Sunday, June 29, 2008

260. தோரணம் ...

*

Euro Cup 2008
போட்டிகள் ரொம்ப மும்முரமா நடக்குது; எப்பவுமே ஸ்டேடியம் நிரம்பி வழியுது. பந்தயம் நடக்கிற ஒவ்வொரு வினாடியும் ஆரவாரத்தோடு பார்வையாளர்களால் ரசிக்கப் படுகிறது. பந்தய மைதானத்தையும் பார்வையாளர்களையும் பிரிக்கும் இடம் நல்ல அகலமாக இருக்கிறது. பழைய சில பந்தயங்களில் பார்வையாளர்கள் மைதானத்திற்குள் இறங்கிய விபரீதமெல்லாம் இப்போது நடக்க முடியாதபடி இந்த தூரம் பார்வையாளர்களை மைதானத்திலிருந்து பிரித்து வைக்கிறது. இருந்தாலும் இதுவும் பற்றாதது போல், இருக்கும் அந்த இடைவெளியில் florescent வண்ணத்தில் மேலுடை அணிந்துகொண்டு மிக நெருக்கமாக வளையம் அமைத்து, பார்வையாளர்களைப் பார்த்த வண்ணம் விளையாட்டுக்கு முதுகைக் காண்பித்துக் கொண்டு காவலுக்கு பலர் வரிசையாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.


இதில் ஆச்சரியமான ஆச்சரியம் என்னன்னா, விளையாட்டின் எந்த நேரத்திலும் அவர்கள் கொஞ்சம் கூட திரும்பி விளையாட்டைப் பார்ப்பதில்லை. விளையாட்டின் கடைசி நிமிடங்களில் நடக்கும் திருப்புமுனைக் கோல்களும் அதனால் பார்வையாளர்களின் நடுவில் நடக்கும் எதிர்வினைகளும் கூட இந்த ஆட்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை, விளையாட்டு பக்கம் அவர்கள் திரும்புவதேயில்லை என்பதைப் பார்க்கும்போது மிக ஆச்சரியாக இருந்தது.

எப்படி இவர்களால் தங்கள் முதுகுப் பக்கம் அரங்கேறும் காரியங்களால் எவ்வித கவனத் திருப்புதல் இல்லாமல் இருக்க முடிகிறது? எப்படி கால்பந்து விளையாட்டினால் கவனம் சிதறாமல் கர்ம சிரத்தையாகத் தங்கள் காவல் வேலையைப் பார்க்க முடிகிறது என்று யோசித்த போது ---ஒருவேளை கிரிக்கெட் தவிர வேறு விளையாட்டுக்கள் இருப்பதே அறியாத இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமே இந்த வேலைக்குப் பொறுக்கி எடுத்திருப்பார்களோ ??



உவ்வ்வே

நம்ம ஊர் தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் பார்த்தால் கையையும், பந்தையும் விளையாட்டு வீரர்கள் நக்கி எடுப்பதைப் பார்த்து 'உவ்வ்வேன்னு' நினச்சா, இந்த கால்பந்து விளையாட்டுகளில் சரியாக வீரர்களை close up-ல் காண்பிக்கும் நேரத்தில்தான் சரியாக அவர்கள் எச்சில் துப்பித் தொலைக்கிறார்கள். :(

Voodoo

கடைசியில் துருக்கியின் ஊடு மந்திரம் அரையிறுதியாட்டத்தில் கை கொடுப்பதுபோல் தோன்றி கடைசியில் செயலாகாமல் போய் விட்டது.


Wimbledon

விம்பிள்டன் பந்தயங்களைப் பார்க்கிறேனோ இல்லையோ அவைகளைப் பற்றி The Hindu-வில் எழுதும் நிர்மல் சேகரின் கட்டுரைகளைப் படிப்பது ஒரு தனி சுவாரசியம்தான். அதிலும் எதிர்பார்க்கப் பட்ட ஒரு விளையாட்டுக்காரர் தோல்வியடைந்தால் அப்போது அவர் எழுதும் கட்டுரையின் அழகே அழகு. ஆனால் நல்ல வேளை இந்த ஆண்டு இதுவரை அப்படிப்பட்ட கட்டுரை எழுத ஏதும் வாய்ப்பு இதுவரை வரவில்லை - ஜோக்கோவிச்சின் தோல்வி எதிர்பார்க்காததாக இருந்தாலும்.


சானியா

இந்த முறை சானியா இரண்டாவது சுற்றில் முதல் செட்டில் 6:0 என்ற கணக்கில் தோற்று இரண்டாவதை வென்று மூன்றாவதில் மிகவும் கிட்ட வந்த வெற்றிக் கனியை நழுவ விட்டது மிகவும் சோகம். என்னதான் சமீபத்தில் நடந்த அறுவை மருத்துவத்தை அதற்குக் காரணமாகச் சொன்னாலும், இப்படி ஒரு தோல்வியை அவர் தழுவியிருக்க வேண்டியதில்லை.


நாடலும், வீனஸும் ..

இந்த இருவரும் இந்த ஆண்டு வெற்றியாளர்களாக வரவேண்டும் என்பது என் ஆசை. என்ன நடக்கிறதென்று பார்க்கணும்.

அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். பாவம் இந்த வீனஸ். இதுவரை அவருக்கு ஒரு நல்ல sports costume designer கிடைக்கவேயில்லை.

நாடலுக்குக் கால்சட்டை தைப்பவர்களுக்கு இன்னும் கொஞ்சூண்டு துணி சேர்த்து எடுத்துக் கொடுக்கலாம். பாவம், அவர் ரொம்ப டைட்டான கால்சட்டையோடு ஒவ்வொரு முறையும் service போடுவதற்கு முன் கஷ்டப் படுகிறார்.!!!!



விம்பிள்டன் விளையாட்டுக்களில் புதிதாக (நான் இந்த வருடம்தான் அதைப் பார்க்கிறேன்) ஸ்கோர் போர்டுகளில் வீரர்களின் பாய்ண்ட்டுகளுக்குக் கீழே remaining Challenges என்று இரு வீரர்களின் பெயரோடு எண்களைக் போடுகிறார்கள். அது என்னவென புரியவில்லை.


*
பிற்சேர்க்கை: for future reference

ஒரு வழியா விம்பிள்டன் முடிஞ்சிது. நினச்ச ரெண்டு விளையாட்டுக்காரர்களும்தான்

13 comments:

  1. நடாலுக்கு சப்போர்ட்டா? நடாத்தும்.
    நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மீள் முடிவு கேட்கும் உரிமை அந்த சேலஞ்ச்.

    ReplyDelete
  2. ஃபெடரரும் வீனசும் நம்ம தேர்வு :)

    ---இப்படி ஒரு தோல்வியை அவர் தழுவியிருக்க வேண்டியதில்லை.---

    சர்வ நிச்சயமாய்

    ---வீரர்களை close up-ல் காண்பிக்கும் நேரத்தில்தான் சரியாக அவர்கள்---

    மற்ற நேரம் ஓடிக் கொண்டே இருக்கிறார்களோ ;)

    ReplyDelete
  3. //.........வீரர்களின் பாய்ண்ட்டுகளுக்குக் கீழே remaining Challenges என்று இரு வீரர்களின் பெயரோடு எண்களைக் போடுகிறார்கள். அது என்னவென புரியவில்லை //

    புதிதாக, ஆட்டவீரர் நடுவரின் முடிவை ஒரு ஆட்டத்தின்போது மூன்றுமுறை மறுபரிசீலனை செய்ய விதி செய்துள்ளார்கள். அந்த மூன்றில் இன்னும் எத்தனை எஞ்சியுள்ளன என காண்பிக்கிறார்கள்.

    பெர்ணாண்டஸ் டாரெஸ் போட்ட கோலில் ஸ்பெயின் யூரோ சாம்பியன் பட்டத்தை பிடித்ததில் மிக மகிழ்ச்சி ! எனது மகன் லிவர்பூல் FC இரசிகன்..அந்த கிளப் ஆட்டகாரர் பெர்ணாண்டஸ்.

    ReplyDelete
  4. மணியன்,
    பார்த்து பல நாள் ஆச்சு.

    தகவலுக்கு நன்றி. புரிந்தது.

    எனது மகன் லிவர்பூல் FC இரசிகன்.// அப்போ, இப்போ அவர் இங்கே இந்தியாவில் இல்லையோ?? !! :)

    ReplyDelete
  5. தலைவா,

    நம்ம வோட்டு Federer & Serena'வுக்கே..

    Safin நன்றாக ஆடுவது சந்தோஷமளிக்கிறது..

    ReplyDelete
  6. ஒருவேளை கிரிக்கெட் தவிர வேறு விளையாட்டுக்கள் இருப்பதே அறியாத இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமே இந்த வேலைக்குப் பொறுக்கி எடுத்திருப்பார்களோ ??//

    :-)) நகைச்சுவையாக நீங்கள் கூறினாலும் எவ்வளவு உண்மை. இந்த ஒலிம்பிக் பந்தயத்தில் ஏதாவது தங்கப் பதக்கம் வாங்க வாய்ப்பு இருக்கிறதா, தருமி?

    சைனாவுடன் எல்லாவற்றிலும் போட்டியிடுகிறோம், அவர்களின் "வெறி" Gold Medal சார்ந்து நமக்கு இருக்கிறதா? எப்பொழுதுதாவது, நாமும் நம்மூரில் ஒலிம்பிக் நடத்தும் வாய்ப்பை பெறுவோமா... எல்லாம் ஒரு ஆசைதான்.

    ReplyDelete
  7. கொத்ஸ்,
    //நடாத்தும்.//.. ஏங்க, நீங்க ஃபெடரர் ஆளா?

    தகவலுக்கு நன்றி. புரிந்து கொள்ள மூணு நாளாயிரிச்சி!!

    ReplyDelete
  8. பாபா,
    //ஃபெடரரும் வீனசும் நம்ம தேர்வு :)//

    அதுக்கு என்ன :) ?

    ReplyDelete
  9. பாபா,
    //மற்ற நேரம் ஓடிக் கொண்டே இருக்கிறார்களோ ;)//

    சரியாகச் சொன்னீங்க ..

    ReplyDelete
  10. analyzt,

    safin lacks consistency அப்டின்னு தோணுதே..

    ReplyDelete
  11. தெக்ஸ்,

    //எல்லாம் ஒரு ஆசைதான்//

    ஆசையே துன்பத்துக்குக் காரணம் - புத்தர் சொல்லியிருக்கார். எதுக்கு உங்களுக்கு இந்த ஆசை?

    ReplyDelete
  12. //analyzt,

    safin lacks consistency அப்டின்னு தோணுதே..//

    ஒரு tournament'ல சூடு பிடித்ததுனா.. he will go all the way..

    2000 Aus open final.. he beat sampras in straight sets.

    2005 Aus open semifinal.. he beat federer in 5 sets(9-7 in the fifth set) and Hewitt in the finals..

    so his problem is consistency across tournaments not within a tournament :)

    still i favor federer!!!

    ReplyDelete
  13. analyzt,
    பார்ப்போம்..இன்னும் இரண்டே நாள்தானே.

    நேற்றும் இன்றும் Murray அப்டின்னு ஒரு இங்கிலீசுகாரன் விளையாடினதைப் பார்த்தேன். நேற்று Gasqquet உடன். பண்ணின அலம்பு தாளவில்லை. ஆனாலும் 2-down ஆக இருந்து ஜெயிச்சிட்டான். ஆனா நம்ம ஆளு ரஃபாவிடம் பாச்சா பலிக்கவில்லை.

    பெண்கள் விளையாட்டில் அக்கா-தங்கை மோதினா நல்லா இருக்கும்.

    ReplyDelete