Sunday, April 15, 2007

211. தருமியுடன் ஒரு உரையாடல் தொடங்குகிறது... நண்பன்

--------------------------------------------------------------------
நண்பன் என்னோடு ஓர் உரையாடலாக அவரது ப்ளாக்கில் இட்ட பதிவின் நகல் இது. அசல் அங்கே இருக்கிறது. பின்னூட்டம் இட விளைவோர் அங்கேயே இடுவதுதான் முறையாக இருக்கும் என்பதால் இப்பதிவில் இப்போதைக்கு பின்னூட்ட வசதியை நிறுத்தி வைத்துள்ளேன்.
--------------------------------------------------------------------


இனி நண்பன் ....



எங்காவது ஒரு புள்ளியில் இருந்து தொடங்க வேண்டியது தானே?

தருமிக்கு பதில் சொல்வதாக நான் வாக்களித்திருந்தது குறித்து தான் இந்த சிந்தனகைள். வெறுமனே அவர் கேட்ட ஆயிஷாவின் வயது எத்தனை என்பதற்கான பதிலாக மட்டும் இல்லாமல், அவர் பொதுவில் வைத்த கேள்விகளுக்கும் சேர்த்து பதில் சொல்லலாமே என்று தான் யோசனை. ஆனால், அவருக்குப் பதில் சொல்லுமுன், அவர் எத்தகைய மனிதர் என்பதற்காக அவர் எழுதிய பல பதிவுகளையும் வாசிக்க வேண்டியதாயிற்று.

Is he a proclaimed atheist ?

அப்படித்தானோ?

மதவிமர்சனங்கள் நிறையச் செய்தார் என்பதால், இறை நம்பிக்கை அற்றவர் என்று எடுத்துக் கொள்ளலாமா? நான் அவரை ஒரு atheist என்று சொன்ன பொழுது அதை அவர் மறுக்கவில்லை. அதனால், அவரை ஒரு இறை மறுப்பாளர் என்று ஏற்றுக் கொண்டே உரையாடலாம்.

எதையும் விமர்சிக்கும் பொழுது, உள்ளிருந்து கொண்டே விமர்சனங்களை வைப்பது சற்று சிரமமானது - காரணம், தவறாகப் புரிந்து கொள்ளப்படுவது மட்டுமல்லை, துரோகி என பட்டமும் கொடுக்கப்படலாம். மௌனமாக இருந்தால் கூட அத்தகைய சாத்தியங்கள் உண்டு என புரிந்து கொண்டேன். சரி, இனி பேசியே பட்டம் வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்ததும் தான், மீண்டும் எழுதவே ஒரு ஆர்வம் வந்தது.

ஆனால், பாருங்கள், இறை மறுப்பாளன் என்று சொல்லிக் கொண்டால், இந்தப் பிரச்னைகள் எதுவுமில்லை அல்லவா? மதங்களை எந்த மன உறுத்தலுமின்றி, எளிதாக விமர்சிக்கலாம். மதங்களுக்குரிய சில விநோத குணங்களை, நியாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. எந்த ஒரு பலவீனமான கொள்கையையும் தூக்கிப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. எல்லாம் சரி தான்?

ஆனால், ஒவ்வொரு மனிதனும் மதத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறானோ, இல்லையோ, சில நற்பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது இல்லையா? அல்லது இறை மறுப்பாளர்களுக்கு, நற்பண்பு கொண்டவர்களாக இருப்பதினின்றும் விலக்கம் கோருகிறீர்களா? இல்லையென்று நினைக்கிறேன். அடிப்படை பண்புகளும், மனித மதிப்பீடுகளும், மதம் சார்ந்தவை அல்ல, அவை அடிப்படை மனித பண்பின் கூறுகள் என்பதை இருவரும் ஏற்றுக் கொண்டதாக வைத்துக் கொள்ளலாம்.

சரி, இப்பொழுது சொல்லுங்கள் - நீங்கள் ஒரு புதிய மதத்தை நிருவ முயற்சிக்கவில்லையா? இறைவன் இருக்கிறான் என்று ஒரு சாரார் சொல்லும் பொழுது, நீங்கள் இறைவன் இல்லை என்று கூறி, அதையே ஒரு வழிமுறையாக, வாழ்க்கைப்பயணத்திற்கான வழியாக முன் வைக்கும் பொழுது, எந்த மதங்களின் பயணப் பாதைகள் தவறானது என்று விமர்சிக்கிறீர்களோ, அந்த மதங்களுக்கு மாற்றாக நீங்கள் வைக்கும் நாத்திகமும், ஒரு நடைமுறை மதமாக உருமாறி விடும் என்பதை நீங்கள் மறுக்க முடியாது, இல்லையா?.

இறைவன் இருக்கிறான் என்ற பாதையில் - மதங்களின் பாதையில் - கிடக்கும் கழிவுகளை மட்டும் காட்டுகிறீர்கள். மனிதன் புழங்கும் எந்த ஒரு இடத்திலும், கழிவுகளும், தானாகவே வந்து சேர்ந்துவிடும் என்பது நடைமுறை. அவற்றைத் தவிர்த்து விட்டு, இலக்கை நோக்கிப் பாருங்கள் - நீங்கள், நான், மற்ற மனிதர்கள் - உயிர்கள் என அனைவரும் நன்றி தெரிவிக்க வேண்டிய ஒருவன் இருப்பான் - இறைவனாக. ஆனால், அவனே இல்லை என்று கூறிவிட்ட பின்பு, உங்கள் பாதை எங்கே போகிறது, யாருக்காக பயணம், என்பதையெல்லாம் இறை மறுப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும்.

இவ்வாறு புதிதாக நீங்கள் செல்லவிருக்கும் பாதையில், பரிசுத்தங்கள் மட்டுமே நிறைந்திருக்கும் என்று சொல்ல முயற்சிக்க வேண்டாம். முதலில் அங்கே கிடக்கும் நாற்றமடிக்கும் கழிவு - சுயநலம். தான் தன் வாழ்க்கை என்று தன்னைச் சுற்றி மட்டுமே பார்வைகளை நிறுத்திக் கொள்வது தான் முதலில் நிகழும். சமூக மதிப்பீடுகள் அனைத்தும் இரண்டாம் இடம் தான். சரி, விவாதம் இதை நோக்கிப் போக வேண்டாம். இதைக் குறிப்பிடக் காரணம் - மதங்கள் என்பது, முறைப்படியாக வடிவமைக்கப்பட்ட பயணப்பாதை. அதை மறுக்கும் பொழுது, அதை மறுப்பவர்கள், புதிதாக ஒரு பாதையை வடிவமைத்துத் தருகிறார்கள் - இலக்கற்ற, சுயதேவைகளே வழி நடத்திச் செல்லும் ஒரு பாதை. அதுவும் ஒரு பாதை என்ற வகையில், நிறுவனப்படுத்தப்பட்டு, ஒரு மதமாக மாறி விடுகிறதே தவிர, வேறெதுவும் சாதித்து விடுவதில்லை.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் -

கம்யூனிஸ்ட்டுகள்.

தமிழக கழகங்கள் (செல்லும் பாதை.)

ஆனால், நீங்கள் முன் வைக்கும் பாதை இவை எல்லாவற்றையும் விட உன்னதமாயிருக்கும். மேற்கொண்டு சொல்லுங்கள் - உங்கள் பாதை எது, எவ்வாறு இருக்கும் என்று!!!

இந்த இறைவன் உண்டா, இல்லையா, என்ற கேள்விகள் எப்பொழுதுமே, நியாயமாக சிந்திக்கக் கூடிய மனித மனதில் எழாமல் இருக்காது. அந்த விதத்தில், உங்கள் மனதில் எழும், எழுந்த சிந்தனைகள் என் மனதிலும் எழுந்திருந்திருக்கின்றன. இதைப் பற்றிய தர்க்கங்கள் என்னுள்ளும் நிகழ்ந்திருக்கின்றன. அதை நான் ஒரு கவிதையாகக் கூட எழுதி இருந்தேன் -2003ஆம் வருடத்தில், திசைகள் இதழில் வெளிவந்திருக்கிறது. பின்னர் மற்ற தளங்களிலும் அதை எழுதி இருக்கிறேன் - இறுதியாக, வலைப்பூவிலும் எழுதி வைத்தேன் - ஜூன் 10, 2005ல். நீங்கள் மதங்கள் குறித்து எழுப்பிய கேள்விகள் அனைத்தும், தனி மனிதன், தான் அதை அனுஷ்டிக்கும் முறையில் எழக்கூடிய தவறுகளையும், தர்க்க ரீதியாக, சில குறைபாடுகளும் தான்

ஆனால், அதற்கு மாற்றாக நீங்கள் வைக்கும் பாதை, மிக மிக ஆபத்தானது, இல்லையா? இறைவனை மறந்து விட்டு, மனிதனாகிய என்னைத் துதி, என்று கோரிக்கை வைக்கும் ஆபத்துகள் நிறைந்த பாதையில் அல்லவா, எங்களைப் பயணம் செய்ய அழைக்கிறீர்கள், இல்லையா?

கொஞ்சம் விளக்குங்கள்.

அதற்குள், நான் 4 வருடங்களுக்கு முன்பு எழுதிய கவிதை இதோ:


கடவுளைக் காட்டு......


கடவுளைக் காட்டு
என்று ஒரு போர் -
நண்பர்களுக்குள்...


நம்பிக்கையின்
எல்லையில் நிற்கிறார்
கடவுள்.


நம்பிக்கைகள்
உண்டாவது
முயற்சியால்!


முயற்சிக்க வேண்டுமே
ஓர் மனதின்
சிந்தனை -
அங்கே
கடவுளின் வாசம்....


சிந்தனை எழுவது
என் தலையில் -
மூளையின்
மெல்லிய திசுக்களில்....


திசுக்கள்
துடித்தால் தான்
சிந்தனை.


ஓர் துடிப்பை
தூண்டியவர்
கடவுள்...

துடிப்பது
உண்டானது
பிறப்பின்
நியதி.


பிறப்பிற்கு
நியதி
வைத்தவன் யார்?
அவர் தானே -
கடவுள்?


கடவுளைக் காட்டு
என்ற போரின் விவாதம்
சூடாக தொடர்ந்தது
நண்பர்களுக்குள்.


பக்கத்து பள்ளியில்
இறைவணக்கப் பிரார்த்தனை -
'என் மதம் எனக்கு....
உன் மதம் உனக்கு...'


இது உரையாடலின் துவக்கம் தான்... நீளும்.

பின்னூட்டங்கள் தெளிவாக எழுதிய பொருளைப் பற்றி மட்டும் இருக்கட்டும். தனி மனிதர்களைத் தாக்கும் ஊடகமாக என் வலைத் தளம் அமையாது என்பதை மீண்டும் ஒரு முறை நண்பர்களுக்கு நினைவூட்டுகிறேன்.

பண்புடன் எழுதுங்கள்.

அன்புடன்
நண்பன்.

----------------------------------------------------------------------


நண்பன் என்னோடு ஓர் உரையாடலாக அவரது ப்ளாக்கில் இட்ட பதிவின் நகல் இது. அசல் அங்கே இருக்கிறது. பின்னூட்டம் இட விளைவோர் அங்கேயே இடுவதுதான் முறையாக இருக்கும் என்பதால் இப்பதிவில் இப்போதைக்கு பின்னூட்டங்களை அனுமதிப்பதாக இல்லை. ஆயினும் அங்கு இடப்படும் பின்னூட்டங்களை இங்கே நானே தொடர்ந்து இட்டு வருவேன் - copy & paste மூலம்.
26.06.2007 - இன்று பின்னூட்டப் பெட்டியை திறந்தாகி விட்டது.

----------------------------------------------------------------------

29 comments:

  1. நண்பன் said...
    இங்கு சில இடங்களில் - நீங்கள் என்று எழுதி இருக்கிறேன். அது எனக்கு எதிராக தர்க்கம் செய்ய ஒருவர் இருப்பதாக நினைத்துக் கொண்டு, எழுதப்பட்டது. இங்கு "நீங்கள்" என்பது இறை மறுப்பாளர்களாகிய அனைவரையும் தான். மற்ற படி, எந்த ஒரு தனி நபரையும் அல்ல.

    நண்பன்.

    ReplyDelete
  2. தருமி said...
    நண்பனே,
    எதிர் பார்வை கொண்டவர்களிடையே நடக்கும் உரையாடலுக்குக் கிடைக்கும் பயன்கள்: ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கருத்துக்களில் மேலும் மேலும் ஆழமாக ஆகிவிடுவார்கள்; இருவருக்கும் இடையில் உள்ள கருத்து இடைவெளி அதிகமாகுமே ஒழிய குறைய வாய்ப்பில்லை.
    இது நான் சொல்லவில்லை; G.K.Chesterton -ன் 'The art of arguing' என்ற கட்டுரையில் அவர் சொன்னது.
    ஆனால் அதுவும் ஒரு வகையில் நல்லதுதானே. நமக்கு நமது கருத்துக்களில் மேலும் மேலும் தெளிவு பிறக்குமல்லவா? ஆகவே நான் உங்களை மாற்றி விடுவேன் என்ற நினைப்போடன்றி, மீண்டும் மீண்டும் சொல்வதால் ஏற்படக்கூடிய தெளிவுடன் என் கருத்தைச் சொல்ல முடியும் என்று மட்டுமே நினைக்கிறேன்.

    உங்கள் நடை மிகவும் தெளிவாகவும், தனித்தமிழாகவும் இருப்பதுபோல் என்னால் முடியாதென்பதை முதலிலே சொல்லி விடுகிறேன் - நடையா முக்கியம் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு!

    நண்பன்,
    நீங்கள் இங்கு கேட்டுள்ள கேள்விகளுக்குரிய பதில்கள் பெரும்பாலும் என் மதங்கள் பற்றிய என் முடிவுரை தாங்கிய கடைசிப் பதிவில் இருக்கிறதென்பது என் எண்ணம். அதை வாசித்து விட்டீர்களா என்பதை முதலில் தெளிவு படுத்திக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

    உங்கள் கேள்விகளுக்குரிய பதில்கள் அதில் இருக்குமோ என்னவோ, ஆனால், மதங்களைப் பற்றிய, அதன் தேவைகளைப் பற்றிய, எந்த நிலைக்குப் பின் கடவுள் என்ற கொள்கை நமக்குத் தேவையில்லை என்பது பற்றிய என் கருத்துக்களாக இருக்கும்.

    அதோடு இந்தப் பதிவையும் கொஞ்சம் பார்த்து விட்டால் என் பக்கத்து கருத்துக்கள் முழுமையாக உங்களுக்கு தெரிந்துவிடும். அதன்பின் நீங்கள் விரும்பினால் இந்த உரையாடலைத் தொடரலாமே. (வாத்தியார் மாதிரி ரொம்ப homework கொடுத்திட்டேனோ?!)
    1:13 PM

    ReplyDelete
  3. மரைக்காயர் said...
    தொடக்கமே நன்றாக இருக்கிறது. விவாதம் என்று வரும்போது இரு தரப்பினரும் தத்தம் நிலைப்பாடுகளை ஆரம்பத்திலேயே தெளிவு படுத்தி விடுவது நல்லது. இதுவே விவாதம் சரியான திசையில் பயணிக்க உதவும். தருமி விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.
    1:25 PM

    ReplyDelete
  4. நாடோடி said...
    நீங்கள் மதத்தில் இருப்பது போல் aethiestம் எதோ ஒன்றை கடைபிடிக்க வேண்டும் என்பது போல் நினைப்பில் உள்ளீர்கள்.

    இது தான் உங்களுக்கும் கடவுள் மறுப்பாளர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

    கடவுள் மறுப்பு என்பது ஒரு தெளிவு( தான் நினைத்தது நடக்கவில்லை என்று கடவுளின் மீது ஏற்படும் கோபம் அல்ல),சுய சிந்தனை, சுய பரிசோதனை.

    நேரம் கிடைத்ததும் வருகிறேன்

    ReplyDelete
  5. tamilreber said...
    புதிதாக ஒரு பாதையை வடிவமைத்துத் தருகிறார்கள் - இலக்கற்ற, சுயதேவைகளே வழி நடத்திச் செல்லும் ஒரு பாதை. அதுவும் ஒரு பாதை என்ற வகையில், நிறுவனப்படுத்தப்பட்டு, ஒரு மதமாக மாறி விடுகிறதே தவிர, வேறெதுவும் சாதித்து விடுவதில்லை.

    Russel, Daniel Dennet, Stephen Jay
    Gould and whole lot of thinkers
    stressed on humanism that cannot be
    reduced to a matter of faith or religion.Humanism or atheism is
    not an organised faith with a
    founder, holy book and church.

    Moreover a humanist is not
    a humanist for the sake of selfish
    reasons.Humanism accepts the need
    for altruism.Liberal humanists are
    persons who are deeply concerned
    about humanity and nature and problems of civilizations.Humanists
    and existentialists like Satre were
    the ones who supported liberation
    movements in third world.Humanism
    does not mean inaction or meek surrender to any force or seeking solace in words of some prophet
    or book that promises heaven.Humanism means living a responsibile life.Humanists do not coerce others, nor allow others to coerce them.So your
    understanding is fundamentally
    flawed.You perhaps think that
    in the absence of religion humans
    will go bersek and live like animals.You are so conditioned that
    you think that there will be only cages outside the cage you are in.
    Such a mind perhaps is afraid of freedom and responsibility and
    that fear results in search for
    imaginary protectors and surrenders
    before the God it thinks will save
    it and guide it.Jiddu Krishnamuri
    accurately describes such minds in
    his lectures, notes,talks and discussions. He also talks about their fears.You better read them.
    4:22 PM

    ReplyDelete
  6. நண்பன் said...
    தமிழ் ரிபெர்,

    தமிழில் எழுதி இருந்தால், நலமாக இருந்திருக்கும். உங்களுக்கேப் புரிந்திருக்கும் - நான் எழுதியதற்கும் - நீங்கள் வைக்கும் வாதமும், ஒன்றிற்கொன்று முற்றிலும் வேறுபாடான விஷயங்கள் என்று.

    எந்த ஒரு தத்துவமும், நடைமுறைப்படுத்தப்படும் பொழுது, அது, ஒரு அமைப்பு ரீதியான, வடிவத்தை அடைகிறது. அத்துடன், நீங்கள் மதங்களுக்கெதிராக வைக்கும் அனைத்து குறைபாடுகளும் வந்து விடக் கூடும் என்று கூறி, அதன் இன்றைய வாழும் உவமைகளாக, கம்யூனிசத்தையும், கழகங்கள் செல்லும் பாதையையும் கூறினேன். கூடவே, இங்கு தனி மனித வழிபாடுகளும் நடைமுறைக்கு வந்து விட்டன என்பதையும் சொன்னேன்.

    இதை குறித்து எந்த ஒரு மறுப்பையும் வைக்காமல், நாங்கள் படித்தவர்கள் அல்ல என்று கூறி சாத்ரே, ரஸ்ஸல், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி என்ற பெயர்களை எல்லாம் புழக்கத்தில் விட்டால், அதன் பொருள் என்ன? இவர்கள் அனைவரையும் படித்து விட்டு தான் தொடர்கிறோம் நாங்கள் வாழும் முறையை. J.Kன் கேள்வி பதில் ஒன்றில், அவர் பதிலளிக்கிறார் – எல்லாவற்றையும் துறந்து விடு - including your guru. ( Krishnamurthi for Beginners - An anthology - pages 105 - 107 - The Collected works of J.Krishnamurhti: vol X New Delhi, October 10, 1956. அதன் பொருள் என்ன? இதுவரையிலும் மனித முயற்சியால், காலங்காலமாக சேர்த்துவைக்கப்பட்ட, அறிவை, ஞானத்தைக் கொண்டு, உன் தேடுதலைத் தொடராதே! நீயே அமர்ந்து சிந்தித்துக் கொள். கண்டுபிடி என்று. மிக உயர்ந்த இலட்சியங்களைப் பேசும் ஆனால், நடைமுறை வாழ்க்கைக்கு உதவாத சிந்தனை. எல்லோரும் புதிதாக முதல் புள்ளியில் இருந்து ஆரம்பிக்க வேண்டுமென்றால், எத்தனை பேரால் அந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்துப் பயணிக்க இயலும்?

    நடைமுறைப்படுத்தப் படக்கூடிய, இலட்சியவாதிகளின் வாழ்க்கையாக அல்லாமல், சராசரி மனிதனின் உயர்வுக்காகப் பாடுபடும் வழிகளைப் பற்றித்தான் பேசுகிறோம். ஒரு மகாத்மா, ஒரு ஜிகே என்று வாழ்க்கையை வாழ முடியாது நண்பரே.

    பின்னர் சார்த்ரே பற்றிக் குறிப்பிட்டீர்கள். அவர் ஒரு எகிஸ்டென்ஷியலிஸ்ட் சரி. அவர் எந்தக் கதிக்கு இறுதியில் ஆளானார் என்று உங்களுக்குத் தெரியுமா? தெரியாது. ஏனென்றால், வார்த்தைகளப் போட்டு, இணையத்தில் தேடி, அதை தன் சொந்த சரக்காகப் போடும் பொழுது இப்படிப்பட்ட அவஸ்தைக்குள்ளாக மாட்டிக் கொள்ள நேரிடும். சார்த்ரேயின் தத்துவத்தைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம் -

    சார்த்ரேயின் எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ம் மார்டின் ஹைடெக்கரால் பெரிதும் பாதிக்கப்பட்டது, 1940 ஆம் ஆண்டுவாக்கில், சார்த்ரேயின் எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ம் புகழின் உச்சத்தில் இருந்தது.

    உலகில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு சாராம்சம் இருக்கிறது என்பது பழைய சிந்தனை. மனிதனுக்கு அத்தகைய சாராம்சம் ஏதும் இல்லை என்கிறார் இவர்.

    சாராம்சம் என்பது ஒரு பொருள் அவ்வாறு இருப்பதற்கான இயற்கைத் தன்மை; நிலவரம். மனிதனுக்கு இது போன்ற இயற்கைத் தன்மை வாய்ந்த சாராம்சம் என்று ஒன்றும் இல்லை - எனவே தனக்கென்று சாராம்சம் இல்லாத மனிதன் தனது சாராம்சத்தைத் தானே உருவாக்கிக் கொண்டாக வேண்டும் என்கிறார். மனிதனின் சாரம் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதாக இல்லை. அர்த்தங்கள் அற்ற ஒரு உலகில் மனிதன் அந்நியனாகவே வாழ்கிறான் என்றார் சார்த்ரே. வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை - அதாவது உள்ளார்ந்த அர்த்தங்கள் ஏதுமில்லை. மனிதன் தான் அதற்கு அர்த்தம் கற்பிக்க வேண்டும் என்று சொன்னவர் உதிர்த்த மொழி: Man is condemned to be free.

    இவரது காலத்தில் வாழ்ந்த ஆல்பர்ட் கெமு , சாமுவேல் பெக்கெட் போன்றவர்கள் வைத்த வாதம் - வாழ்க்கை என்பது அபத்தமானது. அதற்கான அர்த்தத்தை மனிதன் தான் உருவாக்க வேண்டும்.

    வாழ்க்கையின் அபத்தம் என்னை வாந்தி எடுக்கத் தூண்டுகிறது என்று சொன்ன சார்த்ரே, நான் சிந்திக்கிறேன், எனவே நான் இருக்கிறேன் என்ற தனது கோட்பாட்டின் அடிப்படையில், தனது ‘பிரக்ஞை - பிரபஞ்சம்’ என்ற கருத்தியலை முன்வைத்தார். நான் என்பது எனது பிரக்ஞை. பிரபஞ்சம் என்பது என்னைச் சுற்றி இருக்கும் வெளி. எனக்கும் என்னைச் சுற்றி, இருக்கும் இந்தப் பிரபஞ்சத்துக்கும் இடையே இந்த மொழி தான் இடையூறாக இருக்கிறார் என்றார் சார்த்ரே!!!

    நான் என்ற பிரக்ஞையைக் கட்டமைக்க, மொழி தேவை. இல்லையென்றால், நான் என்ற பிம்பத்தை, பிரக்ஞையைக் கட்டமைக்க முடியாது என்று பின்நவீனத்துவ வாதிகளான ழாக் டெரிடா, மிஷல் ஃபூக்கோ, ரொலான் பார்த் போன்ற பின் நவீனத்துவவாதிகள் - சார்த்த்ரேயை நிர்-நிர்மாணம் செய்து அதன் வெற்று வாதத்தைத் தோலுரித்துக் காட்டிய பொழுது - சார்த்ரே மௌனமாக இருந்தார் - பதில் சொல்லாது. தான் வாழ்ந்த காலத்திலேயே தன் கோட்பாடுகளும், எக்ஸிஸ்டென்ஷியலிஸம் எல்லாம் காலாவாதியாகி, அருங்காட்சியகத்தில், அடுக்கி வைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார் - அவர். நடந்தது - 1966ல்

    நீங்கள் சொன்ன தத்துவவாதிகளின் கருத்துகளில் சில அவரவர் காலத்திலேயே காலவாதியாகிப் போய்விட்டது. உங்களைப் போன்ற இன்னும் சிலருக்கு அது தேவையான மொழியாக இருக்கிறது.


    // Humanism or atheism is not an organised faith with a founder, holy book and church //

    ஹுமானிஸம் அல்லது ஏதிஸம் என்கிறீர்கள். இதன் வேறுபாடு உங்களுக்குத் தெரியுமா? இரண்டும் ஒன்றல்ல!!!

    Are Humanists atheists? Since humanism is a naturalistic and non-religious worldview, most modern humanists tend to consider themselves either atheist or agnostic. But, while most humanists are atheists, not all atheists are humanists. As stated in the Humanist Manifesto II, "...views that merely reject theism are not equivalent to humanism. They lack commitment to the positive belief in the possibilities of human progress and to the values central to it." Humanism could therefore be looked at as a subset of atheism.
    ( http://dtstrainphilosophy.blogspot.com/2005/04/29-humanism-atheism.html)

    ஆம் – ஹுமானிஸம் – ஏதிஸம் இரண்டும் வேறு வேறானவை. அவை ஒன்றுக்கொன்று மாற்றானவை அல்ல. இந்தப் புரிதல் இருந்தால், இந்தப் பதிலை ஏற்று இங்கு பதிந்திருக்க மாட்டீர்கள் இல்லையா? மேலும் நான் சொன்ன கருத்தை இது இன்னமும் நன்றாக வலியுறுத்துகிறது. அதாவது, ஹுமானிஸம் தனக்கென ஒரு மெனிஃபெஸ்டோ வைத்திருக்கிறது. ஒரு அமைப்பை வைத்திருக்கிறது. தன்னை ஒரு நிறுவனமாக மாற்றிக் கொள்ள முயல்கிறது.

    // அதுவும் ஒரு பாதை என்ற வகையில், நிறுவனப்படுத்தப்பட்டு, ஒரு மதமாக மாறி விடுகிறதே தவிர, வேறெதுவும் சாதித்து விடுவதில்லை. // - இதைத் தான் நான் சொன்னேன். எந்த ஒரு தத்துவமும் தன்னை நிறுவனப்படுத்திக் கொள்ளவே முயல்கிறது. இல்லையென்றால் அழிந்து போய்விடும்.

    மேலும் இந்த ஹுமானிஸம் என்ன சொல்கிறது என்பதைப் பார்த்து விடுவோம் - For relevance: To many (but not all) humanists who have long ago gotten over all of the "god/no god" questions and moved on, their atheism is one of the more minor aspects of who they are. While not believing in their god is a really "big deal" to believers, to many humanists it is simply a fact of life. ஆம், இவர்கள் கடவுள் உண்டு இல்லை என்ற கொள்கையில் தலையிடுவதை விரும்பவில்லை. மாறாக கடவுள் இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும் – இல்லையென்றால் இல்லையென்று இருக்கட்டும்.

    நண்பர் தமிழ் லிபர், ஏதோ ஆங்கிலத்தில் ‘பொளந்து’ கட்டினால், யாரும் மிரண்டு போய்விடப் போவதில்லை. கடைசியில், ஹுமானிஸம் எங்கு வந்து நிற்கிறது பார்த்தீர்களா? இன்றைக்குப் பலரும் தங்களை அறியாமலே, வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை தான் இது. மீண்டும் ஒரு முறை, என்னுடைய நேசகுமாரும், இஸ்லாமிய இன துரோகிகளும் பதிவை ஒரு முறைப் படித்து விடும். ‘You had better read them...’ வாசிப்பதை உங்களிடத்தில் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை, எனக்கு.

    இந்த ஹுமானிஸவாதிகளை இன்னும் கொஞ்சம் உற்றுப் பாருங்கள் - Discussing the misguided reasoning of theists is a favorite pastime at just about any humanist gathering. Much of the historical development of secular humanism came directly out of challenges to the church. இறை நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையை நாங்கள் கூட்டம் போட்டு கிண்டலடிப்போம் என்கின்றனர் – so much for humanism.

    சரி, இந்த conditioned / unconditioned mind இதைப் பற்றி எல்லோரும் பேசுகின்றனர் - JKஐ மேற்கோள் காட்டி. Alright. இந்த குருவின் வாரிசுகள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? They run foundations to uncondition the minds of the conditioned people in the way of the gurus conditioned way of living.!!!

    இறை நம்பிக்கை என்பது ஒரு தெளிவான நம்பகமான பாதை. அதை மனிதர்கள் மதங்களாக எடுத்துச் செல்லும் பொழுது நிகழும் தவறுகளோடு ஒப்பிட்டு இகழ்வது அறியாமை. அதற்கு மாறான பாதைகள் இருக்கலாம். ஆனால், அவை மற்ற அனைத்தையும் விட உயர்ந்ததாக இயலாது. அவை ஒரு மாற்று வழி - அத்தனையே.
    11:15 PM

    ReplyDelete
  7. நண்பன் said...
    // கடவுள் மறுப்பு என்பது ஒரு தெளிவு( தான் நினைத்தது நடக்கவில்லை என்று கடவுளின் மீது ஏற்படும் கோபம் அல்ல),சுய சிந்தனை, சுய பரிசோதனை.

    நேரம் கிடைத்ததும் வருகிறேன் //

    ஆஹா!!!

    தெளிவு!?

    ஹா!!! ஹா!!! ஹா!!!

    நேரம் கிடைக்கும் பொழுது கண்டிப்பாக வாருங்கள்!!!

    உங்கள் தெளிவையும் பார்த்து விடலாமே - எத்தனை குழப்பவாதமாக இருக்கப் போகிறதென்று...

    ReplyDelete
  8. தாணு said...
    விவாதத்தில் கலந்து கொள்ளுமளவுக்கு அறிவு அதிகமில்லையென்ராலும் தருமியுடன் உங்கள் உரையாடலை ஆவலுடன் படிக்கும் ஆவலுண்டு!

    ReplyDelete
  9. தாணு,

    நன்றி.


    தருமி உரையாடுகிறாரோ இல்லையோ, ஒரு நல்ல பின்னூட்டம் வந்தது - கொஞ்சம் குத்தல் கலந்து. அதே தொனியில் பதிலும் சொல்லி இருக்கிறேன்.

    விவாதத்தை ஒரு புதிய தளத்தில் எடுத்துச் செல்லும் அளவிற்கு புதிய சிந்தனைகள்.

    இன்னும் பல கருத்துகள் வரவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

    உங்கள் மாதிரி நண்பர்கள், இது மாதிரி விவாதத்தில் நிறைய கலந்து கொள்ள வேண்டும் - இதுவே நல்லெண்ணம் வளர வழி வகுக்கும் என்பது என் எண்ணம்

    நன்றி - தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்

    ReplyDelete
  10. நண்பன்,
    //தருமி உரையாடுகிறாரோ இல்லையோ,...//
    ஏனிந்த அவநம்பிக்கை நண்பன். இதோ வந்திட்டேன் ...
    12:01 AM
    தருமி s

    ReplyDelete
  11. நண்பன்,

    'ஆயேஷா என்ற அற்புதம்' என்ற தங்கள் பதிவில் முகமது தன் முதிய வயதில் சிறுமி ஆயேஷாவைத் திருமணம் செய்தது சரியா (நான் அக்கேள்வியை உங்களிடம் எழுப்பவில்லை) என்று விவாதிக்க ஆரம்பித்து, ஆயேஷாவின் நற்பண்புகள் பற்றிப் பேசிச் சென்றிருந்த போது, 'நீண்ட விளக்கம்; ஆனாலும் கேள்வியின் மூலாதாரத்தை விட்டு விலகிப் போனதாக உணர்கிறேன்' என்று சொல்லியிருந்தேன். நீங்கள் சொல்வது போல் அவரது வயதைப் பற்றிய கேள்வியாக அதை நான் அங்கு வைக்கவில்லை. (ஆனால் என் பதிவில் அக்கேள்வி உண்டு) ஆனாலும் அப்பின்னூட்டத்திலிருந்தே இந்த உரையாடலை ஆரம்பித்துள்ளதாகச் சொல்லியுள்ளீர்கள். நன்றி.


    //...இதைப் பற்றிய தர்க்கங்கள் என்னுள்ளும் நிகழ்ந்திருக்கின்றன. அதை நான் ஒரு கவிதையாகக் கூட எழுதி இருந்தேன்// -ஆக உங்களைப் போன்ற மிகுந்த நம்பிக்கையாளருக்கும்கூட இதைப் போன்ற கேள்விகள் எழுந்துள்ளன என்று அறிவதில் ஒரு சந்தோஷம். ஏனெனில் நான் ஒரு நம்பிக்கையாளனாக இருக்கும்போதுதான் அத்தகைய கேள்விகள் எனக்குள்ளும் எழுந்தன. ஆனால், உங்கள் கேள்விகளுக்குப் பதில் தேடும்போது உங்கள் நம்பிக்கைகளிலிருந்து உங்களால் வெளிவர முடியவில்லை என்பது தெரிகிறது. கேள்வி உங்கள் மனத்தில் எழுந்தபோதே //பக்கத்து பள்ளியில்
    இறைவணக்கப் பிரார்த்தனை ...// உங்களை நீங்கள் இருந்த இடத்திலேயே இருத்தி விட்டது. ஆனால், எனக்கு நேர்ந்த அதே விஷயத்தில் நான் என் நம்பிக்கைகளிலிருந்து வெளிவர முடிந்திருக்கிறது. அது சரியா, தவறா என்ற கேள்வி இப்போது தேவையில்லை. அந்தத் "தேடல்" எல்லோர் மனதிலும் தோன்றும் ஒரு உந்துதல் என்பதோடு இப்போதைக்கு நிறுத்திக் கொள்வோம்.

    //இறை மறுப்பாளன் என்று சொல்லிக் கொண்டால் ... மதங்களை எந்த மன உறுத்தலுமின்றி, எளிதாக விமர்சிக்கலாம் ...எந்த ஒரு பலவீனமான கொள்கையையும் தூக்கிப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை//
    நீங்களே சரியாகச் சொல்லி விட்டீர்கள் - என்னைப் போன்ற ஒரு இறை மறுப்பாளனுக்கு எந்த ஒரு பலவீனமான கொள்கையையும் தூக்கிப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இறை நம்பிக்கையாளனுக்கு அது முடியாது; இல்லையா? எப்படியேனும் தன் மதம் சொல்வதைத் "தூக்கிப் பிடிக்க" அவசியமிருக்கிறதல்லவா? ஆனால், அது தேவைதானா? நான் நம்பும் மதத்தில் என் அறிவிற்குப் பொருந்தாத ஒன்று கண்டால், அதை அப்பட்டமாக ஒத்துக்கொள்ளக் கூடாதா? அதனால் நாம் தவறிழைப்பவர்களாக, நாம் நம்பும் நம் இறைவனுக்கு எதிராகப் போகிறோம் என்ற அச்சம் எல்லா மத நம்பிக்கையாளர்களுக்கும் உண்டல்லவா? அதைத் தாண்டியவனாக நானிருக்கிறேன்.

    //நீங்கள் ஒரு புதிய மதத்தை நிருவ முயற்சிக்கவில்லையா?..நீங்கள் வைக்கும் நாத்திகமும், ஒரு நடைமுறை மதமாக உருமாறி விடும் ..// - இதற்கு சான்றாக நீங்கள் கொடுத்திருக்கும் திராவிட கட்சிகள், கம்யூனிசம் எனக்கு உடன்பாடில்லை. ஒருவேளை புத்தமதத்தை மேற்கோளிட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். நீங்கள் சொல்வது போல் நான் பிறந்த மதத்திலிருந்து வெளிவந்து, எனக்குத் தெரிந்த மற்ற மதங்களிலும் என் கேள்விகளுக்கு விடை காணாமல் மதமே வேண்டாம் என்று தான் என் கட்டுரைகளில் கூறியுள்ளேன். நீங்கள் சொல்வது போல் இது ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு தாவுவது அல்ல. நாடோடி சொன்னது போல் "கடவுள் மறுப்பு என்பது ஒரு தெளிவு...,சுய சிந்தனை, சுய பரிசோதனை." நான் ஏற்கெனவே சொன்னது: "இது ஒரு தேடல்". அஃதன்றி ஒன்றை விட்டால் இன்னொன்றில் நுழைய வேண்டும் என்றோ, இன்னொன்றை ஆரம்பிக்க வேண்டும் என்பதோ பொருளில்லையே. Tamilreber சொன்னது மிகப் பொருத்தம்தான்: "you think that there will be only cages outside the cage you are in." நான் எனக்கு உடன்பாடில்லாத மதக் கோட்பாடுகளை விலக்கி, மதங்கள் தரும் carrot / stick தத்துவத்தை விலக்கி, அதன் பயங்காட்டல்களை ஒதுக்கி மதங்களை விட்டு வெளி வந்தேன் என்று சொல்லும்போதே நான் எப்படி இன்னொன்றை உருவாக்குவேன். அப்படி உருவாக்கினால் நான் முதலில் ஒரு மதத்திலிருந்து வெளிவந்ததே முழுமையான புரிதல் இல்லாத ஒன்றாகத்தான் கருதப்பட வேண்டும்.

    என் பதிவில் நான் சொல்லியுள்ளது: "இருக்கும்போது உன்னையும் என்னையும் 'மனிதம் உள்ள மனிதனாக' வைத்திருக்க வந்ததே மதமும், கடவுளும். இந்த 'வெளிச்சத்திற்கு'(இதைத்தான் enlightenment? என்கிறார்களோ?) வந்த பின், இல்லாத கடவுள் மனிதனுக்கு எதற்கு?
    மனிதம் போதுமே!"
    இந்த மனிதத்தை இன்னொரு மதம் என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இந்த மனிதம் எல்லோருக்கும் பொதுவானது என்பதை மறுக்க மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன்.

    ஆகவே: //மதங்களுக்கு மாற்றாக நீங்கள் வைக்கும் நாத்திகமும், ஒரு நடைமுறை மதமாக உருமாறி விடும் என்பதை நீங்கள் மறுக்க முடியாது, இல்லையா?//
    மறுக்கிறேன்.
    12:05 AM

    ReplyDelete
  12. உங்களுக்குப் பதிலளிக்கும் முன், நீங்கள் கொஞ்சம்
    இந்தப் பதிவையும் படித்து விடுங்கள்.

    அங்கே, நான் எழுதி இருக்கிறேன்:

    Spiritualism is an intense personal experience of one's self with his own beliefs, conviction and finally with the truth he believes.

    இது ஏதோ ஒரு quotable quotes புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியது அல்ல. நானே சிந்தித்து எனக்காக உருவாக்கிக் கொண்ட, ஒரு தத்துவம். கொஞ்சம் யோசித்து வையுங்கள். நீங்களும் நானும் எந்த புள்ளியில் வேறுபடுவோம் என்று. (Every writings needs a bit of suspense, to keep people on the edge, no?)

    நாளை, இன்ஷா அல்லாஹ், விரிவாகப் பதில் எழுதுகிறேன்.

    அன்புடன்.
    நண்பன்
    12:34 AM

    ReplyDelete
  13. ஏற்கெனவே அப்பதிவை வாசித்திருக்கிறேன்.

    ReplyDelete
  14. நண்பன் said...
    தருமி,

    உங்களது நீண்ட பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. விரிவான விளக்கங்கள் கொடுத்திருக்கிறீர்கள். அதற்கான பூடகமான பதிலை, நான் ஏற்கனவே வைத்து விட்டேன்.

    நீங்கள், லிபர், நாடோடி, வைப்பதெல்லாம் - ஒரு தனி மனித அனுபவத்தைப் பற்றியது. நீங்கள் குறிப்பிடும் 'the enlightment' உங்களுக்கானது. நீங்கள் ஒரு வகையில் தெளிவு பெற்று விட்டீர்களென்பதால், இந்த மொத்த சமுதாயமும் விடுதலை பெற்றதாகக் கருத முடியாது. நீங்கள், பெற்ற 'தெளிவை' மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் பொழுது, அதற்கான முயற்சிகளை எடுக்கும் பொழுது, அது குறித்து இன்னொருவரிடம் முதல் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் பொழுது, உங்கள் நிறுவனத்தை ஸ்தாபிக்கிறீர்கள். அது குறித்து அவரிடம் விவரிக்கிறீர்கள். பொது விதிகளை சொல்கிறீர்கள். அடுத்து, அடுத்து, அடுத்து, என ஆட்கள் கூடும் பொழுது, நிறுவனத்தின் அனைத்து பிரச்சினைகளும் வந்து விடும்.

    இது போலவே, இறை நம்பிக்கையை ஒரு மனிதன் தன் தனிப்பட்ட அனுபவமாக, தன் மனதுடன், தான் நம்பும் உண்மைகளுடன், தனக்காக மட்டும் பகிர்ந்து கொள்ளும் வரை, நீங்கள் சொல்லும் புனிதமாகவே மதங்கள் காட்டித் தந்த, இறைவனும் இருக்கின்றான். ஆனால், அந்த அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடும் பொழுது தான், பல தரப்பட்ட மனிதர்களின் தனிப்பட்ட, தெளிவற்ற நம்பிக்கைகளளும் பொதுவில் இடம்பிடித்து விடுகிறது. அதிலும் அந்த குறிப்பிட்ட மனிதர், கொஞ்சம் செல்வாக்குள்ளவராக இருந்து விட்டால், அதுவே முக்கியத்துவமும் பெற்று விடுகிறது. இதுவே எல்லா இடங்களிலும் நிகழ்கிறது. அதற்கான முழு பொறுப்பையும் நாம் மதங்கள் மீது போட்டுவிடக் கூடாது. இந்த தவறு, எல்லா நிறுவனங்களிலும் நிகழக் கூடியது தான். இது வரையிலும் தலையெடுத்த நாத்திகம், அப்படித் தான் ஆகி இருக்கிறது.

    நீங்கள் குறிப்பிட்ட புத்தத்திலும் அது தானே நிகழ்ந்தது!!! புத்தர் தான் ஞானம் பெற்ற அனுபவத்தை தனக்கானதாக மட்டும் வைத்திருந்தார் என்றால், அவருடைய போதனைகள் மாற்றப்பட்டிருக்காது. ஆனால், அவர் கற்றுத் தந்த போதனைகளை, அவர் மறைந்த சில காலத்திற்குள்ளாகவே, எப்படி திரித்து விட்டார்கள் - இறைவனைப் பற்றிக் குறிப்பிடாத அவரையே இறைவனாக்கி விட்டிருக்கிறார்கள்.

    அதனால் தான் சொல்கிறேன் - எந்த ஒரு அனுபவமும், பிறருடன் பகிரப்படாத வரைக்கும் புனிதமே. அடுத்ததாக, ஒருவரிடம் சொல்லப் போகும் பொழுது, அது தன் புனிதத்தை இழக்கத் தான் செய்யும். இதில், நாத்திகம் மட்டும் எப்படி விதி விலக்கு பெறப் போகிறது? கண்டிப்பாக இருக்க முடியாது. This is a general truth.


    இது நிறுவனமாக்குதலின் பலவீனம். போகட்டும், மற்றவைக்கு வருவோம்.

    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இவ்வகையான தர்க்கங்கள் நிகழ்கின்றன - But it means nothing. இந்த தர்க்கங்கள் - மனதிற்குள் நிகழும் தர்க்கங்கள் - is nothing but merely evaluating ones beliefs and trust on himself. நாடோடி, சொல்லும் தெளிவு, சுயசிந்தனை, மற்றும் //அந்தத் "தேடல்" எல்லோர் மனதிலும் தோன்றும் ஒரு உந்துதல் // ஆகிய அனைத்தும், ஒரு பொது நியதி - அதாவது சிந்திக்கத் தெரிந்த மனதில் தொடர்ந்து, நிகழக் கூடிய தர்க்கங்கள் தான் இவை. இது நாத்திகக் காரர்களுக்கு மட்டும் சொந்தம் என கொண்டாடுவது கூடாது. இந்தத் தேடுதல், எல்லோருக்கும் பொது, என்று வைத்துவிட்டு, பிறகு உங்கள் பக்கத்தையும், மதங்கள் பக்கம் நிற்கும் எங்களையும் பாருங்கள். என்ன வித்தியாசம்?

    நீங்கள் தனி மனிதராக நிற்பதால், உங்களின் தனிப்பட்ட நற்பண்புகளைக் காட்டி, அதுவே, உங்கள் தத்துவத்தின் குணமாகவும் இருக்கிறது என்று வாதிடுகிறீர்கள். இறைவன் பக்கம் ஒரு பெருங்கூட்டம் - கணக்கிலடங்காக் கூட்டம் ஒன்று இருக்கிறதால், இங்கு நிகழும் தவறுகள் மிகப் பெரியதாகத் தோன்றுகிறது. ஆனால், அமைப்பு ரீதியாக செயல்படத் தொடங்கும் அனைவருக்கும் இந்த சங்கடங்கள் வந்து சேரும்.

    மேலும் இந்த காரட் - குச்சி தத்துவம் - ஒரு ஒழுங்கமைவை உருவாக்குவதற்கான உத்தி தானே தவிர, அதுவே மதம் என முடிவு கட்டி விடக் கூடாது. மனிதன் இயல்பிலேயே, குச்சி - காரட் தத்துவத்தினால் கட்டுப்பட்டவன் தான். தனக்கென எந்த ஒரு ஆதாயமும் கிடைக்காது என்றாலோ, அல்லது எந்த முயற்சி எடுத்தாலும் உனக்கென நிர்ணயிக்கப்பட்டதைத் தவிர, அதிகம் கிடைக்காது என்று சொல்லி விடுங்கள் - அதாவது உனக்கான காரட் இத்தனை துண்டுகள் என சொல்லிவிட்டு, குச்சியைத் தூக்கி எறிந்து விடுங்கள் - மனிதன் அப்படியே சோம்பி சுருங்கி விடுவான். மீண்டும் உதாரணம் - சோவியத் ரஷ்யா. எத்தனை பேர் உழைத்தார்கள்!!! சோம்பேறிகள் தான் வளர்ந்தார்கள். அங்கு இறைவனைப் பற்றிய பேச்சு ஒரு துளி கூட கிடையாது. ஆனாலும், தோற்றுப் போனார்கள்.

    எல்லா சமுதாயமுமே, தன்னைத் தற்காத்துக் கொள்ள, இந்த காரட்-குச்சி தத்துவத்தைத் தான் நம்பி இருக்கின்றன. இவைகள் மதத்திலிருந்து பெறப்பட்டவை அல்ல. மாறாக, சமூக பாதுகாப்பிற்கே, இந்த காரட்டும் குச்சிகளும் தேவையாயிருக்கும் பொழுது, மதங்கள் மட்டும் இதை கடைப்பிடித்தல் எப்படி தவறாகி விடும்? மதத்தில் இது கட்டாயம் கூட கிடையாது. இதைச் செய்தால், நீ இங்கே இருப்பாய் - அல்லது அங்கே இருப்பாய். செய்வதும் அல்லது செய்யாததும் தனி மனிதனின் விருப்பம். குறிப்பாக, நேரத்திற்குப் போய் இறைவனை வணங்கிக் கொள்வது. செய்தால், அதற்கான பயன் - காரட். செய்யவில்லை என்றால், அதற்கான பயன் குச்சி. அவ்வளவு தான். ஆனால், இந்த இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் - மனிதனுக்கு உண்டு. இந்த தவறு செய்யும் வாய்ப்பு இருக்கும் வரைக்கும், காரட்-குச்சி தத்துவம் இருப்பதில் தவறில்லை. இதை ஒரு தாய் - எவ்வளவு தான் தன் குழந்தைகள் மீது அன்பும், பாசமும், பரிவும் கொண்டவளாக இருந்தாலும், இந்த காரட் - குச்சி தத்துவத்தைப் பயன்படுத்தித் தான் தன் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க முற்படுவாள். விதி விலக்குகள் இருக்கலாம் - விதி விலக்குகள் நடைமுறையாகிவிடாது.

    இந்த விவாதத்தைத் தொடர்ந்து, மேலும் ஒரு விவாதத்தை வைக்கக் கூடும் - அல்லது, ஏற்கனவே வைக்கப்பட்டு விட்டது.

    'எல்லாம் அறிந்த இறைவனாக இருக்கும் பொழுது, மனிதன் எப்படி தன்னை நடத்திக் கொள்வான் என்று அறிய இயலாதவனாய் இறைவன் இருப்பதில், தண்டிப்பதாக பயமுறுத்துவதில் என்ன புண்ணியம்?'

    பதில் - it involves the keen perception that life cannot forever be kept in leading strings; that in order to achieve full self consciousness man must finally be thrown back on his own resources.

    ஒரு பசு மாட்டை தாம்புக் கயிற்றில் கட்டி, ஒரு குறிப்பிட்ட எல்லையுடைய ஆரத்தில் மேயவிடுவதைப் போல, மனிதனை நடத்துவதா, இறைவனது படைப்பின் நோக்கம்? மனிதனை அவனது சொந்த பலங்களில் நிற்க வைத்து, எடை போடுவது தான் ஒரு சுதந்திரமான, நேர்மையான படைப்பாளியான இறைவன் செயலாக இருக்கும். இல்லையா?

    தூக்கிப் பிடிக்க வேண்டிய பலவீனங்கள் - மனிதர்களால் உண்டாக்கப்படுவது ஒன்று. மற்றது மதங்கள் சொல்லும் தத்துவங்களைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லாமையினால் - இறைவன் சொல்கிறான் - ஏற்றுக் கொள்கிறோம் என்ற நிலைபாடு எடுக்கும் பொழுது அதனால் எழக்கூடிய அசௌகரியங்கள் - இவற்றைத் தான் சொல்கிறேன் - பலவீனங்களைத் தூக்கிப் பிடிக்க வேண்டியதிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கேனும். ஆனால், அவை பின்னர் வருங்காலத்தில், உண்மைகளாக மலரும் பொழுது, அவற்றின் மீது ஏற்படும் நம்பிக்கைகளும், பிடிப்பும் மிக மிக அளப்பரியதாக இருக்கும்.


    பின்னர் மனிதம் – இதை ஏற்கனவே பெரிதும் விளக்கி விட்டேன் – கிராமங்களில், நமது மனிதர்கள் – வெள்ளந்தியாய் கடைப்பிடித்த ஒரு கொள்கையை - இன்று மேல்நாட்டினர் – Humanism என்று புதுச்சரக்காய், புதிய வடிவம் கொடுத்ததும் – அகமகிழ்ந்து விட வேண்டாம்.

    “ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை...” என்று பாடித் திரிந்த மனிதன் சொன்னது தான் - மனிதம். இங்கு இறை மறுப்பில்லை. மாறாக அனைத்தையும் ஒன்று போல பாவிக்கும், அதனால் பாதிப்படையாத மனநிலை தான் அது.

    “ஈஸ்வர் அல்லா தேரே நாம்..” என்ற காந்தியின் பிரபலமான பிரார்த்தனையில், மனிதம் தெரியவில்லையா?.

    எல்லாவற்றிற்கும் மேலை நாட்டை நோக்க வேண்டிய அவசியமில்லை. அதிலும் -ஆன்மீகத்திற்காக - அல்லது - உங்கள் வார்த்தையில் - தேடுதல்-க்காக மேலை நாட்டை நோக்க வேண்டாம் - நம்மிடையே அனைத்தும் இருக்கையிலே.
    12:59 AM

    ReplyDelete
  15. (எனக்கும்கூட வேலைப் பளு)தாமதத்திற்கு மிக வருந்துகிறேன். சடுதியில் வருகிறேன். மன்னிக்கவும்

    ReplyDelete
  16. நண்பன்,

    நிறுவனமாக்குதலின் பலவீனம் பற்றி முதலில் பேசியுள்ளீர்கள். உங்கள் கருத்துப் படி பலர் சேர்ந்துள்ள எந்த மதமும், தனிப்பட்ட கொள்கைளில்லாமல் கூட்டாக இருக்கும் எந்த அமைப்பும் தன் புனிதத்தை இழந்துவிடும் என்கிறீர்கள். //நாத்திகம் மட்டும் எப்படி விதி விலக்கு பெறப் போகிறது? கண்டிப்பாக இருக்க முடியாது.// - என்ற உங்கள் வாதத்தை மதங்களுக்கும் வைத்தால் எல்லா மதங்களும், இஸ்லாமும் சேர்த்து புனிதம் இழந்தைவைகளாகின்றன - உங்கள் விவாதத்தின் படி. நான் மறுக்கிறேன்.

    ஏனெனில், ஒரு தனிமனிதனின் 'enlightment' நிறுவனமாகிவிடும் என்கிறீர்கள். இப்படி பொதுப்படையாகச் சொல்ல முடியாது; சொல்லக் கூடாது என்று நினைக்கிறேன். எத்தனையோ என்னைப் போன்ற தனி மனிதர்களின் கருத்துக்கள் எல்லாம் நிறுவனமாவதில்லை; நிறுவனவாகவும் முடியாது. நீங்கள் சொல்வது நடக்குமெனில் மத ஈடுபாடு அதிகம் இல்லா எத்தனையோ மனிதர்கள் நம்மில் உண்டே அவர்கள் கருத்தெல்லாமா நிறுவனமாகி விட்டன. புத்தரின் பெயரை நான் சொன்னது அவரைப் போன்ற ஒன்றிரண்டு பேரின் கருத்துக்கள் நிறுவனமாகின. அதோடு சரி. அவ்வளவு ஏன், ஜிட்டு, ரஸ்ஸல் போன்ற பெரியவர்களின் கருத்துக்கள் கூட இன்றும் தனிமனிதக் கருத்துகளாகத்தான் நமக்குத் தெரியுமேயொழிய அவைகள் நிறுவனமாக்கப் பட்டு விடவில்லையே. அதோடு ஒரு மதம் என்பது ஒரு சிறிய அல்லது பெரிய மக்கள் குழு ஒன்றின் ஒன்றிணைந்த கருத்துக்கள். நாத்திகம் அப்படியல்ல. நான் பேசும் நாத்திகம் இன்னொரு நாத்திகருக்கு உடன் பாடாக இருக்கத் தேவையில்லை. ஒவ்வொரு நாத்திகரின் கருத்தும் அவரவரின் கருத்தாகத்தான் இருக்குமேயொழிய அங்கு ஒருங்கிணைப்பு ஏதுமிருக்காது. மதவுணர்வுகள் வெகு தனிப்பட்டவை- very personal - என்று கூறப்படுவது போலவே இறை மறுப்பும் ஒருவனின் தனிப்பட்ட உணர்வு என்பதை நீங்கள் மறுக்க முடியாது. ஆகவே இங்கு நிறுவனமாக்கப் படுதல் என்ற பேச்சுக்கே நாத்திகத்தில் இடமில்லை.

    //இவ்வகையான தர்க்கங்கள் ..... சிந்திக்கத் தெரிந்த மனதில் தொடர்ந்து, நிகழக் கூடிய தர்க்கங்கள் தான் இவை. இது நாத்திகக் காரர்களுக்கு மட்டும் சொந்தம் என கொண்டாடுவது கூடாது.//
    இந்த தர்க்கங்கள், தேடல்கள், நாடோடி சொல்லும் சுய தெளிவு (தெளிவு!? .... ஹா!!! ஹா!!! ஹா!!! - அப்படியென்ன இதில் நகைச்சுவை கண்டீர்கள் என்பது எனக்குப் புரிபடவில்லை!!) எல்லாமே எல்லோருக்கும் வருவதுதான் என்பதே எனக்கு கொஞ்சம் ஆச்சரியம்தான். ஏனெனில் இந்த வித எண்ணங்கள் மனித மனங்களில் வந்துவிடக் கூடாதென்பதில் பொதுவாகவே மதங்கள் மிகவும் கண்ணும் கருத்துமாயுள்ளன. சரி.. அது ஒரு பொதுவானதுதான் என்றே வைத்துக் கொண்டாலும், நாத்திகர்கள் தாங்கள் அதுவரை சார்ந்துள்ள மத நம்பிக்கைகளிலிருந்து "துணிந்து" வெளிவரத் துணிகிறார்கள். நீங்களே சொன்னது போல் அவர்களுக்கு //மதங்களுக்குரிய சில விநோத குணங்களை, நியாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. எந்த ஒரு பலவீனமான கொள்கையையும் தூக்கிப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. // ஆனால் நம்பிக்கையாளர்களோ ஒன்று ignorance is bliss என்பதாக எந்த கேள்விகளுமற்ற நிலையிலோ, இல்லை, மதக் கோட்பாடுகளைக் கேள்வி கேட்பதே blasphemy என்ற அச்ச உணர்விலோ தங்கள் தேடலை தலையில் தட்டி வைத்து விடுகிறார்கள். அதுதான் இந்த இருதரப்பினருக்கும் உள்ள வேறுபாடு. எல்லோரும் சிந்திக்கிறோம் என்ற உங்கள் கூற்றை ஒத்துக் கொள்கிறேன். //நாத்திகக் காரர்களுக்கு மட்டும் சொந்தம்// என்று சொல்லவில்லை; ஆனால், அந்த சிந்தனைகளின் முடிவுகள், வெளிப்பாடுகள் என்ன என்பதைத்தான் மேலே கூறியுள்ளேன்.

    //மனிதனை அவனது சொந்த பலங்களில் நிற்க வைத்து, எடை போடுவது தான் ஒரு சுதந்திரமான, நேர்மையான படைப்பாளியான இறைவன் செயலாக இருக்கும். இல்லையா? //- என்னால் இக்கருத்தை ஒப்புக்கொள்ள முடியவில்லை. சொந்த பலம் என்கிறீர்கள்; பின் எல்லாமே அவனிடமிருந்தே வருகிறதென்கிறீர்கள். அவன்தான் ஆட்டுவிப்பவன் என்கிறீர்கள். //man must finally be thrown back on his own resources. //என்கிறீர்கள். கடவுள் எல்லாம் அறிந்தவன் என்கிறீர்கள். அவன் தன்னிடம் வந்து சேரவே மனிதனைக் கடவுள் படைத்தான் என்கிறீர்கள். அவன் செய்யும் தவறுகளுக்கு அவனே பொறுப்பு; வெகுமதி - தண்டனை நிச்சயம் என்கிறீர்கள். எல்லா மதங்களும் கூறும் இக்கருத்துக்கள் எனக்கு ஒரு பெரும் முரண்பாடாகவே - quite self contradictory statements - தெரிகின்றன. .
    இக்கருத்தைத் தாங்கிய கேள்வியாகவே, என் இரண்டாம் பதிவின் "இரண்டாம் கட்டம்" என்ற பகுதியில் free will of man vs omniscience of god என்பதாகக் குறிப்பிட்டுள்ளேன். இதற்கு நான் புரிந்து கொள்ளும் அளவில் பதில்கள் இதுவரை நான் பெறவில்லை.

    //மேலும் இந்த காரட் - குச்சி தத்துவம் - ஒரு ஒழுங்கமைவை உருவாக்குவதற்கான உத்தி தானே தவிர, அதுவே மதம் என முடிவு கட்டி விடக் கூடாது// - ஆனால் ஆபிரஹாமிய மதங்களில் இக்கருத்து ஒரு பெரிய மையக் கருத்தென்பதில் ஏதேனும் ஐயம் உண்டோ. எல்லாம் போதிக்கப் பட்டாலும், இறுதியில் கூறப்படுவது: இப்படி இருந்தால் உனக்கு மோட்சம் / சுவனம்; இல்லையெனில் நித்திய eternal தண்டனை என்பதுதானே முடிவு. இந்தக் கருத்துக்களெல்லாம் ஒரு ஒழுங்கமைவை உருவாக்குவதற்கான உத்தி என்று நான் என் பதிவுகளிலும் கூறியுள்ளேனே. ஒரு வித்தியாசம்: அது புத்திசாலி முன்னோர்கள் நம்மை நல்வழிப்படுத்த சொன்ன கதைகள் அவை என்கிறேன் நான்; இல்லை இறைவன் தந்தது என்கிறீர்கள் நம்பிக்கையாளர்கள்.



    சில கொசுறுகள்:
    humanism என்றொரு ஆங்கிலச் சொல்; நமது மொழிச்சொல்: மனிதம். நான் மனிதம், மனித நேயம் பற்றிப் பேசினால் அது எப்படி மேல்நாட்டைப் நோக்குவதாகக் கொள்கிறீர்கள்? மனிதர்கள் எல்லோருக்கும் பொதுவான மனிதத்தையே நான் பேசுகிறேன்.


    //“ஈஸ்வர் அல்லா தேரே நாம்..” என்ற காந்தியின் பிரபலமான பிரார்த்தனையில், மனிதம் தெரியவில்லையா?. // - இதில் எப்படி மனிதம் தெரிகிறது; இதில் தெரிவது மத நல்லிணக்கம் அல்லவா? இங்கே கடவுளர்கள் கொண்டாடப் படுகிறார்கள். மனிதமும் அல்ல; மனிதர்களும் அல்ல.

    //சோவியத் ரஷ்யா. எத்தனை பேர் உழைத்தார்கள்!!! சோம்பேறிகள் தான் வளர்ந்தார்கள்..// - என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள், நண்பன். எனக்குப் புரியாத ஒரு விஷயம். பழைய U.S.S.R. பற்றியது. எனக்குத் தெரிந்த எல்லோருக்கும் எல்லாம் என்ற கம்யூனிசத்தில் - how could people be made to achieve such great things - competing in all fields with U.S.A. (especially STAR WARS..) என்பது எனக்குப் புரியாத ஒன்று. இன்றைக்கும் அது ஒரு வல்லரசாகத்தான் கருதப்படுகிறது; அப்போதோ அமெரிக்காவிற்கு விட்டுக் கொடுக்காத அளவுக்கு எல்லா துறைகளிலும், முக்கியமாக அறிவியல் துறைகளில் முன்னேறியிருந்த நாடாகத்தானே இருந்து வந்தது?


    தனிக் கொசுறு:
    நம் உரையாடலில் நாம் பேசப்போகும் விஷயங்கள் என்ன என்பது எனக்குத் தெளிவில்லாமல் இருக்கிறது. ஒரு வேளை இஸ்லாமை நோக்கி நான் வைத்த கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கவே இப்பதிவை ஆரம்பித்திருந்தால் சந்தோஷமே. அப்படியிருப்பின் என் ஆறாம் பதிவில் உள்ள 22 கேள்விகளில் முதல் நான்கு கேள்விகளையாவது விட்டுவிடலாமென நினைக்கிறேன். அக்கேள்விகள் அவ்வ்வளவு முக்கியமற்ற கேள்விகளாகவே நினைக்கிறேன். எனினும் அதை உங்கள் விருப்பத்திற்கு விட்டு விடுகிறேன்.
    11:46 PM

    ReplyDelete
  17. நண்பன்
    ////(தெளிவு!? .... ஹா!!! ஹா!!! ஹா!!! - அப்படியென்ன இதில் நகைச்சுவை கண்டீர்கள் என்பது எனக்குப் புரிபடவில்லை!!) //

    There is nothing called an absolute truth - Similarly, there is nothing called an absolute false.//
    ஒப்புக் கொள்கிறேன். இன்னொன்றும் சொல்வார்களே: truth is a function of time. அதனால், no truth is neither absolute and permanent.
    ஆனால் எனக்கு 'இந்த நேரத்தில்' ஒரு தெளிவு இருக்கும். நாளை அது மாறலாம். தெளிவென்பதே இல்லாமல் இருந்தால் ... !
    உங்களுக்கு இஸ்லாமைப் பற்றி "இப்போது" ஒரு தெளிவில்லாமலா விவாதிக்கிறீர்கள்? அதுபோல் அவருக்கு அவர் 'தெளிவு'. உங்களின் 'தெளிவில்' எனக்குக் குழப்பம்; என் தெளிவில் உங்களுக்குச் சம்மதமின்மை; அதனால்தான் இந்த விவாதங்கள்; இல்லையா?
    7:33 AM
    தருமி

    ReplyDelete
  18. நண்பன்,
    //no truth is neither absolute and permanent.//

    Truth is neither absolute nor permanent என்று மாற்றிப் படித்துக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  19. நண்பன்,

    //தேடுதல்களை மதங்கள் தடை செய்கின்றன என்ற வாதம் தவறானது.// அப்படியா சொல்லுகிறீர்கள். எனில் என் மதங்களைப் பற்றிய நான்காவது பதிவில் உள்ள 8-ம் கேள்வியில் நான் கிறித்துவமதத்திலுள்ள மேற்கோள்களைக் கொடுத்துள்ளேன்.. அவை:

    //8. "கடவுளின்மேல் பயமே ஞானத்தின் ஆரம்பம்" (Prov. 1:9 )
    "ஞானிகளின் ஞானத்தைஅழிப்பேன்;அறிஞர்களின் அறிவை வெறுமையாக்குவேன்"(Cor. 1:19 )
    "ஞானிகளின் எண்ணங்கள் வீணானவை என் ஆண்டவர் அறிவார்" (Cor. 3:20)
    இந்த மேற்கோள்கள் ஒரு வினாவை என்னுள் எழுப்புகின்றன: ஏன் (பொதுவாக எல்லா மதங்களுமே ) கிறித்துவம் 'ஞானத்தை', அறிவை (fruit of wisdom was forbidden) ஏன் புறந்தள்ளுகின்றன?//
    மத நம்பிக்கைகளைப் பற்றி கேள்விகள் எழுப்புவதற்கு எதிராக இன்னும்கூட சில மேற்கோள்கள் உண்டு; வேண்டுமெனில் தேடி எடுக்க வேண்டும். ..பன்றிகள் முன் இரைக்கப் பட்ட முத்துக்கள் என்று தேவ காரியங்களைப் பற்றிய ஒரு வாக்கியம் நினைவுக்கு வருகிறது. (மத்:7:6) இன்னும் தமதிரித்துவம் என்ற கிறித்துவக் கோட்பாட்டைப் புரிந்து கொள்ள முயலாதே என்பதற்கு அகுஸ்தீனார் என்பவரை வைத்து மிகச்சின்ன வயதிலேயே மதங்களைப் பற்றிய கேள்விகள் கேட்பதே தவறு என்பது போதிக்கப் படுகிறது என்பதை ஒரு மாஜி-நல்ல(!) கிறித்துவ விசுவாசியாக அறுதியிட்டுச் சொல்ல முடியும்.

    நிச்சயமாக நம்பிக்கை அல்லது கிறித்துவ மொழியில் விசுவாசம் என்பது ஓவ்வொரு கிறித்துவனுக்கும் அடிப்படைத் தேவையாக போதிக்கப் படுகிறது.

    அதே போலவே, தமிழ்மணப் பதிவுகளிலிருந்து இஸ்லாமைப் பற்றி அறிந்தவற்றில் ஒன்று: ஒரு இஸ்லாமியன் தன் நம்பிக்கைகளை விட்டுவிட்டு மதத்தை விட்டு வெளியேறத் தடையுண்டு. -இது சரியா இல்லையா என்று நீங்கள்தான் சொல்லணும்.

    அதோடு //ஹ்ல்ரத் அலீ (ரலி): "உலகினில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்குத் தீர்வு காண அல்லாஹ்வின் வேதந்தான் சிறந்த வழி. ...(தன் அறிவைக்கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை (அமல் படுத்தாமல்) விட்டு விட்டால், அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவான்// என்ற மேற்கோளுக்குப் பொருளாக சுல்தான் அவர்கள் தன் பதிவில் எனக்களித்த விளக்கத்தில் //அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வந்த நபிகளார், முஸ்லீம்கள் தங்களிடையே ஏற்படும் எல்லா பிணக்குகளுக்கும் பூசல்களுக்கும் தீர்வை, அடிப்படையான குர்ஆனைக் கொண்டே பெறச் சொல்கின்றனர். அவ்வாறு தீர்ப்பளிக்காவிட்டால் மக்கள் சிதறுண்டு விடுவார்கள். அதனால் அவ்வாறு தீர்ப்பளிக்காதவர்கள் இறப்பிற்கு பின்னுள்ள மறுமை வாழ்வில் இறைவனால் தண்டிக்கப்படுவார்கள் (நொறுக்கப்படுவார்கள்) என்று எச்சரிக்கிறார்கள்.// என்று சொல்லியுள்ளதை என் விவாதத்திற்குச் சான்றாக வைக்கிறேன்.

    மேலும் இஸ்லாமில் குரானைக் கேள்வி கேட்பதே blasphemy என்று கருதப் படுவதில்லையா?

    அதேபோலவே, "ப்ராமணன் எந்தத் தவறுக்காகவும் மன்னிக்கப் படலாம். ஆனால் கடவுளைப் பற்றிய ஐயங்களை எழுப்பினால் அவனுக்கு மன்னிப்பு கிடையாது . மனு. - இப்படி வாசித்த நினைவு. சரியான மேற்கோள் தரமுடியவில்லை.

    எந்த மதத்திலும் நீங்கள் சொல்லும் openness இல்லையே!

    என் தனிப்பட்ட அனுபவமும், கருத்தும்: கேள்விகளுக்கு உட்படுத்த ஆரம்பித்தால் எம்மதமும் நிற்காது.
    1:19 PM

    ReplyDelete
  20. நாடோடி
    //தெளிவு!?

    ஹா!!! ஹா!!! ஹா!!!//

    //There is nothing called an absolute truth - Similarly, there is nothing called an absolute false.//

    தெளிவு என்பதின் பொருள் உண்மை என்பது அல்ல என்று நினைக்கிறேன்.

    தெளிந்த நீரோடை என்பதின் பொருள் ?

    தெளிவு என்பது தன் அசுத்தங்களை(மத எண்ணங்களை) களைந்துவிட்டு தன் உண்மையான மன சிந்தனையை பிரதிபலிப்பது. "கடவுள்"் என்ற ஒன்றின் தேவை எதனால் ஏற்பட்டது என்று அறிவது முயல்வது. மற்றொரு முக்கியமான விசயம் atheist தன் முடிவுகளை என்றுமே அடுத்தவர்கள் மீது திணிப்பது கிடையாது. அவ்வாற் செய்தால் அங்கேயே சுயசிந்தனைகள் இறக்க ஆரம்பித்துவிடும்(இதைதான் மதங்கள் செய்கிறது).

    கடவுள் விசயத்தில் மன தெளிவு என்பது அட்டை to அட்டை விசயங்களை மட்டுமே உண்மை என்று கொள்ளாமல் உண்மையை ஆராயாமுற்படும் மனதின் செயல்.

    atheist என்பது தன்சுய சிந்தனையினால் மட்டுமே வருவது. கம்யூனிஸ்ட்கள், திராவிட கட்சியினரை இதில் சேர்க்க முடியாது. ஏனெனில் அவர்கள் தன் சுய சிந்தனைகளைவிட தாங்கள் ஏற்றுக்கொண்ட தலைவர்களின் எண்ணத்தையே பிரதிபலிக்கின்றனர் சுயபரிசோதனையின்றி. இதனால் தான் இவர் கோயிலுக்கு திருட்டுதனமாக சென்றார், அவர் சென்றார் போன்றஅக்கபோருக்கு காரணம்.
    7:46 PM

    ReplyDelete
  21. தருமி, நாடோடி

    வேறு பதிவுகளில் கொஞ்சம் மும்முரமாகியதால், பதில்கள் வரும் சற்று தாமதமாக.
    11:57 PM

    ReplyDelete
  22. // தெளிவு என்பதின் பொருள் உண்மை என்பது அல்ல என்று நினைக்கிறேன்.

    தெளிந்த நீரோடை என்பதின் பொருள் ? //


    தெளிவு வேறு, உண்மை வேறு என்றா சொல்கிறீர்கள்?

    இல்லை. இரண்டுமே ஒன்று தான்.

    அசுத்தங்களைக் களைவது என்பது சுத்தமாகுதல் என்று தான் அர்த்தப் படும்.

    தெளிந்த நீரோடை என்று சொல்லும் பொழுது, ஓடுகின்ற தண்ணீர், எதையும் மறைக்காது, ஊடுருவிப் பார்க்க அனுமதிக்கிறது என்பதனால் தான் - தெளிந்த நீரோடை என்று சொல்வர். அது அசுத்தங்களைக் களைந்து விட்டது என்பதனால், அதை தெளிந்த நீரோடை என்று சொல்வதில்லை. கண்ணுக்குத் தெரியாமல் கரைந்திருக்கும் அசுத்தங்கள் அப்பொழுதும் தெரிவதில்லை. அசுத்தங்களைக் களைய அதிலிருந்து பல நிலைகளைத் தாண்ட வேண்டும்.

    மறைக்காமல் காட்டுவதால், தெளிவு என்பது உண்மையைத் தான் குறிக்கும். உண்மையை உணர்ந்த பின்தான், அதை நோக்கிய பயணம் ஆரம்பிக்கும். அதாவது - அசுத்தங்கள் களையப்பட்டு, சுத்தமான நிலையை அடைதல்.

    உண்மையை உணர்தல், பின்னர், தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் முயற்சி - இவை தான் ஆன்மீகப் பயணத்தின் தொடக்கம். இங்கு மதங்களை இழுத்து வராமல், சிந்தித்துப் பாருங்கள் - இறைவனை நோக்கிய பயணம் புனிதமானது. மதங்கள் இங்கு இறைவனை நோக்கி ஒரு வழித்தடம் அமைத்து கொடுக்கின்றன.

    சிந்தனை திணிப்புகள் என்று நீங்கள் சொல்வது இடைத்தரகர்கள் மூலம் ஒருவர் இறைவனை எளிதாக அடைந்து விடலாம் - தான் எதற்காக முயற்சிக்க வேண்டும் - கொஞ்சம் பணம் கொடுத்து பரிகாரம் செய்து கொண்டால், போயிற்று. அல்லது ஒரு நாள் போய், பாவமன்னிப்பு கோரிவிட்டால் போயிற்று என்ற மாதிரி தத்துவங்களால், மதங்கள் மலினப்பட்டிருக்கலாம். ஆனால், இறைவன் அறிவிப்பது - என்னிடத்தில் எந்த இடைத்தரகனும் இல்லை. நேராக நீங்களே உங்கள் பிரார்த்தனையுடன் அணுகுங்கள் என்பது தானே? இந்த தத்துவம் எந்த மதத்தில் இருக்கிறது என்று கேட்காதீர்கள் - இருக்கிறது.

    நீங்கள், தருமி, இருவருமே - நாத்திகம் தனிப்பட்ட மனிதனின் சிந்தனை. அந்த அளவில் மட்டுமே அணுக வேண்டும் என்கின்றீர்கள். இதே அணுகுமுறையை, ஆன்மீக தேடல் உள்ள மனிதனுக்கு அனுமதித்தீர்கள் என்றால், நீங்கள் சொல்லும் நாத்திகம் எத்தனை அறிவுபூர்வமானதோ - அதைவிட அறிவுபூர்வமானது - இறைவனை ஏற்றுக் கொள்வதும். ஆனால், இந்த தனிமனித சிந்தனை, சமூகத்திற்கு எந்த விதத்தில் பயன்படப் போகிறது?

    சமூகத்தோடு, இணைந்து, ஒரு கட்டமைப்புத் தராத, தனி அனுபவம் மட்டும் கொண்டு என்ன செய்ய இயலும்? சமூகத்திற்குப் பயன்படும் விதத்தில், ஒரு தத்துவம் அமைய வேண்டுமானால் - அதற்கு முதலில் தேவை - ஒரு பொது விதி. ஆனால், நீங்கள் அதை மறுத்தீர்கள் என்றால், உங்களுக்கு என்ன உரிமை கோருகிறீர்களோ, அதே தளத்தில் வைத்து தான் ஆன்மீகவாதிகளையும் எடை போட வேண்டும்? இல்லையா? அப்பொழுது எந்த வித்தியாசமுமின்றி, ஒரு தனிமனிதனின் நற்குணங்கள் மட்டுமே பேசப்படும். ஆனால், அப்பொழுதும், இந்த சமூகம் தான் இயங்க சில விதிகளைத் தேடிக் கொண்டு தான் இருக்கும். யாராவது அதைச் செய்தே வேண்டும். - after all, human being is a social animal by nature and he couldn’t stand alone on his own at any time.

    மதங்கள் தரும் எல்லாக் கட்டுப்பாடுகளையும் மீறாது இருக்க வேண்டும் என்பதில்லை. உண்மையான புரிதல் இருக்கும் மனிதனுக்கு, மதத்திற்குள்ளாகவும், அளப்பறிய சுதந்திரம் கிட்டும். சமூக தளைகளுள்ளே இருந்து கொண்டே, தளைகளை மீறவும், பரந்த வெளியில், பரவசத்துடன், ஆன்மீகத் தேடலில் ஈடுபடவும், மனிதர்களை மனிதனாக மட்டுமே மதிக்கவும், அன்பு செய்யவும் முடியும்.

    எல்லா மதங்களிலும் இது இருக்க வேண்டும். என்றாலும், இஸ்லாத்தினுள்ளே இந்த பரந்த அனுபவம் பெற வழியுண்டு. இறைவன் ஒருவனே, முகமது நபிகள் அவனின் இறைத்தூதர் என்ற நம்பிக்கைகள் தான் ஒருவனை இஸ்லாமியனாக அறிவிக்கிறது. இந்த ஒரு வரியை மீறாமல், பலவித ஆன்மீக அனுபவங்களை மட்டுமல்லாது, ஒரு இனிய மனிதனாகவும் இருக்க முடியும். அதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.


    மேலும், தருமி சொல்லும் ஒரு வாக்கியம் -

    Once you had reached an enlightment, then why you do not need the God, further, right?

    ஒவ்வொரு மனிதனும் இந்த enlightmentஐத் தனித்தனியாக அடைய வேண்டும் - அப்படித்தான் நீங்கள் வாதிடுகிறீர்கள் - ஏனென்றால், இதை நிறுவனப்படுத்த முடியாது. நிறுவனப்படுத்த நினைத்த முதல் கணத்தில், இந்த தத்துவம் செத்து விடும். இது தான் உங்கள் வாதம். இதைக் கொண்டு, எந்த ஒரு சமூகத்தையும் ஒழுங்கமைவு செய்ய முடியாது. ஆக, ஒவ்வொரு மனிதனும், தன்னைத் தானே ஆராய்ந்து, இந்த ஞானத்தை அடையும் வரை அவனுக்கு இந்த கடவுள் என்ற தத்துவம் இருக்கட்டும் - அவன் ஞானத்தை அடைந்த பின்பு, கடவுளைக் கைவிடட்டும் என்கிறீர்கள். எனக்கென்னவோ, இது நன்றி மறக்கும் செயலாகத் தான் தோன்றுகிறது.

    என்னைப் பொறுத்தவரைக்கும் - மனிதனின் ஆழ்மனத் தேடுதல், இறுதியில் இறைவனைப் போய்த் தான் சேரும் - இது தனிமனித அனுபவம். நீங்கள் சொல்லும் enlightment. இந்த தேடுதலினூடாக, சமூக விதிகளை நிர்ணயிக்கும் பணியை மதங்கள் செய்கின்றன. நீங்கள் - உங்கள் தேடுதலைத் தொடர்ந்து பயணம் செய்யும் பொழுது, இந்த மதங்கள் உங்களுக்கு எந்த குறுக்கீடும் செய்யாது. ஒன்றிரண்டு பொதுவிதிகளை மட்டுமே கோரும். அவ்வளவு தான்.

    நீங்கள் சொல்லும் நாத்திகம் - தனி மனித அனுபவம் மாத்திரமே - சமூக தளத்தில் அது இயங்காது - அதாவது யாருக்கும் பயன்படாது, தனி மனிதனைத் தவிர - அதாவது அவனது சுய நல தேடுதலுக்கு மட்டுமே அது உதவும்!

    இப்பொழுது சொல்லுங்கள் - எது நல்லது? சில பலவீனங்கள் இருந்தாலும் அவற்றைக் களையக் கூடிய சாத்தியதைகள் உள்ளடக்கிய சமூக கட்டமைப்பைத் தரும் மதங்களா? யார் எப்படி போனால் என்ன, நான் ஞானம் பெற்றுவிட்டேன் என்ற தத்துவமா?

    மேலும், இருக்கின்ற ஒன்றைத் தான் மறுக்க இயலும். இல்லாத ஒன்றை மறுக்க முடியாதல்லவா? இறை மறுப்பு, இல்லை என்ற வாதங்கள், a-theist எல்லாமே – இருக்கின்ற ஒரு இறைவனை மறுத்து வைக்கப்படும் வாதங்கள் தானே? இல்லையா? ஆக, தர்க்கத்தின், தொடக்கமே, ஒன்றை ஒப்புக் கொண்டு, அதை மேலும் ஆராய்வதற்கு மட்டுமே – இரண்டு அணிகளாக பிரிந்து செயல்படுகிறோம் என்ற அளவில் தான் உங்கள் வாதங்கள் அமைகின்றன என்றால், மிகையாகாது இல்லையா?

    (நாடோடி, நன்றி - உங்கள் பின்னூட்டத்திற்கு)
    11:30 PM

    ReplyDelete
  23. நண்பன்,

    //மதங்கள் தரும் எல்லாக் கட்டுப்பாடுகளையும் மீறாது இருக்க வேண்டும் என்பதில்லை. உண்மையான புரிதல் இருக்கும் மனிதனுக்கு, மதத்திற்குள்ளாகவும், அளப்பறிய சுதந்திரம் கிட்டும். சமூக தளைகளுள்ளே இருந்து கொண்டே, தளைகளை மீறவும், பரந்த வெளியில், பரவசத்துடன், ஆன்மீகத் தேடலில் ஈடுபடவும், மனிதர்களை மனிதனாக மட்டுமே மதிக்கவும், அன்பு செய்யவும் முடியும்//

    ஆஹா! நீங்கள் சொல்லும் "சுதந்திரம்" மதங்களில் இருந்துவிட்டால் நீங்களும் நானும் இந்த விவாதத்திற்குள் வந்திருக்கவே மாட்டோமே! நீங்கள் சொல்லும் இது ஒரு idealism. அது உண்மையாக இருந்துவிட்டால் மிகச் சந்தோஷமே. ஆனால், உண்மை அதுவா? மதங்களின் வேலையே "கட்டம் கட்டுவது" தானே?!

    இதைத் தவிரவும் நீங்கள் சொல்லியுள்ளவைகளில் கீழ்க்கண்டவற்றை மறுக்கிறேன். சின்னச் சின்னக் குறிப்புகளோடு அவைகளைத் தருகிறேன்.

    //நாத்திகம் எத்தனை அறிவுபூர்வமானதோ - அதைவிட அறிவுபூர்வமானது - இறைவனை ஏற்றுக் கொள்வதும்..//
    நாத்திகம் அறிவுபூர்வமானது என்று ஒத்துக் கொண்டவரை சந்தோஷம்.

    //தனிமனித சிந்தனை, சமூகத்திற்கு எந்த விதத்தில் பயன்படப் போகிறது? //
    பதில் தரத் தேவையேயில்லை என்றே கருதுகிறேன்.

    //மனிதனின் ஆழ்மனத் தேடுதல், இறுதியில் இறைவனைப் போய்த் தான் சேரும் - இது தனிமனித அனுபவம்'' // - நம்பிக்கையாளர்களின் அனுபவம் என்று சொல்லுங்கள்; ஒத்துக் கொள்கிறேன்.
    எல்லோருக்கும் பொதுவாக்காதீர்கள். ஏனெனில் இந்தத் தேடலின் முடிவு என்ன என்பதில் என் அனுபவமோ, மற்ற கடவுள் மறுப்பாளர்களின் அனுபவமோ எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லையல்லவா?

    //இருக்கின்ற ஒன்றைத் தான் மறுக்க இயலும். இல்லாத ஒன்றை மறுக்க முடியாதல்லவா?// - !!



    மேலும் நாம் போதுமான அளவு பேசிவிட்ட விஷயங்களைப் பற்றி மீண்டும் மீண்டும் விவாதிப்பதில் விருப்பமில்லை. நான் முதலிலே சொன்னது போல் நாம் ஒருவரை ஒருவர் மாற்ற முயலைவில்லை என்றே நம்புகிறேன். இருபக்கக் கருத்தும் கூறப்பட்டுவிட்டன; இனி அடுத்த கட்டம் நோக்கிச் செல்வது சரியானதாயிருக்கும். சரிதானே?
    2:22 PM
    தருமி

    ReplyDelete
  24. // மேலும் நாம் போதுமான அளவு பேசிவிட்ட விஷயங்களைப் பற்றி மீண்டும் மீண்டும் விவாதிப்பதில் விருப்பமில்லை. நான் முதலிலே சொன்னது போல் நாம் ஒருவரை ஒருவர் மாற்ற முயலைவில்லை என்றே நம்புகிறேன். இருபக்கக் கருத்தும் கூறப்பட்டுவிட்டன; இனி அடுத்த கட்டம் நோக்கிச் செல்வது சரியானதாயிருக்கும். சரிதானே? //

    நானும் அவ்வாறே தான் உணர்கிறேன். என்றாலும் நானே சொல்வது நன்றாக இருக்காது என்பதால் மௌனம் காத்தேன். நீங்களே சொல்லிவிட்டீர்கள். சொல்வதை இருவருமே சொல்லி விட்டோம். இனி மற்ற நண்பர்கள், அலசி ஆராய்ந்து தங்கள் கருத்துகளைச் சொல்லட்டும் - விவாதமாக அல்ல. ஒரு கருத்துப் பதிவாக.
    -நண்பன்

    ReplyDelete
  25. // நாம் பேசிய விஷயத்தையொட்டிய பதிவொன்றைக் கண்டேன்; உங்கள் பார்வைக்கு இதோ...அது //

    நான் அங்கு பின்னூட்டமிட்டுவிட்டதை நீங்கள் கவனிக்கவில்லையா?

    பெருவெளி என்று கூடுதலான ஒரு வார்த்தையைக் கையாண்டிருக்கிறார் என்பதைத் தவிர, நீங்கள், நாடோடி, லிபர் வைத்த வாதங்களைத் தாண்டி வேறு எதையும் கூறிவிடவில்லை. வார்த்தைகளில் நளினம் இருக்கிறது.

    பெருவெளி ஒரு நிருவனமல்ல என்கிறார். உண்மைதான். பெருவெளி என்பது ஒரு இயங்குதளம். அதாவது, அது ஒரு Operating Platform. அங்கு நிற்பதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. இந்த இயங்கு தளத்தைப் பாருங்கள் எத்தனை நன்றாக இருக்கிறது – எங்களதாக்கும் என்றெல்லாம் பெருமைப் பட்டுக் கொள்ள முடியாது. இந்தப் பெருவெளி இறைவனுள் அடக்கம். அங்கே போய் நின்று கொண்டு, இறைவனை மறுப்பது இயலாது.

    இறைவனைப் பற்றி எத்தனை பேசினாலும், அது நீண்டு கொண்டே தான் இருக்கும் - ஏனென்றால் மறுப்பதற்கு எவருக்குமே சக்தி இல்லை. கண்டால் தானே மறுப்பதற்கு? ஆகையால் முதலில், தேடுங்கள் - இடைத்தரகர்களை ஒதுக்கி வைத்து விட்டு, உங்கள் முயற்சியால் தேடுங்கள் - முடியும். இயல்வில்லையென்பதால், நாத்திகம் பேசுகிறேன் என்று போகக் கூடாது.

    இல்லையா?
    10:58 PM

    ReplyDelete
  26. நண்பன்,
    உங்கள் கடைசிப் பின்னூட்டம், அதிலும் அந்தக் கடைசிப் பத்தி மிகவும் நெருடலாக இருக்கிறது.


    //மறுப்பதற்கு எவருக்குமே சக்தி இல்லை.//
    நான் மறுக்கிறேனே!


    //கண்டால் தானே மறுப்பதற்கு? //
    கண்டால்தானே ஒத்துக் கொள்வதற்கு என்பதை மாற்றிப் போட்டு விட்டீர்களோ?

    //தேடுங்கள் - முடியும்.//
    தேடி முடித்ததில்தான் "இல்லை" என்ற ஞானம் !

    //இயலவில்லையென்பதால், நாத்திகம் பேசுகிறேன் என்று போகக் கூடாது. //
    !!!!!!!!!
    - தருமி

    ReplyDelete
  27. //மறுப்பதற்கு எவருக்குமே சக்தி இல்லை.//
    நான் மறுக்கிறேனே!


    மறுக்கிறேன் - மறுக்கவில்லை என்று எவராலும் சொல்ல முடியும். ஆனால், அதற்கான ருசு கொடுக்க வேண்டுமே அது தான் முடியாது. இறைமறுப்பாளர்களே ஒரு கட்டத்தில், தங்கள் மறுப்பைக் கைவிட வேண்டிய சூழ்நிலை எப்பொழுதுமே உண்டாகி இருக்கிறது.

    //
    //கண்டால் தானே மறுப்பதற்கு? //
    கண்டால்தானே ஒத்துக் கொள்வதற்கு என்பதை மாற்றிப் போட்டு விட்டீர்களோ?//

    கண்டவர்கள் சொன்னதால் தானே - அவர்கள் சொற்களில் நம்பிக்கைக் கொண்டதினால் தானே இறைவன் இருக்கிறான் என்கிறேன். இல்லை என்று சொல்பவர்கள் தான் அது குறித்து நிறுவ வேண்டுமே தவிர, இருக்கிறது என்று கண்டவர்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல.


    //தேடுங்கள் - முடியும்.//
    தேடி முடித்ததில்தான் "இல்லை" என்ற ஞானம் !

    நீங்கள் எழுதிய பதிவு 2 ஐ வாசித்ததில் - இறைவனுடன் ஒரு MOU கையெழுத்திட முயற்சித்த ஆர்வம் தான் எனக்குத் தெரிந்தது. மேலும், இயேசு இறைவனை நோக்கி 'எம்மை ஏன் கை விட்டீர்' என்று ஜெபித்ததாகவும் அதை இறைவன் கேட்கவில்லை என்றும் இறைவனின் ஜெபமே தோற்றுவிட்ட பின் மனிதனின் ஜெபம் என்ன செய்யும் என்று நீங்கள் ஜெபத்தில் நம்பிக்கை இழந்ததாகக் கூறி இருக்கிறீர்கள்.

    ஆனால், குரானில் சொல்லப்பட்டிருப்பது என்ன தெரியுமா?

    'இயேசு சிலுவையில் அறையப்படவுமில்லை - மரிக்கவுமில்லை'

    இன்று, கிறித்துவ மத ஆராய்ச்சியாளர்கள் பலரும் தங்கள் ஆராய்ச்சியின் இறுதியாக கூறுவது - இயேசு சிலுவையில் அறையப்படவுமில்லை - மரிக்கவுமில்லை என்பது தான். குரானில் - 1400 வருடங்களுக்கு முன்பு எந்த ஒரு ஆராய்ச்சியும் செய்யும் வசதியுமின்றி, செய்வதற்குரிய நேரமும் தேவையுமின்றி - குரானில் கூறப்பட்டிருக்கும் இந்த செய்தியை விட வேறு என்ன ருசு வேண்டும்? இது ஒன்றே போதுமே ஒருவர் இறைவனின் வார்த்தைகள் மீது நம்பிக்கை கொள்ள! இதனால், கிறித்துவ மத நம்பிக்கைகளை மறுபரீசீலனை செய்ய வேண்டும் என்பதல்ல. நம்பிக்கைகள் எத்தகையதானாலும், அது ஏக இறைவனை நோக்கி செலுத்துமானால் அது ஒன்றே போதுமே!!!

    நீங்கள் குறிப்பிட்டது போல, ‘இறைவனே, ஏன் எம்மை கைவிட்டீர்’ என்ற பிரார்த்தனையே கூறப்படவில்லை என்பது தான் உண்மை. ஆக, கூறப்படாத ஒரு ஜெபம் தோற்கவும் வழியில்லை. ஒரு பிரார்த்தனை தோற்கவுமில்லை.

    மற்றபடிக்கு, உங்கள் பதிவு எண் 2க்கு விடை சொல்லும் முகமாகத் தான் ‘நண்பன்’ என்ற கவிதையை எழுதினேன். இறைவனை இயல்பாகப் பாருங்கள் - அவனுடன், ஒப்பந்தம் செய்து கொள்ளும் எண்ணத்தைக் கைவிட வேண்டுமென்றும், அதிசயங்கள் செய்து காட்டு என்று வற்புறுத்துவதும் அவசியமற்றது.

    எந்த ஒரு நிர்ப்பந்தமும் இன்றி இயல்பான சிநேகிதத்துடன் இறைவனை நோக்குங்கள் - அது ஒன்றே உண்மையான தேடுதலின் ஆரம்பமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
    12:32 AM

    ReplyDelete
  28. //இறைமறுப்பாளர்களே ஒரு கட்டத்தில், தங்கள் மறுப்பைக் கைவிட வேண்டிய சூழ்நிலை எப்பொழுதுமே உண்டாகி இருக்கிறது. //

    very sweeping statement. ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை...அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் எல்லோருக்கும் தெரிய ஒப்புக் கொள்வதில் தயக்கமுமில்லை.

    //கண்டவர்கள் சொன்னதால் தானே - அவர்கள் சொற்களில் நம்பிக்கைக் கொண்டதினால் தானே இறைவன் இருக்கிறான் என்கிறேன்//

    எல்லாமே matter of faith. அந்த நம்பிக்கைகள் கேள்விக்குரியாதாகும் போதுதான் பிரச்சனையே...அதுவரை எல்லாருக்குமே நம்பிக்கைகள் தெளிந்த நீரோடைகளே!
    கண்டவர் விண்டதில்லை..அந்த வாசகம் நினைவுக்கு வந்தது!

    //கிறித்துவ மத ஆராய்ச்சியாளர்கள் பலரும் தங்கள் ஆராய்ச்சியின் இறுதியாக கூறுவது ... //
    அவரவர் வசதிக்காக சிலவற்றை இறுதி என்றாக்கிக் கொள்கிறோம். இப்போதுகூட ஏசுவின் "குடும்பமே" புதைபொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப் பட்டதாக செய்தி. நம்பிக்கையுடைய ஒருவரிடம் கேட்டுப் பாருங்கள் அந்த "இறுதியான" செய்தி பற்றி. உங்கள் நம்பிக்கைகளுக்கு ஒத்துவரும் செய்தினென்பதாலேயே அதை இறுதியாக்கி விடலாமா.? இதுபோன்ற விஷயங்கள் புதிதா என்ன? இன்னும் வரும்...

    //1400 வருடங்களுக்கு முன்பு... குரானில் கூறப்பட்டிருக்கும் இந்த செய்தியை விட வேறு என்ன ருசு வேண்டும்? //
    எனக்கு இதில் அதிசயப்பட ஒன்றுமில்லை. ஒரே நிலப்பரப்பில் 600 ஆண்டுகள் வித்தியாசத்தில் தோன்றிய இரு மதங்கள் - என்னப் பொறுத்தவரை, தோன்றிய இரு குழுக்கள் - ஒன்றோடு ஒன்று மாறுபட்டு நிற்பது பெரிய ஆச்சரியமில்லை. ஒன்றை மறுத்து மற்றொன்றை -அதிலும் காலத்தால் பிந்திய ஒன்றில் - புதிதாகக் கூறுவது (modified version ?)இயல்பே. இரண்டில் எதை உண்மை என்று கொள்வது அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம். இரண்டிலுமே கேள்வி எழுப்புகிறேன் நான் - நம்பிக்கையின்மையால்.

    //அறையப்படவுமில்லை - மரிக்கவுமில்லை என்பது தான். குரானில் - ...//
    முடிவே கட்டி விட்டீர்கள்; எதற்கும் ஒரு கிறித்துவ விசுவாசியிடம் கேட்டுப் பாருங்கள்; அவர் பதில் என்னவாயிருக்கும்? அதனால்தான் நான் இரண்டில் ஒன்று மட்டுமே உண்மையையிருக்க வேண்டும்; இல்லையெனில் இரண்டுமே கதையாயிருக்க வேண்டும்; பின்னதே என் கட்சி என்றேன்.

    அதோடு அந்த ஒரே ஒரு விஷயத்தில்தான் என் கிறித்துவ விசுவாசம் அறுந்து விழுந்துவிட்டதாக ஒரு எண்ணம் உங்களுக்கோ மற்றவர்களுக்கோ ஏற்பட்டதுபோல் பேசுகிறீர்கள். அப்படியில்லை. பல கேள்விகளில் அதுவும், ஒன்று; அவ்வளவே. அந்த ஒரு கேள்விக்கு இஸ்லாமிய வழியில் பதில் சொல்லிவிட்டால் உடனே நான் மனம் /மதம் மாறவேண்டுமென்று யாரும் நினத்தால் நானா அதற்குப் பொறுப்பு.

    இஸ்லாமியரான உங்களுக்கு நான் என்னவோ இஸ்லாமை அதிகமாகக் கேள்விக்குட்படுத்துவதாகத் தோன்றலாம். ஒரு கிறித்துவ விசுவாசியிடம் கேட்டுப் பாருங்கள். அவருக்கு நான் கிறித்துவத்தை 'அளவுக்கு மீறி' கேள்விக்குட்படுத்துவதாகத் தோன்றும்.matter of perspectives ! ஒன்றைத் தூக்கி மற்றொன்றைத் தாக்குவதற்கோ, தாழ்த்துவதற்கோ நான் ஒரு மதக்காரனில்லையே!

    //நம்பிக்கைகள் எத்தகையதானாலும், அது ஏக இறைவனை நோக்கி செலுத்துமானால் அது ஒன்றே போதுமே!!! //

    மனதார எல்லா மத நம்பிக்கையாளர்களிடம் இந்த நினைவு வந்துவிட்டால் ஏது மதப் பிரச்சனை. என் மதமே / மார்க்கமே பெரிது; சரியானது; ஒரிஜினல்; சரியான வழி, திருத்தப்பட்டது / திருத்தப் படாதது ...என்றெல்லாம் கூற ஆரம்பிக்கும் போதுதானே பிரச்சனைகள்.

    //இயல்பான சிநேகிதத்துடன் இறைவனை நோக்குங்கள் //
    இறை என்பதே கற்பிக்கப் பட்ட ஒன்று (It is just a concept.) என்றான பின் அந்த நோக்கு சாத்தியமில்லையல்லவா?

    மீண்டும் ....இனி அடுத்த கட்டம் நோக்கிச் செல்வது சரியானதாயிருக்கும் - உங்களுக்கு விருப்பமிருந்தால். I am game.
    11:17 AM
    தருமி

    ReplyDelete
  29. // மீண்டும் ....இனி அடுத்த கட்டம் நோக்கிச் செல்வது சரியானதாயிருக்கும் - உங்களுக்கு விருப்பமிருந்தால். I am game.//

    அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது தான் - நிர்மல் அவர்களின் பதிவைத் தொட்டு திரும்பி விட்டது - இயல்பாகவே.

    -நண்பன்

    ReplyDelete