அளவுக்கதிகமான தீவிரமோ, ஈடுபாடோ இல்லாத பெரும்பான்மையோர். நீங்கள் பலர் இதில் இரண்டாவதில் வருகிறீர்கள்; இல்லையா? ஆனால், நான் சொன்ன இரு மதங்களில் இந்த இருவேறு கூட்டம் இருக்க முடியாது. அவர்கள் எல்லோருமே மதங்களைப் பொறுத்தவரை ஒரே மாதிரியான எண்ணம், செயல் கொண்டவர்கள்;(இதில் எல்லோருமே என்பதை விட மிகப்பெரும்பான்மை என்பதே சரியாக இருக்குமென்பது என் தாழ்மையான கருத்து. - ஜோ.) சிறுவயது முதலே அப்படி ஆக்கப் படுகிறோம். என் சின்ன வயதில் இன்னும் இந்துக்களாக இருக்கும் தாய்வழி தாத்தா பாட்டி வீட்டில் நடக்கும் பூஜையில் வைத்துப் படைக்கப் பட்டவைகளை நான் தொடவும் மறுத்து விடுவது மட்டுமல்லாமல், 'இது பிசாசுக்கு வச்சது; சாப்பிடக் கூடாது; நான் சாப்பிட மாட்டேன்' என்று சொன்னதும் - அப்படி எனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டு இருந்தது - நினைவிலிருக்கிறது. இதில் முக்கிய அம்சம் - அந்த மதக்காரர்களைப் பொறுத்தவரை அது சரி;அதுதான் சரி. அதுவே அந்த மதங்களைப் பின்பற்றுவதற்குறிய அடிப்படை முறை. For them, it is NOT fundamentalism; instead they are the basic tenets of their respective religions.

//மத நச்சு விதைகளை எல்லா மதத்தின் அடிப்படைவாதிங்ஏளும் பிள்ளைகளுக்கு விதைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.- ப்ரியன்.//

இதை நீங்கள் எப்படி 'நச்சு விதை' என்று கூறலாம்?
- ஒரே கடவுள் என்று சொல்லிக் கொடுப்பது தவறா?
- எங்கள் கடவுள்தான் உண்மையான கடவுள்; எங்கள் வேதம்தான் உண்மையான வேதம். அதைக் குழந்தைப் பருவத்திலேயே சொல்லிக் கொடுப்பது எப்படி தவறாகும்'?
- இது நல்வழி என்று காண்பிக்கும்போது மற்ற வழிகள் சரியான வழிகள் மட்டுமல்ல; தவறான வழியுமாகும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டாமா?
- பிள்ளைகளுக்கு வெறும் விஞ்ஞானக் கல்வி மட்டும் போதுமா?
- அவர்கள் தங்களைப் படைத்தவர் யார்? எதற்காக நம்மைப் படைத்தார்? அவரை மகிழ்விக்க நாம் எப்படியிருக்க வேண்டும்? என்னென்ன செய்யலாம்; எதையெல்லாம் செய்யக் கூடாது? என்றெல்லாம் சிறு வயது முதலே சொல்லிக் கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்தவேண்டியது பெற்றவர்களின் முதல் கடமையில்லையா?

- இதுதான் ப்ரியனின் கூற்றுக்கு இந்த மதத்தினரால் கொடுக்கப்படும் பதிலாக நிச்சயமாக இருக்கும்

“What is sauce for the goose may be sauce for the gander, but it is not necessarily sauce for the chicken, the duck,.............!

ப்ரியனுக்கு 'நச்சு விதை'யாகத் தோன்றுவது அவர்களுக்கு மிகவும் தேவையான ஒன்றாக, வாழ்வின், மதத்தின் அடிப்பைடை விஷயமாகத் தெரிகிறதே. கடவுளை - எங்கள் கடவுளை - அவர் சொன்ன காரியங்களை அச்சு பிசகாமல் பின்பற்ற நாங்கள் மதங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேட்பவர்களுக்கு என்ன பதில் கூற முடியும்? அதுவும் கிறித்துவ மதத்தின் 10 கட்டளைகளில் -அவைகள் மதத்தின் ஆதாரமான, நல்வழிப்படுத்துதலுக்கானது - முதல் கட்டளையே 'என்னைத் தவிர உனக்கு வேறு கடவுள் இல்லை' என்பது. இதைச் சொல்லித்தராமல் இருக்க முடியுமா? இதேபோல் இஸ்லாமில் என்னவென்று தெரியாது; ஆனால் 'இணைவைக்காதே' என்ற தத்துவத்தை அவர்கள் சொல்லித்தராமல் இருக்க முடியுமா? அந்த மதத்துக்காரர்களால் சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு
சமயக் கல்வி தராது இருக்க முடியாது. அவ்விதமான கல்வி தரும்போது, அடுத்த மதக் கருத்துக்கள் தவறு; நம் வழியே நல்வழி மட்டுமல்ல - ஒரே நல்வழி என்று சொல்லாமல் இருக்க முடியாது.நான் கூறுவதில் நம்பிக்கையில்லையெனில், நம்பிக்கையாளர்களைக் கேளுங்கள். நிச்சயமாக நான் சொல்வதோடு அவர்கள் ஒத்துப் போவார்கள்.
(அப்பாடா! ஒரு வழியாக நம்பிக்கையாளர்கள் இந்த ஒரு விஷயத்திலாவது என்னோடு ஒத்துப் போவார்கள் !)

//புத்தக மூட்டையையும், பாடச்சுமைகளையும் தூக்கி சோர்ந்து போய் இருக்கும் குழந்தைகளை மதமென்னும் மாயவலைக்குள் தள்ளுவதை பெற்றோரும் மற்றோரும் விட்டொழிக்க வேண்டும். - எஸ்.பா.//

எப்படி? ஒருவேளை, 'சமயக் கல்வியைச் சிறு வயதிலேயே கொடுக்காமல் விட்டு விட்டு, நாலையும் புரிந்து கொள்ளும் வயதில் அவர்களாகவே தங்கள் தங்கள் விருப்பம் போலும், கருத்து படியும் ஏதாவது ஒரு மதத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அனுமதியுங்களேன்' என்று யாரேனும் சொன்னாலும், அதிலும் ஒரு குறையுண்டு. ரெண்டும் கெட்டான் வயதென்று சொல்லும் அந்த பதின்ம வயதில்தான் மனிதனுக்கு மதத்தின் முக்கியம் அதிகம். மதங்கள் நல்லது சொல்லி மனிதனை நல்வழிப்படுத்துகிறதோ இல்லையோ, நிச்சயமாக நான் என் மதப் பதிவுகளில் கூறியபடி நல்லாவே பயங்காட்டும் பூச்சாண்டிகளாகப் பயன் படுகின்றன. fear of god is the beginning of wisdom என்ற ஒரு பைபிள் வாக்கியம் இங்கு நினைவுக்கு வருகிறது. இந்துக்களின் அடுத்த பிறவி கீழ் பிறவியாகி விடும் என்ற தத்துவமோ, கிறித்துவர்களின் நித்திய நரகம் என்றோ, இஸ்லாமியர்களின் gehenna என்றோ ஒன்றை வைத்துப் பயமுறுத்தி, மக்களை நல்வழிப்படுத்த முயலும் முயற்சி இந்த இளம் வயதிலேயே கொடுக்கப்பட்டால்தான் கொஞ்ச நஞ்சமாவது வயது காலத்தில் / வயதான காலத்தில் மனுஷப் பிறவிகள் மதங்கள் சொல்லும் இந்தத் தண்டனைகளை மனதில் வைத்து 'கடவுளுக்குப் பயந்து' இருப்பார்கள்.

அடுத்து -

//மக்கள் மனதில் மத சகிப்புத்தன்மை என்பது வளர்க்கப்படவேண்டிய ஒன்று.-ப்ரியன் // - என்று சொல்வதைப் பற்றி.

'மத சகிப்புத்தன்மை' என்பதே ஒரு வகையில் தவறான ஒரு வார்த்தைப் பிரயோகம் என்று நினைக்கிறேன். தலைவலி வந்தால் சகித்துக் கொள்ள வேண்டும். அதாவது, வேறு வழியில்லாமல் ஒன்றை நாம் accept செய்து கொள்ள வேண்டும். நமக்கு அதைப் பிடிக்காது; இருந்தும் சகித்துக் கொள்ள வேண்டும் என்றால் அது ஒரு நேரம் இல்லையென்றால் இன்னொரு நேரம் கோபமாகவோ வேறு எந்த வழியிலோ வெளிப்படும் நிலை வரும். நமக்குள் இருக்க வேண்டியது religious tolerance இல்லை; தேவை relgious acceptance. அப்படி ஒன்று நமக்குள் (நமக்குள் என்பது இந்த முழு மனித குலத்திற்கும் என்று கொள்க) ஏற்பட்டால்தான் எல்லா மதத்தினருக்கும் நடுவில் சமத்துவமும், மனித நேயமும் நன்கு மலரும்.

ஆனால்,இது நடக்கிற காரியமல்ல. ஏனெனில் (மீண்டும் மீண்டும் இப்படி கூறுவதற்கு மன்னிக்கணும்..) நான் ஏற்கெனவே என் மதப் பதிவுகளில் கூறியபடி ஆபிரஹாமிய மதங்களின் அடிப்படையே தங்கள் தங்கள் மதக் கோட்பாடே சரியென்பதும், மற்றைய மதங்கள் தவறானவை,திரிக்கப்பட்டவை என்பதுமாகும். அப்படியிருக்கும் போது ஒரு ஆபிரஹாமிய மதத்தவர் அடுத்த ஒரு மதத்தினரைச் சகித்துக் கொண்டாலும் கொள்வாரேயன்றி, அவரது மதக் கோட்பாடுகளை ஒருக்காலும் accept செய்ய முடியாது; அவர்கள் மதமும் அதற்கு அனுமதிக்காது. கிறித்துவர்கள் இந்து மத நண்பர்களுக்குத் தங்கள் கடவுளர் போட்ட காலண்டர், டாலர் போன்றவற்றைக் கொடுப்பதும், அதை எந்த வித மறுப்பின்றி இந்து நண்பர்கள் வாங்கி,கொடுத்தவரின் அன்புக்காகவேனும் அதைப் பயன்படுத்தும் பண்பை என்றாவது ஒரு கிறித்துவரிடமோ, இஸ்லாமியரிடமோ காண முடியுமா? It is so simple; they can never ACCEPT other religions, கொடுத்தவர்களின் அன்பை மரியாதை செய்வதற்காகக் கூட. மெக்கா, ஒரு சிலுவை, ஒரு கோயில் கோபுரம் போட்ட படங்களை எந்தக் கடைகளில் காண முடியும் சொல்லுங்கள். இதில் இஸ்லாமியரையும், கிறித்துவரையும் குற்றம் கூறுவதும் அர்த்தமில்லை;ஏனெனில் அவர்கள் மதம் தரும் கட்டளை அது. அந்த மதத்தில் இருந்தால் அவர்கள் அதைப் பின்பற்றித்தானே ஆகவேண்டும்?

அப்படியானால், என்னதான் செய்வது? a zillion dollar question...!! இதற்குப் பதில் தெரிந்திருந்தால் மனித குலம் என்றோ எப்படியெல்லாமோ இருந்திருக்குமே!

* (ஆபிரஹாமிய )மதங்கள் தங்கள் கோட்பாடுகளை தங்களைக் கடைப்பிடிப்போரிடம் வலிமையோடு ஆழமாகப் பதிக்கின்றன. அக்கோட்பாடுகளை நம்பிக்கையாளர்கள் மீறுவதென்பது நம்பிக்கையாளர்களால் முடியாத ஒன்று.

* அடுத்த மதமும் கடவுளை அடைய (?) ஒரு வழியாக இருக்கக் கூடும் என்பதை இந்த மதங்கள் ஒப்புக் கொள்ளாது.

* சிறு வயதிலேயே சமயக் கல்வி போதிக்கப்பட்டாக வேண்டும் என்பதில் உள்ள உண்மையை மறுக்க முடியாது. அந்தக் கால கட்டத்திலேயே அவர்களுக்கு மற்ற மதங்களை மதிக்கவும், accept செய்யவும் கற்றுக் கொடுக்கலாம்; ஆனால், அது ஆபிரஹாமிய மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகளுக்குப் புறம்பானது. தங்கள் மதமே சரியானது என்ற superiority complex- யோடுதான் மதக் கல்வியின் ஆரம்பமே இருக்கும்.

* இப்படி ஆபிரஹாமிய மதங்கள் தங்களின் 'சிறப்பை, உன்னதத்தை' சத்தம் போட்டுச் சொல்லிக்கொண்டே இருந்தால், மற்ற மதத்தினரை (இந்து மதத்தவருக்கு) ஏதாவது ஒரு கட்டத்தில் எரிச்சில் மூட்டத்தான் செய்யும். அதன் ஆரம்பம் தெரிய ஆரம்பித்து விட்டது. R.S.S.. சங் பரிவார் இவைகளின் குரல் உயர்வது இதன் வெளிப்பாடே. Churchill இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து பெற்ற முதல் வெற்றிக்குப் பிறகு சொன்ன வார்த்தைகள்தான் இங்கு பொருத்தம். - "This is the not the end; not even the beginning of the end; it is just the end of the beginning". அவர் நல்ல விஷயத்துக்குச் சொன்னது இங்கே கெட்ட விஷயத்துக்குச் சொல்லும்படியாகி விட்டது!

விடியும் நாட்களை நினைத்துப் பயமாக இருக்கிறது. நாளை...பொதுவாக மனித குலம், நம்மட்டில் இந்தியாவில், நம் குறுகிய சமூகத்தில் இந்த மதங்களை வைத்து நமக்குள் இருக்கும், எழப்போகும் பிரச்சனைகளை நினைத்தால்...

இளைஞர்களே...நீங்களே கேள்விகள்; நீங்களே பதில்கள்.

உங்கள் பதில் என்ன..?

*

*

149 comments:

  1. தருமி மிக நல்ல பதிவு

    சுவனப்பிரியன் ஏதோ எழுதப்போக, நான் ஏதோ கூகுளில் தேட அதனை பதிய, நன்றாக மாட்டிக்கொண்டுவிட்டேன்.

    ஆனால் நீங்கள் சொல்வது மாதிரி, எங்கள் ஊரில் மாரியம்மன் கோவிலின் முன்னே, மாரியம்மனை மிகவும் கேவலமாக சித்தரித்து (அதனை இங்கே சொல்ல விரும்பவில்லை) வெள்ளை பேண்ட் வெள்ளை சட்டை போட்ட கிரிஸ்துவ இளைஞர்கள் "கிரிஸ்துவ போதனை" செய்வார்கள். முதலில் அவர்களை வினோதமாக பார்த்துவிட்டு சென்ற இளைஞர்கள் அடுத்த வருடம் சண்டைக்குப் போனார்கள். அப்புறம் ஊரில் மத்தியஸ்தம் நடந்தது. அப்போது பேசப்பட்ட விஷயம், அது மைனாரிட்டி ரைட்ஸ். அவர்களை அடிக்க முடியாது. போலீஸ் நம்மைத்தான் பிடிக்கும் என்பதுதான். உண்மையோ என்னவோ, அதுதான் பேசப்பட்டது.

    இந்த அனுமதியை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் நான் நினைத்தது.

    எழில்

    ReplyDelete
  2. நல்ல அலசல். ஆபிரஹாமிய மதத்தை சேர்ந்திராததால் உங்கள் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது. இருப்பினும் மத நல்லிணக்கத்தை சிறுவயதில் பெற்றோர்கள் புகட்ட வேண்டும்.
    தனிப்பட்ட முறையில் என் பிறமத நண்பர்கள் என்னுடன் கோவிலுக்கு வந்திருக்கிறார்கள். நானும் சிறுவயதில் சர்ச்சிற்கு நண்பர்களுடன் போயிருக்கிறேன். அங்கு பாடப்படும் பாடல்களை பிரதி எடுத்துக் கொடுத்திருக்கிறேன். 1990களிலிருந்து தான் மத தீவிரவாதங்களைப் பார்க்கிறேன். அதுவும் பாபர் மசூதி இடிப்பிலிருந்து இந்துமுஸ்லீம் பிணக்குகளாகி அதனால் பலம் பெற்ற இந்துத்வா இந்து கிரித்துவ சண்டைகளையும் மூட்டியிருக்கிறது. பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியானும் வந்தியத்தேவனும் போல வார்த்தை சண்டை போட்டுக் கொண்டாலும் நல்ல நண்பர்களாக இருந்தனர் அப்போது. தற்காலத்தில் இந்த வாய்சண்டைகளைப் பயன்படுத்தி விஷக்கிருமிகள் உயிர்சேதம் ஏற்படுத்துவது வருந்தத் தக்கது.

    ReplyDelete
  3. //
    சிறு வயதிலேயே சமயக் கல்வி போதிக்கப்பட்டாக வேண்டும் என்பதில் உள்ள உண்மையை மறுக்க முடியாது. அந்தக் கால கட்டத்திலேயே அவர்களுக்கு மற்ற மதங்களை மதிக்கவும், accept செய்யவும் கற்றுக் கொடுக்கலாம்; ஆனால், அது ஆபிரஹாமிய மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகளுக்குப் புறம்பானது.
    //

    அப்போது அந்த மதத்தை ஏன் கடை பிடிக்கவேண்டும்.? தூக்கி எரியவேண்டியது தானே ?

    தலீத்துக்கள் ஒதுக்கப்பட்டவர்களை மதம் மாற்றுவது தவறில்லை என்ற அர்த்தத்தில் சொன்னவர் நீங்கள் தானே ? அதற்கு " நான் ஏன் இந்து அல்ல" என்ற க்ஞ்சா ஐலையா வின் புத்தகத்தை உதாரணம் காட்டியதும் நீங்கள் தானே ?

    ReplyDelete
  4. தருமி அய்யா

    மிக அருமையான பதிவு.

    //பொதுவாக மனித குலம், நம்மட்டில் இந்தியாவில், நம் குறுகிய சமூகத்தில் இந்த மதங்களை வைத்து நமக்குள் இருக்கும், எழப்போகும் பிரச்சனைகளை நினைத்தால் //

    மிக அருமையாக சொன்னீர்கள்.

    சமுதாயத்திற்கு இந்த மதங்களால் பிரச்சனைகள் தான் அதிகமாக உள்ளது.

    பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  5. இது `மதங்கள்' வாரமா? அங்கே ஜோ, இங்கே நீங்க!
    எல்லாத்துக்கும் மேலே அடிப்படை புரிதல் - வயிறு காய்பவர்களுக்கு எம்மதமும் சம்மதம்; சகிப்புத்தன்மையுடன் கூடிய நல்மனதுக்காரர்களுக்கு மதங்களை விட மனித நேயமே பெரிது; இடைப்பட்ட குழுவினரை எதிர்த்தோ சார்ந்தோ நேரத்தை செலவிடுவது அநாவசியம்

    ReplyDelete
  6. //அவர்கள் எல்லோருமே மதங்களைப் பொறுத்தவரை ஒரே மாதிரியான எண்ணம், செயல் கொண்டவர்கள்;//

    தருமி,
    இதில் எல்லோருமே என்பதை விட மிகப்பெரும்பான்மை என்பதே சரியாக இருக்குமென்பது என் தாழ்மையான கருத்து.

    ReplyDelete
  7. //
    இப்படி ஆபிரஹாமிய மதங்கள் தங்களின் 'சிறப்பை, உன்னதத்தை' சத்தம் போட்டுச் சொல்லிக்கொண்டே இருந்தால், மற்ற மதத்தினரை (இந்து மதத்தவருக்கு) ஏதாவது ஒரு கட்டத்தில் எரிச்சில் மூட்டத்தான் செய்யும்.
    //

    100% உண்மை. இதை நீங்கள் சொல்வது சிறப்பே.!

    //
    அது மைனாரிட்டி ரைட்ஸ். அவர்களை அடிக்க முடியாது. போலீஸ் நம்மைத்தான் பிடிக்கும் என்பதுதான்.
    //

    எழில்,

    இது minority rights அல்ல. இது blatant aggression.

    இதை இப்படியே விட்டால் Fascism will be inevitable.

    ReplyDelete
  8. //சிறு வயதிலேயே சமயக் கல்வி போதிக்கப்பட்டாக வேண்டும் என்பதில் உள்ள உண்மையை மறுக்க முடியாது. அந்தக் கால கட்டத்திலேயே அவர்களுக்கு மற்ற மதங்களை மதிக்கவும், accept செய்யவும் கற்றுக் கொடுக்கலாம்; ஆனால், அது ஆபிரஹாமிய மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகளுக்குப் புறம்பானது. தங்கள் மதமே சரியானது என்ற superiority complex- யோடுதான் மதக் கல்வியின் ஆரம்பமே இருக்கும்.
    //

    இந்த அடிப்படை கோட்பாட்டை மாற்றினால் போதும் சார். சிறுவயதில் இது பிள்ளையார் சாமி, இது முருகன் சாமி, இது யேசு சாமி, இது அல்லா சாமி என தான் வளர்த்தார்கள்/ வளர்க்கிறார்கள் இந்தியாவின் பெரும்பான்மையினர். அந்த பெரும்பான்மையினரை பார்த்து சிறுபான்மையினர் பின்பற்றினால் போதும்.
    அரேபிய பாலைவனத்தில் எழுதிய புத்தகங்களை அங்கேயே விட்டுவிட்டால் போதும். நம் நாடு சுபிட்சமடையும். அதைப்பார்த்து மற்றவர்களும் மாறுவார்கள். இது என்னுடைய பேராசை.


    //சுவனப்பிரியன் ஏதோ எழுதப்போக, நான் ஏதோ கூகுளில் தேட அதனை பதிய, நன்றாக மாட்டிக்கொண்டுவிட்டேன்//

    எழில் என் கதையும் அதே. சவூதி சொர்க்கபூமி என அவர் சொல்ல போக அங்கே 5 வருடங்கள் வாழ்ந்த நான் என்கிட்டேயவா என கேட்க போக அரேபிய அனுபவங்கள் எழுத போக இப்ப்பொது பிடி22 ஆகிவிட்டது

    ReplyDelete
  9. //அப்போது அந்த மதத்தை ஏன் கடை பிடிக்கவேண்டும்.? தூக்கி எரியவேண்டியது தானே ? //

    நான் எறிஞ்சிட்டேன்...

    //தலீத்துக்கள் ஒதுக்கப்பட்டவர்களை மதம் மாற்றுவது தவறில்லை என்ற அர்த்தத்தில் சொன்னவர் நீங்கள் தானே ?//

    இல்லை

    //அதற்கு " நான் ஏன் இந்து அல்ல" என்ற க்ஞ்சா ஐலையா வின் புத்தகத்தை உதாரணம் காட்டியதும் நீங்கள் தானே ?//

    இல்லை

    அது சரி, மிஸ்டர் வஜ்ரா,
    இதென்ன..'கைநீட்டி' பேசுவது போல் பேசும் உங்களது இந்தப் பாணி எனக்குப் பிடிப்பதில்லை. என் பதிவிற்குப் பின்னூட்டம் இட வந்தால் இந்த வகை 'style' இல்லாமல் வாருங்கள்; சரியா? அதுதான் நன்றாயிருக்கும் - இருவருக்குமே.

    ReplyDelete
  10. சடையப்பன்,
    //அடிப்படையான ஒரு விஷயத்தை நாம் மதம் அல்லது மததை எதிர்கிறோம் என்று மறந்து விடுகிறோம்..//

    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது சுத்தமாகப் புரியவில்லை.

    //எந்த மதம் இப்படி மனிதனுக்கு உதவி செய்யாதே என்று கூறுகிறதோ அதுதான் காட்டுமிரண்டி மதம்.//

    அப்படி ஒரு மதம் இருக்குமா, இருக்கமுடியுமா, இருக்கிறதா என்ன?

    ReplyDelete
  11. எழில்,
    இதிலெல்லாம் எப்படி மைனாரிட்டி ரைட்ஸ் வரும்..?

    ஆனால் என்னைப் பொருத்தவரை இது போன்ற தனிமனித தவறுகளை விடவும் dogma, concepts, faiths என்பது போன்றவைகளையே அதிகம் பார்க்க வேண்டியதுள்ளது என்று நினைக்கிறேன். அதற்காக அந்த நபர்கள் செய்தது சரியென்று சொல்வதாக நினைத்துவிட வேண்டாம்.

    ReplyDelete
  12. வஜ்ரா,

    //
    சரியா?
    //

    //சரி.//

    நல்லது; நன்றி.

    ReplyDelete
  13. மணியன்,
    //மத நல்லிணக்கத்தை சிறுவயதில் பெற்றோர்கள் புகட்ட வேண்டும். //

    பெரும்பான்மை இந்துச் சிறுவர்களுக்கு சமயக் கல்வி என்று ஏதேனும் உண்டா? இல்லையென்று நினைக்கிறேன். ஆனால் அவர்களிடம் மத நல்லிணக்கம் என்பதை விடவும், மதங்களைத் தாண்டி நட்பு பாராட்டுவது அவர்களுக்கு எளிது.

    அதற்குப் பதிலாக, சமயக் கல்வி பெறும் சிறுவர்களுக்கு அந்தக் கல்வியே மனத்துக்குள் ஒரு சுமையாய் இறங்கி, மதங்களைத் தாண்ட முடியாதவர்களாக அவர்களை ஆக்கி விடுகிறது என்பதைத்தான் நான் அழுத்தமாய் கூற முற்பட்டுள்ளேன்.

    ReplyDelete
  14. தாணு, ஆடிக்கொரு தடவை ; அம்மாவாசைக்கு ஒரு தடவைன்னு வர்ரவங்களுக்கு அப்படித்தான் வித்தியாசமாகத் தோன்றும். : )

    //வயிறு காய்பவர்களுக்கு எம்மதமும் சம்மதம்; //

    இல்லை என்பது என் கருத்து. நீங்கள் எந்த மதத்தில் இருந்து வயிறு காய்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பது முக்கியாமாகியுள்ளது என்பது நிதர்சனமான உண்மையில்லையா?

    ReplyDelete
  15. தருமி சார்,
    மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கிறது. Objective ஆக ஓர் உயர்ந்த இடத்திலிருந்து நீங்கள் பார்க்கும் பார்வையும், காழ்ப்பின்றி அலசும் பண்பாடும் ஏற்புடையதாக அமைந்துவிடுகிறது. இருப்பினும் உங்கள் கருத்துக்கள் இந்த நம்பிக்கையாளர்களை சென்று அடைந்ததாக, நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியதாக ஏதேனும் சம்பவம் அல்லது அனுபவம் உண்டா? பகிர்ந்து கொள்ளுங்களேன்!
    உங்கள் ரசிகன்.

    ReplyDelete
  16. //Dharumi said...
    பதில் கொடுக்க பின்னூட்டம் எழுத ஆரம்பித்தேன். நீஈஈஈஈஈஈண்டு கொண்டேஏஏஏஏஏஏஏஏ போகிறது. இன்றோ நாளையோ தனிப்பதிவாக இட்டு,இங்கு வந்து லின்க் கொடுத்துவிட்டு ஓசியில் விளம்பரம் கொடுத்துவிட்டுப் போகிறேன்.

    at 09 November, 2006 15:50
    //

    இதைச் செய்யாததால் என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.
    :-)))

    ReplyDelete
  17. அது சரி.. லிங்க் தான் கொடுத்தாச்சே.. இன்னும் ஏன் மூஞ்ச பிப்ருதி <-- கிட்டு நிக்கிறீங்க... அட திரும்புங்க வாத்தியாரே..

    ReplyDelete
  18. முடியாத்..முடியாதுன்னா முடியாது. மூஞ்ச காமிச்சா அதுக்கு ஏதும் சொல்ல ஆரம்பிக்கவா..? நானே நொந்து நூடுல்ஸா இருக்கேன். ஒண்ணு பண்ணுங்க...வேற படம் ஒண்னு அனுப்புங்க அதுக்குப் பதிலா போடுறதுக்கு..

    ReplyDelete
  19. நான் நேற்றே பதிவைப் படித்து விட்டு பின்னூட்டம் இடலாம் என்றிருந்தேன் ஆனால் வேலை இருந்ததால் முடியவில்லை.

    நேற்று பதிவைப் படித்து விட்டு ரெண்டு மூணு தடவை யார் பதிவை படிச்சிட்டு இருக்கேன்னு ரெண்டு மூணு தடவை மேலே மேலே போய் பார்க்க வேண்டியதாகி விட்டது.

    வஜ்ரா சங்கர் பதிவா இல்லை தருமி பதிவா என்று ஒரே குழப்பமாகி விட்டது :-))).

    நீங்கள் ஆப்ராஹாமிய மதங்கள் இந்து மதத்தை விட evil ஆனது என்றும் சொல்ல வந்து இந்து மதம் lesser of the evils என்பது போல சொல்ல வந்தீர்கள் என்றே நினைக்கிறேன். ஆனால் இந்த approach danger ஆனது.

    காந்தியைக் கொன்றது ஆர் எஸ் எஸ்ஸா என்பதெல்லாம் முடிவில்லாத விவாதத்தைத் தொடங்கி விடும். ஆனால் அவர் இறந்ததிற்கு காரணம் என்ன என்றால் அவர் இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை பாதுகாக்க நினைத்ததுதான். அது பிடிக்காமல் இந்து மத வெறியர்களாலும், இந்து மத தீவிரவாதிகளாலும் கொல்லப் பட்டார்.

    இந்த செயல் மற்ற மதத்தினர் அவர்களுக்கு கொடுத்த எரிச்சலால் தான் செய்யப் பட்டதா? தன் வெறியை மன விகாரங்களை தீர்க்க விடாமல் செய்கிறாரே என்று மதம் அவருக்கும் கொடுத்த தண்டனை இது.

    இந்து மத காப்பாளர்களாக தங்களைக் கருதிக் கொள்ளும் அதே சமயம் இந்து மதத்தின் அடிப்படையே உணராதவர்களான பலரிடத்திலும் நீங்கள் சொன்னது போல இந்து மதத்தைப் பற்றி சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் உண்டு.

    உங்களைக் கேட்டுக் கொள்வது என்ன என்றால் lesser evil என்பதால் ஒன்றை defend செய்து lesser evilஐ வளர்த்து விட்டு விடாதீர்கள்.

    ReplyDelete
  20. ஜெயலலிதா பெரிய evil என்று சொல்லி lesser evil கருணாநிதி என்ன தப்பு செய்தாலும் defend பண்ணுகிறார்களே அவர்களைப் போல மாறி விடாதீர்கள் :-))).

    ReplyDelete
  21. சிவா,
    //இந்த அடிப்படை கோட்பாட்டை மாற்றினால் போதும் ...//

    புரிந்துகொள்ள மறுப்பது போல் தோன்றுகிறதே! நீங்கள் சொல்வதைப் பற்றி விளக்கமாக என் பதிவில் சொல்லியுள்ளேன் என்று நினைக்கிறேன். அதன் பிறகும் 'சித்தப்பாவிற்கு மீசை முளைத்து அத்தையாக மாறணும்'னு கேட்டு பிடிவாதம் பிடித்தால் { :) } உங்களை என்ன செய்ய? இப்போதைய ரீகல் தியேட்டரில் தொடர்ந்து ஒரே படத்தை மூணு ஷோ பார்க்க வைக்கணும் !

    ReplyDelete
  22. கொஞ்சம் off topic ஆக ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பவர் எல்லோரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் catch 22. அதன் ஹீரோ Yossarian போன்ற ஒரு பாத்திரப் படைப்பு வந்தியத்தேவன் பாத்திரப் படைப்புடன் நான் படித்ததிலேயே மிகவும் பிடித்த பாத்திரப் படைப்பு :-))).

    ReplyDelete
  23. ஜோ,
    //இதில் எல்லோருமே என்பதை விட மிகப்பெரும்பான்மை என்பதே சரியாக இருக்குமென்பது என் தாழ்மையான கருத்து. //

    மறுக்கிறேன், ஜோ. நீங்கள் உங்களை வைத்து இதைக் கூறுகிறீர்கள். நல்ல 'விசுவாசமுள்ள' ஒரு கிறித்துவர் உங்களைப் பற்றி என்ன நினைப்பார், சொல்லுவார் தெரியுமா? 'அவனெல்லாம் ரொம்ப படிச்சிட்ட நினப்புல இருக்கான்'. கோவிச்சுக்காதீங்க..இது நான் கடந்து வந்த பாதை. நீங்கள் இப்போது மதங்கள் வற்புறுத்திச் சொல்லும் விஷயங்களையும் கடவுள் மேலுள்ள நம்பிக்கையையும் பிரித்துப் பார்க்கும்போதே உங்களை ஒரு 'விளிம்பு மனிதரா'கத்தான் நம்பிக்கையாளர்கள் கருதுவார்கள். அவர்கள் நிற்கும் இடத்தை விட்டு நீங்கள் தள்ளி -on the periphery - நிற்பதாலேயே நீங்கள் நிரம்பவும் கேள்வி கேட்கப் படுகின்றீர்கள். உங்களைப் பற்றிய என் தனிப்பட்ட கருத்து: கண்ணைத் திறக்க ஆரம்பித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள் - முழுமையாய் திறக்க; வளர்ந்த வளர்ப்புகளே தடைக் கற்கள்.

    நான் சொல்லும் "எல்லோரும்" முழு கிறித்துவ விசுவாசிகள் / இஸ்லாமிய நம்பிக்கையாளர்கள். ஆகவே நான் சொன்னது சரியென்றே நினைக்கிறேன். ஆனால் உங்கள் கருத்துக்கும் இடம் கொடுத்திருக்கிறேன் அங்கேயே. மறுபடி வாசியுங்களேன்.

    கொஞ்சம் அதிகமாகவே உரிமை எடுத்துக் கொண்டு, உங்களைப் பற்றிய என் கருத்தைக் கூறியுள்ளேன். அது தவறு;அது உங்களுக்கு உவப்பில்லை என்பதாயிருப்பின் மன்னிக்க. சொல்லுங்கள், திருத்திக் கொள்கிறேன். நன்றி.

    ReplyDelete
  24. வந்திருக்கற பின்னூட்டங்களிலேயே எனக்கு மிகவும் பிடிச்சது:

    அது சரி, மிஸ்டர் வஜ்ரா,
    இதென்ன..'கைநீட்டி' பேசுவது போல் பேசும் உங்களது இந்தப் பாணி எனக்குப் பிடிப்பதில்லை. என் பதிவிற்குப் பின்னூட்டம் இட வந்தால் இந்த வகை 'style' இல்லாமல் வாருங்கள்; சரியா? அதுதான் நன்றாயிருக்கும் - இருவருக்குமே.//


    //
    சரியா?
    //

    சரி.

    தருமி சார் ஒங்களுக்கு tolerance level கொஞ்சம் குறையுதோ..

    வஜ்ரா.. ரொம்ப சீக்கிரம் Surrender ஆய்ட்டீங்க? நீங்க சாட்டிய ரெண்டு குற்றச்சாட்டையுமே இல்லேன்னு சொல்லிட்டாரே.. அப்ப யார் சொல்றது சரி?

    ரெண்டுமே ஆச்சரியமாருக்கு..

    ReplyDelete
  25. வாங்க ஜோசஃப்,
    வராத வந்த மாமMஇ போல்..வந்தமைக்கு நன்றி.

    //தருமி, ஒங்களுக்கு tolerance level கொஞ்சம் குறையுதோ..//

    ஏற்கெனவே ஒங்க கிட்ட ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தேனே; மறந்திட்டீங்க போலும். tolerance level கொஞ்சம் குறையுதோ - குறையலையே; எப்பவுமே அது அப்படித்தான்னு சொன்னேன் உங்க கிட்ட. தப்புத்தான்;ஆறுல வளையாதது..இனிம எங்க..அப்படியே போகவேண்டியதுதான்...

    வஜ்ராட்ட ஏதோ "வத்தி" வைக்கிறது மாதிரி இருக்கு :)

    ReplyDelete
  26. ஜோசப்,
    அது - 'வராது வந்த மாமணி'ன்னு வாசிச்சிக்கவும்.

    'எழுத்துப் பிழையார்' என்று ஒருவர் பதிவுலகத்தில் இருந்தாரே; என்ன ஆனார்? சீத்தலைச் சாத்தனராகிப் போனாரோ? நல்ல வேலை செய்து கொண்டிருந்தார்.

    ReplyDelete
  27. நல்ல பதிவு..

    //சிவா,
    புரிந்துகொள்ள மறுப்பது போல் தோன்றுகிறதே! //

    எந்த சிவான்னு புரியாம மறுபடி மேலே போய் பார்த்துட்டு வந்தேன்.. தருமி வலையுலகில் சிவ ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், முழுப் பெயரையும் சொன்னீங்கன்னா சுலபமா இருக்கும் ;)

    (இதுக்குத் தான் என்னை மாதிரி யூனீக் பேரா வச்சிக்கணும் ;) )

    ReplyDelete
  28. தருமி,
    நீங்கள் என்னைப்பற்றி சொன்னது முற்றிலும் உண்மை .ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும்.

    ReplyDelete
  29. ரசிக அனானி,

    அனானிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்ற முடிவில் அவ்வப்போது வழுக்கி விழ வைத்துவிடுகிறீர்களே!இந்தப் பின்னூட்டத்தை அனுமதித்தது ஒரு வார்த்தைக்காக - Objective ஆக எழுதியதாகச் சொல்லியுள்ளீர்கள். அதற்கு நன்றி. இது பொதுவாக நம்பிக்கையாளர்களால் முடியாத விஷயமாக நான் கூறுவது.

    நீங்கள் கேட்ட சம்பவங்களில் ஒன்று என் வீட்டிலேயே. மனைவியும் பிள்ளைகளும் மிகுந்த நம்பிக்கையும், பக்தியும் கொண்டவர்கள். என் போக்கை முதலில் மிகவும் கண்டித்து, எதிர்த்து கோயிலுக்குள் வரச்சொல்லியெல்லாம் கட்டாயப் படுத்துவார்கள். இப்போது சில வருடங்களாக என்னை என் போக்கில் விட்டு விட்டார்கள் - முத்திப் போச்சு; இனிம என்ன செய்றது என்ற நினைப்பில் !

    ஏற்கெனவே மதில் மேல் பூனையாக இருப்பவர்களுக்கு என் கருத்துக்கள் ஏற்புடையதாகத் தோன்றியதுண்டு. ஆனால் நம்பிக்கையாளர்களை என் கருத்துக்கள் மாற்றியதில்லை; மாற்ற வேண்டுமென்ற எதிர்பார்ப்பும் இல்லை. இந்த தர்க்கங்கள் ஆரம்பாவது மட்டுமாவது சுயமாக இருந்தாலே மட்டும் அடுத்த அடி எடுத்துவைக்க முடியும் என்பது என் கருத்து.

    அனுமதிக்கப்படும் அனானிகளுக்கு வழக்கமாக வைக்கும் வேண்டுகோள்: அனானியாகத்தான் உலா வரவேண்டுமா?

    ReplyDelete
  30. அன்பு தருமி,

    நீங்கள் சொன்ன மேட்டரை வேறு யாராகினும் சொல்லியிருந்தால் பூக்களுக்குள் தீ பறந்திருக்கும் , இந்து வெறியன் , பாப்பன வருடி என்று ,

    என்னை போல் இந்துமதம் மீது நம்பிக்கை கொண்டும், ஆனால் இந்துமத தீவிர கருதுகோள்களுக்கு மனதில் இடம் தர முடியாமலும் , ஆப்ரகாமிய மதங்களின் போக்கை (ஏன் இவர்கள் நம்மை போலல்லாமல் மதத்தில் இவ்வளவு தீவிரமாயிருக்கிறார்கள் ?)ஏற்றுக்கொள்ளாது தவிபர்களுக்கும் உங்கள் பதிவு ஒரு ஆறுதல்தான்

    குழந்தைகளாயிருக்கும்போது மதபேதம் தெரிவதில்லைதான் ,ஆனால் ஒரு சாதாரண இந்து பெற்றோர் தன் குழந்தையை ரம்ஜான் அல்லது கிருத்துமஸ் கொண்டாட அவன் நண்பன் வீட்டுக்கு அனுப்ப தயங்குவதில்லை ,

    ஆனால் ????

    பரதரசு

    ReplyDelete
  31. தருமி சார், உங்களுடைய பதிவும் எண்ணமும் தவறில்லாதது. நடுநிலையானது என்றே நம்புகிறேன். எந்த மதத்தின் சார்பாகவும் நீங்கள் இதை எழுதவில்லை என்பது எனக்குப் புரிகிறது. சரியான பதிவே. சமீபகாலத்தில் ஜோவும் நீங்களும் சரியான நடுநிலைப் பதிவுகளைப் போட்டிருக்கிறீர்கள் என்றே கருதுகிறேன். இருவருக்கும் நன்றி.

    எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை இருக்கும். அந்த வினைதான் இன்று நாம் பார்த்துக் கொண்டிருப்பது என்று நானும் நினைக்கிறேன்.

    // பெரும்பான்மை இந்துச் சிறுவர்களுக்கு சமயக் கல்வி என்று ஏதேனும் உண்டா? இல்லையென்று நினைக்கிறேன். ஆனால் அவர்களிடம் மத நல்லிணக்கம் என்பதை விடவும், மதங்களைத் தாண்டி நட்பு பாராட்டுவது அவர்களுக்கு எளிது. //

    என்னுடைய மதம் இந்து என்று சான்றிதழ் சொல்கிறது. அப்படிச் சொல்லிக் கொள்வதில் எனக்குத் தயக்கமில்லை. எந்தச் சமயக் கல்வியும் எனக்கு இருந்ததில்லை. எந்தக் கிருத்துவ இஸ்லாமிய வீட்டிலும் சாப்பிடுவதற்கும்...ஏன் எந்த மதத்தார் வீட்டிலும் அன்போடு கொடுக்கப்படும் உணவை உண்பதில் எனக்குத் தயக்கமில்லை. அவர்கள் மத அடையாளமிட்ட பொருள் பரிசாகக் கிடைத்தால் அதை எனது வீட்டில் வைத்துக் கொள்ளத் தயக்கமில்லை. என்னிடம் புதிய ஏற்பாட்டின் ஆங்கில வடிவமும் திருக்குரானின் தமிழ் வடிவமும் உள்ளது. அவர்களது சமயத்தை அங்கீகரிப்பதிலும் எனக்கு வருத்தமில்லை. ஆனால் என்னுடைய பழக்கத்தை அவர்கள் ஏற்காது போனால் அவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பதும் சிரமமில்லை. எனக்குத் தெரிந்து இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பாலானோர் இப்படித்தான் என்று நினைக்கிறேன்.

    // அதற்குப் பதிலாக, சமயக் கல்வி பெறும் சிறுவர்களுக்கு அந்தக் கல்வியே மனத்துக்குள் ஒரு சுமையாய் இறங்கி, மதங்களைத் தாண்ட முடியாதவர்களாக அவர்களை ஆக்கி விடுகிறது என்பதைத்தான் நான் அழுத்தமாய் கூற முற்பட்டுள்ளேன். //

    அப்படித்தான் நானும் நினைக்கிறேன். என்னுடைய வீட்டில் சாப்பிடக் கூட மறுத்த மாற்று மத நண்பர்கள் உண்டு. வழிபாட்டு முறைகளைக் கிண்டலடித்தவர்களும் குறை சொன்னவர்களும் உண்டு. ஆனால் மற்ற மதங்களில் பெரும்பான்மையினர் இப்படித்தானா என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் நான் சந்தித்தவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் இப்படித்தான். அதனால் என்ன...அவர்கள் என்னை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன. நான் அவர்களை ஏற்றுக்கொள்கிறேன். அத்தோடு நானும் நானாகவே இருக்கிறேன். இருப்பேன்.

    ReplyDelete
  32. இந்து மதம் எதோ புனிதமான மதம் என்பது போல பேச இடம் கொடுத்து விட்டீர்களே :-((((((.

    ReplyDelete
  33. // செந்தில் குமரன் said...
    இந்து மதம் எதோ புனிதமான மதம் என்பது போல பேச இடம் கொடுத்து விட்டீர்களே :-((((((. //

    செந்தில், இந்த உலகில் எந்த மதமும் புனிதமானதல்ல. இதை எந்த மதவாதியும் ஏற்கார்.

    இந்து மதத்தில் உள்ள மிகப் பெரிய கொடுமை சாதீயம். அதை யாரும் மறுப்பதிற்கில்லை. நிதர்சனமான உண்மைகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

    அதே நேரத்தில் இன்றைய இந்து மதத்தில் நல்ல விஷயங்கள் இருந்தால் அதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். தவறில்லை. தருமி எடுத்துக்கொண்டிருப்பது ஒரு கருத்து. அந்த ஒரு கருத்தளவிலேயே அவர் ஒப்பீடு செய்திருக்கிறார். அவ்வளவுதான். சாதீயம் என்று பேசினால் அதில் இங்கே உள்ளதனைத்தும் அவரும் சொல்வார். நானும் ஒத்துக்கொள்வேன். இந்து மதத்தில் கெட்டது மட்டுமே உள்ளது நம்புவதும் ஏமாற்றுத்தனமே என்பது என் கருத்து. நல்லது கெட்டது எங்கும் உண்டு. நல்லதை ஏற்று அல்லதை ஒதுக்கத்தான் வேண்டும்.

    ReplyDelete
  34. தருமி ஐயா,

    அசத்தலான அலசல். ஆழ்ந்து சிந்தித்து எழுதியது என்று புரிகிறது.

    // நமக்குள் இருக்க வேண்டியது religious tolerance இல்லை; தேவை relgious acceptance.//

    உண்மை நூறு சதவீகிதம் உண்மை. இது வருவருவதற்கான சாத்திய கூறுகள் மிக குறைவென்றே எனக்கு தோண்றுகிறது.

    //கிறித்துவர்கள் இந்து மத நண்பர்களுக்குத் தங்கள் கடவுளர் போட்ட காலண்டர், டாலர் போன்றவற்றைக் கொடுப்பதும், அதை எந்த வித மறுப்பின்றி இந்து நண்பர்கள் வாங்கி,கொடுத்தவரின் அன்புக்காகவேனும் அதைப் பயன்படுத்தும் பண்பை என்றாவது ஒரு கிறித்துவரிடமோ, இஸ்லாமியரிடமோ காண முடியுமா?//
    உண்மை இருக்கிறது. கொஞ்சம் கஷ்டம் தான். உங்கள் வாதங்கள் சரி.

    //ஏதாவது ஒரு கட்டத்தில் எரிச்சில் மூட்டத்தான் செய்யும். அதன் ஆரம்பம் தெரிய ஆரம்பித்து விட்டது. R.S.S.. சங் பரிவார் இவைகளின் குரல் உயர்வது இதன் வெளிப்பாடே.//

    எனக்கு அப்படி தான் தோன்றுகிறது. இந்த இயக்கங்களின் வரலாறும் அதையே சொல்கிறது. இவை வளர்வது ஹிந்துக்களையும் relgious acceptance நிலையில் உள்ளவரையும் யோசிக்கவைத்துவிடும். சிக்கல் தான் இந்த முடிச்சி, மத தலைவர்களால் தான் தீர்க்கமுடியும், உண்மையாக முயற்சிப்பாராயின்.

    relgious acceptance வளராமல் இருப்பது இன்றைய அரசியல்வாதிகளின் தேவையும் கூட. அது வளர்ந்தால் ஒரு மதத்தை திட்டி ஓட்டு கேட்க முடியாதே!!!

    // செந்தில் குமரன் said...
    இந்து மதம் எதோ புனிதமான மதம் என்பது போல பேச இடம் கொடுத்து விட்டீர்களே :-((((((.
    //

    செந்தில் புனிதமா, புதிரா விசயம் அல்ல, மதத்தினரின் பார்வைகள் தான் இங்கு சொல்லப்பட்டது. ஒரு இடத்திலாவது மத நல்லிணக்கம் இருப்பது உங்களுக்கு :-(((((( இவ்வளவு பெரிய சங்கடத்தை வரவைத்துள்ளதே??!! ஏன்??

    பதிவுக்கு நன்றி தருமி ஐயா.

    ReplyDelete
  35. தருமி சார் ஒத்த பல கருத்துக்களை தந்திருக்கிறீங்க.. சில சிந்தனைகள்.

    ஒருவேளை அபிரகாமியமல்லாத மதத்திலும் ஒண்ணா கூடி மத படிப்பினைகளை சின்ன வயசிலேர்ந்தே ஊட்ட ஆரம்பிச்சாங்கன்னா (அந்த வளக்கம் இருந்துச்சுன்னா) இப்படி மத்த மதங்கள பொய்யுன்னு சொல்லி எதிர்ப்பாங்களோ என்னவோ? அடிப்படையில் எல்லா மதங்களும் அடுத்த மதங்களை எதிர்த்தே ஆக வேண்டும் இதை உங்க பதிவிலேயே சொல்லியிருக்கீங்க. இந்துக்களில் சில பிரிவுகள் அடுத்த இந்துக் கடவுள்களையே வணங்குவதில்லை. என்னை படைத்த கடவுள் இவந்தான்னு நம்பும்போதே அடுத்த கடவுளெல்லாம் பொய்தான்னு சொல்லிவிடுகிறோமே,

    மதம் பரப்புவது பாசிசத்த வளர்க்கும் என்பது உண்மையா இருக்கலாம், ஆர் எஸ் எஸ் என்ன அஜெண்டாவோட தோற்றுவிக்கப் பட்டதோ அதத்தான் இன்றைக்கும் செய்துவருகின்றதுன்னு நினைக்கிரேன். யாரும் அதத் தூண்டிவிடத் தேவையில்ல.

    நிஜமாகவே ஒருத்தர் தன் கடவுள்மேல நம்பிக்கை வைத்திருந்தால் அதை அவரால எப்படி மறைக்க முடியும்? கடவுளைப் பர்றிய அறிவு ஒரு ultimate truth அப்படி ஒரு உண்மைய ஒருவர் கண்டுகொண்டதாய் நினைக்கும் பட்சத்துல அத எல்லாருக்கும் சொல்லுவதே முறை.

    மதமாற்றம் மட்டும் வன்முறையத் தூண்டும் விஷ்யமல்ல...அடிமட்ட மக்கள் உரிமை பெறுவதும்கூட பாசிசத்த தூண்டலாம் அதுக்காக சும்மா இருக்க முடியுமா?

    மதமாற்றம் ஒரு சமூக நிகழ்வு..இந்தியாவில் புத்தமதம் எவ்வளவு பரவலாயிருந்துச்சு...இப்ப எங்க போச்சு? இந்த மாற்றங்கள் நிச்சயம் நடந்துகொண்டே இருக்கும்.

    மதமாற்றத்தை தடுக்க சிறந்த வழி தன் மதத்தை உறுதிப் படுத்துவதுதான். இது தொடர்பா என்ன முயற்சி எடுக்கப் படுது?

    பணக்காரர்களுக்காகவே உருவாகும் சாமியார்கள் அதிகமாயிருக்கு ஏழை மக்களுக்கு எந்த சாமியார் வாழும் கலையையும் வேத தத்துவங்களையும் சொல்லித் தருவது? பல படித்த இந்துக்களே தங்கள் குழந்தைகளுக்கு மதம்பற்றி எதையும் சொல்லித் தருவதில்லை. இந்துமதம் பற்றி எனக்குத் தெரிந்த விஷயங்கள் கூட சில 25 வயது பசங்களுக்குத் தெரியவில்லை. இதையெல்லாம் பாக்காம எப்படி?

    கிறித்துவ காலெண்டர் எத்தனை சீர்யசான இந்துக்களின் வீட்டில் தொங்குது?

    அடிப்படையில் நீங்க சொல்லியிருக்கிறது போல தங்கள் மதத்தை பர்றிய (அதீத்) அறிவே மற்ற மதங்களை வெறுக்க வைக்குது. இந்த அறிவு அபிராமிய மதங்களல்லாதவர்களுக்கு அதிகமானா அவங்களும் இப்படித்தான் சொல்வார்கள்.

    எனக்கு மத்த மதங்களப் பத்திய அறிவு இருக்குது நான் சார்ந்திருந்த மதத்தின் குறைகள் தெரிஞ்சிருக்கு இந்தத் தெளிவ எல்லார்கிட்டையும் எதிர்பார்ர்க்க முடியுமா?

    இன்றைக்கு என் பெயரை வைத்துத்தானே நான் சொல்வதை மதிப்பிடுகிறார்கள்? இதை மாற்ற முடியுமா? ரெம்ப கஷ்டம் சார்.
    பேபேல் கோபுரத்தின் கதைதான் நியாபகம் வருது. ஒரு வேள கடவுளே நம்மள இப்படி பிரிச்சு வச்சுருக்காரோ என்னவோ.

    ReplyDelete
  36. தருமி சார் ஒத்த பல கருத்துக்களை தந்திருக்கிறீங்க.. சில சிந்தனைகள்.

    ஒருவேளை அபிரகாமியமல்லாத மதத்திலும் ஒண்ணா கூடி மத படிப்பினைகளை சின்ன வயசிலேர்ந்தே ஊட்ட ஆரம்பிச்சாங்கன்னா (அந்த வளக்கம் இருந்துச்சுன்னா) இப்படி மத்த மதங்கள பொய்யுன்னு சொல்லி எதிர்ப்பாங்களோ என்னவோ? அடிப்படையில் எல்லா மதங்களும் அடுத்த மதங்களை எதிர்த்தே ஆக வேண்டும் இதை உங்க பதிவிலேயே சொல்லியிருக்கீங்க. இந்துக்களில் சில பிரிவுகள் அடுத்த இந்துக் கடவுள்களையே வணங்குவதில்லை. என்னை படைத்த கடவுள் இவந்தான்னு நம்பும்போதே அடுத்த கடவுளெல்லாம் பொய்தான்னு சொல்லிவிடுகிறோமே,

    மதம் பரப்புவது பாசிசத்த வளர்க்கும் என்பது உண்மையா இருக்கலாம், ஆர் எஸ் எஸ் என்ன அஜெண்டாவோட தோற்றுவிக்கப் பட்டதோ அதத்தான் இன்றைக்கும் செய்துவருகின்றதுன்னு நினைக்கிரேன். யாரும் அதத் தூண்டிவிடத் தேவையில்ல.

    நிஜமாகவே ஒருத்தர் தன் கடவுள்மேல நம்பிக்கை வைத்திருந்தால் அதை அவரால எப்படி மறைக்க முடியும்? கடவுளைப் பர்றிய அறிவு ஒரு ultimate truth அப்படி ஒரு உண்மைய ஒருவர் கண்டுகொண்டதாய் நினைக்கும் பட்சத்துல அத எல்லாருக்கும் சொல்லுவதே முறை.

    மதமாற்றம் மட்டும் வன்முறையத் தூண்டும் விஷ்யமல்ல...அடிமட்ட மக்கள் உரிமை பெறுவதும்கூட பாசிசத்த தூண்டலாம் அதுக்காக சும்மா இருக்க முடியுமா?

    மதமாற்றம் ஒரு சமூக நிகழ்வு..இந்தியாவில் புத்தமதம் எவ்வளவு பரவலாயிருந்துச்சு...இப்ப எங்க போச்சு? இந்த மாற்றங்கள் நிச்சயம் நடந்துகொண்டே இருக்கும்.

    மதமாற்றத்தை தடுக்க சிறந்த வழி தன் மதத்தை உறுதிப் படுத்துவதுதான். இது தொடர்பா என்ன முயற்சி எடுக்கப் படுது?

    பணக்காரர்களுக்காகவே உருவாகும் சாமியார்கள் அதிகமாயிருக்கு ஏழை மக்களுக்கு எந்த சாமியார் வாழும் கலையையும் வேத தத்துவங்களையும் சொல்லித் தருவது? பல படித்த இந்துக்களே தங்கள் குழந்தைகளுக்கு மதம்பற்றி எதையும் சொல்லித் தருவதில்லை. இந்துமதம் பற்றி எனக்குத் தெரிந்த விஷயங்கள் கூட சில 25 வயது பசங்களுக்குத் தெரியவில்லை. இதையெல்லாம் பாக்காம எப்படி?

    கிறித்துவ காலெண்டர் எத்தனை சீர்யசான இந்துக்களின் வீட்டில் தொங்குது?

    அடிப்படையில் நீங்க சொல்லியிருக்கிறது போல தங்கள் மதத்தை பர்றிய (அதீத்) அறிவே மற்ற மதங்களை வெறுக்க வைக்குது. இந்த அறிவு அபிராமிய மதங்களல்லாதவர்களுக்கு அதிகமானா அவங்களும் இப்படித்தான் சொல்வார்கள்.

    எனக்கு மத்த மதங்களப் பத்திய அறிவு இருக்குது நான் சார்ந்திருந்த மதத்தின் குறைகள் தெரிஞ்சிருக்கு இந்தத் தெளிவ எல்லார்கிட்டையும் எதிர்பார்ர்க்க முடியுமா?

    இன்றைக்கு என் பெயரை வைத்துத்தானே நான் சொல்வதை மதிப்பிடுகிறார்கள்? இதை மாற்ற முடியுமா? ரெம்ப கஷ்டம் சார்.
    பேபேல் கோபுரத்தின் கதைதான் நியாபகம் வருது. ஒரு வேள கடவுளே நம்மள இப்படி பிரிச்சு வச்சுருக்காரோ என்னவோ.

    ReplyDelete
  37. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  38. செந்தில் குமரன்,

    முதலில் உங்களின் சில கூற்றுக்களுக்கு என் பதில்:

    //வஜ்ரா சங்கர் பதிவா இல்லை தருமி பதிவா என்று ஒரே குழப்பமாகி விட்டது :-))).//

    -- ஆக என்னை ஒரு bracket-க்குள் போட்டு வைத்திருந்திருக்கிறீர்கள். இல்லையா? நீங்கள் போட்ட கோட்டைத் தாண்டியதும் உங்களுக்கு இந்த சந்தேகம்
    வந்து விட்டது போலும். கோடு போட்டது நீங்கள்; ஆகவே தவறு என்னுடையதில்லையென்று நினைக்கிறேன். i have my own brackets and i apply them purely only by my convictions on issues.


    //நீங்கள் ஆப்ராஹாமிய மதங்கள் இந்து மதத்தை விட evil ஆனது என்றும் சொல்ல வந்து இந்து மதம் lesser of the evils என்பது போல சொல்ல
    வந்தீர்கள் என்றே நினைக்கிறேன்.//

    -- இங்கே எடுத்துக் கொண்ட விஷயத்தில் நிச்சயம் இந்து மதம் பாஸிட்டிவாக வேறுபட்டு நிற்கிறது. மற்ற மதங்கள் அந்த நிலைப்பாடு எடுக்க
    முடியாமைக்கும் காரணம் என்னவென கூறியுள்ளேன். நான் என்ன சொல்ல வந்தேன் என்பதை யோசித்து சொல்லுவதை விடவும், நான் சொல்லியுள்ளதில் உள்ள சரி,தவறுகளைக் கூறியிருந்தால் நான் பதில் சொல்ல ஏதுவாயிருந்திருக்கும். why do you put your words into my mouth?


    //இந்து மதம் எதோ புனிதமான மதம் என்பது போல பேச இடம் கொடுத்து விட்டீர்களே :-((((((.//

    இதுவும் உங்கள் judgment தானே!

    rationality-யோடு அணுகப்படும்போது, கேள்விகள் கேட்கப்படும்போது எந்த மத அடிப்படையும் நிற்க முடியாது என்பது என் வாதம். அப்படி மதக் கோட்பாடுகள் உண்மையில்லை என்னும்போது அதில் என்ன புனிதமான, புனிதமற்ற மதம் என்ற வேறுபாடு?

    ஆபிரஹாமிய மதங்களை விடவும் மனித அறிவுக்கு எட்டும் வகையிலும், மனித நீதிக்கு ஒட்டி வரும் வகையிலும் உள்ள இந்து மதக் கோட்பாடுகள் சிலவற்றில்
    எனக்கு நல்லெண்ணம் உண்டு. ஒரு உதாரணம்: ஒரு மனிதன் வாழும் குறுகிய காலத்தில் அவன் நல்லவனாயிருந்திருந்தால், - இஸ்லாமைப் பொருத்தவரை,
    அவன் அல்லாவை ஏற்றுக் கொண்டவனாயிருந்தால் அவனுக்கு மோட்சம் / சுவனம். இல்லையேல் அவனுக்கு நித்திய நரகம். நாம் வேண்டுமா வேண்டாமா என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கும் மரண தண்டனையை விட இது மோசமானதாக, கடுமையானதாக, கொடுமையானதாக எனக்குத் தோன்றுகிறது. இந்து மதமோ உன் கர்ம வினைக்கு ஏற்ப அடுத்த அடுத்த பிறவிகள் எடுத்து, - சங்கு சுடப்படுவது போல - வினைதீர்த்து இறுதியில் கடவுளோடு ஒன்றுவாய் என்பது எனக்கு "நியாயமான ஒன்றாக" - fair logic - தெரிகிறது. நான் இதை நம்புகிறேனா இல்லையா என்பது வேறு விஷயம்! :)

    வேதப் புத்தகங்கள் ஆபிரஹாமிய மதங்களுக்கு ஒரு வேலியாகி,reference point ஆக இருப்பது அதன் பலமாகவும், பலவீனமாகவும் உள்ளது. ஆனாலும் இதுதான் இந்து மதக் கோட்பாடு என்று எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு குறிப்பிட்ட நூல் ஏதும் இல்லாததே இந்து மதத்தின் பலவீனமாக உள்ளது. அவனவனுக்கு அவனவன் வழி என்பது போன்ற free for all என்ற நிலை இந்து மதத்தில் இருப்பதால்தான், அது ஒரு மதமல்ல; ஒரு வாழ்க்கை நெறி என்றெல்லாம் சொல்ல வேண்டியதுள்ளது.


    // lesser evil என்பதால் ஒன்றை defend செய்து lesser evilஐ வளர்த்து விட்டு விடாதீர்கள்.//

    அய்யா, எனக்கு மதங்களே பிடிப்பதில்லை என்றுதானே கூறுகிறேன். இதில் நான் ஏன் ஒரு மதத்தை வளர்த்து விட முயலப்போகிறேன்? அதோடு நானென்ன விவேகானந்தரா இல்லை அவதாரமா?


    //இந்து மத காப்பாளர்களாக தங்களைக் கருதிக் கொள்ளும் அதே சமயம் இந்து மதத்தின் அடிப்படையே உணராதவர்களான பலரிடத்திலும் நீங்கள் சொன்னது போல இந்து மதத்தைப் பற்றி சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் உண்டு.//

    எத்தனை விழுக்காடு இருக்கும் ? நிச்சயமாக 5%-க்கும் கீழ்தான் இருக்கும் என்பது என் கணிப்பு. ஆனால் கிறித்துவரில் 80%,இஸ்லாமியரில் 95% வரை தங்கள் மதமே சரியான மதம் என்பதில் அழுத்தமாக இருப்பார்கள் என்பதும் என் கணிப்பு.


    கடைசியாக ஒரு விண்ணப்பம். மதங்களைப் பற்றிய என் இந்தப் பதிவை மட்டும் படித்ததால் உங்களுக்கு என் மேல் ஏற்பட்டுள்ள கணிப்பு முழுமையானதாய் இல்லை என்று நினைக்கிறேன். தயவு செய்து என் மதங்களைப் பற்றிய மற்ற தொடர் பதிவுகளை ஒரு முறை வாசித்து அதன் பின் முடிவெடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இது என் முதல் மதப் பதிவு

    நன்றி

    ReplyDelete
  39. //
    அது ஒரு மதமல்ல; ஒரு வாழ்க்கை நெறி என்றெல்லாம் சொல்ல வேண்டியதுள்ளது.
    //

    வேண்டா வெறுப்பாக சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன். அப்படி அதைச் சொல்ல விறுப்பமில்லை என்றால் எதையாவது சொல்லுங்கள். என்ன கெட்டுவிடும்...!?

    ReplyDelete
  40. அடடா! என்ன வஜ்ரா எதுக்கு கோபப்படுறீங்க?

    இது என்ன நான் சொன்னதா என்ன? பெரியவங்க பலர் சொன்னதில்லையா இது? அதை மேற்கோளிட்டேன்; அவ்வளவே.

    ஆனாலும் என்னைப் பொருத்தவரை இது just a cliche.

    ReplyDelete
  41. //அப்போது அந்த மதத்தை ஏன் கடை பிடிக்கவேண்டும்.? தூக்கி எரியவேண்டியது தானே ?\\


    //தூக்கி விசாலாம்தான், வீசி விட்டு வரும் அந்தோணிராஜையும் அப்துல் காதரையும் எந்த பிரிவில் சேர்ப்பேள். அவர்களின் பூர்விக குலமான தாழ்த்தப்பட்டோரிலா? அல்லது அதையும்விட ஒரு தாழ்ந்த குலத்திலா? (ஏனெனில் மதம் மாறி மானத்தை வாங்கிய கருங்காலிகளல்லவா இவர்கள்).//

    சடையப்பரே,

    இங்கு நாம் பேசும் பொருளுக்கும் உங்களின் இந்தப் பின்னூட்டத்திற்குமுள்ள தொடர்பு எனக்குத் தெரியவில்லை. இருப்பினும்...

    அந்தோனி ராஜும், அப்துல் காதரும் இன்று மதம் மாறியவர்களில்லையே; அது அவர்கள் தாத்தா காலத்தில் நடந்த விஷயம் அல்லவா. ஆனால் இன்றும் அவர்கள் தங்கள் மதங்களை வீசிவிடாமலிருக்க எந்த குலத்தில் சேர்க்கப் படுவார்கள் என்பதுதான் காரணமா? இரண்டு generations-ல் வளர்த்துக் கொண்ட மதப் பாசம் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன். அப்படி இல்லையா?

    ReplyDelete
  42. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  43. செந்தில் குமரன்,

    catch 22-ன் review ஒன்று வாசித்து விட்டு அந்தப் புத்தகத்தைப் பழைய புத்தகக் கடையில் தேடிப் பிடித்து - அப்போது அதுதான் என் வழக்கம், புது புத்தகம் வாங்க காசுக்கு எங்க போறது? - வாங்கி, சில பக்கங்கள் மட்டும் வாசித்து விட்டு மேலே தொடராமல், தொடரமுடியாமல் விட்டு விட்ட நினைவு.ஏனென்றால் நடந்தது 25 ஆண்டுகளுக்கு மேலே இருக்குமே!

    நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். மீண்டும் கிடைத்தால் மீண்டும் முயற்சிக்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  44. ஐயா, என்னை தவறாக புரிந்துக் கொண்டிருக்கிறீர்கள். அடிப்படையில் இந்தியாவில் குழந்தைகளை வளர்ப்பதில்லை மதம் அவர்களை வளர்க்க சொல்கிறது. பெரும்பான்மையானவர்களான(எல்லா மதத்தினரும் அடக்கம்) மதநல்லிணக்கம் கொண்டவர்களைப் பார்த்து அடிப்படை வாத சிறுபான்மையினர் (இந்து மதத்தினரும் அடக்கம்) வாழவேண்டும் என சொன்னேன்.

    இப்போது விளங்கியிருக்கும் என நம்புகிறேன்

    ReplyDelete
  45. கால்கரி சிவா,
    போனா போகுது. உங்களுக்கு தங்க ரீகலில் படம் பார்க்கும் தண்டனையிலிருந்து விலக்களிக்கிறேன். :)

    விளக்கத்திற்கு நன்றி

    ReplyDelete
  46. //
    எழில்,
    இதிலெல்லாம் எப்படி மைனாரிட்டி ரைட்ஸ் வரும்..?

    ஆனால் என்னைப் பொருத்தவரை இது போன்ற தனிமனித தவறுகளை விடவும் dogma, concepts, faiths என்பது போன்றவைகளையே அதிகம் பார்க்க வேண்டியதுள்ளது என்று நினைக்கிறேன். அதற்காக அந்த நபர்கள் செய்தது சரியென்று சொல்வதாக நினைத்துவிட வேண்டாம்.
    //

    தருமி,

    சிறப்பாக கூறியிருக்கிறீர்கள்.

    மைனாரிட்டி ரைட்ஸ் என்றுதான் அன்று பேசப்பட்டது. வருமா இல்லையா என்பது வேறு விஷயம்.

    தனிமனித தவறுகள் என்று சொல்வதும் அந்த dogma, concepts, faiths ஆகியவை ஒவ்வொருவரிடமும் வெளிப்படும் விதமாகத்தானே இருக்கும்? அது அவர்களுக்கு தவறுகள் அல்ல என்று படாமல் இருப்பதற்கும், அதுதான் சரி என்று நினைப்பதற்கும் அந்த டாக்மா ஆகியவைதான் காரணமாகிறது.

    உங்கள் பின்னூட்டங்கள் பிரம்மாதமாக இருக்கின்றன.

    "நான் தான் கடவுள். என்னைப் பற்றி எல்லோரிடமும் சொல்லி, எனக்கு ஆள் பிடித்துத்தா" என்று கேட்கும் கடவுள் பலவீனமானவராகத்தான் எனக்கு தோன்றுகிறார்.

    ReplyDelete
  47. //போனா போகுது. உங்களுக்கு தங்க ரீகலில் படம் பார்க்கும் தண்டனையிலிருந்து விலக்களிக்கிறேன். :)//

    ரொம்ப நன்றி சார். மூட்டைபூச்சி, புழுக்கம் இவையெல்லாம் இப்போது அதிக கஷ்டமாக தெரிகிறது

    ReplyDelete
  48. தருமி,
    ஆப்ரகாமிய மதத்தவர் மட்டுமே தமது குழந்தைகளுக்கு மதத்தை வலுவாகப் பயிற்றுவிப்பது போலவும், இந்து மதத்தவர் அவ்வாறில்லை என்பதாகவும் இப்பதிவும் பின்னூட்டங்களும் கூறுவது உண்மையில்லை.
    முஸ்லிமா இல்லாதவன், கிறித்தவனா இல்லாதவன் எல்லோரும் இந்துன்னு வைப்பதால் வரும் குழப்பம் இது. இந்து என்பதை; அதன் தத்துவங்களை; வேதங்களை பின்பற்றுகிற பிராமணர்கள் தம் குழந்தைகளிடம் மதக்கருத்தை திணிக்காமல் இருக்கிறார்கள் என்பதை நம்ப இயலாது. மற்றவர்களையும் 'ஒரு வசதி'க்காக 'இந்து'வாக வைத்திருப்பதை வைத்து இதில் தவறான அனுமானத்துக்கு அடிகோலுவது முறையில்லை.
    நிஜத்தில் தனது மதத்தை முழுமையாக நம்புகிற எவரும் தம் பிள்ளைகளுக்கு மதத்தை பயிற்றுவித்தால் தவறில்லை தான் - தம் மனிதம் பேசுவதாக நம்புகிறவர்கள் மனிதத்தையும் சேர்த்துத் தான் கற்பிப்பார்கள்.

    ReplyDelete
  49. //பெரும்பான்மை இந்துச் சிறுவர்களுக்கு சமயக் கல்வி என்று ஏதேனும் உண்டா? இல்லையென்று நினைக்கிறேன். ஆனால் அவர்களிடம் மத நல்லிணக்கம் என்பதை விடவும், மதங்களைத் தாண்டி நட்பு பாராட்டுவது அவர்களுக்கு எளிது.//

    என் சிறு வயதில் (நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு) கிருத்துவ மற்றும் முகமதியர்களை சற்றே அதிக வித்தியாசமுள்ள மற்ற ஜாதிகள் என்றே நினைத்திருந்தேன். என் வயதொத்த மற்றவர்களும் அப்படித்தான். பெரியவர்களும் அவன் கிருத்துவ ஜாதி அல்லது முஸ்லிம் ஜாதி என்றுதான் மற்ற ஜாதிப்பெயர்களை சொல்வது போல சொல்லுவார்கள். இந்து மதத்தில் நிறைய ஜாதிகளும் இந்த ஜாதிகளில் ஒவ்வொன்றுக்கும் வித்தியாசமான பழக்கங்களும் வெவ்வேறான கோயில்களும் இருந்ததால் இவ்வாறு உருவகப் படுத்திக் கொள்ள முடிந்தது. பத்து வயதுக்கு மேல்தான் மதம் என்பது முழுமையாகப் புரிந்தது. சராசரியாக மாதத்திற்கு ஒரு பண்டிகையும், வருடத்திற்கு இரண்டுமுறை குலதெய்வ கோயில் பூசையும், எப்போதாவது வெளியூர் கோவிலுக்கு யாத்திரையும், விட்டில தினம் நடக்கும் சிறு வழிபாடும் மட்டுமே ஒரு இந்து சிறுவனுக்குக் கிடைக்கும் கடவுள் தொடர்புகள். இவற்றை மதத் தொடர்புகள் என்றுகூட அழைக்க முடியாது.

    மிகச் சிறந்த பதிவு.

    ReplyDelete
  50. //"நான் தான் கடவுள். என்னைப் பற்றி எல்லோரிடமும் சொல்லி, எனக்கு ஆள் பிடித்துத்தா" என்று கேட்கும் கடவுள் பலவீனமானவராகத்தான் எனக்கு தோன்றுகிறார்.
    //

    உங்க பார்வையில் அப்படித் தோன்றலாம்.

    இதே பார்வையில்.. தன் பக்தர்களை தக்கவைத்துக்கொள்ளத் தெரியாத கடவுளும் பலவீனமானவர்தானே?

    இயேசு உலகெல்லாம் போய் என் நற்செய்தியை சொல்லுங்கள் எனத்தான் சொல்லியிருக்கிறார். அவர் ஏற்படுத்தாத மதம் எப்படி அவர்பேரில் ஒரு மதமானதோ அது போலத்தான் (அதன் விளைவாகத்தான்) இன்னைக்கு உலகமெல்லாம் போய் மதமாற்றம் செய்கிறார்கள்.

    கடவுள்னு வந்துட்டா பலம் பலவீனமெல்லாம் எப்படி கணக்குப் போடுவது எழில்?

    ReplyDelete
  51. சிறில் அலெக்ஸ்,

    //இதே பார்வையில்.. தன் பக்தர்களை தக்கவைத்துக்கொள்ளத் தெரியாத கடவுளும் பலவீனமானவர்தானே?//

    இல்லை. தன் பக்தர்களை தக்க வைத்துக்கொள்ள எந்த விதமான தேவையும் கடவுளுக்கு இல்லை.

    யாரை வணங்கினாலும் மனிதன் இறையையே வணங்குகிறான். எந்த உருவில் இறையை வணங்குகிறான் என்பதை பொறுத்து அவனுக்கு என்ன வேண்டும் என்பதை மனிதனே தீர்மானித்துக்கொள்கிறான். சரஸ்வதியை வணங்குபவன் இறையை கல்விக்கடவுளாக உருவகித்து கல்வியை கேட்கிறான். லட்சுமியை வணங்குபவன் இறையை செல்வக்கடவுளாக உருவகித்து செல்வத்தை கேட்கிறான். மனிதன் இறையிடம் கேட்பது மாறலாம். இறை மாறாது. கற்றறிந்த இந்து துறவிகள் மதமாற்றம் பற்றி பெரிதாக அலட்டிகொள்ளாததன் காரணம் இதுவே. என்னை பொறுத்தமட்டில் கல்விக்காகவும் மரியாதைக்காகவும் மதம் மாறும் மனிதர்கள் தாங்கள் வேண்டியதை பெற்றுக்கொண்டால் எனக்கு மகிழ்ச்சியே.
    ஆனால், கல்வி, ஜாதி, மரியாதை போன்றவற்றை காட்டி மதம் மாற்றும் மனிதர்களுக்கு வேறு ஒரு நோக்கம் இருக்கிறது என்பது என் சந்தேகம். அவர்களுக்கு என்ன நோக்கம் இருந்தாலும், மதம் மாறினால், மரியாதை, கல்வி போன்றவை மதம் மாறும் மனிதர்களுக்கு கிடைத்தால் எனக்கு மகிழ்ச்சியே.

    எழில்

    ReplyDelete
  52. எழில்,

    ஆனாலும் இப்படி கவுத்தக் கூடாது. பதிவு நன்றாக இல்லை என்பதை எவ்வளவு நாசூக்காகச் சொல்லிச் செல்கிறீர்கள்! :)

    //உங்கள் பின்னூட்டங்கள் பிரம்மாதமாக இருக்கின்றன. //

    ReplyDelete
  53. //இல்லை. தன் பக்தர்களை தக்க வைத்துக்கொள்ள எந்த விதமான தேவையும் கடவுளுக்கு இல்லை. //

    சரியா சொன்னீங்க எழில்.. இதே போலத்தான் மத்த மதத்தவர மாற்றிக்கொள்ளும் தேவையும் கடவுளுக்கு இல்லை. எப்படி நமக்குன்னு வரும்போது நம்மால் ஏதாவது காரணம் சொல்லிவிட முடிகிறது பாத்தீங்களா..

    கடவுள குறை சொல்லாதீங்க உங்க பழைய பின்னூட்டத்த மீண்டும் படியுங்க. கடவுள் வீக்கானவரா? இல்ல மனிதன் ஏமாத்துறானா?

    ReplyDelete
  54. அய்யோ தருமி,

    உங்களை கவுக்க ஏலுமா?

    உங்கள் பதிவு போலவே உங்கள் பின்னூட்டங்களும் பிரம்மாதமாக இருக்கின்றன என்று வாசித்துக்கொள்ளுங்கள்

    எழில்

    ReplyDelete
  55. ம்ம்ம்...ம்ம்..ம்

    இப்படி அடிச்சி பிடிச்சி நல்ல வார்த்தை வாங்க வேண்டியதிருக்கு : )

    ReplyDelete
  56. //
    ஆனால், கல்வி, ஜாதி, மரியாதை போன்றவற்றை காட்டி மதம் மாற்றும் மனிதர்களுக்கு வேறு ஒரு நோக்கம் இருக்கிறது என்பது என் சந்தேகம்.
    //

    அது சந்தேகம் என்ற நிலை தாண்டி உண்மை என்ற நிலையை என் மனம் ஏற்கக் காரணமாக இருந்த வலைத்தளம் இங்கே

    Longitude, lattitude கணக்கு வைத்து ஏரியா ஏரியாவாக மதம் மாற்ற பணம் செலவு செய்கிறார்கள். இந்தியா is first on the hit list.!

    ReplyDelete
  57. கருத்து, உங்கள் கருத்தெல்லாமுடன் ஒத்துப் போகிறேன். ஆனால் நீங்கள் உங்கள் கருத்துகளை வைத்து ஏதும் முடிவோ, தீர்வோ கூறவில்லை. நான் முடிவு ஒன்று சொல்லியுள்ளேன். சரியா என்று சொல்லுங்கள்; தீர்வு இல்லை என்பதே என் முடிவு.

    //ஆப்ரகாமிய மதத்தவர் மட்டுமே தமது குழந்தைகளுக்கு மதத்தை வலுவாகப் பயிற்றுவிப்பது போலவும், இந்து மதத்தவர் அவ்வாறில்லை என்பதாகவும் இப்பதிவும் பின்னூட்டங்களும் கூறுவது உண்மையில்லை.//

    இதற்குரிய பதிலாக, செந்தில் குமரனுக்குக் கொடுத்த ஒரு பதில் பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன்.சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸுக்கு மட்டுமல்ல, நீங்கள் சொல்லும்,மதத்தைக் கற்றுக் கொடுக்கும் விஷயத்திற்கும் கீழே சொன்னது சரியாக இருக்குமென்றே நினைக்கிறேன்.

    //இந்து மத காப்பாளர்களாக தங்களைக் கருதிக் கொள்ளும் அதே சமயம் இந்து மதத்தின் அடிப்படையே உணராதவர்களான பலரிடத்திலும் நீங்கள் சொன்னது போல இந்து மதத்தைப் பற்றி சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் உண்டு.// - செந்தில் குமரன்.

    எத்தனை விழுக்காடு இருக்கும் ? நிச்சயமாக 5%-க்கும் கீழ்தான் இருக்கும் என்பது என் கணிப்பு. ஆனால் கிறித்துவரில் 80%,இஸ்லாமியரில் 95% வரை தங்கள் மதமே சரியான மதம் என்பதில் அழுத்தமாக இருப்பார்கள் என்பதும் என் கணிப்பு.

    //முஸ்லிமா இல்லாதவன், கிறித்தவனா இல்லாதவன் எல்லோரும் இந்துன்னு வைப்பதால் வரும் குழப்பம் இது...மற்றவர்களையும் 'ஒரு வசதி'க்காக 'இந்து'வாக வைத்திருப்பதை வைத்து இதில் தவறான அனுமானத்துக்கு அடிகோலுவது முறையில்லை. //

    இதை நான் முழுமையாக ஒத்துக் கொள்கிறேன். தங்கமணியின் பதிவில் இக்கருத்தையும் வைத்துள்ளேன். இந்தக் கருத்துக்காகத்தான் நான் காஞ்சையாவை மேற்கோளிட்டிருந்தேன்.

    // தனது மதத்தை முழுமையாக நம்புகிற எவரும் தம் பிள்ளைகளுக்கு மதத்தை பயிற்றுவித்தால் தவறில்லை தான்..//

    தவறில்லைதான். ஆனால் ஆபிரஹாமிய மதங்களின் அடிப்படை - அதை யாரும் மாற்ற முடியாது என்பதும் தெரியும் - தரும் superiotiy complex-ம், தன்மதமே சரியான மதம் என்ற உணர்வும்தான் பிரச்சனைகளின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது. ஆயினும் இதில் எந்த மாற்றமும் கொண்டுவர முடியாது என்பதும் நிச்சயம். இல்லையா? இதைத்தான் மனித குலத்துக்குள் மத நல்லிணக்கம் ஏற்படுவது எவ்வளவு ஒரு முடியாத விஷயம் என்று கூறுகிறேன். மனித குலத்திற்கு ஒரே மதம் என்ற நிலையும் வரப்போவதில்லை - சிலருக்கு அந்த நம்பிக்கை உண்டு என்றாலும். இதைத்தான் நான் catch 22 - இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை - என்கிறேன்.

    சரியா?

    நான் சொல்லுவது நிதர்சனங்கள்.அதனால் எழும் ஆதங்கங்கள். இப்பதிவைப் பொறுத்தவரை எந்த மதத்தையும் குறை சொல்லவோ, உயர்த்தவோ எதுவும் எழுதப்படவில்லை.

    ReplyDelete
  58. ஒரு சொந்தக் கதை; சோகக் கதையும்தான்:

    மதநல்லிணக்கம் - ஒரு கானல் நீர்; Inter-religous Amity - A Mirage என்ற தலைப்பில் எழுத வேண்டுமென பல நாளாய் மனத்துக்குள் ஊறப்போட்டு வந்த ஒரு விஷயம் இன்று எஸ் பா.வின் 'மதவாதம்' என்ற பதிவுக்குப் பின்னூட்டமாக ஆரம்பித்து, இறுதியாக இந்தப் பதிவாக வெளியாகும்படியாயிற்று. இந்தக் கருத்துக்களின் வித்துகள் விழுந்த இடம் interesting ஆனது.

    சென்னைப் பல்கலைக் கழகத்தில் மத நல்லிணக்கத்திற்கான நடந்த ஒரு பட்டறையில் கலந்து கொண்டபோதுதான் இக்கருத்துக்கள் என்னுள் பிறந்து, ஒரு சில ஆண்டுகளில் மதுரைப் பல்கழகத்தில் நடந்த இன்னொரு பட்டறையில் வளர்ந்தது. பல மதத்துப் பேராசிரியர்கள் கலந்து கொண்ட இந்த இருவேறு -முதல் பட்டறை ஒரு International Workshop - பட்டறைகள் இந்த கசப்பான உண்மைகளை எனக்கு உணர்த்தின.முதல் பட்டறையில் Hindu humaneness, Christian humaneness, Islamic humaneness, Jewish humaneness, - என்று மதத்திற்கு மதம் மனிதம் மாறுவதுபோல் தலைப்பு வைத்து இருக்கும் இடைவெளியை அதிகமாக்குவது போல் பேச்சுக்களும், விவாதங்களும் நடந்தன. நான் சொன்ன் ஒரு கருத்து: இது போன்ற தலைப்புகளில் பேசுவதே தவறு; எம்மதத்தினராயினும் மனிதம் ஒன்றே. அதை வேறு படுத்துவதும், பிளவு படுத்துவதுமே தவறு. இரண்டாவதாக நடந்த பட்டறையின் முதல் நாளே முன்பு மனத்தில் விழுந்த வித்து பெரிதாக வளரும் வண்ணம் நடப்புகள் இருந்தன. அப்போது மனதில் தோன்றிய இரு விஷயங்கள்:
    1. மத நல்லிணக்கம் ஒரு கானல் நீர்.
    2. இதுபோன்ற நல்லிணக்க பட்டறைகளும்,கூட்டங்களும், கலந்துரையாடல்களும் பிரிவுகளை வளர்க்க மட்டுமே பயன்படும்.

    இரண்டாவது பட்டறையில் கலந்து கொண்டோர் முடிந்து போகும்போது மேலும் கூடிய மனமாச்சரியங்களோடும், அடுத்த மதத்தின் மேல் ஒரு வித ஐயப்பாடுகளோடுதான் சென்றார்கள். காரணம் எல்லோருக்கும் அவரவர் முயலுக்கு மூன்று கால்களதான்!

    ReplyDelete
  59. //
    //முஸ்லிமா இல்லாதவன், கிறித்தவனா இல்லாதவன் எல்லோரும் இந்துன்னு வைப்பதால் வரும் குழப்பம் இது...மற்றவர்களையும் 'ஒரு வசதி'க்காக 'இந்து'வாக வைத்திருப்பதை வைத்து இதில் தவறான அனுமானத்துக்கு அடிகோலுவது முறையில்லை. //

    இதை நான் முழுமையாக ஒத்துக் கொள்கிறேன். தங்கமணியின் பதிவில் இக்கருத்தையும் வைத்துள்ளேன். இந்தக் கருத்துக்காகத்தான் நான் காஞ்சையாவை மேற்கோளிட்டிருந்தேன்.
    //

    0. இந்த மற்றவர்கள், (அதாவது, இஸ்லாம், கிறித்தவர் அல்லாத ) யார் ?

    1. அப்ப இவர்கள் எந்த மதம்.?

    2. மதுரையில் மீனாக்ஷி அம்மனையும், வண்டியூர் மாரியம்மனையும் கோவிலில் வணங்கும் கூட்டத்தில் உள்ளவர்கள், ஹிமாலயத்தில் உள்ள வைஷ்னோ தேவி கோவிலுக்குச் சென்றாலும் அதே பக்தியுடன் வணங்க முடியும். அதையே தான் செய்கின்றனர். அப்போது அவர்கள் யார் ? இந்து இல்லையா ?

    3. இதில் யாருடைய வசதிக்காக அவர்களை இந்து என்று அழைக்கிறோம் ?

    4. அவர்களை அவர்கள் யாரென்று அழைத்துக் கொள்கிறார்கள் ? மீனாக்ஷியை வணங்குபவர்கள் மீனாக்ஷி மதத்தைச் சார்ந்தவர்கள், மாரியம்மனை வணங்குபவர்கள் மாரியம்மன் மதத்தைச் சார்ந்தவர்கள் என்றா ?

    அப்புறம் இந்த தேவிக்களை வணங்குபவர்கள் எல்லாம் ஒவ்வொறு மதத்தைச் சார்ந்தவர்களா என்பதையும் சற்று விளக்கவும்.

    அம்பிகா, பவானி, பூதமாதா, தாக்ஷாயணி, துர்கா, காளி, மாயா, லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி, தாரா, உமா etc., etc., (ஆதி ஷங்கரரில் சௌந்தர்ய லஹரியில் இன்னும் பெர்ய்ய பட்டியலே இருக்கு!)

    இவையெல்லாம் பிராமணர் முதல், தலீத் வரை அனைவரும் வணங்கும், சிலருக்கு இஷ்ட தெய்வமாகவும், குடும்ப தெய்வமாகவும் விளங்கும் தெய்வங்கள்.

    சுறுக்கமாக, Ekam Sat, viprah bahutha vadanthi என்ற உபனிட உண்மையை ஏற்ற அனைத்து மதமும் இந்து மதமே. அதை உணர மறுக்கும் மதங்களும், வியாபாரிகள், கொள்ளைக்காரர்கள் ( நன்றி: கால்கரி சிவா) கொண்டு வந்து விற்ற/திணித்த மதங்களும் இந்து மதம் அல்ல.

    ReplyDelete
  60. வஜ்ரா,

    நாம் இருவருமே திரும்ப திரும்ப ஒரே விஷயத்தையே சொல்லிக் கொண்டிருக்கிறோமென்று நினைக்கிறேன்.

    //1. அப்ப இவர்கள் எந்த மதம்.? // வேறு பெயர் கொடுத்து விடலாமே! Catholic- Protestant மாதிரி!

    // 2 // இந்த அலகு குத்துறது, சாமியாடுறது, கடா வெட்டுறது - இது போன்றவை அவ்வளவு நளினமில்லாத விஷயங்களாக "சில" இந்துக்களால் பார்க்கப் படுவதில்லையா; இல்லை, அவைகளும் அனைத்து இந்துக்களுக்கும் பொதுதானா? பதில் தெரியாமல் கேட்கும் கேள்வி இது.

    //3. இதில் யாருடைய வசதிக்காக அவர்களை இந்து என்று அழைக்கிறோம் ? // தூங்கினால்தானே எழுப்ப முடியும், வஜ்ரா!

    //4. அவர்களை அவர்கள் யாரென்று அழைத்துக் கொள்கிறார்கள் ? // உங்களின் முதல் கேள்விக்குரிய பதிலே இங்கு.

    உங்களைப் பொருத்தவரை இந்து மதம் ஒரு monolithic structure. இல்லையா? ஆனால் என்னைப் பொருத்தவரையிலும், காஞ்சையாவின் (அவர் பெயர் சொன்னாலே உங்களுக்குப் பிடிக்காது; என்ன செய்வது - எனக்கு மிகவும் பிடிக்கிறதே!) நூலை வாசித்துப் புரிந்த வரையிலும் இந்து மதம் இரு கூறுபட்டதே.வேறு மதத்தில் பிறந்துவிட்ட காரணத்தால் சில விஷயங்களைப் பட்டென்று போட்டு உடைக்க முடியவில்லை.

    ஆனால் தங்கமணி ஏற்கெனவே சொன்ன கருத்துக்களும், இப்போது திரு எழுதியுள்ள பதிவும் எனக்கு மிகவும் உடன்பாடானவையே. அவைகளை வாசித்தீர்களா என்று தெரியாது. வாசியுங்களேன்.
    .

    ReplyDelete
  61. வஜ்ரா,

    திருவின் பதிவில் சொல்லப்பட்டுள்ள இப்பகுதி நான் சொல்வதை உறுதிப்படுத்துமென நினைக்கிறேன்.

    //அய்யாவழி ஒரு தனி சமயமாக அரசால் அங்கீகரிக்கப்படாத போதிலும் அய்யாவழி சமயத்தினரால் அது தனி சமயமாக நிலை நிறுத்தப்படுகிறது. இது அரசால் அங்கீகரிக்கப்படாததால் அய்யாவழி மக்கள், மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது இந்துக்களாக கருதப்படுகிறார்கள்.//

    இது ஒரு உதாரணமே. tip of the iceberg.

    ReplyDelete
  62. //
    இது ஒரு உதாரணமே. tip of the iceberg.
    //

    இந்த உதாரணம் எனக்கு புரிகிறது. அப்போது இந்துக்களும் (அல்லது இந்துக்கள் என்று monolithic ஆக நீங்கள் கூறும் மக்களும்) மைனாரிடி தானே ? அவர்களுக்கு மைனாரிட்டி ரைட்ஸ் வழங்கவேண்டியது தானே? ஏன் அவர்களை மெஜாரிடி என்றாக்கி மைனாரிட்டி என்று ஒரு கூட்டம் சொல்லிக்கொண்டு திரிகிறது.?


    //
    இந்த அலகு குத்துறது, சாமியாடுறது, கடா வெட்டுறது - இது போன்றவை அவ்வளவு நளினமில்லாத விஷயங்களாக "சில" இந்துக்களால் பார்க்கப் படுவதில்லையா; இல்லை, அவைகளும் அனைத்து இந்துக்களுக்கும் பொதுதானா? பதில் தெரியாமல் கேட்கும் கேள்வி இது.
    //

    நாமம் போட்டுக் கொள்வது வைணவர்களுக்கு, பட்டை அடித்துக்கொள்வது (வீபூதி பட்டை!!) சைவர்களும், கௌமாரர்களும், கணபதர்களும் செய்கிறார்கள். குங்குமம் சக்தர்களின் அடையாளம். இதில் எது இந்து இல்லை ? அதே போல் அலகு குத்துவது கௌமாரம் என்ற sect!

    இந்து மதம் ஒரே மதம் அல்ல. Mutually accepting multiple religious ideals. அதை எதோ பிராமணர்கள் கடைபிடிப்பது மட்டுமே இந்து மதமாகப் பார்க்கவிரும்புகிறார் கஞ்சைய்யா. அதே தான் நீங்களும், திருவும் செய்கிறீர்கள் அதற்கு அவர் பெயரை உதாரணமாகக் கொடுக்கிறீர்கள்.

    Mutually intolerant religious ideas முன்னிலையில் இந்து சமயத்தை தனிமைப் படுத்திக் காட்ட அது இந்த monolithic அவதாரத்தில் உள்ளது. intolerant மதங்கள், என்று இந்த மண்ணைவிட்டுப் பொகிறதொ அல்லது தன்னை மாற்றிக் கொள்கிறதோ (கத்தோலிக்கர்கள் போப்பரசை சொல்பேச்சைக் கேட்காமல் இந்தியப் போப்பை உருவாக்கிக் கொள்ளுதல் மேலும், மாற்று மதங்கள் கடவுளை அடையும் வழி என்று குறைந்த பட்சம் ஏற்றுக் கொள்ளுதல் ஒரு உதாரணம் - அப்போது அது கத்தோலிக்கம் அல்ல என்றால் பேயரை மாற்றிக் கொள்ளவேண்டியது தான்) அன்று வரை இந்த அவதாரம் தொடரும்.

    குறிப்பு: intolerant மதங்களின் வரிசையில் கடவுள் மறுப்பு மததையும் சேர்த்துக் கொள்ளவும்.

    ReplyDelete
  63. வஜ்ரா,

    நாம் இருவருமே இந்தப் பதிவின் பேசு பொருளிலிருந்து வெகுவாக நகன்று விட்டோம். சரி, பரவாயில்லை.

    //அப்போது இந்துக்களும் (அல்லது இந்துக்கள் என்று monolithic ஆக நீங்கள் கூறும் மக்களும்) மைனாரிடி தானே ?//
    அப்படித்தான் ஏற்கெனவே சில பல
    முறைகள் நேரடியாகவும் அல்லாமலும் கூறியிருக்கிறேன். இதோ அந்தப் பகுதி..இதை அங்கு வேண்டுமானால் போய் பார்த்துக் கொள்ளுங்கள்.

    1. சாதி வேறுபாடுகள் தவிர்த்தும் பல பிரச்சனைகள் உண்டல்லவா? மேலே சொன்னபடி எதை எதையெல்லாம் இந்து மதத்திற்குள் கொண்டு வருவது? இந்து
    மதம் என்பது ஒரு - is it a single entity? என்ற கேள்வி இப்போதுள்ள சூழலில் பூதாகரமாக வடிவெடுக்கிறதே. காஞ்சாயா இலியா (ஏன், நம் தமிழ்
    மணத்திலும் இப்போது இந்தக் கேள்வி பொதுவில் வைக்கப்பட்டுள்ளதே) சொல்வது போல பெரும்பானமை இந்தியர்களை (பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்)
    இந்துக்கள் என்றழைப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளாரே. அக்கருத்து எனக்கும் உடன்பாடே. அப்படியானால், நான் ஏற்கெனவே சொன்னதுபோல இந்துமதமும்
    ஒரு மைனாரிட்டி மதமே (கிறித்துவம், இஸ்லாம் மாதிரியே!)
    முதல் பிரச்சனையே: எது இந்து மதம்? என்பதே.


    //அவர்களுக்கு மைனாரிட்டி ரைட்ஸ் வழங்கவேண்டியது தானே?//
    By all means. Waiting for that? அதற்காகத்தானா ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள்?

    //அதே போல் அலகு குத்துவது கௌமாரம் என்ற sect! //
    ஏற்கெனவே சொன்னது போல சரியான பதில் தெரியாததால் இன்னொரு கேள்வி.. இந்த கெளமாரம் என்ற sect செய்யும் அலகு குத்துறதை சைவர்களும்,சக்தர்களும், கௌமாரர்களும், கணபதர்களும் செய்கிறார்களா? அதாவது 'இவர்களின்' மத வழக்கங்கள்தான் 'அவர்களின்' மத
    வழக்கங்ளா? vice versa மாற்றம் ஏதுமில்லையா"

    //எதோ பிராமணர்கள் கடைபிடிப்பது மட்டுமே இந்து மதமாகப் பார்க்கவிரும்புகிறார் கஞ்சைய்யா. அதே தான் நீங்களும்,..//
    அதே.

    //....அது இந்த monolithic அவதாரத்தில் உள்ளது.//
    ஓ! அப்போ இது ஒரு அவதாரம்தான் என்கிறீர்கள்.


    //...intolerant மதங்கள், என்று இந்த மண்ணைவிட்டுப் பொகிறதொ // அப்படி ஒரு chance இருக்கா என்ன?

    //அல்லது தன்னை மாற்றிக் கொள்கிறதோ ..// no chance

    அதாவது அத்தைக்கு மீசை முளைக்கப் போவதில்லை; நமக்கு சித்தப்பா வரப்போவதில்லையென்கிறீர்கள். so sad!

    //குறிப்பு: intolerant மதங்களின் வரிசையில் கடவுள் மறுப்பு மததையும் சேர்த்துக் கொள்ளவும்.// இது எதற்கு என்று தெரியவில்லையே!

    ReplyDelete
  64. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  65. //
    ஓ! அப்போ இது ஒரு அவதாரம்தான் என்கிறீர்கள்.
    //

    ஆம்.


    மத்தியகிழக்கு மதக் கண்ணோட்டத்தில் "இந்து மதம்" என்று ஒன்றை அவர்கள் உருவாக்கி, அதை மற்றவர்கள் முன்னிலையில் demonize செய்து அழிக்கவேண்டும். அப்போது தான் இங்குள்ள மக்களை en masse கன்வர்ட் செய்ய முடியும்.

    அடிப்படையில் ஒரு மதம் என்று இல்லை. நீங்கள் இந்து என்றால், எதுவேண்டுமானாலுமாக இருக்கலாம். Nothing prevents you from going to Shiva temple, Vishnu temple, Murugan temple or Ganesha Temple. And nobody on earth can prevent you from practicing multiple religions at the same time which are not mutually exclusive. (only a minority among minority may practice exclusivism).

    இந்த மாதிரி multiple மதங்களைக் கடைபிடிப்பது ஆசியாவின் தனிச்சிறப்பு! சீனாவில் கன்ஃபூசிய மதமும் பௌத்தமும் கலந்தே பலர் கடைபிடிக்கின்றனர்.

    ஜப்பானில் பௌத்தமும் "அய்யா வழி" போன்ற பித்ரு வழிப்பாட்டு மதமும் கலந்தே பலர் கடைபிடிக்கின்றனர்.

    ஆனால், யூதமோ, கிறுத்துவமோ, இஸ்லாமோ அப்படி இருப்பதில்லை. (கடவுள் மறுப்பு கம்யூனிசமும் அப்படி இருப்பதில்லை!! இப்போது புரிகிறதா சார்? )

    இந்த மிஷனரிக்களின் உருவாக்கமான "பிராமண" இந்து சமயம் ( நீங்கள் கஞ்சையா போன்றோர் நம்பும்) என்பது இருந்ததே இல்லை அப்படி ஒன்று இருப்பதும் இல்லை. அதை உருவாக்குவதனால் என்ன சீர் கேடு என்றால், அதுவரை exclusivist களாக இல்லாத மத denomination கள் அப்படி மாறி விடுகின்றது. இந்தியாவில் பிரிவினைகள் பெருக ஆரம்பித்துவிடுகின்றது. பிராமணர்களை demonize செய்தாகிவிட்ட நிலையில், அவர்களை நம்புவதில்லை. பூசாரி என்றால் திருடன் என்றாகிவிட்டதும், அவர்கள் சிறு குழுவாகப் பிரிந்து விடுகின்றனர். நாளடைவில் சிறு குழு மதங்களை அழிப்பது பெருங்குழு மதமான ஆபிரஹாமிய மதங்களுக்கு எளிதாகிவிடுகின்றது.

    இந்த திட்டமிட்ட அழிப்பை என்ன வென்று சொல்வது ?

    இந்த திட்டமிட்ட அழிவைத் தடுக்க VHP போன்ற அமைப்புகள் வந்துவிடுகின்றன. அப்போது என்ன நடக்கிறது ? மிஷனரிக்கள் செய்யும் பிரச்சாரத்திற்கு பதில் பிரச்சாரத்தில் ஆரம்பித்து, பதிலடி, பதில் தாக்குதல் என்று போய்க் கொண்டிருக்கிறது. On the background inclusive faith's join and become one entitiy to protect themselves from the onslaught of exclusivist medival middle eastern idologies. இதைத்தான் "அவதாரம்" என்று சொன்னேன்.

    Inclusivism Vs. Exclusivism, Totalitarianism and terrorism என்பது இன்றைய equation. (இந்து சமயங்கள், சின்னங்கள், அடையாளங்கள், தர்மங்கள், வழி பாட்டு முறைகள் Vs. Exclusivism, totalitarianism, and terrorism என்றும் இதைப் படிக்கலாம்)

    அதை ஏன் இந்து சமயம் என்று சொல்கிறோம் என்றால் அத்தகய வழிபாட்டு முறைகள் இந்தியாவில் தோன்றியதால் மட்டுமே. ( இந்தியா என்பது, பாரதம்..அதாவது greater india !)

    இதில் ஒவ்வொன்றாக inclusivism ல் சேர்ந்துகொண்டிருக்கிறது. அதைத் தடுக்க பிராமண ஆதிக்க மதம் என்ற ஒரு கற்பனை மதத்தை உருவாக்கிவிடுகின்றனர். வெள்ளையன் ஆரம்பித்து வைத்தது தான் இதுவும். வாரனாசியில் இருக்கும் பிராமணர் கடைபிடிப்பது தான் "இந்து" மதம் என்ற சான்றிதழ் கொடுக்கப் பட்டது. மற்றதெல்லாம் என்ன என்றால் பதில் இல்லை ?

    இப்பவும் அதற்கு பதில் இல்லை! protestant என்று கூறலாம என்கிறீர்கள்.!

    பண்டைய காலத்தில் அரசர்கள் சில மதங்களை patronize செய்திருக்கலாம். மற்றவை நாட்டார் வழிபாடாகக் கருதப்பட்டிருக்கலாம். அவை தெய்வங்கள் இல்லை என்று யாரும் யாரையும் தாக்கியது இல்லை. உன் வழி உனக்கு, என் வழி எனக்கு என்றிருந்தனர்.

    இப்பொழுது சொல்கிறேன் இந்தியா "செகுலர்" (truly secular) நாடாக இருக்கிறது என்றால் அதற்கு இந்தத் தன்மையே காரணம்.

    இந்தத் தன்மையே இப்போது "இந்து மதம்" என்றாகிவிட்டது ஆபிரஹாமிய மதங்களுக்கு பெருத்த பின்னடைவு. அவைகளால் இதை அழிக்க முடியவில்லை. ஆகயால் மைனாரிட்டி Status கெட்டு அதைத் தவறாகப் பயன் படுத்துகின்றனர்.

    ReplyDelete
  66. வஜ்ரா,

    நான் பதில் தெரியாமல் ஏற்கென்வே கேட்ட ஒரு கேள்விக்குப் பதில் தர முடியுமா? _ //'இவர்களின்' மத வழக்கங்கள்தான் 'அவர்களின்' மத
    வழக்கங்ளா? vice versa? மாற்றம் ஏதுமில்லையா"?//


    அடுத்து --


    //மத்தியகிழக்கு மதக் கண்ணோட்டத்தில் "இந்து மதம்" என்று ஒன்றை அவர்கள் உருவாக்கி,...//
    இந்து மதம் என்று ஒன்றை உருவாக்கியது மத்தியகிழக்கு மதங்களா, மற்ற எல்லோரும் வேறு ஒன்றையல்லவா கூறுவார்கள். remember i am not a votary for these மத்தியகிழக்கு மதங்கள். but still your statement sounds hollow. the accusation is far fetched and unacceptable - atleast to me.

    //அப்போது தான் இங்குள்ள மக்களை en masse கன்வர்ட் செய்ய முடியும்...//
    அப்படி நடந்து விட்டதா, என்ன? you are making things sound so dramatic.

    //(கடவுள் மறுப்பு கம்யூனிசமும் அப்படி இருப்பதில்லை!! இப்போது புரிகிறதா சார்? )//
    இப்போதும் புரியவில்லை. கம்யூனிசமும், கடவுள் மறுப்பும் தனித்தனியாகத் தெரியும்; இது என்ன 'கடவுள் மறுப்பு கம்யூனிசம்'?

    //நாளடைவில் சிறு குழு மதங்களை அழிப்பது பெருங்குழு மதமான ஆபிரஹாமிய மதங்களுக்கு எளிதாகிவிடுகின்றது.
    இந்த திட்டமிட்ட அழிப்பை என்ன வென்று சொல்வது ? //
    இப்போது இந்து மதம் பெரும்பான்மையரின் மதம் அல்ல என்ற குரல் ஆபிரஹாமிய மதக்காரர்களிடமிருந்து வருகிறதா இல்லை
    'இந்துமத'க்காரர்களிடமிருந்து வருகிறதா?

    //...On the background inclusive faith's join...//
    யாரு, கிறித்துவர்களும், முஸ்லீம்களும் இணைந்து செயல் படுகிறார்கள் என்கிறீர்களா? அடப்பாவமே.. another baseless accusation. எதில, எங்க, அவங்க சேர்ந்து இருக்காங்க...சண்ட போட்டுக்கிறதில்லைன்னு நினைக்கிறேன்; அவ்வளவே!

    ReplyDelete
  67. //
    இவர்களின்' மத வழக்கங்கள்தான் 'அவர்களின்' மத
    வழக்கங்ளா? vice versa? மாற்றம் ஏதுமில்லையா"?
    //

    பித்ரு வழிபாடு என்பது என்றுமே இருந்துவந்துள்ளது. என் பித்ருக்களை நான் தான் வழிபடமுடியும் அடுத்தவன் செய்யவேண்டும் அப்போது தான் அவன் என் "மதம்" என்று நான் எதிர்பார்க்க முடியாது. அது ஞாயமும் அல்ல.
    If you call a ஐயா வழி வழிபாட்டு முறை a religion, then, i am telling that you can have multiple religious identities. I am telling you can worship munisamy (or what ever name you may have) in your village with your family and come to madurai and worship Chokkanathar at Meenakshi temple, Go to Badri nath in himalayas and Go to Kashi and do the same. An average indian has multiple religious identities..

    அப்ப சொக்க நாதரை வழிபடுபவர்கள் ஏன் எங்க ஊர் தெய்வத்தை வழிபடுவதில்லை என்று கேட்கிறீர்கள் !

    இந்த multiple religious identity அடிப்படை கோட்பாடு தான் "இந்து" வாழ்க்கை முறை என்று சொல்லலாமா கூடாதா ?

    ..
    1. பிறந்த குழந்தைக்கு முடி இறக்குவது, காது குத்துவது (தாய் மாமன் மடியில் வைத்து) போன்ற வழக்கங்கள் பிராமணர் முதல் சூத்திரர் வரை (இங்கே சாதி நிலையைக் குறிக்கும் பொருள்) செய்கின்றனர்.

    2. North south வேறு பாடு என்று பார்த்தாலும் அது மிகவும் குறைவு. வட நாட்டு இந்துக்கள் மீனாக்ஷி அம்மனை தரிசிக்கவருவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

    3. இந்த வட நாட்டு இந்துக்களுள் கருப்பண்ண சாமியின் "power" பற்றி சொன்னால் அவரையும் வந்து கும்பிட்டுவிட்டுப் போவார்கள். முடிந்தால் காணிக்கையும் தருவார்கள்!

    4. பிராமணர்களில் எத்தனையோ பேர் ஊர் பேர் தெரியாத ஒரு ஊரில் ஒரு கடவுள் பெயரைச் சொல்லி அவர் தான் நம் குல தெய்வம் என்று சொல்வதைக் கேள்விப் பட்டதில்லையா ?
    ..

    This kind of acceptance that you ask for is already there in this very land. இந்த வாழ்க்கை முறைக்குப் பெயர் என்ன ?

    இந்து வாழ்க்கை முறை எனலாமா ?


    //
    இந்து மதம் என்று ஒன்றை உருவாக்கியது மத்தியகிழக்கு மதங்களா, மற்ற எல்லோரும் வேறு ஒன்றையல்லவா கூறுவார்கள்.
    //

    சார், இந்து மதம் என்று கஞ்சையா போன்றோர் உணர்ந்த "மதம்" கிறுத்தவப் பார்வையால் monolithic ஆக பார்க்கப் படும் மதம். இதில் பிராமணர்கள் தான் "இந்துக்கள்" அல்லது தூய இந்துக்கள். மற்றவர்கள் இந்துக்கள் அல்லர்.

    இப்போது, இந்த மற்றவர்கள் எப்படி வாழ்கின்றனர் என்று பார்த்தாலே தெரிந்து விடும். அவர்களுள் பல வேறுபாடுகள் உள்ளன. ஆனால் அடிப்படையில் அதே போல் multiple religious identities உடன் தான் வாழ்கின்றனர்.!




    //
    யாரு, கிறித்துவர்களும், முஸ்லீம்களும் இணைந்து செயல் படுகிறார்கள் என்கிறீர்களா? அடப்பாவமே.. another baseless accusation.
    //

    சார், விளையாடாதீங்க...

    இங்கே inclusive faiths என்பது பித்ரு வழிபாட்டையும், சைவம் வைணம்வம் போன்ற "உயர் (?)" தர்மத்தையும் சொன்னது. இவைகளுக்குள் சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்கின்றது ஆகயால் இவைகளை ஒதுக்கிவிட முடியாது. (நேச குமாரின் இந்தப் பதிவைப் பார்க்கவும் ).

    கிறுத்தவமும் இஸ்லாமும் exclusivist faiths. There seems to be a unholy alliance between them to undermine what is called as Hinduism.

    //
    இப்போது இந்து மதம் பெரும்பான்மையரின் மதம் அல்ல என்ற குரல் ஆபிரஹாமிய மதக்காரர்களிடமிருந்து வருகிறதா இல்லை
    'இந்துமத'க்காரர்களிடமிருந்து வருகிறதா?
    //


    தேவைப்படும் போது minority அந்தஸ்து பெறுவதற்காக ஆபிரஹாமிய மதக்காரர்கள் இதை majority ஆக்குவதும். கிராமத்து கீழ் சாதி இந்துக்களை மதம் மாற்றம் செய்வதற்கு இதை Minority மதம் (பிராமணர்கள் மதம், வந்தேறிகள் மதம் etc., etc.,) என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்குமே!

    Your definition of "Hindu" is different (missionary line used for conversion). But, by that definition "Hindu" is a minority religion!

    but, by my definition of those faith's which accept other paths and other gods! (Ekam sat viprah bahutha vadanti) makes it a majority faith.

    Supreme court's view of Hinduism

    //
    அப்படி நடந்து விட்டதா, என்ன? you are making things sound so dramatic.
    //

    ஊரே மதம் மாறிய கதையெல்லாம் தெரியாதா சார் உங்களுக்கு ?

    சிறு துளி பெரு வெள்ளம்.

    ReplyDelete
  68. //
    இவர்களின்' மத வழக்கங்கள்தான் 'அவர்களின்' மத
    வழக்கங்ளா? vice versa? மாற்றம் ஏதுமில்லையா"?
    //

    பித்ரு வழிபாடு என்பது என்றுமே இருந்துவந்துள்ளது. என் பித்ருக்களை நான் தான் வழிபடமுடியும் அடுத்தவன் செய்யவேண்டும் அப்போது தான் அவன் என் "மதம்" என்று நான் எதிர்பார்க்க முடியாது. அது ஞாயமும் அல்ல.
    If you call a ஐயா வழி வழிபாட்டு முறை a religion, then, i am telling that you can have multiple religious identities. I am telling you can worship munisamy (or what ever name you may have) in your village with your family and come to madurai and worship Chokkanathar at Meenakshi temple, Go to Badri nath in himalayas and Go to Kashi and do the same. An average indian has multiple religious identities..

    அப்ப சொக்க நாதரை வழிபடுபவர்கள் ஏன் எங்க ஊர் தெய்வத்தை வழிபடுவதில்லை என்று கேட்கிறீர்கள் !

    இந்த multiple religious identity அடிப்படை கோட்பாடு தான் "இந்து" வாழ்க்கை முறை என்று சொல்லலாமா கூடாதா ?

    ..
    1. பிறந்த குழந்தைக்கு முடி இறக்குவது, காது குத்துவது (தாய் மாமன் மடியில் வைத்து) போன்ற வழக்கங்கள் பிராமணர் முதல் சூத்திரர் வரை (இங்கே சாதி நிலையைக் குறிக்கும் பொருள்) செய்கின்றனர்.

    2. North south வேறு பாடு என்று பார்த்தாலும் அது மிகவும் குறைவு. வட நாட்டு இந்துக்கள் மீனாக்ஷி அம்மனை தரிசிக்கவருவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

    3. இந்த வட நாட்டு இந்துக்களுள் கருப்பண்ண சாமியின் "power" பற்றி சொன்னால் அவரையும் வந்து கும்பிட்டுவிட்டுப் போவார்கள். முடிந்தால் காணிக்கையும் தருவார்கள்!

    4. பிராமணர்களில் எத்தனையோ பேர் ஊர் பேர் தெரியாத ஒரு ஊரில் ஒரு கடவுள் பெயரைச் சொல்லி அவர் தான் நம் குல தெய்வம் என்று சொல்வதைக் கேள்விப் பட்டதில்லையா ?
    ..

    This kind of acceptance that you ask for is already there in this very land. இந்த வாழ்க்கை முறைக்குப் பெயர் என்ன ?

    இந்து வாழ்க்கை முறை எனலாமா ?


    //
    இந்து மதம் என்று ஒன்றை உருவாக்கியது மத்தியகிழக்கு மதங்களா, மற்ற எல்லோரும் வேறு ஒன்றையல்லவா கூறுவார்கள்.
    //

    சார், இந்து மதம் என்று கஞ்சையா போன்றோர் உணர்ந்த "மதம்" கிறுத்தவப் பார்வையால் monolithic ஆக பார்க்கப் படும் மதம். இதில் பிராமணர்கள் தான் "இந்துக்கள்" அல்லது தூய இந்துக்கள். மற்றவர்கள் இந்துக்கள் அல்லர்.

    இப்போது, இந்த மற்றவர்கள் எப்படி வாழ்கின்றனர் என்று பார்த்தாலே தெரிந்து விடும். அவர்களுள் பல வேறுபாடுகள் உள்ளன. ஆனால் அடிப்படையில் அதே போல் multiple religious identities உடன் தான் வாழ்கின்றனர்.!




    //
    யாரு, கிறித்துவர்களும், முஸ்லீம்களும் இணைந்து செயல் படுகிறார்கள் என்கிறீர்களா? அடப்பாவமே.. another baseless accusation.
    //

    சார், விளையாடாதீங்க...

    இங்கே inclusive faiths என்பது பித்ரு வழிபாட்டையும், சைவம் வைணம்வம் போன்ற "உயர் (?)" தர்மத்தையும் சொன்னது. இவைகளுக்குள் சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்கின்றது ஆகயால் இவைகளை ஒதுக்கிவிட முடியாது. (நேச குமாரின் இந்தப் பதிவைப் பார்க்கவும் ).

    கிறுத்தவமும் இஸ்லாமும் exclusivist faiths. There seems to be a unholy alliance between them to undermine what is called as Hinduism.

    //
    இப்போது இந்து மதம் பெரும்பான்மையரின் மதம் அல்ல என்ற குரல் ஆபிரஹாமிய மதக்காரர்களிடமிருந்து வருகிறதா இல்லை
    'இந்துமத'க்காரர்களிடமிருந்து வருகிறதா?
    //


    தேவைப்படும் போது minority அந்தஸ்து பெறுவதற்காக ஆபிரஹாமிய மதக்காரர்கள் இதை majority ஆக்குவதும். கிராமத்து கீழ் சாதி இந்துக்களை மதம் மாற்றம் செய்வதற்கு இதை Minority மதம் (பிராமணர்கள் மதம், வந்தேறிகள் மதம் etc., etc.,) என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்குமே!

    Your definition of "Hindu" is different (missionary line used for conversion). But, by that definition "Hindu" is a minority religion!

    but, by my definition of those faith's which accept other paths and other gods! (Ekam sat viprah bahutha vadanti) makes it a majority faith.

    Supreme court's view of Hinduism

    //
    அப்படி நடந்து விட்டதா, என்ன? you are making things sound so dramatic.
    //

    ஊரே மதம் மாறிய கதையெல்லாம் தெரியாதா சார் உங்களுக்கு ?

    சிறு துளி பெரு வெள்ளம்.

    ReplyDelete
  69. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  70. வஜ்ரா,
    நேசகுமாரின் பதிவைப் படிக்கச் சொன்னீர்கள்; படித்தேன். அதில் கீழ்வருவதை நீங்கள் படித்தீர்களா?

    /இந்து மதத்தை அப்பெயரில் அழைப்பதே தவறுதான். ஏனெனில், எவ்வித வரைமுறைகளுக்கும் உட்படாத மனித குலத்தின் தொன்மையான கூட்டமிது. வேதமே இறுதி உண்மை என்று சொன்னவர்களுமிங்கிருந்திருக்கிறார்கள், வேதத்தை மறுத்தவர்களும் இங்கிருந்திருக்கிறார்கள் - கடவுளை மறுத்தவர்களும் கூட இந்தக்கூட்டத்திலே இருந்திருக்கின்றார்கள். கடவுளை மறுத்ததால் நீ கா·பிர் உன்னைக் கொல்லச் சொல்லி, கடவுள் என் காதில் வந்து சொன்னார் என்று யாரும் அரிவாளைத் தூக்கிக் கொண்டு வரவில்லை.//

    ReplyDelete
  71. வஜ்ரா,
    பார்த்தீர்களா? இத..இதத்தான் நான் சொல்றேன்.மதங்களைப்பத்தி பேச ஆரம்பிச்சா,இணை கோட்டுலதான் பயணம் இருக்கும். கூடும் புள்ளி வருவதேயில்லை.

    இப்ப பாருங்க...நம்மள சுத்து கொஞ்ச ஆளுக வந்து போனது மாதிரி இருந்திச்சி...இப்ப பார்த்தா நானும் நீங்களும் மட்டுமே இருக்கோம் :)

    இதுல we the people, நேசகுமார், ஜிரா, பரதரசு, சிறில் இவங்களுக்குப் பதிலோ நன்றியோ கூட சொல்ல முடியாமப் போச்சு.அனைவருக்கு நன்றி. ஆரம்பிச்சு வைச்ச புண்ணியவாளன் எஸ்பா ஆளையே அதுக்குப் பிறகு காணவே கணோம். :-(

    ReplyDelete
  72. என்னது ஆளைக்காணாமா?
    அப்படி இல்லை வாத்தியாரே.. வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தேன். அவ்வளவே!
    அதே சமயம் படித்த மேன்மக்கள் மாதிரி நான் இணைய ஆதாரங்களை காட்ட முடியாது. நான் நூல்கள் அதிகம் பார்க்கிற ஆசாமி. விரைவில் வருகிறேன். புதிய கோணத்தில்...

    ReplyDelete
  73. //
    நேசகுமாரின் பதிவைப் படிக்கச் சொன்னீர்கள்; படித்தேன். அதில் கீழ்வருவதை நீங்கள் படித்தீர்களா?
    //

    படித்தேன் சார்,
    அது அவர் கண்ணோட்டம். நான் அதை இந்து என்று தான் அழைக்கவிரும்புகிறேன். சிலர் சனாதன தர்மம் என்று அழைக்கிறார்கள். சிலர் இது சரியான பெயர் அல்ல என்கின்றனர். சிலர், வைதீக வாழ்க்கை முறையை சனாதன தர்மம் எனவும், ஐயா வழி போன்ற நாட்டார் வழிபாட்டு முறைகளை தலீத் ஆன்மீகம் எனவும் அழைக்கின்றனர் அதுவும் எனக்கு உடன் பாடான கருத்தே.

    பெயரளவில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் இதை இல்லை என்று மறுக்க முடியாது. !

    Inclusivism of even denial of existence of "divinity" is what i call hindu faiths or வாழ்க்கை முறை. You may call it by any name, but it exists in our very own neighbourhood.

    And a big operation is on to undermine this very culture that is ingrained in our minds.

    அப்ப அதனுடைய reaction என்ன என்பதைத் தான் இப்படி நாம் பார்க்கின்றோம். அதைத்தான் நான் அவதாரம் எனவும் சொன்னேன். இந்து வாழ்க்கை முறை அல்லது "___________வாழ்க்கை முறை" ஹிந்துத்வா அவதாரம் எடுக்க மிசனரிக்களின் வேலையும், முல்லாக்களின் செயல்களும், மார்க்ஸீய போலி செக்குலர் தனத்தின் தாக்கமுமே காரணம்.

    //
    இதை 'விளைவு' என்றே கருதுகிறேன்.கிறித்துவமும், இஸ்லாமும் அவைகளின் போதனைகளுமே இதற்குரிய காரணிகளாக நான் நினைக்கிறேன். அவர்களும் இதை நினைத்துச் செய்வதில்லை. அவர்களின் மதக் கோட்பாடுகளைக் குழந்தைப் பருவத்திலேயே சொல்லித் தருகிறார்கள். அவ்வளவே. ஆனால் அந்த மதங்கள் ஏக இறையியல் என்ற கோட்பாடு கொண்டதாகையால் இந்தப் பிரச்சனைகள்.
    //

    You see, we agree!!

    பெரும்பான்மை யூதர்களோ, கிறுத்தவர்களோ (வெளி நாடுகளில்) இதை பெரிதாய் ஒன்றும் சொல்லிக் கொள்வதில்லை. கோவில்களுக்குள் வந்து செல்கின்றனர். " செகுலராக" ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தில் வாழ்கின்றனர், திருப்பதியிலோ, மதுரையிலோ, முக்கியப் கோவில் பிரகாரத்திற்குள் செல்ல வெளி மதக்காரர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் எழுதிக்கொடுத்துவிட்டுச் செல்லலாம். அப்படி எழுதிக் கொடுத்துவிட்டு வரும் கிறுத்தவர்களும் யூதர்களும் அதிகம் உள்ளனர். அதற்கு இரண்டு உலகப் போர்களும் அதன் காரணிகளும், விளைவுகளும் பெரும் பங்கு வகித்திருக்கின்றது. யூதத்திற்கு ஹோலோகாஸ்ட் போன்ற அடி என்றால், கிறுத்துவத்திற்கு Reniassance என்ற அடி விழுந்த பின் தான் இந்த அடிப்படை intolerance அவர்களுள் இல்லாமல் போனது.

    இஸ்லாத்திற்கு அப்படிப் பட்ட அடி யாரும் இன்னும் கொடுக்கவில்லை. கூடிய விரைவில் விழுந்தே தீரும்.

    ReplyDelete
  74. வஜ்ரா,

    //அது அவர் கண்ணோட்டம். நான் அதை இந்து என்று தான் அழைக்கவிரும்புகிறேன். சிலர் சனாதன தர்மம் என்று அழைக்கிறார்கள். சிலர் இது சரியான பெயர் அல்ல என்கின்றனர். சிலர், வைதீக வாழ்க்கை முறையை சனாதன தர்மம் எனவும், ஐயா வழி போன்ற நாட்டார் வழிபாட்டு முறைகளை தலீத் ஆன்மீகம் எனவும் அழைக்கின்றனர் அதுவும் எனக்கு உடன் பாடான கருத்தே.

    பெயரளவில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் இதை இல்லை என்று மறுக்க முடியாது. !//

    இதைத்தானே வஜ்ரா நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன் - காஞ்சையாவோடு சேர்ந்து. இந்து மதம் ஒரு amalgamation.. இதில் பெரும்பான்மையோர் "ஐயா வழி போன்ற நாட்டார் வழிபாட்டு முறைகளை தலீத் ஆன்மீகம் எனவும்" நீங்கள் சொல்லும் அந்தக் குழுமத்தில் வருகிறார்கள்; அவர்கள் எங்களை "உள்ளே" இழுக்காதீர்கள் என்பதின் முதல் குரலாக காஞ்சையாவின் குரல் ஒலிக்கிறது. அவர் குரலோடு பலரும் சேர்ந்தால்...?

    //And a big operation is on to undermine this very culture that is ingrained in our minds.//

    not to undermine but to define and delineate hinduism - நீங்கள் ஆபிரஹாமிய மதங்கள் இதைச் செய்வதாகச் சொல்கிறீர்கள்; நானோ இல்லை...அது "ஐயா வழி போன்ற நாட்டார் வழிபாட்டு முறைகளை தலீத் ஆன்மீகம் " என்று கூறப்படும் குழுக்களில் உள்ள "இந்துக்கள்" செய்ய ஆரம்பித்துள்ளார்கள் என்கிறேன். this is the crux of our arguments.

    அதன்பின் யூத, கிறித்துவ, இஸ்லாமிய மத நம்பிக்கையாளர்களைப் பற்றி நீங்கள் கூறுவதைத்தான் நான் per centage கணக்கில் சொன்னேன்.

    ReplyDelete
  75. தருமி,

    நீங்கள் காஞ்சையாவை over-estimate செய்வதாக எனக்கு தோன்றுகிறது.

    கவுண்டர்கள், நாயிடுக்கள், நாய்க்கர்கள், செட்டியார்கள், முதலியார்கள், வன்னியர்கள், நாவிதர்கள் எல்லாம் காஞ்சையாவுடன் சேர்ந்து குரல் எழுப்பமாட்டார்கள் இல்லையா?

    ஐயா வழிக்காரர்கள் தங்களை தனி மதமாக அடையாள்ப்படுத்திக்கொள்ள ஆரம்பித்துள்ளார்களா?

    சமுதாயத்தின் அடிமட்டத்தில் உள்ள மக்கள் மட்டுமே காஞ்சையாக்களுடன் சேருகிறார்கள். Ofcourse, the others have to work towards stopping that.

    Minus the caste issues I think they would cease following Kanchis of this world.

    நூற்றுக்கனக்கான பிரிவுகள் உள்ள இந்து சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவினர்கள் மட்டுமே தனி அடையாளம் தேடுவதற்க்கு வாய்ப்பு இருக்கிறது. An overwhelming number of castes, sections of society are not asserting themselves as individual religions.

    அப்புறம் தென் கொரியா போன்ற நாடுகளில் நடந்த மத மாற்றங்களை பார்க்கும் போது இந்தியாவில் மத மாற்ற பெரிய தோல்வியை தழுவியுள்ளது என்று கூட சொல்ல முடியும்.

    ReplyDelete
  76. தருமி, என் பின்னூட்டத்தை வெளியிட்டதற்கு நன்றி. ஆனால் பின்னூட்டியதாக நீங்கள் சொன்னவர்கள் பட்டியலிலும் நன்றி சொல்லப்பட்டவர்களின் பட்டியலிலும் என் பெயர் இல்லை.

    ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். பேசி தீர்த்துக் கொள்ளலாம்!

    என் பின்னூட்டத்தில் கருத்தில் பிழை இருந்தால் சொல்லுங்கள் கவனத்தில் கொள்கிறேன்.

    ஏனென்றால் நீங்கள் இந்தபதிவிலும் பின்னூட்டத்திலும் சொன்ன கருத்துக்கள் மதிப்பு மிக்கவைகளாக நான் கருதுகிறேன். மத நல்லிணக்கத்தைப் பற்றிய உங்கள் கருத்தில் நான் மாறுபடுகிறேன். எதிர்காலத்தில் சாத்தியம் இருப்பதாகவே நான் நம்புகிறேன்.

    ReplyDelete
  77. //
    எங்களை "உள்ளே" இழுக்காதீர்கள் என்பதின் முதல் குரலாக காஞ்சையாவின் குரல் ஒலிக்கிறது. அவர் குரலோடு பலரும் சேர்ந்தால்...?
    //

    கஞ்சையா பிராமண ஆதிக்கத்தை எதிர்க்கிறாரா பிராமணர்களை எதிர்க்கிறாரா என்பது அவருக்கே வெளிச்சம்.

    அவர் பிராமணர்களைத் திட்டியே காரியத்தை சாதித்துக் கொள்கிறார். ஆனால் அவர் பிறந்த OBC சாதி இந்துக்கள் தலீத் களை எப்படி ஒடுக்குகிறார்கள் என்பதை அவர் யாருக்கும் சொல்வதில்லை. He is such a hypocrite! and you buy his arguments. Amazing!

    மேலும், இந்த தலீத் ஆன்மீக மார்க்கங்கள் தழைக்க ஒரே வழி தான் உள்ளது. அது இந்துவாக இருப்பதே. வேறு எந்த மதத்திலும் இல்லாத inclusivism இதில் உள்ளது. இதில் "உள்ளே" இழுக்கும் நிலையில் இங்கே யாருமில்லை. அவர்களே உள்ளே விரும்பி வருகின்றனர். as a logical end point. அதைத் தான் ஐலையா தடுக்க நினைக்கிறார். அவரை logically சர்ச்சுகளில் உள்ள பாஸ்டர்கள் ஆதரிக்கின்றனர்.


    //
    நீங்கள் ஆபிரஹாமிய மதங்கள் இதைச் செய்வதாகச் சொல்கிறீர்கள்; நானோ இல்லை...அது "ஐயா வழி போன்ற நாட்டார் வழிபாட்டு முறைகளை தலீத் ஆன்மீகம் " என்று கூறப்படும் குழுக்களில் உள்ள "இந்துக்கள்" செய்ய ஆரம்பித்துள்ளார்கள் என்கிறேன். this is the crux of our arguments.
    //

    ஆபிரஹாமிய மதங்கள் தலீத் ஆன்மீக முறைகளை ஒரு காலத்தில் தலீத் ஆன்மீகமாக இருந்து முன்னேறிய வழிபாட்டு முறைகளுக்கு எதிராக நிறுத்தி அழிக்க நினைக்கின்றனர். அவர்கள் எண்ணம் தலீத் ஆன்மீகத்தை வளர்ப்பது அல்ல. முன்னேறிய வழிபாட்டு முறையையும், தலீத் வழிபாட்டு முறையையும் மொத்தமாக வேறருப்பதே.

    உண்மையான தலீத் ஆன்மீகவாதிகள் அதைச் செய்கிறார்கள் என்றால் அப்படிச் செய்பவர்களில் பலர் ஆபிரஹாமிய மதத்திற்கு தங்களை மதம் மாற்றிக் கொள்ள என்ன காரணம் இருக்க முடியும் தரும் சார் ?

    இந்த தலீத் விடுதலை என்று போராடுபவர்களில் சந்திரபன் பிரசாத் சிறந்தவர். அவர் ஐலையாவின் கண்ணோட்டத்திலிருந்து எப்படி வேறு படுகிறார் என்பதை இங்கே பார்த்துக் கொள்ளவும்


    //
    தலீத் ஆன்மீகம் " என்று கூறப்படும் குழுக்களில் உள்ள "இந்துக்கள்" செய்ய ஆரம்பித்துள்ளார்கள்
    //

    அவர்கள் செய்வதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. infact அவர்கள் அப்படிச் செய்யவேண்டும் என்ற கண்ணொட்டத்தில் உள்ளவன் நான். ஆனால் ஐலையா போன்ற hidden agenda உடன் திரிபவர்களை நம்பி அவர்கள் ஏமாறக் கூடாது.

    ReplyDelete
  78. சபாஷ்....சரியான போட்டி...

    -காட்டான்

    ReplyDelete
  79. //
    அப்புறம் தென் கொரியா போன்ற நாடுகளில் நடந்த மத மாற்றங்களை பார்க்கும் போது இந்தியாவில் மத மாற்ற பெரிய தோல்வியை தழுவியுள்ளது என்று கூட சொல்ல முடியும்.
    //

    தென் கொரியாவின் பன்முகத்தன்மையற்ற பௌத்தத்தை அழிப்பதில் வெகுவாகவே வெற்றிபெற்றுள்ளது ஆபிரஹாமிய அமேரிக்க அடிப்படைவாத கிறுத்தவம்.

    இங்கே தோல்வியைத் தழுவியது என்றெல்லாம் சொல்லமுடியாது. Stalemate என்று வேண்டுமென்றால் சொல்லலாம்.

    Enough blood has been spilled on being defensive. My opinion is that Offense is the best form of defense against them, otherwise they are happy to bleed us to death.

    ReplyDelete
  80. ஓகை,

    என்னய்யா இது??

    நானும், வஜ்ராவும் 'பேசிக்கிட்டே' தனியா எல்லாத்தையும் பிரிஞ்சி போய்ட்டோமா...அங்கிருந்தே பாத்து லிஸ்ட் போட்டதில உங்க பேரு விட்டுப் போச்சு..அதுக்குப்போய் இப்படியெல்லாம் சொல்லீட்டீங்களே.. :-(

    இந்தாங்க பிடிங்க ...நன்றி ...நன்றி ..நன்றி. இந்த நன்றி போதுமா ? இன்னும் கொஞ்சம் வேணுமா?

    //ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். பேசி தீர்த்துக் கொள்ளலாம்!//

    பேசிடுவோம்...

    //எதிர்காலத்தில் சாத்தியம் இருப்பதாகவே நான் நம்புகிறேன்..// - இன்ஷா அல்லா..

    இந்த உங்கள் நம்பிக்கை நடந்தேறினால் எனக்கும் மிக்க சந்தோஷமே.

    ReplyDelete
  81. காட்டான்,
    மொத மொதல்ல வர்ர...வரும்போதே பி.எஸ். வீரப்பா சிரிப்போடுதான் வரணுமா? என்னை என்ன பண்ண இந்தச் சிரிப்போ!! ஹே! ராம்!!

    ReplyDelete
  82. வஜ்ரா,
    அப்பப்போ இந்த மாதிரி பெரிய home work கொடுத்து விடுகிறீர்கள்; சந்திரபன் பிரசாத் தொடுப்பை இன்னும் முழுதுமாக வாசிக்கவில்லை; வாசித்த பின் அது தொடர்பாகக் கருத்து சொல்ல நினைத்தால் அது தொடர்பாக வருகிறேன்.

    //

    அவர்களே உள்ளே விரும்பி வருகின்றனர்.//

    மேற்சொன்ன இரு கருத்துக்களையுமே நான் மறுக்கிறேன்.
    //இதில் "உள்ளே" இழுக்கும் நிலையில் இங்கே யாருமில்லை.// பின் ஏன் அவர்கள் இந்துக்களில்லை என்றால் இவ்வளவு பதட்டம்?
    //அவர்களே உள்ளே விரும்பி வருகின்றனர்// - இந்து மதம் கற்பிக்கும் சாதிய வேறு பாடுகளால் சமூகத்தில் புழுக்களாய் கருதப்படும் தலித்துகள் "விரும்பி" உள்ளே வருகின்றனர் என்பதை - மன்னிக்கணும் - ஒரு ஜோக்காக மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது.

    //ஐலையா போன்ற hidden agenda உடன் திரிபவர்களை நம்பி அவர்கள் ஏமாறக் கூடாது.// இந்த hidden agenda என்ற வார்த்தைகள் உங்களுக்குப் பிடித்துவிட்டது என்று நினைக்கிறேன். தனிமனிதனாகத்தான் காஞ்சையாவை நான் பார்க்கிறேன். நீங்கள் அவரை missionaries-ன் கைக்கூலியாகப் பார்க்கிறீர்கள்.

    ReplyDelete
  83. வஜ்ரா,

    நீங்கள் வயதில் சின்னவரென்றே நினைக்கிறேன். இந்த வயதில் படித்த ஓர் இளைஞனிடம் இந்த வன்மமும், ஆக்ரோஷமும் இருப்பது எனக்குச் சரியாகத் தெரியவில்லை; கவலையாகவே இருக்கிறது. இதை வைத்தே மத நல்லிணக்கம் ஒரு கானல் நீர் என்றேன். ஒரு அரசியல்வாதியோ, இல்லை ஒரு மதவாதியோ இதைக் கூறியிருந்தால் பரவாயில்லை; பழகிப்போன ஒன்றுதான் அது.

    ஆனால் ஒரு பதிவரிடமிருந்து வரும் இந்த வார்த்தைகள் எனக்கு உங்கள் எல்லாரின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்குகிறது. நான் என்ன சொன்னாலும் அது உங்கள் காதில் விழாது என்பது எனக்குத் தெரியுமாதலால்..ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்:

    நீங்கள் சொல்லும் them, us இரண்டிலுமே நான் இல்லை; இல்லவே இல்லை. என்னோடு கொஞ்ச பேராவது என் போன்று மதங்களைத் தாண்டி, மதங்களை மறுத்து மனிதநேயம் மட்டும் கொண்டு இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்...

    உண்மையான வருத்தத்துடன்,

    தருமி

    ReplyDelete
  84. உதவி தேவையா? தொண்ணூறு கிட்டக்க வந்துடுச்சி போலவே?

    நிலவரத்தையும் நவரச உணர்ச்சிகளையும் பார்த்தால் நம்ப உதவி தேவை இருக்காது போல இருக்கு.....

    ReplyDelete
  85. //
    ஆனால் ஒரு பதிவரிடமிருந்து வரும் இந்த வார்த்தைகள் எனக்கு உங்கள் எல்லாரின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்குகிறது. நான் என்ன சொன்னாலும் அது உங்கள் காதில் விழாது என்பது எனக்குத் தெரியுமாதலால்..ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்:
    //

    என் காதில் நன்றாகவே விழுகிறது. ஆனால், Do i have a choice ?

    How long do you think that people like me will take it for granted ?

    I have stopped worrying,
    I have stopped being sympathatic towards anything christian or islamic
    I have stopped being an athiest
    I have become one of the group US or THEM!

    Many people, particularly hindu's for long time when faced with this situation become spiritual and start following one or the other Guru's like Sai baba !

    Now times have changed, Hindu's are becomming political. They have been hounded and hawked by these foreign faiths that they are ready to pay back in their own coin. Godhra train fire and subsequent riots showed it.

    You hit us, be ready to get hit.

    I know this is dangerous trend...but we (read hindus) are left with no choice but to react. And these faiths do not debate, the only language they understand is violence.

    I cannot be mahatma gandhi to tell not to react by violence when you are bled to death.

    I am sorry.

    //
    இந்து மதம் கற்பிக்கும் சாதிய வேறு பாடுகளால் சமூகத்தில் புழுக்களாய் கருதப்படும் தலித்துகள் "விரும்பி" உள்ளே வருகின்றனர் என்பதை - மன்னிக்கணும் - ஒரு ஜோக்காக மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது.
    //

    தருமி சார்,

    சாதீய வேறுபாடுகள் அதனால் ஏற்படும் civil unrest எல்லாம் இந்து மதத்தில் உள்ளது தான். அதை நான் மறுக்கவேயில்லை. ஆனால், மாரியம்மனை வணங்குதலும், காளியம்மனை வணங்குதலும் சைத்தானை வணங்குதல் என்று சொன்னால் அவர்கள் எங்கே போவார்கள்!!

    ஒரு உதாரணம் இங்கே

    ReplyDelete
  86. //நிலவரத்தையும் நவரச உணர்ச்சிகளையும்//
    :))))))) கரெக்ட் தான்..

    தருமி/வஜ்ரா,
    எனக்கு ஒரே ஒரு சந்தேகம். இது தமிழ்ப் பதிவா? இல்லையா?

    ReplyDelete
  87. ஸார்...ஸமுத்ரா சொன்னதுக்கு உங்க பதில் என்ன? நானும் நீங்க இலையாவை ஒவர் எஸ்டிமேட் பண்ணுவதாக நினைக்கிறேன்...சில செயல்கள் நளினமற்றவை என்று இந்த தலைமுறை வேண்டுமானால் நினைக்கலாம். அதுவும் நகரங்களில் மட்டுமே. கொஞ்சம் உங்க தலைமுறை நண்பர்களிடம் (அந்த நளினமான சமூகத்தை சேர்ந்த நண்பர்கள்) அவர்கள் அப்பா தலைமுறையில் இருந்த அவர்கள் ஸமூக வழக்கங்களை கேட்டு பாருஙள். இப்பொது உள்ள தலைமுறையினருக்கு கிராமத்தில் உள்ள குலதெய்வம் யார் என்று கேளுங்கள். இப்பொது உள்ளவர்கள் அந்த வழக்கங்களை பின்பற்றாததற்கு காரணங்கள் வேறு.
    இலையா hiddend agenda வைத்திருக்கிறார் என்றே நானும் நினைக்கிறேன்.

    ReplyDelete
  88. முத்து, பொன்ஸ்,
    இந்தப் பதிவில் போய்க்கொண்டிருக்கும் பின்னூட்ட விவாதங்களை கொஞ்சம் lighten பண்றதுக்காக நீங்கள் இருவரும் இந்த பின்னூட்டமளித்துள்ளீர்கள்னு புரியது.

    மிக்க நன்றி அதற்கு.

    ReplyDelete
  89. காட்டான்,

    வாப்பா..வா..

    //நீங்க இலையாவை ஒவர் எஸ்டிமேட் பண்ணுவதாக நினைக்கிறேன்//

    எனக்கு என்ன வந்திச்சி..அவரை தூக்கி வைக்கிறதுக்கு? அவர் எழுதியதை வாசிச்சேன்; சொன்னது பிடித்தது; சரியென்று பட்டது. தூக்கி வைக்கிறேன். அது மட்டுமன்றி நான் இதுவரை 'இந்துக்கள்' என்ற bracket-ல் வைத்திருந்தவர்களைப் பற்றி ஒரு பரிசீலனை பண்ணுகிறேன். அவ்வளவே.

    //கொஞ்சம் உங்க தலைமுறை நண்பர்களிடம் (அந்த நளினமான சமூகத்தை சேர்ந்த நண்பர்கள்) அவர்கள் அப்பா தலைமுறையில் இருந்த அவர்கள் ஸமூக வழக்கங்களை கேட்டு பாருஙள்.//

    இதில் நீ சொல்லும் நளினமான சமூகம் என்பதும்,அதன் தொடர்பான கேள்வியும் புரியவில்லை. இங்கே வந்து சொன்னாலும் சரி,,இல்லை நாம வழக்கமா போன்ல பேசுறப்போ சொன்னாலும் சரி..

    //இலையா hiddend agenda வைத்திருக்கிறார் என்றே நானும் நினைக்கிறேன். //
    இப்படியே ஆளாளுக்கு சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி? போட்டு உடையுங்களேன்; யார் அல்லது எது தடுக்கிறது. come on, man!

    ReplyDelete
  90. வஜ்ரா,

    //I know this is dangerous trend...but we (read hindus) are left with no choice but to react.//

    மீண்டும் வலியுறுத்துகிறேன் - நீங்கள் சொல்லும் அந்த இந்துக்கள் மைனாரிட்டியே - இப்போதைக்காவது. ஆகவே, மூன்று மைனாரிட்டிகளுக்கு நடுவில் நடக்கும் போராட்டங்களை விலக்கி நாங்கள் - பெரும்பான்மையானவர்கள், அதற்கு வெளியில் இருப்போம்.

    ஆயினும் எனக்கு ஒரு பயம். ஆபிரஹாமிய மதத்தினரின் higher decibels இப்போதைக்கு என்னைப் பொருத்தவரை 'இந்துக்களாக இல்லாத இந்துக்களையும்' (!?) உள்ளே இழுத்துவிடுமோ என்ற பயத்தைச் சொல்லவே இந்தப் பதிவே எழுதினேன்.

    ReplyDelete
  91. தருமிசார் / ஷங்கர்,

    ஒரு சிக்ஸ் அடிச்சா 94லிருந்து 100 அடிச்சுடலாம். ஹெவியான பாயிண்ட் பேசும் பதிவு சதமடிச்ச திருப்தி மேட்ச் பார்த்த பார்வையாளர்களுக்கு கிடைக்கும்.

    Be considerate for a 100

    ReplyDelete
  92. // ஆயினும் எனக்கு ஒரு பயம். ஆபிரஹாமிய மதத்தினரின் higher decibels இப்போதைக்கு என்னைப் பொருத்தவரை 'இந்துக்களாக இல்லாத இந்துக்களையும்' (!?) உள்ளே இழுத்துவிடுமோ என்ற பயத்தைச் சொல்லவே இந்தப் பதிவே எழுதினேன். //

    தருமி என்னுடைய அச்சமும் அதுதான். :-( ஆனால் அது தவிர்க்கப்பட முடியாதது போலத் தோன்றுகிறது.

    ReplyDelete
  93. ஹரிஹரன்,
    இந்தப் பதிவைப் பொருத்தவரை சதம் என்பதையெல்லாம் மனதிக் கொள்ளவில்லை; ஆனால் பாதிக்கு மேல் யாரும் எட்டிப் பார்க்காமல், நானும் வஜ்ராவும் மட்டுமே "மோதிக்கொள்ள" எல்லோரும் ஏன் விட்டு விட்டா(டீ)ர்கள் என்று புரியவில்லை.

    ReplyDelete
  94. ஜிரா,
    //அது தவிர்க்கப்பட முடியாதது போலத் தோன்றுகிறது. //

    ஆம்; அதைத்தான் காரண காரியங்களோடு சொல்லியுள்ளேன்.

    ReplyDelete
  95. நான் தான் 99ஆவது ஆளா.. ?

    ReplyDelete
  96. நான் இன்னிக்கு நூறு!!

    ReplyDelete
  97. நன்றிக்கு நன்றி. அப்பாடா இப்போதுதான் மானம் நிம்மதி அடைந்தது.

    நான்தான் நூறாவதா?

    ReplyDelete
  98. //
    'இந்துக்களாக இல்லாத இந்துக்களையும்' (!?)
    //

    இந்த இந்துக்கள் இல்லாத இந்துக்கள் என்ற சொல்லில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் நடப்பது தான் நடக்கும்.

    ஆபிரஹாமிய மதங்களின் குரல்கள் அதிக சக்தியுடன் ஒலித்து "இந்துக்கள்" மற்றும் "இந்துக்கள் அல்லாத இந்துக்கள்" இருவரையும் தோற்கடிக்கக் கூடுமேயானால் அதுவே மிகவும் வருத்தப் படவேண்டிய விஷயம்.

    அன்று, மாலை போட்டு மரியாதை செய்யப் படும் பெரியார் சிலைகள் உடைக்கப் படும். கடவுளில்லை என்று சொல்பவர்கள் கொல்லப் படுவார்கள், அமிர்தானந்த மயீ போன்றோர்களை witch என்று பட்டம் கட்டி உயிருடன் கொழுத்துவார்கள்.

    இன்று, இணையத்தில் உட்கார்ந்துகொண்டு இந்து என்றால் திருடன் என்று சொல்வதைக் கேட்டு கைகொட்டி சிரித்து +குத்து போட்டு சந்தோசப் படுபவர்கள் அன்று என்ன ஆவார்கள் என்பதை அவர்கள் ஈரானில் நடந்த இஸ்லாமிய எழுச்சி மற்றும் அதைத் தொடர்ந்து நடத்தப் பட்ட சுத்திகரிப்புகள் வாயிலாக அறியலாம். அறிந்தும் திருந்தாமல் இருப்பின் my hearty condolences.

    ReplyDelete
  99. 'மனம் நிம்மதி அடைத்தது' என்று படிக்கவும். நான் தட்டச்சியதில் பிழை.

    ReplyDelete
  100. எட்டிப் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன் ஐயா. நீங்கள் இருவரும் பேசிக் கொள்வதையெல்லாம் படித்துக் கொண்டு தான் இருக்கிறேன். எதுவுமே சொல்லவில்லை. அவ்வளவு தான்.

    ReplyDelete
  101. குகரன்,

    //எதுவுமே சொல்லவில்லை//

    ஏன்?
    சொல்ல எதுவுமேயில்லையா?
    சொல்ல விருப்பமில்லையா?

    வாங்க..ராம்.
    உங்க வேலை இன்னும் பாக்கியிருக்கிறதே - மதுரை பதிவர் சந்திப்பு பற்றிய பதிவும் அதில் இன்னும் வரவேண்டிய திருஷ்டி படங்களும் எங்கே?

    ReplyDelete
  102. குமரன்,
    அடிக்கடி வந்திருந்தால் உங்கள் பெயரை தவறில்லாமல் தட்டச்சு செய்திருப்பேன் :))

    பெயரைக் 'கொன்றதற்கு' மன்னிக்கவும்.

    ReplyDelete
  103. அழுத்தி பிடிச்சு சதம் போட்டமைக்கு வாழ்த்துக்கள் வாத்தியாரே!
    :-)))

    ReplyDelete
  104. எஸ்.பா.,

    //அழுத்தி பிடிச்சு ...//
    இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். :))

    அதென்னங்க, வழக்குக்கு வராம, வாழ்த்துறதுக்கு மட்டும் வந்திருக்கீங்க?

    ReplyDelete
  105. //ஆனால் பாதிக்கு மேல் யாரும் எட்டிப் பார்க்காமல், நானும் வஜ்ராவும் மட்டுமே "மோதிக்கொள்ள" எல்லோரும் ஏன் விட்டு விட்டா(டீ)ர்கள் என்று புரியவில்லை.//

    தருமி சார்,

    செறிவான கருத்துக்கள் மோதிக்கொள்ளும் போது அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது இதில் எனக்கு அவ்வளவாக ஆழ்ந்த ஸ்பெஷலிட்டி அறிவு இல்லாததாலேயே. விவாதத்தின் திசை திரும்பி விடக்கூடாது என்பதும். அவ்வளவே!

    ReplyDelete
  106. இந்தப் பதிவு சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    யெஸ். பாலபாரதி பேசும்போது இங்கே பின்னூட்டம் இடும் நண்பர் ஒருவரின் பார்வை அவர் சார்ந்த சாதியபார்வையாக இருக்கிறதே தவிர தமிழ் சமூகச்சூழலின் கடந்தகால வரலாற்றுக்கான சரியான ஆதாரத்துடன் இல்லை என்று பேசப்போக நண்பர் ஓகை எழுந்து அவ்வாறில்லை என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

    பாலபாரதி தொடர்ந்து பேசியபோது இடையிடையே குறுக்கீடு வந்ததால் கொஞ்சம் BP ஏறிய பா.பா. தன் பேச்சையே நிறுத்திக் கொண்டார்.

    ReplyDelete
  107. அந்தக் கூட்டத்தில் இல்லாத ஒருவரின் கருத்தை விமர்சிப்பது எனக்கு சரியாகப் படவில்லை என்பதைத்தான் தெரிவித்தேன்.
    இந்தப்பதிவு என்னால் ஆர்வமாகப் படிக்கப்படுகிறது என்பதையும் தெரிவித்தேன்.
    சந்திப்பில் எஸ்பா அவர்கள் 'வலைப்பதிவுகளில் சாதீயம்' என்ற தலைப்பில் பேசிய பிறகு இந்தப் பதிவில் நடப்பது போன்ற ஆரோகியமான விவாதங்களை நான் வரவேற்பதாகக் கூறினேன்.

    எந்த காரணத்தாலோ வஜ்ரா சொல்வதை நான் ஆதரிக்கிறேன் என்று புரிந்து கொள்வது அவரவர் நிலைப்பாடு.

    இருவரின் வாதங்களிலிருந்தும் நான் உள்வாங்கிக் கொள்கிறேன் என்பதே உண்மை.

    ReplyDelete
  108. //இருவரின் வாதங்களிலிருந்தும் நான் உள்வாங்கிக் கொள்கிறேன் என்பதே உண்மை.
    //

    இது தான் நானும் எதுவுமே சொல்லாததற்கு காரணம் தருமி ஐயா. நீங்களும் வஜ்ராவும் பேசிக் கொள்வதில் கற்றுக் கொள்ள என்னென்ன இருக்கிறது என்றே பார்த்துக் கொண்டிருந்தேன்.

    அடிக்கடி வந்து கொண்டு தான் இருக்கிறேன். அடிக்கடி பின்னூட்டம் இட்டிருந்தால் நீங்கள் என் பெயரைக் கொன்றிருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அதைத் தானே சொல்ல வந்தீர்கள். :-)

    ReplyDelete
  109. Slightly tangential but although i would have chosen to ignore, i guess i might as well answer.!

    //
    இங்கே பின்னூட்டம் இடும் நண்பர் ஒருவரின் பார்வை அவர் சார்ந்த சாதியபார்வையாக இருக்கிறதே தவிர தமிழ் சமூகச்சூழலின் கடந்தகால வரலாற்றுக்கான சரியான ஆதாரத்துடன் இல்லை என்று பேசப்போக நண்பர் ஓகை எழுந்து அவ்வாறில்லை என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
    //

    Oh, I see, i have ruffled lot of feathers !!

    முதலில் என் சாதி என்ன என்று இந்த சென்னை வலைப்பதிவில் சந்தித்தவர்களுக்கு எவருக்கு தெரியாது. தெரியாத விஷயத்தில் இல்லாத ஆளைப்பற்றி தவறான கருத்து சொல்வது உகந்த விஷயமாகப் படவில்லை.

    ஓகை ஆகயால் மறுத்திருக்கலாம்.

    ....

    Preconcieved notion களிலிருந்து எப்ப வெளிவரப்போகிறார்களோ அன்று தான் இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய ஷரத்தான

    Freedom of speech முழுமை பெரும்.

    அதாவது, We will agree to disagree. அது வரை, தமக்கு ஒவ்வாத கருத்துக்கள் சொல்லப்பட்டால் அவன் இன்ன சாதிக்காரன், இப்படித்தான் பேசுவான் என்று "பலகலைக்கழகப்" பட்டம் கொடுப்பார்கள்.

    இப்படி சாதி பார்ப்பவர்களான இவர்களின் மனநிலைக்கும் 100 வருடங்களுக்கு முன் தலீத்தை பின் வழியாக வரச்சொன்ன மேல் சாதிக்காரனின் மனநிலைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

    ReplyDelete
  110. //இங்கே பின்னூட்டம் இடும் நண்பர் ஒருவரின் பார்வை அவர் சார்ந்த சாதியபார்வையாக இருக்கிறதே தவிர தமிழ் சமூகச்சூழலின் கடந்தகால வரலாற்றுக்கான சரியான ஆதாரத்துடன் இல்லை என்று பேசப்போக நண்பர் ஓகை எழுந்து அவ்வாறில்லை என்று எதிர்ப்பு தெரிவித்தார்.//
    மன்னிக்கவேண்டும்.
    இந்த கருத்து மாற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. நான் பதிவரின் சாதி குறித்து பேச வில்லை. மதம் குறித்து பேசினேன். ஒருவர் மதங்களே வேண்டாம் என்கிறார். மற்றொருவர் தன் மதமே உயர்ந்தது என்கிறார்.
    இருவரும் தம் தன் கருத்துக்களில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் விவாதத்தின் மூலம் இவர் அவரையோ, அவர் இவரையோ மாற்றி விட முடியாது. (அதற்கான அவசியம் இருப்பதாக எனக்கு புலப்படவுமில்லை)
    முன்முடிவுகளுடன் இயங்கி இப்படி பேசிக்கொண்டே போவதை விட, தனியாக பதிவே போட்டிருக்கலாம் அந்த பதிவர் என்றே சொன்னேன். ஓகையை மீண்டும் விளித்து கேட்டுப்பாருங்கள்.
    (நான் தருமி, வஜ்ரா ஆகியோரை குறிப்பிட்டது உதாரணத்துக்காகவே, ஆணித்தரமான நம் மாற்றுக்கருத்துக்களை தனிப்பதிவாக இடும் போது அது, தனிக்கட்டுரையாக பாதுகாக்கப்படும் என்ற என்னத்தில் சொன்னது)

    ReplyDelete
  111. //இப்படி சாதி பார்ப்பவர்களான இவர்களின் மனநிலைக்கும் 100 வருடங்களுக்கு முன் தலீத்தை பின் வழியாக வரச்சொன்ன மேல் சாதிக்காரனின் மனநிலைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை..//

    இன்றளவும் பல கிராமங்களில் இது நடந்தே வருகிறது. அந்த கிராமங்கள் பல நகரங்களைச்சுற்றியே இருக்கின்றன என்பது தான் மெய்.

    ReplyDelete
  112. தருமி, உங்களின் இந்தப்பதிவு மிகவும் முக்கியமானது. சொல்வதற்கு நிறைய இருந்தாலும், இப்போது நேரமில்லை.

    பதிவுக்கும், விவாதங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  113. என் மதம் தான் உயர்ந்தது என்று மார்தட்டிக் கொள்ள எனக்கு எந்த அவசியமும் இல்லை.

    விவாதத்தின் மூலம் என் கருத்தை யார் மீதும் திணிக்க நான் விரும்புவதுமில்லை.

    இங்கே முன் முடிவுகள் யார் எடுத்து பின் பதில் எழுதினார்கள்.

    உங்கள் முன் முடிவு, இன்று மதவாதத்தின் கோரமுகம் தெரிவதற்கு இந்துத்வா அமைப்புகளும், "இந்து தீவிரவாதம்"மும் தான் என்பது.

    அதை தருமி அவர்கள் சரியாகவே மறுத்துவிட்டார்.

    Assertive and intolerant மதங்கள் இருக்கையில் இந்துமதத்திற்கு வேறு வழியில்லை, தானும் Assertive and intolerant ஆக மாறுவதைத் தவிற, என்ற கருத்தைத்தான் நான் சொன்னேன்.

    என் மதமே உயர்ந்தது என்பதைவிட என் மதமும் இப்படி நாறுடன் சேர்ந்து நாறிவருகிறது அதுவும் கண்முன்னே நடந்து வருகிறது என்பதைத் தான் சொல்லியிருக்கிறேன்.

    Knowingly i am becomming part of the US or THEM என்பதையும் சொல்லியுள்ளேன்.

    அதைத் தனிப்பதிவாகப் போட்டு மீண்டும் ஒரு விவாதத்தை வளர்க்க எனக்கு ஆசையில்லை. மேலும் இந்தப் பதிவில் இந்து வாழ்க்கை நெறி யைப் பற்றியும் பல கேள்விகள் எழுந்துள்ளன.

    அதன் எல்லைகள் எது என்பதை யார் முடிவு செய்கிறார்கள் என்றும் தருமி கேள்வியெழுப்பியிருக்கிறார்.

    பாலபாரதி அவர்களே,

    நீங்கள் சொல்வது

    "இன்றளவும் பல கிராமங்களில் இது நடந்தே வருகிறது. அந்த கிராமங்கள் பல நகரங்களைச்சுற்றியே இருக்கின்றன என்பது தான் மெய்."

    இதை என்னால் மறுக்க முடியாது. ஆனால் இதற்கெல்லாம் ஒரு குறிபிட்ட சமூகம் அல்லது மதம் தான் காரணம் என்று எண்ணம் இருப்பின் அதை என்னால் ஆதாரத்துடன் மறுக்க முடியும்.

    ReplyDelete
  114. ஒரே ஒரு ஒற்றை ஆள் பல பெயர்களிலும் தனக்குத்தானே பின்னூட்டம் எழுதி தமிழ்மணத்தினை நாற அடிப்பதோடு மட்டுமின்றி தான் பிறந்த கேடுகெட்ட சாதியை பெருமையாக வேறு சொல்கிறார். அனைவரும் சமம் என்று சொல்லிவிட்டு இப்படி தன் சாதியைப் பலர் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தால் உலகம் எப்படி உருப்படும் சார்?

    ReplyDelete
  115. விடாது கருப்பு,
    முதல் முறையாக வருகிறீர்கள். வருக.

    உங்கள் பின்னூட்டத்தில் கொஞ்சம் 'கை' வைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  116. மதங்கள் சென்ற நூற்றாண்டுகளின் குப்பைகள். அவற்றில் நல்லவைகளும் முடங்கி இருப்பதால் நிறைய ரீசைகிள் பண்ணி பயன்படுத்த முயற்சிக்கலாம், இல்லை என்றால் குப்பையை கொளுத்தி விட்டுவிடலாம் !
    :)

    ReplyDelete
  117. //மதங்கள் சென்ற நூற்றாண்டுகளின் குப்பைகள். அவற்றில் நல்லவைகளும் முடங்கி இருப்பதால் நிறைய ரீசைகிள் பண்ணி பயன்படுத்த முயற்சிக்கலாம், இல்லை என்றால் குப்பையை கொளுத்தி விட்டுவிடலாம் !
    :) //

    நல்லவேளையாக அந்த அதிகாரம் யாரிடமும் இல்லை.

    பல்லாயிரக் கணக்கான வருடங்களாக ஒவ்வொரு நூற்றாண்டும் அதற்கு முந்தைய நூற்றாண்டைவிட நல்ல நூற்றாண்டே. இந்த நூற்றாண்டும் அப்படித்தான்.

    ReplyDelete
  118. எஸ்.பா.,

    எப்படியோ, உங்கள் சென்னை பதிவர் கூட்டத்திற்கு என்னையையும் வஜ்ராவையும் in absentia-வாகக் கலந்து கொள்ள வைத்து விட்டீர்கள்!

    நன்றி.

    ReplyDelete
  119. //ஆயினும் எனக்கு ஒரு பயம். ஆபிரஹாமிய மதத்தினரின் higher decibels இப்போதைக்கு என்னைப் பொருத்தவரை 'இந்துக்களாக இல்லாத இந்துக்களையும்' (!?) உள்ளே இழுத்துவிடுமோ என்ற பயத்தைச் சொல்லவே இந்தப் பதிவே எழுதினேன்.//

    அருமையான வரிகள் தருமி சார்,

    இந்துக்கள் இல்லாத இந்துக்கள் என்ற வரியில் நீங்கள் சொல்வதை இப்படி புரிந்துகொள்கிறேன். தவறா என்று சொல்லுங்கள். முதலாவது இந்துக்கள், இந்து என்ற அடையாளத்தை அரசியல்படுத்தியும் புரிந்துகொண்டுள்ளவர்கள். இரண்டாவது இந்துக்கள், இந்து என்ற அடையாளத்தை அரசியல்படுத்தாதவர்கள். அரசியல்படுததிய இந்துக்களாக அரசியல்படுத்தப்படாத இந்துக்களை, ஆபிரஹாமிய மதத்தினரின் ஹை டெஸிபல் பிரச்சாரங்கள் ஆக்கிவிடுகின்றன என்ற உங்களது ஆதாரமான பயம் உண்மையானது என்றே கருதுகிறேன்.

    பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்கள் தாங்கள் இந்து என்ற அரசியல் படுத்தலின் கீழ் வராமலிருப்பது இந்திய தேசியத்துக்கு நல்லது என்ற உங்கள் உள்ளார்ந்த கருத்தை ஒப்புகொள்கிறேன்.

    தொடர்ந்து இந்தியாவில் மூலைமுடுக்கெல்லாம் வெடிக்கும் குண்டுகளும், தீபாவளி கூட்டத்திலும், கோவில்களிலும் வெடிக்கும் குண்டுகளும், இறக்கும் அப்பாவி இந்துக்களும் கொஞ்சம் கொஞ்சமாக இந்துக்களை அரசியல் படுத்தி வருகின்றன.

    என்னதான் கோவில்களில் குண்டு வெடித்தாலும் பக்தர்கள் இறந்தாலும் கோவில்கள் உடைக்கப்பட்டாலும், யாத்ரீகர்கள் கொல்லப்பட்டாலும், இந்துக்கள் அவர்களது வாழ்விடங்களிலிருந்து துரத்தப்பட்டாலும் அவர்கள் எதிர்த்து எந்த குரலும் கொடுக்கக்கூடாது. அவர்களுக்காகவும் எந்த குரலும் பத்திரிக்கைகளிலிருந்து ஒலிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை இந்திய பத்திரிக்கைகள் எடுத்திருக்கின்றன.

    அவர்கள் அப்படி குரல் கொடுப்பதும். அப்படிப்பட்ட கொலைகளை எதிர்த்து கலவரங்களில் இறங்குவதும், மற்ற மத ரவுடிகளுக்கு இணையாக இந்து ரவுடிகள் தோன்றி அடிதடியில் இறங்குவதும் கடுமையாக ஒடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை இன்று பத்திரிக்கைகளும் ஊடகங்களும் கொண்டிருக்கின்றன.

    சமீபத்தில் மிகவும் ஒரு தலைப்பட்சமான, பெரும் பண செலவில் எடுக்கப்பட்ட பிரச்சார படம் ஒன்றை பார்க்க நேர்ந்தது. பாரதிய ஜனதா கட்சியினரை கொலை வெறி கொண்டவர்களாகவும், வாயில் ரத்தம் ஒழுகுபவர்களாகவும் சித்தரித்து முஸ்லீம்களையும் கிறிஸ்துவர்களையும் அப்பாவி பலியாடுகளாகவும் காட்டியிருந்தது. இது எதிர்பார்ப்பது போலவே வெளிநாடுகளில் பல விருதுகளை வாங்கி குவித்திருக்கிறது.

    இப்படிப்பட்ட சூழ்நிலை நிலவும் போது, இன்னும் தீவிரமாகவே இந்து எதிர்ப்புணர்வும், நீங்கள் குறிப்பிடும் இந்துக்கள் அல்லாத இந்துக்கள் இந்த சூழலுக்குள் அரசியல்படுத்தப்படுவதும் அதிகரிக்கும் எனறே தோன்றுகிறது.

    உங்களது பயத்தையும் துயரத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்.

    நன்றி
    எழில்

    ReplyDelete
  120. லக்கி லுக், ஹரிஹரன்,விடாது கருப்பு,


    மிக்க நன்றி.




    ஓகை,(இந்தப் பெயருக்கு ஏதும் பொருளுண்டா?)

    நன்றி.

    ReplyDelete
  121. குமரன்,

    இப்படிச் சொல்லி தப்பிச்சிக்கிறதா? உங்களுக்குத் தெரியாததையா பேசிட்டோம்?:)

    ReplyDelete
  122. தங்கமணி,

    வந்தமைக்கும்,பாராட்டுக்கும்,நன்றி.

    ReplyDelete
  123. கோவி.கண்ணன்,

    மதங்களைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் பிடித்திருக்கிறது.

    நன்றி.

    ReplyDelete
  124. தருமி அய்யா,

    பதிவுக்கு சம்பந்தமில்லா கேள்விதான் ஆயினும் கேட்கிறேன். இப்போ உலகமயத்தால் உலகுக்கு ஏற்ப்பட்டுள்ள ஆபத்து பிரதானமா இல்ல அதன் உடன் விளைவாக வீரியப்படும் மத வெறி ஆபத்து பிரதானமா?

    ஏனெனில் இந்த உலகமய பிரச்சனை குறித்து இப்படி பீதி கிளப்பும் பதிவு எதுவும் நீங்க எழுதிய மாதிரி தெரியல..... ஒரு சின்ன சந்தேகம்...

    மேலே நீங்கள் கேட்டுள்ள கேள்வி இந்திய மக்களின் வாழ்வா சாவா பிரச்ச்னைக்கு காரணமான ஏகாதிபத்திய onslaught யைப் பார்த்து கேட்க்க வேண்டும். ஆனால் இங்கே ஒரு நபர் இந்துக்கள் என்று அழைக்கப்படும் இந்துக்களின் பாரம்பரிய வழிபாட்டு, பண்பாட்டு விழுமியங்கள் இந்து மதம் எனப்படும் சிறுபான்மை பார்ப்பன மதத்தால் விழுங்கப்பட்டு அழிவது குறித்து எந்த ஒரு ஆக்கப்பூர்வமான ப்ங்க்ளிப்பும் செய்யாமல் இஸ்லாம், கிறுத்துவம் அழித்து விடும் என்பது போல கருத்தை உருவாக்குவது கெட்ட நோக்கம் கொண்ட வேலை.

    இந்து/பார்ப்பன, கிறுத்துவ, இஸ்லாம் மூன்றூமே இந்த நாட்டார் வழிபாட்டு சுதந்திர வழிபாட்டு மக்கள் தெய்வம் சார்ந்த மக்களை விழுங்கி செரிக்க முயல்கின்றன. அதை கண்டிக்கின்ற அளவிலாவது இந்த பதிவு இருந்திருக்கலாம்.

    மற்றபடி ஒரு பிரச்சனையை அந்த பிரச்சனையை மட்டும் தனியா பேசுவது என்பது ஒரு சார்பு முடிவுக்கு கொண்டு விடும். இந்த பதிவு அது போன்றதொரு பதிவு. அதன் சகல விதமான பரிணாமத்தையும் குறைந்த பட்சம் தொட்டு விட்டாவது கருத்து தெரிவிப்பதுதான் தவறான புரிதலுக்கு உட்பாடாத கருத்தாக இருக்க முடியும். அந்த வகையில் இந்த பதிவு தோல்வியுறுகிறது என்று எண்ணுகிறேன்.

    இந்த பதிவின் நோக்கம் என்ன என்பதில் தருமி அய்யா தெளிவாக இருந்தீர்களா என்று சந்தேகம் எழுகிறது.


    அசுரன்

    ReplyDelete
  125. தருமி அய்யா,

    ஆப்ரகாமிய மதங்கள் ரிஜிட்டாக இருப்பதால் அவை மத உறுதியை மேம்ப்படுத்தி மத நல்லிணக்கம் என்ற சூழலை கெடுப்பதில் பெரும்பங்காற்றும் என்ற உங்களது கருத்து அடிப்படையில் தவறு செய்கிறது.

    இதே ஆப்ரகாமிய மதங்கள் இருந்த காஷ்மீர் மத நல்லிணக்கதின் இலக்கணமாக அங்கு இந்தியா பாகிஸ்தான் நுழையும் முன்பு வரை இருந்த மர்மம் என்ன?

    அங்கு நீங்கள் குறிப்பிட்டது போல பிரச்சனை வரவில்லையே....

    ஆக மதம் என்பது மக்களை சுரண்டும் ஒரு அபின் என்பதில் சரியான நிலைப்பாட்டிற்க்கு வந்த நீங்கள் அதில் எது மிக மோசமானது என்று ஆய்வு செய்ய முற்ப்பட்டது சரியானதா என்பதிருக்க, அதிலும் பிரச்சனையை சரியான கோனத்தில் பார்க்க தவறுகிறீர்கள்.

    இவை அனைத்துமே(இந்து இஸ்லாம் கிருத்துவ) குப்பை என்பதுதான் உண்மை. இவர்கள் குப்பையை கிளறீ அதில் என்னது சிற்ப்பு உன்னது சிறப்பு என்று ஊரை கொழுத்தி விளையாடும் விளையாட்டில் நீங்க்ளும் பங்கேற்றது வருந்த தக்கதே.

    May be You wil say I won't fit in your braket. But I have the duty to crticise, otherwise, which action may not fit in your braket :-)).

    அசுரன்

    ReplyDelete
  126. தருமி அவர்களே,

    ஓகை பெயர்க் காரணம் - என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.
    படித்துப்
    பாருங்கள். நன்றி.

    ReplyDelete
  127. Dear Darumi,

    I think you have missed my another comment:

    //தருமி அய்யா,

    ஆப்ரகாமிய மதங்கள் ரிஜிட்டாக இருப்பதால் அவை மத உறுதியை மேம்ப்படுத்தி மத நல்லிணக்கம் என்ற சூழலை கெடுப்பதில் பெரும்பங்காற்றும் என்ற உங்களது கருத்து அடிப்படையில் தவறு செய்கிறது.

    இதே ஆப்ரகாமிய மதங்கள் இருந்த காஷ்மீர் மத நல்லிணக்கதின் இலக்கணமாக அங்கு இந்தியா பாகிஸ்தான் நுழையும் முன்பு வரை இருந்த மர்மம் என்ன?

    அங்கு நீங்கள் குறிப்பிட்டது போல பிரச்சனை வரவில்லையே....

    ஆக மதம் என்பது மக்களை சுரண்டும் ஒரு அபின் என்பதில் சரியான நிலைப்பாட்டிற்க்கு வந்த நீங்கள் அதில் எது மிக மோசமானது என்று ஆய்வு செய்ய முற்ப்பட்டது சரியானதா என்பதிருக்க, அதிலும் பிரச்சனையை சரியான கோனத்தில் பார்க்க தவறுகிறீர்கள்.

    இவை அனைத்துமே(இந்து இஸ்லாம் கிருத்துவ) குப்பை என்பதுதான் உண்மை. இவர்கள் குப்பையை கிளறீ அதில் என்னது சிற்ப்பு உன்னது சிறப்பு என்று ஊரை கொழுத்தி விளையாடும் விளையாட்டில் நீங்க்ளும் பங்கேற்றது வருந்த தக்கதே.

    அசுரன்
    ///

    ReplyDelete
  128. ///
    இவை அனைத்துமே(இந்து இஸ்லாம் கிருத்துவ) குப்பை என்பதுதான் உண்மை. இவர்கள் குப்பையை கிளறீ அதில் என்னது சிற்ப்பு உன்னது சிறப்பு என்று ஊரை கொழுத்தி விளையாடும் விளையாட்டில் நீங்க்ளும் பங்கேற்றது வருந்த தக்கதே.
    ///

    எனக்கும் அதே வருத்தம் தான் ஆனால் நான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப் பட்டதால் விலகி விட்டேன்.

    ReplyDelete
  129. அசுரன் அய்யா அவர்கள் இங்கே இப்படி குறிப்பிட்டிருக்கிறார்.
    //இதே ஆப்ரகாமிய மதங்கள் இருந்த காஷ்மீர் மத நல்லிணக்கதின் இலக்கணமாக அங்கு இந்தியா பாகிஸ்தான் நுழையும் முன்பு வரை இருந்த மர்மம் என்ன?

    அங்கு நீங்கள் குறிப்பிட்டது போல பிரச்சனை வரவில்லையே....
    //

    உண்மையா என்று சற்று கூகுளினேன்.

    இதோ கிடைத்தது.

    நடந்தது 1300களில்

    http://www.kashmir-information.com/ConvertedKashmir/Chapter10.html

    After receiving full support from Sikander, Mohd. Hamdani started forcible conversion of Hindus in Kashmir. The dream that his father could not fructify was completed by Mohd. Hamdani with the help of Sikander.

    Total destruction of Hindu Temples
    Hindus are to leave Kashmir
    Religious tax
    Bonfire of Sanskrit books Shrivar has in his Rajtarangani, written that under the inspiration of Syeds, Sikander set on fire all the books on Sanskrit literature like grass.

    மதநல்லிணக்கம் இருந்தது என்பது இந்திய அரசாங்கத்தின் பிரச்சாரம். அப்படி பேசி இன்று மதநல்லிணக்கத்தை கொண்டுவரும் ஒரு முயற்சி. அவ்வளவுதான்.

    ReplyDelete
  130. அசுரன்,

    //இந்த பதிவின் நோக்கம் என்ன என்பதில் தருமி அய்யா தெளிவாக இருந்தீர்களா என்று சந்தேகம் எழுகிறது.//

    பிரச்சனையே பதிவின் நோக்கமாக ஒன்றை மட்டும் குறித்து எழுதியதாலேயே உங்களின் மற்றொரு குற்றச்சாட்டுக்கு இலக்காகி விட்டேன் - //ஒரு பிரச்சனையை அந்த பிரச்சனையை மட்டும் தனியா பேசுவது என்பது ஒரு சார்பு முடிவுக்கு கொண்டு விடும்.//

    மத நல்லிணக்கம் என்பது நம் சமூக அளவிலும், உலக அளவிலும் எப்படி ஒரு கானல் நீராகவே ஆகி விடும் நிலையுள்ளது என்பதே இப்பதிவின் குறைந்த அளவு பரிமாணம். நீங்கள் சொல்லும் மற்ற பரிமாணங்களை எல்லாம் எடுத்துச் சொல்லவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அப்படி எந்த ஒரு விஷயத்தைத் தொட்டாலும் அது all embracing என்ற முறையில் கையாளப்பட முடியுமா என்பது கேள்வியே.

    //இந்து மதம் எனப்படும் சிறுபான்மை பார்ப்பன மதத்தால் விழுங்கப்பட்டு அழிவது குறித்து எந்த ஒரு ஆக்கப்பூர்வமான ப்ங்க்ளிப்பும் செய்யாமல்...//
    இதைப்பற்றி தனிப்பதிவிலும், இப்பதிவின் பின்னூட்டங்களிலும் நான் வலியுறுத்துவதே பார்ப்பனீய இந்துமதம் ஒரு சிறுபான்மை மதம் என்பதுதானே.

    //உலகமயத்தால் உலகுக்கு ஏற்ப்பட்டுள்ள ஆபத்து பிரதானமா இல்ல அதன் உடன் விளைவாக வீரியப்படும் மத வெறி ஆபத்து பிரதானமா? //

    முதல் பிரச்சனை ஒரு பொருளாதாரப் பிரச்சனை. அடுத்ததோ உணர்வுகளோடு பிணைக்கப்பட்ட காரியம். பொருளாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு, காலம் தரக்கூடியது; மனித முயற்சிகளால் தீர்க்கக் கூடியது. ஆனால் மதவெறிக்கு..? ஆகவே உங்கள் கேள்விக்குப் பதிலை - எந்த ஆபத்து பிரதானம் என்பதற்கு - நீங்களே கண்டுகொள்ளுங்கள்.

    //உலகமய பிரச்சனை குறித்து இப்படி பீதி கிளப்பும் பதிவு எதுவும் நீங்க எழுதிய மாதிரி தெரியல..//

    சட்டியில இருக்கிறதுதானே அகப்பையில் வரும், அசுரன்.

    //இவர்கள் குப்பையை கிளறீ அதில் என்னது சிற்ப்பு உன்னது சிறப்பு என்று ஊரை கொழுத்தி விளையாடும் விளையாட்டில் நீங்க்ளும் பங்கேற்றது வருந்த தக்கதே.//

    மதங்களைப் பற்றிய என் நிலைப்பாட்டைப் புரிந்து கொண்டமைக்கு நன்றி. அதே சமயம் இந்தப் பதிவு மதங்களின் ஒரே ஒரு நிலைப்பாட்டை மட்டும் பற்றியது. மத நல்லிணக்கம் பற்றியது மட்டுமே இப்பதிவில் கையில் எடுத்துள்ளேன். அதில் ஏன் நல்லிணக்கத்திற்கு வழியில்லை என்பதற்கு எனக்குத் தெரிந்த காரணங்களைக் கூறியுள்ளேன். இந்த ஒரு காரணத்தில் இந்து மதம் - "எந்த இந்து மதமாயினும்" - மற்ற இரு மதங்களைவிட பரந்த பார்வை கொண்டது என்பதைக் கூறியுள்ளேன். சாதிகள் என்று எடுத்துக்கொண்டால், அந்த ஒரே ஒரு விஷயத்தில் இஸ்லாம் பரவாயில்லை; கல்விக்கூடங்களும் சமுதாயநலக் காரியங்கள் என்றால் -அது எந்த நோக்கத்திற்காக இருப்பினும் - கிறித்துவ மதம் பரவாயில்லை என்று சொன்னால், அது 'என்னது சிற்ப்பு உன்னது சிறப்பு'என்பதற்காகச் சொல்லப்பட்டது என்று கூறலாமா?

    //May be You wil say I won't fit in your braket.//
    Ha! why should i say like that. i hope we are very much in the same 'bracket' in some specifics.

    // But I have the duty to crticise,...//
    you're welcome. and pl. continue that. that alone can make me cautious in what i say. thanks.


    கால தாமதம் அதிகம் ஆனாலும் உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  131. //நான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப் பட்டதால் விலகி விட்டேன். //

    மன்னிக்க வேண்டும், செந்தில் குமரன். உங்கள் கேள்விகளுக்கு விளக்கமாகப் பதிலளித்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்தேன்.

    நிச்சயமாக நான் தவறாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். திரும்பவும் உங்கள் பதிலிலும், அசுரனுக்குச் சொன்னதிலும் உள்ளதைத் திருப்பிச் சொல்லி விடுக்றேன்.

    இது அந்த 3 மதங்களிலும் உள்ள ஒரு விஷயத்தை எடுத்து அதில் என் கருத்தைக் கூறியுள்ளேன். ஜிராவும் என்னைச் சரியாகப் புரிந்து ஒரு பதில் தந்திருக்கிறாரே...உங்களுக்குத் திருப்தியில்லை போலும். இல்லையா?

    ReplyDelete
  132. தருமி சார்,

    சிம்பிளா சொல்லனுமுனா..

    மனிதனுக்கு மதம் பிடித்திருக்க வேண்டும்.
    ஆனால் மதம் மனிதனை பிடித்திருக்ககூடாது.

    இரண்டாவது நிலை இன்றைய ஓட்டு அரசியலினால் ஏற்படுக்கிறது.

    ReplyDelete
  133. ///
    உங்களுக்குத் திருப்தியில்லை போலும். இல்லையா?
    ///

    கண்டிப்பாக திருப்தியில்லைதான் தருமி ஐயா.

    இந்த பதிவின் பின்னூட்டங்களில் உங்கள் கருத்தை விவாதிக்க மட்டும் அல்லாமல் வேறு சில நோக்கங்களுக்காகவும் வழி கொடுத்து விட்டதே என்பது எனக்கு வருத்தம் தான்.

    அதுவும் நீங்கள் எனக்கு பதில் சொன்ன விதம் மீண்டும் என்னை பதிலளிக்க முடியாத நிலைக்கும் தள்ளி விட்டது.

    மேலும் நான் சொல்ல நினைத்த கருத்துக்கள் சிலவற்றையும் சொல்ல முடியாமல் போய் விட்டது.

    ஆப்ரஹாமிய மதம் இந்தியாவுக்கு வருவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே சமணர்கள் பௌத்தர்கள் இந்து என்ற பிரச்சனைகள் இருந்தது என்பதையும், களப்பரர்கள் வைணவர்கள் என்ற பிரச்சனைகள் இருந்ததையும் குறிப்பிடலாம் என்று நினைத்திருந்தேன்.(மதத்திற்குள்ளேயே நல்லிணக்கம் இல்லையே மத நல்லிணக்கம் எப்படி இருக்கும் என்பது போல கேள்விகள் இருந்தன.)

    சாதுவான இந்து மதத்தினரை அப்பொழுது எவர் தூண்டி விட்டார் யாரால் பிரச்சனைகள் வந்தது என்றெல்லாம் கேள்வி எழுப்பலாம் என்று எண்ணி இருந்தேன் முடியாமல் போய் விட்டது.

    உங்கள் நோக்கம் ஒரு குறிப்பிட்ட பிரச்சனை பற்றி பேசுவதாக இருந்தாலும் வந்திருக்கும் பின்னூட்டங்கள் அது பற்றி மட்டும் தான் பேசியதா என்பதையும் பாருங்கள்.

    பொதுவாக பின்னூட்டம் இட்டவர்கள் அவர்கள் எது போன்ற கொள்கைகள் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் பாருங்கள். பதிவின் நோக்கம் நீங்கள் கூறியது போலவே எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கிறதா இல்லை வேறு சில விஷயங்களுக்கும் இடம் கொடுத்திருக்கிறதா என்பதையும் பாருங்கள்.

    என் அறிவுக்கு எட்டிய ஒரு post match analysis மாதிரி இந்த பின்னூட்டத்தை நினைத்துக் கொள்ளுங்கள்.

    என் அறிவுக்கு எட்டிய அளவில் என்ற சொல்லி விட்டதால் பின்னூட்டத்தில் தவறிருக்கலாம் எனவே இந்தப் பின்னூட்டத்தை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

    :-)))).

    ReplyDelete
  134. செந்தில் குமரன்,


    //கண்டிப்பாக திருப்தியில்லைதான் தருமி ஐயா.//
    என்ன செய்வது என்று தெரியவில்லை. சரி - இப்படி எடுத்துக் கொள்கிறேன். எல்லோரும் எல்லோருக்கும் எல்லா நேரமும் சரியானவராக இருக்க முடிவதில்லையே!

    //இந்த பதிவின் பின்னூட்டங்களில் உங்கள் கருத்தை விவாதிக்க மட்டும் அல்லாமல் வேறு சில நோக்கங்களுக்காகவும் வழி கொடுத்து விட்டதே என்பது எனக்கு வருத்தம் தான்.//
    அப்படி வந்த பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்லாமல் போனாலும் முடியாமை என்று கருதப்படும் நிலை வந்து விடுமே; பதில் சொல்லியே ஆக வேண்டிய நிலை.

    //அதுவும் நீங்கள் எனக்கு பதில் சொன்ன விதம் மீண்டும் என்னை பதிலளிக்க முடியாத நிலைக்கும் தள்ளி விட்டது.
    மேலும் நான் சொல்ல நினைத்த கருத்துக்கள் சிலவற்றையும் சொல்ல முடியாமல் போய் விட்டது.//
    you mean hurting?

    //ஆப்ரஹாமிய மதம் இந்தியாவுக்கு வருவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே சமணர்கள் பௌத்தர்கள் இந்து என்ற பிரச்சனைகள் இருந்தது என்பதையும், களப்பரர்கள் வைணவர்கள் என்ற பிரச்சனைகள் இருந்ததையும் குறிப்பிடலாம் என்று நினைத்திருந்தேன்.(மதத்திற்குள்ளேயே நல்லிணக்கம் இல்லையே மத நல்லிணக்கம் எப்படி இருக்கும் என்பது போல கேள்விகள் இருந்தன.)
    சாதுவான இந்து மதத்தினரை அப்பொழுது எவர் தூண்டி விட்டார் யாரால் பிரச்சனைகள் வந்தது என்றெல்லாம் கேள்வி எழுப்பலாம் என்று எண்ணி இருந்தேன் முடியாமல் போய் விட்டது.//
    அவைகள் வரலாறு; நாம் பேசுவது இன்றைய நிலை; இல்லையா?

    //உங்கள் நோக்கம் ஒரு குறிப்பிட்ட பிரச்சனை பற்றி பேசுவதாக இருந்தாலும் வந்திருக்கும் பின்னூட்டங்கள் அது பற்றி மட்டும் தான் பேசியதா என்பதையும் பாருங்கள்.//
    மேலே பதில் சொல்லி விட்டேனென்று நினைக்கிறேன்.

    //பொதுவாக பின்னூட்டம் இட்டவர்கள் அவர்கள் எது போன்ற கொள்கைகள் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் பாருங்கள். பதிவின் நோக்கம் நீங்கள் கூறியது போலவே எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கிறதா இல்லை வேறு சில விஷயங்களுக்கும் இடம் கொடுத்திருக்கிறதா என்பதையும் பாருங்கள்.//
    இல்லைதான்; இருப்பினும் முடிந்தவரை என் கருத்தை வலியுறுத்தியுள்ளேன் என்றே நினைக்கின்றேன்.

    என் அறிவுக்கு எட்டிய ஒரு post match analysis மாதிரி இந்த பின்னூட்டத்தை நினைத்துக் கொள்ளுங்கள்.//
    post mortem..?! முடிந்த கதைகளுக்குத்தானே அதெல்லாம்..?

    //
    என் அறிவுக்கு எட்டிய அளவில் என்ற சொல்லி விட்டதால் பின்னூட்டத்தில் தவறிருக்கலாம் எனவே இந்தப் பின்னூட்டத்தை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
    :-)))).//
    தவறாக எடுத்துக் கொள்ள என்ன இருக்கிறது, செந்தில் குமரன். ஸ்மைலியெல்லாம் கூட வேண்டுமா, என்ன? :)

    ReplyDelete
  135. நாடோடி,

    நீங்கள் சொல்லும் கருத்தில்தான் என் மதப் பதிவுகளுக்கு 'நான் ஏன் மதம் மாறினேன்?' என்ற தலைப்பில் தலைப்பிட்டு விட்டு இறுதிப் பகுதிக்கு 'எனக்கு "மதம்" பிடிக்கவில்லை" என்ற தலைப்பைக் கொடுத்தேன்.

    ReplyDelete
  136. //அசுரன் அய்யா அவர்கள் இங்கே இப்படி குறிப்பிட்டிருக்கிறார்.
    //இதே ஆப்ரகாமிய மதங்கள் இருந்த காஷ்மீர் மத நல்லிணக்கதின் இலக்கணமாக அங்கு இந்தியா பாகிஸ்தான் நுழையும் முன்பு வரை இருந்த மர்மம் என்ன?

    அங்கு நீங்கள் குறிப்பிட்டது போல பிரச்சனை வரவில்லையே....
    //

    உண்மையா என்று சற்று கூகுளினேன்.

    இதோ கிடைத்தது.

    நடந்தது 1300களில்

    http://www.kashmir-information.com/ConvertedKashmir/Chapter10.html

    After receiving full support from Sikander, Mohd. Hamdani started forcible conversion of Hindus in Kashmir. The dream that his father could not fructify was completed by Mohd. Hamdani with the help of Sikander.

    Total destruction of Hindu Temples
    Hindus are to leave Kashmir
    Religious tax
    Bonfire of Sanskrit books Shrivar has in his Rajtarangani, written that under the inspiration of Syeds, Sikander set on fire all the books on Sanskrit literature like grass.

    மதநல்லிணக்கம் இருந்தது என்பது இந்திய அரசாங்கத்தின் பிரச்சாரம். அப்படி பேசி இன்று மதநல்லிணக்கத்தை கொண்டுவரும் ஒரு முயற்சி. அவ்வளவுதான்.///

    காஸ்மீரில் எத்தனை ஆண்டுகள் இஸ்லாமியர் ஆட்சி இருந்தது என்பதும் அதில் மிக சொற்ப வருடங்களே மத வெறியாளர்களான இரு அரசர்கள் ஆண்டனர் என்பதும் எழிலுக்கு தெரிய நியாயமில்லை.. மேலும் இன்றும் கூட டில்லியில் முகாமிட்டுள்ள காச்மீரி பண்டிட்கள் காஸ்மீரின் அந்த மத சகிப்புத்தன்மை பன்முக கலாச்சார செழிப்பை ஏக்கமுடன் நினைத்து பல கட்டுரைகள் எழுதியுள்ளனர். அவர்களில் பலர் இந்துத்துவ அமைப்புகளில் உள்ளவர்கள்....

    அவற்றையும் கூகிளிலேயே தேடினால் கிடைக்கும்...

    ஆக, காஸ்மீரின் மத சகிப்புத்தன்மை அரசாங்கத்தின் பிரச்சாரமா அல்லது பண்டிட்களின் பிரச்சாரமா என்பதையும் கூகிளிலேயே தேடிப் பார்க்கவும் :-))

    ReplyDelete
  137. தருமி அய்யாவுக்கு வணக்கம்,

    //இதே ஆப்ரகாமிய மதங்கள் இருந்த காஷ்மீர் மத நல்லிணக்கதின் இலக்கணமாக அங்கு இந்தியா பாகிஸ்தான் நுழையும் முன்பு வரை இருந்த மர்மம் என்ன?

    அங்கு நீங்கள் குறிப்பிட்டது போல பிரச்சனை வரவில்லையே....
    //

    இந்த மேலே சொன்ன இடத்தில் உங்களது பதிவின் அடிப்படையே தவறு என்று ஆகிறது.




    ////உலகமயத்தால் உலகுக்கு ஏற்ப்பட்டுள்ள ஆபத்து பிரதானமா இல்ல அதன் உடன் விளைவாக வீரியப்படும் மத வெறி ஆபத்து பிரதானமா? //

    முதல் பிரச்சனை ஒரு பொருளாதாரப் பிரச்சனை. அடுத்ததோ உணர்வுகளோடு பிணைக்கப்பட்ட காரியம். பொருளாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு, காலம் தரக்கூடியது; மனித முயற்சிகளால் தீர்க்கக் கூடியது. ஆனால் மதவெறிக்கு..? ஆகவே உங்கள் கேள்விக்குப் பதிலை - எந்த ஆபத்து பிரதானம் என்பதற்கு - நீங்களே கண்டுகொள்ளுங்கள்.
    ///


    உணர்வுகள் அந்தரத்தில் உருவாகுமா? உணர்வுகள் எங்கு உருவாகின்றன? இதற்க்கான விடையை தேடினால் மத வெறிக்கான மூலமும் கிடைக்கும்.....


    நீங்கள் கடவுள் மறுப்பாளராக இருந்தாலும் கூட பொருள்முதல்வாதி என்ற அம்சத்தில் இங்கு தவறுகிறேர்கள்....

    எந்த சிந்தனையும், கருத்தும் தனக்கான சமூக பொருளாதார வேர் இன்றி உயிர் வாழ் முடியாது...

    இதற்க்கு காலத்திற்கு ஏற்ப பரிணமித்து வந்துள்ள பார்ப்ப்னியமே எடுத்துக்காட்டு... அது ஒரு உணர்வுதானே? அப்படியே பழைய வடிவில் நீடிக்கலாமே? யார் மாற்றியது? ஏன் மாற்றினார்கள்? மாற்ற வேண்டிய தேவை என்ன?



    அசுரன்

    ReplyDelete
  138. Dear Darumi,

    You again missed my comment:-))

    I publich here again...

    ///

    தருமி அய்யாவுக்கு வணக்கம்,

    //இதே ஆப்ரகாமிய மதங்கள் இருந்த காஷ்மீர் மத நல்லிணக்கதின் இலக்கணமாக அங்கு இந்தியா பாகிஸ்தான் நுழையும் முன்பு வரை இருந்த மர்மம் என்ன?

    அங்கு நீங்கள் குறிப்பிட்டது போல பிரச்சனை வரவில்லையே....
    //

    இந்த மேலே சொன்ன இடத்தில் உங்களது பதிவின் அடிப்படையே தவறு என்று ஆகிறது.




    ////உலகமயத்தால் உலகுக்கு ஏற்ப்பட்டுள்ள ஆபத்து பிரதானமா இல்ல அதன் உடன் விளைவாக வீரியப்படும் மத வெறி ஆபத்து பிரதானமா? //

    முதல் பிரச்சனை ஒரு பொருளாதாரப் பிரச்சனை. அடுத்ததோ உணர்வுகளோடு பிணைக்கப்பட்ட காரியம். பொருளாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு, காலம் தரக்கூடியது; மனித முயற்சிகளால் தீர்க்கக் கூடியது. ஆனால் மதவெறிக்கு..? ஆகவே உங்கள் கேள்விக்குப் பதிலை - எந்த ஆபத்து பிரதானம் என்பதற்கு - நீங்களே கண்டுகொள்ளுங்கள்.
    ///


    உணர்வுகள் அந்தரத்தில் உருவாகுமா? உணர்வுகள் எங்கு உருவாகின்றன? இதற்க்கான விடையை தேடினால் மத வெறிக்கான மூலமும் கிடைக்கும்.....


    நீங்கள் கடவுள் மறுப்பாளராக இருந்தாலும் கூட பொருள்முதல்வாதி என்ற அம்சத்தில் இங்கு தவறுகிறேர்கள்....

    எந்த சிந்தனையும், கருத்தும் தனக்கான சமூக பொருளாதார வேர் இன்றி உயிர் வாழ் முடியாது...

    இதற்க்கு காலத்திற்கு ஏற்ப பரிணமித்து வந்துள்ள பார்ப்ப்னியமே எடுத்துக்காட்டு... அது ஒரு உணர்வுதானே? அப்படியே பழைய வடிவில் நீடிக்கலாமே? யார் மாற்றியது? ஏன் மாற்றினார்கள்? மாற்ற வேண்டிய தேவை என்ன?


    அசுரன்

    /////

    ReplyDelete
  139. //காஸ்மீரில் எத்தனை ஆண்டுகள் இஸ்லாமியர் ஆட்சி இருந்தது என்பதும் அதில் மிக சொற்ப வருடங்களே மத வெறியாளர்களான இரு அரசர்கள் ஆண்டனர் என்பதும் எழிலுக்கு தெரிய நியாயமில்லை.. மேலும் இன்றும் கூட டில்லியில் முகாமிட்டுள்ள காச்மீரி பண்டிட்கள் காஸ்மீரின் அந்த மத சகிப்புத்தன்மை பன்முக கலாச்சார செழிப்பை ஏக்கமுடன் நினைத்து பல கட்டுரைகள் எழுதியுள்ளனர். அவர்களில் பலர் இந்துத்துவ அமைப்புகளில் உள்ளவர்கள்....

    அவற்றையும் கூகிளிலேயே தேடினால் கிடைக்கும்...

    ஆக, காஸ்மீரின் மத சகிப்புத்தன்மை அரசாங்கத்தின் பிரச்சாரமா அல்லது பண்டிட்களின் பிரச்சாரமா என்பதையும் கூகிளிலேயே தேடிப் பார்க்கவும் :-))
    //

    சொற்ப வருடங்களா? அப்படி ஒன்றும் தெரியவில்லையே? சுல்தான் குத்புதீன் ஆரம்பித்த இஸ்லாமியமயமாக்கம் 1372இலிருந்து சிக்கந்தர் 1420 வரைக்கும் ஆண்டது. சிக்கந்தரின் மகன் ஜையினுலாபுதீன் சற்று கடுமையான விதிகளை தளர்த்தினார். 1474இல் ஆட்சிக்கு வந்த ஜயினுலாபுதீனின் மகன் ஹைதர் ஷா மீண்டும் இஸ்லாமிய கடுமைகளை காஷ்மீரில் ஏற்றினார். அது மொகலாய சாம்ராஜ்யத்துக்குள் வந்த பின்னால் அக்பர் காலத்தில் மட்டுமே சற்று தளர்வுகளை கண்டது. ஜெஹாங்கிர் வந்ததும் மீண்டும் கடுமையான இஸ்லாமிய சட்டங்கள் அங்கு திணிக்கப்பட்டன. அது இந்து ராஜாக்கள் காஷ்மீரை கைப்பற்றும் வரை நீடித்தது. இந்து ராஜாக்கள் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் காஷ்மீரியத் என்ற பெயரில் சமூக நல்லிணக்கம் வலியுறுத்தப்பட்டது.

    http://www.kashmir-information.com/ConvertedKashmir எல்லா அத்தியாயங்களையும் சற்று படித்து பார்க்கலாம்.

    அசுரன் அய்யா அவர்கள் இங்கே கூறியுள்ளது உண்மைதான். பேரரசர் அக்பர் காலத்தில்தான் இப்படிப்பட்ட காஷ்மீரியத் என்ற கருத்து உருவாகியது. ஆனால், அக்பருக்கு பின்னால் காணாமல் போய்விட்டது. தீன் இலாஹி என்பதை அவர் பரப்ப முயற்சித்தது முஸ்லீம்களிடையே தீவிர எதிர்ப்பை உருவாக்கியது.
    ஏன் காஷ்மீர பண்டிடுகள் அதனை பேசுகிறார்கள் என்பதும் பெரிய ரகசியமல்ல. அப்படியாவது முஸ்லீம்களை சரிக்கட்டி தங்களது சொந்த ஊரில் வாழ்ந்துவிடலாம் என்ற மனப்பால்தான்.
    ஆனால், இவை அனைத்தும் தருமி அய்யா கூறியுள்ள "ஆபிரஹாமிய" exclusiveness, அந்த மதங்களில் தன் மதத்தில் இல்லாதவனை விரோதியாக பார்க்கும் குணம் ஆகியவற்றை மறுத்துவிடவில்லை. தற்காலிகமாக பூச்சு பூசலாம். உள்ளே இருப்பது எங்கும் போய்விடாது.


    நட்புடன்
    எழில்

    ReplyDelete
  140. http://koausa.org/Crown/history.html

    *
    1352 - 1373 ==> Sultan Shihabud-din
    his dynasty ruled the state for 222 years. His army mainly consisted of Damras, Lavans and the hill tribes of Poonch, Rajapuri and Kishtwar. The important commanders who served under him were both Hindus and Muslims, such as Chandra-Damra, Laula Damara, Shura, Syed Hassan and Abdul Raina His two important Hindu ministers were Kota Bhat and Udyashri.

    He was tolerant ruler and treated his Hindu subjects generously. It is reported that owing to prolonged campaigns he needed money, and his ministers asked him to loot the temples, but he stoutly opposed the proposal, and to quote Jonaraj, he is reported to have said in anger: "Past generation have set-up images to obtain fame, and earn merit, and you propose to demolish them. Some have obtained renown by setting up images of gods, others by worshipping them, some by maintaining them, and you propose demolishing them. How great is the enormity of such a deed ".


    (This period is marked by Islamic Aggrsion and Atrocities)
    * 1389, ==> Qutab-ud-din died, and he was succeeded by his eldest son Sultan-Sikandar. It was in the time of this Sultan, that the political atmosphere of the state was vitiated. He imposed Jizia upon Hindus and stopped them to use tilak on their fore-heads. Writes M. Hassan: "In their misplaced zeal for their faith, Sikandar and his minister Saif-ud-din (who was originally a Hindu) were also responsible for the destruction of images and temples ."


    * 1420 - 1470 ==> Shahi-Khan or Sultan Zain-ul-Abidin, ascended the throne in 1420 A. D. and ruled upto 1470 A. D. nearly for half a century. His accession to the throne, proved to be the return of a bright and warm day after a cold and a chilly night. In the words of Pandit Anand Kaul: "possessed of a broad and tolerant outlook, with a desire to benefit mankind, he ruled with such equity, and justice and did so much to improve the material prosperity of the people, that one can not fail to admire him, his benevolent rule demands special homage in as much as he lived in a period when he had no worthy and enlightened contemporary to emulate. In the world around him, he could have little to help him. He was a potentate encouraged to be tyrannical and selfish by tradition, and especially by the examples of his father, Sultan Sikander. Zain-ul-Abidin was deservedly surnamed Budshah or the great King. In spite of 5 centuries having rolled by since he ruled, his name is still remembered with genuine reverence and gratitude. Take the name of Budshah before a Kashmiri, and at once with a happy countenance he will rhyme it with Pad-Shah ". Writes another modern historian M. Hassan : " of all the Sultans who sat on the throne of Kashmir, Zainulabidin was undoubtedly the greatest. He ushered in a period of nearly half a century of peace, prosperity, and benevolent rule for his people. He introduced many arts and crafts for which Kashmir has become famous ever since. He promoted learning, music and painting and made Kashmir the centre of great culture. He won the loyality and affection of his subjects who called him Budshah or the great king, a name by which he is remembered even to day by the people of Kashmir. He acquired a halo in popular imagination which still surrounds his name inspite of the lapse of nearly 500 years."


    Thsi Sulthn did the following things:

    ==> One of the most outstanding features of his administration was the just and liberal treatment of the Hindus, who were not only allowed complete freedom of worship, but the Sultan recalled all those who had fled to India in the time of his father.

    ==> He allowed those Hindus who had forcibly been converted, to return to their former religion.

    ==> The Sultan banned cow slaughter and permitted the repair and rebuilding of the temples at government expenses.



    Do you know what has been gifted for Kashmir due it's religious tolerance?

    The Sultan opened schools and hostels for the students. It is for encouragement of arts and crafts that Kashmir will be permanently indebted to the Sultan. In the Hindu times, the valley was equally famous for its arts and crafts but these had greatly suffered in the chaos which lasted for over two hundred years. The Sultan invited competant teachers from countries to Kashmir, so that they could train people here. Among many industries introduced by him, we can mention carpet, paper machine, paper making, silk rearing, shawls, manufacture of gun powder etc. Kashmir became so famous for beautiful designs on silks and shawls that our state acquired an unrivalled fame in Asia.


    *1561- 1587
    The last Shahmiri ruler, Sultan Habib Shah, a weakling was deposed by his commander, and nobles raised on throne Gazi Chak, a prominent military General of the time. He was the direct descendant of Lankar Chak who had come to Kashmir towards the close of Hindu rule. The Chak rule began in Kashmir in 1561 and lasted till 1587, when Akbar, the great Moghul Emperor conquered Kashmir.



    * 1587 to 1752 - Moghual Period.
    and in this period undoubtedly the people enjoyed peace and orderly Govt. There were some rapacious officers, but on the complaint of the people the Moghul rulers immediately removed them. Owing to the long peaceful rule of the three Moghul Kings, hundreds of people now began to come to Kashmir to find mental peace, to regain their health or attain spiritual salvation.

    Aurangezeb's reign was a signal for revolts and rebellions in several parts of the country. In distant parts of the empire commenced an era of lawlessness, anarchy and disorder. Many states became independent under their subedhars who founded new independent states. A reign of disorder also started in Kashmir. The Moghul Governors began to loot and plunder the people, and at the same time ruthlessly started a policy of religious bigotry and fanaticism. There was absolute chaos in northern India after the invasion of Nadir Shah of Persia. The people of Kashmir could no longer tolerate the misrule of Moghul satraps, and accordingly when Ahmad Shah Abdali of Kabul was at Lahore in 1752, two Kashmir nobleman Mir Muquim Kant and Khwaj'a Zahir Didmari, waited upon him at Lahore, and disgracefully requested him to bring Kashmir under his control.



    * 1752 - 1819 Afgan Rule
    Kashmir remained a dependency of Kabul rulers till 1819, roughly a period of 67 years. The Pathan rule is the darkest period in the history of our state.It is true, that all sections of people suffered here during their time, but the chief vicitims of these fiends were the Hindus, Shias and Bombas of Jhelum valley.

    It is strange that during this dark period a Hindu also became a Governor here. His name was Raja Sukh Jeevan Mal. It was only in his time that Kashmir heaved a sigh of relief. He was afterwards defeated and killed by Ahmad Shah. The Pathan rulers are now only rememberd for their brutality and cruelity, and it is said of them that they thought no more of cutting off heads than plucking a flower.


    40 Years of Skindar's rule, 50 or so years of Aurangezeb's. Total around 100 Years in total of 550 Years.


    * Sikh and Dogra 1819 - 1957



    This peace is from Vivekananda Kendra, Kanyakumari. Every body know What is the political afilifation of Vivekananda Kendra, Kanyakumari.

    If those who write about Kashmir for it's religious harmony are for:
    முஸ்லீம்களை சரிக்கட்டி தங்களது சொந்த ஊரில் வாழ்ந்துவிடலாம் என்ற மனப்பால்தான்

    than those who talk only the few years of Religous disharmony are to support Divide indian by religion?

    Religous Fanaticism is the nature of every religion. Even The so called democratic Hinduism Also one among the worst in this regard. Samanam, Pauthama, Saarvaagam, Logaayautham, Sidha are few bore the brutality of Hinduism....

    What is the meaning of Pet aversion to puja in Tamil, Not allowing other caste people to Temple etc. Is that not Religious fanaticism?

    Asuran

    ReplyDelete
  141. காஸ்மீரின் இஸ்லாமியம் தனது மத வெறிக்கு உதாரணமாக சொற்ப வருடங்களை கொண்டுள்ளது. ஆனால், இந்து பார்ப்ப்னிய மதம் ஆயிரம் வருடங்களில் ஒரு நொடி கூட தனது மத வெறியை இன்று வரை விட்டுக் கொடுத்ததில்லை.

    சாதி துவேசம், கலாச்சார ஒடுக்குமுறை இன்றும் பல்வேறு வடிவங்களில் தொடரத்தானே செய்கிறது...?

    அதனால்தான் மீண்டும் சொல்கிறேன். இவர்க்ள்(இந்து, இஸ்லாம், கிறுத்து) எல்லாருமே சுதந்திர வழிபாட்டு முறையை கொண்ட பிற பெரும்பான்மை மக்களை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கழுதைகளின் விட்டையில் எந்த விட்டை நல்ல விட்டை என்று ஆராய்ச்சி செய்வதே தேவையற்ற ஒன்று.

    அசுரன்

    ReplyDelete
  142. அசுரன் அய்யா மூணுகால் என்று சாதிக்க நினைக்கிறார். நான் என்ன சொல்ல முடியும்?

    //40 Years of Skindar's rule, 50 or so years of Aurangezeb's. Total around 100 Years in total of 550 Years. //

    என்று சொல்கிறார்.
    1752-1819 வரைக்கும் இருந்த ஆப்கானிய அரசு 67 வருடங்கள் கருப்பு பகுதி என்று எழுதிவிட்டு அவரே அதனை சேர்த்துக்கொள்ளவில்லை.

    * 1587 to 1752 - Moghual Period. என்று சொல்லி அதில் அக்பரின் பகுதி தவிர வேறு அனைத்து பகுதியும் கருப்பு பகுதிகளே. இது 150 வருடங்கள்

    அவர் பார்க்க விரும்புவது வேறு. உண்மை வேறு. இந்து விவேக் கேந்திரம் எழுதியதை படிக்கும்போது ஒன்று தோன்றுகிறது. அதனை அசுரன் படித்து புரிந்துகொள்வதை பார்த்தால் எங்கே இருக்கிறது என்று தோன்றுகிறது.

    காஷ்மீரில் இது கதை என்றால், முழுக்க முழுக்க இஸ்லாமிய மயமான முந்தைய இந்திய பகுதிகளின் கதை என்ன? பாகிஸ்தானிய மாநிலங்களிலும் பங்களாதேஷ் பகுதியிலும் காஷ்மீரியத் போல வேறெதாவது இருக்கிறதா என்று அவர் தெளிவு படுத்தினால் நல்லது.

    இந்த இடம் தருமியின் பக்கம். அதனை இப்படி பதில் எழுதி ஆக்கிரமிக்க எனக்கு விருப்பமில்லை.

    அவரது மொழிநடையும் எனக்கு மேலும் பதில் எழுத உவப்பானதாக இல்லை.

    நன்றி
    எழில்



    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  143. சரி அந்த மீதியுள்ள உங்க காஷ்மீர் வரலாறையும் கொஞ்சம் சொல்லுங்க.... புரளி பேசுவது ரொம்ப சுலபம். அப்கானியர்களின் ஆட்சி எல்லாருக்குமே மிக கொடுமையானதாக இருந்ததால்தான் காஷ்மீரின் முஸ்லீம் தளபதிகளே ஆப்கானியரின் ஆட்சியை முடிக்க முயற்சி செய்தார்கள்.

    கட்டுரையும் கூட மிகத் தெளிவாக சொல்கிறது: ஆப்கானியர் ஆட்சியில் எல்லாருமே மிக கஷ்டப்பட்டார்கள் அதில் இஸ்லாம் அல்லாதாவர் இன்னும் கொஞ்சம் அதிகம் கஸ்டப்பட்டார்கள் என்று. அதனால்தான் குறிப்பாக இஸ்லாமியரின் மதவெறி ஆட்சி லிஸ்டில் ஆப்கானியர் சேர்க்கவில்லை.

    கட்டுரையும் தெளிவாக முகலாயர்களில் அவுரங்கசிப் ஆட்சியில் மீண்டும் மத வெறி மேடைக்கு வருகிறது என்று சொல்கிறது. அதன் பொருள் முகலாயரின் மீதி ஆட்சியில் மத வெறி இல்லாமல் இருந்தது என்பதுதானே? கட்டுரை மிகத் தெளிவாக மத வெறி கஷ்மீரை சூரையாடிய கட்டங்களை கவனத்தில் கொண்டு வருகிறது. நீங்கள்தான் அதில் சொல்லாத விசய்ங்களுக்கும் சேர்த்து எம்மை யூகித்து கற்பனை செய்யச் சொல்கிறீர்கள்.

    சரி எனது கேள்வியின் இந்த பகுதிக்கு என்ன பதில்:

    //காஸ்மீரின் இஸ்லாமியம் தனது மத வெறிக்கு உதாரணமாக சொற்ப வருடங்களை கொண்டுள்ளது. ஆனால், இந்து பார்ப்ப்னிய மதம் ஆயிரம் வருடங்களில் ஒரு நொடி கூட தனது மத வெறியை இன்று வரை விட்டுக் கொடுத்ததில்லை.

    சாதி துவேசம், கலாச்சார ஒடுக்குமுறை இன்றும் பல்வேறு வடிவங்களில் தொடரத்தானே செய்கிறது...? //

    யார் மூனு கால் அப்படின்னு கதை விடுகிறார்கள்?
    நானா நீங்களா?

    இஸ்லாம் மத அரசர்கள் ஆட்சியில் இருந்த வரலாற்றிலேயே இப்படி இங்கே அங்கே என்றுதான் எழில் பொறுக்கி எடுத்து பேச வேண்டியதாகியுள்ளது. ஆனால் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வன்முறை செலுத்தியது யார்?

    பார்ப்ப்னியமா? இஸ்லாமா?

    மத வெறி என்பது எல்லா மதங்களின் இயல்பு. அதில் பார்ப்ப்னிய/இந்து மதத்திற்க்கு கொஞ்சம் அதிகம். அவ்வளவுதான்.

    அதை மறைக்க பிற மதத்தின் வன்முறை வெறி குறித்து பேசுகிறார்கள் இவர்கள். எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்


    //
    அதனால்தான் மீண்டும் சொல்கிறேன். இவர்க்ள்(இந்து, இஸ்லாம், கிறுத்து) எல்லாருமே சுதந்திர வழிபாட்டு முறையை கொண்ட பிற பெரும்பான்மை மக்களை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கழுதைகளின் விட்டையில் எந்த விட்டை நல்ல விட்டை என்று ஆராய்ச்சி செய்வதே தேவையற்ற ஒன்று. ///
    //

    அசுரன்

    ReplyDelete
  144. //அவரது மொழிநடையும் எனக்கு மேலும் பதில் எழுத உவப்பானதாக இல்லை.
    //


    எனது மொழி நடையில் என்ன உவப்பில்லாம் இருந்தது என்று தெரியவில்லை. ஒருவேளை மாற்றுக் கருத்துக்கள், அதுவும் பதில் சொல்ல இயலா கருத்துக்களை எழில் இப்படி வரையறுக்கிறாரா தெரியவில்லை.

    அசுரன்

    ReplyDelete
  145. தருமி அய்யாவுக்கு இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!!... இந்நாள் உழவர் பெருமக்களின் விடுதலைக்கு அவர்கள் விழிப்புறம் ஆண்டின் துவக்கமாக இருக்க மனம் ஏங்குகிறது...


    பின்னூட்டங்களை மீண்டும் ஒருமுறை மேய்ந்த பொழுது பின்வரும் பகுதி கண்ணில் பட்டது

    ////
    //இந்து மதம் எனப்படும் சிறுபான்மை பார்ப்பன மதத்தால் விழுங்கப்பட்டு அழிவது குறித்து எந்த ஒரு ஆக்கப்பூர்வமான ப்ங்க்ளிப்பும் செய்யாமல்...//
    இதைப்பற்றி தனிப்பதிவிலும், இப்பதிவின் பின்னூட்டங்களிலும் நான் வலியுறுத்துவதே பார்ப்பனீய இந்துமதம் ஒரு சிறுபான்மை மதம் என்பதுதானே.
    ////

    நான் இதில் 'ஆக்கப்பூர்வமான பங்க்ளீப்பு செய்யாத' என்று சுட்டியது தங்களை என்று தவறாக புரிந்து கொண்டது போல தெரிகிறது. இது இந்து மத வெறியர்களை சுட்டவே நான் குறிப்பிட்டிருந்தேன். தருமியுனுடைய பழைய பதிவுகளை நான் தொடர்ந்து படித்து வரும் பொழுது மதங்களின் அரசியல் குறித்த அவரது ஆக்கப்பூர்வமான படைப்புகளை அறியாதவனாக எப்படி இருப்பேன்?... அந்த விமர்சனம் தங்களை நோக்கியது அல்ல:-)))

    அசுரன்

    ReplyDelete
  146. I totally agree with watever vajra has said.

    U ppl are saying Hinduism is trying to crush all the Naattaar Valipadugal.

    Hinduism is not calling them (Naattar deivangal) as "satans".
    Infact, it gives respect to them.

    But, wat about other religions.. wil they accept them?

    Don't try to divide hindus...

    ReplyDelete
  147. photon,
    //Don't try to divide hindus...//

    to me it is a very much divided house.

    ReplyDelete