Tuesday, December 26, 2006

194. LET'S HIT THE NAIL....***

*


*


Let's hit the nail....
right on its head !


No..no..

Let us hit the nailS
right on their headS



*

'I believe that there will ultimately be a clash between the oppressed and those that do the oppressing. I believe that there will be a clash between those who want freedom, justice and equality for everyone and those who want to continue the systems of exploitation'
-Malcolm X-


*

பார்ப்பனீயமே இன்றுள்ள சாதீயக் கொடுமைகளுக்கு அடிமைத்தளம் அமைத்துக் கொடுத்த சனாதன தர்மத்தை அன்றிலிருந்து இன்றுவரையும் கட்டிக் காத்து, நிலைத்து நிற்க வைத்துள்ளது என்பது ஒரு வரலாற்று உண்மை. கல்வியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முதலிடத்தைத் தங்களுக்கென்றே வைத்துக் கொண்டு அக்கல்வியால் சமூகத்தில் ஓர் உயர்ந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்கள் என்பதும் ஒரு மறுக்க முடியா உண்மை.

சுதந்திரத்திற்குப் பின் ஏற்பட்ட சமூக மாற்றங்களினாலும், ஓரளவு சமூகத்தில் ஏற்பட்ட விழிப்புணர்வுகளாலும் தங்கள் வெளிப்படையான (overt) அடக்கு முறைகளை விடுத்து, புதிய வியூகம் வகுத்து தங்கள் சமூக உயர் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் எடுத்த புது முயற்சிகள் அவர்களைப் பொறுத்தவரையில் சரியானதே. அரசாங்க வேலைகள் என்பதிலிருந்து ஆசிரியர், வழக்கறிஞர்கள் என்று பெருவாரியாக இருந்த இந்த சமூகத்தினரின் அடுத்த குறி மருத்துவர்கள் என்று ஆகி, பின் ஆடிட்டிங், வங்கி வேலைகள் என்று மாறி, பெரும் வியாபரங்களில் தொடர்ந்து, ஆடல் பாடல் என்றிருந்து, இன்று மென் பொருளாளர்களாகவும் நிரந்து நிறைந்து இருப்பது அவர்களது flexibility - கால மாற்றங்களுக்கேற்ப தங்கள் வாழ்க்கை முறையை மாற்றி எப்போதும் தங்கள் முன்னிலையை தக்க வைத்துக் கொள்ளும் திறமைக்குச் சான்றுகளாகும். அவர்களைப் பொறுத்தவரை இதைத் தவறென்று கூற இயலாதுதான். ஏற்கெனவே கிடைத்த கல்வியறிவால் இந்த தகவமைப்பை (adaptability) பெற்று தங்கள் சமூகத் தரத்தைக் காப்பாற்றிக் கொண்டுள்ளதைப் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

ஆனால், அன்று அப்படி இருந்தவர்கள் இன்றும் AIMS- களில் IIT- களில் மற்றவர் வந்து விடக்கூடாதென்பதில் மிகத்தீவிர மனப்பான்மையோடும், UPSC தேர்வுகளில் தங்கள் சாதிக்கு வழக்கமாகக் கிடைத்து வரும் விழுக்காடு விழுந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் காட்டும் அதி அக்கறையும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். மீடியாக்களின் ஆளுமையை முழுவதுமாகக் கைக்குள் வைத்துக் கொண்டு சமூக அளவு கோல்களையும், மொத்த சமூகத்திற்கான கருத்துப் படிமானங்களையும் வகுக்கும் அவர்களது திறமை எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

NAIL: 1

இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியதே இப்போதைய கால கட்டத்தில் மிக மிக அவசியமாகிறது. ஆனால் இது தெருவில் நடக்கும் சண்டையல்ல. இதனை எதிர்கொள்ள வேண்டிய இடமும், முறையும் முழுமையாக வேறு. பாராளுமன்றங்களிலும், நீதிமன்றங்களிலும், இன்னும் வேகமாக வெகுசன ஊடகங்களிலும் செய்ய வேண்டியவை நம்முன் மலையென நிற்கின்றன.

ஆனால் இதை விட்டு விட்டு இன்று நடக்கும் சாதீய பூசல்கள் எல்லாவற்றிற்கும் காரணம் என்று அச்சாதியினரைக் கை காண்பிப்பதும், அதற்காக அவர்களைச் சாடுவதும் எந்த அளவு சரியாக இருக்கும்? தலித்துகளுக்குக் கிடைக்க வேண்டியவைகள் இன்னும் அவர்களைப் போய் சேருவதில்லை. அரசு தரும் உதவிகளைப் பற்றிய அறிவும், புரிதலும் இல்லாத தலித் மக்களையே நாம் காண்கிறோம். அதோடு அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளோ சொல்லி மாளாதவை.

சமீபத்தில் மகாராட்டியத்தில் கலியாஞ்சியில் நடந்த கொலைவெறியாட்டங்கள், பீகாரில் செத்த பசுவின் தோலையுரித்ததற்காகக் கொல்லப்பட்ட நான்கு தலித் இளைஞர்கள், நம்ம ஊரில் நடந்த திண்ணியம், வெண்மணி வெறியாட்டங்கள், அவ்வளவு ஏன் 10 ஆண்டுகளாக தலித்கள் என்பதாலேயே பஞ்சாயத்துத் தலைவர்களாக அவர்களை வரவிடாதிருக்க வைத்த அரசியல் விளையாட்டுக்கள் - இவை
எல்லாவற்றிற்குமா பார்ப்பனீயத்தையும், அந்த சாதிக்காரர்களையும் காரணம் காட்டிக் கொண்டிருக்கப்
போகிறோம். That will be absolutely like whipping the wrong horse.
அவர்கள் ஆதி காரண கர்த்தாக்கள் என்றே வைத்துக் கொண்டாலும் இன்னும் எத்தனைக் காலத்திற்கு அந்த வரலாற்றுக் காரணத்தை மட்டும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்? இதனால் ஏற்படுவது இன்னொரு மிகப்பெரிய தவறான பின் விளைவு: பார்ப்பனீயத்தைத் திட்டிக் கொண்டே, இன்று அதைவிடவும் கீழ்த்தரமாகவும், கொடூரமாகவும் தலித்துகளை சிறுமைப்படுத்துவதும், கொடுமைப் படுத்துவதும் மற்ற 'நடு' சாதியினர் என்பதே மறைந்து விடுகிறது; மறைக்கப்பட்டு விடுகிறது. முன்பே ஒரு பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளேன்.

கல்லெறியும், கண்டனமும் வேறு சாதியினர் மேல்தான் விழும் என்பதாலோ என்னவோ, இந்த நடு சாதியினர் தலித்துகளை இன்றும் மிகக் கடுமையாக நடத்தி வருவதே கண்கூடு. செய்வதைச் செய்து விட்டு, கூட்டத்தோடு கூட்டமாக உயர்த்திக் கொண்டவர்களைத் தாக்கி அவர்களும் எல்லோருடன் சேர்ந்து கோஷங்கள் போடுவதாகத்தான் தெரிகிறது! அதோடு நான் எனது அந்த முந்தியப் பதிவில் சொன்னது போல, எப்போதுமே ஓட்டப்பந்தயத்தில் போட்டியின் கடுமை அடுத்தடுத்து ஓடுபவர்களுக்கு நடுவில்தான். தன்னைவிட தாழ்ந்தேயிருந்த 'இவர்கள்' தங்களைத் தாண்டிவிடுவார்களோ, தாண்டுகிறார்களோ, தாண்டிவிட்டார்களோ என்ற அச்சம் காரணமாகவே இந்தப் போராட்டம். Hierarchy-ல் அடுத்தடுத்த நிலையில் உள்ளோருக்குள் ஏற்படும் பொறாமையின் விளைவே இது. இந்த மனப்பான்மைதான் இந்த 'நடு' சாதியினரை தலித்துகளைப் போட்டி மனப்பான்மையோடும், அதனால் விளைந்த பொறாமைக் கண்ணோட்டத்தோடும் பார்க்க வைக்கிறது. இதன் விளைவுகளாகவே தலித்துகளின் மேல் நடக்கும் வன்முறைகளை நான் காண்கிறேன்.

உயர்த்திக் கொண்டவர்கள் 'தங்கள் வேலையைப்' பார்த்துக் கொண்டு போய்க் கொண்டிருக்க,
மற்ற சாதிக்காரர்கள் தங்களுக்குள் பொறாமை கொண்டு, பொருது கொண்டு ஒவ்வொருவரும் தங்கள்
தங்கள் சமூக நிலைக்குக் கீழேயுள்ளவர்களை நோக்கி தங்கள் வன்மத்தைக் காண்பித்துக் கொண்டிருப்பதும்தான் இன்றைய நிலை.

இந்த நிலையில் இந்தக் கீழ்த்தரச் செயல்களுக்கு மூவாயிர, நான்காயிர ஆண்டு வரலாற்றைச் சொல்லி அந்த உயர்த்திக் கொண்டவர்களையே சாடிக்கொண்டிருப்பதை விடவும், இன்றைய தேவை யார் ஒரு கொடுமையைத் தலித்துகளுக்கு எதிராகச் செய்கிறார்களோ அவர்களைப் "பெயரிட்டு", அவர்களைத் தோலுரித்துக் காட்ட வேண்டும். நமது மீடியாக்களிலும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் நடக்கும்போது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்களைப் பற்றிய விவரங்கள் வெளியே தெரியாதபடி 'பாதுகாத்து' விடுகிறார்கள். நம் சமூகத்தின் உண்மை முகங்கள் நமக்கே தெரியாமல் போய்விடுகின்றன. மீடியாக்களில் தலித்துகளின் மீது "caste hindus" / "ஜாதி இந்துக்களின்" வெறியாட்டம் என்றுதான் வரும். (அப்படியானால், தலித்துகள் என்ன சாதியில்லா இந்துக்களா? அல்லது அவர்கள் இந்துக்களே இல்லையா? இரண்டாவதுதான் சரியென்பது என் எண்ணம்.) யார் இந்த "caste hindus" / "ஜாதி இந்துக்கள்" என்று யாருக்கும் தெரியாமலே போய்விடுகிறது. இது போன்ற தவறு செய்தவர்களே இன்னொரு
இடத்தில் மனித உரிமை, தலித்துகளின் தளையறுப்பு, சாதி வெறிக்கு எதிர்ப்பு - என்று பல வெத்துக் கோஷங்களைப் போட்டுக்கொண்டு உத்தமர்களாக வேடமிட அனுமதிக்கக் கூடாது. குற்றம் செய்தவர்களின் சாதிய முகத்திரைகள் கிழிக்கப்பட்டு அவர்களின் நிஜ முகங்களை எல்லோருக்கும் காட்ட வேண்டும்.

NAIL: 2

'குற்றமே செய்யாதவன் முதல் கல்லை எறியட்டும்' என்ற கதை போலல்லாமல் இனியாவது குற்றம் செய்தவர்களை வெளியே சமூகத்திற்குத் தெரியும்படி கொண்டுவர வேண்டுவது அவசியம். குற்றம் செய்தவர்களைச் சமூகத்தின் முன் காண்பிப்பதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாகவேனும் குற்றம் புரியும் சாதிக்காரர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள முன்வர மாட்டார்களா? அந்தச் சாதி அமைப்பிலே உள்ள சிலரேனும் மனசாட்சியின் உறுத்தலால் தங்கள் மற்ற சாதிக்காரர்கள் வரம்பு மீறுவதை கண்டித்து அவர்களை மாற்ற முயலமாட்டார்களா? பல ஆண்டுகளாக பாப்பாபட்டி இன்னும் மற்ற இடங்களில் பஞ்சாயத்துத் தேர்தலே நடக்க விடாமல் செய்து வந்தும் அந்த கிராமங்களில் 'பெரும்பான்மை சாதி'யினரின் எதிர்ப்பு என்றே எழுதி வந்தனர். இப்போதுதான் ஓரிரு ஆண்டுகளாக கள்ளர் இன மக்களே இதற்குக் காரணம் என்பது வெளிப்படையாகப் பேசவும், எழுதப்படவும் செய்யப்பட்டது.இப்போது நடந்த மாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணியாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்றே தோன்றுகிறது.

இப்படி சாதியைக் குறிப்பிட்டுப் பேசுவதால் ஒரு சில விருப்பமில்லா பின் விளைவுகளும் ஏற்படலாம். ஆயினும் இதைச் செய்தே ஆக வேண்டும்; அதுவே குற்றமிழைப்பவர்களை ஓரளவேனும் கட்டுக்குள் கொண்டு வரும்.

சாதிகளை நம் சமூகத்திலிருந்து ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. நம் சமுதாயத்தின் நீண்டு, நிலைபெற்ற களங்கமாக இன்னும் எத்தனை எத்தனை காலம் இருக்கப் போகிறதோ..? ஆகவே, சாதீய வேறு பாடுகளைக் களைய நினைப்பவர்கள் செய்ய வேண்டியவைகளில் முன்னால் நிற்பது இரு வேறு பட்ட நிலைக் களன்கள். ஒன்றில், ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டியவைகளை யாரும் நிறுத்தவோ, தடுக்கவோ விடாதபடி கண்காணிக்க வேண்டும்; இன்னொன்று, அவர்களைக் கீழ்படுத்திச் சிறுமைபடுத்தும், கொடுமை படுத்தும் மற்ற சாதியினரிடமிருந்தும் காக்க வேண்டும். இருமுனைப் போராட்டம் இது. இதில் இரண்டு பட்ட பார்வை தேவை. ஒன்றின் மீது மட்டும் "கண் வைத்து" மற்றொன்றை கண்டு கொள்ளாமல் செல்வதும் தவறாகப் போய்விடும். முதலாவதற்கு வார்த்தைகளும் வம்புகளும் தேவையில்லை; 'சத்தமில்லாமல்' நடந்தேறும் காரியங்களைக் கவனித்து எதிர்வினைகளை முறையாக ஆற்ற வேண்டிய தேவை அதிகம். இரண்டாமாவதில்தான் எழுத்துக்களுக்குப் பயன் இருக்கும்.

NAIL: 3

இதையெல்லாம் விடவும் தலித்துகள் தங்களுக்குள் உயர்வு தாழ்வு சொல்லி ஒற்றுமையின்றி இருக்கும் வரை அவர்களின் முயற்சிகள் எந்தப் பயனுமில்லாமல்தான் இருக்கும். அவர்கள் முதலில் தங்கள் 'வீட்டைச்' சீர்செய்து கொண்டு ஒரே முனைப்போடு தங்கள் உயர்வுக்காகப் போராடினாலே அதில் அர்த்தமும் இருக்கும்; பலனும் இருக்கும். அவர்களுக்காக மற்றவர்கள் போராடுவது என்ற நிலை மாறி, தாங்கள் எழ வேண்டும் என்ற தீவிரம் அவர்கள் மனத்தில் எழவேண்டும். அவர்களை ஒன்றுபட்டு எழ வைப்பதற்கு அவர்கள் மனத்தில் அந்த அக்கினிக் குஞ்சு எப்போது விழுமோ ...?


*
டிசம்பர் 26, 2006-ல் பதிவு செய்து. இன்று (08.01.2007 நேரம்: இரவு 9.40) 86 பின்னூட்டங்களுக்குப் பிறகு இப்பதிவைப் பொருத்தவரை என் ஏமாற்றத்தை ஒரு பின் குறிப்பாக சேர்க்கிறேன்.

இப்பதிவில் என் நோக்கம் நாமெல்லோருமே ஏதோ ஒரு வகையில் சாதிப்பிரச்சனைகளுக்குக் காரணமாயுள்ளோம். அதில் தீர்வு காண முதலில் நாம் செய்த, செய்யும் தவறுகளைக் கண்டு பிடித்து அவைகளை நிறுத்தும்வரை, திருத்தும் வரை விடிவில்லை என்பதால் சாதிய மூன்று படிநிலையைச் சார்ந்தவர்கள் முன்னால் உள்ளவைகளாக நான் நினைத்தவைகளை இங்கு பதிந்தேன். அதிலும் இரண்டாம் நிலை பற்றிய செய்திக்கு முக்கியத்துவம் தரப்பட
வேண்டும் என் நினைத்தேன்.

ஆனால், முதல் பிரிவினரைப் பற்றிய என் இரு பகுதிகளில் வரலாற்று உண்மைகள் என நான் நினைக்கும் முதல் பகுதி மட்டுமே விவாதப் பொருளாகப் பார்க்கப்பட்டு அதனையொட்டிய பின்னூட்டங்களே நிறைய வந்துள்ளன. ஆச்சரியமாயிருக்கிறது.

ஏறத்தாழ இரண்டாம் மூன்றாம் ஆணிப் பகுதிகள் பற்றி பேச ஆளே காணோம். இதுவும் ஆச்சரியமும், வருத்தமுமாயிருக்கிறது.

விடியலுக்கு இன்னும் நெடுங்காலம் காத்திருக்க வேண்டும் என்றுதான் தெரிகிறது.


*

***இப்பதிவு 01.01.2007 பூங்கா இதழில் இடம் பெற்றுள்ளது. (7)

*


*

104 comments:

  1. தீண்டாமை கொடுமை செய்வது ஆதிக்க சக்திகளிலிடமிருந்து ஜாதி இந்துக்களுக்கு சென்றுவிட்டதை தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்.

    இதில் கொடுமை என்னவென்றால் தாழ்த்தப்பட்ட இனத்தில் உள்ளவர்களே இன்னொரு தாழ்த்தப்பட்ட இனத்தை அதையே சொல்லி தாழ்த்துவதுதான்.

    பறையர் / பள்ளர் இவர்களுக்குள்ளும் ஏற்றத்தாழ்வை இவர்களே பார்பதுதான் சாதீயத்தின் கோரமுகம்.

    ReplyDelete
  2. தருமிசார்,

    சனாதன தர்மம் அடிமைத்தளம் அமைத்துத் தரவில்லை. அதன் போர்வையிலான திறன் குன்றிய, சுயநல அரசர்கள், அவர்களை வழிநடத்திய ஆலோசகர்கள் என்று இருந்த தனி மனிதர்களின் தவறுதலான "இன்டர்ப்ரட்டேஷன்"களால்சனாதன தர்மம் என்கிற வாழ்வியல் முறை மீது தொடர்ந்து சேறடிக்கப் படுகிறது!

    கண்முன்னே சமகாலத்தில் பகுத்தறிவுப் போர்வையில் பொதுஅறிவுகூட இல்லாமல் செயல்படுகின்றதைப் பார்க்கக் கொள்கைத் தேய்மானத்தின் தீவிரம் கிடைக்கிறது!

    இது எளிய ஒப்பீடுதான் இதனால் சனாதன தர்மமும் அரசியல் பகுத்தறிவும் சமம் எனச் சொல்லவில்லை :-)))) :-)))

    நேரடியாகத் தவறிழைக்கும் பிரிவினரை, சமூகத்த்தினைச் சுட்டி விமர்சிப்பது என்பது மிக அவசியமானது.

    மஹாராஷ்டிராவில் பைய்யாலால் குடும்பத்தினர்க்கு நடந்த கேவலமான், கொடூரமான, மிருகத்தினும் கீழான, மனிதன் வெட்கப்படும் நாகரீகமான செய்கைகள் ஏதாவது ஒரு போர்வை போர்த்தியபடி தப்பிச் செல்வது நேரடியாகச் சுட்டப்படும் போது, விமர்சனப் படுத்தப்படும் போது எதிர்ப்பு முதலில் வந்தாலும் மாற்றம் அதனை அடுத்து வரும்.

    இந்தியசமூகத்தின் குறைகளை இந்தியராகச் சுயமாக விமர்சித்து, சரி செய்து ஆக்கமாக முன்னேற வேண்டும். அந்த வகையில் முதலில் இம்மாதிரி கேவலமான சமூக நிகழ்வுகளுக்கு முதல் தீவிர எதிர்ப்பு அது சரியாகும் வரையில் வீரியமாகத் தொடர்ந்து காட்டப்படவேண்டும்!

    ReplyDelete
  3. தருமி அய்யா,
    மிகத் தெளிவான சிந்தணை.நன்றி.
    லியோ சுரேஷ்
    துபாய்

    ReplyDelete
  4. //
    நமது மீடியாக்களிலும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் நடக்கும்போது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்களைப் பற்றிய விவரங்கள் வெளியே தெரியாதபடி 'பாதுகாத்து' விடுகிறார்கள். நம் சமூகத்தின் உண்மை முகங்கள் நமக்கே தெரியாமல் போய்விடுகின்றன.
    //

    என்ன இப்படி political correctness ஐ தப்பு என்கிறீர்கள் ?

    தேவர் சாதி சக்கிலியனை தாக்கினால் ஊடகத்தில் நாம் படிப்பது கிராமத்து "மேல் சாதி" யினர் "கீழ் சாதி"யினரைத் தாக்கினர் என்பதே !

    இது தான் political correctness. இது தெரியாமல் எந்த nail ஐ எங்கே hit பண்ணப்போகிறீர்கள். :D

    Truth is Political correctness in any denomination is killing all of us from within.

    Lets hit the nail first on Politically correct ba*ds' head.

    Call their bluff wherever they are. Decry them, reject their philosophy in totem.

    ReplyDelete
  5. //
    NAIL: 1
    //

    மேலே சுட்டியுள்ள இந்த வாசகத்திற்கு "மேலே" (literally above this word) நீங்கள் எழுதியது அனைத்தும் 1:1 equality ல் இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன் ஜெர்மனியில் அதி தீவிரமாகவும் வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளில் வெவ்வேறு தீவிரத்துடனும் யூதர்களுக்கு எதிரான துண்டுப் பிரச்சாரத்தின் சாரத்தை ஒத்துள்ளது என்பதைச் சுட்டாமல் இருக்க முடியவில்லை. அதில் எவ்வளவு உண்மை இருந்ததாக நீங்கள் நம்புகின்றீர்களோ அத்தனை உண்மை தான் நீங்கள் எழுதியதிலும் உள்ளது.

    ReplyDelete
  6. தருமி, ஏறக்குறைய இதே கருத்தை வலியுருத்தி நான் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். பாலபாரதியின் 'மூன்று சதவீத எச்சில்' என்ற பதிவுக்கு பதிலாக 'ஐம்பது சதவீத எச்சில்' என்று எழுதியிருந்தேன். அப்பதிவின் பின்னூட்டமொன்றில் அம்பத்துமூன்று சதவீத எச்சில் என்று சொல்வது சரியாக இருக்கும் என்றும் எழுதியிருக்கிறேன்.

    உங்களுடைய இந்தப் பதிவின் நோக்கத்தை ஆதரிக்கிறேன்.

    பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  7. The opposition to reservation in IITs etc is justified as reservations based soley on caste
    violate norms of equality.Even Moily committee concedes that
    only the cream from OBCs will corner majority of the seats if
    reservation is brought in.Your hatred for some castes is again
    evident in this post.In a society where there is more than one source of deprivation and unequal access an affirmative action taking into account gender, economic factors besides caste
    while eliminating the creamy layer
    from OBCs will be a better solution
    than the present one.But as it affects the interests of the rich and powerful OBCs it is being opposed.You may shed crocodile tears for dalits but i wont be
    fooled by it.Because you are against hegemony per se but against what you think as
    hegemony by some castes.

    ReplyDelete
  8. மதுரையில் கேள்வி கேட்ட ஒர் ஏழைப் பிராமணன் பெயரை வைத்துக் கொண்டிருக்கும் தருமி அவர்களே,

    பிராமணனைப் பேயாகச் சித்தரித்து சாதிக் கொடுமைகளுக்கு எல்லாம் அவனே காரணம் என்றூ கூறும் போக்கு கடந்த 150 ஆண்டுகளில் கிறித்தவப் பாதிரிகளும், மெக்காலேயும் கட்டவிழ்த்துவிட்ட உள்நோக்கம் கொண்ட வரலாற்றின் விளைவே ஆகும். பிரான்சிஸ் சேவியர், கால்டுவெல் போன்றவர்கள் இந்து மதத்தை ஒழிக்க இது ஒரு முக்கியமான ஆயுதம் என்று குறிப்பிட்டதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. தமிழகத்தில், இது வெள்ளாள அறிஞர்களால் இன்னும் தீவிரமாகப் பிரசாரம் செய்யப் பட்டது. அவ்வளவே. திண்ணையில் பிரகஸ்பதி, ப்ரவாஹன் கட்டுரைகளில் இந்த விவரங்கள் கிடைக்கும்.

    பிராமணன் மீது தவறு இல்லை என்று சொல்லவில்லை. வரலாற்று அளவில் எல்லா உயர் சாதிகளுக்கும் அந்தத் தவறில் சம பங்கு உண்டு.

    அதனால் nail 1 பகுதியில் நீங்கள் எழுதியது சரியல்ல.

    அடையாளம் காட்ட வேண்டும் என்றூ நீங்கள் சொல்லியிருப்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இது பொதுப்படுத்துதலும், துவேஷத்தைப் பரப்பவும் செய்யாமல் மிகவும் கவனமுடன் செய்யப் படவேண்டும். பிரசினையின் ஆணிவேரைத் தெரிந்து கொண்டால் தான் அதை ஒழிக்க முடியும் (உ-ம்: ஜிகாத் தீவிரவாதத்தின் வேர் இஸ்லாமில் உள்ள சில வன்முறைக் கருத்துக்கள் என்பது போல)

    தலித்துக்கள் இந்துக்களே. அவர்களது சமய நம்பிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்ட "பாகன்" தன்மை இந்து மதத்திற்கே உள்ளது. இந்த உணர்ச்சி வலுப்பட்டால் சமய ஒருமையைக் காரணம் காட்டி சாதிகளுக்குள் உள்ள பிரிவினைப் புத்தியைக் குறைக்க முடியும்.

    ReplyDelete
  9. நீங்கள் சொல்வதில் பாதி ஒத்துக் கொள்கிறேன் பாதி ஒத்துக் கொள்ளவில்லை.

    போடா ஜாட்டான்னு முன்னேறிக் கொண்டே இருப்பான் என்று ஒரு பதிவர் எழுதிய வரைக்கும் எனக்கும் குறிப்பிட்ட சிலரைக்(குறிப்பிட்ட பிரிவினர் அல்ல குறிப்பிட்ட சிலர்) கண்டு அலர்ஜி ஏற்படவில்லை.

    இது போன்ற சொல்லாடல்கள் இந்த சிலர் இன்னும் பிரம்மா வழித் தோற்றத்தையே நம்புகிறார்கள் இல்லை மற்றவர் நம்ப வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. இன்னும் சொல்வதென்றால் இது எல்லோருடைய ஈகோவையும் புண்படுத்துவது போல இருக்கிறது.

    இன்று ஒரு குறிப்பிட்ட ஜாதியை எதிர்க்கும் பலரே தங்களுடைய ஜாதியைப் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது, அந்த குறிப்பிட்ட சிலரின் ஜாதி வெறி கேள்விக்குறிக்குள்ளாக்கப் படாதது கவலைக்குறியது. நீ என்ன ஜாதி வேணுமென்னாலும் endorse பண்ணிக்கோ ஆனா இன்னொரு ஜாதியை எதிர்த்திட்டீன்னா ஓகே என்பது போல இருப்பது மிக மிக கவலைக்குறிய விஷயம்.

    ஆனால் இப்படிப்பட்டவர்கள் கவனிக்கப் படாததர்க்கு காரணம் அந்த குறிப்பிட்ட பிரிவினர் அந்த அளவு தன்னுடைய ஜாதியை endorse செய்து நான் அப்படித்தான் இருப்பேன் என்று எதோ அந்தப் பிரிவினர் தங்களுடைய பிரிவினருக்கு சூப்பர் பவர் இருப்பது போல பேசிக் கொண்டிருப்பது தான்.

    இன்று இப்படி பேசிக் கொண்டிருக்கும் அனைவரிடத்திலும் சொல்லிக் கொள்ள விரும்புவது சினிமாவில் நடப்பது போல குழந்தை மாறிப் போய் நீங்கள் ஒரு மலம் அள்ளும் குடும்பத்தில் போயிருந்தால் நீங்கள் இன்று இருக்கும் நிலையில் இருக்க மாட்டீர்கள். நீங்கள் இன்று இப்படி இருப்பதற்கு காரணம் உங்கள் சோசியல் அமைப்பு தான் காரணம் வேறு ஒன்றும் இல்லை. அந்த சோசியல் அமைப்பு குறிப்பிட்ட சிலரை மலம் அள்ளுவதற்காக மட்டுமே ஒதுக்கி வைத்ததால் தான் அமைந்தது என்பதையும் உணருங்கள். அதற்கு காரணம் பல வகைகளில் நீங்கள் தான் என்பதையும் உணருங்கள், ஆகையால் இது பற்றி பெருமைப்படாதீர்கள் சிறுமைதான் கொள்ள வேண்டும்.

    இதில் இருக்கும் உண்மையை உணர்ந்து கொள்ளும் தன்மை இந்த குறிப்பிட்ட சிலருக்கு இல்லவே இல்லை. இப்படி பேசுபவர்களை எப்படி தூக்குக்கு அனுப்பலாம் என்று தான் யோசிக்கிறார்கள்.

    மேலும் இந்த குறிப்பிட்ட சிலர் முன்பு இருந்ததைப் போலவே ஆதிக்கம் பெற கையில் இன்னும் ஒரு மிக மிகக் கொடிய ஆயுதத்தை எடுத்திருக்கிறார்கள். அதுதான் மத துவேஷங்களை பரப்புவது. மக்களுக்கு மத துவேஷங்களை ஊட்டி, நெருப்பு மூட்டி ஊரைக் கொளுத்தி அதில் குளிர் காயலாம் என்று நினைக்கிறார்கள்.

    நரேந்திர மோடி, பால் தாக்கரே போன்றவர்கள் அப்படமாக மத துவேஷங்களை தூண்டி விட்டு ஆட்சியைப் பிடிப்பது எல்லாம் எவ்வளவு மோசமான trend. உண்மையில் இவர்களுக்கு இந்து மதம் பற்றி எல்லாம் கவலை இருக்கிறதா? இந்தியக் கலாச்சாரம் பற்றிக் கவலை இருக்கிறதா? அதெல்லாம் ஒன்றும் இல்லை இவர்களுக்கு basic ஒன்றுதான் ஆதிக்க வெறி.

    ஊர் ரெண்டு பட்டால் யாருக்கு கொண்டாட்டமோ தெரியாது இவர்கள் கண்டிப்பாக கொண்டாடுகிறார்கள்.

    மேலும் சிலர் சாத்தானின் சொற்களை வேதம் என்று சொல்லி இன்னும் அது எதோ பெருமைக்குறியது என்பது போல மக்களை ஏமாற்றித் திரிகிறார்கள். இதுவும் ஒரு மோசமான ஒரு மனப்பான்மையே.

    என்னைப் பொறுத்த வரை துன்பப்படாதே துன்புறாதே என்பது தான் என் சிறிய மோட்டோ. ஆனால் பலருக்கும் பல வகைகளில் துன்பம் விளைவிக்கும் செயல்களில் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது உண்மை.

    நான் குறிப்பிட்டுள்ள சிலரில் ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் இல்லை ஆனால் அவர்களே அதிகமாக இருக்கிறார்கள்.

    தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி என்று யார் மீதும் இருந்ததில்லை. இதை எல்லாம் ஒரு observer என்ற முறையில் கவனித்து எழுதி இருக்கிறேன்.

    இப்படி எல்லாம் சொல்லி விட்டு நீங்கள் சொல்லும் இன்னொரு பாயிண்டை என்னால் ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

    இன்று ஒடுக்கப் படுத்துபவர்களுக்கு கிடைக்கும் உதவிகளை அவர்களுக்கு சென்று சேர்ப்பது என்பது பின் தள்ளப் பட்டு எதிர்ப்பு என்பதுதான் முன் நிறுத்தப் படுகிறது. இது அரசியலால் ஏற்படுகிறது என்றே நினைக்கிறேன். அரசியலுக்கு எதிர்ப்பு உதவுவது போல உதவி செய்வது உதவுவதில்லை.

    நீங்கள் சொல்லி இருப்பது போல இதில் உண்மையாக செயல் பட வேண்டும் என்று நினைப்பவர்கள் செய்ய வேண்டியது எதிர்ப்பை குறைத்து உதவி சரியாக போய் சேர வழி செய்ய வேண்டும்.

    இந்தப் பாதையில் செல்வது தான் சரியானது.

    மற்றொன்று ஆதிக்க வெறியால் தூண்டி விடப் படும் மத துவேஷங்களை சரியாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

    இதில் இன்னொரு வேதனையான விஷயம் இந்து மதத்தை எதிர்க்கிறோம் என்று முஸ்லீம் மதம் கிறிஸ்துவம் போன்றவற்றை ஆதரிப்பது தான். இதுவும் மிக ஆபத்தானது என்பதை உணர வேண்டும்.

    தோன்றியதை அப்படியே அடித்ததால் எண்ணங்கள் கோர்வையாக இல்லாது போகலாம்.

    :-))).

    ReplyDelete
  10. இந்தப் பதிவுடன் பெரும்பாலும் உடன்படுகிறேன். சரியாகவே ஆணி அறைந்துள்ளீர்கள்.

    //சாதீய வேறு பாடுகளைக் களைய நினைப்பவர்கள் செய்ய வேண்டியவைகளில் முன்னால் நிற்பது இரு வேறு பட்ட நிலைக் களன்கள்.<.....>ஒன்றின் மீது மட்டும் "கண் வைத்து" மற்றொன்றை கண்டு கொள்ளாமல் செல்வதும் தவறாகப் போய்விடும்.//

    மிகச்சரியாகச் சொன்னீர்கள். ஆனால் மூன்றாவதாக ஒன்றைத் தெரிந்தும் தற்காலிகமாக இங்கு விட்டு விட்டீர்கள என நினைக்கிறேன். அதற்கான காரணத்தையும் "சாதிகளை நம் சமூகத்திலிருந்து ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை" என்ற வரியில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் "வர்ணாசிரமச் சாதியப் பிரிவினைக்கு" இன்னமும் வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் பார்ப்பனிய அறிவு ஜீவிகளை கருத்துத் தளத்தில் எதிர்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். அதீர்ஷ்டவசமாக இவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். சோ இராமசாமி, ஜெயகாந்தன் போன்றவர்கள் மற்றும் வலைப்பதிவர்களில் சிலரைத் தான் குறிப்பிடுகிறேன். சாதியை விமர்சனம் பண்ணக் கூடாது என்பதையே நடுனிலைக் கொள்கையாக இந்த அறிவுஜீவிகள் சொல்லித் திரிகின்றனர். உங்களைப் பற்றிக் கூட முன்பு ஒரு பதிவு வந்தது. ஜெயேந்திரர் போன்ற அறிவிலி சனாதனிகளை இங்கு நான் சொல்லவில்லை, ஏனெனில் அவர்களுடைய சாதி நம்பிக்கையடிப்படையிலான நடத்தைகளே அவர்களை அன்னியப் படுத்திவிடும்.

    இரவி ஸ்ரீனிவாஸ் பின்னூட்டத்தைப் பார்த்ததும், நாமும் ஒரு பின்னூட்டம் போடலாமே என்று தோன்றியது :-)

    நன்றி - சொ. சங்கராபாண்டி

    ReplyDelete
  11. "போடா ஜாட்டான்னு முன்னேறிக் கொண்டே இருப்பான் என்று ஒரு பதிவர் எழுதிய வரைக்கும் எனக்கும் குறிப்பிட்ட சிலரைக்(குறிப்பிட்ட பிரிவினர் அல்ல குறிப்பிட்ட சிலர்) கண்டு அலர்ஜி ஏற்படவில்லை."

    The allergy is mutual.

    என்ன செய்வது ஆ ஊ என்றால் ஒரு குறிப்பிட்ட சாதியினரை திட்டுவது, என்னவோ அவர்கள் சாதிப் பிரிவினையை அமைத்து கொடுத்தார்களாம், மற்ற சாதியினர் சின்ன பாப்பாக்களாம், ஒன்றுமே தெரியாது அப்படியே பின்பற்றி விட்டார்களாம், இதையெல்லாம் என்னவோ நேரிலேயே கண்டது போல பேச்சு வேறு.

    இதையெல்லாம் கண்டு எதற்கு வம்பு என்று அந்த சாதியைச் சேர்ந்த பல பதிவர்கள் தத்தம் சாதியையே மறைத்து, அது மட்டுமின்றி தம் சாதியையே இகழ்ந்து பேசி என்றேல்லாம் செயல்பட்டிருக்கின்றனர். அதே பதிவர்களின் சாதி தெரிந்ததும் அவர்களும் தாக்குதலுக்கு உள்ளானதுதான் நடந்தது.

    இந்த சூழ்நிலையில் தன்மானம் உள்ள எவனும் செய்வதையே நான் செய்தேன். நான் போட்ட அந்தப் பதிவில் இதற்கான பின்புலனையும் கூறியுள்ளேன். அதை எத்தனை முறை கூறினாலும் புரிந்து கொள்ளாதது போல நடிப்பவருக்கு வேறு எப்படி புரிய வைப்பது எனத் தெரியவில்லை.

    'போடா ஜாட்டான்னு முன்னேறிப் போய்கொண்டே இருப்பான்' என்பது நிஜமாகவே பலமுறை நடந்து விட்டது. பூனை கண்ணை மூடிக் கொண்டு பேசினால் உண்மை மாறிவிடுமா என்ன? இதை மேலே பின்னூட்டமிட்ட நபருக்கே அடிக்கடி கூறியாகிவிட்டது. இங்கு வந்து நீட்டிமுழக்கி பேசும் அவர் மற்ற பதிவுகளில் ஒரு சாதியை குறிவைத்து முழு திட்டல் பதிவுகளில் போய் எதிர்ப்பு தெரிவித்து பின்னூட்டங்கள் எல்லாம் போட்டதாகவெல்லாம் தெரியவில்லை. அப்படியே போட்டிருந்தால் சந்தோஷம்.

    மறுபடியும் அவருக்கும் மற்ற சிலருக்கும் இன்னொரு முறை வேண்டுமானால் கூறிக் கொள்கிறேன். அவ்வாறு கூறியது தமிழ்பதிவுலகில் ஒரு குறிப்பிட்ட சாதிமீது தேவையின்றி தொடுக்கப்பட்ட தாக்குதல்களே. அவ்வாறு கூறியது கூட அதனால் எல்லாம் பாதிக்கப்பட்டு தம் சாதியினரை மறைத்துக் கொண்ட என் சாதியினரை குறிவைத்துத்தான். புரிந்து கொள்ள வேண்டியவர்கள் பலர் புரிந்து கொண்டனர். அப்பதிவின் நோக்கம் நிறைவேறி விட்டது.

    மற்றப்படி மேலே பேச இப்போதைக்கு ஒன்றும் இல்லை. இந்தப் பின்னூட்டத்தின் நகலை எனது இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன், ஏனெனில் அதர் ஆப்ஷன் உள்ளது இப்பதிவில்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  12. டோண்டு சார் உங்களைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்படவில்லை. உங்களை வருத்தம் கொள்ளும் வகையில் எதையாவது சொல்லி இருந்தால் மன்னிக்கவும். இது என்னுடைய observation அவ்வளவே. இதைப் பற்றி விவாதிக்க எனக்கு விருப்பம் இல்லை.

    ReplyDelete
  13. //
    ஆனால் இப்படிப்பட்டவர்கள் கவனிக்கப் படாததர்க்கு காரணம் அந்த குறிப்பிட்ட பிரிவினர் அந்த அளவு தன்னுடைய ஜாதியை endorse செய்து நான் அப்படித்தான் இருப்பேன் என்று எதோ அந்தப் பிரிவினர் தங்களுடைய பிரிவினருக்கு சூப்பர் பவர் இருப்பது போல பேசிக் கொண்டிருப்பது தான்.
    //

    அவன் அப்படித்தான் இருப்பேன் என்று சொன்னால் உனக்கு எங்கே போச்சு புத்தி ? எதுக்கு அவனப் பார்க்குற. அவன ஒதுக்கு! அவனப்பத்திப் பேசாதே. உன் முன்னேற்றத்தை நீ பாரு!

    என்று கேட்காமல் அவன் இருப்பதைப்பார்த்துத்தான் எங்க முப்பாட்டன் சாதிவெறியனானான். என்று சொல்வது, பிராமணர்கள் தான் சாதி வெறிக்குக் காரணம் என்று காழ்ப்புமிழும் அறிவாத்மாக்கள் சொல்வது தான் வேறு வார்த்தைகளில் Rephrase செய்து சொல்கிறார் என்பது என் கருத்து.

    //
    இதில் இருக்கும் உண்மையை உணர்ந்து கொள்ளும் தன்மை இந்த குறிப்பிட்ட சிலருக்கு இல்லவே இல்லை.
    //

    எந்த உண்மை எதில் உள்ளது. வரவனையான் செந்தில் அவர்கள் படு மூர்க்கமாக பல வார்த்தைகள் விடுகிறார்.

    சாதிக் கொடுமைக்கு எல்லா சாதிகளும் சம பங்கில் பழியை ஏற்கவேண்டும். அதில் பிராமணன் மட்டும் தான் காரணம் என்ற மாயையை மறுபடியும் மறுபடியும் சொல்லிப்பார்க்கிறார். ஆயிரம் முறை சொன்னாலும் பொய் என்றுமே உண்மையாகாது.

    ReplyDelete
  14. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  15. ////
    இதில் இருக்கும் உண்மையை உணர்ந்து கொள்ளும் தன்மை இந்த குறிப்பிட்ட சிலருக்கு இல்லவே இல்லை.
    //

    எந்த உண்மை எதில் உள்ளது. வரவனையான் செந்தில் அவர்கள் படு மூர்க்கமாக பல வார்த்தைகள் விடுகிறார்.
    //
    ஐயா வஜ்ரா, "மூர்க்கமாக" என்ற அடைமொழியைப் பயன்படுத்துவதெல்லாம் சரிதான். ஆனால், முதலில் அவர் "வரவனை" செந்தில் தானா என்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்!

    எப்போத்தான், பேர மட்டும் பாத்து அடை மொழிவதை நிறுத்தப் போறாய்ங்களோ!!!

    ReplyDelete
  16. ///
    எந்த உண்மை எதில் உள்ளது. வரவனையான் செந்தில் அவர்கள் படு மூர்க்கமாக பல வார்த்தைகள் விடுகிறார்.
    ///

    ஒரு சின்ன திருத்தம் இது வரவனையான் செந்தில் இல்லை. குமரன் எண்ணம்ன்னு பேர் வைத்திருந்த போது குமரனோடு குழப்புகிறார்கள் என்று செந்தில் குமரன் என்று மாற்றினால் இப்போ வரவனையானோடு குழப்புகிறார்கள். என்ன பண்ணறது.

    எல்லா ஜாதிகளும் சம பங்கெடுக்க வேண்டும் என்பது அப்பட்டமான உண்மை தான். அதையே தான் மேலே சொல்லி இருக்கிறேன். ஆனால் அந்தந்த ஜாதிகள் ஏன் வெளியே தெரிவதில்லை என்றால் இங்கு அதிகமாக இது தென்படுகிறது அதனால்தான் என்றுதான் சொல்கிறேன்.

    மேலும் பிராமிணர்கள் என்று பொதுப்படுத்தவில்லை. பிராமிணர்களில் இது போல இருக்கும் பலர் என்றுதான் சொல்கிறேன்.

    மேலும் மூர்க்கத்தனமாக எல்லாம் பேசவில்லை என்னுடைய observation இது அவ்வளவே.

    ReplyDelete
  17. தருமி சார்,

    எங்கே எனது பின்னூட்டம்? நானும் ஒன்று இங்கே எழுதினேனே?

    அன்புடன்,
    கருப்பு

    ReplyDelete
  18. கோவி கண்ணன்,

    ஏதோ நீங்களாவது நான் சொன்னவந்ததை அதன் full perspecxtive-ஓடு பார்த்திருக்கிறீர்களே, அதற்காக ஒரு ஸ்பெஷல் நன்றி.

    ReplyDelete
  19. ஹரிஹரன்,

    //..சனாதன தர்மம் அடிமைத்தளம் அமைத்துத் தரவில்லை..//

    பிறகு அது என்ன சுயம்புவாக வந்த ஒன்றா?

    //சமகாலத்தில் பகுத்தறிவுப் போர்வையில் பொதுஅறிவுகூட இல்லாமல் செயல்படுகின்றதைப் ...//
    It is your judgment.
    இந்த உங்கள் கருத்துக்களோடு நான் முற்றிலும் முரண்படுகிறேன்.


    //...சனாதன தர்மம் என்கிற வாழ்வியல் முறை மீது தொடர்ந்து ...//
    சனாதன தர்மம் எப்படி, ஏன் வாழ்வியல் முறையானது என்பதும், அது எந்த அளவு சமூகத்தைச் சீரழித்தது; சீரழிக்கிறது என்பதும்தானே இப்போது பேசப்படுகிறது.

    //நேரடியாகத் தவறிழைக்கும் பிரிவினரை, சமூகத்தினைச் சுட்டி விமர்சிப்பது என்பது மிக அவசியமானது.//
    இதைத்தானே என் "மூன்று ஆணி"கள் மூலம் செய்துள்ளேன். அதில் இரண்டு ஆணிகளை ஒத்துக்கொள்ளும் நீங்கள் ஏன் முதல் ஆணியை மட்டும் ஒத்துக் கொள்ள மறுக்கிறீர்கள்?
    Let us start calling a spade a spade.

    முதல் ஆணி இன்றைய நிகழ்வும் வரலாற்று உண்மையுமாகும்; மற்ற இரண்டும் தற்கால நிகழ்வுகள். இதில் மறுப்பதற்கோ, மறைப்பதற்கோ ஏதுமில்லை என்பதும், மறைக்கவோ மறுக்கவோ முனையும்போது நம்மைப் பீடித்துள்ள சமூக நோயின் உக்கிரமும் வக்கிரமும் இன்னும்தான் பெருகும் என்பதே இப்பதிவின் சாரம்.

    //...கேவலமான சமூக நிகழ்வுகளுக்கு முதல் தீவிர எதிர்ப்பு அது சரியாகும் வரையில் வீரியமாகத் தொடர்ந்து காட்டப்படவேண்டும்!//

    இதைத்தான் நானும் வலியுறுத்த விரும்புகிறேன் - எல்லாவித கேவலமான சமூக நிகழ்வுகளுக்கும் சேர்த்துத்தான்;

    நன்றி

    ReplyDelete
  20. லியோ சுரேஷ்,

    நல்ல வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. அவ்வப்போது அவைகள் தேவையாக இருக்கின்றனவே !

    ReplyDelete
  21. வஜ்ரா,

    ////
    NAIL: 1
    //

    மேலே சுட்டியுள்ள இந்த வாசகத்திற்கு "மேலே" ...//

    ஹரிஹரன் போலவே இரண்டாம், மூன்றாம் ஆணிகளில் மறுப்பேதுமில்லா உங்களுக்கு, முதல் ஆணியில் குறையிருப்பது அல்லது அது முற்றிலும் தவறாயிருப்பதாகத் தோன்றுவது - அது வேறொன்றுமில்லை, வஜ்ரா. இதைத் தமிழில் தன்னிலைச் சார்பு என்றும், ஆங்கிலத்தில் subjectivity என்றும்தானே கூறுவார்கள்?

    உங்கள் political correctness பற்றிய வாதம் உங்கள் சுட்டு விரல் காட்டும் திசையில் உள்ளது; நான் சொல்லுவது மீதி விரல்கள் காட்டும் திசை பற்றியது.

    ReplyDelete
  22. ravi srinivas,


    //..but i wont be fooled by it.//

    Does anyone else have to make you a fool ?

    ReplyDelete
  23. ஓகை,

    POINT / ஆணி: 1
    //மூல காரணங்களை ஆராயும் போது நம்மை மூன்றுக்கு இட்டுச் செல்லலாம்.//

    POINT / ஆணி:2
    அப்போது மூன்றைச் சாடுவதுடன் 50ன் வேலை முடிந்துவிடுகிறதா?//

    நன்றி.

    ReplyDelete
  24. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  25. jadaayu,

    //மதுரையில் கேள்வி கேட்ட ஒர் ஏழைப் பிராமணன் பெயரை வைத்துக் கொண்டிருக்கும் தருமி அவர்களே,//

    என்னை யாரும் இவ்வளவு கீழ்த்தரமாக address செய்ய முடியாதென நினைக்கிறேன்.

    ஏன் சார், உங்களுக்கே இது கேவலமாகத் தெரியவில்லை? என்ன நினைப்பு இது - எங்கும் எதிலும் ஜாதியைத் தவிர உங்களால் ஏதும் நினைக்க முடியாதா? விட்டால் 'தருமி அய்யரே' என்று விளித்து விடுவீர்கள் போலும்.i sincerely feel and sorry to say that the way you have addressed me lacks basic decency.
    நகைச்சுவை உணர்வுமா உங்களூக்கு சுத்தமாக இல்லாமல் போகவேண்டும்? மிகவும் வருந்துகிறேன்.

    //அதனால் nail 1 பகுதியில் நீங்கள் எழுதியது சரியல்ல. //
    இப்படி என்னை address செய்யும் நபருக்கு அப்படித்தான் தோன்றும்; ஆச்சரியமில்லை.

    கொஞ்சமாவது திருந்தப் பாருங்கள், அய்யா..

    ReplyDelete
  26. செந்தில் குமரன்,

    //இன்று ஒரு குறிப்பிட்ட ஜாதியை எதிர்க்கும் பலரே தங்களுடைய ஜாதியைப் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது, அந்த குறிப்பிட்ட சிலரின் ஜாதி வெறி கேள்விக்குறிக்குள்ளாக்கப் படாதது கவலைக்குறியது//

    இரண்டாவது ஆணியில் நச்சென்று அடித்துள்ளீர்கள்.

    //என்னைப் பொறுத்த வரை துன்பப்படாதே துன்புறாதே //

    ஏதோ எழுத்துப் பிழை உள்ளது போல் தெரிகிறதே! துன்பப்படாதே துன்புறுத்தாதே..?

    ReplyDelete
  27. சங்கர பாண்டி,

    ரொம்ப நாளாக உங்களைக் காணவில்லையே, இந்தப் பக்கம்...

    //இரவி ஸ்ரீனிவாஸ் பின்னூட்டத்தைப் பார்த்ததும், நாமும் ஒரு பின்னூட்டம் போடலாமே என்று தோன்றியது :-)//

    அடடா! இதற்கும் நான் அவருக்கு நன்றி கூற வேண்டுமே!

    //அதிர்ஷ்டவசமாக இவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான்//
    அப்படியா நீங்கள் நினைக்கிறீர்கள்? என்னை அப்படி நினைக்க விடமாட்டேன் என்கிறார்களே..!

    //உங்களைப் பற்றிக் கூட முன்பு ஒரு பதிவு வந்தது. //
    ஏதென்று தெரியவில்லையே...

    நன்றி.

    ReplyDelete
  28. வஜ்ரா,

    //சாதிக் கொடுமைக்கு எல்லா சாதிகளும் சம பங்கில் பழியை ஏற்கவேண்டும். //

    இல்லை...
    சாதிக் கொடுமைக்கு எல்லா சாதிகளும் பங்கேற்கவேண்டும். ஆனால் விழுக்காட்டில் மட்டும் கொஞ்சம் கொஞ்சம் வேற்றுமை உண்டே..

    //ஆயிரம் முறை சொன்னாலும் பொய் என்றுமே உண்மையாகாது//

    அதே!

    ஏற்கென்வே செந்தில் உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டார். இருப்பினும் அறிவாத்மாக்களின் பொறுப்பிலேயே விட்டு விட ஒரு வாதம்:
    //இதில் இருக்கும் உண்மையை உணர்ந்து கொள்ளும் தன்மை இந்த குறிப்பிட்ட சிலருக்கு இல்லவே இல்லை. //
    //எந்த உண்மை எதில் உள்ளது. செந்தில் அவர்கள் படு மூர்க்கமாக பல வார்த்தைகள் விடுகிறார்.//

    -மேலே செந்தில் சொன்னதில்
    மூர்க்கமான வார்த்தை எது?

    ReplyDelete
  29. முதலில் குமரன் எண்ணம் அவர்களிடம் தப்பான identification க்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

    ஆனால் நான் சொன்ன பதிலிலோ கருத்திலோ எந்த மாற்றமும் இல்லை.

    ReplyDelete
  30. வந்தமைக்கு நன்றி டோண்டு

    ReplyDelete
  31. //
    இல்லை...
    சாதிக் கொடுமைக்கு எல்லா சாதிகளும் பங்கேற்கவேண்டும். ஆனால் விழுக்காட்டில் மட்டும் கொஞ்சம் கொஞ்சம் வேற்றுமை உண்டே..
    //

    Is that your subjectivity?




    நான் பிராமணன் அல்ல.
    நான் கேட்பது. பிராமணர்கள் எதற்காக ஒரு சமூகச் சீர் கேட்டுக்கு அதிகப் பொறுப்பு வகிக்கவேண்டும் ?.

    இந்தப் "பெறுமை" யை அவர்களுக்கு அளிப்பதன் மூலம், மற்ற நல்ல விஷயங்களிலும் அவர்கள் பங்கு அதிகம் என்று சொல்ல வேண்டும்.

    அதையும் ஏற்பீர்களா ?

    ReplyDelete
  32. விடாது கருப்பு,
    உங்கள் பின்னூட்டத்தை மட்டுறுத்தியுள்ளேன். விளக்கம் தர இயலவில்லை - உங்கள் முகவரி தெரியாமையால்...

    ReplyDelete
  33. //...விட்டால் 'தருமி அய்யரே' என்று விளித்து விடுவீர்கள் போலும்.//

    :-)))

    *****

    பிராமணீயத்துடன் (மனிதனுக்குள் வர்ணம்/உயர்வு/தாழ்வு கற்பிக்கும் இயம்) யாரும் மோதி ஜெயிக்க முடியாது.ஏனென்றால் அவர்கள் அவர்களுக்கே உண்மையாக இருப்பது இல்லை.இங்கே பிராமணீயமாக நாம் அறியும் இந்தக் கொடுமை எல்லா இடத்திலும் வேறுவடிவங்களில் உள்ளது. உதாரணமாக நிறவெறி. இது அரேபியாவிலும் (வெள்ளை/கருப்பு அரேபியன்) அமெரிக்காவிலும் இருக்கத்தான் உள்ளது.

    தலித்துக்குள்ளும் இந்த பிராமணீய வியாதி உள்ளது.பறயைர் பள்ளரையும் , பள்ளர் சக்கிலியரையும் பிராமணீய கோட்பாடுகளுக்கு உட்பட்டே மரியாதை கொடுக்கிறார்கள்.

    இது வேரோடு அழிய வேண்டும் என்றால் எங்கு ஆரம்பித்ததோ அங்கிருந்தே அகற்றப்பட வேண்டும். வேரை விட்டுவிட்டு கொடியை மட்டும் வெட்டுவது நிரந்தரப் பலன் அல்ல.

    பிராமணீயத்தில் நம்பிக்கை உள்ள யாரும் NAIL அடிக்க வரப்போவது இல்லை.வன்னியர்கள்,தேவர்,நாடார்,பிள்ளை... சாதிப்பற்று உள்ளயாவரும் பிராமணீய கோட்பாடு கொண்டவர்களே.

    சாதியும் மதமும் இல்லாவிட்டால் இவர்களுக்கு பித்துப்பிடித்துவிடும்.சுயமாக இருக்கத் தெரியாதவர்கள்.

    தலித்துகளில் படித்து பதவிக்கு வந்து நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள்கூட சுயத்தை மறந்து பிராமணீய கோட்பட்டுக்கு மாறிவிடுகிறார்கள்.எனகுத் தெரிந்த ஒரு அரசு அதிகாரி தனது மகனுக்கு அய்யர் பொண்ணுதான் வேண்டும் என்று தேடிக்கொண்டு இருந்தார்.

    கருப்பாக இருப்பது கேவலம் என்று எண்ணி பேர் அண்டு லவ்லியும் வெள்ளைப்பவுடரும் போடும் முட்டாள்களிடம் சுயமாக இரு என்று சொன்னால் நடக்கவா போகிறது.

    //சாதிகளை நம் சமூகத்திலிருந்து ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. நம் சமுதாயத்தின் நீண்டு, நிலைபெற்ற களங்கமாக இன்னும் எத்தனை எத்தனை காலம் இருக்கப் போகிறதோ..? //

    உண்மை அதுதான்.
    இது இருக்கத்தான் போகிறது.
    இது உங்களுக்கு களங்கமாகத் தெரியலாம்.
    மற்றவர்களுக்கு வேறுவிதாமாக இருக்கும்.

    எந்தத் தேவரினத்தவராவது தான் தேவர் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறார்களா?
    அல்லது எந்த வன்னியராவது? அல்லது நாடார்/பிள்ளை/அய்யார்/அய்யங்கார்...ஹு ஹூகும் அனைவருக்குமே தான் இந்த சாதி என்று சொல்வதில் பெருமைதான். அதுதான் பார்பணீயத்தின் நன்கொடை.

    நீ எத்தனை பேரை வேண்டுமானாலும் அடிமையாக வைத்துக்கொள்.ஆனால் எனக்கு கீழ் நீ இரு.

    இதனால்தான் சக்கிலியருக்கும் கீழாக பொதர வண்ணான் (எனது கிராமத்தில் வழக்கில் இருந்த சாதிப் பெயர்) என்னும் ஒரு சாதி (சக்கிலியர்களுக்கு துணி வெளுப்பவர்கள்) சக்கிலியர்களாலே தீண்டத்தாகாத ஒரு இனமாக இருக்கிறது.இந்த பொதர வண்ணாருக்கு கீழே உள்ள ஒரே இனம் கழுதை. ஆம் அவர்களின் தொழிலுக்குப் பயன்படும் விலங்கு. இந்தக் கொடுமையெல்லாம் பிராமணீய விளைவுகளே.

    சாதி மதங்கள் உள்ளவரை நீ பெரிசா நான் பெரிசா என்ற சச்சரவு இருக்கத்தான் செய்யும்.

    மாட்டுக்கறி சாப்பிட மறுப்பவர்கள் அதே மட்டின் தோலால் ஆன பெல்ட்டும்,அதே மாட்டின் தோலால் ஆன மேளமும் அடித்து அவர்கள் ஆண்டவனைக் கொண்டாடட்டும்.பன்றிக்கறி சாப்பிட மறுப்பவர்கள் அதே பன்றியின் கொழுப்பினால் செய்யப்படும் உணவுவகைகளையும் மருந்துகளையும் பயன்படுத்தி நன்றாக வாழ்ந்து அவர்கள் இறைவனைக் கொண்டாடட்டும்.சோத்துக்கே வழி இல்லாத பிளாட்பாரக் குழந்தைகள் வெளியே இருக்க திராட்சை இரசம் அருந்தி தேவனைத் தொழட்டும்.கட்டிக் கொள்ள துணி இருந்தாலும் அம்மணாமாய் அலைந்து முக்தி தேடட்டும். அது அவரவர் நம்பிக்கை.இவர்களை எல்லாம் அவர்கள் நம்பும் இறைவன் மன்னிப்பாராக.

    எப்போது மக்கள் சாதி,மதங்களை வெளியே சொல்ல வெட்கப்படுகிறார்களே அப்போதுதான் அது முற்றாக அழியும் அடுத்த நிலைக்குப்போகும் என்ற நம்பிக்கை வரும்.
    முதலில் சாதியையும் மதத்தையும் வெளியே சொல்ல வெட்கப்படுவர்கள் இங்கே எத்தனை பேர்? அந்த எண்ணிக்கை கூடினால்தான் NAIL அடிக்க முடியும்.

    அதுவரை இந்த பிளவுகளை சகித்துக் கொண்டே நம்மால் முடிந்த மனிதாபிமான உதவிகளை மனிதர் அனைவருக்கும் செய்வோம் வாருங்கள்.

    ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!!

    ReplyDelete
  34. தருமி சார், பதிவு நன்றாக உள்ளது!

    ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

    ஆணி அடிப்பதென்றால், இன்று ஜாதியை - ஜாதியை மட்டுமே வைத்து தங்கள் ஓட்டு வங்கியை நிர்ணயித்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளுக்கும், ஜாதிக்கட்சிகளுக்கும்தான் முதலில் ஆணி அடிக்க வேண்டும்.

    சுதந்திரத்திற்கு முன் இருந்ததைவிட இப்போது அதிகமான ஜாதி சச்சரவுகள் இருப்பதற்குக் காரணம் அவர்கள்தான்

    சரி, அவர்களுக்கு யார் ஆணி அடிப்பது?

    ReplyDelete
  35. // ...முட்டாள் கும்பலுக்கும்... மூடர் கூட்டத்திற்கும் ...இழிபிறப்புகளுக்கும் (இதைத்தான் ஜாதித் திமிர் என்கிறார்களோ?) வேண்டுமானால் இது உண்மையாய்த் தெரியும்.//

    ganesh,

    better mind your language. either make your languge decent or dont come to my blog at all. since this is yoiur first visit i have allowed your dirty tongue to wag a little here.

    ஒரு மனிதனாய் இருக்க, எழுதப் பழகிவிட்டு, பிறகு வேண்டுமானால் இங்கு வாருங்கள். உங்களுக்கு "உங்கள் மொழியில்'தான் பதில் தந்திருக்க வேண்டும். ஆனால் உங்கள் அளவு தரம் தாழ்ந்து பேச, எழுத என்னால் முடியாதிருப்பதற்கு வருந்துகிறேன். உங்கள் 'புத்தியை' நாலுபேர் தெரிந்து கொள்ள வேண்டுவதற்காக மட்டுமே இப்பின்னூட்டத்தை அனுமதிக்கிறேன் - என் குப்பைக் கூடைக்கு கூட லாயக்கற்றதாயிருப்பினும்.....

    1. //இங்கு வேறோர் கோணம் தருகிறேன். //

    2. //சாதாரண உண்மை என்னவாக இருக்கக்கூடும் என்று பார்ப்போம்.//

    இங்கே கூறப்பட்ட இரு கோணமும் உங்கள் சொந்தக் கோணம்தான். you have chosen what fits you.

    நான் கூறியதெல்லாம் ஆதாரமற்ற கற்பனைகள்; நீங்கள் கூறுவதெல்லாம் வடித்தெடுத்த, ஆதாரம் பொதிந்த வரலாற்று உண்மைகள். அப்படி நினைத்துத் தான் எழுதியுள்ளீர்கள் போலும்.


    //பரம்பரைகளாய்த் தொடர்ந்த அமைதியால், அறிவொளியால் நல்லெண்ணமும், நேர்மையும் இயல்பாய் இருந்தது.//
    நல்லா இருக்கு உங்கள் கோணம்; ஆனால் நிதர்சனம் வேறு. நல்லவனாயிருப்பதும் கெட்டவனாயிருப்பதும் அவன் சாதியினாலல்ல என்ற நினைப்பில் இருந்து வருகிறேன். மாற்றி விடுவீர்கள் போலும்.

    //பிராமணர்களால் வாழ்வும், சமுதாயமும் மேன்மையடைந்தது. அதனால் சாதிச் சமுதாயம் நன்றியின் வெளிப்பாடாய் அவர்களை உயர்ந்த சாதியென்று வைத்துவிட்டது//
    அப்படியே அது உண்மையாயின், அன்று ஏற்றி வைத்தவர்களே இன்று இல்லையென்றால் நீங்கள் என்ன செய்வதாக உத்தேசம்; இறங்கி விடுவதை விட்டு என்ன இந்த உபதேசம்!

    //பிராமணர்கள் அடுத்த நாள் உணவிற்கு ஏதும் சேர்த்து வைத்துக்கொள்ளக் கூடாது என்று சொல்வதை வசதியாக மறந்து போய்விடுகிறார்கள். ஏன் இவ்வளவு கடுமையான கட்டுப்பாடுகள்? //
    always what is preached is never practiced. இங்கும் அதுதானே உண்மை. இல்லையென்றா கூறுகிறீர்கள். அது பெரிய பூசணிக்காய். பாவம்..கணேசனுக்கு நாளைய பாடே பெரும்பாடு என்றா இருக்கிறீர்கள். பழைய கதை..!

    //வசதியாய் பிராமணர்கள் நாங்கள் அங்கீகரிக்கும் ஆட்சிதான் நடக்கும். நாங்கள் ஒவ்வொருவரும் இறைத்தூதர்களே. எங்களுக்குக் கப்பம் கட்டாவிட்டால் நரகம்தான் என்றெல்லாம் எழுத மறந்து போய் விட்டார்கள்//

    அதுதானே உண்மை; ஒருவேளை அது உங்களுக்குத் தெரியாவிட்டால் சமீபத்தில் சுந்தரவடிவேல் எழுதியிருந்தாரே அந்தப் பதிவை வாசித்துப் பாருங்களேன்.

    //கணிசமான சொத்துக்களும், செல்வங்களும் அவர்களிடம் மட்டுமே இருந்ததற்கான ஆதாரம் உண்டா? //
    தஞ்சை, கும்பகோணம், இன்று சென்னை பக்கம் போனதில்லையோ?


    மேலே நீங்கள் பட்டியலிட்டிருக்கும் உங்கள் கோணத்திற்கெல்லாம் என் பதில் -- அப்படியா.. ?? !! எல்லாம் உங்கள் கோணம்; அவ்வளவே. உங்களை நீங்களே தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். நல்லது. ஆனாலும் நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்லுகிறார்கள்; அதிலேதும் உண்மை உண்டா இல்லையா என்று பார்ப்பதும் நல்லது - முடியுமானால்.

    //கடைசியாகக் கல்வியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு சூது செய்தது. ஆயிரக்கணக்கான(?) வருடங்களாக. இது உங்கள் தலையில் நல்ல ஆழமாகவே அடிக்கப்பட்டிருக்கும் ஆபிரகாமிய ஆணி. //

    என் தலையிலடிக்கப்பட்ட ஆணியை நான் கழற்றி எறிந்து ஆண்டுகள் பலவாயிற்று. அதைப்பற்றிக் கவலைப் படாதீர்கள்.

    'கடைசியாக' என்று கூறியுள்ளதைப் பற்றி மட்டும் இன்னும் கொஞ்சம் பேசுவோமா?

    அந்தக் கூற்றில் ஒரு கால திருத்தம் செய்ய வேண்டியதுள்ளதே. அது //கடைசியாகக் கல்வியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு சூது செய்தது.// ...செய்தது இல்லை; செய்து கொண்டு இருப்பது. இன்றைக்கு நடந்து வரும் 'உங்கள்' போராட்டங்கள், தகுதி பற்றிய 'உங்கள்' மேலான விவாதங்கள், இடப்பங்கீட்டால் தரம் தாழ்ந்து இந்தியா எங்கோ அதள பாதாளத்தில் விழுந்து கிடக்கும் நிலை பற்றிய 'உங்கள்' பரிதாபங்கள், எல்லோரும் சமம் என்று நினைக்கும், கூறும் 'உங்களைப்' போன்றோரின் நல்லெண்ணங்கள், அதனால் 'உங்களைப்' போன்றோர் U.P.S.C.தேர்வுகளில் செய்யும் தகிடுதத்தங்கள், B.S.R.B.-களில் 'உங்களை'ப் போன்றோர் செய்துள்ள அழகான மாற்றங்கள் எல்லாவற்றையும் பற்றி எனது பழைய பதிவுகள்
    http://dharumi.blogspot.com/2006/07/164-1.html .சிலவற்றில் கூறியுள்ளேன். நேரமிருந்தாலோ, மனசிருந்தாலே வாசித்துப் பாருங்கள். ஆனால் ஒன்று இப்போதே சொல்லிவிடுகிறேன். அதை வாசித்து நீங்கள் 'உங்கள்' 'கோணத்திலிருந்து' மாறி விடுவீர்கள் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை.


    //பிராமணரில், அமைதியாய், ஆன்மீக வழியில் செல்பவரே இங்கு அதிகம். சற்றுப் பரந்த மனதோடு, நிதானமாய் யோசியுங்கள்//
    இதுவரை என் பதிவுகளில் 'பிராமணர்' என்ற பதத்தை நான் பயன் படுத்தியதாக நினைவில்லை. பயன் படுத்தியிருந்தாலும் நிச்சயமாக derogatory ஆக பயன்படுத்தியிருக்க மாட்டேன். ப்ராமணீயம் என்று மட்டுமே எழுதிவந்திருக்கிறேன். காரணம் அந்த சாதியைச் சேர்ந்தவர்கள் மீதல்ல, அந்தச் சாதி கட்டிக் காக்கும், அதனைச் சரியென்று சொல்லி வாதிக்கும் ப்ராமணீயக் கொள்கையையே எதிர்க்கிறேன். ஆனால் ஒன்று உறுதி... 'உங்களைப்' போன்றவர்கள் இன்னும் சிலரே இருந்தால் போதும்; என்னைப் போன்றவர்களைக்கூட 'அந்த'ப் பக்கம் தள்ளிவிட்டு விடுவீர்கள். இதுவரை 'நீங்கள்' என்றோ, 'உங்கள்' என்றோ second person-ல் கூட எழுதியதில்லை. அப்படி எழுத வைத்தது உங்கள் எழுத்திற்கும், வாதத்திற்கும் கிடைத்த "வெற்றி"! அவ்வளவு நல்லவர்; வல்லவர் நீங்கள் - உங்களைப் பற்றி நீங்களே சொல்லிக் கொள்வதைப் போல...

    வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  36. பதிவிட்டவுடன் இந்த பதிவை படித்துவிட்டாலும் பின்னூட்டமிடாமல் காத்திருந்தது மற்றவர்களின் பின்னூட்டங்களுக்காகத்தான், என் எதிர்பார்ப்புகளை ஏமாற்றவில்லை, எப்படி சில பின்னூட்டங்கள் வரும் நான் எதிர்பார்த்தேனோ அப்படியேவந்திருக்கின்றன சில பின்னூட்டங்கள்.

    சாதிக்கொடுமைகளுக்கு ஒரு குறிப்பிட்ட சாதிதான் காரணமென்பதில்லை, மற்ற சாதிகளும் தான் காரணம், குறிப்பாக இன்று தலித்களுக்கான உடனடி பிரச்சினைகள் பிற்படுத்தப்பட்டவர்களால் தான் என்பது உண்மை, இந்த பிற்படுத்தப்பட்டவர்கள் எல்லாம் வர்ணாசிரமத்தை காக்கும் காவல்நாய்கள், காவல்நாய்களுக்கு எலும்புத்துண்டு தான் கிடைக்கும், முழுப்பலனை அனுபவிப்பது இந்த காவல்நாய்கள் இல்லை, இவர்களெல்லாம் எண்ணிக்கையில் நிறைய இருந்தாலும் சாதி மரத்தை தாங்கிபிடிக்கும் இவர்களெல்லாம் சல்லிவேர்களே, ஆனால் ஆணி வேர் யாரென்பது மனசாட்சி உள்ள எல்லோருக்கும் தெரியும்.

    முதலில் தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியம் வேண்டும், அதற்கு குறைந்த பட்ச நேர்மை வேண்டும், முதலில் தவறுகளை ஒத்துக்கொண்டு பின்பு அதற்கு என்ன காரணமோ வேறு எதுவோ வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்ளலாம். மேற்கண்ட பின்னூட்டங்களில் எதில் அந்த குறைந்த பட்ச நேர்மை உள்ளது என்று எழுதியவர்களுக்கே தெரியும்.

    சாதி தவறில்லை, சனாதான தர்மம் வாழ்க்கை நெறி அது வெறும் 200 வருடங்களில் தான் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு சிலரின் சுயநலத்திற்காக மாற்றப்பட்டுவிட்டது என்று தவறென்பதை ஒத்துக்கொள்ளும் குறைந்த பட்ச நேர்மையின்றி சாதி முறைக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு எத்தனை நேர்மை இருக்கின்றது.

    //
    நமது மீடியாக்களிலும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் நடக்கும்போது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்களைப் பற்றிய விவரங்கள் வெளியே தெரியாதபடி 'பாதுகாத்து' விடுகிறார்கள். நம் சமூகத்தின் உண்மை முகங்கள் நமக்கே தெரியாமல் போய்விடுகின்றன.
    //
    இது பிற்படுத்தப்ப்பட்டவர்கள் அல்லது குறிப்பிட்ட சாதி என்பதற்காக அல்ல, இன்றைக்கும் யார் சாதிக்கொடுமை செய்தாலும் எந்த சாதி செய்தாலும் உயர் இல்லை இல்லை உச்ச சாதி ஊடகங்கள் அந்த சாதிக்கொடுமையை செய்தது பிற்படுத்தப்பட்ட சாதியாக இருந்தாலும் அந்த சாதியின் பெயரை சொல்வதில்லை, அதற்கு இந்த சாதியை கண்டு பயமென்றெல்லாம் இல்லை, முக்கிய காரணம் வர்ணாசிரமத்தை பாதுக்காக்கத்தான், அந்த கொடுமையை உச்சசாதியார் செய்யவில்லையென்றாலும் மற்றவர்கள் வர்ணாசிரமத்தின் பெயரால் செய்வதால் அதாவது தாம் நம்பும் கொள்கையை பிறர் பின்பற்றுவதால் அந்த வர்ணாசிரமத்தை காக்கத்தான் அந்த சாதிப்பெயர்கள் வெளியிடப்படுவதில்லை, தினமலருக்கோ, விகடனுக்கோ, குமதத்திற்கோ பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி பிரச்சினையிக்கு காரணமான கள்ளர் சாதிப்பெயரை ஏன் சொல்லவில்லை, ஏன் சாதிப்பிரச்சினையில் தேவர்,கவுண்டர் வன்னியர் என எந்தப்பெயரையும் சொல்லவில்லை, எது அவர்களை தடுத்தது? ஏனென்றால் வர்ணாசிரம காவல்நாய்களையும் வர்ணாசிரமத்தையும் எதிர்க்க துணிவில்லை உச்ச சாதி ஊடகங்களுக்கு, ஆனால் இங்கேயும் முதன்முதலில் சிறுபத்திரிக்கைகள் தவிர்த்து பாப்பாப்பட்டி கீரிப்பட்டி பிரச்சினையில் கள்ளர் சாதியினரின் பெயரை நக்கீரன் தான் எழுதியது.

    கீற்று வில் தமிழருவி மணியன் அவர்கள் எழுதியது கீழே....

    பார்ப்பனர் இன்றைக்கு தானாக வந்து உங்கள் முன்னாலே நிற்க மாட்டான். இந்த தமிழ்நாட்டில் எங்காவது சாதிக்கலவரம் நடந்தால், ஒரு பார்ப்பனனுக்கும், பார்ப்பன அல்லாதவர்க்கும் சண்டை நடந்து இரத்தம் வழிந்ததாக தகவலே கிடையாது. பார்ப்பனரல்லாதவர்க்குள்ளே பார்ப்பான் இருக்கிறான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
    காரணம் இது படிநிலைச் சமுதாயம். இந்த சமுதாயம் வர்ணாஸ்ரமத்தில் ஊறிக் கிடக்கிற அமைப்பு படிநிலைச் சமுதாயம். படிப்படியாக இருக்கிறது.

    எல்லோருக்கும் மேலே பார்ப்பான் உட்கார்ந்து கொண்டு அவன் காலாலே தோளை அழுத்துகிறான். என் தோளின் மீது உன் காலா என்று கேட்க மறுக்கிறான். ஏன் என்றால் நான்கு பேர் தோளின் மீது இவன் நின்று கொண்டு இருக்கிறான். எனவே ஒரு காலை தான் சுமப்பதன் மூலம் நான்கு பேரின்தோள் மீது நான் நிற்கிறேனே என்ற சுகம் அவனுக்கு இருக்கிறது. இப்படித்தான் அவன் அவன் ஒவ்வொருவருக்கும் கீழே அடுத்தவனின் தோளை அழுத்துவதில் சுகம் இருப்பதினால் மேலே அழுத்திக் கொண்டிருப்பவனைப் பற்றிக் கவலைப்படவில்லை. அதனால் சொல்லுகிறேன், பார்ப்பனீயம் என்பது மிக மோசமானது. ‘சான்ஸக்ரிட்டேசன்’ என்று ஆங்கிலத்திலே சொல்லுவார்கள்.

    சமஸ்கிருத மயமாக்கல், சமஸ்கிருத மயமாக்கல் என்பது உயர்சாதி ஆக்கல் என்று இருக்கிறது. இன்றைக்கு நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள், தலித் அவன் மிக முயன்று அய்.ஏ.எஸ். ஆகி விடுகிறான். அய்.ஏ.எஸ். ஆகிவிட்ட ஒரு தலித், நான் தலித் என்று சொல்லுகிறானா என்றால் இல்லை. அவன் உடனடியாக ஒரு பார்ப்பனனாக மாறி விடுகிறான் மனதளவில். அவன் அந்த பட்டி தொட்டியிலே இருக்கக் கூடிய மாடு மேய்க்கிற, சுள்ளி பொறுக்கிற சோற்றுக்கு இல்லாமல் அலைகிற இவன் தான் என் இனம். அவன் தான் நான் என்று சொல்லுகிற உள்ளம் வர மறுக்கிறது. இதை எல்லாம் சிந்திக்க வேண்டும். ஒரு பெரிய கருத்துப் புரட்சி நடக்கிறது என்றால், சமூகத்தை ஒட்டு மொத்தமாகப் புரட்டிப் பார்க்க வேண்டும். காலத்திற்கேற்றாற் போல் மாற்றங்கள் வருகின்றன


    வர்ணாசிரமம் இத்தனை காலமும் உயிரோடு வலுவாக இருப்பதற்கு காரணம் அதன் அடுக்குமுறை தான், இரண்டு நிலைகள் மட்டும் இருந்திருந்தால் பிரெஞ்சுபுரட்சி, ரஷ்யப்புரட்சி மாதிரி ஓரிரு புரட்சிகளில் வெற்றி பெற்றிருக்கும், ஆனால் இந்த வர்ணாசிரம அடுக்குமுறை இவன் எல்லோருக்கும் கீழே, இவனுக்கு மேலே இவன், அவனுக்கு மேலே இன்னொருவன், அந்த இனொருவனுக்கு மேல் நான் என்னும் போது கடைசியில் இருப்பவன் உடனடியாக தன் மேல் இருப்பவனோடு சண்டை போடுவார்கள், இந்த இருவர்களின் சண்டையில் எல்லாவற்றையும் அனுபவித்துக்கொண்டு அய்யோ பாருங்கள் எங்களுக்கும் இதற்கும் என்ன தொடர்பு பாருங்கள் அவர்கள் தானே அடித்துக்கொள்கிறார்கள், அதற்கு நாங்கள் என்ன செய்வோம் என்பார்கள் (மேலே உள்ள சில பின்னூட்டங்கள் இதை உறுதிபடுத்துகின்றன).

    கோயில் கருவரையில் போக முடியவில்லையே என்று நினைக்காமல் தலித்துக்கு கோயிலுக்குள்ள வரவே அனுமதியில்லை, அப்போ நமக்கு கருவரைக்கு வர அனுமதியில்லாதது சரிதான் என்று நினைக்கின்றான், அப்படி நினைக்கும்போது கோவிலுக்குள் நுழைய முனையும் தலித்தை, கருவரைக்குள் நுழைய அனுமதியில்லாத பிற்படுத்தப்பட்டவன் எதிர்க்கின்றான், பிற்படுத்தப்பட்டவர்கள் வர்ணாசிரமத்தின் காவல்நாய்களாக இல்லாமல் முதலில் மேலிருப்பவனிடம் தன் உரிமையை கேட்கவேண்டும், எப்படி மேலுள்ளவனிடம் தன் உரிமையை கேட்பதில் நியாயம் உள்ளது என நினைக்க வேண்டும், அதே நியாயம் தலித்களுக்கும் உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    பிற்படுத்தப்பட்ட சாதிகள் வர்ணாசிரம காவல்நாய் வேலை செய்து என்ன பெரிதாக வாழ்க்கை முறையில் முன்னேறிவிட்டார்கள்? குடி, படிப்பு இல்லாமை, விழிப்புணர்ச்சி இல்லாமை, மத சமூக உரிமைகள் எதுவுமில்லாமல் தானே இருக்கின்றார்கள், இதெல்லாம் யாருக்கிருக்கின்றது? இந்த வர்ணாசிரமத்தினால் தலித்கள் நில உடமை / பண்ணையாரிடம் கூலி வாங்கும்போது வீட்டிற்கு வெளியே தெருவாசலில் நின்று வாங்குவார்கள், படையாச்சிகள் கேட்டிற்குள்ளே வீட்டின் தலைவாசலுக்கு வெளியே நின்று வாங்குவார்கள், "ஏய் படையாச்சிக்கு முதல்ல குடுத்தனுப்புங்கப்பா" என்று சொல்வார்கள், இந்த ஒன்றுக்குமுதவாத வெட்டி கவுரம் தான் அவர்களுக்கு போடப்படும் எலும்புத்துண்டு, மற்றபடி என்ன பெரிய வித்தியாசம் இவர்களின் வாழ்க்கையில் இருக்கின்றது? இந்த வெட்டி கவுரவத்தினால் படிப்பு, சுகமான வேலைகளையெல்லாம் பெற்றுள்ளார்களா? இல்லையே! ஆனால் இதெல்லாம் அனுபவிப்பவர்கள் யாரென்று தெரியாதா நமக்கெல்லாம், ஆனாலும் இந்த வெட்டி கவுரவ எலும்புத்துண்டுக்காக தலித்களின் வாழ்க்கையை கொடுமை நிறைந்ததாக மாற்றுவதும் இந்த பிற்படுத்தப்பட்டவர்கள் தான்.

    1987 வன்னியர் சங்கப்போராட்டத்தின் போது போராட்டத்தை கட்டுப்படுத்த சாதிக்கலவரத்தை தூண்டியது காவல்துறை, இதை உளவுத்துறை அதிகாரி ஒருவர் தன்னுடைய பணிக்கால அனுபவங்கள் என்று குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக எழுதியபோது குறிப்பிட்டிருக்கின்றார், அது போல சேரி பசங்கலாம் ரொம்ப ஆடுறாங்க படாச்சி(படையாச்சி) இதெல்லாம் நாங்க கேட்கமுடியாது, நீங்கதான் கேட்கனும் என்று தூண்டிவிட்ட கதைகளையும் நேரில் பார்த்திருக்கிறோம், ஆனால் அதையும் கேட்டுக்கொண்டு தகராறுக்கு சென்ற அறிவிலி சாதி வெறியர்கள் திருந்துவது விழிப்புணர்வு வரும்போது தான், அல்லது தலித்கள் அடிக்கு அடி என்று திருப்பி அடிக்கும்போது தான்.

    இதோ இந்த இணையத்தில் "வெள்ளத்தனைய நீர்மட்டம்" என்று விட்டது சிகப்பு பதிவில் ஒரு அனானி தன் சாதிவெறி காழ்ப்புணர்ச்சியை காட்டியது, அதற்கு ஒரு பெரிய எழுத்தாளர் ஒருவர் ஆதரித்து எழுதிய கொடுமையும் நடந்தேறியது. இங்கேயே படித்தவர்கள் என்று கூறிக்கொள்பவர்களாலேயே பிறரும் தங்களுக்கு இணையாக தங்களைத்தாண்டியும் செல்கிறார்களே என்று எரிச்சலில் வெறுப்பை உமிழுகிறார்கள், கிராமங்களில் படிப்பறிவில்லாத நேற்றுவரை நமக்கு கீழே இருந்தவர்கள் இன்று படித்து, வீடு கட்டுவதா? என்ற பொறாமை உணர்வு எல்லாவற்றையும் எரிக்கின்றது. மேலும் இந்த அடுக்குமுறை மேலே உள்ளவர்களுக்கு எல்லா வசதிகளையும் தருவதால் அடித்து பிடித்து போராடி மேலேறும் ஒரு சமூகம் மேலேறியவுடன் தன் கீழுள்ள சமூகத்தை ஒடுக்கிறது. இது வரலாற்று காலங்களில் வலங்கை, இடங்கை போர்கள் நிரூபிக்கின்றன, இதோ கடந்த ஒரு நூற்றாண்டில் போராடி போராடி மேலே வந்த (அவர்கள் யாருடன் போராடினார்களோ அவர்களே இன்று அதோ நாடார் சமூகத்தை பாருங்கள் என்கிறார்கள்) சமூகம் இன்று தலித்களை எப்படி நடத்துகிறது? இது தான் வர்ணாசிரமத்தின் மிகப்பெரிய விசயம், அதை எதிர்ப்பவர்களையே அது உள்ளிழுத்து விடும்.

    இவர்கள் தம் உரிமை எது என்று விழிப்புணர்ச்சி அடைய வேண்டும், எப்போது தாம் எங்கேயோ தம் உரிமைகளை இழக்கிறோம் என்று நினைக்கிறார்களோ அதே போல் தலித்களின் உரிமைகளை பறித்து வைத்திருக்கின்றோம் என்பதையும் உணர்ந்து விழிப்புணர்வு அடையவேண்டும், இவை இரண்டும் நடக்காத வரை வர்ணாசிரமத்தை காக்கும் காவல்நாய்களாகவும் சாதிவெறி மரத்தின் சல்லி வேர்களாகவும் தான் இருப்பார்கள்.

    // ...முட்டாள் கும்பலுக்கும்... மூடர் கூட்டத்திற்கும் ...இழிபிறப்புகளுக்கும் (இதைத்தான் ஜாதித் திமிர் என்கிறார்களோ?) வேண்டுமானால் இது உண்மையாய்த் தெரியும்.//
    இழிபிறப்பு என்பது நாகரிக வார்த்தை, இழிபிறப்பு என்று சொல்பவர்கள் நாகரீக கணவான்கள், ஆனால் தே...மகனே என்பவர்கள் அநாகரீகவாதிகளா? இழிபிறப்பு என்பதற்கும் தே...மகனே என்பதற்கும் பொருளில் ஏதேனும் வித்தியாசமிருக்கின்றதா? ஆனால் இணையத்தில் இழிபிறப்பு என்பது நாகரிக வார்த்தை, தே..மகனே என்பது கெட்டவார்த்தை, நல்ல வேளை தருமி அய்யா நீங்களாவது இதை கண்டித்தீர்களே!!!

    ReplyDelete
  37. //இன்று ஜாதியை - ஜாதியை மட்டுமே வைத்து தங்கள் ஓட்டு வங்கியை நிர்ணயித்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளுக்கும், ஜாதிக்கட்சிகளுக்கும்தான் முதலில் ஆணி அடிக்க வேண்டும்.சுதந்திரத்திற்கு முன் இருந்ததைவிட இப்போது அதிகமான ஜாதி சச்சரவுகள் இருப்பதற்குக் காரணம் அவர்கள்தான்
    //
    சுப்பையா வாத்தியார் அவர்களே, இப்போது கூட சாதி சச்சரவே வராமல் போய்விடும், அதாவது அவரவர்களுக்கு வரையறுக்கப்பட்ட வேலைகளை, கொடுக்கப்பட்டவைகளை மட்டும் அவரவர்கள் செய்தால், தலித்கள் ஊரில் நுழையாமல் சேரியிலேயே வாழ்ந்து, செருப்பு போடாமல், பொது சுடுகாடு கேட்காமல் தனி டம்ளாரை எதிர்க்காமல் இருந்தால் ஏன் சாதிப்பிரச்சினை வரப்போகிறது, பிற்படுத்தப்பட்டவர்கள் விவாசய கூலி வேலை செய்தோமா? காவல் காத்தோமா என்று இல்லாமல் படிக்க வருவதினால் இடஒதுக்கீடு கேட்கிறார்கள், சிதம்பரம் கோவிலில் போய் தமிழில் பாடவேண்டும், நானும் பாடுவேன் என்று பிரச்சினை செய்கிறார்கள், சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் மட்டும் தான் பாடவேண்டுமென்று முறையிருக்க இவர்கள் ஏன் இதை கேட்கிறார்கள், இதை கேட்காமல் இருந்தால் சாதிப்பிரச்சினையே வராது அல்லவா? என்பதில் எத்தனை நியாயம் உள்ளது, சுதந்திரத்திற்கு முன்பிருந்த நிலை இது, ஆனால் நீங்கள் சொன்ன அதே சாதிகட்சிகள் தான் ஒரு கிராமத்தில் வன்கொடுமை செய்யப்படும் தலித்துக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் நிற்கின்றன, இன்னமும் கேட்டால் தலித்களின் நிலமை மிக மோசமாகமல் இருப்பதற்கு காரணம் தலித் சாதிகட்சிகள் தான், அதே போல சிதம்பரம் கோவிலில் பாட போராடுவது நீங்கள் சொன்ன சாதிகட்சிகள் தான், சமூகத்தில் மறுக்கபட்ட கல்விக்காகவும், வேலைக்காகவும் போராடியது இன்னொரு சாதிக்கட்சி.

    வாத்தியாரய்யா கொஞ்சம் கடந்த கால சாதிக்கட்சிகளின் அரசியலை பார்த்தீர்களென்றால் பாமக, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் மட்டுமே தாக்குபிடித்தன, முதலியாருக்காக ஆரம்பித்த கட்சிகளும், மற்ற சாதிகளுக்காக ஆரம்பித்த கட்சிகளும் காணாமல் போய்விட்டன, ஏனென்று யோசித்தீர்களென்றால் சில விசயங்கள் புரியும், முதலியார் சமூகத்திற்கு ஒரு கட்சி வந்து தான் அவர்களுக்கு படிப்போ, உரிமைகளோ வாங்கித்தரவேண்டுமென்பதில்லை, அதனாலேயே மற்ற கட்சிகள் காணமல் போக, எந்த மக்களுக்கு அரசியல் சமூக உரிமைகள் தேவைப்படுகிறதோ அந்த கட்சிகள் மட்டுமே நிற்கின்றன. இந்த சமூகங்களுக்கும் மற்றவர்களைப்போல சமுதாய, அரசியல் உரிமைகள் கிடைக்கும்போது இந்த கட்சிகள் தேவைப்படாது.

    எல்லோருக்கும் அவரவர்கள் பங்கையும் உரிமையையும் இந்த சமுதாயமும் அரசும் தரும்போது சாதிக்கட்சிகளின் தேவை இருக்காது, அது வரை அடிப்படை அறியாமல் சாதிக்கட்சிகள் மீது மட்டையடி மட்டும் தான் இருக்கும்.

    ReplyDelete
  38. தருமி அவர்களே, உங்கள் வாதத்தை அறிவுபூர்வமாக முழுவதும் உடன்பட இயலாத போதும் உணர்வுபூர்வமாக முழுதும் உடன்படுகிறேன். நிச்சயமாக ஒரு பிரிவினரை கை காட்டிவிட்டு மற்றவர்கள் குளிர்காய்வதுதான் நடக்கிறது. அறுபது ஆண்டுகள் சுதந்திரம் கிடைத்தும் சட்டங்கள் இயற்றியும் இன்றும் தலித்துகள் அடிப்படை பாதுகாப்பின்றி , சமூக முன்னேற்றத்தை விடுங்கள், இருப்பது எல்லா 'மேல்சாதி'யினருக்கும் வெட்கக் கேடுதான்.

    ReplyDelete
  39. ஒரு சில பின்னூட்டங்களைப் படித்ததும், தருமி அவர்கள் எழுதியுள்ள சொற்களின் வீரியம் இன்னும் பலமாக என்னை அறைந்தது!

    சாதீயம் ஒழியாதிருக்க ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு "நியாயங்கள்" [??] கற்பிக்கப் படும், எத்தனை தருமிகள் ஆணியடிக்க முயன்றாலும்!

    வாழ்க சாதீயம்!
    வளர்க அதில் குளிர் காய்பவர்கள்!
    வெல்க தமிழகம்!

    புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  40. ஒரு சில பின்னூட்டங்களைப் படித்ததும், தருமி அவர்கள் எழுதியுள்ள சொற்களின் வீரியம் இன்னும் பலமாக என்னை அறைந்தது!

    சாதீயம் ஒழியாதிருக்க ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு "நியாயங்கள்" [??] கற்பிக்கப் படும், எத்தனை தருமிகள் ஆணியடிக்க முயன்றாலும்!

    வாழ்க சாதீயம்!
    வளர்க அதில் குளிர் காய்பவர்கள்!
    வெல்க தமிழகம்!

    புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  41. இந்த ஆணி அடிக்கும் சொல்லாடலை எப்படிப் பிடித்தீர்கள்? ஒரு இலக்கிய ஆர்வத்தில் வேரைத் தேடிப் போனால் எங்கேயோ போகிறதே?

    இந்தப் பதிவின் மீது எனக்கு ஆர்வம் எழுந்ததின் காரணம் நீங்கள் சில தீர்வுகளைப் பரிந்துரைக்கிறீர்கள். இதைப் பற்றிப் பேசும் பலரும் தீர்வை நோக்கியதாக தங்கள் எழுத்தை வைப்பதில்லை. மூன்று தீர்வுகளையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடிந்தாலும் எனக்குத் தோன்றும் வேறு சிலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு முன் பதிவைப் பற்றி சில வார்த்தைகள்.

    மூன்று ஆணிகளாக நான் புரிந்து கொள்வது:

    1. எல்லா சாதிக் கொடுமைகளுக்கும் காரணமாக ஒரு சாதியினரையே கைகாட்டிக் கொண்டிருப்பது நிறுத்தப்பட வேண்டும்.
    2. யார் எந்த சாதிக் கொடுமையை செய்தாலும் அவர்களின் சாதி அடையாளங்களோடு அவர்கள் அடையாளம் காட்டப்பட வேண்டும்.
    3. தலித்துகள் தங்களுக்குள்ளேயே வேற்றுமைகள் பாராட்டாது தமது முனேற்றத்துக்கு உழைக்க வேண்டும்.

    // பார்ப்பனீயமே இன்றுள்ள சாதீயக் கொடுமைகளுக்கு அடிமைத்தளம் அமைத்துக் கொடுத்த சனாதன
    தர்மத்தை அன்றிலிருந்து இன்றுவரையும் கட்டிக் காத்து, நிலைத்து நிற்க வைத்துள்ளது என்பது ஒரு
    வரலாற்று உண்மை. கல்வியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முதலிடத்தைத் தங்களுக்கென்றே
    வைத்துக் கொண்டு அக்கல்வியால் சமூகத்தில் ஓர் உயர்ந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்கள்
    என்பதும் ஒரு மறுக்க முடியா உண்மை //

    இன்றைய சமுதாய நிலையின் காரணங்களில் பெரும்பங்குக்கு சொந்தமான நானூறு ஆண்டுகால ஆங்கிலேய ஆட்சியை எந்த கணக்கிலும் எடுத்துக் கொள்ளாமல் இந்தக் கருத்தாக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இந்த அடித்தளத்தில் எழுப்பப்பட்டிருக்கும் உங்கள் கட்டுரை உங்கள் முதல் ஆணியுடன் இதே கருத்தாக்கத்தில் முரண்படுகிறது. இதைச் சொல்லாமல் முதல் ஆணி சொல்லப்பட்டிருந்தால் முதல் ஆணியில் உங்களுடன் உடன்படுவேன்.

    இரண்டாவது ஆணி இப்போது அவ்வப்போது அறையப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. ஆனால் கொடுமைகளச் செய்தவர்கள் யாரென்பது தெரியாமல் இருந்ததற்கும் இப்போது தெரிந்தாலும் அதற்குக் காரணமாக ஒரு புள்ளியை நோக்கி வைக்கப்படும் வாதங்கள் வருவதற்கும் ஒரே நிலைப்பாடு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அந்த நிலைப்பாட்டை நீட்டினால் அது தீர்வை நொக்கிச் செல்லவில்லை.

    மூன்றாவது ஆணியில் முற்றிலும் உடன்படுகிறேன். மேலும் தலித் சமுதாயத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இதற்கான வழிமுறைகளை யோசிக்க வேண்டும்.

    இங்கு வந்த பின்னூட்டங்கள் தாம் சார்ந்திருக்கும் அரசியல் நிலைப்பாடுகளை ஒட்டியே அமைகின்றன. அடித்தட்டு மக்களின் மேலுள்ள கரிசனத்திவிட மேல்தட்டு மக்கள் மேல் சாடுதலே மேலோங்கி இருப்பதும், மூல காரணம் அதுவே என்பது போன்ற வாதங்களும் தீர்வாக எதைச் சொல்லுகின்றன?

    ஆணிகளுக்கு அப்பால் நான் சொல்ல விரும்புவது இதுதான்.

    முன்னேற நினைத்து அதற்காக உழைப்பவர் எவராக இருந்தாலும் இன்றைய சமுதாயத்தில் அவர் முன்னேறுவது என்பது சர்வ நிச்சய சாத்தியம். இதற்கான வழிவகை அறியாதவர்களுக்கும் உணராதவர்களுக்கும் உதவுதலும் எவ்வகையில் உதவுவது என்று யோசித்தலும் நாம் தீர்வை நோக்கிச் செல்கிறோம் என்பதைச் சொல்லும்.

    ReplyDelete
  42. அரைவேக்காடு மதங்களும்,முட்டாள் தனமான புராணங்களும் இருக்கும் வரையில் இந்தியாவில் சாதியக் கொடுமைகள் மறையாது.
    வஞ்சகர்களையும்,சோம்பேறிகளையும்,தற்குறிகளையும் உருவாக்கும் கோவில்கள்,வழிபாட்டுத் தளங்கள் இருக்கும் வரை சாதித் திமிர் குறையாது.இறைவன் என்று ஒருவன் இல்லை என்ற எண்ணம் மனிதனுக்கு வரும்வரை அனைத்து விதமான கொடுமைகளும் நடந்து கொண்டுதான் இருக்கும்.இருக்கும் அத்தனை ஆணிகளையும் இறைவனின்(இருந்தால்) முகத்தில்தான் அடிக்கவேண்டும்.வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

    ReplyDelete
  43. //
    மேல்தட்டு மக்கள் மேல் சாடுதலே மேலோங்கி இருப்பதும், மூல காரணம் அதுவே என்பது போன்ற வாதங்களும் தீர்வாக எதைச் சொல்லுகின்றன?
    //

    இதற்குப் பெயர் zero sum game.

    அதாவது ஏழைகள் ஏழையாக இருப்பதற்குக் காரணம் பணக்காரர்கள் பணக்காரர்களாக இருப்பதனால் தான் என்ற எண்ணம்.

    மேலே இருப்பவனிடமிருந்து பிடுங்கித்தான் கீழே இருப்பவனுக்குக் கொடுக்கமுடியுமாம்.

    சினிமாவில் வேண்டுமானால் இந்த Zero sum game நன்றாக இருக்கும். நிஜ வாழ்க்கையில் there is rarely any, zero sum problem.

    ReplyDelete
  44. எல்லோரும் சொல்லிவிட்டார்கள். இனி என்ன சொல்வது.

    Excellent post sir.

    ReplyDelete
  45. தருமி அய்யா,

    நல்ல பதிவு என ஒரு வரியில் மட்டும் சொல்ல தோன்றவில்லை. பதிவையும், பின்னூட்டங்களையும் படித்ததில் சில பின்னூட்டங்கள் வழக்கமான ஆதிக்க கருத்துக்களுக்கு ஆதரவு என்பதில் வியப்பில்லை.

    //இந்த நிலையில் இந்தக் கீழ்த்தரச் செயல்களுக்கு மூவாயிர, நான்காயிர ஆண்டு வரலாற்றைச் சொல்லி அந்த உயர்த்திக் கொண்டவர்களையே சாடிக்கொண்டிருப்பதை விடவும், இன்றைய தேவை யார் ஒரு கொடுமையைத் தலித்துகளுக்கு எதிராகச் செய்கிறார்களோ அவர்களைப் "பெயரிட்டு", அவர்களைத் தோலுரித்துக் காட்ட வேண்டும்.//
    மக்கள் சமஉரிமையும், சுயமரியாதையும் உள்ளவர்களாக வாழ அனுமதிக்காது மத, புராண காரணங்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு நிற்பவர்கள் எந்த சாதியிரன்ராய் இருப்பினும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். தன்னை விட சக மனிதனை கீழாக நடத்துவதை அறத்திற்கு எதிரானதாக பார்க்கும் தன்மையும் அப்படியான செயல்களை சாதி வரையறைகளை கடந்து கண்டிப்பதும் வளரவேண்டும். அந்த பண்பு இந்திய சமூகத்தில் இருக்கிறதா என்பது கேள்வியே!

    //நமது மீடியாக்களிலும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் நடக்கும்போது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்களைப் பற்றிய விவரங்கள் வெளியே தெரியாதபடி 'பாதுகாத்து' விடுகிறார்கள். நம் சமூகத்தின் உண்மை முகங்கள் நமக்கே தெரியாமல் போய்விடுகின்றன. மீடியாக்களில் தலித்துகளின் மீது "caste hindus" / "ஜாதி இந்துக்களின்" வெறியாட்டம் என்றுதான் வரும். (அப்படியானால், தலித்துகள் என்ன சாதியில்லா இந்துக்களா? அல்லது அவர்கள் இந்துக்களே இல்லையா? இரண்டாவதுதான் சரியென்பது என் எண்ணம்.) யார் இந்த "caste hindus" "ஜாதி இந்துக்கள்" என்று யாருக்கும் தெரியாமலே போய்விடுகிறது. //

    தலித்துகள் இந்துக்களே அல்ல! அவர்களது மதமும், வழிபாட்டுமுறைகளும், கலாச்சாரமும் இந்துக்களது வாழ்க்கைமுறையல்ல. இங்கு 'இந்து' என நான் குறிப்பிடுவது பார்ப்பனீய (இது சாதியை குறிப்பிடும் சொல்லாடல் அல்ல) மதத்தையே.
    ஆதிக்கசாதியினரின் புனித பசு, தலித்மக்களுக்கு உணவும், தோல் தரும் தொழிலுமாகும். அனைவரும் இந்து என்பது எந்த விதத்தில் நியாயம்?

    யார் இந்த அடக்குமுறையில் நேரடியாக ஈடுபடுவது என்பது மட்டுமல்ல, இந்த வெறியாட்டங்களுக்கு பின்னால் உள்ள அமைப்புகள்/சாதியினரின் அடையாளங்களும் வெளிவரவேண்டியது அவசியம். இன்று பார்ப்பனீயம் ஒரு சாதியுடன் முடிந்து விடவில்லை. பார்ப்பனீயம் தலை முதல் கால்வரையிலான சாதியினரிடம் பரவசெய்யப்பட்டிருக்கிறது. நான் இந்த சாதி என சொல்வதற்கு என்று நாம் வெட்கப்படுகிறோமோ?

    சமீபத்தில் அய்யாவழி மதத்தின் தலைமைபதியில் பாலபிரஜாதிபதி அடிகளாருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. சாதி பற்றி அவர் சொன்ன சில வரிகள் "கணவன் மனைவியை அடிக்கிறான், மனைவி பிள்ளையை அடிக்கிறாள், பிள்ளை நாயை அடிக்கிறது" வர்ணாஸ்ரம அடுக்கில் தனக்கு கீழே இவன் இருக்கிறான் என்னும் கீழ்த்தரமான மனிதத்தனமற்ற செயலை விவரிக்க இதைவிட எழிதான வார்த்தைகள் இல்லை.

    வர்ணாஸ்ரம சாதி அடுக்கில் கீழ்நிலையிலிருந்து யார் ஒடுக்குகிறார்கள் என்று பார்க்கும் போது பல வேதனைகள் வெளிப்படும். சாதி அடக்குமுறையும் வெறியாட்டமும் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், சமூகம் என பல கோணங்களில் பிரச்சனைகளை கொண்டது.

    தமிழகத்தில் தஞ்சை, கும்பகோணம், மதுரை, திருச்சி, கோவை போன்ற பகுதிகளில் நிலஉரிமை, தொழில் உறவுகள், உள்ளாட்சி அமைப்புகளில் தலித் மக்களின் தலைமை பொறுப்புகளுக்கு எதிராக என வெடிக்கிற மோதல்களின் பின்னால் இருக்கிற ஆதிக்க சாதியினர் யார் என்பது அனைவருக்கும் தெரிந்தது.

    //சாதிகளை நம் சமூகத்திலிருந்து ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. நம் சமுதாயத்தின் நீண்டு, நிலைபெற்ற களங்கமாக இன்னும் எத்தனை எத்தனை காலம் இருக்கப் போகிறதோ..? ஆகவே, சாதீய வேறு பாடுகளைக் களைய நினைப்பவர்கள் செய்ய வேண்டியவைகளில் முன்னால் நிற்பது இரு வேறு பட்ட நிலைக் களன்கள்.//

    எளிதாக அழித்துவிட இயலாதவாறு தந்திரமாக பின்னப்பட்டது தான் சாதியை போதிக்கிற வர்ணாஸ்ரமம். பிறப்பால் வருவதாக சொல்லும் ஒன்றை தனது வாழ்வின் கலாச்சார எல்லைகளுக்குள் எப்படி மாற்றுவது? அதனால் தான் அண்ணல் அம்பேத்கார் புத்தமதத்திற்கு மாறினார். தலித்மக்களும், சாதி மறுப்பாளர்களும் பார்ப்பனீய இந்துமதம் விதித்திருக்கிற மத,கலாச்சார கட்டுகளை உடைத்து தங்களது மத வழிபாட்டுமுறைகளை 'புதிய எதாவது பெயரில்' அழைக்க துவங்குதலும், பார்ப்பனீய சங்பரிவார அமைப்புகளை புறந்தள்ளுவதிலும் தீர்வுகள் பிறக்கலாம். "அனைவரும் இந்துக்களே" என்ற கோசம் இருக்கும் வரை வர்ணாஸ்ர சாதி அமைப்புமுறையும் சேர்ந்தே ஒட்டிக்கொள்கிறது. "எது" விடுதலைக்கு தடையாக இருக்கிறதோ "அந்த தளைகளை" கழைவோம். "அது" தன் பௌத்ரமானது என்பவர்கள் அதை வைத்து வழிபடட்டும்!

    //இதையெல்லாம் விடவும் தலித்துகள் தங்களுக்குள் உயர்வு தாழ்வு சொல்லி ஒற்றுமையின்றி இருக்கும் வரை அவர்களின் முயற்சிகள் எந்தப் பயனுமில்லாமல்தான் இருக்கும். அவர்கள் முதலில் தங்கள் 'வீட்டைச்' சீர்செய்து கொண்டு ஒரே முனைப்போடு தங்கள் உயர்வுக்காகப் போராடினாலே அதில் அர்த்தமும் இருக்கும்; பலனும் இருக்கும். அவர்களுக்காக மற்றவர்கள் போராடுவது என்ற நிலை மாறி, தாங்கள் எழ வேண்டும் என்ற தீவிரம் அவர்கள் மனத்தில் எழவேண்டும். அவர்களை ஒன்றுபட்டு எழ வைப்பதற்கு அவர்கள் மனத்தில் அந்த அக்கினிக் குஞ்சு எப்போது விழுமோ ...?//

    படிநிலைகளுக்குள்ளேயே யார் உயர்ந்தவர்கள் என்ற வெறி தான் மற்ற எல்லா அடக்குமுறைகளிலிருந்தும் சாதியை தனித்தன்மை வாய்ந்த அடக்குமுறையாக சித்தரிக்கும் காரணிகளில் ஒன்று. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஏற்றப்பட்ட சாதியாதிக்க சிந்தனையின் விளைவு.

    இந்த ஆதிக்கத்தின் பாதிப்பினால் அச்ச உணர்வும், தாழ்வுமனப்பான்மையும் மேலோங்கி கிடக்கிற புறக்கணிக்கப்பட்ட மனிதர்களுக்கு மனித ஆளுமை, அச்சம் தவிர்த்தல் என ஆயிரம் விடயங்கள் அவசியமானது. நமது கல்வி அதற்கு துணையாக இருக்கிறதா? இது பற்றிய விழிப்புணர்வு ஊட்ட இன்றைய காலத்தில் சமூக, அரசியல் மாற்றம் நோக்கி உழைக்கும் தலைமையும் குறைவே எனலாம்! மாற்றம் நிகழாமல் இல்லை... விழிப்புற்றால் மாற்றமும் எழுச்சியும் வரும்.

    மொத்தத்தில் உங்களது பதிவில் கற்றுக்கொண்டவை ஏராளம். தொடருங்கள் அய்யா!

    ReplyDelete
  46. வஜ்ரா,
    //Is that your subjectivity?//
    YES

    //நான் பிராமணன் அல்ல.
    நான் கேட்பது. பிராமணர்கள் எதற்காக ஒரு சமூகச் சீர் கேட்டுக்கு அதிகப் பொறுப்பு வகிக்க வேண்டும் ?.//

    எதற்கு அந்த முதல் வாக்குமூலம்?

    is it to prove that yours are always not subjective judgments? அல்லது, உங்கள் "நடுநிலை'யைப் பறையறிவிக்கவா?
    அல்லது, 'பாவப்பட்ட' அவர்களுக்கு
    எப்போதும் வக்காலத்து வாங்குவதை நியாயப் படுத்தவா?

    தெரியாததால் கேட்டேன்...அவ்வளவுதான்.
    :)

    ReplyDelete
  47. கல்வெட்டு,

    நன்றி.

    புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  48. SP.VR.சுப்பையா,

    அப்படி ஒரேயடியாக அரசியல்வாதிகளைக்
    குற்றம் சாட்டிவிட்டு நாம் தப்பித்துக்
    கொள்ளக் கூடாது. என் சாதிக்காரன்
    நின்றால் அவனுக்குத்தான் என் ஓட்டு
    என்று நாம் சொல்வதாலும், செய்வதாலுமே அவர்கள் சாதியைவைத்து
    விளையாடுகிறார்கள். தவறை நம்மீது
    வைத்துக் கொண்டு அவர்களுக்கு எதற்கு ஆணி அடிக்க வேண்டும்? 'மக்கள் எவ்வழி; அவ்வழி நம் மன்னர்கள்'!

    ReplyDelete
  49. குழலி,
    //முதலில் தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியம் வேண்டும், அதற்கு குறைந்த பட்ச நேர்மை வேண்டும், //

    நான் எழுத நினைத்து விட்டுப் போனதை இவ்வளவு சரியாக இங்கு தந்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றியும் கூட..

    //உச்ச சாதி ஊடகங்கள் அந்த சாதிக்கொடுமையை செய்தது பிற்படுத்தப்பட்ட சாதியாக இருந்தாலும் அந்த சாதியின் பெயரை சொல்வதில்லை, // இதற்கு நீங்கள் சொல்லும் வாதத்தோடு எனக்கு முழுமையான ஒப்புதல் இல்லை.

    //வர்ணாசிரமம் இத்தனை காலமும் உயிரோடு வலுவாக இருப்பதற்கு காரணம் அதன் அடுக்குமுறை தான், //
    a very very valid point.

    ReplyDelete
  50. மணியன்,
    "எவ்வளவு தப்போ அந்த அளவுக்குக் குறைத்துக் கொண்டு அரசர் பொற்கிழி கொடுத்தால் போதும்" - என்பது போலுள்ள
    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி :)

    ReplyDelete
  51. sk,
    நன்றியும், புத்தாண்டு வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  52. //வர்ணாசிரமம் இத்தனை காலமும் உயிரோடு வலுவாக இருப்பதற்கு காரணம் அதன் அடுக்குமுறை தான்//

    அப்படியா? ஆச்சரியம் தான் போங்க.

    தொல்காப்பியம் படிச்சீங்களா? இல்லைன்னா தொல்காப்பியத்துக்கு உரை எழுதுனவர் கிட்ட போய் கேளுங்க.

    ReplyDelete
  53. //தொல்காப்பியம் படிச்சீங்களா? //
    இல்லீங்களே..

    //இல்லைன்னா தொல்காப்பியத்துக்கு உரை எழுதுனவர் கிட்ட போய் கேளுங்க.//
    அவரையும் தெரியாதுங்க. எனக்குத் தெரிஞ்சவரெல்லாம் ராஜசன் அப்டிங்கிற, இதையெல்லாம் கரைச்சுக் குடிச்சவர்தான்...அவரே சொல்லிட்டா நல்லா இருக்குமே.

    ReplyDelete
  54. //
    எதற்கு அந்த முதல் வாக்குமூலம்?

    is it to prove that yours are always not subjective judgments? அல்லது, உங்கள் "நடுநிலை'யைப் பறையறிவிக்கவா?
    அல்லது, 'பாவப்பட்ட' அவர்களுக்கு
    எப்போதும் வக்காலத்து வாங்குவதை நியாயப் படுத்தவா?

    தெரியாததால் கேட்டேன்...அவ்வளவுதான்.
    :)
    //

    தருமி சார்,

    This is called subjectivity என்று நீங்கள் கொடுத்த explanation க்காக நான் போட்ட Rhetoric question. அதில் ஞாயப்படுத்த எதுவும் இல்லை.

    நான் என்றுமே நடுநிலைவாதி என்று சொல்லிக் கொண்டதில்லை, கொள்வதுமில்லை, கொள்ளப் போவதுமில்லை.

    நான் ஒரு இந்து. என் பார்வை இந்து என்ற முறையில் சாய்வு உள்ள ஒரு அபிப்ராயமே. என் அபிப்ராயப்படி எந்த ஒரு opinion ம் சாய்வு உள்ளதே, என் பார்வை, opinion உட்பட.

    Those who claim to be centrist are simply hypocrites.

    But, my question remains open. If you give more responsibility to Brahmins for caste opression (which in my opinion is a social evil), would you be kind enough to accept that whatever Good, Indians have achieved so far, they have more responsibility in that too ?

    ReplyDelete
  55. //ராஜசன் said...
    //வர்ணாசிரமம் இத்தனை காலமும் உயிரோடு வலுவாக இருப்பதற்கு காரணம் அதன் அடுக்குமுறை தான்//

    அப்படியா? ஆச்சரியம் தான் போங்க.

    தொல்காப்பியம் படிச்சீங்களா? இல்லைன்னா தொல்காப்பியத்துக்கு உரை எழுதுனவர் கிட்ட போய் கேளுங்க.//

    :))

    ReplyDelete
  56. //
    வர்ணாசிரமம் இத்தனை காலமும் உயிரோடு வலுவாக இருப்பதற்கு காரணம் அதன் அடுக்குமுறை தான்,
    //

    சாதி அடுக்கு முறை வலுவாக இருப்பதற்கு வர்ணாசிரமம் என்கிற instituition தான் கரணம் என்கிறீர்களா ? அல்லது வர்ணாசிரமம் என்பதே அடுக்கு முறை கோட்பாடு, அதன் வலு அதன் அடுக்குமுறை கோட்பாடு! என்று சொல்கிறீர்களா ?

    (the first is wrong assumption and second is circular logic).

    What is the definition of varnashramam according to this mahaanubhavulu who have claimed to have discovered the root cause of caste evil ?

    ReplyDelete
  57. சமூகப் பிரச்சனைகளை பகுத்து பார்க்க "இந்து" என்ற அளவீட்டை பயன்படுத்துவது சிலரின் சுதந்திரம். அதற்காக அவர்கள் கொண்டிருக்கும் கருத்து மட்டுமே உண்மை மற்றவை அனைத்தும் ஏமாற்று என்பது ஆதிக்கமனப்பான்மை. பிரச்சனைகளின் காரணமான சனாதன தர்மத்தை (வர்ணாஸ்ரமம்) ஒத்துக்கொள்வதில் என்ன தயக்கம்? உண்மையை ஒத்துக்கொள்வதால் எந்த சாதியினரையும் யாரும் ஒதுக்கி வைத்து தீண்டாமை பாராட்ட போவதில்லை. அது தீர்வாகவும் அமையாது. நோய்க்கு காரணத்தை அறிந்து அதை மாற்றுவது தான் மருத்துவம். சமூக மாற்றமும் அப்படியானதே!

    //But, my question remains open. If you give more responsibility to Brahmins for caste opression (which in my opinion is a social evil), //

    சமூகப்பிரச்சனைகளுக்கு பின்னால் காரணங்கள் உண்டு. அது தத்துவங்கள், அதை உருவாக்கி கடைபிடிப்பவர்கள், அதன் மூலம் பிறரை அடக்கி ஆழ்பவர்கள் என பரந்து விரிந்த காரணிகள் கொண்டது. சாதி என்கிற சமூகப்பிரச்சனைக்கு காரணமான வர்ணாஸ்ரம தத்துவம், அதை நம்புபவர்கள், கடைபிடிப்பவர்கள் என அனைத்தும் அடையாளம் காட்டப்படல் அவசியமானது.

    //would you be kind enough to accept that whatever Good, Indians have achieved so far, they have more responsibility in that too ?//

    இந்தியாவின் ஒட்டுமொத்த வளங்களையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியும், 'அரசியல் ஆக்கிரமிப்பில்' பல திட்டங்களை அனுபவித்தும் குறிப்பிட்ட சில ஆதிக்க சாதியினர் வளர்ந்தது அனைவரும் அறிந்தது தான். Is it sustainable and morally correct one? இந்தியாவின் அனைத்து விதமான மக்களுக்கும் இந்த வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா? என்பது அடிப்படையான கேள்வி.

    இடஒதுக்கீடு சமூகக்கண்ணோட்டத்துடன் சீரான வளர்ச்சியை உருவாக்க பயன்படுகிறது. இதை எதிர்ப்பவர்கள் யார் என்பதும் அப்பட்டமாக தெரிகிறது. முதலில் இடஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள், தற்போது உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீட்டை எதிர்ப்பதும், எதிர்காலத்தில் தனியார்துறை இடஒதுக்கீட்டை எதிர்க்க இருப்பதும் இந்த "சுயவளர்ச்சியை" நோக்கியதே.

    ReplyDelete
  58. கணேஷ்,
    நீங்கள் எழுதியவற்றில் எனக்கு மிகவும் அருவருப்பாகத் தோன்றிய மூன்று சொற்றொடர்களைக் குறிப்பிட்டு உங்களை மிகவும் - தவறுதான் என்றாலும் - மோசமான வார்த்தைகளால் சாடியுள்ளேன் உங்களுக்குரிய என் பின்னூட்டத்தின் முதல் பத்தியிலேயே.

    நான் சாடியது தவறென்று நீங்கள் நினைத்திருந்தால் அதற்கு எதிர்வினை செய்திருக்க வேண்டும். இல்லை, 'நான் சொன்ன வார்த்தைகளுக்கு எனக்கு இது வேண்டியதுதான்' என்று நீங்கள் நினைக்கும் பட்சத்தில் உங்கள் அந்த வார்த்தைகளைத் திரும்பப் பெற்றிருக்க வேண்டும். இரண்டையும் செய்யாது நீங்கள் எனக்குப் புரியாதவாறு எழுதியுள்ள பின்னூட்டத்திற்கு நான் ஏதும் பதில் சொல்ல விரும்பவில்லை.

    மன்னிக்கவும்.

    ReplyDelete
  59. ஓகை,

    //ஆங்கிலேய ஆட்சியை எந்த கணக்கிலும் எடுத்துக் கொள்ளாமல் ... முதல் ஆணியுடன் இதே கருத்தாக்கத்தில் முரண்படுகிறது.//

    நானூறு ஆண்டுகால ஆங்கிலேய ஆட்சியில் சனாதன தர்மம் "ஆணி" அடிக்கப்பட்டு (இங்கு -'உறுதி செய்யப்பட்டு' என்ற பொருளில் கொள்க) நம் சமுதாயத்தில் நிலைபெற வழிவகுக்கப்பட்டதே அல்லாமல் அந்த ஆட்சிக்காலத்தில்தானா இந்த "தர்மம்" தோன்றி வளர்ந்தது?

    //இங்கு வந்த பின்னூட்டங்கள் தாம் சார்ந்திருக்கும் அரசியல் நிலைப்பாடுகளை ஒட்டியே அமைகின்றன. அடித்தட்டு மக்களின் மேலுள்ள கரிசனத்திவிட மேல்தட்டு மக்கள் மேல் சாடுதலே மேலோங்கி இருப்பதும், மூல காரணம் அதுவே என்பது போன்ற வாதங்களும் தீர்வாக எதைச் சொல்லுகின்றன?//

    எனக்கு நீங்கள் சொல்வது வேறு விதமாகத் தோன்றுகிறது. நான் சமுதாயத்தை மூன்று படிக்கட்டு நிலைகளாகப் பார்த்து மூன்றிற்குமே "ஆணி" (இங்கே, 'குறை சொல்லுதல்' என்ற பொருள் கொள்க) அடித்திருக்கிறேன். ஆனால் மேற்படுத்திக்கொண்டோரே அல்லது அவர்களைத் தாங்குவோரின் பின்னூட்டங்களே பெரும்பாலும் வந்துள்ளதே; காரணமென்ன?

    //இந்த ஆணி அடிக்கும் சொல்லாடலை எப்படிப் பிடித்தீர்கள்?//

    அந்த hitting the nail on its head என்ற idiom-த்தை அப்படியே தமிழாக்கினேன். :)
    //ஒரு இலக்கிய ஆர்வத்தில் வேரைத் தேடிப் போனால் எங்கேயோ போகிறதே?//
    அப்டியா? அப்போ எங்களையும் அங்கே கூட்டிப் போங்களேன்; தெரிந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  60. ராவணன், சீனு,

    இருவருக்கும் நன்றி...

    ReplyDelete
  61. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  62. ஓகை,

    //ஆங்கிலேய ஆட்சியை எந்த கணக்கிலும் எடுத்துக் கொள்ளாமல் ... முதல் ஆணியுடன் இதே கருத்தாக்கத்தில் முரண்படுகிறது.//

    நானூறு ஆண்டுகால ஆங்கிலேய ஆட்சியில் சனாதன தர்மம் "ஆணி" அடிக்கப்பட்டு (இங்கு -'உறுதி செய்யப்பட்டு' என்ற பொருளில் கொள்க) நம் சமுதாயத்தில் நிலைபெற வழிவகுக்கப்பட்டதே அல்லாமல் அந்த ஆட்சிக்காலத்தில்தானா இந்த "தர்மம்" தோன்றி வளர்ந்தது?

    //இங்கு வந்த பின்னூட்டங்கள் தாம் சார்ந்திருக்கும் அரசியல் நிலைப்பாடுகளை ஒட்டியே அமைகின்றன. அடித்தட்டு மக்களின் மேலுள்ள கரிசனத்திவிட மேல்தட்டு மக்கள் மேல் சாடுதலே மேலோங்கி இருப்பதும், மூல காரணம் அதுவே என்பது போன்ற வாதங்களும் தீர்வாக எதைச் சொல்லுகின்றன?//

    எனக்கு நீங்கள் சொல்வது வேறு விதமாகத் தோன்றுகிறது. நான் சமுதாயத்தை மூன்று படிக்கட்டு நிலைகளாகப் பார்த்து மூன்றிற்குமே "ஆணி" அடித்திருக்கிறேன். ஆனால் மேற்படுத்திக்கொண்டோரே அல்லது அவர்களைத் தாங்குவோரின் பின்னூட்டங்களே பெரும்பாலும் வந்துள்ளதே; காரணமென்ன? - இது என் யோசனை...


    //இந்த ஆணி அடிக்கும் சொல்லாடலை எப்படிப் பிடித்தீர்கள்?//

    அந்த hitting the nail on its head என்ற idiom-த்தை அப்படியே தமிழாக்கினேன். :)
    //ஒரு இலக்கிய ஆர்வத்தில் வேரைத் தேடிப் போனால் எங்கேயோ போகிறதே?// அப்டியா? அப்போ எங்களையும் அங்கே கூட்டிப் போங்களேன்; தெரிந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  63. திரு,

    //ஆதிக்கசாதியினரின் புனித பசு, தலித்மக்களுக்கு உணவும், தோல் தரும் தொழிலுமாகும். அனைவரும் இந்து என்பது எந்த விதத்தில் நியாயம்? //

    //"அனைவரும் இந்துக்களே" என்ற கோசம் இருக்கும் வரை வர்ணாஸ்ர சாதி அமைப்புமுறையும் சேர்ந்தே ஒட்டிக்கொள்கிறது//

    இதே கருத்துக்களை நான் சொல்லி நிறைய எதிர்ப்புகளை மட்டுமே கண்டிருக்கிறேன். என் அந்தக் கருத்துக்களை ஆதரிக்க யாரும் இல்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். நீங்களும் அதே கருத்தைக் கொண்டிருப்பது நான் 'தனியாளல்ல' என்ற நினைப்பைத் தருகிறது. ஆனால் இப்போது நாம் இருவர் மட்டும்தானோ என்று தோன்றுகிறதே !

    //"கணவன் மனைவியை அடிக்கிறான், மனைவி பிள்ளையை அடிக்கிறாள், பிள்ளை நாயை அடிக்கிறது" வர்ணாஸ்ரம அடுக்கில் தனக்கு கீழே இவன் இருக்கிறான் என்னும் கீழ்த்தரமான மனிதத்தனமற்ற செயலை விவரிக்க இதைவிட எளிதான வார்த்தைகள் இல்லை.//

    நல்ல மேற்கோள். நன்றி.

    ReplyDelete
  64. வஜ்ரா,

    //But, my question remains open. If you give more responsibility ........., they have more responsibility in that too ? //

    my answer to this Q. is a simple YES with a small change. it was not "they have more responsibility ..". instead "they have more share" .
    it is very natural and logical too.நல்லா சாப்பிட்டவங்க -மற்றவங்க சாப்பாட்டையும் சேர்த்து - நல்ல ஹெல்த்தியா இருக்க மாட்டாங்களா என்ன? இருக்கணும்..அதுதான் சரி.அது ஒரு கேள்வியாக வேண்டிய அவசியமேயில்லை.

    எனக்கும் - my question remains open too. - எதற்கு அந்த முதல் வாக்குமூலம்? என் பழைய பதிவொன்றில் நான் கொண்ட இரு premises-களில் ஒன்று உங்கள் விஷயத்தில் தவறானதால் வந்த கேள்வி.

    *மேற்படுத்திக் கொண்டோரின் வரலாற்றுத் தவறை நீங்கள் மறுக்கிறீர்களா?

    *வாயில்லாப் பூச்சிகள் என்றெல்லாம் நாம் வழக்கமாகச் சொல்லி, பாவப்பட்டவர்கள் மீது நாம் இரக்கப்படுவோமே அது போன்ற நிலைப்பாடா உங்களுடையது?

    உங்களைப் பொறுத்தவரை மேற்படுத்திக் கொண்டோர் அது போன்ற 'பாவப்பட்ட' வாயில்லாப் பூச்சிகளா? அல்லது தவறே செய்யாத சமூகத்தினரை எல்லோரும் இப்படி 'கரிச்சுக் கொட்டுறாங்களேன்னு' வர்ர தார்மீகக் கோபமா?

    அல்லது "நான் ஒரு இந்து. " "நான் பிராமணன் அல்ல. " என்ற உங்கள் இரு வாக்குமூலங்களுக்கும் உள்ள தொடர்பா?

    நடுநிலைவாதி என்பதற்கு நீங்கள் தந்த விளக்கத்தை முழுமையாக ஒத்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  65. தருமி சார்,

    I think you will end up wasting nails.
    சுதந்திரத்திர்க்கு முன் இருந்த இந்தியாவில் வேண்டுமானால், நீங்கள் சொன்னபடி ஜாதியின் பேரில் பிரிவை உண்டாக்கி ஆதிக்கம் செய்தவர்களை தேடித் தேடி ஆணி அடித்திருக்கலாம்.
    சுதந்திரத்துக்கு பின் தமிழ் நாட்டில் ஆண்டவர்கள் பலரும் திராவிட பாதுகாவலர்கள்.
    அவர்கள் இருந்தும் இந்த பிரச்சனை ஓயவில்லை என்றால், அவர்களுக்கல்லாவா ஆணி அடிக்க வேண்டும்?
    1) சட்டம் முடுக்கிவிட்டு, ஏய்ப்பவனை ஒடுக்கலாம்
    2) ஒடுக்கப்பட்டவனுக்கு ஊடகங்கள் மூலமாக தினம் தினம், அவர்களுக்கு இழைக்கப்படுவது அநீதி என்று எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஊட்டலாம்.

    இதை விட்டுவிட்டு சனாதன தர்மத்தை இன்னும் குறை கூறுவது வீண் வாதம் என்று தான் தோன்றுகிறது.

    நான் இந்து. எனக்கு 'சனாதன தர்மம்' என்று ஒன்று இருப்பதே சில பதிவுகள் படித்துதான் தெரியும் :)

    ReplyDelete
  66. ////ஒரு இலக்கிய ஆர்வத்தில் வேரைத் தேடிப் போனால் எங்கேயோ போகிறதே?//அப்டியா? அப்போ எங்களையும் அங்கே கூட்டிப் போங்களேன்; தெரிந்து கொள்கிறேன்.//

    Dharumi: I think he relates to the phrase last nail in the coffin ;-). I think his deft choice of words call into question your (former?) Christian identity - dont you know that Hindus burn their dead? They dont place them in coffins, hit the nails on the coffins and bury them like Kishteens do, right?. You are a spoilt Hindu, right? Because you have been a Kishteen once!! Dharumi ayya, you should learn to punctuate what you write with escape clauses and loopholes like these people do - Oh I did not mean it, oh I did not mean that, and so on. Hypocrites! These people assign you to a fixed place as a sheep that has strayed from the herd, and yet do all the smooth talking about equality and other BS as if they are oblivous to the thousand pound sanathana gorillas that are perpetually pooping on our society. Hypocrites!!

    ReplyDelete
  67. //
    மேற்படுத்திக் கொண்டோரின் வரலாற்றுத் தவறை நீங்கள் மறுக்கிறீர்களா?
    //

    அது நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் என்பதைப் பொருத்தது. மேற்படுத்திக் கொண்டோர் என்றால் பிராமணர்கள் மட்டுமல்ல, முதலியார், செட்டியார், கோமுட்டிச் செட்டியார், ஆர்ய வைய்சியச் செட்டியார், ரெட்டியார், நாயக்கர், தேவர், இத்யாதி இத்யாதி என்று எல்லாப் பிரிவினரும் இருக்கின்றனர். ஆக, நீங்களே சொல்லிய குறிப்பிடச் சாதியைப் பெயரிட்டு அழைக்காமல் செய்யும் தவறில் நீங்களே இங்கு ஒளிந்து கொண்டு இப்படிக் கேட்கலாமா ?

    Forget it, its another rhetoric.

    The answer is NO. I accept that generally upper castes discriminated the lower castes. But, my opinion about this caste oppression is that its a social evil. Not brahmins or nor the castes that are forwarded are the only people responsible. Even the really oppressed and the so called "oppressed" should also share the responsibility.

    //
    வாயில்லாப் பூச்சிகள் என்றெல்லாம் நாம் வழக்கமாகச் சொல்லி, பாவப்பட்டவர்கள் மீது நாம் இரக்கப்படுவோமே அது போன்ற நிலைப்பாடா உங்களுடையது?
    //

    நான் யார் மீதும் இரக்கப்படவில்லை. பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த பலர் நேரடியாகவே சாதிப்பிறிவினைகளினால் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுக்கு வருத்தப் பட்டுள்ளனர்.

    அது சரி, இங்கே தலீத்துகள் வாயில்லாப் பூச்சிகள் போல் எண்ணிக் கொண்டு பலர் கொடி பிடிக்கிறார்களே அவர்களுக்கும் இந்த கேள்வி பொருந்துமா ?


    //
    உங்களைப் பொறுத்தவரை மேற்படுத்திக் கொண்டோர் அது போன்ற 'பாவப்பட்ட' வாயில்லாப் பூச்சிகளா? அல்லது தவறே செய்யாத சமூகத்தினரை எல்லோரும் இப்படி 'கரிச்சுக் கொட்டுறாங்களேன்னு' வர்ர தார்மீகக் கோபமா?
    //

    என்னைப் பொருத்தவரை யாருமே வாயில்லாப் பூச்சிகள் அல்லர்.

    ஒரு காலத்தில் நாடாண்ட நாடார்கள் தலீத்துகள் போல் வாழ்ந்தனர். இன்று மிகவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் வகுப்பினர் அவர்கள்.

    ஆகவே, எல்லோரும் வாயுள்ள பிரசங்கிகள் தான்.

    சில அதிகப் பிரசங்கிகளும் உண்டு.!!

    So, கடந்த 50/100 ஆண்டுகள் சரித்திரத்தை 5000 ஆண்டுச் சரித்திரம் என்று சொல்லும் பொய்யை நீங்கள் நம்புபவர் என்றால் அதற்கு நான் பொருப்பல்ல.

    "அவர்கள்" தவறுகள் செய்திருக்கிறார்கள். அதை அவர்களே மறுப்பதில்லை.

    As an example,
    அம்பேத்காரை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த நம்பூதரி கூட தான் செய்தது தவறு என்று ஒத்துக் கொண்டதாக சில பல மாதங்கள் முன்பு செய்தி வந்தது.

    We should work together to weed out caste inequality.

    That does not mean that you should create another heirarchy by putting the lower strata on top and bring the upper strata to the bottom. ( Reservation does this precisely. and is a very "simplistic" solution to complicated problem)

    இது பிரச்சனைய்க்கு தீர்வு கொடுக்காமல் பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகிறது.

    Once there was discrimination towards lower castes, now there is Discrimination towards upper castes in all fields! And they justify that by saying its necessary as upper castes oppressed lower castes.

    "போடா ஜாட்டான் என்று முன்னேறவேண்டும்" என்றால் அவர்களிடமிருந்து ஏன் பிடுங்கவேண்டும் ? பின் அதற்கு ஒரு சாக்கு சொல்லவேண்டும் ?

    ...
    ஓடப்பர் உடையப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகவேண்டும் என்று எண்ணுவது நல்ல எண்ணம் தான். ஆனால், ஓடப்பர் உடையப்பர் எல்லாம் மாறி எல்லோரும் "ஓடப்பர்" ஆவதனால் தான் ஒப்பப்பர் ஆவர் என்பது எந்த ஊர் சமத்துவம் என்று தெரியவில்லை.


    //
    அல்லது "நான் ஒரு இந்து. " "நான் பிராமணன் அல்ல. " என்ற உங்கள் இரு வாக்குமூலங்களுக்கும் உள்ள தொடர்பா?
    //

    நான் ஒரு இந்து நான் பிராமணன் அல்ல என்பது உண்மை. அதற்காக நான் வெக்கப் படவேண்டியதில்லை.

    I do not have to be apologetic being born a hindu.

    I am proud of it.

    உடனே நீங்க மேல் சாதி அதனால் பெருமையாகச் சொல்கிறீர்கள் என்பார்கள்.

    Even if i am born in an oppressed caste i will still be proud of being a hindu.

    No body oppresses other people because they are hindus, even if the dalits are christians or muslims they still are dalits and they get discriminated. That is the reason i call it a social evil.

    ReplyDelete
  68. தருமி,

    நீங்கள் பதிவிட்ட அன்றே பதிவைத் தனியாக ஒருமுறையும், பின்னர் தொடரும் பின்னூட்டங்களுடன் பலமுறையும் படித்துவிட்டேன். ஒரு வித்தியாசமான கோணத்தில் மிகநல்ல பதிவு. இந்தப் பதிவின் விளைவாய் நானறிந்த தலித் மக்களின் வாழ்க்கை நிலைமையினூடாகவும், அவர்கள் சார்ந்து வாழ்கிற, அவர்களுடன் உடனடித் தொடர்பில் இருக்கிற இன்னொரு உயர்சாதிக்காரர்கள் அவர்கள்மீது கடைப்பிடிக்கிற தீண்டாமை, அதே உயர்சாதிக்காரர்கள் அவர்களைவிடவும் மேல்சாதி அல்லது கடவுளுக்கு மிகஅருகில் இருப்பவர்கள் என்று சொல்லப்படுபவர்களிடம் காட்டுகிற பணிவு, அடக்கம், இன்னபிறவற்றின் ஊடாகவும் எனக்கு நானே ஒரு மனப்பயணம் செய்ய முடிந்தது. இதே வாழ்க்கையை அறிந்த, வாழ்ந்த என் நண்பனும் நானும் இவ்விடயம்குறித்து உரையாடியதும் இதில் அடக்கம்.இப்படியொரு உள்நோக்கிய பயணத்தை எனக்கு வழங்கியமைக்காக உங்களின் இந்த இடுகைக்கு நன்றி. அந்தவகையில் எனக்குத் தெரிந்த அந்த வாழ்க்கையின் அவலத்தை, அறியாமையைப் பகிர்ந்துகொள்ளவும் விருப்பம் உண்டு. நேரம் அமைகிறபோது செய்வேன்.

    இப்போதைக்கு இங்கு இரண்டு பின்னூட்டங்களை வழிமொழிகிறேன்.

    1. முதலில் தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியம் வேண்டும், அதற்கு குறைந்த பட்ச நேர்மை வேண்டும்

    2. நண்பர் திருவின் பின்னூட்டம் முழுதையும்.

    ///நீங்களும் அதே கருத்தைக் கொண்டிருப்பது நான் 'தனியாளல்ல' என்ற நினைப்பைத் தருகிறது. ஆனால் இப்போது நாம் இருவர் மட்டும்தானோ என்று தோன்றுகிறதே ! ///

    எழுதிச்சொல்லாத ஆனால் மனதில் அவ்வண்ணமே எண்ணம்கொண்டுள்ள என்னையெல்லாம் சேர்த்துக்கொள்ளமாட்டீர்களா கணக்கில்:))

    நண்பர் BNI,
    உங்கள் எழுத்துக்களில் உள்ளிருக்கும் நல்ல நோக்கை நான் பலவிடங்களில் பார்த்திருக்கிறேன். அதை உள்வாங்கவும் முயற்சித்திருக்கிறேன் என்பதாலேயே இவ்விடத்தில் இதைச் சொல்லத்தோன்றி எழுதுகிறேன். நீங்கள் மட்டுமல்ல, சனாதன தர்மம், அது ஏன் ஏற்படுத்தப்பட்டது? அதனால் யாருக்கு என்ன ஆதாயம் ஏற்பட்டது? அதன் பின்னணியில் யார்மீது ஏறி யார் உயரங்களைத் தொட்டார்கள்? என்கிற விடயங்கள் நம்நாட்டில் பெரும்பகுதியனரால் அறியப்படாமல்தான் இருக்கிறது இன்னமும். தீண்டாமையைக் கடைப்பிடிக்கிற ஒருவர் சனாதன தர்மம் அறிந்து அப்படி இருக்கிறார் என்று இங்கு சொல்லப்படுவதாகவா நீங்கள் நினைக்கிறீர்கள்? என் பாட்டிக்கு சனாதனதர்மம் தெரியாது, மனுசாத்திரம் பெண்களைப் பற்றிச் சொன்ன எந்த இழவும் தெரியாது. ஆனால் நாடாருக்குத் திண்ணையில்வைத்துச் சாதம் பரிமாறவும், தலித்துக்கு வாசலில் வைத்துச் சாதம் பரிமாறவும், மாதவிலக்காகும் பெண்ணை வெளியறையில் உட்காரவைக்கவும் தெரியும். காரணம் அறியாமை. இதற்கு எழுத்தறியாமை என்று பொருளல்ல. ஏனென்றால் இப்போது "சிதம்பரம் கோவிலுக்குள் இவர் கருவறைக்குள் எதற்குப் போகவேண்டும்?" என்று கணிணியில் எழுதிக் கேட்கிற எழுத்தறிவும், கல்வியறிவும் நிறையக் கொண்டவர்களுக்கும், என் பாட்டிக்கும் நான் சிந்தனைஅளவில் எந்த வித்தியாசத்தையும் பார்க்கவில்லை என்பதால் கல்வியறிவு இல்லாத அறியாமையை மட்டும் காரணம் சொல்லிவிடமுடியாது என நம்புகிறேன். இந்த அறியாமை வேறு. வாழ்க்கை, மதம், கலாசாரம், சமூகம் பற்றிய நம் வரலாறுகளை, கருத்தாக்கங்களைப் புரிய முயற்சிக்காத அறியாமை. அவற்றில் எவை கசடுகள் என்று கண்டறிந்து அவற்றைத் தூக்கிவீசத் துணியாத நம் அறியாமை. கசடுகளைப் பொத்திவைத்துக்கொண்டே என்னிடம் உள்ள எண்ணெய் நல்ல எண்ணெய் என்று காலத்திற்கும் சொல்லிக்கொண்டிருக்கலாம். என்ன ஒன்று? அதைப் பயன்படுத்திச் சமையல் செய்தால் பதார்த்தம் கெட்டவாசனையடிக்கும். அப்போது மூக்கைப் பிடித்துக்கொள்ள வேண்டியதுதான்.

    ReplyDelete
  69. செல்வநாயகி,

    என்னைப் போன்றவர்கள் அதிகமாக எழுதும்போது நீங்களெல்லாம் மிகக் குறைவாக எழுதுவதற்கு உங்களைக் குறை சொன்ன நினைவுண்டு. ஆனால் நீங்கள் அப்படியே இருங்கள் - முத்துச் சிதறல்களையும், மாணிக்கப் பரல்களையும் அவ்வப்போதுதான் விசிற வேண்டும்.

    எனக்கு ஒரு 'ராசி' உண்டு போலும் ! வழக்கமாகவே என் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்கள் மிக அருமையானவைகளாக இருப்பது கண்கூடு. உங்கள் பின்னூட்டம் மிகவும் அருமை. 'மக்களை' இத்தகைய பின்னூட்டங்களை "எழுத வைப்பதற்காகப்" பெருமை கொள்கிறேன்.

    விஷயத்துக்கு வருவோம்:
    //...என்னையெல்லாம் சேர்த்துக்கொள்ளமாட்டீர்களா கணக்கில்//

    உங்களோடு மூவரானோம்...! :)

    நீங்கள் BNI-க்குக் கொடுத்திருக்கும் விளக்கம் அருமையாக இருக்கின்றது. இது நம் மனத்துக்குள் நம்மையும் அறியாமலேயே தங்கிவிட்ட காலக்கசடு. இதைப் புரிந்து கொள்ளவோ, ஒத்துக்கொள்ளவோ மறுக்கும் நிலையைத் தான் அதிகம் காண முடிகிறது.

    நன்றி

    ReplyDelete
  70. BNI,
    //நான் இந்து. எனக்கு 'சனாதன தர்மம்' என்று ஒன்று இருப்பதே சில பதிவுகள் படித்துதான் தெரியும்//

    இதற்கு செல்வநாயகி தந்துள்ள பதில் எனக்குப் பிடித்திருக்கிறது. உங்களுக்கு எப்படியோ..

    அதோடு...
    நான் நம்மை ஆண்டு கொண்டிருப்பவர்களுக்கு ஆணி அடிக்கச் சொல்லவில்லை. உங்களுக்கும் எனக்கும், நம் மனத்தில் தங்கிவிட்ட கசடுக்கும்தான் ஆணி அடிக்கவேண்டுமெனக் கூறுகிறேன். சுப்பையா அவர்களுக்குச் சொன்ன பதிலையும் பார்க்க.

    ReplyDelete
  71. Selvanayaki,

    //என்னிடம் உள்ள எண்ணெய் நல்ல எண்ணெய் என்று காலத்திற்கும் சொல்லிக்கொண்டிருக்கலாம். என்ன ஒன்று? அதைப் பயன்படுத்திச் சமையல் செய்தால் பதார்த்தம் கெட்டவாசனையடிக்கும். அப்போது மூக்கைப் பிடித்துக்கொள்ள வேண்டியதுதான்.
    //

    புரிந்த மாதிரியும் இருக்கிறது.
    புரியாத மாதிரியும் இருக்கிறது.
    சனாதன தர்மத்தை எண்ணெய் என்கிறீர்களா, அதை தூர கிடாச வேண்டுமா?

    தருமி சொல்வது போல், IITல் இட ஒதுக்கீடு, UPSCல் எதிர்ப்பு, இதெல்லாம் செய்வதால் சிலர் பலரை ஒடுக்குகிறார்கள் என்றாகுமா?

    தன் மகனுக்கும் மகளுக்கும் இந்த ஒதுக்கீட்டால் பாதிப்பு வருமே என்ற உண்மையான ஆதங்கத்தால் எதிர்ப்பு காட்டுகிறார்கள் என்றும் கொள்ளலாமே.

    btw, IITல் திறமையானவர்களுக்கு நுழைவுத்தேர்வு வைத்தல்லவா எடுத்து வந்தார்கள். கிராமத்தில் படிப்பவன் IIT-JEE coaching எல்லாம் போக முடியாததால் இந்த இட ஒதுக்கீடாம்.
    ஒதுக்கிக் கொடுத்தால் முன்னேற்றம் வந்து விடுமா?
    இவ்வளவு வருடங்கள் வ்ராத முன்னேற்றம் IITல் சீட்டு கொடுத்தா வந்திடுமா?
    sorry to sound rude, ஒதுக்கீடு கிதுக்கீடு எல்லாம் பிரச்சனையைத் தீர்க்காது.

    தருமி சொல்லும் Nail has to be struck some place else, soon.

    இலவச அரிசியும், reservationம் நல்ல துருப்பு சீட்டுகள் - உண்மையான backward classesஐ இவை முன்னேற்றாது. பாதாளத்துக்குத்தான் இட்டுச் செல்லும்.

    இலவச கல்வி கொடு;
    வேலை வாய்ப்பை உண்டாக்கு;
    ஓட்டு வாங்க செய்யும் கயமைகளை குறை.

    தானாய் முன்னேறுவார்கள்!

    ReplyDelete
  72. vajra,
    //மேற்படுத்திக் கொண்டோரின் வரலாற்றுத் தவறை நீங்கள் மறுக்கிறீர்களா?
    //

    //The answer is NO.//

    there ends..


    //என்னைப் பொருத்தவரை யாருமே வாயில்லாப் பூச்சிகள் அல்லர். //
    கீழ் நிலையில் இருக்கும் தலித்துகள் இன்றும் வாயில்லாப் பூச்சிகள்தான். இதுதான் நிதர்சனம். புரிந்து கொள்ளவில்லையா, புரிந்து கொள்ள மறுக்கிறீர்களா என்று தெரியவில்லை.

    //... நாடாண்ட நாடார்கள் தலீத்துகள் போல் வாழ்ந்தனர். //
    முதல் பாதி - அப்டியா?

    //So, கடந்த 50/100 ஆண்டுகள் சரித்திரத்தை 5000 ஆண்டுச் சரித்திரம் என்று சொல்லும் பொய்யை நீங்கள் நம்புபவர் என்றால் அதற்கு நான் பொருப்பல்ல.//

    நிச்சயமாக அந்த உண்மையை நான் நம்புகிறேன். நீங்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை. இங்குதான் உங்கள் பழைய subjectivity வருகிறது. நாம் இருவருமே இந்தப் புள்ளியில் நேர் எதிர் எதிராக இருந்துகொண்டு பேசிக்கொண்டேஏஏஏஏஏஏ இருக்கிறோம்.

    உங்கள் வரிகளையே மாற்றிப் போட்டிருக்கிறேன் . அதில் இருக்கும் self contradiction -யைப் பாருங்களேன்: //ஒரு காலத்தில் நாடாண்ட நாடார்கள் தலீத்துகள் போல் வாழ்ந்தனர்....So, கடந்த 50/100 ஆண்டுகள் சரித்திரத்தை 5000 ஆண்டுச் சரித்திரம் என்று சொல்லும் பொய்யை நீங்கள் நம்புபவர் என்றால் அதற்கு நான் பொருப்பல்ல.//


    //Once there was discrimination towards lower castes, now there is Discrimination towards upper castes in all fields!//

    joke of the year..nay, century. !!

    //நான் ஒரு இந்து நான் பிராமணன் அல்ல என்பது உண்மை. அதற்காக நான் வெக்கப் படவேண்டியதில்லை.//
    வெட்கப்பட வேண்டிய ஒன்று நான் எங்கே சொன்னேன்.

    ReplyDelete
  73. //
    உங்கள் வரிகளையே மாற்றிப் போட்டிருக்கிறேன் . அதில் இருக்கும் self contradiction -யைப் பாருங்களேன்: //ஒரு காலத்தில் நாடாண்ட நாடார்கள் தலீத்துகள் போல் வாழ்ந்தனர்....So, கடந்த 50/100 ஆண்டுகள் சரித்திரத்தை 5000 ஆண்டுச் சரித்திரம் என்று சொல்லும் பொய்யை நீங்கள் நம்புபவர் என்றால் அதற்கு நான் பொருப்பல்ல.//
    //
    There is no contradiction.

    The point is, the DALIT status or oppressed status is something that changes. Thats not the same all the time.

    That makes them gain voice and become powerful and lose it on a later date.

    Thats why i call it a lie to portray it as if Indian society was the same all along. For example, Dalit kings like Maurya families have moved up and ruled, brahmins included, as subjects in their country.

    Thats why i call the caste oppression as something socially related and not religiously related.

    You call Upper castes getting discriminated a joke of the century. So be it. I do not want to change your opinion.

    Back in medival time if you say you are a sakkiliyan or some thing of that sort, you are not entertained in house. You are supposed to come through back door. THIS IS DISCRIMINATION BASED ON BIRTH! This happened even in ruling government establishments. I hope you have no difference of opinion here.

    Now, in these days that if you do not have a BC certificate you cannot apply for a job in government office. If this is not discrimination based on birth then what is ?

    (there is no tamil in this computer, so i typed everything in english, kindly bear with me)

    ReplyDelete
  74. //Thats why i call the caste oppression as something socially related and not religiously related.//

    thank you vajra for at last accepting that there is oppression of some in our socity.
    என்ன, இந்த oppression-ஆல் அவதிப்படுவது தலித்துகள் என்கிறேன் நான்; இல்லை ப்ராமணர்கள் என்கிறீர்கள் நீங்கள். அவ்வளவே நமக்குள் வித்தியாசம்.

    ReplyDelete
  75. vajra,
    i am again pointing out some discrepancies :
    1.
    //Back in medival time ...//
    //கடந்த 50/100 ஆண்டுகள் சரித்திரத்தை 5000 ஆண்டுச் சரித்திரம் என்று சொல்லும் பொய்யை ...//

    2.
    //THIS IS DISCRIMINATION BASED ON BIRTH!//
    //i call the caste oppression as something socially related and not religiously related.//

    ReplyDelete
  76. தலித்துகள் அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள் என்பது உண்மையே. அதே போல 19/ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாடார்கள் அடக்குமுறைக்கு உள்ளானதும் சரித்திர உண்மையே. இப்போது பார்ப்பனர்கள் உள்ளாவதும் நடக்கிறதுதான்.

    அதை சம்பந்தப்பட்ட சாதியினர் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதையும் பார்ப்போமா?

    முதலில் நாடார்கள். அவர்கள் அடக்குமுறைக்கு உள்ளான காலத்தில் சமுதாய பிரக்ஞை என்றெல்லாம் ரொம்ப கிடையாது. தாழ்த்தப்பட்ட சாதியினரை ஒடுக்குவது என்பது சர்வ சாதாரணமாக நடைபெற்றது. அந்தக் காலக் கட்டத்தில் மிகக் கொடுமையான முறையில் அடக்கப்பட்ட நாடார்கள், இனிமேல் அடங்கிக் கிடப்பதில்லை என தீர்மானித்தனர். தனிப்பட்ட மன வேறுபாடுகளைக் கண்டுகொள்ளாமல் ஒன்றுபட்டனர். தங்கள் சமுதாய விஷயங்களைத் தாங்களே தீர்த்துக் கொள்ளத் தலைப்பட்டனர்.

    நான் ஏற்கனவே இட்ட, காமராஜ் அவர்கள் பற்றிய ஒரு பதிவில் தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற அவாவில் ஒவ்வொரு நாடார் குடும்பத்தினரிடமும் ஒரு பிடியரிசி தினமும் பெற்று அதை சேர்த்து, விற்று, பள்ளிகளை நிறுவியதை குறிப்பிட்டுள்ளேன். பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் படித்தது இப்பள்ளியில்தான். பல பத்தாண்டுகள் போராடி வந்த நாடார்கள் இப்போது இருக்கும் நிலையைப் பாருங்கள்.

    பார்ப்பனர்கள் விஷயம் வேறு. அவர்கள் அதிகம் ஒடுக்கப்பட்டது தமிழகத்தில் மட்டுமே. அதுவும் ஏனைய உயர்சாதியினர் தாங்கள் தலித்துகளை வன்கொடுமை செய்வதை மக்கள் கவனத்திலிருந்து திசை திருப்புவதே அதன் முக்கிய நோக்கம். ஆனால் பார்ப்பனர்கள் இந்த விளையாட்டுக்கு வரத் தயாராயில்லை. இங்கு வாய்ப்புகள் குறைவா போடா ஜாட்டான் என்று வேறு இடங்களுக்கு செல்கின்றனர். நான் எனது இப்பதிவில் கூறியது போலத்தான் நடக்கிறது.

    ஆனால் தலித்துகள்? முதலில் அவர்கள் ஒன்றுபட வேண்டும். அவர்களுக்குள்ளேயே ஏற்றத்தாழ்வுகள் உண்டு. அதை மறக்க வேண்டும். நிலைமையின் தீவிரம் புரிந்து செயலாற்ற வேண்டும். தன் கையே தனக்குதவி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு முன்னுதாரணமாக நாடார்கள் உள்ளனர். பெருநகரங்களில் வாழும் பொருள் வசதி படைத்த தலித்துகள் கிராமங்களில் ஒடுக்கப்படும் தங்கள் சகோதரர்களை மறக்கலாகாது. அவர்களையும் நகரங்களுக்கு குடிப்பெயரச் செய்து வேலை தேட உதவி புரிய வேண்டும். முக்கியமாக இவை எல்லாம் நட்க்கும்வரை குடிப்பதில்லை என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். பல இடங்களில் பிள்ளைகளை, பெண்களை வேலைக்கனுப்பி அவர்கள் கூலியை குடித்தே அழிக்கும் ஆண்கள் திருந்தவேண்டும்.

    அவமானங்களை ஒருக்காலும் பொறுக்கலாகாது. இரட்டை தம்ளர் முறையை எதிர்க்கொள்ள நான் போட்ட பதிவை படித்த ஒரு தலித் என்னிடம் அரசே அந்த டீக்கடைகளை பொதுப் பணத்திலிருந்து நிறுவித் தர வேண்டும் என்று கூறினார். இது அவர்களது கௌரவத்துக்கு அழகல்ல என்று நான் கூறியதை அவர் புரிந்து கொள்ளவில்லை. அதற்கு வந்த பின்னூட்டங்களும் எல்லாமே மற்றவர்கள்தான் செய்ய வேண்டும் என்று தலித்துகளை அவமானப்படுத்துவது போன்ற பின்னூட்டங்களையே தந்தனர். ஆக, தலித்துகள் முன்னால் இருக்கும் பிரச்சினை மிக பயங்கரமான அளவில் உள்ளது.

    மறுபடியும் கூறுவேன். தலித்துகள் முன்னேற வேண்டும் அவ்வளவுதான். அதற்கு நான் கூறிய யோசனை முதலில் சுயமரியாதையை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று. இழிவு செய்யும் கிராமச் சூழ்நிலையை விட்டு விலகுங்கள். எதுவாயினும் பாதிக்கப்பட்டவர்களாக எதாவது செய்தால்தான் முன்னேற முடியும் என்று நான் அவர்களிடம் கூறுவேன். அது வேண்டாம் மற்றவர்கள்தான் எங்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் சோர்ந்திருப்பாராயின் ஒன்றும் காரியத்துக்காகாது என்பதுதான் நான் கூற விரும்புவது.

    இப்பின்னூட்டத்தின் நகலை இரட்டை தம்ளர் முறை பற்றி இட்ட எனது பதிவில் பின்னூட்டமாக இடுவேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  77. Mr.Dharumi,
    Where is my comment about the hypocrites who were raising questions about the phrase hitting the nail on the head? Its surprising to see you muffle some comments without even bothering to mention about it being editied/declined!!

    ReplyDelete
  78. Dharumi,

    Read this when you have time.

    http://in.rediff.com/news/2005/oct/18franc.htm

    Also read the other intellectual pukefests of this conservative hack about reservation policies and a variety of other topics in his rediff columns. He is a perfect embodiment of that post-world war I am a regular nobody kind of western European psyche which wants to have infinitesimal delirium or at least a perception of such a thing when given an iota of eastern mysticism encapsulated in ambiguity. Intellectual and religious consumerism and brand loyalty at its best. These pests so shamelessly put up such distorted charades to constantly swear allegiance to their newly found curiosities, and in the process end up nudging those dozens of other semi-intellectual cats on the wall who are forever in wait looking for a reason to pounce and scratch!! It is a shame educated people look up to such shenanigans to introspect on the ground realities of our society.

    ReplyDelete
  79. சன்னாசி,
    went thru that article and some of the comments. chipped in my one line comment.

    இதத்தான் ஜல்லி அடிக்கிறதுன்னு நம்ம பதிவர்கள் சொல்றதுன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  80. anony,
    // Its surprising to see you muffle some comments without even bothering to mention about it being editied/declined!! //

    yep, i should have done that. sorry about it. but hereafter there would not be any such thing. thanks.

    ReplyDelete
  81. சாதிகள் ஒழியவேண்டிய வழிமுறைகளை ஆராய்ந்து துணிவுடன் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
    1.இந்திய அரசியல் ச்ட்டத்தில் தீண்டாமை தண்டிக்கப்பட வேண்டியது என்பதற்குப் பதிலாகப் பெரியார் சொன்ன சாதி என்ற வார்த்தைப் போடப்பட வேண்டும்.
    2.பல அறிஞர்கள் சொன்னது போல கலப்புத்திருமணங்களுக்கு பரிசு மட்டும் அன்றிச் சலுகைகளும் தரவேண்டும்.
    3.ஆண் பெண் குழந்தைகள் சேர்ந்து பழகும் விளையாட்டு மற்ற நிகழ்ச்சிகள் பள்ளி முதல் நிறைய நடக்கவேண்டும்.
    4.ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாள எண் தரப்பட்டு வாழ்நாள் முழுதும் அந்த எண் வங்கிக் கணக்கு முதல் ஓட்டுவரை அடையாளமாக இருக்கவேண்டும்.அந்த எண்ணிலேயே கணிணிக் குறிப்பில் ரகசிய முறையில் சாதி ஒடுக்கீடு ச்முதாயத்தில் சாதி ஒழியும் வரை ப்டிப்பு வேலைவாய்ப்புக்குப் பயன்படுத்தப்படும்.இனிப் பிறக்கும் குழந்தைகட்கு சாதிப் பெயர்களே இல்லாமல் இந்த எண் உதவிடும்.இனிப் பிற்ப்பவர்கள் சாதிப் பெயரையேப் போடக்கூடாது.போடுவது ச்ட்ட விரோதமக்கப்பட வேண்டும்.
    இது போன்றக் கருத்துக்களை ஆரய்ந்து செயல் படுத்த ஒரு குழு அமைக்கவேண்டும்.
    நடக்குமா என்று கேட்காதீர்கள்.தெனாப்பிரிக்கா நடக்கவில்லையா?அய்க்கிய ந்ாட்டுச்சபையிலே இந்தியச் சாதிப்பிரச்சினை வந்துவிட்டது.இனி மூடிமறைக்க முடியாது.ஒழிப்பதற்கு வழி தேடவேண்டியக் கட்டாயம் இந்தியாவிற்கு வந்து விட்டது!

    ReplyDelete
  82. தமிழன்,
    நன்றி
    உங்கள் நாலாவது பாய்ண்ட் பற்றி எனது கருத்தை இங்கேயும்,..... இங்கேயும் கூறியுள்ளேன். பாருங்களேன்.

    ReplyDelete
  83. // அந்த hitting the nail on its head என்ற idiom-த்தை அப்படியே தமிழாக்கினேன். :)
    //ஒரு இலக்கிய ஆர்வத்தில் வேரைத் தேடிப் போனால் எங்கேயோ போகிறதே?// அப்டியா? அப்போ எங்களையும் அங்கே கூட்டிப் போங்களேன்; தெரிந்து கொள்கிறேன். //

    if someone hits the nail on the head, they are exactly right about something என்பதே அந்த இடியத்தின் பொருளாக இருக்கிறது. இது வெறும் அறிதல் பொருட்டாக மட்டுமே இருக்கிறது. உங்கள் பதிவில் ஆணி அடிப்பதை ஒரு தீர்வு என்ற அடிப்படையில் நீங்கள் அனுகுவதால் வேறு பொருளைக் கொண்டீர்களோ என்ற ஐயம் வந்தது. நான் ஊகித்த வேறு அர்த்தங்கள்:

    இத்தீமைகளை பேய் பிசாசுகளுடன் ஒப்பிட்டு கிராமத்து பேய் விரட்டும் மந்திரவாதிகள் பேய்களை மரத்தில் ஆணி வைத்து அடிக்கும் செயல் போலக் கருதினீர்களோ?
    அல்லது,
    இத்தீமைகள் கொன்று புதைக்கப் படவேண்டியவை என்ற கருத்தில் சவப்பெட்டியின் மூடி மேல் அறையப்பட வேண்டிய ஆணிகளாகக் கருதினீர்களோ?

    இவைதான்.

    பதிவுக்கு தொடர்பில்லை என்பதால் இதை வேறு இழையில் பிறகு தொடர்ந்து கொள்ளலாம் என்பது என் கருத்து.

    ReplyDelete
  84. ஓகை,
    //if someone hits the nail on the head, they are exactly right about something //

    இந்தப் பொருளில்தான் நான் கூறியுள்ளேன்.

    ReplyDelete
  85. டிசம்பர் 26, 2006-ல் பதிவு செய்து. இன்று (08.01.2007 நேரம்: இரவு 9.40) 86 பின்னூட்டங்களுக்குப் பிறகு இப்பதிவைப் பொருத்தவரை என் ஏமாற்றத்தை ஒரு பின்னூட்டமாகச் சேர்க்கிறேன் .



    இப்பதிவில் என் நோக்கம் நாமெல்லோருமே ஏதோ ஒரு வகையில் சாதிப்பிரச்சனைகளுக்குக் காரணமாயுள்ளோம். அதில் தீர்வு காண முதலில் நாம் செய்த, செய்யும் தவறுகளைக் கண்டு பிடித்து அவைகளை நிறுத்தும்வரை, திருத்தும் வரை விடிவில்லை என்பதால் சாதிய மூன்று படிநிலையைச் சார்ந்தவர்கள் முன்னால் உள்ளவைகளாக நான் நினைத்தவைகளை இங்கு பதிந்தேன். அதிலும் இரண்டாம் நிலை பற்றிய செய்திக்கு முக்கியத்துவம் தரப்பட
    வேண்டும் என் நினைத்தேன்
    .

    ஆனால், முதல் பிரிவினரைப் பற்றிய என் இரு பகுதிகளில் வரலாற்று உண்மைகள் என நான் நினைக்கும் முதல் பகுதி மட்டுமே விவாதப் பொருளாகப் பார்க்கப்பட்டு அதனையொட்டிய பின்னூட்டங்களே நிறைய வந்துள்ளன. ஆச்சரியமாயிருக்கிறது. அவர்களால் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி தாண்டுவது என்பது பற்றி நான் எழுதிய எதுவும் யாரையும் தொடக்கூட இல்லை என்பது ஏமாற்றமும்,. வருத்தமும்.

    ஏறத்தாழ இரண்டாம் மூன்றாம் ஆணிப் பகுதிகள் பற்றி பேச ஆளே காணோம். இதுவும் ஆச்சரியமும், வருத்தமுமாயிருக்கிறது.

    விடியலுக்கு இன்னும் நெடுங்காலம் காத்திருக்க வேண்டும் என்றுதான் தெரிகிறது.

    ReplyDelete
  86. //
    vajra,
    i am again pointing out some discrepancies :
    1.
    //Back in medival time ...//
    //கடந்த 50/100 ஆண்டுகள் சரித்திரத்தை 5000 ஆண்டுச் சரித்திரம் என்று சொல்லும் பொய்யை ...//

    2.
    //THIS IS DISCRIMINATION BASED ON BIRTH!//
    //i call the caste oppression as something socially related and not religiously related.//


    //

    There are no discrepencies here again.
    Both ought to be seen in specific context. The history of caste oppression remains small numbers and expands during mughals and reaches a himalayan proportion during the british.

    2.

    Discrimination based on birth is not something related to Sanatana dharma aka hinduism!

    If you believe so, i am not responsible for that.

    But discrimination based on birth happened! and why do you think that you can just blame it on sanatana dharma aka hinduism ? (even though you have not said it, i guess thats what is in your mind).

    My point is Religion was not wrong, society was and thats why its a social evil !! do i make my self clear ?

    ReplyDelete
  87. வஜ்ரா,

    //There are no discrepencies here again.//
    if this is not discrepency i dont know what else is?


    //.... i guess thats what is in your mind).
    //

    yes, that's what i strongly have in my mind. and this has happened after reading kanchiah and after treading on many posts in our thamizmanam. i dont have the patience to give those links which have made me come to this conviction. sorry about it.

    //My point is Religion was not wrong, ..//
    sorry, mine is just the opposite.

    i will also be happy if both of us dont miss the wood for the trees.

    i have explained my aim for this post in P.S. arguing endlessly on caste system, its origin, people responsible for that - all these have already side tracked my aim of this post. and also i personally consider our argument on caste is -"ஆறின கஞ்சி..பழங்கஞ்சி"

    i will appreciate if you react to my first nail: - //ஆனால், அன்று அப்படி இருந்தவர்கள் இன்றும் AIMS- களில் IIT- களில் மற்றவர் வந்து விடக்கூடாதென்பதில் மிகத்தீவிர மனப்பான்மையோடும், UPSC தேர்வுகளில் தங்கள் சாதிக்கு வழக்கமாகக் கிடைத்து வரும் விழுக்காடு .....எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

    NAIL: 1

    இந்தப் பிரச்சனையை .... எதிர்கொள்ள வேண்டிய இடமும், முறையும் முழுமையாக வேறு. பாராளுமன்றங்களிலும், நீதிமன்றங்களிலும், இன்னும் வேகமாக வெகுசன ஊடகங்களிலும் செய்ய வேண்டியவை நம்முன் மலையென நிற்கின்றன.//

    ReplyDelete
  88. எழுதுவதைத் தள்ளிப்போடுகிற இந்தச் சோம்பேறிக்கு இப்படியெல்லாம் பாராட்டுக்கிடைக்குமென்றால் இன்னும் மகாசோம்பேறியாகச்சொல்லி மனம் யோசனை சொல்கிறது:))

    உண்மையில் உங்களின் இதுபோன்ற கட்டுரைகள், இன்னபிற இதுசம்பந்தமுடைய எழுத்துக்களை இணையத்தில் விரும்பி வாசிக்கிறேன் தருமி. நிறையக் கற்றுக்கொள்கிறேன். இவற்றின்பாலெல்லாம் அறிமுகமே பெறுவதற்கான வாய்ப்புகளற்று இருந்த காலமும் ஒன்றுண்டு. இப்போது நான் தெரிந்துவைத்திருந்தவைகளைத் தாண்டியும் உள்ள சிலவிடயங்களை அறியப் பெற்ற வாய்ப்பு மூலம் அவற்றை முதலில் என் வாழ்வோடும், எனைச்சுற்றியிருந்த, இருக்கிற மக்களின் வாழ்வோடும் ஒப்பிட்டுப் பார்த்து உண்மைகளைப் புரிந்துகொள்ளச் சிறுமுயற்சி செய்யும் ஆர்வம் மட்டுமே என்னை இங்கு சுற்றவைக்கிறது. உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    BNI,

    எண்ணெய் என்று சனாதன தர்மத்தைச் சொல்லவில்லை. அது கசடு. மொத்தமாய் நம் கோட்பாடுகளை, கருத்தியல்களைச் சொல்கிறேன்.

    இடஒதுக்கீடு ஏன் வேண்டுமென்று இங்கு எத்தனையோ கட்டுரைகள் வந்துவிட்டன. மற்ற ஊடகங்களிலும் ஆய்வுகளோடும், சமூகத்தின் நிகழ்கால வாழ்வுமுறைக்கு இடஒதுக்கீடு ஏன் தேவைப்படுகிறதென்பதை விளக்கியும் எழுதப்பட்டுவிட்டன. நான் மட்டும் உங்களுக்குப் புதிதாக இதில் என்ன காரணத்தைச் சொல்லிவிடமுடியும்?

    மலமள்ளிக்கொண்டிருக்கவெனவே சமூகத்தால் பணிக்கப்பட்டவர்கள், மாடுமேய்த்துக்கொண்டிருந்தவர்கள், தறிநெய்துகொண்டிருந்தவர்கள், எழவுவீடுகளில் தப்பட்டை அடித்துக்கொண்டிருந்தவர்கள், மழைபெய்தாலும், பெய்யாவிட்டாலும் நிலத்தை உழுதுகொண்டிருப்பதே தம்விதி என்று கிடந்தவர்கள், கைகளும், கால்களும், காப்புக்காய்க்க மரமேறித் தெளுவிறக்கினால் மட்டுமே சோறு என்று இருந்தவர்கள் என இப்படிப்பட்ட எனக்குத் தெரிந்த மக்களிலிருந்தும் இன்று மிகப்பெரும் நிறுவனங்களுக்கு மென்பொருள் எழுதித்தரும் வேலைசெய்ய வரமுடிந்த இளைஞர்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது கல்லூரிகளில் இருந்த இடஒதுக்கீடு என்பதை நான் புரிந்துகொண்டிருக்கிறேன். உங்களுக்கு அதைப் புரிந்துகொள்ளாதிருக்கவோ, தம் மகன், மகளுக்கு இதனால் சீட் கிடைக்காதென்ற ஆதங்கத்தில் இடஒதுக்கீட்டை எதிர்க்கிறவர்களின் பக்கத்திலான நியாயத்தை மட்டுமே புரிந்துகொண்டிருக்கவோ கருத்துரிமை என்ற அளவில் சுதந்திரம் உண்டு. செய்துகொண்டே இருக்கலாம் அவரவர் விரும்புவதை:))

    ReplyDelete
  89. செல்வநாயகி,
    சுறுங்கச் சொல்வதிலும், சொல்வதைல் கூரேற்றி சொல்லுவதும் நிரம்ப பிடிக்கிறது - அந்த வார்த்தைச் சிக்கனம் என்னால் முடியவில்லையே என்று ஒரு ஆதங்கம்தான்.

    இன்னொரு வேண்டுகோள்: என் பழைய பதிவொன்றில் இருக்கிறது அது.

    ReplyDelete
  90. திருத்தங்கள்
    -

    செல்வநாயகி,
    சுறுங்கச் சொல்வதிலும், சொல்வதைல் கூரேற்றி சொல்லுவதும்

    சுருங்கச் சொல்வதும், சொல்வதைக் கூரேற்றி சொல்வதும்...

    ReplyDelete
  91. தருமி அய்யா,

    விவாதங்களை முழுமையாக படிக்கும் அவகாசமில்லை. என்னை மன்னிக்கவும். ஆயினும் உங்களது ஆதங்கத்தைப் பார்த்தேன். நீங்கள் ஆணியைத் தவறான இடத்தில் பொருத்துகிறேர்களோ என்ற சிறிய ஐய்யம்.

    முதல் விசயம். சாதி என்பதில் முதல் நிலையாக நீங்கள் சொல்லும் பார்ப்ப்னியத்தின் பங்கு, இரண்டாம் நிலையாகிய தேவர், கவுண்டர் சாதியினரின் பங்கு - இரண்டும் வேவ்வேறு. இரண்டையும் எதிர்க்கும் தளம், தன்மை, அரசியல் தந்திரம் எல்லாமே வேவ்வேறு.

    ஏனேனில் ==> முதல் நிலை - ஒரு கலாச்சார மேற்கட்டுமானமாக இருந்து இந்த சாதிக்கு தத்துவ மூலமாகிய சனதான தர்மம் மற்றும் பிற பார்ப்ப்னிய கலாச்சாரத்தை சரியென்று நியாயப்படுத்தும் விசயம். இதை இங்கு தமிழ்மணத்தில் நீங்கள் அனுபவித்திருக்கலாம்(தமிழிசை, தமிழி கடவுள் வழிபாடு, பார்ப்ப்னிய பண்பாட்டு மாயை, கருவறை நுழைவு, தீட்டு, சம்பிரதாயம் etc).

    இரண்டாவது நிலையாகிய தேவர், கவுண்டர் ==> இவர்கள் இதை உற்பத்தி உற்வில் உறுதிப்படுத்துபவர்கள். அதாவது அடிகட்டுமான்மாகிய பொருளாதார தளம். இவர்களின் பிரதிநிதிகள் இங்கு இருக்க வாய்ப்பு கிடையாது. வாய்ப்பிருந்தாலும் அதை பகிரங்கமாக அறிவித்து செயல்படும் பலம் கிடையாது.

    அதனால் இருவருக்கும் ஒரே இடத்தில் ஆணி அடிப்பது இந்த சின்ன ஊடகத்தில் சாத்தியமில்லை. கலாச்சாரத் தளமாகிய பார்ப்ப்னியத்திற்க்கு இங்கு ஆணி அடிப்பது சாத்தியமான ஒன்று.

    வெறுமே பார்ப்பினியத்தை மேல்கட்டுமானத்தில் மட்டும் எதிர்ப்பதும்(பெரியாரிஸ்டுகள்) அல்லது கீழ்கட்டுமானத்தில் மட்டும் எதிர்ப்பதும்(வோட்டுக் கட்சி கம்யுனிஸ்டுகள்) எந்த காலத்திலும் சாதி ஒழிப்பை சாதிக்காது. இரண்டையும் எதிர்க்கும் ஒரு அரசியல் செயல் தந்திரமே பயனழிக்கும்.

    எனது புரிதலில் தவறிருந்தால் திருத்தவும்

    அசுரன்

    ReplyDelete
  92. // //மதுரையில் கேள்வி கேட்ட ஒர் ஏழைப் பிராமணன் பெயரை வைத்துக் கொண்டிருக்கும் தருமி அவர்களே,//

    என்னை யாரும் இவ்வளவு கீழ்த்தரமாக address செய்ய முடியாதென நினைக்கிறேன்.

    ஏன் சார், உங்களுக்கே இது கேவலமாகத் தெரியவில்லை? என்ன நினைப்பு இது - எங்கும் எதிலும் ஜாதியைத் தவிர உங்களால் ஏதும் நினைக்க முடியாதா? விட்டால் 'தருமி அய்யரே' என்று விளித்து விடுவீர்கள் போலும்.i sincerely feel and sorry to say that the way you have addressed me lacks basic decency.
    நகைச்சுவை உணர்வுமா உங்களூக்கு சுத்தமாக இல்லாமல் போகவேண்டும்? மிகவும் வருந்துகிறேன்.//

    முதற்கண் தருமி ஒரு பார்ப்பணன் அல்லன். முன்பு யாரோ நக்கீரனை பார்ப்பனர் என்று எழுதியிருந்தார்கள். ஆனால் அவரோ வலைஞர்...இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் சங்கு கடைந்து விற்கின்றவர். அதே போல திருவள்ளுவர். அவர் மயிலையில் வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரம் கிடையாது. அவர் ஒரு நெசவாளி என்பதாக இரண்டு பாட்டுகள் கிடைக்கின்றன.

    சரி. கட்டுரையின் கருத்துக்கு வருவோம். முன்பு யார் என்ன செய்தார்கள் என்பது மட்டும் முக்கியமல்ல. இப்பொழுது யார் என்ன செய்கிறார்கள் என்பதும் முக்கியம். சாதிக் கொடுமை எல்லாத் தளங்களிலும் பரவிக்கிடக்கிறது. சாதீயம் மதயீயம் போன்றவை எங்கிருந்தாலும் ஒழிக்கப்பட வேண்டியதே. மறுப்பில்லை.

    ReplyDelete
  93. அசுரன், ஜிரா
    மிக்க நன்றி.

    ஜிரா- மொட்டையிலும் நல்லாதான் இருக்கீங்க..

    ReplyDelete
  94. //
    ஆனால், அன்று அப்படி இருந்தவர்கள் இன்றும் AIMS- களில் IIT- களில் மற்றவர் வந்து விடக்கூடாதென்பதில் மிகத்தீவிர மனப்பான்மையோடும், UPSC தேர்வுகளில் தங்கள் சாதிக்கு வழக்கமாகக் கிடைத்து வரும் விழுக்காடு
    //

    AIIMS மற்றும் IIT க்களில் FC அல்லது forward community என்று சொல்லக் கூடிய எல்லா சாதியினரும் வருகின்றனர், பிராமணர் மட்டும் FC அல்ல. நீங்களும் நானும் தான் இப்ப FC ல் வரவேண்டும் ஞாயமாக, அதை நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள், அது வரை சாதிக்கொடுமை என்று AIIMS, IIT க்களில் SC க்கள் வர மாட்டார்கள், அதற்கு பிராமணர்கள் காரணம் என்று வலைப்பதிவு எழுதுவார்கள்.

    ஏனென்றால் உங்கள் மூளையில் பிராமணர்கள் தான் சாதிக்கொடுமைக்கு வித்திட்டவர்கள், அவர்களால் தான் இந்தியாவில் பல கோடி பேர் இப்படி கீழ் சாதி என்று சொல்லப்பட்டு ஒதுக்கப்பட்டதற்கு இந்த உலகில் எவனாவது ஒருவன் தப்பு செய்திருக்கிறான் என்றால் அது பார்ப்பான் தான் என்பது உங்கள் ஆள்மன எண்ணம். மேலோட்டமாக பிராமணர் காரணம் இல்லை என்றெல்லாம் சொல்கிறீர்கள். You are selling anti-brahminism in a very polished way, congratulations for that.

    ReplyDelete
  95. என் பழைய பதிவுகளில் - இடப்பங்கீடு,U.P.S.C. தகிடுதத்தங்கள் - பலவற்றை நான் பட்டியலிட்ட பின்பும் மேற்படுத்திக் கொண்டோர் தவறே செய்யாத தர்ம கர்த்தாக்கள் என்று சொல்லி, என் ஆள்மன எண்ணங்களைப் புட்டு புட்டு வைப்பதற்கு -
    thank you, vajra, for all your judgments.

    ReplyDelete
  96. வஜ்ரா,

    என்னோட கருத்துக்கு எதுவும் பதில் சொல்ல மாட்டீங்களா?

    இல்ல அவையெல்லாம் 'புல் சிட்' கருத்துக்கள் என்று கருதுகிறீர்களா? எதுக்கும் தெளிவுபடுத்திடறது நல்லது...

    அசுரன்

    ReplyDelete
  97. அசுரன் ஐயா,

    உங்க 55 X 55 பதிவுகளையும் படிச்சு பதில் சொல்ற பொருமை எனக்கில்லாடனால நான் அப்பீட்டு.

    (any way, நான் அதையெல்லாம் படிச்சு சொல்லப்போறதத்தான் நீங்களே சொல்லிட்டீங்களே, புல் க்ராப் ன்னு. என் சர்டிஃபிக்கேட் வேற வேணுமா அதுக்கு? "vajra certified bull crap!!")
    ..

    //
    thank you, vajra, for all your judgments.
    //

    dharumi,

    those were not my judgements. they were my comments i.e., Thats what i felt about your recent post.

    if you had that idea of bashing a particular community in your own un imitable way for long time, then you are no different than the "self proclaimed elitist" eccentrics.

    My difference of opinion was the points above the word NAIL 1 in your post. We ended up wasting too much bandwidh on some worthless issue.

    Have a nice day.

    ReplyDelete
  98. jra,

    //Thats what i felt about your recent post.// = judgments !

    //.. you are no different than the "self proclaimed elitist" eccentrics. // another judgment! shall i add some adjective for that?

    //.. We ended up wasting too much bandwidh on some worthless issue.//

    a very late realisation for you.

    ReplyDelete
  99. ஒன்று சொல்ல மறந்து போச்சு, வஜ்ரா.

    உங்கள் 'வாக்குமூலத்'திற்குப் பிறகு, உங்கள் பின்னூட்டம் வாசிக்கும்போதெல்லாம் நினைவில் வந்த சொற்றொடர்: More loyal than the king...

    ReplyDelete
  100. தருமி அய்யா,

    விவாதத்தின் துவக்கத்தையும், முடிவையும் பாருங்கள் :)

    ReplyDelete
  101. vajra,

    aren't you the one who worried about wasting bandwidth?

    your last comment is confusing from a confused psyche:That does not make them "non hindus".

    i have been telling that they ARE the ONLY hindus.

    ReplyDelete
  102. வஜ்ரா,

    //... And you are talking to one of them. //

    Is it? From those 'them', there are varied voices. it appears yours does not 'sync' with most of 'them'. at least among our tamil bloggers it is so, according to my observation.

    ReplyDelete
  103. //
    Is it? From those 'them', there are varied voices. it appears yours does not 'sync' with most of 'them'. at least among our tamil bloggers it is so, according to my observation.
    //

    why should i care to sync with tamil bloggers ?

    தமிழ் வலைப்பதிவாளர்கள் என்ன ஒரு ஆயிரம் பேர் இருப்பீங்களா ? இல்ல 10,000 பேர் இருப்பீங்களா ?

    இவர்களுக்கு ground zero வில் நடப்பது என்னவென்றாவது தெரியுமா ? all they know is intellectual masturbation! worthless time pass.

    ReplyDelete
  104. okay vajra,
    i leave you at this with what you are best at !

    and pl. dont come again doing the same...

    ReplyDelete