*
*
ஒரு நிகழ்வு - ஒரு செய்திப்படம் - ஒரு நூல்... 1
ஒரு நிகழ்வு - ஒரு செய்திப்படம் - ஒரு நூல்... 2
ஒரு நூல்
முந்திய பதிவுகள்; 1 .... 2
இத்தொடர் பதிவுகளின் முதல் பதிவில் பெரும்பான்மையான இந்து மக்களின் மத நம்பிக்கைகளுக்காக இஸ்லாமியர்கள் விட்டுக் கொடுத்திருக்கலாமே என்று நான் நினைத்ததைச் சொல்லியிருந்தேன்.
இரண்டாவது பதிவில் ஆனந்த் பட்வர்த்தனின் செய்திப் படத்தின் மூலம் ஆதிக்க சாதியினர் சிலரின் உந்துதலாலேயே இந்நிகழ்வு நடந்தேயன்றி பெரும்பான்மையான இந்துக்கள் மசூதியை இடிப்பதை விரும்பாதவர்களே என்று அறிந்து கொண்டேன்.
மூன்றாவது பதிவில் இதையெல்லாம் புரட்டிப் போட்டது காஞ்சா அய்லய்யாவின் நான் ஏன் இந்து அல்ல என்ற புத்தகம். அந்தப் புத்தகத்தில் நான் கண்ட செய்திகளைப் பகிர்வதே இப்பதிவு.
சண்டாளர்கள் -- மிலேச்சர்கள் -- தீண்டத்தகாதவர்கள் -- ஹரிஜன்கள் -- சூத்திரர்கள் -- ஆதி சூத்திரர்கள் -- அட்டவணை சாதியினர் -- ஒடுக்கப் பட்ட சாதியினர் (அம்பேத்கார்) -- இறுதியாக, தலித்துகள்
தாழ்த்தப்பட்ட குடியினருக்குத்தான் எத்தனை எத்தனை பெயர் மாற்றங்கள். பெயரை மாற்றி வைத்தாவது ஒரு 'மரியாதையை' பெயரளவிலாவது கொடுத்த விட முடியுமா என்றுதான் பலரும் பல கால கட்டங்களில் முயன்றார்கள். இந்த முயற்சிகளில் தாழ்த்தப்பட்டோரையும், பிற்படுத்தப் பட்டோரையும் ஒன்று சேரவிடாது தனித்து நிற்க வைக்கும் முயற்சிகளைப் பற்றியும் அய்லய்யா குறிப்பிடுகிறார். இந்த முயற்சியின் முழுவெற்றிதான் இன்று தலித்துகளும், தேவர்களும், தலித்துகளும் வன்னியர்களூம் அது சட்டக் கல்லூரியாக இருக்கட்டும், பஞ்சாயத்துத் தேர்தல்களாக இருக்கட்டும், கோவில்விழாக்களாக இருக்கட்டும் தமிழகமெங்கும் அடித்துக் கொண்டு நிற்கிறார்கள்.
இதைத்தான் அய்லய்யா "பல சமூகவியல் அறிஞர்கள் அட்டவணை சாதியினர்க்கு வெளியில் இருப்பவர்களைச் சாதி இந்துக்கள் என்று குறிப்பிட்டார்கள். இந்தச் சொல்லாக்கத்தில் பிற்பட்டவர்களையும் இணைக்கிற தந்திரம் உள்ளது. அன்றாட வாழ்க்கையில் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரும் தாழ்த்தப்பட்ட சாதியினரைப் போல்வே மேல்சாதியினரால் ஒடுக்கப் பட்டவர்களாகவே உள்ளனர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இந்து அமைப்பிற்கு உட்பட்டவர்களாக இருந்த போதிலும், அங்கே சமத்துவமில்லை. எனவே சாதி இந்து என்கிற சொல்லையும் நான் நிராகரிக்கிறேன்" என்கிறார்.(pp29)
இந்த நிலையை மாற்ற 1984-ல் திரு. கன்ஷிராம் பகுஜன் சமாஜ் கட்சியினைத் தோற்றுவித்தார். 'பகுஜன்' என்றால் பெரும்பான்மை என்று பொருள். தலித் என்று ஒரு சாராரைத் தனிமைப் படுத்தாமல் பகுஜன் என்பது அட்டவணை சாதியினர், மலைவாழ் மக்கள் இவர்களோடு பிற்படுத்தப்பட்டோரையும் இணைக்கும் விதமாக பகுஜன் - பெரும்பான்மை மக்கள் - என்ற சொல்லாடலைப் பயன்படுத்த ஆரம்பித்தார். எனக்கு இது மிகப் பொருத்தமாகத் தோன்றினாலும் அய்லய்யா தலித்-பகுஜன் என்றே தன் நூலில் பயன்படுத்துகிறார்.
சாதி அடையாளங்களோடுதான் ஒவ்வொரு இந்தியனும் பிறக்கிறான். ஆனால் கல்வியறிவு இல்லாமல் ஏழ்மையில் வாழும் மக்கள் "ஏதாவது ஒரு கடவுளை வணங்கும், ஆலயங்களுக்குச் செல்லும், மத சம்பந்தமான திருவிழாக்களில் கலந்து கொள்ளும் மக்களோடு மக்களாக வாழ்கின்ற போதுதான், அந்த மக்கள் ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் ஆகிறார்கள்". (pp33) சாதி பிறப்போடு ஒட்டி வருகிறது; மதம் வாழ்வியலோடு ஒட்டி வருகிறது.
ப்ராமணீய இந்து மதத்திற்கும் பகுஜன்களின் - அதாவது பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் - மத வழக்கங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாதிருந்ததை, இன்றும் இல்லாதிருப்பதைக் காண முடியும். பின் எப்படி பகுஜன்கள் இந்து மதத்திற்குள் இழுக்கப்பட்டார்கள் அல்லது திணிக்கப்பட்டார்கள்? ஆங்கிலேயர் காலத்தில் நடந்த மக்கட் கணக்கெடுப்பில் இஸ்லாமியர், கிறித்துவர், பார்சிகள், சீக்கியர்கள், புத்தர்கள் என்ற எந்த மதங்களுக்குள்ளும் வராத அனைவருமே இந்துக்கள் என்ற அமைப்புக்குள் திணிக்கப்பட்டார்கள். பகுஜன்களின் மதங்கள் பெரும்பாலும் தம் முன்னோர்களை, சிறு தெய்வங்களைக் கும்பிடும் வழக்கம். அய்லய்யா சொல்வது போல் "நாங்கள் பள்ளிக்குச் செல்கிற வரையில் எங்களுக்கு பிரம்மா, விஷ்ணு, ஈஸ்வரன் ஆகியன பற்றி எதுவுமே தெரியாது. நாங்கள் முதன் முறையாக அவைகளைப் பற்றிக் கேட்டவுடன் அவைகள் எங்களுக்கு அல்லா, இயேசு போன்று புதியதாகத் தோன்றின. புத்தர் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. பிறகுதான் புத்தர் என்பவர் பார்ப்பனர்களுடைய யாகம், பலியிடல் போன்ற சடங்குகளுக்கு எதிராக தலித் பகுஜன்களைத் திரட்டியவர் என்று அறிந்தோம்"(pp40). "எங்கள் வீடுகளில் ஒரு பண்பாடும் பள்ளிகளில் வேறொரு பண்பாடும் இருந்தன"(pp49).
இந்த நூலை வாசித்த பிறகு இந்துக்கள் என்பவர்களே ஒரு சிறுபான்மையர், தலித்-பகுஜன்களே பெரும்பான்மை மக்கள் என்ற முடிவுக்கு வந்தேன். ஆனாலும் இந்தச் சிறுபான்மையர் பெரும்பான்மை மக்களையும் இந்துக்கள் என்ற ஒரு குடைக்கீழ் கொண்டுவந்தது மட்டுமின்றி இந்தக் கட்டுக்கோப்பை சிதையாமல் எடுத்துச் சென்று வருகிறார்கள் என்று புரிந்து கொண்டேன்.
பாபர் மசூதி விவகாரத்திலும் இதைத்தான் ஆனந்த் பட்வர்த்தன் தெளிவாக சில கேள்விகளை கர் சேவாக்களின் முன் வைத்து தெளிவாக்கியுள்ளார். கையில் கட்டையும் திரிசூலமும் ஏந்தி செல்வோர்கள் பலரிடம் கேட்ட கேள்விகள் இந்த உண்மையைத்தான் உரைத்தன. இந்த கட்டுக்கோப்பை மதம் வளர, நாடு முன்னேற பயன்படுத்தினால் மகிழ்ச்சியே. ஆனால் மேடையிலிருந்தும், ரதத்திலிருந்தும் சொல்லும் அழிவுக் காரியங்களைச் செய்து முடிக்க 'வானரப் படையாக' தலித்-பகுஜன்களைப் பயன்படுத்துவதும், இதற்கு இந்து மதம் என்ற கேடயத்தைப் பயன்படுத்தும் போதும்தான் இந்த விபரீதம் புரிகிறது.
இந்த கருத்துக்களை ஏற்கெனவே என் பழைய பதிவொன்றில் பேசி, அதற்கு அதிகமான எதிர்ப்புகளும் மறுப்புகளும் வந்தன. அதைவிட ஏறத்தாழ அதே சமயத்தில் பதிவர் தங்கமணி என்பவர் தன் வலைப்பூவில் இதைப் பற்றி எழுதி காரசாரமான நீண்ட விவாதங்கள் தொடர்ந்து வந்தன. (அப்பதிவிற்கு இங்கு தொடுப்பு கொடுக்க நினைத்துத் தேடினேன்; கிடைக்கவில்லை. யாரேனும் அப்பதிவை சேமித்து வைத்திருந்தால் அதை மீள் பதிவாகவோ, இல்லை நகலை எனக்கோ அனுப்பி வைக்க வேண்டுகிறேன். Please.) இந்தப் பிரச்சனைக்கெதிராக எனக்குத் தோன்றுவதெல்லாம் கிறித்துவத்திற்குக் கிடைத்த மார்ட்டின் லூதர் போல் இங்கும் ஒருவர் வரமாட்டாரா; வந்து, ப்ராமணீய இந்து மதத்திற்கும் தலித்-பகுஜன்கள் பின்பற்றும் நாட்டார் வழக்குகளையும் பிரித்து ஒன்றிலிருந்து ஒன்றை விலக்கி வைக்க மாட்டாரா என்று தோன்றுகிறது.
பி.கு.
நான் பிறப்பினால் கிறித்துவன் என்பதாலேயே, ஏன் நீ இந்து மதத்துக்குள் தலையை நுழைக்கிறாய் என்று கேட்கலாம். அதற்கு என்னிடம் பதிலில்லை. இது ஒரு மிச நரியின் வேலை என்று சொன்னால் ... சிரித்துக் கொள்வேன்.
*
*
*
ஒரு நிகழ்வு - ஒரு செய்திப்படம் - ஒரு நூல்... 1
ஒரு நிகழ்வு - ஒரு செய்திப்படம் - ஒரு நூல்... 2
ஒரு நூல்
முந்திய பதிவுகள்; 1 .... 2
இத்தொடர் பதிவுகளின் முதல் பதிவில் பெரும்பான்மையான இந்து மக்களின் மத நம்பிக்கைகளுக்காக இஸ்லாமியர்கள் விட்டுக் கொடுத்திருக்கலாமே என்று நான் நினைத்ததைச் சொல்லியிருந்தேன்.
இரண்டாவது பதிவில் ஆனந்த் பட்வர்த்தனின் செய்திப் படத்தின் மூலம் ஆதிக்க சாதியினர் சிலரின் உந்துதலாலேயே இந்நிகழ்வு நடந்தேயன்றி பெரும்பான்மையான இந்துக்கள் மசூதியை இடிப்பதை விரும்பாதவர்களே என்று அறிந்து கொண்டேன்.
மூன்றாவது பதிவில் இதையெல்லாம் புரட்டிப் போட்டது காஞ்சா அய்லய்யாவின் நான் ஏன் இந்து அல்ல என்ற புத்தகம். அந்தப் புத்தகத்தில் நான் கண்ட செய்திகளைப் பகிர்வதே இப்பதிவு.
சண்டாளர்கள் -- மிலேச்சர்கள் -- தீண்டத்தகாதவர்கள் -- ஹரிஜன்கள் -- சூத்திரர்கள் -- ஆதி சூத்திரர்கள் -- அட்டவணை சாதியினர் -- ஒடுக்கப் பட்ட சாதியினர் (அம்பேத்கார்) -- இறுதியாக, தலித்துகள்
தாழ்த்தப்பட்ட குடியினருக்குத்தான் எத்தனை எத்தனை பெயர் மாற்றங்கள். பெயரை மாற்றி வைத்தாவது ஒரு 'மரியாதையை' பெயரளவிலாவது கொடுத்த விட முடியுமா என்றுதான் பலரும் பல கால கட்டங்களில் முயன்றார்கள். இந்த முயற்சிகளில் தாழ்த்தப்பட்டோரையும், பிற்படுத்தப் பட்டோரையும் ஒன்று சேரவிடாது தனித்து நிற்க வைக்கும் முயற்சிகளைப் பற்றியும் அய்லய்யா குறிப்பிடுகிறார். இந்த முயற்சியின் முழுவெற்றிதான் இன்று தலித்துகளும், தேவர்களும், தலித்துகளும் வன்னியர்களூம் அது சட்டக் கல்லூரியாக இருக்கட்டும், பஞ்சாயத்துத் தேர்தல்களாக இருக்கட்டும், கோவில்விழாக்களாக இருக்கட்டும் தமிழகமெங்கும் அடித்துக் கொண்டு நிற்கிறார்கள்.
இதைத்தான் அய்லய்யா "பல சமூகவியல் அறிஞர்கள் அட்டவணை சாதியினர்க்கு வெளியில் இருப்பவர்களைச் சாதி இந்துக்கள் என்று குறிப்பிட்டார்கள். இந்தச் சொல்லாக்கத்தில் பிற்பட்டவர்களையும் இணைக்கிற தந்திரம் உள்ளது. அன்றாட வாழ்க்கையில் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரும் தாழ்த்தப்பட்ட சாதியினரைப் போல்வே மேல்சாதியினரால் ஒடுக்கப் பட்டவர்களாகவே உள்ளனர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இந்து அமைப்பிற்கு உட்பட்டவர்களாக இருந்த போதிலும், அங்கே சமத்துவமில்லை. எனவே சாதி இந்து என்கிற சொல்லையும் நான் நிராகரிக்கிறேன்" என்கிறார்.(pp29)
இந்த நிலையை மாற்ற 1984-ல் திரு. கன்ஷிராம் பகுஜன் சமாஜ் கட்சியினைத் தோற்றுவித்தார். 'பகுஜன்' என்றால் பெரும்பான்மை என்று பொருள். தலித் என்று ஒரு சாராரைத் தனிமைப் படுத்தாமல் பகுஜன் என்பது அட்டவணை சாதியினர், மலைவாழ் மக்கள் இவர்களோடு பிற்படுத்தப்பட்டோரையும் இணைக்கும் விதமாக பகுஜன் - பெரும்பான்மை மக்கள் - என்ற சொல்லாடலைப் பயன்படுத்த ஆரம்பித்தார். எனக்கு இது மிகப் பொருத்தமாகத் தோன்றினாலும் அய்லய்யா தலித்-பகுஜன் என்றே தன் நூலில் பயன்படுத்துகிறார்.
சாதி அடையாளங்களோடுதான் ஒவ்வொரு இந்தியனும் பிறக்கிறான். ஆனால் கல்வியறிவு இல்லாமல் ஏழ்மையில் வாழும் மக்கள் "ஏதாவது ஒரு கடவுளை வணங்கும், ஆலயங்களுக்குச் செல்லும், மத சம்பந்தமான திருவிழாக்களில் கலந்து கொள்ளும் மக்களோடு மக்களாக வாழ்கின்ற போதுதான், அந்த மக்கள் ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் ஆகிறார்கள்". (pp33) சாதி பிறப்போடு ஒட்டி வருகிறது; மதம் வாழ்வியலோடு ஒட்டி வருகிறது.
ப்ராமணீய இந்து மதத்திற்கும் பகுஜன்களின் - அதாவது பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் - மத வழக்கங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாதிருந்ததை, இன்றும் இல்லாதிருப்பதைக் காண முடியும். பின் எப்படி பகுஜன்கள் இந்து மதத்திற்குள் இழுக்கப்பட்டார்கள் அல்லது திணிக்கப்பட்டார்கள்? ஆங்கிலேயர் காலத்தில் நடந்த மக்கட் கணக்கெடுப்பில் இஸ்லாமியர், கிறித்துவர், பார்சிகள், சீக்கியர்கள், புத்தர்கள் என்ற எந்த மதங்களுக்குள்ளும் வராத அனைவருமே இந்துக்கள் என்ற அமைப்புக்குள் திணிக்கப்பட்டார்கள். பகுஜன்களின் மதங்கள் பெரும்பாலும் தம் முன்னோர்களை, சிறு தெய்வங்களைக் கும்பிடும் வழக்கம். அய்லய்யா சொல்வது போல் "நாங்கள் பள்ளிக்குச் செல்கிற வரையில் எங்களுக்கு பிரம்மா, விஷ்ணு, ஈஸ்வரன் ஆகியன பற்றி எதுவுமே தெரியாது. நாங்கள் முதன் முறையாக அவைகளைப் பற்றிக் கேட்டவுடன் அவைகள் எங்களுக்கு அல்லா, இயேசு போன்று புதியதாகத் தோன்றின. புத்தர் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. பிறகுதான் புத்தர் என்பவர் பார்ப்பனர்களுடைய யாகம், பலியிடல் போன்ற சடங்குகளுக்கு எதிராக தலித் பகுஜன்களைத் திரட்டியவர் என்று அறிந்தோம்"(pp40). "எங்கள் வீடுகளில் ஒரு பண்பாடும் பள்ளிகளில் வேறொரு பண்பாடும் இருந்தன"(pp49).
இந்த நூலை வாசித்த பிறகு இந்துக்கள் என்பவர்களே ஒரு சிறுபான்மையர், தலித்-பகுஜன்களே பெரும்பான்மை மக்கள் என்ற முடிவுக்கு வந்தேன். ஆனாலும் இந்தச் சிறுபான்மையர் பெரும்பான்மை மக்களையும் இந்துக்கள் என்ற ஒரு குடைக்கீழ் கொண்டுவந்தது மட்டுமின்றி இந்தக் கட்டுக்கோப்பை சிதையாமல் எடுத்துச் சென்று வருகிறார்கள் என்று புரிந்து கொண்டேன்.
பாபர் மசூதி விவகாரத்திலும் இதைத்தான் ஆனந்த் பட்வர்த்தன் தெளிவாக சில கேள்விகளை கர் சேவாக்களின் முன் வைத்து தெளிவாக்கியுள்ளார். கையில் கட்டையும் திரிசூலமும் ஏந்தி செல்வோர்கள் பலரிடம் கேட்ட கேள்விகள் இந்த உண்மையைத்தான் உரைத்தன. இந்த கட்டுக்கோப்பை மதம் வளர, நாடு முன்னேற பயன்படுத்தினால் மகிழ்ச்சியே. ஆனால் மேடையிலிருந்தும், ரதத்திலிருந்தும் சொல்லும் அழிவுக் காரியங்களைச் செய்து முடிக்க 'வானரப் படையாக' தலித்-பகுஜன்களைப் பயன்படுத்துவதும், இதற்கு இந்து மதம் என்ற கேடயத்தைப் பயன்படுத்தும் போதும்தான் இந்த விபரீதம் புரிகிறது.
இந்த கருத்துக்களை ஏற்கெனவே என் பழைய பதிவொன்றில் பேசி, அதற்கு அதிகமான எதிர்ப்புகளும் மறுப்புகளும் வந்தன. அதைவிட ஏறத்தாழ அதே சமயத்தில் பதிவர் தங்கமணி என்பவர் தன் வலைப்பூவில் இதைப் பற்றி எழுதி காரசாரமான நீண்ட விவாதங்கள் தொடர்ந்து வந்தன. (அப்பதிவிற்கு இங்கு தொடுப்பு கொடுக்க நினைத்துத் தேடினேன்; கிடைக்கவில்லை. யாரேனும் அப்பதிவை சேமித்து வைத்திருந்தால் அதை மீள் பதிவாகவோ, இல்லை நகலை எனக்கோ அனுப்பி வைக்க வேண்டுகிறேன். Please.) இந்தப் பிரச்சனைக்கெதிராக எனக்குத் தோன்றுவதெல்லாம் கிறித்துவத்திற்குக் கிடைத்த மார்ட்டின் லூதர் போல் இங்கும் ஒருவர் வரமாட்டாரா; வந்து, ப்ராமணீய இந்து மதத்திற்கும் தலித்-பகுஜன்கள் பின்பற்றும் நாட்டார் வழக்குகளையும் பிரித்து ஒன்றிலிருந்து ஒன்றை விலக்கி வைக்க மாட்டாரா என்று தோன்றுகிறது.
பி.கு.
நான் பிறப்பினால் கிறித்துவன் என்பதாலேயே, ஏன் நீ இந்து மதத்துக்குள் தலையை நுழைக்கிறாய் என்று கேட்கலாம். அதற்கு என்னிடம் பதிலில்லை. இது ஒரு மிச நரியின் வேலை என்று சொன்னால் ... சிரித்துக் கொள்வேன்.
*
*
//
ReplyDeleteஇரண்டாவது பதிவில் ஆனந்த் பட்வர்த்தனின் செய்திப் படத்தின் மூலம் ஆதிக்க சாதியினர் சிலரின் உந்துதலாலேயே இந்நிகழ்வு நடந்தேயன்றி பெரும்பான்மையான இந்துக்கள் மசூதியை இடிப்பதை விரும்பாதவர்களே என்று அறிந்து கொண்டேன்.
//
தவறு.
பெரும்பான்மை இந்து மக்களுக்கு அங்கே ஏன் இத்தனை பிரச்சனை நடக்கிறது என்ற தெளிவான அறிவு கிடையாது.
ஆகயால் அவர்கள் பிரச்சனையை விரும்பாமல் வேண்டாம் என்கிறார்கள்.
பிரச்சனை வேண்டாம் என்று நினைப்பதும், மசூதி வேண்டாம் என்று நினைப்பதும் இரு வேறு சிந்தனையாகும்.
//
காஞ்சா அய்லய்யாவின் நான் ஏன் இந்து அல்ல என்ற புத்தகம். அந்தப் புத்தகத்தில் நான் கண்ட செய்திகளைப் பகிர்வதே இப்பதிவு.
//
இந்தக் கஞ்சன் ஐலைய்யா ஒரு தலித்தே அல்ல.
தலித்துகளை அடக்கிவைக்கும் ஆதிக்க சாதிக்காரர். அவருக்கு அவர் சாதிக்காரர்களையே மாற்றமுடியவில்லை என்ற கையாலாகாத தனத்தின் வெளிப்பாடு தான் இந்து மதத்தின் மீதான கோபம்.
ஒரு கையாலாகாதவன் பெரிய பெர்ட்
ரண்ட் ரஸ்ஸல் போல் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறான். அதை ஏன் இவ்வளவு தூக்கிப்பிடிக்கிறீர்கள் என்றே தெரியவில்லை.
உண்மையில் பல தலித் மக்கள் வைதீக இந்துக் கடவுள்களைவிட பாட்டன் முப்பாட்டன் போன்றோரை வணங்குகின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அவர்கள் நிச்சயம் ஒரு யூதனை வணங்கவேண்டும் என்றோ, ஒரு அரபு தேசத்து ஆவியை வணங்கவேண்டும் என்றோ நினைப்பதில்லை. அந்த நினைப்பைத் திணிப்பவர்கள் பற்றி உங்கள் பதிவுகளில் எங்காவது சுட்டியுள்ளீர்களா ?
//
இந்தப் பிரச்சனைக்கெதிராக எனக்குத் தோன்றுவதெல்லாம் கிறித்துவத்திற்குக் கிடைத்த மார்ட்டின் லூதர் போல் இங்கும் ஒருவர் வரமாட்டாரா; வந்து, ப்ராமணீய இந்து மதத்திற்கும் தலித்-பகுஜன்கள் பின்பற்றும் நாட்டார் வழக்குகளையும் பிரித்து ஒன்றிலிருந்து ஒன்றை விலக்கி வைக்க மாட்டாரா என்று தோன்றுகிறது.
//
மார்ட்டின் லூதர் கிங் கருப்பர்களை கிருத்தவத்திலிருந்து மதம் மாறிப் போகச் சொல்லவில்லை.
தலித் மக்கள் வணங்கும் நாட்டர் வழிபாட்டை அழிப்பது யார் ?
வைதீக இந்து மதமா ?
பல தலித்துகளை மதம் மாற்றம் செய்ய ஏதுவாக அவர்களுக்கு மூளைச் சலவை செய்யும் கொள்கை கம்யூனிசம்.
பின்னர் அங்கே நாட்டார் வழி அழிந்து ஏசு புகுந்துவிடுவார்.
நீங்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் நாட்டார் வழிபாட்டு முறையை இந்து மதத்திலிருந்து பிரிக்க முடியாது. அப்படி பிரிக்க நினைப்பாவர்களின் உள் நோக்கம் என்ன என்று அனைவருக்கும் தெரியும்.
//ப்ராமணீய இந்து மதத்திற்கும் தலித்-பகுஜன்கள் பின்பற்றும் நாட்டார் வழக்குகளையும் பிரித்து ஒன்றிலிருந்து ஒன்றை விலக்கி வைக்க மாட்டாரா என்று தோன்றுகிறது. //
ReplyDeleteஇவர்கள் பிரிந்து இருக்கும் வரையே அரசியல் நடக்கும் என்று நினைக்கும் அதன்படி செய்து கொண்டு அரசியல்வாதிகள் இருக்கும் வரையும், ஒவ்வொரு தனி மனிதனிடமும் மன மாற்றம் ஏற்படும் வரையும் இது வெறும் கனவாகவே இருக்கும் என்பது தான் யதார்த்தம்
இந்தப பதிவு சற்றே கனமானது. இதில் இருக்கிற பல விஷயங்கள் நிறைய சிந்தனைக்கு உள்ளதாகவும் எனக்கு மிகவும் புதிதான விஷயமாகவும் இருப்பதால் என்னால் இபோது ஆழமாக இதை உள் வாங்க முடியவில்லை. என்னுடைய capacity அவ்வளவு தான். ஆனால் மேல்எழுந்த வாரியாக கிரகித்த நிலையிலேயே கடைசிப் பத்தி கொஞ்சமும் கூட ரியாலிட்டி -க்கு பக்கத்தில் இல்லை என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்ல முடிகிறது. உதாரணத்துக்கு ஒரு நாட்டுப்புற மனிதர் மதுரையில் ஒரு ஸ்டார் ஹோட்டல்க்கு ஒரு பார்ட்டிக்கு வருகிறார். அங்கே பல தரப்பட்ட உணவுகள் டேபிளில் இருக்கிறது. நுடுல்ஸ், ப்ரைட் ரைஸ், வட இந்திய உணவுகள் நம்ம சாதம் குழம்பு என்று இருக்கிறது. மற்ற உணவுகளை இப்போது தான் பார்கிறார். அது அவருக்கு ரொம்பவே புதிது. இரண்டு வகைக்கும் தொடர்பே இல்லது தான் இருக்கிறது. அவர் எல்லாத்தையும் கலந்து கட்டி அடிக்கிறார். அப்போ நாம் இடையிட்டு அய்யா நீங்க சாப்பிட்ட இது சைனீஸ் இது நார்த் இந்தியன் என்று சொன்னால், ஒ இப்படி எல்லாம் பெயர் இருக்கா, சரி விடுங்கோ என்னைப் பொருத்த வரை எல்லாம் சாப்பிடற ஐட்டம் தான் என்பார். வீடு திரும்பியதும் பழைய படி சோறு குழம்புக்குப் போய்டுவார். மீண்டும் மதுரைக்கு வரும் போது வேண்டுமானால் மறுபடி சைனீஸ் ட்ரை பண்ணுவார் இல்லாவிட்டால் வீடுவிடப் போகிறார். அவருக்கு அந்த பெயர் பாகு பாடே தெரிவதே இல்ல என்பது தான் நிஜம்.
ReplyDeleteஅந்த ஹோட்டலின் சூழல், அங்கே உணவருந்துகிறவர்கள் , பரிமாறுபவரின் கேலிப் பார்வை (கிராமத்துக்காரர் என்பதால்) எல்லாம் தெரியம் தான். ஆனால் அவரைப் பொறுத்தவரை மனிதர்களின் அலட்டலுக்கு அந்த "உணவு" என்ன செய்யும் என்று தான் நினைப்பார். தனிமனிதரின் தனிப்பட்ட விருப்பத்தை எல்லாம் சட்டம் மற்றும் சமுதாய தலைவர்களால் மற்ற முடியாது என்றே நான் நினைகிறேன். இன்ன இன்ன ஆட்களுக்கு இது தான் உணவு என்று நம்மால் ஒரு பொது அட்டவனை தர முடியுமா ? முடியம் என்றால் நாட்டார் என்ற வகை படுத்துதலும் சாத்தியம். அப்படி வகைப் படுத்துவதால் என்ன value addition வந்து விடும் ? என் குல தெய்வம் ஒரு கிராம தேவதை, என் சகோதரிக்கு 18 ஆம் படிக் கருப்பர். ஆனால் எங்களுக்கு திருப்பதி முதல் ராகவேந்திரர் வரை இடுபாடு உண்டு. இதில் எப்படி கோடு போடுவது. டிஸ்கி (disclaimer என்பதைத் தானே பதிவர்கள் டிஸ்கி என்கிறார்கள் ?) முன்னமே சொன்னது போல் மேல் எழுந்த வாரியான எண்ணத்தின் பதில் என்பதால், பிற்பாடு அவசியம் ஏற்பட்டால் என் கருத்தைத் திரும்பப் பெறுவேன் ) அன்புடன் மெச்சு அப்பா
கம்யூனிஸ்டுகளைக் காயடிப்பவர்கள்,
ReplyDeleteபெயர் ரொம்பவே நல்லா இருக்கு.ஆனால் எப்படி ஒருத்தருக்கு பன்மைப் பெயர். அது உங்க பேரு..உங்க இஷ்டம். இருக்கட்டும்.
//இந்து மக்களுக்கு அங்கே ஏன் இத்தனை பிரச்சனை நடக்கிறது என்ற தெளிவான அறிவு கிடையாது.//
அறிவைக் கொடுத்த பின் இடிக்கக் கூட்டிட்டு போகவேண்டியதுதானே?
//இந்தக் கஞ்சன் ஐலைய்யா ஒரு தலித்தே அல்ல//
so what? அது என்ன காஞ்சாவை எதிர்ப்பவர்கள் சொல்லும் முதல் பாய்ண்ட் இதுவாகவே இருக்கிறது. வேடிக்கைதான்!
//ஏன் இவ்வளவு தூக்கிப்பிடிக்கிறீர்கள்//
பிடிக்கிறது; சொல்வது சரியாக தோன்றுகிறது. தூக்கிப் பிடிக்கிறேன். உங்களுக்கு இதில் என்ன இத்தனை ஆக்ரோஷம்?
உங்களுக்கு ரஸ்ஸல் பிடிக்கவில்லையா அது மாதிரி ..
//...அந்த நினைப்பைத் திணிப்பவர்கள் பற்றி உங்கள் பதிவுகளில் எங்காவது சுட்டியுள்ளீர்களா ?//
நான் என்ன எழுதவேண்டுமென அட்டணை எழுதி உங்களிடம் வாங்கியபின் நான் எழுத வேண்டுமோ? நான் எழுதியிருக்கும் விஷயத்துக்கும் நீங்கள் தரும் அஜண்டாவுக்கும் ஏதும் தொடர்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
//அப்படி பிரிக்க நினைப்பாவர்களின் உள் நோக்கம் என்ன என்று அனைவருக்கும் தெரியும்.//
அப்படி பிரிக்க நினைப்பாவர்களின் உள் நோக்கம் என்ன என்று எல்லா கம்யூனிஸ்டுகளைக் காயடிப்பவர்களுக்கும் தெரியும் என்றுதானே சொல்கிறீர்கள்?? நல்லது. தொடருங்கள் ...
நாகைசிவா,
ReplyDeleteஆக மொத்தத்தில் கனவு, கானல் நீர் என்கிறீர்கள்; அப்படித்தானே. சோகம்தான்.
கடைசி பத்தி என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்ற ஐயம். ‘பாபர் மசூதி விவகாரத்திலும் இதைத்தான் ஆனந்த் பட்வர்த்தன்…’ இதுவா? இல்ல .. ‘இந்த கருத்துக்களை ஏற்கெனவே என் பழைய … இந்தப் பத்தியில் உள்ள ‘இந்தப் பிரச்சனைக்கெதிராக எனக்கு …..’ இதுவா?
ReplyDelete//தனிமனிதரின் தனிப்பட்ட விருப்பத்தை எல்லாம் சட்டம் மற்றும் சமுதாய தலைவர்களால் மற்ற முடியாது என்றே நான் நினைகிறேன்.//
மாற்ற முடியும், மாற்ற முடிந்திருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.
நீங்கள் சொல்லும் அந்த நாட்டுப்புறக்காரர் நீங்கள் சொல்வது போல் //வீடு திரும்பியதும் பழைய படி சோறு குழம்புக்குப் போய்டுவார்.// என்பது உண்மையானால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் இதுதான் உனக்கு இனி உணவு என்று அவருக்குப் பழக்கமில்லாத உணவே கொடுக்கப்பட்டு அவரது பழைய வழக்கங்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க முயற்சிக்கப்பட்டு அதுவும் ஏறத்தாழ அந்த நாட்டுப்புறக்காரராலும் அங்கீகரிக்கப் பட்டுவிட்டதல்லவா? நாம் எதை உண்டு வந்தோம் என்பதுகூட அவருக்கு மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டு விட்டதல்லவா? சின்ன உதாரணம் என் சின்ன வயதில் ஏது இந்த பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாட்டங்கள்? பொங்கல் திருவிழாவுக்கு இருந்து வந்த முக்கியத்துவம் படிப்படியாகக் குறைவதை என் வாழ்நாளில் நன்கு காண்கிறேன். நாலு புது சினிமா வரும் என்பது மட்டுமே இன்று பொங்கல் விழாவின் அடையாளம்!
Valentine’s day, mother’s / father’s day என்பவைகள் எல்லாம் மேற்கத்திய திணிப்புகள் என்றால் ஹோலியும், ரக்ஷா பந்தனும், முக்கியமாக பிள்ளையார் சதுர்த்தியும் திணிப்புகள்தானே?
//இன்ன இன்ன ஆட்களுக்கு இது தான் உணவு என்று நம்மால் ஒரு பொது அட்டவனை தர முடியுமா ?//
முடியும் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளனவே. காலனி ஆதிக்கங்கள் எங்கெங்கு இருந்தனவோ அதன் மிச்சங்கள் எல்லா காலனியாக இருந்த நாடுகளில் தங்கிவிட்டனவே. நம் நாட்டைக் கூட விட்டு விடுங்கள், ஆப்ரிக்கக் காலனிகள் நிதர்சனமான சான்றுகளாச்சே. அவர்களின் ஒரிஜினல் மதம், மொழி, culture எல்லாம் என்னாயிற்று? U.S.S.R. உடைந்ததும் பல நாடுகளானதற்குக் காரணம் அந்த நாடுகள் ஓரமைப்பின் கீழ் தங்களுக்கான அடையாளங்களை இழந்து நின்றதை மீட்டெடுக்கத்தான் என்றுதானே சொல்லப்பட்டது. நீங்கள் சொல்லும் அந்தப்பொது அட்டவணையை எதிர்த்துதானே அந்த நாடுகள் பிரிந்தன.
//என் குல தெய்வம் ஒரு கிராம தேவதை, என் சகோதரிக்கு 18 ஆம் படிக் கருப்பர். ஆனால் எங்களுக்கு திருப்பதி முதல் ராகவேந்திரர் வரை இடுபாடு உண்டு//
என் பழைய பதிவிலும் என் நண்பனும் இதே கேள்வியைக் கேட்டான். எல்லா சாதியினருக்கும் ancestral worship-ம் சிறுதெய்வ / குலதெய்வ வழிபாடு என்பதும் பொதுவானவை. நாட்டார் வழக்கின் சமய வழக்கங்கள் இதோடு முடிந்து விட்டிருந்தன. அவர்களுக்குப் ‘பெரிய தெய்வங்கள்’ இல்லாதிருந்தது. ஆனால், உயர்த்திக்கொண்ட சாதியினர் கைக்கொள்ளும் சமயச் சடங்குகளும், அவர்களது ‘பெரிய’ தெய்வங்களும், சாஸ்திர சம்பிரதாயங்களும், வேதங்களும் புராணங்களும் (காஞ்சா அய்லய்யா சொல்வதுபோல்) இன்று வரையிலும்கூட மற்றவர்களுக்கு எட்டாத விஷயமாகவோ, புரியாத விஷயமாகவோ, தெரியாத, தொடர்பில்லாத விஷயங்களாகவே உள்ளன. இருப்பினும் இன்று இவைகள் எல்லாமுமே இந்துமதம் என்ற பெயரில் உயர்சாதிக்காரர்கள் மட்டுமின்றி எல்லோருக்குமான விஷயங்களாக ஆகிவிட்டன அல்லவா?
‘தேவபாஷை சம்ஸ்கிருதம்’ எல்லோருக்கும் தெரிந்ததா; உடன்பாடானதா? கல்யாணங்களில் சொல்லும் வேதங்கள் எத்தனை ‘இந்துக்களுக்குத்’ தெரியும்; ஒரு சடங்காகத்தானே செய்யப்படுகிறது? ஏன் முன்பிருந்த, வேதங்களும் அய்யரும் இல்லாமல் நடந்த கல்யாணங்கள் இன்று மாறிவிட்டன? இன்ன இன்ன ஆட்களுக்கு இது தான் உணவு என்று ஒரு பொது அட்டவனை தந்துவிட்டதால்தானே ?
//
ReplyDeleteப்ராமணீய இந்து மதத்திற்கும் பகுஜன்களின் - அதாவது பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் - மத வழக்கங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாதிருந்ததை, இன்றும் இல்லாதிருப்பதைக் காண முடியும். பின் எப்படி பகுஜன்கள் இந்து மதத்திற்குள் இழுக்கப்பட்டார்கள் அல்லது திணிக்கப்பட்டார்கள்?
//
இதை முழுவதுமாக மறுக்கலாம். (இந்தப் பார்வைக் கோளாறு தான் பல கம்யூனிஸ்டுகளைக் காயடிக்கப்படவேண்டியவர்களாக ஆக்கியிருக்கிறது.
)
ஒரு சின்ன பட்டியல்.
பூரி ஜெகன்னாதர்
ஜம்முவில் உள்ள மாதா வைஷ்னோ தேவி
சபரி மலை ஐயப்பன்
எல்லாமே, மலைவாழ் மக்கள் வணங்கிய கடவுள்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மலைவழ் மக்கள் எப்போதுமே மலையில் வாழ்ந்துகொண்டு வேட்டையாடி சாப்பிடவேண்டும் என்று என்ன தலைவிதியா ?
அவர்களும் அவர்கள் கடவுள்களுடன் முன்னேறிவிட்டார்கள்.
இன்னொரு மிகப்பிரசித்தியான வனவாசிகள் யாதவர்கள். அவர்கள் கடவுள் யார் என்று தெரிந்திருக்கும். கிருஷ்ணர்.
குரும்பா, லம்பாடி, ஏனாடி, எருகுலா, செஞ்சு போன்ற ஆந்திர மலை ஜாதியினர் வணங்கும் கடவுள் தான் திருப்பதி வெங்கடாஜலபதி.
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
மேலே பட்டியலிடப்பட்ட கடவுள்கள் அனைத்தும் பகுஜன்களின் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் கடவுள்கள் தாம். இன்று பார்பானர்கள் வணங்குகிறார்கள் என்பதாலேயே அது வைதீக இந்துக் கடவுளாகிவிட்டது. பிற மலைவாழ் மக்களின் கடவுளுக்கும் இந்து மதத்திற்கு சம்பந்தம் இல்லை என்ற மேம்போக்கான பார்வை பரப்பப்பட்டுவிட்டது.
ஏமாந்த சோணகிரி இருக்கிற வரையில் ஏமாற்றும் அறிவு ஜீவிகளும் இருக்கத்தானே செய்வார்கள் ?
//ஏமாந்த சோணகிரி இருக்கிற வரையில் ஏமாற்றும் அறிவு ஜீவிகளும் இருக்கத்தானே செய்வார்கள் ?//
ReplyDeleteஆமாம் .. ஆமாம்
கம்யூனிஸ்டுகளைக் காயடிப்பவர்களே,
ReplyDelete//பூரி ஜெகன்னாதர்
ஜம்முவில் உள்ள மாதா வைஷ்னோ தேவி
சபரி மலை ஐயப்பன்//
இவங்க மலைமேல இருக்கிற சாமிகள் அப்டின்றதால் அவர்கள் "மலைவாழ் மக்கள் வணங்கிய கடவுள்கள்" என்பது சரியா? மற்ற முதல் ரெண்டு சாமி பற்றித் தெரியாது. ஆனால் ஐய்யப்பன் புராணக் கடவுள் என்பது நன்கு தெரியும்.
கம்யூனிஸ்டுகளைக் காயடிப்பவர்களே,
ReplyDeleteஒரு சின்ன பெர்சனலான சந்தேகம். கம்யூனிஸ்டுகளைக் காயடிப்போர் சங்கம் - இதை ஏன் WASTE Bengal-ல் வைத்திருக்கிறீர்கள்?
//கடைசி பத்தி என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்ற ஐயம். ‘பாபர் மசூதி விவகாரத்திலும் இதைத்தான் ஆனந்த் பட்வர்த்தன்…’ இதுவா? இல்ல .. ‘இந்த கருத்துக்களை ஏற்கெனவே என் பழைய … இந்தப் பத்தியில் உள்ள ‘இந்தப் பிரச்சனைக்கெதிராக எனக்கு …..’ இதுவா?// பாபர் மசூதி , ராம ஜன்ம பூமி என்ற பெயர்களைப் பார்த்தாலே அடுத்த லைனுக்கு தாவி விடுவேன். அவை என்னை பொறுத்த வரை நேர விரயம். உங்களுடைய (பழைய பதிவுகள்) பதிவுகளில் இருக்கும் தத்துவ ரீதியான கருத்துக்களே என்னைகே கவர்ந்தவை.
ReplyDeleteநான் சொல்லியது கடைசி para- வில் குறிப்பிட்ட //"இங்கும் ஒருவர் வரமாட்டாரா; வந்து, ப்ராமணீய இந்து மதத்திற்கும் தலித்-பகுஜன்கள் பின்பற்றும் நாட்டார் வழக்குகளையும் பிரித்து ஒன்றிலிருந்து ஒன்றை விலக்கி வைக்க மாட்டாரா என்று தோன்றுகிறது.//
இது தான் எதற்கு என்கிறேன். இதனால் என்ன எதிர் பார்க்கிறீர்கள். சாதி ஏற்ற தாழ்வு ஒளிந்து விடப் போகிறதா ? என்ன பயன் இதனால். இது பார்பன சாமி இது நாட்டர் என்று சொல்வதில் என்ன நிகழ்ந்து விடப் போகிறது. பஸ் ஸ்டாண்ட் -க்கு பேருந்து நிலையம் என்று பெயர் வச்ச மாதிரி தான், பொது சனத்திற்கு அது பஸ் ஸ்டாண்ட் தான், பாவம் பேருந்துன்னு சொன்ன எல்லாம் அவங்களுக்கு புரியாது.
//ஆனால் இதுதான் உனக்கு இனி உணவு என்று அவருக்குப் பழக்கமில்லாத உணவே கொடுக்கப்பட்டு அவரது பழைய வழக்கங்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க முயற்சிக்கப்பட்டு அதுவும் ஏறத்தாழ அந்த நாட்டுப்புறக்காரராலும் அங்கீகரிக்கப் பட்டுவிட்டதல்லவா?// எப்போ இது மாறிச்சுன்னு யாரு சொல்றது. . சிவன் பார்ப்பனக் கடவுளா இல்ல நாட்டரா ? பெரிய புராணத்தில் வருகிற நாயன்மார்கள் பல் தரப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். பெரிய புராணம் அனேகமாக கி.மு வாக இருக்கலாம். அப்படியே திணிக்கப் பட்டதாக இருந்தாலும் பல நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்ததை இப்போ மற்ற வேண்டிய அவசியம் என்ன?
நீங்க சொன்ன மாதிரி நாட்டுப்புறக்காரராலும் எப்போவோ அங்கீகரிக்கப் பட்டுவிட்டதல்லவா ! அப்புறம் என்ன பிரச்சனை. நான் வரட்டு வாதம் செய்யவில்லை என்றே எண்ணுகிறேன், எனக்கு இந்தப் பதிவு சொல்கிற மெசேஜ் புரியவில்லை . அதனால தான் திரும்பவும் வந்திருக்கிறேன்.
நீங்கள் கோபிக்கவிட்டால் ஒன்று சொல்கிறேன் ,
உங்களுடைய சொந்த கருத்துக்களை வைக்கும் போது இருந்த தொய்வில்லா தன்மை காஞ்சன் ஐலையா என்ற கண்ணாடியை நீங்கள் அணிந்து எழுதிய இப் பதிவில் இல்லை என்றே நான் நினைக்கிறேன். உங்களுடைய அலசும் தன்மை இதில் கொஞ்சம் மாறுப்பட்டுப் போயிருக்கிறது.கருத்து பிடிக்கலன்நு இப்படி செல்வதாக நினைக்க வேண்டாம், ஸ்ட்ராங்கான சப்போர்ட் இல்லாமல் இருக்கிறது எனப்தே என் என்னம் . அன்புடன் மெச்சு அப்பா
//சின்ன உதாரணம் என் சின்ன வயதில் ஏது இந்த பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாட்டங்கள்? பொங்கல் திருவிழாவுக்கு இருந்து வந்த முக்கியத்துவம் படிப்படியாகக் குறைவதை என் வாழ்நாளில் நன்கு காண்கிறேன். நாலு புது சினிமா வரும் என்பது மட்டுமே இன்று பொங்கல் விழாவின் அடையாளம்!//
ReplyDeleteValentine’s day, mother’s / father’s day என்பவைகள் எல்லாம் மேற்கத்திய திணிப்புகள் என்றால் ஹோலியும், ரக்ஷா பந்தனும், முக்கியமாக பிள்ளையார் சதுர்த்தியும் திணிப்புகள்தானே?//
பிள்ளையார் சதுர்த்தி -ன்னு நீங்க சொல்றது செயின்ட் சைஸ் பிள்ளையாரை என்று நினைகிறேன் அது அரசியல் அதுக்கும் பொது சனத்துக்கும் தொடர்பு இல்லை. சின்ன வயதிலிருந்தே நாங்கள் விநாயக சதுர்த்தி கொண்டாடிகொண்டு தான் இருக்கோம்
நாம ஆங்கிலம் போல இருந்தா என்ன தப்பு சார் ? ஆங்கிலம் பல நல்ல சொற்களை உலகம் எங்கும் இருந்து எடுத்து சேர்த்துகிட்ட மாதிரி, நல்ல விஷயங்களையோ மனதுக்கு பிடித்ததையோ சேர்த்துகிரதுல என்ன தப்பு ? இப்போ ஆங்கிலத்துல இருக்கிற வேற்று மொழி சொல்லை எல்லாம் உதிர்த்தா வெறும் கூடு தான் மிஞ்சும். நகரத்தில் வேண்டுமானால் பொங்கல் அப்படி ஆனா கிராமங்களில் இன்னும் பசுமையோடுதான் இருக்கு.
மேற்கத்திய திணிப்புகள் தான் ஆனா அதுனால என்ன கேட்டுப் போச்சு. பிடித்திருந்தால் பின் பற்றுதலில் என்ன தவறு. நாம் மூலம் பற்றி ஆராய்ச்சி செய்யா வேண்டியதே இல்ல. father's day வந்தததால் நம் பழைய பழ்க்கம் போனது enRu சொல்வதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. ஒரு சமூகம் ஒரு பழ்க்கத்தை உள் வாங்குவது ஒரு mutation போல என்று தான் நான் நினைகிறேன். ஓவர் நைட்டில் நடந்து விடவில்ல, மெல்ல மெல்ல படிப்படியாக வந்தது தான். திணிப்பு என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போ தாவணி போடுகிற பழ்க்கம் வழகொழிந்து போய்விட்டது. சுடிதாரை யார் திணித்தார்கள். மக்கள் விரும்பி அணிய தொடங்கினார்கள் அவ்வளவு தான். அவர்களிடம் தமிழ் உடையை திட்டம் இட்டு யாரும் ஒழிக்கவில்லை. மறுபடி பழிய உடைக்கு அவர்களைத திருப்ப நினைத்தால் யாருக்கு என்ன பிரயோசனம். மேலும் சம்மந்தப்பட்டவருக்கு சுடிதார் சொந்த உடை போலவும் மற்றது அன்னியமாக தெரியலாம்
//
ReplyDeleteஇவங்க மலைமேல இருக்கிற சாமிகள் அப்டின்றதால் அவர்கள் "மலைவாழ் மக்கள் வணங்கிய கடவுள்கள்" என்பது சரியா? மற்ற முதல் ரெண்டு சாமி பற்றித் தெரியாது. ஆனால் ஐய்யப்பன் புராணக் கடவுள் என்பது நன்கு தெரியும்.
//
பூரி ஜெகன்னாதர் ஒன்றும் மலை மேல் உள்ள கடவுள் அல்ல.
மேலும், பழங்குடி (பகுஜன் தலித்) மக்கள் அனைவரும் மலைகளில் தான் வாழ வேண்டும் என்று ஒன்றும் சட்டம் கிடையாது.
//
இதை ஏன் WASTE Bengal-ல் வைத்திருக்கிறீர்கள்?
//
30 ஆண்டுகள் கம்யூனிஸ்டு ஆட்சியில் West bengal என்ற மானிலம் Waste ஆகிக் கொண்டிருப்பதனால்.
கம்யூனிஸ்டுகளைக் காயடிப்பவர்கள்,
ReplyDelete//மேலும், பழங்குடி (பகுஜன் தலித்) மக்கள் அனைவரும் மலைகளில் தான் வாழ வேண்டும் என்று ஒன்றும் சட்டம் கிடையாது.//
நானா சொன்னேன் அப்படி. நீங்கள் சொன்னதுதான் அது:
//எல்லாமே, மலைவாழ் மக்கள் வணங்கிய கடவுள்கள் என்பது குறிப்பிடத்தக்கது//
//உங்களுடைய சொந்த கருத்துக்களை வைக்கும் போது இருந்த தொய்வில்லா தன்மை காஞ்சன் ஐலையா என்ற கண்ணாடியை நீங்கள் அணிந்து எழுதிய இப் பதிவில் இல்லை என்றே நான் நினைக்கிறேன். உங்களுடைய அலசும் தன்மை இதில் கொஞ்சம் மாறுப்பட்டுப் போயிருக்கிறது//
ReplyDeleteதிரு நாராயணன் (a)மெச்சு சொன்னதை வழிமொழிகிறேன், நண்பா!
மெச்சு'ப்பா, கபீஷ்,
ReplyDelete////உங்களுடைய சொந்த கருத்துக்களை வைக்கும் போது இருந்த தொய்வில்லா தன்மை காஞ்சன் ஐலையா என்ற கண்ணாடியை நீங்கள் அணிந்து எழுதிய இப் பதிவில் இல்லை என்றே நான் நினைக்கிறேன். உங்களுடைய அலசும் தன்மை இதில் கொஞ்சம் மாறுப்பட்டுப் போயிருக்கிறது//
நீங்கள் சொன்ன இந்த விசயத்தை நானும் ஒப்புக் கொள்கிறேன். எழுதும்போதே நிரம்பவும் hiccups இருந்தது. ஆனால் அதற்கு முக்கிய காரணம் ஒரு தயக்கம்; அதற்குக் காரணமாக நான் நினைப்பது - //நான் பிறப்பினால் கிறித்துவன் என்பதாலேயே, ஏன் நீ இந்து மதத்துக்குள் தலையை நுழைக்கிறாய் என்று கேட்கலாம்.//
ஆனாலும் அய்லய்யாவின் புத்தகம் எனக்கு ஒரு புதிய பார்வையைக் கொடுத்ததை மறுக்க முடியாது. அதில் சொன்னதாக நான் கூறியிருப்பதையும் நான் முழுமனதோடு ஒப்புக் கொண்டுதான் இங்கே அதனைத் தந்துள்ளேன். மெச்சு'ப்பாவின் கேள்வி/பதில்கள் அவைகளைத் திசை திருப்பவில்லை' என் கருத்துக்களை மாற்றவுமில்லை. அவருக்குப் பதில் தர முயல்கிறேன் விரைவில்.
மெச்சு’ப்பா,
ReplyDelete//இது பார்பன சாமி இது நாட்டர் (சாமி) என்று சொல்வதில் என்ன நிகழ்ந்து விடப் போகிறது.//
என்ன இப்படி சொல்லிட்டீங்க? பதிவின் நோக்கமே ‘இப்படி எல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கிறதே’ என்ற வருத்தத்தில் எழுதியது. என்னவெல்லாம் நிகழ்ந்துவிட்டது, நிகழ்ந்து கொண்டிருக்கிறது, நிகழவிருக்கிறது என்பதால் ஏற்பட்ட அச்சம், கோபம், வருத்தம். நீங்களோ எல்லாவற்றையும் ‘சடாரென’ தூக்கிப் போடுகிறீர்களே!
//பெரிய புராணத்தில் வருகிற நாயன்மார்கள் பல் தரப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். பெரிய புராணம் அனேகமாக கி.மு வாக இருக்கலாம். அப்படியே திணிக்கப் பட்டதாக இருந்தாலும் பல நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்ததை இப்போ மற்ற வேண்டிய அவசியம் என்ன?//
இதற்குப் பதில் நானளிப்பதை விட இங்கே போய்ட்டு வந்திருங்களேன். போய்ட்டு வந்திட்டீங்களா … // அப்படியே திணிக்கப் பட்டதாக .. இப்போ மற்ற வேண்டிய அவசியம் என்ன//
என்ன இப்படி சொலிறீங்க … தப்புன்னு தெரிஞ்சா எத்தனை வருடங்கள் பொத்தி பொத்தி வைத்திருந்தாலும் அதை மாற, மாற்ற வேண்டாமா? ( ஐம்பது ஐம்பத்து மூன்று ஆண்டுகள் கழித்துதான் என்னை நானே மாற்றிக் கொண்டேன்.)
// பிள்ளையார் சதுர்த்தி -ன்னு நீங்க சொல்றது செயின்ட் சைஸ் பிள்ளையாரை என்று நினைகிறேன் அது அரசியல். அதுக்கும் பொது சனத்துக்கும் தொடர்பு இல்லை. //
அந்த அரசியல் உள்ளே நுழையறதைத்தானே அய்யா வேண்டாம் என்கிறேன். அதுவும் சிறுபான்மையரின் தந்திர அரசியல் அது என்கிறேன் நான். அதைத் தெரிந்து கொள்ளாமல் புரிந்து கொள்ளாமல் பெரும்பான்மையர் ‘கரசேவாக்’ என்று மாறுவது குறித்தான கவலைதானே இப்பதிவு. (ஜெ சொல்லி ஒரு கூட்டம் அயோத்தி சென்றதாகக் கேள்வி; அவர்களுக்கு என்ன ராமர் ஜென்ம பூமியின் மகத்துவத்திற்காகவா போயிருப்பார்கள்?) மதத்தின் பெயரால் “ஒரு காலத்தில்” உயர்த்திக் கொண்டோர் மற்றவரைத் தாழ்த்தி வைத்திருந்தார்கள் – சனாதன தர்மம் என்ற பெயரால் என்பதை நீங்கள் ஒத்துக் கொண்டால் நான் சொல்லும் அரசியலை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமே! ஏனெனில் அதன் நீட்சிதான் இன்று பாபர் மசூதியை இடிக்கப்பெரும் படை திரட்டப் பட்டது.
பாபர் மசூதியை இடித்திருக்கலாமா? – இந்தக் கேள்வியை ஒரு சுற்று நீங்கள் அறிந்த தெரிந்த இந்து மக்களிடம் கேளுங்கள். (நான் கேட்டிருக்கிறேன்.) நிச்சயமாகச் சொல்லுவேன். நூற்றுக்கு 98 பேர் அது தவறு என்றே சொல்வார்கள். ஆனால் இடித்தாகி விட்டது. அப்படியானால் எப்படி நடந்தது அது? ‘ஒரு’ சிறுபான்மையர் பகுஜன்களை வளைத்துப் பிடித்தோ, அணைத்துப் பிடித்தோ, வழி நடத்தியோ – எப்படியோ நடக்கக்கூடாதை நடத்தி முடித்தார்கள் அல்லவா? அந்த அரசியல்தான் வேண்டாமென்கிறேன்.
//நல்ல விஷயங்களையோ மனதுக்கு பிடித்ததையோ சேர்த்துகிரதுல என்ன தப்பு ?... பிடித்திருந்தால் பின்பற்றுதலில் என்ன தவறு. நாம் மூலம் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டியதே இல்ல.//
நிச்சயம் தப்பில்லை, மெச்சு’ப்பா.
ஆனால் நாம் பேசிக்கொண்டிருக்கும் விசயம் – பாபர் மசூதி இடிக்கப் பட்டது –
நல்லதா; மனதுக்குப் பிடித்ததா’ மூலம் பார்க்கத் தேவையில்லாததுதானா???
மெச்சு’ப்பா, இந்தப் பதிவின் அடிப்படையே பலர் விரும்பாத ஒரு காரியத்தை, சிலர் மட்டுமே செய்ய விரும்பியதை, அந்தச் சிலர் பலரை வைத்தே நடத்தி முடித்த அரசியலை எனக்கு முடிந்தவரையில் தெளிவாக்க முயற்சித்ததுதான். ஒருவேளை அந்த முயற்சியை முழுமையாக செவ்வனே செய்ய முடியாது போயிருந்திருக்கலாம்; என் இயலாமைக்கு வருந்துகிறேன்.
ஜோக் மாதிரி ஒண்ணு:
கிறித்துவனாகப் பிறந்தும் இன்று அதில் உள்ள ஓட்டைகள் என்று சொல்லிக் கொண்டிருப்பதால் கிறித்தவர்களுக்கு நான் கெட்டவன்!
இஸ்லாமியரின் மதத்தீவிரத்தை தீவிரமாக எதிர்ப்பதால் அவர்களுக்கும் நான் கெட்டவன்!
இப்போ, இந்து மதம் இரு கூறானது அல்லது இரு கூறாக வேண்டும் என்று சொல்வதால் ‘இந்து’க்களுக்கும் நான் கெட்டவன்!
ஆமா, நான் நல்லவனா; கெட்டவனா?
மெச்சு'ப்பா,
ReplyDeleteஎப்போ உங்க வலைப்பூ மலரப் போகுது? சீக்கிரம் ..
ஐ த பர்ஸ்ட் போடணும்னு சொல்லிக்கிட்டே இருக்கேன்.
தருமி சார்,
ReplyDelete1) நீங்கள் என்னுடைய கேள்விகள் எதற்குமே தகுந்த பதிலைத் தரவில்லை.
அல்லது
௨) எனக்கு அந்த பதில்கள் எதுவுமே புரியவில்லை.-இது தான் என் இப்போதைய நிலை
பல வலைத்தளங்களுக்கு நான் வாசகன் ஆனால் எங்கும் பின்னூட்டம் இடுவதில்லை. என்னுடைய உங்கள் வலைப் பூக்களைப் பற்றி சொல்லிய பிறகு தான் வலை உலகமே எனக்கு அறிமுகம் ஆனது. உங்கள் கருத்துக்கள் தெளிவானதாகவும் ஆரோக்கியமாகவும் இருந்ததால் வாசிக்கத் தொடங்கினேன். (ஆனால் இன்னும் மும்ழுமையாக அத்தனை பதிவுகளும் வசித்து விடவில்ல -நேரம் ஒரு பிரச்சனை ) . பழய பதிவுகள் அத்தனையையும் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்கும் விகிதம் 80:20 ஆக இருக்கும்.
நீங்கள் எனக்குத் தந்த சுட்டி ,என்னை அதிர்ச்சியடைய வைத்தது. பேப்பரில் அச்சடித்திருக்கும் அத்தனையுமே ஆதராமா? கணனியில் கண்பது அத்தனையுமே உண்மையா? எப்பொருள் யார் யார் வாய் கேட்கினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு.
எனக்கு Forrest Ghump அன்பே சிவம் வகை படங்கள் பிடிக்கும் அந்த வகைப படங்களை மட்டுமே நான் பார்ப்பது உண்டு. அப்படி பட்ட தரத்தில் படம் தந்து கொண்டிருந்த இயக்குனர் தீடீரென "அட்ரா அட்ரா நாக்க மூக்கா" என்ற தரத்தில் வந்தால் எப்படி இருக்கும் அப்படி இருந்தது. உங்கள் தரத்திற்கு தகுந்ததே அல்ல. நான் இது மாதிரி பதிவுகளை ignore செய்துவிடுவேன். இது போன்ற வலைத்தளங்களை ஆதாரமாகக் கொண்டா உங்கள் கருத்துக்கள் வடிவம் பெறுகிறது. மத ஒப்புமை வேண்டும் என்று சொல்கிற தாங்கள் சாதி துவேசத்தில் நிலை தடுமாறி விடுகிறீர்கள். நான் பிராமணன் அல்ல ஆனால் எல்லா வாதத்துக்கும் பிராமணன் செஞ்சான், சேகிழார் பிள்ளையா அப்படின்னா அவரு பிராமணஅடிவருடி என்று சொல்வதை நான் ஏற்றுக் கொள்வதில்லை. தமிழ்ர்கள் அத்தனை பேரும் முட்டாள்கள் அவர்கள் பேச்சை கேட்டு அறிவிலியாய் கிடந்தார்கள் என்பது எனக்கு ஏற்புடையது அல்ல. அரசர்கள்,கவிஞர்கள் இப்படி அத்தனை தமிழரும் தற்குறி தானா ? நம் முன்னோர்கள் அத்தனை பேரும் மடையர்களா ? சரியான விளக்கம் தர முடியாத சமயங்களில் Pushing things under the carpet ஆக பிராமணீயத்தை கொண்ட்டுவைத்து விடுகிறார்கள்.
நீங்கள் முன் முடிவுடன் இதை அணுக ஆரம்பித்து விட்டீர்கள் என்றே தோன்றுகிறது. -மெச்சப்பா
நாராயணன்,
ReplyDeleteஇப்போதைக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொண்டு நகன்றுகொள்கிறேன்.
நன்றி
நாராயணன்,தருமி..
ReplyDeleteஇந்தப் பின்னூட்டத்தை கண்ணன் அனுமதிக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்,எனவே இங்கே...
##############################
\\13 ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. அதில் ஒரு சைவ - வைணவ கதையைத் தான் தசவதாரம் படத்தில் காட்டினார்கள்.\\
இந்தக் கதை புளுகான கதை எனப் படத்திலேயே காட்டுகிறார்கள்,இதை நீங்கள் எடுத்துக்காட்டுவது விந்தையானது.
\\இந்திய விடுதலை போராட்டத்திற்கு பிறகு குறுநில மன்னர்கள் சுளுக்கெடுக்கப்பட்டு அவர்களுடைய ஆளுமைக்குட்பட்ட பகுதிகளை இந்தியாவுடன் இணைத்த நிகழ்வு போலவே 13 - 12 ஆம் நூற்றாண்டில் தமிழுக்கு எதிராணவர்கள் என்ற குற்றச்சாட்டில் சமண - பவுத்த மதங்கள் வீழ்த்தப்பட்ட பிறகு\\
இது போன்ற அரை அவியல் பதிவுகளை எழுதும் முன் குறைந்தபட்சம் என்ன எழுதுகிறீர்களோ அது பற்றிய வரலாறாவது சிறிது படித்து விட்டு வந்து எழுதுங்கள்.
இரண்டு மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு வடமொழியின் ஆதிக்கம் அதிகமாகி கிட்டத்திட்ட தமிழ் சாவுப் படுக்கைக்கு வந்து விட்டது.
இந்த சமயத்தில் தமிழர் கடவுட் கொள்கையான சிவம் என்ற தத்துவமும் தமிழ் என்ற மொழியின் இருப்பும் கேள்விக்குள்ளான பொழுதில் தோன்றியதுதான் தமிழ் சமய இலக்கியப் புரட்சியும் மறுமலர்ச்சியும்.
சமணம் வீழ்த்தப் பட்டது;காரணம் சமணப் பள்ளிகளும் சமண குரு'க்களும் அரசர்களை பொம்மை போலத் தன் கைப்பிடிக்குள் வைத்திருந்தார்கள்;வடமொழியும் பிராகிருதமும் அரசியல் ஆட்சி செய்தன.
ஒரு மொழி,இலக்கிய நோக்கில் வளர வேண்டுமெனில் அரசு ஆதரவு வேண்டும்.
அதற்கு அரசர்கள் மனம் மாற வேண்டும்.இந்த நுண்ணிய கருத்தைப் புரிந்து கொண்ட சம்பந்தர் போன்ற பெரியவர்கள் மொழி,சமயம் இரண்டையும் ஒரே நேரத்தில் மீட்டெடுக்கத் தளராது முயன்று பெற்ற வெற்றியினால்தான் தமிழ் மீண்டும் ஏற்றம் பெற்றதுடன் தமிழர்களின் சிவ வழிபாடும் மீண்டும் ஏற்றம் பெற்றது.
சம்பந்தர் போன்றவர்கள் அதற்காக தம் உயிரையும் கூட இழக்க நேர்ந்தது.
பலமுறை தப்பியவர்கள் கடைசியில் திருமணத்தன்று சூழ்ச்சியால் மொத்தமாகப் பலியானார்கள்!
ஒருவேளை சம்பந்தர்,திருநாவுக்கரசர் போன்றவர்கள் தோன்றாதிருந்தால் இன்று தமிழின் பெயரைக் கொண்ட ஜல்லியடித்துக் கொண்டு குடும்ப சொத்து வளர்த்துக் கொண்டிருக்கிறாரே முக., அவர் போன்றவர்களுக்குப் பிழைக்க வழியில்லாமல் போயிருக்கும் !
\\தமிழ்நாட்டை அல்லது தமிழ் பேசும் பகுதிகளை முற்றிலும் சைவம் ஆக்கும் முயற்சிக்கு ஊதுகுழலாக இருந்தவர் சைவ பின்லேடன் போன்று செயல்பட்ட சேக்கிழார். சைவ திருவைந்தெழுத்தை அதாவது சிவாய நம என்ற மந்திர சொல்லை ஓதுபவர்களுக்கு அற்புதம் நிகழ்ந்ததாக கதை எழுதவேண்டிய பணியை சேக்கிழார் எடுத்துக் கொண்டார்.\\
திரும்பவும் ஒரு அரைவேக்காட்டுத் தனமான புரிதல்!
சேக்கிழார் அவரே கற்பனையில் இவற்றை எழுதவில்லை;திருத்தொண்டர் புராணத்தை ஏற்கனவே நம்பியாண்டார் நம்பி தொகுத்து வைத்திருந்த நாயன்மார் வரலாறுகளை சேக்கிழார் முறைபபடுத்தித் தொகுத்தார்,அவ்வளவே.
\\சேக்கிழார் உருவாக்கிய 63 நாயன்மார்கள் கதைகள் ஒன்று கூட பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை என்பது படிப்பவர்களுக்கு நன்கு தெரியும். \\
இரண்டாவது பெரியபுராணத்தில் எழுதி இருக்கும்படி இன்றைக்கும் ஏதேனும் இரு இடங்களுக்கிடையேயான இருப்பிட தூரம் மற்றும் மற்ற வரலாற்றுச் சான்றுகள் உண்மையாக இருக்கின்றன;ஆக அனைத்தும் புரட்டு என்பது ஒரு மொக்கை வாதம்.
குர் ஆன் மற்றும் புதிய,பழைய ஏற்பாடுகளைப் படித்து அவற்றில் புரட்டாகத் தோன்றும் செய்திகளைப் பற்றியும் இப்படி ஒரு விளக்கப் பதிவை எதிர்பார்க்கிறேன் !!!!
\\திருஞானசம்பந்தன் என்னும் மற்றொரு சைவ பின்லேடன் "அந்தணர் வாழ்க" என்று தொடங்கிய ஏட்டை ...\\
இது பழந்தமிழ் நாட்டில் அந்தணர் என்றால் இன்றைய பிராமணர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற இன்னொரு அரைகுறை அரைவேக்காட்டுத்தனப் புரிதலில் வந்த வாக்கியம் இது !
\\(ஒற்றை பனையோலை) புனல் வாதத்தின் போது பெருக்கெடுத்த ஆற்றில் விட அது ஆற்றை எதிர்த்து நீந்திச் சென்று திருவோடகம் என்ற இடத்திற்கு அருகில் நின்றதாம், அதே ஆற்றில் அதே வாதத்திற்கு விடப்பட்ட சமணர்களின் ஏடு ஆற்றோடு அடித்துச் சென்று கடலில் சேர்ந்துவிட்டதாம். அனல் வாதத்தின் போது சம்பந்தன் எழுதிய ஏட்டை தீயில் போடும் போது எரியாமல் முன்பைக் காட்டிலும் பளபளப்பாக மாறியதாம், சமணர்களின் ஏடு கருகியதாம். இதனால் வாதில் தோற்றவர்களாக அறிவிக்கப்பட்ட சமணர்களின் நூல்கள் வைகை ஆற்றில் எரியப்பட்டதாகவும், ஒப்பந்தப்படி எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டதாகவும் சொல்லப்படுவது சைவ சமயமே கூறும் வரலாறு.\\
அதனால் என்ன?
அது நிகழ வேண்டியதற்கான மொழி அரசியல் காரணங்கள் இருந்தன...
\\தமிழ்சமூகத்தில் சைவ சமயம் என்ற பெயரில் பார்பனர்களுக்கு முதன் முதலில் அடிவருடிய பெருமை சேக்கிழாரையும் அவரது வெள்ளாள (பிள்ளைமார் சாதி) சமூகத்தையே சாரும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள்.\\
எந்த வரலாற்று ஆய்வாளர்?
டாவு மன்னனா?
\\எங்கெல்லாம் ஆகம அமைப்புடன் கோவில்கள் கட்டப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் சிவன் கனவில் வந்து சொன்னதாகவே விடிவதற்குள் கதையை எழுதி, செய்யாவிடில் அரசு அழிந்துவிடும் என மன்னர்கள் பயமுறுத்தப்பட்டு பெரும்பாலான சிவன் கோவில்கள் கட்டப்பட்டு,\\
எப்படி?
மயன் மாளிகை மாதிரி ஒரு இரவில் கட்டினார்களா?
கோவில்கள் இருந்த தலங்களுக்குப் போய்த்தான் நால்வர் பாடினார்கள்...
\\எப்படி யோசித்துப் பார்த்தாலும் 13 நூற்றாண்டில் 63 நாயன்மார்களுக்காக தோன்றிய சிவன் அதன் பிறகு 8 நூற்றாண்டுகளில் ஒருமுறை கூட தமிழ்நாட்டில் தோன்றவில்லை.\\
அல்லா,யேசு எல்லார் ஒவ்வொரு வீக் எண்டும் வந்து போகிறார்களா?
கடவுள் தேடல் இருக்கின்றவனிடம்தான் போவார்.
அறை எண் 305 மாதிரி கண்ட கழிசடைகளுக்காக வரமாட்டார்.
\\இவையெல்லாம் உண்மை என்று நினைத்திருந்தால் அருட்பிரகாச வள்ளலார் உருவ வழிபாட்டை புறம்தள்ளிவிட்டு 'அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை' என்று ஜோதி வடிவ வழிபாட்டுக்கு மாறி இருப்பாரா ?\\
இன்னொரு பிதற்றல் !
கந்த கோட்டத்து கந்த வேளைப் பாடியது யார்?