DISCRIMINATION FOR DUMMIES: V. 2008 by P. SAINATH
இக்கட்டுரை ஆசிரியர் THE WALL STREET JOURNAL-ல் இடப்பங்கீட்டால் எப்படி ஒரு உயர்சாதிக்காரர் பலியாக்கப்பட்டார் (sic) என்ற ஒரு "பரிதாபக் கதையை" - REVERSAL OF FORTUNES ISOLATES INDIA'S BRAHMINS," (Dec, 29,2007)என்ற கட்டுரையில் எழுதியிருப்பதை மேற்கோள் காட்டி இக்கட்டுரையை எழுதியுள்ளார்.
எப்படி நம் ஊடகங்கள் நிலைமையை ஒருபக்க சார்பாகவே பார்த்து, இடப்பங்கீடு ஆதிக்க சாதியினரைப் பாதிப்பதாக முன்னிறுத்தியே கருத்தாக்கம் செய்து வருகின்றன என்பதை அங்கத நடையில் அளித்துள்ளார்.
அந்த ஆங்கிலக் கட்டுரையில் எனக்குப் பிடித்த சில வரிகளை என்னால் முடிந்தவரை தமிழாக்கி இங்கே தந்துள்ளேன்.
* * * * *
... இன்று சாதி வேறுபாடுகள் நம் நாட்டைப் பழி வாங்கிக் கொண்டிருக்கின்றன - பலி கொடுக்கப்படுவது உயர்சாதி மக்களே(sic). இதுவரை மேல்சாதியினர் பிறவியிலேயே அமைந்த தங்களின் திறமைகளால் (read genes) கோலோச்சிக் கொண்டிருந்த உயர்ந்த இடங்களில் இன்று மற்றைய (கீழ்) சாதியினர் இடம்பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
... இதனால் இன்று சாதிகளற்ற சமுதாயம், சமத்துவமான சமுதாயம் வேண்டுமென்ற அறைகூவல் கேட்க ஆரம்பித்துள்ளது. அதுவும் இந்த அறைகூவல் நம் ஊடகங்களில் பெரிதும் கேட்க ஆரம்பித்துள்ளது. ... சமீபத்தில் AIIMS-ல் நடந்த போராட்டத்திற்கு நம் ஊடகங்கள் அளித்த இடம் நம் எல்லோருக்கும் தெரிந்ததுதானே.
... மேற்படி WSJ (Wall Street Journal)-ல் கூறப்பட்டுள்ள அந்த "பரிதாபத்துக்குரியவரின்" தந்தை அவரது தாத்தாவையெல்லாம் விட மிகவும் 'பரந்த மனம்' கொண்டவர் என்பதும், 'கீழ்' சாதிக்காரர்கள் அவர் முன்னால் செருப்பணிந்து செல்வதைக்கூட அவர் அனுமதிப்பவர் என்பதும் தெரியுமா? என்னே அவரது பெருந்தன்மை; பரந்த மனம்! 'அந்த' சாதிக்காரர்களும் Gucci / woodlands brand செருப்புகளாகத்தானே தினமும் அணிகிறார்கள்!
... WSJ படிப்பிலும், வேலை வாய்ப்புகளிலும் மட்டுமே இந்த 'reverse discrimination' (தமிழில் என்னங்க இதற்கு?) பற்றிப் பேசுகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் வகுப்பறைகளில் கூட தனியாக கடைசியாக உட்காரவைக்கப் படுவது பற்றியோ, பள்ளிகளில் அவர்களுக்குத் தரப்படும் 'மரியாதை' பற்றியோ, மதிய உணவுத்திட்டத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் 'மரியாதை' பற்றியோ பேசுவதில்லை. இந்த வித 'மரியாதைகள்' WSJ வருந்தும் சாதியினருக்கு நடப்பதில்லை என்பதை அந்தக் கட்டுரை பேசவில்லை.
... படிக்கும் பள்ளிகளிலும், வேலைசெய்யும் இடங்களிலும் தலித்துகளுக்குக் கிடைக்கும் 'மரியாதை' இப்படியெல்லாம் இருந்தும் கூட, Times of India (டிச 12, 2006) -ல் சுபோத் வர்மா தன் கட்டுரையில் காண்பிப்பது போல் 1961 -2001 - காலக் கட்டத்தில் தலித்துகளின் சமூக முன்னேற்றம் மிகவும் பாராட்டுக்குரியது.
... WSJ கட்டுரை ப்ராமணக் குடும்பங்களில் ஏறத்தாழ 50% ஏழ்மையில், மாதம் ரூ.4000-க்கும் கீழாகத்தான் சம்பாதிக்கும் நிலையில் உள்ளதாகக் கூறுகிறது. ஆனாலும் அதே கட்டுரையின் பட்டியலில் தலித்துகளில் 90%-க்கும் மேலாக வறுமைக்கோட்டிற்கும் கீழே வாழ்வதைக் காட்டுவதைக் கட்டுரை கண்டுகொள்ளாமல் செல்கிறது!
... இக்கட்டுரையிலேயே, ப்ராமணர்கள் மற்ற இந்திய மக்களைவிடவும் படிப்பிலும், வருமானத்திலும் உயர்நிலையில் இருப்பதையும் குறிப்பிடுகிறது. ஆனால், National Commission for Enterprises in the Unorganized Sector தரும் விவரப்படி 836 மில்லியன் (83 கோடி?) மக்கள் மாதத்திற்கு வெறும் 600 ரூபாய் (தின வரும்படி Rs. 20) மட்டுமே பெறுகிறார்கள் என்பதோ, அதில் 88% தலித்துகளும், இன்னும் சில பிற்படுத்தப் பட்ட சாதியினரும், முஸ்லீம்களும் உள்ளனர் என்பதையோ அந்தக் கட்டுரையின் ஆசிரியர் வசதியாக மறந்து விடுகிறார்.
... ஆனாலும் தலித்துகளில் பெரும்பாலோர் விவசாய தொழிலாளிகளாகத்தான் வேலை பார்த்து வருகிறார்கள். விவசாயத் தொழிலோ வருடத்திற்கு ஆறு மாதங்கள் கூட நடப்பதில்லை. கிராமத்திலுள்ள ஒவ்வொரு தலித் குடும்பத்தி்லும் பாதி பேராவது மாதம் ரூ. 2000 சம்பாதித்தாலே அது ஒரு பெரும் புரட்சியாக இருக்கும்.
... பெரும்பான்மையான ஊடகங்கள் WSJ போலவே கருத்து கொண்டுள்ளன.
... சமீபத்தில் புனேயில் நடந்த ப்ராமணர்களின் பெரும் மாநாட்டிற்கு ஊடகங்களில் எந்த எதிர்வினையும் இல்லை.ஏறத்தாழ அதே சமயத்தில் நடந்த மகாராஷ்ட்ரத்தில் மராத்திய சாதியினர் நடத்திய மாநாடும் எந்தவித எதிர்க் கருத்தையும் உருவாக்கவில்லை. ஆனால் தலித்துகளின் கூட்டங்கள் மட்டும் சாதிய வெறி என்ற கோணத்தில் பார்க்கப் படுகின்றன. அதிலு்ம் தலித்துகள் என்பது ஒரு தனிச் சாதியல்ல; தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லோ்ரின் தொகுப்பே. டிசம்பர் 6-ம் தேதி அம்பேத்காரின் நினைவு நாளாக மும்பையில் நடக்கும் தலித்துகளின் கூட்டம் மட்டும் ஏனோ மிகுந்த அச்சத்தோடு பார்க்கப் படுகிறது; எழுதப் படுகிறது.
... ஆனால் நடப்புகள்தான் எவ்வளவு வித்தியாசமாக உள்ளன? அடுத்த சாதியில் திருமணம் செய்தமைக்காக இங்கு எந்த மற்ற சாதியினரின் கண்களும் தோண்டப் படுவதில்லை. நிலத்தகராறுகள் என்ற பெயரில் மற்ற சாதியினரும் அவர்தம் உடைமைகளும் தீ வைத்துக் கொழுத்தப் படுவதில்லை. கோவிலுக்குள் நுழைந்தான் என்பதற்காக மற்ற சாதி மக்கள் கொலை செய்யப் படுவதில்லை.
எந்த ப்ராமணர் ஊர்க் கிணற்றில் நீரெடுத்ததால் உயிரோடு கொழுத்தப் பட்டுள்ளார்? 'உரிமைகள் மறுக்கப் படுவதாகச்' சொல்லப் படும் அந்த உயர்த்தப் பட்ட சாதிமக்களில் எத்தனை பேர் குடிக்கும் நீருக்காக தினமும் நான்கு கிலோ மீட்டர் செல்ல வேண்டியதிருக்கிறது? நம் கிராமங்களின் வெளியே, தனியாக தீண்டத் தகாதவர்களாய் வெறுத்து ஒதுக்கப் பட்டிருப்பவர்களில் எத்தனை ப்ராமணர்களும், மற்ற உயர்த்தப் பட்ட சாதிக்காரர்களும் உள்ளார்கள்?
தலித்துகள் மீது கட்டவிழ்க்கப்படும் குற்றங்கள் கூடிக்கொண்டே போகின்றன. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என அவர்கள் மீது நிகழ்த்தப் படும் குற்றங்கள் இன்னும் வளர்ந்து கொண்டே போவதாகத்தான் 2006, National Records Bureau-வின் தகவல்கள் சொல்கின்றன.
- இதுதான் உண்மையில் சாதிப் பாகுபாடு. ஆனால் ஊடகங்களுக்கு இவைகள் கண்களில் படுவதில்லை.
... ஒரு வெளிநாட்டுப் பயணி கற்பழிக்கப் பட்டால் அரசின் கரங்கள் உடனே குற்றவாளியைப் பிடிக்க வேகமாக நீள்கிறது; நல்லதுதான். ஆனால் அதே குற்றம் நித்தம் நித்தம் தலித் பெண்களைக் காயப்படுத்தும் போது அரசின் கரங்கள் மட்டுமல்ல, ஊடகங்களில்கூட அவை இடம் பெறுவதில்லை. நம்முடைய நீதி மன்றங்களோ ... ஒரு கற்பழிப்பு வழக்கில் கனம் நீதிபதி கொடுத்த தீர்ப்பு இது: 'உயர் சாதியைச் சேர்ந்த ஒருவன் கீழ்சாதிப் பெண்ணைக் கற்பழித்திருப்பான் என்பது நடந்திருக்கக் கூடியதல்ல!'
ராஜஸ்தானில் (Kumher என்ற இடத்தில்) நடந்த வெறியாட்டத்தில் 17 தலித்துகள் இறந்திருந்தாலும், அந்த வழக்கு 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பதிவுகூட செய்யப்படவில்லை. ஒரு வெளிநாட்டுப் பெண்ணுக்கு 14 நாட்களில் நீதி கிடைக்கிறது; ஒரு தலித் பெண்ணுக்கு 14 ஆண்டுகளில் நியாயம் கிடைத்தால் ஆச்சரியம் நம் நாட்டில்.
... மும்பையில் புத்தாண்டு அன்று இரு பெண்களை தொல்லைபடுத்திய வழக்கில் உடனடியாக 14 பேர் கைது செய்யப் பட்டார்கள். ஆனால் அதே மாநிலத்தில் லாத்தூரில் ஒரு முஸ்லீம் பெண் கற்பழிக்கப் பட்டதோ, நந்தாத் என்னுமிடத்தில் ஒரு இளைஞனின் கண்கள் தோண்டப் பட்டதோ எந்த முக்கியத்துவமும் பெறவில்லை.
... வாழ்க்கை முழுவதும் துன்பத்தில் மூழ்கி வாழும் ஒரு தலித் இறந்த பிறகும்கூட அவருக்கு நிம்மதியில்லை. அந்த உடலைப் புதைப்பதற்கும் அவரது உறவினர்களுக்கு 'சலுகைகளில் புறக்கணிக்கப் பட்ட', 'பாவப் பட்ட' மேல்சாதிக்காரர்களின் தயவு வேண்டியதுள்ளது. நம் குற்றப் பட்டியல்களில் இது போன்ற அக்கிரமங்கள் தொடர்ந்து சேர்ந்து கொண்டுதானுள்ளன. இது போன்ற குற்றங்கள் எத்தனை தலித்துகள் அல்லாத மற்ற உயர்த்திக் கொண்ட சாதிக்காரர்களுக்கும் நடக்கிறது. ஆனால் அவர்கள் தங்கள் உரிமைகள் பறிக்கப் பட்டதாக எழுப்பும் குரல் மட்டும் ஊடகங்களுக்குத் தெளிவாக கேட்கிறது.
... மேல்சாதிக்காரர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்று கூப்பாடு எழுப்புவர்கள் முழுமையான திரிபுவாதிகள்.
* * * *
WSJ-ல் வந்த அந்த ஆங்கிலக் கட்டுரையின் தலைப்பையே (REVERSAL OF FORTUNES ISOLATES INDIA'S BRAHMINS)கொஞ்சம் மாற்றி இப்பதிவின் தலைப்பாக வைத்துள்ளேன்.
அக்கட்டுரையை எழுதியவர் நம்மூர் ஆள்மாதிரி தெரியவில்லை. பெயர் வித்த்தியாசமாக இருக்கிறது. அக்கட்டுரைக்குக் கீழ் இம்மாதிரி கொடுத்துள்ளது:
Write to Eric Bellman at eric.bellman@awsj.com
எழுத விரும்புவோருக்கு உதவியாக இருக்குமேயென்று கொடுத்துள்ளேன்!
பி.கு.
கட்டுரையின் ஆசிரியருக்கு நான் ஒரு மடல் இட்டேன். அதன் நகல் என் ஆங்கிலப் பதிவில்.
அதற்கு 30 நிமிடத்துக்குள் பதிலும் வந்தது. என் தனிப் பார்வைக்கு என்ரு வந்திருப்பதால் அதனை இங்கு பதிப்பிக்கவில்லை. அக்கடிதத்திற்குப் பதிலாக என் ஆங்கிலக் கட்டுரையின் தொடுப்பினைத் தந்துள்ளேன்.
ஏதோ நம்மால முடிஞ்சது :)
ஊடகங்களுக்கு எதிர்ப்பான ஒரு கட்டுரையைப் பிரசுரித்த 'இந்து'வுக்கு என் பாராட்டுக்கள்.
ReplyDeleteஅந்த வால் ஸ்டிரீட் கட்டுரைக்குச் சுட்டி.
ReplyDeleteஇதையும் சேர்த்திட்டீங்கன்னா, மற்றவர்கள் படிக்க உதவும்.
மிக அருமையான கட்டுரை.. அந்த கட்டுரை ஆசிரியரின் தட்டையான பார்வையய் அழகாக தோலுரித்துள்ளீர்கள். ஆனால் உங்கள் பார்வை இரண்டு extreme communities (brahmins and dalits) மட்டும் பற்றி இருப்பது தான் பிரச்சினயே. இந்த மாயையில் நடுவில் உள்ள 60%மேல் உள்ள மக்கள் குளிர் காய்வது பற்றி ஒன்றும் சொல்லாமல் நழுவிகொள்வது நியாயமா??
ReplyDeleteசுடச் சுட சுட்டி கொடுத்தமைக்கு நன்றி. இரு இடங்களில் சேர்த்துவிட்டேன்.
ReplyDeleteநீதிபதி அளித்த தீர்ப்பு உண்மை தான்.. nandita das ஒரு படத்தில் அந்த characteril நடித்திருப்பார் . அனால் குற்றத்துக்கும் இடப் பங்கீடுக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு புரியவில்லை. உண்மை தான் தலித்துகளில் பலருக்கு வருமானம் மிகக் குறைவு தான். ஆனால் இடப் பங்கீட்டின் பயனாளர்கள் $20 கும் குறைவாக சம்பாதிக்கும் தலித்துகள் அல்ல. அது தான் உண்மை. சரி படிப்பு அறிவு பெற்று விட்டால் தலித்துகள் முன்னேறி விடுவார்களா?? அவர்களுக்கு எதிரான குற்றங்கள் குறையுமா?? கேரளாவில் தமிழ்நாட்டை விட மோசமான சம்பவங்கள் நடந்துள்ளன. Kherlanji massacreai நடத்தியவர்கள் உயர் ஜாதியினர் இல்லை,it was done by kunbi caste which comes under obc category. நான் இட ஒதுக்கீட்டை (இங்கு நடப்பது பங்கீடு அல்ல. தாழ்ந்த ஜாதியில் பிறந்த வசதியானவர்களுக்கு இடம் ஒதுக்க படுகிறது) எதிர்க்கவில்லை. இட ஒதுக்கீட்டின் பயன் சேர வேண்டியவர்களிடம் சென்று சேரவில்லை. Creamy layer பிரச்சனை தீர்க்க பட வேண்டிய ஒன்று. முதலில் அதை தீர்த்துவிட்டு தாரளமாக OBC reservationai கொண்டு வாருங்கள். "The theorists of “reverse discrimination” are really upholders of perverse practice". இது உண்மை இல்லை . reservation பணக்காரர்கள் உடையதாக மாறிவிட்டது. உண்மையில் OCs இல் உள்ள பணக்காரர்களும் SC,STs இல் உள்ள பணக்காரர்கள் மட்டுமே IIT,NITs இல் நுழைகிறார்கள். பணக்காரர்களுக்கு மட்டுமே அடிப்படை கல்வி தங்கு தடை இல்லாமல் கிடைக்கிறது. இதற்கு mayawati சிறப்பாக ஒரு சட்டத்தை இயக்கினார். OCs இல் உள்ள ஏழை மாணவர்களுக்கும் reservation வழங்க பட வேண்டும் என்று. அதை நான் வரவேற்கிறேன். ஆனால் 100% படிப்பறிவு வந்தாலும் சாதிய ஏற்ற தாழ்வுகள் மறையாது. ஒரு தலித் ratan tata அளவுக்கு உயர்ந்தாலும் அவனால் என்றுமே ஒரு பிராமண பெண்ணை திருமணம் செய்ய முடியாது. இந்த பிரச்சனைக்கு reservation ஒரு ";" dhaane thavira "." இல்லை (முற்று புள்ளி இல்லை என்பதை தான் symbolica சொன்னேன் ) . reservation based on caste will never work in india. economically based reservation is the only solution
ReplyDeleteபின்குறிப்பு: சட்டம், கற்பழிக்கப்பட்ட தாழ்ந்த ஜாதி பெண்ணுக்கு நியாயம் வழங்கா விட்டாலும் அந்த பெண் அதை சவாலாக ஏற்றுக் கொண்டு அதே ஊரில் வாழ்வதாக nandita dasin கேரக்டர் அப்படத்தில் கூறப்பட்டுள்ளது
மனு அடுக்கு முறையில் 1-2-3-4... என்பதில் 3 என்பது 4 க்கு உயர்சாதியாகவும் 1 என்பது 3 க்கு உயர்சாதியாகவும் உள்ளது.
ReplyDeleteஎந்த அடுக்கில் இருந்தாலும் ,கீழ் அடுக்கில் இருக்கும் ஒருவன் இன்னும் "மனு" வை நம்புவதாலேயே, மனு ஏணியில் மற்றவர்கள் உயர இருப்பதாக நினைக்கிறான்.
உயர இருப்பவர்களை மற்றவர்கள் அண்ணாந்து பார்க்கும் மாயையே உயர இருப்பவர்களை இன்னும் ஆளுமை செய்ய வைக்கிறது.
யானை அதன் பாகனை பாஸாக நினைத்து பிச்சை எடுப்பது போல.
பார்ப்பனீயத்தை பின்பற்றுபவர்கள் (மனுவின் அடுக்கில் 1-2-3-4.. ) யாராக இருந்தாலும் தீண்டத்தகாதவர்கள் என்று நீங்களும் நானும் ஒதுக்க ஆரம்பித்தாலே இவர்களின் மாய தோற்றம் விலகி ஆளுமை அடையாளங்கள் சிதைக்கப்படும்.பெரியார் சிதைக்க விரும்பியதும் இதுதான். அவர் அடையாளம் 1 -ல் இருந்தும் மூல காரணமான "இந்து-சனாதன-பார்ப்பனீய" மதத்தில் இருந்தும் ஆரம்பித்தார். அது சொல்லும் எல்லா புனிதத்தையும் உடைத்தார்.
ஆனால் முழுமையான அடையாள அழிப்பு இன்னும் நடக்கவில்லை.
இன்று அடையாளம் 2 ல் இருப்பவன் 4 இல் இருப்பவன் வாயில் பீயை ஊற்ற, 1 ம் 3 ம் வேடிக்கை பார்க்கிறது.
2-ல் இருப்பவன் 1-ல் இருப்பவனை இன்னும் அண்ணாந்து பார்த்துக் கொண்டுள்ளான். மேலும் சில அடையாளங்கலை வரிந்து கொள்வதன்மூலம் 1 -க்கு பிரதியாய் இருக்கவே முயல்கிறான்
**
மனுசர்ந்த பிறப்பால் வரும் FC என்ற அடையாளப்படுத்துதலையே எடுக்க வேண்டும்.அது குறியீடு சார்ந்த விசயம். தற்போது FC என்று அடையாளப்படுத்தப்பட்டு உள்ளவர்களை " நாய்கள்" என்று அடையாளப்படுத்துங்கள் அவர்கள் அங்கே இருக்க விரும்ப மாட்டார்கள்.
அதுவே அவர்களின் மனுவழி வந்த ஆளுமை அடையாளத்தை குலைத்துப் போட்டு மனு-மெஜாரிட்டி பலத்தை குலைத்துப்போடும்.
இவர்கள் வாழைப்பழத்தில் ஊசியாய் ஏற்றிய இந்து-சனாதன-பார்ப்பனீய சாதிய அடுக்குமுறை உலகில் உள்ள எல்லா வன்முறைகளிலும் கொடியது.
அந்த வன்முறை இப்போது பல மட்டங்களில் இவர்கள் எதிர்பார்த்ததைவிட மோசமாய் சாதி வெறி கொண்டு ஆடுகிறது.
இவர்களின் சித்தாந்தங்களை அடியோடு அழித்தால்தான் பார்ப்பனீயத்தை எல்லா மட்டங்களிலும் அழிக்க முடியும்.இவர்களை மட்டும் எதிர்த்து மற்ற ஆதிக்கச்சாதிகளை சாய்ஸ்-ல் விட்டுவிடக்கூடாது. பெரும்பாலும் அதுதான் நடக்கிறது.
**
P arpanisam never dies :-((
http://kalvetu.blogspot.com/2007/12/spit-in-your-face-leaving-you-looking.html
***
டிஸ்கி:
பிறப்பின் அடிப்படையில் தன்னை உயர்வாகவும் ஒரு சிலரைத் தாழ்வாகவும் நினைப்பவர்கள் அனைவரும் பார்ப்பனீயர்களே.
நிறம் அடிப்படையில் Discriminate செய்வது Racism.
பிறப்பின் அடிப்படையில் Discriminate செய்வது Parpanisam.
இந்த எண்ணம் இல்லாத அனைவரும் மரியாதைக்குரியவர்களே irrespective of their beliefs
தருமி,
ReplyDeleteகட்டுரை ஆசிரியர் P. Sainath . ஸ்ரீநாத் அல்ல
மேலும் படிக்க...
http://www.indiatogether.org/opinions/psainath/
http://www.outlookindia.com/author.asp?name=P.+Sainath
http://gilli.in/the-great-indian-divide-psainath/
தருமி அய்யா,
ReplyDeleteசுட்டிகளுக்கும், தமிழாக்கத்திற்கும் உங்களுக்கும் நண்பர் TBCDக்கும் நன்றி.
இந்த விடுமுறை தமிழக வருகையில் தஞ்சையில் விவசாய வேலை செய்யும் தலித் மக்களிடம் சென்றிருந்தேன். அங்கு கண்டவை...
90 சதவிகிதத்திற்கும் அதிகமான தலித் மக்களுக்கு விவசாய நிலங்கள் இல்லை. ஆதிக்க சாதியினரது நிலங்களில் விவசாய கூலி வேலை செய்ய நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 50 ரூபாய் (பெண்களுக்கு), 60 ரூபாய் (ஆண்களுக்கு) மட்டும் வழங்கப்படுகிறது. ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் தனித்தீவாக தலித் கிராமங்கள். 4 முதல் 8 பேர் வரை அடங்கிய குடும்பம் குடியிருக்கும் வீடு அதிகபட்சம் 70 சதுர அடி இருக்கும். களிமண் சுவர்கள், தென்னை ஓலை, வைக்கோல் போன்றவற்றால் கூரை.
இப்படி கழிப்பறைகள், குளியலறைகள், பூஜையறை, சமையலறை, விருந்தினருக்கான அறை...தொலைக்காட்சி, கணினி, தொலைபேசி...என எதையும் கனவிலும் 'அனுபவிக்காத' உழைக்கும் மக்களால் பார்ப்பனர் உட்பட்ட ஆதிக்க சாதியினரின் 'பிழைப்பு' இடப்பங்கீடால் பலியானதாக எழுதியும், பேசியும் வருபவர்களை என்ன செய்வது?
நல்ல சிந்திக்கவேண்டிய எண்ணங்களும், வார்த்தைகளும்..
ReplyDeleteAnalyzt சொல்வதும் கருத்தில் கொள்ளலாமே..!
சமூகவியலில் BRAHMINIZATION என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. அதுதான் அதிகபட்ச உண்மையாகவும் இருக்கிறது.
தருமி அய்யா,
ReplyDeleteபிராமணர்கள் பிச்சையெடுப்பதாக பரமேஸ்வரன் வருந்தியுள்ளார்.பிச்சைக்காரர்களில் 100க்கு 5 பேருக்கு மேல் பிராமணர்கள் இருந்தால் அவர் வருத்தத்தில் நியாயம் இருக்கிறது.ஆனால் நிச்சயம் அப்படி ஒரு நிலைமை இல்லை.(மொத்த மக்கள் தொகையில் பிராமணர் 5% என்று அக்கட்டுரையில் உள்ளது).
இதே அளவுகோலின் படி பார்த்தால் கல்வி, வேலை வாய்ப்பு,அரசு பதவி போன்றவற்றில் 5% க்கு மேல் இருக்கக்கூடாது என்பது தான் நியாயமாக இருக்க முடியும்.ஆனால் உண்மை நிலைமை எல்லாத்துறையிலும் அளவிற்கு அதிகமாகவே பிராமணர் இருக்கிறார்கள்.
இந்த சிம்பிள் லாஜிக் கூட மற்றவர்களுக்குத் தெரியாது என்று நினைத்துக்கொண்டு சைபர்பிரம்மா படங்காட்டியிருக்காரு,பார்த்தீங்களா.
(WSJ கட்டுரையில் related post பகுதியில் சுட்டி உள்ளது.)
ஒப்பாறி அருமை.
ReplyDeleteஎழுத்தறிவும், படிப்பறிவும் இல்லாமல் தங்கள் படுவது கஷ்டம் என்றே அறியாது அடிமையாக இருந்த மக்களை பற்றி 'வால்' ஸ்டீரீட் கட்டுரையில் ஒன்னுமே இல்லையா ?
அதெல்லாம் சரி தமிழ்நாட்டில் மட்டும் தானே பெரியார் தோன்றினார் ?
:)
இடப்பங்கீடால் பார்ப்பனர்கள் எல்லாம் இழந்துவிட்டது போன்ற மாயையை உருவாக்க ஊடக, இலக்கிய, அரசியல் தளங்களில் ஆதிக்கசார்பு கொண்ட பெருங்கூட்டமே இயங்குகிறது. சில வருடங்களுக்கு முன்னர் எழுத்தாளர் ஜெயமோகன் 'பல்லக்கு' என்ற கதையை ஆதிக்கசாதி சார்பு அரசியலை கொண்டு எழுதியிருந்தார். பார்ப்பனீயத்திற்கு எதிரான சிறிய நடவடிக்கைகள் கூட எழுந்து வராமல் தடுக்க ஆதிக்கசாதி சார்ந்த சிந்தனைகளும், இலக்கியமும் உருவாகி வருவது மரபு.
ReplyDeleteபல்லக்கில் போய் வந்தவர்களுக்கு அந்த சுகம் பறிபோகும் போகும் போது வரும் கவலையை விட, குனிந்தவாறு பல்லக்கை தூக்க வைக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும் மூச்சும், நிம்மதியும் சமூக மாற்றம்.
மனு ஆதிக்க சாதியினரை 'தரப்படுத்தல்' மூலம் உடல் உழைப்பிலிருந்து விலக்கி வைத்திருக்கிறது. பிறரது உழைப்பை சுரண்டி வாழும் முதலாளித்துவ மனப்பான்மையை பார்ப்பனீயம் விதைத்திருக்கிறது. ஆதிக்க அடுக்கில் முதல் நிலையிலிருப்பவர்களுக்கு பிச்சையெடுத்தாலும் விவசாயம் போன்ற உடலுழைப்பு சம்பந்தமான வேலை பிடிக்காதது ஆகிவிட்டது.
அதனால் தான் முறைப்படுத்தப்பட்ட தனியார்/பொதுத்துறை/அரசு சார்ந்த வேலைகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும், சமூக மற்றும் பணி பாதுகாப்பு அம்சங்களும் ஒருங்கிணைக்கப்படாத துறை சார்ந்த வேலைகளுக்கு சமீப காலம் வரை வழங்கப்படவில்லை. ஒருங்கிணைக்கப்படாத துறை சார்ந்த 93% தொழிலாளர்கள் எந்தவித சமூக பாதுகாப்பு திட்டங்களும் இல்லாமல் உடல் உழைப்பாளர்களாக இதுவரை இருந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள்.
தருமி,
ReplyDeleteதுணிச்சலான பதிவு! பாராட்டுக்கள்!
கல்வெட்டு, திரு, ஜாலி ஜம்பர், எல்லாம் அட்டகாசமாக பின்னூட்டி இருக்கிறார்கள், அவர்கள் கருத்தே எனதும்.
கிரிமீ லேயர் என்று சொல்லி ஒதுக்கீடு கூடாது என்பவர்கள், முற்பட்டவர்களுக்கான இடங்களிலும் இந்த கிரீமீ லேயர் முறையக்கொண்டு வரலாமே, அப்போது தானே பிச்சை எடுக்கும் பிராமணர்கள் படிக்க முடியும்!
1000 ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டவன் ஒரு தலைமுறையில் வசதி வந்ததும் கிரிமீ லேயர் ஆகி விடுகிறானா, அவன் கஷ்டப்பட்டதுக்கு இன்னும் சில காலம் சலுகை அளித்தால் தான் என்ன?
அடிப்படை உரிமைகளே இல்லாது இருந்தவன் கொஞ்சம் சுதந்திரம் பெறுவதும் பிடிக்கவில்லை இந்த தயிர் சாதங்களுக்கு!
This comment has been removed by the author.
ReplyDelete//90 சதவிகிதத்திற்கும் அதிகமான தலித் மக்களுக்கு விவசாய நிலங்கள் இல்லை. ஆதிக்க சாதியினரது நிலங்களில் விவசாய கூலி வேலை செய்ய நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 50 ரூபாய் (பெண்களுக்கு), 60 ரூபாய் (ஆண்களுக்கு) மட்டும் வழங்கப்படுகிறது. ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் தனித்தீவாக தலித் கிராமங்கள். 4 முதல் 8 பேர் வரை அடங்கிய குடும்பம் குடியிருக்கும் வீடு அதிகபட்சம் 70 சதுர அடி இருக்கும். களிமண் சுவர்கள், தென்னை ஓலை, வைக்கோல் போன்றவற்றால் கூரை.//
ReplyDeleteஉழவனுக்கு தான் நிலம் சொந்தம் என்ற சட்டம் ஒழுங்காக நடைமுறையில் கொண்டு வராததற்கும் இடப் பங்கீடுக்கும் என்ன சம்பந்தம்..
//90 சதவிகிதத்திற்கும் அதிகமான தலித் மக்களுக்கு விவசாய நிலங்கள் இல்லை. ஆதிக்க சாதியினரது நிலங்களில் விவசாய கூலி வேலை செய்ய நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 50 ரூபாய் (பெண்களுக்கு), 60 ரூபாய் (ஆண்களுக்கு) மட்டும் வழங்கப்படுகிறது. ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் தனித்தீவாக தலித் கிராமங்கள். 4 முதல் 8 பேர் வரை அடங்கிய குடும்பம் குடியிருக்கும் வீடு அதிகபட்சம் 70 சதுர அடி இருக்கும். களிமண் சுவர்கள், தென்னை ஓலை, வைக்கோல் போன்றவற்றால் கூரை.//
ReplyDeleteபல இடங்களில் நான் காண்பதும் இதுதான். இதைப் படிக்கும்போதே உள்ளம் பதறும், பதைக்கும்.
இதே பதைப்புடனும் பதற்றத்துடனும் பத்துப் பதினைந்து வீடுகள் தாண்டி நன்றாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பிராமணரைப் பார்க்கும்போது நாம் அலறித் துடிப்போம். கொதித்து எழுவோம். கண்ணெதிரே தோன்றும் இந்த ஏற்றத்தாழ்வைக் கண்டு பொங்காத நாமென்ன நாம்?
இடையில் இருக்கும் அந்தப் பத்துப் பதினைந்து வீடுகளில் என் வீடும் இருக்கிறது. நண்பர் திருவின் வீடும் இருக்கலாம். அங்கு நிலச்சுவாந்தார்களின் வீடுகளும் இருக்கலாம். சில அரசு ஊழியர்களின் வீடுகளும் இருக்கலாம். சில அரசியல் வாதிகளின் வீடுகளும் இருக்கலாம்.
AN OPEN LETTER TO ERIC
ReplyDeleteMr. Eric,
Happened to come to your article in WSJ - http://online.wsj.com/article_email/SB119889387595256961-lMyQjAxMDE4OTA4NDgwOTQzWj.html - from the columns of P.Sainath, the winner of the 2007 Ramon Magsaysay award for Journalism, Literature, and Creative Communication Arts in The Hindu dated 18.01.’08 - http://www.hindu.com/2008/01/18/stories/2008011853351000.htm
It made an interesting read!
Just wanted to make few comments:
- From your title I understand that you say that the Brahmins WERE at least once the fortunate lot and that has reversed now.
- From the data in the table given by you and from the corrigendum to your article those ‘misfortunate’ lot are the RICHEST lot (65% and 50% respectively)
- I understand that for your case study you have taken a poor teacher from the RICHEST group.
- I request that you may consider to compare this poor teacher with another poor from the POOREST group, some one from the 91%. I am sure it would give some very interesting points for your future columns.
- Since your name sounds different I take it that you are from a different culture. If so, I would like to request you to first understand the ground realities before you make your valuable comments in a journal of any kind.
- There is a saying in my mother tongue, Tamil: “Some cry for sugar for their daily milk; while there are many who cry for salt for their sporadic gruel”. Your article was about an unfortunate from the former. Why not try to know somebody from the latter. Try. No harm.
analyzt,
ReplyDelete//அழகாக தோலுரித்துள்ளீர்கள். //
நானல்லவே!
//..நடுவில் உள்ள 60%..//
இவர்களைப் பற்றி நான் நிறையவே எழுதியிருக்கிறேனே...
//..நடுவில் உள்ள 60%..
ReplyDeleteஇவர்களைப் பற்றி நான் நிறையவே எழுதியிருக்கிறேனே...//
//- I understand that for your case study you have taken a poor teacher from the RICHEST group.
- I request that you may consider to compare this poor teacher with another poor from the POOREST group, some one from the 91%. I am sure it would give some very interesting points for your future columns.//
see how u contradict.. i just wanna point out that u are prejudiced.. you are doing the same mistake as Eric(conviniently hiding the facts)
தருமி,
ReplyDeleteஅந்த ஆர்டிகில் எழுதுனவரின் மண்டைக்குள் யாரோ உட்கார்ந்து ஸ்டீயரிங் பிடிச்சிருக்கிற மாதிரி இருக்கு.
ஒரு காஃபி குடிக்கும் இடைவெளியில் சும்மா ஒரு பேச்சுக்காக சக இந்தியருடன் பேசிக் கொண்டதை அவரும் உண்மை என்று நம்பி எழுதப்பட்ட, அதாவது அன்றைய பக்கத்தை நிரப்ப எழுதப்பட்டது போல உள்ளது.
என்ன பண்றது இருக்குமிடத்தில் இருந்து யார் முதலில் - கொலையே செய்து விட்டு தான் செய்யவில்லையென்று முதல் வாக்குமூலம் கொடுக்கிறார்களோ அதுவே உண்மையாகிப் போவதைப் போல இங்கும் யாரோ முந்திக் கொண்டுள்ளார்கள். காலக் கொடுமை.
ஆசிரியருக்கு தலைக்கு ஏறிவிட்டது.. போதையில் எல்லாம் தலைகீழா தெரிகிறது... தைர்யம் இருந்தா பிரசுரி. சீப் மெண்டாலிடி.
ReplyDelete//1000 ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டவன் ஒரு தலைமுறையில் வசதி வந்ததும் கிரிமீ லேயர் ஆகி விடுகிறானா, அவன் கஷ்டப்பட்டதுக்கு இன்னும் சில காலம் சலுகை அளித்தால் தான் என்ன? //
ReplyDeleteஊன்றுகோல் எழுந்து நிற்கும் வரை மட்டும் தான்.. அதற்கு பிறகு அது மற்றவருக்கு செல்ல வேண்டும். ஏனென்றால் இன்னும் பல பேருக்கு அந்த ஊன்றுகோல் தேவை
//I request that you may consider to compare this poor teacher with another poor from the POOREST group, some one from the 91%. I am sure it would give some very interesting points for your future columns.//
தருமி அவர்களே அப்போ பிராமணர்களிலும் ஏழைகள் உண்டு என்பதை ஒத்துக்குறீங்களா?
தாழ்ந்தவர்களையும் ஏழைகளையும் முன்னேற்ற வேண்டிய ஒதுக்கீடு ஏழைகளை மேல் ஜாதியிலும் உருவாக்கி விட்டதாக நீங்க என் அந்த ERIC ஓட articlea எடுத்துக்க கூடாது? மொத்தத்தில் ஜாதியின் பேரில் குடுக்கும் ஒதுக்கீட்டை சற்று மாற்றி ஏழைகளுக்கு மொத்தமாக கொடுங்கள். மண்டல் commission BC,SC,ST என்று அந்த ஜாதியின் avg household income ஐ கொண்டே நிர்ணயித்து. இது கிட்டதட்ட 50 வருடங்கள் முன்னாடி. இப்போதும் ஒன்றும் பெரிதாக குறைந்து விடவில்லை. below poverty lineil உள்ள 80%ku மட்டுமே ஒதுக்கீடு என்று சொன்னாலே போதும். அனால் என்ன இன்றைய சூழ்நிலையில் ஒருவருடைய உண்மையான வருமானத்தை அறிவது சிரமம். நீங்க எழுதிய "if i become a primeminister" blog தான் நினைவுக்கு வருது. பேசாம தேர்தல்ல நில்லுங்க. என் vote உங்களுக்கு தான்.
aswini
ReplyDeletethanks for your visit.
but dont come again. your words are not fit to be in my blog.
remember the saying: nalla mattukku oru soodu.
முதலில் ஒரு தொகுதியில் எந்த ஜாதிகாரர்கள் அதிகமாக இருக்கிறார்களோ அதே ஜாதியில் வேட்பாளர்களை நிறுத்த கூடாது என்று ஒரு சட்டம் கொண்டு வரட்டும்.அப்புறமா ஜாதி அடிபடயில reservation கொண்டு வந்தாலும் அதை வைத்து எளிதாக அரசியல் பண்ண முடியாது
ReplyDeleteநாட்ல எல்லா எடத்துலயும் ஒரே மாறி மழை பெஞ்சு ஒரே மாறி வெய்யில் அடிச்சு...எல்லாரும் ஒரே மாறி சோறு சாப்டு ஒரே மாறி discrimination நடந்து இருந்தா நீங்க நாட்ல இருக்குற எல்லா எடத்துக்கும் 27% reservation கொண்டு வர்றதுல ஒரு நியாயம் இருக்கும்.மாநில வாரியான வளர்ச்சி வேற,மாநில வாரிய நடுக்குற அடக்குமுறைஒட வீரியம் வேற,per capita income வேற.
கீழ் ஜாதி காரன் படிக்க முடியாம போனதுக்கு ரெண்டு காரணம் சொல்லலாம்
1) மேல் ஜாதியில் இருந்தவர்கள் இவங்க படிக்க லாயகில்ல படிக்க கூடாதுன்னு ஒதிக்கிவச்து.அந்த அடக்குமுறை இப்போ சுத்தமா காணா போயடுசுனு கூட சொல்லலாம்.அப்படியே காணா போலனாலும் reservation மூலமா இத மாத முடியாது
2) படிக்க காசு இல்லாம போனது.This is still relevant.காசே இல்லன எவளோ பெரிய அறிவு ஜீவியா இருந்தாலும் மேல படிக்கிறது கஷ்டம்.
அந்த காலத்துல(பெரியார் timela) கீழ் ஜாதி காரங்க எல்லாரும் ஏழையா இருந்தாங்க.அதனால ஜாதி அடிபடயில கொண்டு வந்த இட ஒதுக்கீடு, கிட்ட தட்ட வசதி அடிபடைல கொண்டு வந்த ஒதுக்கீடு மாதிரி தான் இருந்துது
reservation is to provide a fair ground to play.So the reservation policies should be aimed at providing the fair ground
Thank you for the post sir
ReplyDeletesarah
ரோம் பற்றி எரிந்து கொண்டிருந்த போது, மன்னன் நீரோவின் இசைக் கருவியைப் பற்றி கவலைப் படுகிரார் திரு.எரிக்
ReplyDeleteanalyzt,
ReplyDelete//see how u contradict..//
எப்டின்னு புரியலை.
//i just wanna point out that u are prejudiced.. //
mm..yep... i have my own preconceived - in my opinion, they are all well thought out convictions - notions. ஒவ்வொருத்தர் மனசுக்கும் அறிவுக்கும் சரின்னு படறது தப்பில்லை.
நான் அந்த கட்டுரையை படித்திருந்தா என்ன சொல்லனும்னு நினைத்திருப்பேனோ அதை ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க. முக்கியமா அந்த கற்பழிப்பு விஷயம். ஒரு பூலான்தேவி உருவானதே இதனால தான.
ReplyDelete