*
சினிமாப் பாடல்களில் அந்தக் காலத்தில் குரலுக்குத்தான் முதலிடமா இருந்திருக்கு(தி.பாகவதர் காலம்); பொறவாட்டி ரெண்டும் சேர்ந்து இருந்தாலும் வார்த்தைகள் தெளிவா தெரிந்த காலம் (மெல்லிசை மன்னர் காலம்); கொஞ்சம் இசைக்கருவிகள் அதிக இடம் பெற்ற காலம்(ராசா); ஆனா இப்போ இசைக்கருவிகளின் பிரளயத்தில் வார்த்தைகளை முயற்சித்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியுது.சிலசமயம் கண்டே பிடிக்க முடிவதில்லை. அதிலும் ஆண்குரல்களை ஓரளவு கண்டுபிடிக்க முடிந்தாலும் பெண்குரல்களைக் கண்டுபிடிப்பது மிக சிரமமாயிருக்கிறது.
உதாரணமா, நான் அவனில்லை படத்தில் பெண்பாடகி (சாதனா சர்க்கம்??) பாடும் -
ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்னாச்சு? - இந்த வரிகளைக் கடைசி வரை நானாகக் கண்டுபிடிக்க முடிந்ததில்லை!
ஏன் பெண்குரல்களில் ஆண்குரல்களில் போல் எளிதாக சொற்களைக் கண்டுபிடிக்க முடிவதில்லை?
****************************************
உதித் நாராயணன் என்று ஒன்று இருக்கிறதே .. அதைத் தமிழ்ப்படங்களில் பாட அழைத்துவந்த மகானுபவன் யாருங்க? ரஹ்மானா?
அழைத்து வந்தாச்சு; அதுவும் ஒண்ணு ரெண்டு பாடிரிச்சி; "பருவா இல்லை". ஆனால் அதோடு விடாம இன்னும் ஏன் அதைப் பாடவைத்து நம்ம கழுத்தை அறுக்கிறாங்க எல்லோருமா சேர்ந்து. அப்படி என்ன நம் தமிழ் இசை இயக்குனர்களுக்கு நம்மேல் கோவம்; 'அது' மேல் அப்படி ஒரு பாசம்?
****************************************
escalator = தமிழில் தானிப்படி என்று வச்சுக்குவோமா? என் கேள்வி அது அல்ல. உசரமா நம்மைத் தூக்கிட்டு போற படிக்கட்டை escalator அப்டின்றோம். ஆனால் சம தளத்தில் தானாக நகர்ந்து நம்மை 'முன்னேற்றுகிறதே' அந்தவகை தானியங்கிகளுக்கு ஆங்கிலத்தில் என்ன பேருங்க?
****************************************
முந்தியெல்லாம் இவ்வளவு கிடையாதே .. ஏன் இப்போவெல்லாம் என் கிட்ட பணம் கொட்டிக் கிடக்குது; அத உனக்குத் தந்தே ஆகணும்; உன் விவரத்தை ரகசியமா அனுப்பு அப்டின்றமாதிரி மயில்கள் தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கு. கோஃபி அன்னன் பெயர்லகூட ஒண்ணு வந்துச்சி. ஒருவேளை ஏமார்ரவங்க நிறைய ஆகிட்டாங்களோ? இந்த மாதிரி மயில்கள் வர்ரது (அதாவது, ரொம்ப பேர் ஈனா வானாக்கள் இங்க அதிகம்னு நினச்சி..)நம்ம ஊர்ல மட்டும் நிறையவா இல்ல, இது ஒரு அகில உலக நிகழ்வா?
****************************************
அமைச்சரே! மாதம் மும்மாரி மழை பெய்கிறதா? அப்டின்னு ராசா கேக்கிறதுமாதிரி நிறைய நாடகங்களில் ...சினிமாக்களில்... கதைகளில் ... ராசா என்ன கூட்டுப் புழுவாகவா இருந்திருப்பார். ஊர்ல நாட்ல மழை பெஞ்சா ராசாவுக்குத் தெரியாமலா போய்விடும்?
யாரோ எப்பவோ எழுதி அது இன்னமும் தொடருதோ? என்ன கொடுமை சரவணன் இது?
****************************************
//அமைச்சரே! மாதம் மும்மாரி மழை பெய்கிறதா? அப்டின்னு ராசா கேக்கிறதுமாதிரி நிறைய நாடகங்களில் ...சினிமாக்களில்... கதைகளில் ... ராசா என்ன கூட்டுப் புழுவாகவா இருந்திருப்பார். ஊர்ல நாட்ல மழை பெஞ்சா ராசாவுக்குத் தெரியாமலா போய்விடும்?
ReplyDelete//
மலேசியாவில் M.R.ராதா பேச்சில் இதே கேள்வியை கேட்டிருக்கிறார் ..தரவிறக்கி கேட்டுபாருங்கள் .
http://www.keetru.com/audio/M_R_Radha/mrradha.php
//நம்ம ஊர்ல மட்டும் நிறையவா இல்ல, இது ஒரு அகில உலக நிகழ்வா?//
ReplyDeleteஅகில உலக நிகழ்வு தான் .சிங்கப்பூர் சீனர்கள் ,மலாய் காரர்கள் சிலர் இதில் மாட்டி பணத்தை இழந்திருக்கிறார்கள்
//சம தளத்தில் தானாக நகர்ந்து நம்மை 'முன்னேற்றுகிறதே' அந்தவகை தானியங்கிகளுக்கு ஆங்கிலத்தில் என்ன பேருங்க?//
ReplyDeleteMoving walkway
http://en.wikipedia.org/wiki/Moving_walkway
//அப்படி என்ன நம் தமிழ் இசை இயக்குனர்களுக்கு நம்மேல் கோவம்; 'அது' மேல் அப்படி ஒரு பாசம்?//
ReplyDeleteஹீரோக்கள் பேசும் வசன உச்சரிப்பின் லட்சணமே அது போலவே இருப்பதால் ,ஒரு கண்டினியூட்டி இருக்கட்டும் -ன்னு கூப்பிடுகிறார்கள் போல.
//சினிமாப் பாடல்களில் அந்தக் காலத்தில் குரலுக்குத்தான் முதலிடமா இருந்திருக்கு(தி.பாகவதர் காலம்);//
ReplyDeleteஅப்போ மியூஸிக்ன்றது எங்க ஸாரே இருந்தது..? பாகவதரின் குரல்தான் தனித்துவமாக ஒலித்தது. மன்மத லீலையை வென்றோர் உண்டோன்றதை கேட்டுப் பாருங்க.. ஏதோ ஒரு சவுண்டு பின்னால லேசா கேக்குது.. அவ்வளவுதான்.. ஆனா அவர் குரல்தான் பிரம்மாண்டம்..
ஐயா, வணக்கம்
ReplyDelete1. 'ஏனெக்கு மயக்கம்' பாடிய பெண் குரல் சங்கீதா.
'டைலமோ்டைலமோ'ன்னு ஒரு பாட்டு வந்துச்சே... அதை பாடினவங்க.
2. உதித் நாராயணனை தமிழுக்கு கொண்டு வந்த புண்ணியவான் வித்யாசாகர். வித்தியாசமான குரல் வேணுமாம். அதுக்காக கொண்டு வந்தாராம்.
நன்றி.
//பொறவாட்டி ரெண்டும் சேர்ந்து இருந்தாலும் வார்த்தைகள் தெளிவா தெரிந்த காலம் (மெல்லிசை மன்னர் காலம்);//
ReplyDeleteகரெக்ட்டு.. 'மன்னிக்க வேண்டுகிறேன்' பாடலை மீண்டும் ஒரு முறை கேட்டுப் பாருங்கள்.. இதில் வருகின்ற "தித்திக்கும் இதழ் உனக்கு" என்ற வார்த்தையே உச்சரிக்கும் டிஎம்எஸ்ஸின் குரலே பத்மினியின் உதட்டைச் செல்லமாக பிதுக்கியெடுக்கும் சிவாஜியின் சிலுமிஷத்தை கண்முன்னே கொண்டு வரும்..
//கொஞ்சம் இசைக்கருவிகள் அதிக இடம் பெற்ற காலம்(ராசா);//
ReplyDelete'புன்னகை மன்னனில்' கொடி கட்டியிருப்பார் ராசா..
அதுக்குப்பெயர் ட்ராவலேட்டர்.
ReplyDeleteதானியங்கும் மாடிப்படி எஸ்கலேட்டர்.
//ஆனா இப்போ இசைக்கருவிகளின் பிரளயத்தில் வார்த்தைகளை முயற்சித்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியுது. சிலசமயம் கண்டே பிடிக்க முடிவதில்லை. அதிலும் ஆண் குரல்களை ஓரளவு கண்டுபிடிக்க முடிந்தாலும் பெண்குரல்களைக் கண்டுபிடிப்பது மிக சிரமமாயிருக்கிறது.//
ReplyDeleteஉண்மைதான் பேராசிரியரே.. பொதுவாகவே ஆண் குரல்களைவிடவும் பெண் குரல்கள்தான் அதிக சப்தமாகக் கேட்கும். இப்போது அதுவும் உள்ளே போய் இசை மட்டுமே கேட்கிறது..
//உதாரணமா, நான் அவனில்லை படத்தில் பெண்பாடகி (சாதனா சர்க்கம்??) பாடும் - ஏன் எனக்கு மயக்கம்? ஏன் எனக்கு நடுக்கம்? ஏன் எனக்கு என்னாச்சு? - இந்த வரிகளைக் கடைசி வரை நானாகக் கண்டுபிடிக்க முடிந்ததில்லை!//
ReplyDeleteநிஜமா ஏதோ ஆயிருக்குன்னு நினைக்கிறேன்..
//ஏன் பெண்குரல்களில் ஆண்குரல்களில் போல் எளிதாக சொற்களைக் கண்டுபிடிக்க முடிவதில்லை?//
ReplyDeleteஇப்போதுதானே.. இது வியாபாரமாயிருச்சு ஸார்.. சாதனா சர்கம், உதித் நாராயணன் போன்ற வடநாட்டு பாடகர்களை பாட வைத்தால்தான் கேஸட் விற்கும் என்று பாடல் உரிமை பெறும் நிறுவனங்கள் அடித்துப் பேசுகின்றன. காரணம் மார்க்கெட்.. இப்போதைய தமிழ் சினிமாவின் பாடல் கேஸட்டுகள் அதிகமாக விற்பனையாவது இல்லை.. பாடல்களே முணுமுணுக்க வைக்காதபோது எப்படி வாங்குவார்கள்? கேஸட் வருவாய் மூலம் ஒரு நல்ல தொகை கிடைக்கவிருப்பதால் தயாரிப்பாளர்களும் இசையமைப்பாளர்களிடம் அவர்களை பாட வையுங்கள் என்கிறார்கள். எல்லாம் பணம் படுத்தும் பாடு..
இப்போதும் மெல்லத் திறந்தது கதவும், வைதேகி காத்திருந்தாளும்தான் நகர்ப்புற, கிராமப்புற டீக்கடைகளில் கொடி கட்டிப் பறக்கின்றன.
//உதித் நாராயணன் என்று ஒன்று இருக்கிறதே .. அதைத் தமிழ்ப்படங்களில் பாட அழைத்துவந்த மகானுபவன் யாருங்க? ரஹ்மானா? அழைத்து வந்தாச்சு; அதுவும் ஒண்ணு ரெண்டு பாடிரிச்சி; "பருவா இல்லை". ஆனால் அதோடு விடாம இன்னும் ஏன் அதைப் பாடவைத்து நம்ம கழுத்தை அறுக்கிறாங்க எல்லோருமா சேர்ந்து. அப்படி என்ன நம் தமிழ் இசை இயக்குனர்களுக்கு நம்மேல் கோவம்; 'அது' மேல் அப்படி ஒரு பாசம்?//
ReplyDeleteதுட்டு வாத்தியாரே துட்டு.. எஸ்.பி.பி.யைவிடவுமா ஒரு நவரஸப் பாடகர் தற்போதைக்கு வேண்டும்? மியூஸிக்கில் பணம் போடும் நிறுவனங்கள் அனைத்துமே வட நாட்டு நிறுவனங்கள்தான்.. ஸோ.. அவர்கள் சொல்வதுதான் நடக்கிறது.. கொஞ்சம் தலைமுறை இடைவெளியும் சேர்ந்து கொண்டுள்ளது..
//escalator = தமிழில் தானிப்படி என்று வச்சுக்குவோமா? என் கேள்வி அது அல்ல. உசரமா நம்மைத் தூக்கிட்டு போற படிக்கட்டை escalator அப்டின்றோம். ஆனால் சம தளத்தில் தானாக நகர்ந்து நம்மை 'முன்னேற்றுகிறதே' அந்தவகை தானியங்கிகளுக்கு ஆங்கிலத்தில் என்ன பேருங்க?//
ReplyDeleteஇராம.கி. ஐயா வந்து சொல்வாரு.. அப்பால நானும் படிச்சுத் தெரிஞ்சுக்குறேன்..
//முந்தியெல்லாம் இவ்வளவு கிடையாதே .. ஏன் இப்போவெல்லாம் என்கிட்ட பணம் கொட்டிக் கிடக்குது; அத உனக்குத் தந்தே ஆகணும்; உன் விவரத்தை ரகசியமா அனுப்பு அப்டின்ற மாதிரி மயில்கள் தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கு. கோஃபி அன்னன் பெயர்லகூட ஒண்ணு வந்துச்சி. ஒருவேளை ஏமார்ரவங்க நிறைய ஆகிட்டாங்களோ? இந்த மாதிரி மயில்கள் வர்ரது (அதாவது, ரொம்ப பேர் ஈனா வானாக்கள் இங்க அதிகம்னு நினச்சி..) நம்ம ஊர்ல மட்டும் நிறையவா இல்ல, இது ஒரு அகில உலக நிகழ்வா?//
ReplyDeleteஎங்க இருந்து உகாண்டால இருந்தா? எத்தியோப்பியால இருந்தா? சவுத் ஆப்ரிக்கால இருந்தா? எனக்கு இந்த மூணு தேசத்துல இருந்தும் உடனே 4 லட்சத்தை நான் சொல்ற அக்கவுண்ட்ல போட்டா 430 கோடி ரூபாய் எனக்குக் கிடைக்கும்னான்..
நான்தான் "வேணாம்.. எனக்கு முருகனோட கோவணமே போதும்"னுட்டேன்..
//அமைச்சரே! மாதம் மும்மாரி மழை பெய்கிறதா? அப்டின்னு ராசா கேக்கிறது மாதிரி நிறைய நாடகங்களில் ...சினிமாக்களில்... கதைகளில் ... ராசா என்ன கூட்டுப் புழுவாகவா இருந்திருப்பார். ஊர்ல நாட்ல மழை பெஞ்சா ராசாவுக்குத் தெரியாமலா போய்விடும்? யாரோ எப்பவோ எழுதி அது இன்னமும் தொடருதோ? என்ன கொடுமை சரவணன் இது?//
ReplyDeleteஒரு கொடுமையும் இல்ல பேராசிரியரே.. அப்பல்லாம் முக்கால்வாசி ராசாக்கள் அந்தப்புரமே கதின்னு கிடந்ததுனால வெளில பெஞ்ச மழைய பத்தி தெரியாம இருந்திருக்கும்.. அதான் கேட்டிருப்பாங்க.. ஆனாலும் நம்ம பாரம்பரியத்தை நாம விட்டுற முடியுமா? அதான் தொடர்ச்சியா சொல்லிக்கிட்டே இருக்கோம்..
//escalator = தமிழில் தானிப்படி என்று வச்சுக்குவோமா? என் கேள்வி அது அல்ல. உசரமா நம்மைத் தூக்கிட்டு போற படிக்கட்டை escalator அப்டின்றோம். ஆனால் சம தளத்தில் தானாக நகர்ந்து நம்மை 'முன்னேற்றுகிறதே' அந்தவகை தானியங்கிகளுக்கு ஆங்கிலத்தில் என்ன பேருங்க?//
ReplyDeleteஇங்கெல்லாம் அதன் பெயர் travelator (இழுவை தளம் ?) னு போட்டு இருக்காங்க !
//பொறவாட்டி ரெண்டும் சேர்ந்து இருந்தாலும் வார்த்தைகள் தெளிவா தெரிந்த காலம் (மெல்லிசை மன்னர் காலம்);//
ReplyDeleteதமிழ் திரை இசைப் பாடல்களின் பொற்காலமா இது!
*****ஏன் பெண்குரல்களில் ஆண்குரல்களில் போல் எளிதாக சொற்களைக் கண்டுபிடிக்க முடிவதில்லை?******
ReplyDeleteரெண்டுமே கஷ்டமா தான் இருக்கு. ஒருவேளை தமிழ் தெரியாத பாடகிகள் அதிகமோ என்னவோ.
*******தமிழ் இசை இயக்குனர்களுக்கு நம்மேல் கோவம்; 'அது' மேல் அப்படி ஒரு பாசம்?********
ஒரு வித்தியாசமா இருக்கட்டுமேன்னு தான். அவர் கடிச்சு துப்பற தமிழ நம்ப கேக்கனம்ன்னு தலவிதி. வேற என்ன ?
********நம்மை 'முன்னேற்றுகிறதே' அந்தவகை தானியங்கிகளுக்கு ஆங்கிலத்தில் என்ன பேருங்க?*******
அதே பேரே வச்சிக்கலாமே.
******நம்ம ஊர்ல மட்டும் நிறையவா இல்ல, இது ஒரு அகில உலக நிகழ்வா?******
இது எல்லாம் உண்மையான மெயில் தான் ! ஒரே ஒரு தடவ பணத்த அனுப்பி பாருங்க...நீங்க கோடீஸ்வரர் ஆயிடுவீங்க !
*******ஊர்ல நாட்ல மழை பெஞ்சா ராசாவுக்குத் தெரியாமலா போய்விடும்?
******
தெரிஞ்சிகரதுக்கு தான் அமைச்சர் கிட்ட கேக்கறாரு. பெரிய நாடா இருந்து இருக்கும் !
இத படிக்கறபோது எனக்கு ஒரு ஞாபகம் வருது. நான் ஐரோப்பால (swiss) இருந்த போது தரிசனம்ன்னு ஒரு தொலைக்காட்சி வரும். ஒரு அரைமணி நேர செய்தி உண்டு. அதுல வானிலை அறிக்கை போடுவாங்க. இன்று ஆஸ்திரேலியாவில் 29 டிகிரீ செல்சியஸ் அப்படின்னு. (அமைச்சர் கிட்ட கேக்காத ராசா)
//உதித் நாராயணன் என்று ஒன்று இருக்கிறதே .. அதைத் தமிழ்ப்படங்களில் பாட அழைத்துவந்த மகானுபவன் யாருங்க? ரஹ்மானா?
ReplyDeleteஅழைத்து வந்தாச்சு; அதுவும் ஒண்ணு ரெண்டு பாடிரிச்சி; "பருவா இல்லை". ஆனால் அதோடு விடாம இன்னும் ஏன் அதைப் பாடவைத்து நம்ம கழுத்தை அறுக்கிறாங்க எல்லோருமா சேர்ந்து. அப்படி என்ன நம் தமிழ் இசை இயக்குனர்களுக்கு நம்மேல் கோவம்; 'அது' மேல் அப்படி ஒரு பாசம்?
//
உதித் நாராயணனை பற்றி சரியாக சொன்னிங்க,
அவனும் அவன் தமிழ் உச்சரிப்பும்
இது மட்டும் அல்ல,
நம் தமிழ் பாடலில் ஹிந்தி வார்தைகள் தேவையா,
சரோஜா சாமான் நிக்காலோ, ஏன் எதற்காக தமிழில் ஹிந்தி வார்தைகளை திணிக்க வேண்டும், இதையே ஒரு ஹிந்தி பாடலில் தமிழ் வார்தைகளை காண முடியுமா?
இது மட்டும் அல்ல சென்னை FMல் ஹிந்தி பாடல்களை கேட்க முடிகிறது ஆனால் வடநாட்டு FMல் ஒரு தமிழ் பாடல் ஒலிக்க விடுவார்களா, மேலும் டி.வி நிகழ்ச்சிகளில் குறிப்பாக விஜய் டி.வில்
தேவையில்லாம ஹிந்தி பாடலை ஒலிக்கிறார்கள்
அவர்கள்( வடநாட்டு) நிகழ்ச்சிகளில் ஒரு தமிழ் பாடல் ஒலிக்க விடுவார்களா, ஹிந்தி பாடல் அதைவிட்டால் ஆங்கில பாடல்
அவர்கள் உன் மொழியை ஓரு பொருட்டாக மதிக்காதபோதும்
அதைபற்றி தெரிந்துகொள்ள கூட அவர்களுக்கு விருப்பம் கிடையாதபோதும், நீ மட்டும் ஏதற்காக அவர்கள் பின்னால் தொங்க வேண்டும்,
கவிஞர்கள், எளுத்தாளர்கள் இவர்கள் நினைத்தால் இன்னும் பல புதிய சொற்களை உருவாக்க முடியும் இதை செய்தால் மொழிக்கு வலுசேர்க்கும்
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஜோ,
ReplyDeleteநீங்கள் கொடுத்த தொடுப்பு பல பெயர்கள் கொடுத்துள்ளது. மிக்க நன்றி
A moving walkway,
moving sidewalk (in the US), moving pavement (elsewhere), walkalator,
travelator,
slidewalk or
moveator
ஜோ,
ReplyDelete//ஹீரோக்கள் பேசும் வசன உச்சரிப்பின் லட்சணமே அது போலவே இருப்பதால் ,ஒரு கண்டினியூட்டி இருக்கட்டும் -ன்னு கூப்பிடுகிறார்கள் போல.//
நடிகர்கள் பண்ணும் கூத்தை படம் பார்க்கும் நேரம் மட்டுமே காணவேண்டும். இந்தப் பாடகர்கள் அப்படியில்லையே. அடிக்கடி காதில் வந்து விழுகிறதே.
M.R. ராதா பேச்சைக் கேட்டுக் கொண்டே இதை எழுதுகிறேன். அதற்கும் நன்றி. அது எப்படிங்க? டக்கு டக்குன்னு தொடுப்பு கொடுத்துர்ரீங்க... ( முன்பு ஒருமுறை எழுதியிருந்தீர்களே அந்த உங்க மாமா மாதிரி) நல்ல வாத்தியாராக ஆகியிருக்க வேண்டிய ஆள் !
ஆடுமாடு,
ReplyDeleteஇரண்டு தப்புகளையும் திருத்தியமைக்கும், சரியான தகவல்களுக்கும் நன்னி!
உ.த.,
ReplyDelete////ஏன் பெண்குரல்களில் ஆண்குரல்களில் போல் எளிதாக சொற்களைக் கண்டுபிடிக்க முடிவதில்லை?//
இதற்கு நீங்கள் அளித்துள்ள பதில் எனக்கு ஒப்பவில்லை. ஏனெனில் எந்த மொழிப் பாடகியானாலும் இதுபோல் சொல்விளங்காமல் போவதைக் காண்கிறேன் .. இல்லை .. கேட்கிறேன்!
நன்றி.
உ.த.,
ReplyDelete//எனக்கு முருகனோட கோவணமே போதும்"னுட்டேன்..//
அப்போ .. அவருக்கு ..?? :)
நன்றி துளசி. பெரிய லிஸ்டே இருக்கும்போலும்.
ReplyDeleteராஜ நடராஜன்,
ReplyDelete//தமிழ் திரை இசைப் பாடல்களின் பொற்காலமா இது!//
அது ...
ஆனா இதைச் சொல்றதைப் பார்த்தா உங்கள் வயது 45-50 இருக்கணுமே!
அவன் & அவள்,
ReplyDelete//ஒருவேளை தமிழ் தெரியாத பாடகிகள் அதிகமோ என்னவோ. //
இல்லையென்றே நினைக்கிறேன். இது மொழியால் வரும் பிரச்சனையாகத் தெரியவில்லை. குரலில் உச்சரிப்பில் உள்ள clarity தொடர்பானது. அது ஏன் ஆண்களிடம் கொஞ்சம் better ஆக இருக்கிறது என்பதுதான் என் ஐயம்.
சின்னச் சின்னதாக கேக்கிறேன்னு பெரிய பெரியக் கேள்வியா கேட்டு வைச்சிருக்கீங்க. ஓரளவிற்கு எல்லாத்துக்கும் பதிலும் கிடைச்ச மாதிரி இருக்கு.
ReplyDeleteநானும் இப்பத்தான் போன வாரத்தில் M.R.ராதா பேச்சுக் கேட்டேன் 35-40 வருஷத்துக்கு முன்னாடியே எப்படி நம்ம சினிமாக் காரங்களை தலையில தூக்கி வைச்சிட்டு ஆடினதை விளாசித் தள்ளியிருக்கார்னு கேக்கும் பொழுது ஆச்சர்யமா இருந்துச்சு. ஆனா, அதே நேரத்தில நிலமை இன்னும் ஒரு படி கூட முன்னேறலைன்னு பார்க்கும் பொழுது வருத்தமாத்தான் இருக்கு ...
தெக்ஸ்,
ReplyDeleteஉங்க பிள்ளையும் இதே வசனத்தைச் சொன்னாலும் சொல்ல வேண்டியதிருக்கும்.
:(
//முந்தியெல்லாம் இவ்வளவு கிடையாதே .. ஏன் இப்போவெல்லாம் என் கிட்ட பணம் கொட்டிக் கிடக்குது; அத உனக்குத் தந்தே ஆகணும்; உன் விவரத்தை ரகசியமா அனுப்பு அப்டின்றமாதிரி மயில்கள் தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கு. கோஃபி அன்னன் பெயர்லகூட ஒண்ணு வந்துச்சி. ஒருவேளை ஏமார்ரவங்க நிறைய ஆகிட்டாங்களோ? இந்த மாதிரி மயில்கள் வர்ரது (அதாவது, ரொம்ப பேர் ஈனா வானாக்கள் இங்க அதிகம்னு நினச்சி..)நம்ம ஊர்ல மட்டும் நிறையவா இல்ல, இது ஒரு அகில உலக நிகழ்வா?
ReplyDelete//
தருமி ஐயா,
இந்த உரலில் உள்ள தகவலை படித்து செல்வந்தர் ஆகும் வழியைப் பாருங்கள்!
http://en.wikipedia.org/wiki/Advance_fee_fraud
தருமி,
ReplyDeleteஅதுக்குத்தான் இப்போ எல்லாம் சினிமாப் பாட்டுக்கள் எல்லாம் கேட்கறதே இல்லை.
'அதுக்கு' எங்க வீட்டில் பேரு முக்கல் மேன். வெளியில் போகும் பொழுது கொஞ்சம் கஷ்டமாக இருந்தால் 'இதோட' பாட்டுக்களைப் பாடினால் நல்லாப் போகும்! :))
இங்க எல்லாம் walkway அப்படின்னு போடறாங்க. இன்னும் பல பேர் இருக்கு. விக்கி சுட்டி கூட வந்தாச்சு!
எப்பவும் இருக்கிறதுதான். போஸ்ட் செலவு இல்லை என்பதால் இப்போ வர வேகம் அதிகமாயிடிச்சு. உங்க காலத்தில் சும்மா ஒரு கணக்கை ஒண்ணு போட்டு பரிசு வென்றிருக்கிறீர்கள் அப்படி வி.பி.பியில் செங்கல் வருமே. அதோட பரிமாண வளர்ச்சிதான் இது.
எதாவது நாடக வசனமா இருக்கும். நம்ம ஊரில்தான் அவைகள் சாகா வரம் பெற்று இருக்குமே!
'முந்தியெல்லாம் இவ்வளவு கிடையாதே .. ஏன் இப்போவெல்லாம் என் கிட்ட பணம் கொட்டிக் கிடக்குது; அத உனக்குத் தந்தே ஆகணும்; உன் விவரத்தை ரகசியமா அனுப்பு அப்டின்றமாதிரி மயில்கள் தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கு. கோஃபி அன்னன் பெயர்லகூட ஒண்ணு வந்துச்சி. ஒருவேளை ஏமார்ரவங்க நிறைய ஆகிட்டாங்களோ? இந்த மாதிரி மயில்கள் வர்ரது (அதாவது, ரொம்ப பேர் ஈனா வானாக்கள் இங்க அதிகம்னு நினச்சி..)நம்ம ஊர்ல மட்டும் நிறையவா இல்ல, இது ஒரு அகில உலக நிகழ்வா?'
ReplyDelete.தருமி சார்..இதன் பெயர் Nigerian Fraud 419 scam கூகுலில் தட்டிப் பாருங்கள்..ஆயிரம் கதைகள் வரும். இது உலகம் முழுவதும் உலா வரும் பிரச்சனையென்றாலும் நாம் இந்தியர்கள் அல்லவா..சுலபத்தில் வரும் பணத்தை விடமுடியுமா? ..ஹி..ஹி..ஹி!
உதித் நாராயணன் ஒரு அருமையான பாடகர்.
ReplyDeleteஅவர் ஹிந்தியில் பாடிய பாட்டெல்லாம், செம சூப்பர் ரகம். papa kehthehein, thuje dhekha tho, மாதிரி பாட்டெல்லாம் நாள் பூரா கேக்கலாம்.
அவரை அது இதுன்னு சொன்னது தப்பு. :(
அவருக்கு பாட வராத மேட்டரை, பாட வைக்கராங்களே நம்ம இசை மேதைகள் (கார்த்திக் ராஜா ஆரம்பிச்சு வச்சார்னு நெனைக்கறேன்), அதுகளுக்குதான் மரியாதை கொறைக்கணும் ;)
////உதித் நாராயணனை பற்றி சரியாக சொன்னிங்க,
ReplyDeleteஅவனும் அவன் தமிழ் உச்சரிப்பும்///
ஆகாககாகா.. சினிமாக்காரனுக்கு மட்டும் ஏனுங்க மரியாதை தரதே இல்ல நாம?
ஒரு ஹிந்திக்காரன் பதிவில், நம்ம SPBய யாராவது இப்படி அவன் இவன்னு எழுதியிருந்தா, ரத்தக் கொதிப்பு நமக்கு வர மாதிரி, உதித் ரசிகனுக்கு, இந்த அவமரியாதைகள் ரத்தக் கொதிப்பை ஏற்படுத்தும் ;(
//நல்ல வாத்தியாராக ஆகியிருக்க வேண்டிய ஆள் !//
ReplyDeleteஅம்மா ,அப்பா இருவரும் வாத்தியார் என்பதால் 'வாத்தியார் பிள்ளை மக்கு' விதிப்படி இப்படி ஆகி விட்டேன். :)
indian, ச.மனோகர்,
ReplyDeleteபடிச்சி தெளிஞ்சிட்டேங்க...
நன்றி
கொத்ஸ்,
ReplyDeleteஅந்தக் காலத்தில கணக்கும் போடலை .. செங்கல்லும் வரவில்லை. போட்டின்னாலே பதரிருவமில்ல !!
சர்வேசன்,
ReplyDelete'அது' வெறுப்புலேயும், இயலாமையிலும் வந்த(அ)து!
//அந்தவகை தானியங்கிகளுக்கு ஆங்கிலத்தில் என்ன பேருங்க?//
ReplyDeleteநகருலேட்டர்
//நம்ம ஊர்ல மட்டும் நிறையவா இல்ல, இது ஒரு அகில உலக நிகழ்வா?//
இவைகளை தானாக அனுப்ப ஒரு வழி இருக்கிறது,
யாகூ அல்லது கூகுள் குரூப்பில் சேர்ந்து அதற்கு ஒரு மெயில் அனுப்பினால் அது அதிலிருக்கும் உறுப்பினர்களுக்கு அனுப்பிவிடும், இது உலகளாவிய நிலை தான்
பரிகாரம்:எந்த குரூப்பிலும் சேர வேண்டாம்
Sam G Sir,
ReplyDeleteThis is your student and got the blog details from Dr. Slas. Awesome to see your writtings and keep up the good work. Feeling nostalgic on reading posts about Madurai.
-Vijay
//உ.த.,
ReplyDelete//எனக்கு முருகனோட கோவணமே போதும்"னுட்டேன்..//
அப்போ .. அவருக்கு ..?? :)//
கொல்றீங்களே! நல்லவேளை பக்கத்துல யாரும் இல்லை, இல்லாட்டி நான் சிரிக்கிறதப் பாத்துக் கிறுக்குப்புடிச்சிருச்சோம்பான்.
வாலு,
ReplyDeleteநல்லா இருக்கே அது!
vijay,
ReplyDeleteதனிமடலிலாவது கொஞ்சம் முகம் காட்டி - எந்த ஆண்டு, மற்ற வகுப்புத்தோழர்கள் யார் யார் - என்று கூறினால் நன்றாயிருக்கும்.
வந்தமைக்கு நன்றி.
காசி,
ReplyDelete:)))))
//****உதித் நாராயணன் ஒரு அருமையான பாடகர்.
ReplyDeleteஅவர் ஹிந்தியில் பாடிய பாட்டெல்லாம், செம சூப்பர் ரகம். papa kehthehein, thuje dhekha tho, மாதிரி பாட்டெல்லாம் நாள் பூரா கேக்கலாம்.
அவரை அது இதுன்னு சொன்னது தப்பு.
****//
அவரு ஹிந்தியில என்ன கிழிச்சாருனு/சாதிச்சாருனு எங்களுக்கு முக்கியமல்ல தமிழ் வார்தைகளை ஏன்டா கொல்லறனுதான் கேட்கிறேன்?
//****papa kehthehein, thuje dhekha tho, மாதிரி பாட்டெல்லாம் நாள் பூரா கேக்கலாம் ****//
ஏன்டா இப்படி ஹிந்திகாரன்க பின்னாடி நாய் மாதிரி அலைறிங்க
அவன்களில் யாராவது ஒருத்தன் இப்படி தமிழ் பாட்ட உயர்த்தி எழுதுவானா?
அவன் மொழிக்கு(ஹிந்தி) டாப்பு,
நம்ம மொழிக்கு(தமிழ்) ஆப்பா
இத எல்லாம் பார்க்கும்போது தமிழர்களுக்கு நிறைய தாழ்வுமனப்பாமை இருக்கிறது என்று தெரிகிறது, தன்னை அறியாமல் தன்னை தாழ்தவன் என்றும் வடநாட்டவனை உயர்ந்தவன் என்று எண்ணுகிறான், இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஹிந்தியின் தாக்கத்தை தமிழில் பரவலாக காணமுடிகிறது
அதிலும் குறிப்பாக சென்னையில் காணமுடிகிறது, எ-டு தமிழ் சேனல்களில், தமிழ் FMகளில் ஹிந்தி பாடல் ஒலிக்கின்றன
தமிழ் பாடலில் ஹிந்தி வார்தைகளை காணமுடிகிறது
இதுபோல் ஹிந்தியிலும் தமிழ் காணமுடிந்தால்
மேல சொன்னதை என்னால் பொருத்துகொள்ள முடியும்
நான் எந்த மொழிக்கும் எதிரானவன் அல்ல அதே சமயத்தில் ஹிந்தியை உயர்த்தியும் தமிழை தாழ்த்தியும் பேசுவது வர போகும் தமிழ் சந்ததிகளுக்கு பெரும் நெருக்கடி கொடுக்கும்
அறிவியலில் நம் தாய்மொழி தமிழ் சற்று பின்னோக்கி இருப்பதால் நாம் ஆங்கிலத்தை பயன்படுத்துகிறோம் மற்றபடி தமிழ்மொழி எந்த மொழியைவிடவும் சிறந்த மொழியே
நல்ல இசையை எந்த மொழியிலும் கேட்கலாம் என்று நிங்கள்
சொல்லலாம், இந்த ஈன வசனம் எல்லாம் அவன் வியாபாரத்தை பெருக்குவத்தற்காக சொல்றது, இப்படி சொல்பவனிடம் தமிழில் எத்தனை பாடல் தெரியும் என்று கேளுங்கள் ஒரு பாடல் கூட தெரியாது என்பான் ஏனென்றால் இந்த இசைக்கு மொழி கிடையாது என்ற கப்ஸசா வசனம் வடநாட்டவர்களுக்கு பொருந்தாது, இந்தியாவில் உள்ள பிற மொழிகளுக்குதான் பொருந்தும்
ஹிந்தியை அடுத்து அவர்கள் முன்னுரிமை கொடுப்பது ஆங்கில பாடல்களுக்கே,
அவ்வை சொன்னதுபோல,
மதியாதார் வாசல் மிதியாதே என்பதே என் வாதம்
வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்!(இப்படி முழங்க சந்தோஷம் ஆனால் உள்ளுர ஏனோ சந்தேகம்)
துரை,
ReplyDelete////ஏன்டா இப்படி ஹிந்திகாரன்க பின்னாடி நாய் மாதிரி அலைறிங்க
அவன்களில் யாராவது ஒருத்தன் இப்படி தமிழ் பாட்ட உயர்த்தி எழுதுவானா?
அவன் மொழிக்கு(ஹிந்தி) டாப்பு,
நம்ம மொழிக்கு(தமிழ்) ஆப்பா
இத எல்லாம் பார்க்கும்போது தமிழர்களுக்கு நிறைய தாழ்வுமனப்பாமை இருக்கிறது என்று தெரிகிறது//////
:) ஹிந்தி பாட்டு, அருமையான பாட்டு ரெண்டு சொன்னா, அவன் பின்னாடி நாய் மாதிரி அலையரோம்னு ஆயிடுமா? என்ன கொடுமைங்க இது?
இசைக்கு மொழி கிடையாதுங்கரது நூத்துக்கு நூறு உண்மை.
உதித் தமில் பாடி கொல ப்ண்றாருன்னா, தப்பு அவருடையது கிடையாது. அவர இட்டாந்து பாட வைக்கர நம்ம ஊரு ராசாக்களால் வர ப்ரச்சனை அது.
அதுமட்டுமில்ல, ஐலசா ஐலசா ஐஸ் கட்டி தொட்டிச்சா பாட்டை, ஹிட் ஆக்கிக் கொடுத்த நம்மில் பலரும் குற்றவாளிகள் தான்.
அவரு என்னங்க பண்ணுவாரு? காசு கொடுத்து கூப்பிடறாங்க, அவரும் முடிஞ்வரைக்கும் முக்கி நல்லாவே பாடறாரு :)
////ஹிந்தியை அடுத்து அவர்கள் முன்னுரிமை கொடுப்பது ஆங்கில பாடல்களுக்கே,
////
அவன் எதுக்கு வேணா முன்னுரிமை கொடுக்கட்டும். அவன் தமிழ், தெலுங்கு, மலையாளம் எல்லாம் கேக்கலண்ணா நட்டம் அவனுக்கு.
அமெரிக்கால, லேட்டின், ஸ்பானிஷ் பாட்டெல்லாம் ரொம்ப ப்ரபல்யம். வேர பாஷை பாட்டுன்னூ ஒதுக்கி வைக்கரதெல்லாம் இல்லை.
வெறும் மொழி அடிப்படையிலேயே, ஆளுங்கள இப்படி பிரிச்சு பாக்க நெனைக்கர உங்கள் காழ்ப்புணர்ச்சி நெனச்சா சோகமா இருக்கு தொரை.
எல்லா இசையும் அனுபவிக்கணும்.
துரை,
ReplyDelete//ஏன்டா இப்படி ஹிந்திகாரன்க பின்னாடி நாய் மாதிரி அலைறிங்க//
இந்த வார்த்தைகளை நீங்கள் தவிர்த்திருக்க வேண்டும்.
என்பதிவில் இப்படிப்பட்ட நாகரிகக்குறைவான வார்த்தைகள் வந்தமைக்காகவும்,அதை நான் அப்படியே திருத்தாமல் அனுமதித்தற்காகவும் வருந்துகிறேன்.
சர்வேசன்,
ReplyDeleteமேலே சொன்ன அந்த வார்த்தைகளைத் திருத்திவிட்டுத்தான் படியேற்ற நினைத்தேன். அப்படி திருத்துவதைச் செய்து நாளாகிவிட்டபடியால் எப்படி செய்வதென்பது மறந்து விட்டது. இது ஒரு 'நொண்டிச் சாக்கு'தான்.
மன்னிக்கவும்.
அந்த சொற்களைக் கண்டுகொள்ளாமல் பதில் சொன்ன உங்கள் பெருந்தன்மைக்கு என் பாராட்டுக்கள்.
சர்வேசன்,
ReplyDelete//ஏன் அதைப் பாடவைத்து நம்ம கழுத்தை அறுக்கிறாங்க எல்லோருமா சேர்ந்து. //
என் கோபமும் நம் இசை அமைப்பாளர்கள் மேல்தான்.
//சம தளத்தில் தானாக நகர்ந்து நம்மை 'முன்னேற்றுகிறதே' அந்தவகை தானியங்கிகளுக்கு ஆங்கிலத்தில் என்ன பேருங்க?//
ReplyDeletetravelator!!!!
விஜய் ஆனந்த்,
ReplyDeleteA moving walkway,
moving sidewalk (in the US), moving pavement (elsewhere), walkalator,
travelator,
slidewalk or
moveator
இதில் எனக்கு slidewalk தான் பிடிக்குதுங்க.
Sir, The remix songs are another new torture devised by music directors taking the easy way out.
ReplyDelete'Madai Thiranthu' the rage during my American College days has been murdered in its rao version.
//***
ReplyDeleteஇசைக்கு மொழி கிடையாதுங்கரது நூத்துக்கு நூறு உண்மை.
***//
நூற்றுக்கு நூறு பொய்
எப்படி உயிரும் உடம்பும் முக்கியமோ அதுபோலதான்
மொழியும் இசையும்
அப்புறம்
//ஏன்டா இப்படி ஹிந்திகாரன்க பின்னாடி நாய் மாதிரி அலைறிங்க//
இதற்கு நான் மிக தாழ்மையுடன் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்
ஏனோ தெரியல தமிழ உதாசினபடுத்தி ஹிந்திய உயர்த்தி பேசினா என்னால தாங்க முடியல, இதை ஏன் சொல்கிறேன் என்றால் இப்பவெல்லாம் நம்ம தமிழ் மக்கள் ஹிந்தி பாட்டை கேட்பதற்கு இசையின் பிரியத்தலால் அல்ல ஒரு மோகம் தன்னை ஒரு மேல்வர்கமாக காட்டிகொள்ளவே,
அப்படியே உனக்கு பிடித்து இருந்தாலும் அதை உன்னுடன் வைத்துகொள்
//******
////ஹிந்தியை அடுத்து அவர்கள் முன்னுரிமை கொடுப்பது ஆங்கில பாடல்களுக்கே,
////
அவன் எதுக்கு வேணா முன்னுரிமை கொடுக்கட்டும். அவன் தமிழ், தெலுங்கு, மலையாளம் எல்லாம் கேக்கலண்ணா நட்டம் அவனுக்கு.
***//
இது அவன் நம் மொழியை மதிக்கவில்லை என்று காட்டுகிறது,
அப்பறம் அவனுக்கு நட்டம் ஒன்றும் அல்ல, ஏன் என்றால் ஹிந்தி பாடலை நம்மவர்கள் கேட்கும்போது அவன் மொழி விரிவடைகிறது
அதன்பால் வியாபாரமும் அவர்களுக்கு பெருகுகிறது, இதனால் அவன் மொழி மேலும் மேலும் வலுவடைகிறது, நாளடைவில் உன் தமிழ்மொழி மன்னிக்கனும் நம் தமிழ்மொழி நலிந்துவிடும்
இதற்கு உதாரணம் கன்னடம், மராத்தி, பெங்காளி, ஒரியா ...
சிலசமயம் நானே தமிழ்மொழியை திட்டியது உண்டு
"ஏன்டா தமிழ்(மொழி) இப்படி இருக்க உன்னை தமிழ்நாட்டிலும் எவனுக்கும் பிடிப்பதில்லை, வேறு மாநிலத்திலும் உன்னை மதிப்பதில்லை"
செத்துப்போடா அப்படினாலும் சாகமாடேங்குது, குற்றுயிரும், குலை உயிருமாய் கிடக்கிறது, எப்பதான் இந்த மொழிக்கு சாவுவருமோ
துரை,
ReplyDeleteஉங்கள் எண்ணம் புரிகிறது. ஆனாலும் சில மாற்றுக் கருத்துக்கள்:
நான் 65 வருடத்திய இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டிருந்த போதும் அதன் பிறகு சில ஆண்டுகளுக்கு இந்திப் பாடல்களை விரும்பிக் கேட்பதும் இந்திப் படங்களைப் பார்ப்பதும் வழக்கமாகத்தானிருந்தது. சங்கர்-ஜெய்கிஷன் இசை இனிப்பாயிருந்தது. 'பார்ரா, எத்தனை வயலினை சேத்து வாசிக்க வச்சிருக்கான் பார்!' என்று பரவசப்பட்டதுமுண்டு. மெல்லிசை மன்னரின் பாடல்களே பின்னாளில் இந்திப் பாடல்கள் மேலிருந்த மோகத்தை நீக்கியது.
மொழி சுத்தமாகப் புரியாவிட்டாலும் அந்த இசை ஈர்த்தது உண்மை. அந்த இசைக்கு ஈடுகொடுக்க இங்கேயே ஓர் ஆள் வந்ததும் தமிழ்ப்பாடல்களே போதுமானதாக ஆனது.
இப்போதோ ரஹ்மானுக்குப் பிறகு தமிழ்ப்பாடல்களை அங்கே காப்பி அடிப்பதும் உள்ளதுதானே.
ஆக, இசையின் மேன்மையோ, காலத்துக்கேற்ற வளர்ச்சியோ மட்டுமே நம் ரசனைக்குரிய விஷயங்கள்; மொழி இரண்டாம் பட்சம் என்றுதான் நினைக்கிறேன்.
உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.
//ஆனால் அதோடு விடாம இன்னும் ஏன் அதைப் பாடவைத்து நம்ம கழுத்தை அறுக்கிறாங்க எல்லோருமா சேர்ந்து. அப்படி என்ன நம் தமிழ் இசை இயக்குனர்களுக்கு நம்மேல் கோவம்; 'அது' மேல் அப்படி ஒரு பாசம்?
ReplyDelete//
இதை விட என்ன கொடுமைன்னா சார்...பாட்டுக்குப் பாட்டு மாதிரியான மேடைப் பாடல் நிகழ்ச்சிகளில் உதித்தின் பாடல்களைப் பாடுபவர்கள் அவர் எப்படி கஷ்டப்பட்டு முக்கிக் கடித்து துப்பி பாடியிருக்கிறாரோ அதே மாதிரி தான் பாடுகிறார்கள். அவர் அப்படி பாடுன்னா இவங்களும் அப்படியே பாடனுமா என்ன? இந்த விஷயத்துல மொழியைச் சாவடிக்கக் காரணமாருக்கற இசையமைப்பாளர்களைத் தான் குத்தம் சொல்லனும். யாரடி நீ மோகினி படத்தில் சில பாடல்களின் மெட்டு நல்லாருக்கு, வார்த்தைகளைக் கேட்டாத் தான் கழுத்தை நெரிக்க(ச்சிக்க)னும் போல இருக்கு.
:(
iyya perusu ongala yaroo pattu kekka sonnathu, remotella vera channel pakka vendiyathana
ReplyDelete//ஏன்டா இப்படி ஹிந்திகாரன்க பின்னாடி நாய் மாதிரி அலைறிங்க
ReplyDeleteஅவன்களில் யாராவது ஒருத்தன் இப்படி தமிழ் பாட்ட உயர்த்தி எழுதுவானா?
அவன் மொழிக்கு(ஹிந்தி) டாப்பு,
நம்ம மொழிக்கு(தமிழ்) ஆப்பா//
அவர்கள் திரைப்பாடல் வரிகளை உருது மொழியிடம் அடக்கு வைத்துவிட்டார்கள். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவரிடம் போய் அப்பாடல் வரிகளின் பொருளைக் கேட்டுப் பாருங்கள். புரியாமல் முழிப்பார்கள்.
//சம தளத்தில் தானாக நகர்ந்து நம்மை 'முன்னேற்றுகிறதே' அந்தவகை தானியங்கிகளுக்கு ஆங்கிலத்தில் என்ன பேருங்க?//
ReplyDeleteTranscalator.
//பத்மினியின் உதட்டைச் செல்லமாக பிதுக்கியெடுக்கும் சிவாஜியின் சிலுமிஷத்தை கண்முன்னே கொண்டு வரும்..//
ReplyDeleteIdhu Rasanai!
முதன் முதலாக உங்கள் தளத்துக்கு வருகிறேன் ஐயா.
ReplyDeleteஎன்னமோ, படிக்கும்போது உங்களை ரொம்பவும் பிடித்துப் போகிறது.
இயல்பான, நட்பான நடை.
பதிவில் மட்டுமல்ல, பின்னூட்டங்களிலும்.
நமஸ்காரங்கள்!
கைப்புள்ள,
ReplyDeleteநீங்க சொல்றமாதிரி மேடைப் பாடகர்கள் எப்போதுமே ஒரிஜினல் பாடகர்களின் குரலில்தான் பாடவேண்டுமென்றுதான் காலம் காலமாய் நாம் எதிர்பார்க்கிறோம். அவரவர் சொந்தக் குரலில் ஒரு S.P.B.பாட்டைப் பாடினால் ரசிகர்கள் நாம் ஏற்றுக் கொள்வதில்லையே... அதனால்தான் இந்த "ஈயடிச்சான்" வேலை!
மருத புல்லட் பாண்டி,
ReplyDeleteபாக்க வேணாம்னுட்டுதான கேக்கிறோம். அதுவும் வேணான்றியே சிறுசு!
Indian,
ReplyDeleteஅது வேற அப்படியா விஷயம்!?
கடப்ஸ்,
ReplyDelete//Idhu Rasanai!//
அதான .. !
பரிசல்காரன்,
ReplyDeleteவரவேண்டும். உங்க பதிவில் சொல்லியிருகிறது மாதிரி அப்பப்பவாவது வந்து போங்க.
நன்றி - வேறென்ன சொல்ல..
//'முன்னேற்றுகிறதே' அந்தவகை தானியங்கிகளுக்கு ஆங்கிலத்தில் என்ன பேருங்க?//
ReplyDeleteconveyor
//அமைச்சரே! மாதம் மும்மாரி மழை பெய்கிறதா?//
ReplyDeleteஒரு வேளை அரசன் வேறு நாடுகளுக்கு திக் விஜயம் சென்று திரும்பும் போது அப்படி கேட்கலாம் அல்லவா
-
அல்லது அந்தப்புறத்தை விட்டு வெளியே வர வில்லை என்றாலும் கூட கேட்கலாம்
நான் சொன்ன பதிலும் சரிதான் போலிருக்கிறது
ReplyDeletehttp://en.wikipedia.org/wiki/Moving_walkway
//A moving walkway, moving sidewalk (in the US), moving pavement (elsewhere), walkalator, travelator, slidewalk or moveator is a slow conveyor belt that transports people horizontally or on an incline in a similar manner to an escalator.[1] In both cases, passengers can walk or stand. The walkways are often installed in pairs, one for each direction.//
ப்ருனோ,
ReplyDeleteமூன்றாவது பின்னூட்டம் - ஜோவுடையது - பாருங்க.
நீங்க சொன்ன மாதிரி ராசா அந்தப்புரத்திலேயே & மப்புலேயே இருந்திருப்பார் போலும்!!