*
*
'என் முதல் போன் கால்' என்று எழுத நினச்சி ஆரம்பிச்சப்போ, நம்ம பீட்டா என்ஜினியர் எழுத்தை எழுதிட்டு அத அடிக்கிறது எப்படின்னு சொல்லிக் கொடுத்தது நினைவுக்கு வந்தது. அதை முயற்சி செஞ்சு பார்க்கிற சான்ஸுக்காக இப்படி தலைப்புக் கொடுத்தேன். மற்றபடி நீங்க இங்க வரணும்னு செய்றதுக்காக இந்த மாதிரி தலைப்புக் கொடுக்கலை. சரி.. இது தலைப்பில் உள்ள அடித்தல்,
இது நடந்தது என் 14-15 வயசில. ஒரு 48 வருஷம் ஆகிப் போச்சு. அதுவரை நான் பார்த்த சிவாஜி படத்திலெல்லாம் ஒரு கருப்பு போனை கைல தூக்கிக் கிட்டே அவர் ஸ்டைலா நடந்துகிட்டே பேசுறதப் பாத்து அட்லீஸ்ட் நம்ம ஒரே ஒரு போன்கால் செய்ய மாட்டோமான்னு ஒரு ஆசை வந்துகிட்டே இருந்துச்சு. போனை காதில வச்சுக்கிட்டு, ஸ்டைலா '..ஆங்... சொல்லுங்க.. சரி..ஓகே.. செஞ்சுடுவோம்' அப்டின்னெல்லாம் பேசணும்னு ஆசையா இருந்திச்சு. அப்படியெல்லாமா அப்பாட்ட சொல்ல முடியும்? பொத்தாம் பொதுவா அப்பாட்ட போன் பேசுறது பத்தி பேசி வச்சேன். 'ஆகட்டும்; பார்க்கலாம்'னு சொன்னாங்க. அப்பல்லாம் அப்பாமார்கள் அப்படி சொல்றதுதான் ஸ்டைல். ஏன்னா, அப்படித்தான் கர்மவீரர் சொல்லுவார். ஆனா அவர் அப்படி சொல்லிட்டு செஞ்சுருவார். ஆனா எங்க அப்பா நான் கேக்கிறதுக்கு இந்தப் பதிலைச் சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க.
நயினா ஸ்கூல் வாத்தியாரா? அப்போவெல்லாம் மக்குப் பசங்கதான் ட்யூஷன் படிக்க வருவாங்க.. அதில் ஒரு பையன் எனக்கு ஒரு வருஷம் ஜூனியர். நான் 9வது படிக்கும்போது அவன் அப்பாகிட்ட படிச்சான். எங்க பக்கத்துத் தெருதான். தெற்கு வெளி வீதியில அவங்க வீடு. பெருசா இருக்கும். வீட்டுப் படிகூட அவ்ளோ உசரம். நாங்க இருந்ததோ ஒரு ஒண்டுக் குடித்தனம். மூணு குடித்தனத்தோடு இருப்போம். எங்க வீட்டு போர்ஷனுக்குள்ள வர்ரதுக்கே தனித்திறமை வேணும். கிணற்றடி, அதச் சுத்தி எப்பவும் கட்டி நிக்கிற தண்ணி இதையெல்லாம் டாட்ஜ் செஞ்சு வந்தாதான் புழச்சாங்க. நடுவில பாசியில வழுக்கி விழ ஏகப்பட்ட சான்ஸ். நிறைய பேர் 'சர்ருன்னு' வழுக்கி விழுந்து வச்சத பார்க்கணுமே... புதுசா வர்ரவங்களை நான் வீட்ல இருக்கிறப்போவெல்லாம் usherer வேல பார்த்து காப்பாத்திருவேன்.. இல்லாட்டி அவங்க தலைவிதிப்படி நடக்கிறதுதான்..
அப்பத்தான் இந்தப் பையன், நம்ம ஜூனியர் - பேரு நவநீத கிருஷ்ணன் - வந்து சேர்ந்தான். ஒரு நாள் அப்பாவுக்கு நான் போன் பேசணும்னு சொன்னது ஞாபகத்துக்கு வர, நம்ம நவநீதன்கிட்ட 'டேய், ஜார்ஜை வீட்டுக்குக் கூட்டிட்டு போய் ஒரு போன் பண்ண வையேண்டா' அப்டின்னாங்க. அவனும் சரின்னு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனான். அந்த உசரப் படிக்கட்டைப் பார்த்ததுமே மிரண்டு போய்ட்டேன். வீட்டுக்குள்ள போனா, அது பாட்டுக்கு நீளமா போய்க்கிட்டே இருந்துச்சு. ரொம்பவே அசந்துட்டேன். வீட்டுக்கு நடுவில சோபா அது இதுன்னு இருந்திச்சு. உடம்பு எதிலயும் படாம பாத்துக்கிட்டேன். பணக்காரத்தனத்தைப் பார்த்தா அப்ப இருந்தே ஒரு தயக்கம்; இன்னும் கூட இருக்கு. ஒரு நாற்காலி பக்கத்தில ஒரு மேஜை மேல பள பளன்னு கருப்ப்ப்பா டெலிபோன் உக்காந்திருச்சு. நீங்கல்லாம் நிறைய பேரு பாத்திருக்க மாட்டீங்க.. அதில டயல் ஒண்ணும் இருக்காது. டயல் இருக்கிற இடத்துல ஒரு ஒத்த ரூபாய் சைஸ்ல ஒரு வட்டம்.. அதில அந்த போன் நம்பர் எழுதியிருக்கும். அப்போல்லாம் மூணு டிஜிட்தான் என்று ஞாபகம்.
நவநீதன் போனக் காமிச்சி, 'ம்ம்..போன் பண்ணு' அப்டின்னான். இப்படி சொன்னா நான் என்ன பண்ண முடியும்? என்ன செய்யணும் ஏது செய்யணும்னு எனக்கு என்ன தெரியும். 'இல்ல.. வேணாம்; நான் பண்ணலை' அப்டின்னேன். சரி நான் ரயில்வே என்கொயரிக்கு போட்டுத் தர்ரேன். ஏதாவது பேசு அப்டின்னான். அப்போவெல்லாம் டைரக்ட் ட்யலிங் கிடையாது. என்கொயரிக்குப் போன் செஞ்சு, அங்க நாம யார்ட்ட போன் பேசணும்னு சொன்னா அவங்க கனெக்ட் பண்ணுவாங்க. அதெல்லாம் யாருக்குத் தெரியும்.
அவனே என்கொயரிக்கு போன் போட்டு, ரயில்வே என்கொயரி அப்டின்னான். உடனே என்கிட்ட கொடுத்தான். நான் கையில வாங்கியதுமே ஹலோ..ஹலோ அப்டின்னேன். 'கொஞ்சம் பொறு; கனெக்க்ஷன் கிடச்ச பிறகு பேசு' அப்டின்னான். சரின்னு காதில வச்சிக்கிட்டு, என் கவனத்தையெல்லாம் அந்த இடது காதில தேக்கி வச்சிக்கிட்டு காத்துக்கிட்டு இருந்தேன். என்னமோ சத்தமெல்லாம் கேட்டது மாதிரி இருந்திச்சி. திடீர்னு காதில 'ஹலோ'ன்னு ஒரு சத்தம் கேட்டுச்சி. நாம ரொம்ப மரியாதைக்காரங்க இல்லியா ...
அதனால நானும் திருப்பி 'ஹலோ' அப்டின்னேன். அந்தப் பக்கம் இருந்து மறுபடி 'ஹலோ' அப்டின்னு சத்தம் வந்திச்சி. நாம மரியாதை கொடுக்கிறதை நிறுத்தலாமோ ... அதனால நானும் மறுபடியும் 'ஹலோ' அப்டின்னு சொன்னேன். 'டொக்' அப்டின்னு சத்தம் வந்திச்சி. பேய்முழி முழிச்சிக்கிட்டு, இருந்தாலும் போனை காதில இருந்து எடுக்காம அப்டியே உறஞ்சு போய் நின்னுக்கிட்டே இருந்தேன். இனிம ஒருவேளை மறுபடி பேசுவாங்கன்னு நினச்சிக்கிட்டு இருந்தேன். ஒண்ணையுமே காணோம்.
என் முழியைப் பாத்து நவநீதன் என் கையில இருந்து போனை வாங்கி காதில வச்சுப் பாத்துட்டு 'கட்' பண்ணிட்டாங்க. ஹலோன்னு சொன்னா நீ உடனே ஏதாவது ட்ரெயின் எப்போ வரும்னு கேக்க வேண்டியதுதானே அப்டின்னான். 'அடப்பாவி, இதையெல்லாம் மொதல்லே சொல்லிக் கொடுத்திருக்கக் கூடாதா; இப்போ சொல்றியே' அப்டின்னு நினச்சுக்கிட்டேன். வேற யார்ட்டயாவது பேசுறியான்னு கேட்டான். 'யார்ட்டயாவது பேசணும்னுதான் ஆசையா இருக்கு; ஆனா யார்ட்ட பேசுறதுன்னு தெரியலையே..' அப்டின்னு மனசுக்குள்ள ஓடுன டயலாக்கை அவனிட்ட எப்படி சொல்றது? அதெல்லாம் வேண்டாம்னுட்டு போன் பண்ற ஆசைய மூட்ட கட்டி வச்சிட்டு வந்ததுதான் என் முதல் போன் காதல்.
இது நடந்து ஏறக்குறைய அரை நூற்றாண்டு ஆகிப் போச்சு. இப்ப என்னடான்னா என் பேரப் பிள்ளைங்க - முளைச்சி மூணு இலை விடலை - போன்ல சர்வ சாதாரணமா பேசுறது மட்டுமில்ல... webcam-ல பாத்துக்கிட்டு, chat-ல audible போட்டு விளையாடுதுங்க. எல்லாம் கலிகாலம்...
*
*
*
*
இது நடந்து ஏறக்குறைய அரை நூற்றாண்டு ஆகிப் போச்சு. இப்ப என்னடான்னா என் பேரப் பிள்ளைங்க - முளைச்சி மூணு இலை விடலை - போன்ல சர்வ சாதாரணமா பேசுறது மட்டுமில்ல... webcam-ல பாத்துக்கிட்டு, chat-ல audible போட்டு விளையாடுதுங்க. எல்லாம் கலிகாலம்...
*
*
*
*
//இது நடந்து ஏறக்குறைய அரை நூற்றாண்டு ஆகிப் போச்சு. இப்ப என்னடான்னா என் பேரப் பிள்ளைங்க - முளைச்சி மூணு இலை விடலை - போன்ல சர்வ சாதாரணமா பேசுறது மட்டுமில்ல... webcam-ல பாத்துக்கிட்டு, chat-ல audible போட்டு விளையாடுதுங்க. எல்லாம் கலிகாலம்...//
ReplyDeleteஇது கலிகாலத்தால் வந்தது இல்லை.எல்லாம் நவீன காலத்தின் கோலங்கள்!
பதிவு போட்டது:
ReplyDeleteஜனவரி 08, 2007 ; கேள்வி பிறந்த நேரம்: 1/08/2007 09:21:00 AM
உங்கள் பின்னூட்டம் வந்தது:
முதல்1/08/2007 09:25:59 AM
அந்தப் பக்கம் பதிவு போட்டுட்டு இந்தப் பக்கம் திரும்பறதுக்குள்ள ஒங்க பின்னூட்டம். கரீட்டா அஞ்சாவது நிமிஷத்தில... !
:(
எல்லாம் கலிகாலம் / நவீன காலத்தின் கோலம்..
ஏங்க இந்த காலத்துப் பசங்க எல்லாம் பயமில்லாம செய்யறாங்க. இதுக்கு ஏன் கலிகாலம் அப்படின்னு அலுத்துக்கறீங்க.
ReplyDeleteகொத்ஸ்,
ReplyDeleteஅய்யய்யோ!! அலுத்துக்கலைங்க...
சந்தோஷம் கலந்த ஆச்சரியம்; ஆச்சரியம் கலந்த சந்தோஷம்.
எங்கள மாதிரி ஆளுகள் இந்த மாதிரி compare and contrast study பண்ணும்போதெல்லாம் வர்ர உணர்ச்சிங்க இது.. அதெல்லாம் உங்களுக்கு இப்ப புரியாது. யோசிச்சி பாருங்க.. நான் 15 வயசில பேந்த பேந்த முழிச்சிக்கிட்டு இருந்த ஒரு விஷயம் இப்போ எவ்வளவு சாதாரண விஷயமா போச்சு அப்டிங்கிற ஆச்சரியம்தாங்க அது.
படித்தேன் ரசித்தேன் சிரித்தேன்.
ReplyDeleteநன்றி செந்தில் குமரன்
ReplyDeleteஹி..ஹி...ம்ம்ம்...ஏதோ கிளுகிளுப்பா சொல்லப்போறீகன்னு நம்ம ப்ளாஷ்பேக்கெல்லாம் ரீவைண்ட் பண்ணி ஒரு மூடோட வந்தேன்....ஹி..ஹி...
ReplyDeleteஇருந்தாலும் பரவாயில்ல...எப்டி திரு திருன்னு முழிச்சிருப்பீகன்னூ புரியுது....எல்லாம் அனுபவம்தான் சாமி...ஹி..ஹி...
பங்ஸ்,[எங்க பசங்க அப்டித்தான் பங்காளிகள அழைக்கிறது வழக்கம் :) கோவிச்ச்சுக்காதீங்க!]
ReplyDelete//நம்ம ப்ளாஷ்பேக்கெல்லாம் ரீவைண்ட் பண்ணி ...//
அத கொஞ்சம் எடுத்து உடுறது..?
உங்க வீட்டுக்கு போவதை பற்றி எழுதி இருப்பது மிகவும் சுவாரசியமாக இருக்கு!!!
ReplyDelete:) காதல்னு பார்த்துட்டு, என்னன்னு பார்க்க ஆவலா வந்தா இப்படிப் பண்ணிட்டீங்களே!! :)
ReplyDeleteஎங்க வீட்ல, நான் பிறந்த கொஞ்ச நாளைக்கெல்லாம் போன் வந்தாச்சு.. போனில் முதல் முதலில் நாங்கள் எடுத்துப் பேசியதெல்லாம் ராங்க் கால்கள் தான் :-D
அப்புறம் ரொம்ப நாள் கழித்து தான் எங்களின் போன் எண்ணை வெளியில் நண்பர்களிடம் கொடுக்க அனுமதியே கிடைத்ததது..
இப்போவெல்லாம் எங்கம்மா "உன் கிட்ட பேசணும்னா இனிமே உன் செல்பேசிக்கு போன் பண்ணனும் போலிருக்கே"ன்னு சொல்ற அளவுக்கு வந்தாச்சு:)
உங்க முதல் போன்.... ரசித்து சிரித்தேன்.
ReplyDeleteதூயா,
ReplyDeleteநீங்க சொன்ன விஷயத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் விஸ்தாரமா ஏற்கெனவே எழுதினதை நம்ம ஆங்கிலப் பதிவில் when i look back .. 6-ம் / 7-ம் பாகத்தில் சீக்கிரம் போடணும்; அங்கேயும் வாங்களேன்.
('நல்லா இருக்குன்னு ஒரு பேச்சுக்கு சொன்னா இப்படியா? எனக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும் ..' - அப்டிங்கிறீங்களா??!!)
பொன்ஸ்,
ReplyDeleteஅடுத்த சந்ததியில - நீங்களும், உங்கள் குழந்தையும் - எப்படி இருக்கும்னு நினைக்கிறீங்க? ஒரு hi-techஆளுங்கிற முறையில் உங்க கற்பனையை வாசிக்க ஆசை..
கலை,
ReplyDeleteநன்றி..
அது வந்து....ஹி..ஹி...பத்து வருசம் முன்னால நம்ம ஹைகமாண்டுக்கு....காஞ்ச மாடு கம்புல விழுந்த கணக்கா பேசினது....ஹி..ஹி....
ReplyDeleteமூனு மாசத்துல டெலிபோனுக்கு 20000 கிட்ட சந்தோசமா அளுதேன்,.....அன்னிக்கு அந்த அமௌண்ட்...ட வெளில சொன்னா மயக்கம் போட்டுவுளுந்துருவாங்க....ஹி..ஹி...அப்ப அது அது பெரிசா தெரியல,....ஹி..ஹி...இப்பவும்ந்தான்....
ஏதோ ஆத்தா மீனாச்சி புண்ணியத்துல அப்டியே ஓடீட்டிருக்கு....
இப்போ அதெல்லாம் நினச்சி, யாரு காலை யாரு வாரிக்கிறீங்க.. ஹை / லோ கமாண்டுல யாரு?
ReplyDeleteஇன்னும் அதே டெம்போலதான் ஓடிட்டு இருக்கு.....என்னத்த சொல்ல ஒரே வீட்ல இருக்கோம்னு பேருதான்...இப்பயும் போன்லதான் நெறய பேசிக்கிற மாதிரி இருக்கு.
ReplyDeleteஇதுவும் நல்லாத்தான் இருக்கு....ஹி..ஹி
பங்ஸ்,
ReplyDeleteபோனிலே பிறந்த,
போனிலே வளர்ந்த
போன் பெருமக்களே!
வாழிய நீவீர்!
வளர்க உங்கள் போன்வழிக் காதல்
என்ன தருமி?உங்கள் முந்தைய பதிவுக்கு 100 மேற்பட்ட பின்னோட்டம்.இதுக்கு இவ்வளவு குறைவாக இருகின்றதே!ஒரு வேளை நான் முதல் ஆளாக மறுமொழி இட்ட காரணமோ என்னமோ.ஹி ஹி.
ReplyDelete//webcam-ல பாத்துக்கிட்டு, chat-ல audible போட்டு விளையாடுதுங்க. எல்லாம் கலிகாலம்...//
இது என்னைச் சொல்வது போல் உள்ளது.படித்தவுடனே என் ஞாபகம்தான் வந்தது.எனக்கு என்று ஒரு கைத்தொலைப்பேசி இருந்தாலும் அது என்னுடைய கடிகாரமாக மட்டும்தான் உள்ளது.மற்றவை எல்லாம் இணையத்தில்.அம்மாவிடம் பேசுவது கூட இணையத்தில் வழியாகதான்.தொலைப்பேசி எல்லாம் கற்காலம்.உங்கள் பதிவைப் பார்த்ததும் எனக்கு என் கணினி காதல் ஞாபகம் வந்துவிட்டது.
துர்கா,
ReplyDelete194 பத்திச் சொல்லீட்டீங்க..187 பாருங்க.. இன்னும் வந்துகிட்டு இருக்கு. என்னதான் இருந்தாலும் இந்தப் பதிவு 'பழைய நினப்புடா பேராண்டி' டைப் தானே. அந்தப் பதிவெல்லாம் கொஞ்சம் சூடானது இல்லையா?!
அப்போ, சீக்கிரம் உங்க கணினி காதல் பற்றி ஒரு பதிவு எதிர்பார்க்கலாமா?
இது கலி காலம் இல்லைங்க...
ReplyDeleteகம்ப்யூட்டர் காலம் :)
இம்சை அரசி,
ReplyDeleteஉங்கள் மாதிரி சின்னப் புள்ளைங்க கம்ப்யூட்டர் காலம்னு சொல்லிக்கங்க; என்ன மாதிரி வயசான ஆன்மீக வாதிகள் கலிகாலம்னு சொல்லிக்குறோம். என்ன சரிதானா..?
after all, what is in name?! :)
//அப்போ, சீக்கிரம் உங்க கணினி காதல் பற்றி ஒரு பதிவு எதிர்பார்க்கலாமா?//
ReplyDeleteநேரம் இருந்தால் என் பதிவை எட்டி பாருங்கள்....எழுதி இருப்பேன்!
எங்க வீட்டு பெருசுகளும் "ஆகட்டும் , பார்க்கலாம்" கேசுகதான்
ReplyDeleteநல்ல இருந்துச்சு தருமி அய்யா
தருமி ஐயா,
ReplyDeleteநல்ல சுவாரசியமான பதிவு.
செந்தில்,
ReplyDeleteவெற்றி
..........நன்றி
//தூயா,
ReplyDeleteநீங்க சொன்ன விஷயத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் விஸ்தாரமா ஏற்கெனவே எழுதினதை நம்ம ஆங்கிலப் பதிவில் when i look back .. 6-ம் / 7-ம் பாகத்தில் சீக்கிரம் போடணும்; அங்கேயும் வாங்களேன்.
('நல்லா இருக்குன்னு ஒரு பேச்சுக்கு சொன்னா இப்படியா? எனக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும் ..' - அப்டிங்கிறீங்களா??!!)//
அதற்கென்ன...வந்தால் போயிற்று..:) எழுதிட்டிங்களா?
thalaipai parthu konjam payanthidan..aiyaku innum luvusu kurayalaya endu :-)
ReplyDeletenalama tharumi aiya?enai gpagam iruka?? Usham madam marnthidangalo theriyalai oruka avanga veedu pakamum pokanum enavo kelvi vidai endu kondu irukira ondume puriyalai.
\\முளைச்சி மூணு இலை விடலை - \\ unmya ithuku enna artham?? akkada pilakala parthu nane apidi soli irukiran aanal artham theriyaathu.
thalaipai parthu konjam payanthidan..aiyaku innum luvusu kurayalaya endu :-)
ReplyDeletenalama tharumi aiya?enai gpagam iruka?? Usham madam marnthidangalo theriyalai oruka avanga veedu pakamum pokanum enavo kelvi vidai endu kondu irukira ondume puriyalai.
\\முளைச்சி மூணு இலை விடலை - \\ unmya ithuku enna artham?? akkada pilakala parthu nane apidi soli irukiran aanal artham theriyaathu.
thalaipai parthu konjam payanthidan..aiyaku innum luvusu kurayalaya endu :-)
ReplyDeletenalama tharumi aiya?enai gpagam iruka?? Usham madam marnthidangalo theriyalai oruka avanga veedu pakamum pokanum enavo kelvi vidai endu kondu irukira ondume puriyalai.
\\முளைச்சி மூணு இலை விடலை - \\ unmya ithuku enna artham?? akkada pilakala parthu nane apidi soli irukiran aanal artham theriyaathu.