245. உங்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்.
246. மீண்டும் ஒரு வேண்டுகோள்.
நம் குறைசொல்ல மத்திய அரசு ஆரம்பித்துள்ள இணையப் பக்கத்தில் (http://darpg.nic.in) என் முதல் குறையைச் சொல்லிய பிறகு மதுரை உயர் காவலதிகாரிக்கு அந்தக் குறை பற்றிய தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக ஒரு இ-மெயில் எனக்கு வந்தது. ஆனால் குறை தீர்வதற்காக எந்த முயற்சியும் எடுக்கப் பட்டதாக இதுவரை தெரியவில்லை. அதனால் அடுத்த குறை பற்றி எழுதிவிட்டு அதோடு இன்னொரு வழிமுறை சொல்லியிருந்தேன். எந்தத் துறைக்கு நாம் அனுப்பும் தரும் குறை பற்றிய விவரம் அனுப்பப் படுகிறதோ அதன் முகவரி குறைகொடுத்தவர்களுக்கு அனுப்பப்பட்டால் மேற்கொண்டும் அந்தத் துறை மூலம் முயற்சி எடுக்க முடியுமாதலால், அந்த விவரம் குறை கொடுத்தோருக்கு அளிக்கப் பட்டால் நலமாயிருக்கும் என்று எழுதியிருந்தேன். ( பார்க்க: May I suggest that when a grievance is lodged with you and when instructions go to the concerned, if the copy of that is sent to the complainant also, we may be able to pursue it further for speedy and proper implementation. It will also avoid the bureaucrats giving the instructions a simple shirk.)
மறுபடியும் காக்கை உட்கார பனம் பழம் விழுந்ததோ என்னவோ ..
அடுத்து நமது தொடர்வண்டிகளில் இப்போதிருக்கும் நிலை மாற்றி மனிதக் கழிவுகளை பாதுகாப்பாக சேகரித்து வெளியேற்ற வேண்டி ஒரு கடிதம் அனுப்பினேன். அக்கடிதம் உடனே Railway Board-ன் Executive Director (PG)க்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் விவரமும் எனக்கு கடிதமாக அஞ்சலில் வந்துள்ளது.(கடிதத்தின் நகலைக் கீழே தந்துள்ளேன்.) அனுப்பப்படும் அந்த துறை தாங்கள் எடுத்துள்ள செயல் திட்டம் பற்றி மனுதாரருக்கும் தெரிவிக்க வேண்டுமெனவும் அக்கடிதம் குறிப்பிடுகிறது.(3. Action taken in the matter may kindly be communicated to the petitioner under Intimation to the Department of Administrative Reforms and Public Grievances.)
ஒரு முன்னேற்றம்தான், இல்லலயா! இம்முறை
ஆனாலும் Railway Board –இடமிருந்து கடிதம் ஏதும் வந்துவிடுமென நம்பவில்லைதான். அதனால், இனி ஓரிரு மாதங்கள் கழித்து Railway Board-ன் Executive Director (PG)-க்கு ஏதாவது இந்த விஷயத்தில் நடந்துள்ளதா என்று கேட்டு ஒரு கடிதம் எழுதலாம்; அதற்கும் நிச்சயமாகப் பதில் ஏதும் வராது என்றே நம்புகிறேன். அதன் பின் தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக முயற்சிக்கலாம்; அதன் பின் PIL - பொதுநல வழக்கு – இப்படியெல்லாம் செய்யணும்னு தோணுது. பதிவுலகில் எவ்வளவு தொடர் விளையாட்டு விளையாடுறோம்; இது செய்ய மாட்டோமா?!
ஆனாலும் தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக எப்படி முயற்சிக்கணும்; பொதுநல வழக்கு போடுவது எப்படி என்பதெல்லாம் எனக்குத் தெரியாது என்பதோடு இதைத் தொடர்ந்து “ஆட” தனியாக இருப்பதைவிடவும் உங்கள் சிலரின் துணையும் தூண்டுகோலும் இருந்தால் நல்லது என்பதால் “வாருங்களேன் .. தொடருவோமே இந்த ‘விளையாட்டில்’ ..?” என்று உங்களை அழைக்கிறேன். விருப்பமுள்ளோரை ஒன்றுபட அழைக்கிறேன்.
சர்வேசன் ஒரு தனிப்பதிவை இதற்காகவே ஆரம்பிக்கலாமென்ற எண்ணத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதை அமைக்க உங்கள் ஆதரவும் உதவியும் அளித்தால் முறையாக, முறையான திட்டத்தோடு ‘ஊர்கூடி தேரிழுக்க’ முடியுமென நம்புகிறேன்.
நான் பெற்ற கடிதத்தின் நகல்:
No. DARPG/E/2007/08851(01)(MORLY)
Government of India
Department of Administrative Reforms and Public Grievances
5th Floor, Sardar Patel Bhavan
Parliament Street
New Delhi – 110 001
Dated 1/1/2008
OFFICE MEMORANDUM
The undersigned is directed to enclose herewith a grievance petition dated
31/12/2007 received from Shri Dharumi regarding
Central Gove: Miscellaneous (PG). The petition is self-explanatory.
2. The Department of Administrative Reforms and Public Grievances is following up
the case. It is requested that the matter may kindly be examined and the grievance
redressed promptly.
3. Action taken in the matter may kindly be communicated to the petitioner under
Intimation to the Department of Administrative Reforms and Public Grievances.
( Badri Prasad )
Deputy Director (PG)
Tel. : 23361856
e-mail.: ddpag2-arpg@nic.in
No. DARPG/E/2007/08851 (01) (MORLY)
Ministry of Railways, (Railway Board)
Shri Sunil Kumar
Executive Director (PG)
Room No. 471, Rail Bhavan,
Railway Board
New Delhi
Copy for information to:-
No. DARPG/E/2007/08851 (01) (MORLY)
Shri DHARUMI
31 CHEMPARUTHI NAGAR
VILANGUDI
MADURAI – TAMIL NADU, Andaman And Nicobar
MADURAI – TAMIL NADU
Please view our web site: - http://darpg.nic.in
(Sd) BADRI PRASAD
நல்லதுங்க. அது என்ன அந்தமான் நிக்கோபார் எல்லாம் எங்க இருந்து வந்தது?
ReplyDeleteஅடா அடா அடா நல்ல முன்னேற்றம் தெரியுதே. grievance siteக்கு ஹிட் ரேட்டு 13000+. எல்லாம் நீங்க வெளிச்சம் போட்ட பிறகு ஹிட் மீட்டர் ஏற ஆரம்பிச்சதுதான்.
ReplyDeleteGrievance துறையில் வேலை செய்யரவங்க அவங்க வேலைய ஒழுங்கா செய்யறாங்கன்னு தெரியுது.
அவங்களுக்கு ஒரு பெரிய கும்புடு.
நீங்க சொல்ற right-to-info, PIL எல்லாம் கண்டிப்பா முயற்சி செய்யவேண்டியவை. கொஞ்சம் அதப் பத்தி விஷயம் தெரிஞ்சவங்களும் சேருவாங்கன்னு நம்புவோம்.
தனிமனிதனா பண்ணாமல், குழுவா செய்யும்போது, பலம் கூடலாம்.
நான் fixmyindia.blogspot.com சீக்கிரம் அரங்கேற்றி, விருப்பம் தெரிவுக்கும் ஒத்த மனதுள்ள பதிவர்களை அதில் மெம்பர்கள் ஆக்கிக் விடுகிறேன்.
நம்பிக்கையே வாழ்க்கை! :)
நன்றி!
கொத்ஸ்,
ReplyDeleteஅது அங்கதான் இருக்குது; ஆனா எதுக்கு இங்க வந்துதுன்னு தெரியலை.
நான் கொடுத்திருக்கிறது அச்சு அசல் நகல்
சர்வேசன்,
ReplyDelete//Grievance துறையில் வேலை செய்யரவங்க அவங்க வேலைய ஒழுங்கா செய்யறாங்கன்னு தெரியுது.
அவங்களுக்கு ஒரு பெரிய கும்புடு.//
என்னோட கும்புடும் உண்டு.
//அதப் பத்தி விஷயம் தெரிஞ்சவங்களும் சேருவாங்கன்னு நம்புவோம்.//
என்ன இப்படி சொல்லீட்டீங்க நம்புவோம்னு. நம்ம பதிவர்கள் என்ன அப்படிப்பட்ட ஆளுகளா என்ன .. பாருங்க .. ஈடுபாட்டோடு எத்தனை பேர் வருவாங்கன்னு பாருங்க.
தருமி,
ReplyDeleteநல்ல முன்னேற்றம், அடுத்தடுத்து கடிதம் வருது, தீர்வும் வரும் என நம்புவோம். ஏன் எனில் ஏற்கனவே லாலு கழிவறைகளை மேம்படுத்தவும், ஸ்டேஷன்களில் நிற்கும் போது கழிவுகள் டிராக்கில் கொட்டாத வகையில் மாற்றி அமைக்க சொல்லி இருக்கிறார். பெரிய அளவில் செலவாகும் என்று தள்ளிப்போகிறது போலும்.(இந்த லாலு சொன்ன மேட்டர் எனக்கும் இப்போது தான் நினைவுக்கு வந்தது,இல்லை ஏற்கனவே சொல்லிட்டனா?)
இதை ரயில்வே பட்ஜெட்டின் போது குறிப்பிட்டிருந்தார் அடுத்த பட்ஜெட்டே வரப்போகுது, இப்போது என்ன சொல்வர் என்பதைப்பார்ப்போம். மேலும் சரியான சமயத்தில் தான் நாமும் நினைவூட்ட ஆரம்பித்திருக்கிறோம் என நினைக்கிறேன்.
இந்த தொடர் ஆட்டத்தில் அவ்வப்போது நானும் வந்து போவேன் சொல்லிட்டேன்! :-))
என்னோட பிரச்சனை status அப்படியே தான் இருக்கு
ReplyDeleteஎன்னால ரொம்ப நாளா logine பண்ண முடியல
ஒரு வேளை உங்கள போல பெரிய பெரிய VIP ஓட பிரச்சனைகளா இருந்தா சீக்கிரம் வேலை நடக்கும் போல
வணக்கம் சார்,
ReplyDeleteஉங்கள் muyarchikku வாழ்த்துக்கள்..ஏற்கனவே ஒரு முறை அந்த கதவை (darpg) முட்டி தோற்றவன் naan. அது அரசு நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள சிறார் தொழிலாளர்கள் பற்றிய புகார். எந்த actionum செய்யாதவர்கள் மேல் PIL, RTI எல்லாம் போடலாம்..ஆனால் எப்பொழுது விடிவு வரும்?? நமது நாட்டின் நீதி மன்றங்கள் செய்யும் காமெடிகளை பற்றி நீங்களே blog எழுதி விட்டு எந்த நம்பிக்கையில் PIL போடுவதை பற்றி எழுதி உள்ளிர்கள் ?
நான் அனுப்பிய புகார் உடையே date march 2k7.. இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. PIL போட்டு விட்டு இன்னும் 20 வருடம் காத்திருக்க எனக்கு பொறுமை இல்லை. ஆனால் உங்க முயற்சிக்கு என்னால் முடிந்த ஆதரவை கண்டிப்பாக தருவேன்.
நல்ல வேளை, புகார் அனுப்பிச்சதுக்காக அந்தமானுக்கு உங்கள அனுப்பல :)
ReplyDeleteதகவல் அறியும் சட்டத்தின் அரசாங்க இணைய முகவரி: http://persmin.nic.in/RTI/WelcomeRTI.htm
இந்தியா டுகெதர் அமைப்பின் இணைய முகவரி (இந்த இணையத்தில், தகவல் அறியும் சட்டத்தைப் பத்தி நிறய தகவல்கள் இருக்கு): http://www.indiatogether.org/rti/
என்னையும் ஆட்டத்துல சேத்துக்கங்க. முடிஞ்சத முயற்சி செஞ்சு பாத்துடலாம்!
இன்னொரு விஷயம், இப்போ தகவலறியும் சட்டத்தை அமெரிக்காவிலிருக்கும் இந்திய எம்பசிகளிலிருந்தும் (வாஷிங்டன்லருந்து, இப்போதைக்கு) பயன் படுத்தலாம். அது பத்தி அறிய: http://www.indianembassy.org/newsite/RTI.asp
இதுல என்ன கொடுமைன.. நான் போட்ட மனு ஏற்கனவே இருக்கும் சட்டத்தை அமல் படுத்த தான். தருமி அவர்களே நீங்கள் போட்டது புதுசாக ஒரு சட்டத்தை இயக்குவதற்கு. உதாரணத்துக்கு நான் போட்ட மனுவுக்கு நடவடிக்கை எடுத்து விட்டார்கள் என்றே வைத்து கொள்வோம் (உதாரணத்துக்கு மட்டுமே). இப்போ இத்தனை வருடங்களாக இவர்கள் செய்த கொடுமைக்கு தண்டனையே கிடையாதா?
ReplyDeletereservationai பற்றி வாய் கிழிய பேசும் congress அரசுக்கு தெரியும் தலித்துகள் தான் railwaysil மலம் அள்ளுகிறார்கள் என்று. இதுவும் ஒரு விதமான அடக்கு முறை தான். அரசாங்கமே குல தொழில் செய்ய ஊக்குவிக்கிறது. இந்த கொடுமை ஒழிக்கப்பட்டால் (முதலில் இதை கொடுமை என்று will they accept?) சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகளாக இதை ஒழிக்காமல் விட்டவர்களுக்கு தண்டனையே கிடையாதா?? இதை மட்டும் அவர்கள் வசதியை மறந்து விடுவார்கள். இந்த அவலத்தை ஒழித்தாலும் ..ஒழித்தவர்கள் தியாகிகளாக, தலைவர்களாக போற்ற படுவார்களே தவிர.. 60 வருடங்களாக ரயில்வே அமைச்சர்களாக..அதிகாரிகளாக இருந்தவர்களுக்கு தண்டனை கிடையாது. ஏனென்றால் மலம் அள்ளுகிறவர்கள் சட்டப்படி என்றுமே தாழ்ந்தர்வர்கள் தான்!!
இந்த மாதிரி விஷயமெல்லாம் அங்க போடலாம்ல - http://surveysan.blogspot.com/2008/01/14.html
ReplyDeleteUPDATION OF THE ISSUE:
ReplyDelete"கதை" தொடர்கிறது. அது உங்கள் பார்வைக்கு:
SOUTHERN RAILWAY
General Manager's Office,
Public Grievances Cell,
CHANNAI - 600 003
Ref: G.50/pg/2008/15
24.01.2008
To Dharumi
...
Dear Sir,
Sub: Suggestion on sanitary system in Trains
The receipt of your letter dated 31.12.2007 is hereby acknowledged.thanking you,
yours faithfully,
..........
(sd) B. NAGESWARA RAO
Joint Director/PG
------------------------------
email id for this office is provided in this communication i received. will be sending a mail.
the mail id: ddpg@sr.railnet.gov.in
//கதை" தொடர்கிறது//
ReplyDeleteஅருமை. மிகப் பெரிய ஆறுதல், இந்தா 'grievance cell' ஆட்கள், அவங்க வேலைய செய்றாங்க.
grievance வாங்கிக்கரவங்கள அடுத்த கட்ட வேலைய செய்ய வைக்கரதுதான் பெரிய வேலை. தொடர் நச்சரிப்புதான் வழி ;)
சர்வேசன்,
ReplyDeleteப்ரச்சனை என்னன்னா, கொடுத்த grievance மேலிடத்துக்குப் போகாம கீழ் நோக்கி வருதே... பெரிய லெவலுக்குப் போனாத்தானே ஏதாவது விடிவு கிடைக்கலாம்னு நினைக்கலாம்.
நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி - சொ.சங்கரபாண்டி