படம் எடுத்த என்னைச் சேர்த்து "கூட்டத்துக்கு"(!?) திரளாக வந்திருந்தவங்க ஐந்து பேர்.(பேரையெல்லாம் அங்கங்க ஆளுக மேல் போட்டாச்சு!) ஆறாவதா உட்கார்ந்திருப்பது மதுர பொவண்டோ!
நெஜமாகவே ஜாலி ஒண்ணும் தூங்கலைங்க...அம்புட்டு ஆழமா மத்தவங்க பேசுனதைக் கேட்டுக்கிட்டு இருக்காருங்க .....
நாங்க இருக்கிறதுக்கு ஒரு மண்டபம் பிடிச்சோம். அது காந்தியடிகள் மகாத்மா ஆன பின் இருந்த குடிசையின் நகலுக்குப் பக்கத்தில் இருந்தது. ஆனால் அதற்கு மறு பக்கத்தில் அரைகுறையாக இருந்த ஒரு கட்டுமானத்தைப் பார்த்ததும் ஜாலிஜம்பரின் 'மூன்றாவது கண்' துடிக்க ஆரம்பித்துவிட்டது. அதை background-ஆக வைத்து ஒரு படம் எடுத்தேயாகணும்னு வெறியாகி, என்னை மாடலாக்கி விட்டார்.
நான் விட்டுருவேனா? பழிக்குப் பழி வாங்கிட்டேன்.
அது என்ன ராசியோ என்னவோ! எடுத்த படத்தில் பாதிக்கு மேல் மக்கள் கண்கள் சொருகி சொக்கிப் போய் உட்கார்ந்திருப்பதுபோல் விழுந்திருச்சி. அதுக்கு நானென்ன பண்ண முடியும்?
ஒருவேளை bovonto effect-ஆக இருக்குமோ என்னவோ?
எல்லாம் வழக்கம்போல இருந்திச்சி. பதிவர்கூட்டத்துக்கு வாழ்த்துச் சொல்லி வால்பையன் தொலைபேச, அவரிடம் டிபிசிடி கொஞ்சம் ஆள்மாறாட்ட தகிடுதத்தம் செய்ய முயன்றுகொண்டிருந்தார். எந்த குறிப்பிட்ட நோக்கமுமில்லாமல் ஒரு அவியலான மொக்கை அரட்டை நடந்தேறியது. தன் குடியிருப்பில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்பதற்காக சீனா 6.30க்குக் கிளம்பினார். இருட்டி விட்டது. கொசுத்தொல்லை பின்னூட்டத் தொல்லையைவிட மோசமானது. எழுந்து நின்று கொண்டு பேச ஆரம்பித்தோம். அது என்னவோ தெரியவில்லை. ஏறக்குறைய புறப்படுவோம் என்று சொல்லி எழுந்து நின்று பேச ஆரம்பித்த பிறகு தான் கொஞ்சம் சூடு பிடித்தது. டிபிசிடி நாம் பதிவுகளை இன்னும் கொஞ்சம் தமிழுணர்வோடு எழுதுவது நலம் என்றார். நல்ல தமிழ், தனித்தமிழ் பதிவுகளில் வரவேண்டுமென்றார். என்னைத்தவிர மற்ற இருவரும் அது சரி என்றார்கள். நான் அதற்கெல்லாம் காலம் நிரம்பவும் கடந்து விட்டது. தமிழில், ஆங்கிலம் போலல்லாமல், பேச்சுத் தமிழும் எழுத்துத் தமிழும் அதிகமாகவே விலகி நிற்கின்றன. அதோடு இன்னும் தனித்தமிழ் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்காமல், எல்லா மொழிச் சொற்களையும் உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும் என்றேன். கிரந்த எழுத்துக்கள் இல்லாமல் எழுத வேண்டும் என்றனர் மற்ற மூவரும். கிரந்த எழுத்துக்கள் இல்லாமல் முடியாது என்பது என் விவாதமாக இருந்தது. ஸ்டாலினை சுடாலின் என்று சொல்லச் சொல்ல பழகி விடும் என்றார்கள். தேவையா என்றேன் நான்.
இன்னும் அறிவியல் மொழியில் ஸ,ஜ போன்ற கிரந்த எழுத்துக்கள் இல்லாமல் முடியாது; அதுபோல மற்றைய மொழிச் சொற்களை அப்படியே வாங்கிக்கொள்ள வேண்டும்; புதிய சொற்களை ஓரளவுக்கே கொண்டுவர முடியும். சான்றாக, 'தானி' என்பது 'ஆட்டோ' என்பதற்குச் சரியாக இருக்கலாம். ஆனால் ஆட்டோ ரிக்ஷாவிற்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். மற்ற ஆங்கிலச்சொற்களில் ஆட்டோ என்பது prefixஆக வரும்போது எப்படிப் பயன்படுத்துவது --- இதெல்லாம் என் வாதத்தில் நான் சொன்னவைகள்.
ஆனால் அவர்கள் முனைப்பாக என் கூற்றுக்களை மறுத்தார்கள். பல சான்றுகள் கூறப்பட்டன, சின்னச் சின்ன நாடுகள் கூட தாய்மொழியைப் பேணும் அளவிற்கு தமிழர்கள் நாம் பேணுவதில்லை. முயன்றால் நாமும் தனித்தமிழிலேயே, ஆங்கிலக் கலப்பின்றி பேசவும் எழுதவும் முடியும் என்பதில் மிக அழுத்தமாக நின்றார்கள்.
இரு வாயில் காப்போர்கள் எங்களைச் சுற்றி வந்தார்கள். நாங்கள் பேசிய
ஆனாலும் எங்கே டிபிசிடி திட்டுவாரோ என்று பயந்து நான் எப்படி இப்பதிவைப் பேச்சுத்தமிழில் ஆரம்பித்தாலும் அதன்பின் தனித்தமிழில் எழுத முயன்றிருக்கிறேன் என்பதைப் பார்த்தே, பதிவர் கூட்டம் ஒரு அழுத்தமான பாதிப்பை என்மீது ஏற்படுத்தியிருப்பதை நீங்கள் பார்க்க முடியுமே ... இல்லையா? (
*
:)
ReplyDeleteஉங்கள் கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன். :))
ReplyDeleteரொம்ப நாளுக்கு அப்புறமா எழுதறீங்க.
ReplyDeleteதனித்தமிழ்ல எழுத சொல்லி உங்கள மாத்திட்டாங்களா? நாம அப்படி எல்லாம் திருந்த கூடாதே. தப்பாச்சே.
ஆமா டிபிசிடி எதுக்கு தமிழ்ல பேர் வைக்காம இப்படி சுத்த இங்கிலிஷுல வச்சிருக்கார்னு கேக்க வேண்டியது தானே? :-):-) (ஸ்மைலி போட்டுருக்கேன் அவர் என்னைத்திட்டி ஒருவேளை பின்னூட்டம் போட்டா பப்ளிஷ் பண்ணாதீங்க :-):-)
தங்கத் தமிழை வளர்க்கும் தருமி ஐயா வாழ்க !!
ReplyDelete********
அழகுபுரம் பாலா வந்தார் என்பதை நீங்கள் பதிவில் சரியாக குறிப்பிடவில்லை என்பதை நான் செல்லமாக கண்ணடிக்கிறேன்.
//இரு வாயில் காப்போர்கள் எங்களைச் சுற்றி வந்தார்கள். நாங்கள் பேசிய விஷயத்தாலோ விடயத்தாலோ என்னவோ எடுத்தவுடன் விரட்டவில்லை. //
ReplyDeleteவிடயம் என்ற சொல் தமிழ்சொல்லே அல்ல, தமிழ்படுத்தப்பட்ட விஷயம் :)
விடயத்துக்கு சரியான தமிழ் சொல் பற்றியம். அதாவது ஒன்றைப் பற்றிச் சொல்லுவது பற்றியம்.
//ஆனாலும் எங்கே டிபிசிடி திட்டுவாரோ என்று பயந்து நான் எப்படி இப்பதிவைப் பேச்சுத்தமிழில்//
ReplyDeleteதிட்டினாலும் பரவாயில்லை, லேசாக வந்து மேலே இடிப்பார் :)
சினா சார் கலக்கலாக காட்சி (போஸ்) கொடுக்கிறார்
ReplyDeleteஜாலி ஜம்பர் வால்பையன் கோஷ்டியா எப்பவும் கண்ணு சொருகி... பவண்டோவுக்கே இந்த சொருகலா.
ReplyDeleteபேச்சு சுவாரசியத்தில் கண்ணு சொக்கிருச்சோ என்னவோ:-))))
ReplyDeleteஒருவேளை.... அடுத்தமாதம் இன்னொரு பதிவர் சந்திப்பு வந்தாலும் வரலாம்.
என்னவோ தெரியலை, மனசு சொல்லுது:-)
பாபா,
ReplyDeleteஎன்ன சொல்றீங்க :) அப்டின்னா..?
போன பதிவர் சந்திப்புல கூட ரோட்டுல நின்னு பேசினதுதான் அதிகம்னு நினைக்கிறேன்.
:) - உள்ளேன் அய்யா மாதிரி.
ReplyDeleteசென்ற பதிவர் சந்திப்பில் பேசியதும் நினைவுக்கு வந்தவுடன் மனம் மகிழ்ந்தது. அந்தப் பகிர்வுக்கும் ஒரு :)
கொத்சு(!),
ReplyDelete//உங்கள் கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன். :))//
அப்பாடா...!
கபீசு,
ReplyDelete//ஆமா டிபிசிடி எதுக்கு தமிழ்ல பேர் வைக்காம இப்படி சுத்த இங்கிலிஷுல வச்சிருக்கார்னு கேக்க வேண்டியது தானே? :-):-) //
அப்படி போடுங்க அருவாளை!
டிபிசிடி வாங்கய்யா வந்து இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுங்க!
This comment has been removed by the author.
ReplyDeleteடிபிசிடி / த.பி.கு.தே., (இது எப்படி?)
ReplyDelete//அழகுபுரம் பாலா வந்தார் என்பதை நீங்கள் பதிவில் சரியாக குறிப்பிடவில்லை //
அய்யா! நான் யாரையும் "இருட்டடிப்பு" செய்யவில்லையே. எல்லார் (எல்லோருக்கும்)பெயர் போட்டது போல அவரு (அவர்) பேரையும் (பெயரையும்) போட்டாச்சே (போட்டாயிற்றே); பாக்கலயா? (பார்க்கவில்லையா?)
கோவி,
ReplyDeleteஇந்த விடயம் பற்றிய பற்றியத்திற்கு நன்றி. இனி இந்த விடயத்தைப் பற்றாமல், இனி பற்றியத்தைப் பற்றலாமென நினைக்கிறேன்.
இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
//லேசாக வந்து மேலே இடிப்பார் :)//
பட்டறிவில் இங்கனம் பகலுகிறீர்கள் என்று நினைக்கலுற்றேன்.
This comment has been removed by the author.
ReplyDeleteதனித்தமிழில் எழுதுவது கடினம்தான். ஆனால் நல்லது.
ReplyDeleteஎல்லோரும் முயற்சி செய்தால், பழக்கத்தில் வந்து விட்டால் நல்லதுதானே.
நேற்று ஒரு ஈழத்துக்காரர் வானொலியில் நேயராக வந்து இயல்பான தனித்தமிழில் பேசினார். இயல்பாக இருந்ததால் சுவையாக இருந்தது.
தமிழிலேயே எழுதுவதென்றால் எதை?
ReplyDeleteஇப்போது நாம் பயன்படுத்துவது கூட வழகொழிந்து போன தமிழிலிருந்து வந்த கொச்சை வடிவம் தானே!
இல்லைங்கிறிங்களா?
அப்போ திருக்குறள், மற்றும் சில பழங்கால செய்யுள்களில் பயன்படுத்தியிருப்பது தமிழ் இல்லையா?
கோவியாரே,நீங்க நினைக்கிற மாதிரி இல்லை.தருமி அய்யா கையிலிருந்த கேமராவுக்கு பயந்து தான் அப்படி இருக்கிறது.
ReplyDeleteஅட! வாங்க சுல்தான்.
ReplyDeleteநல்லா இருக்கீகளா? பாத்து நாளாச்சு ...
நீங்க சொல்றது சரிதான். பேசுறவங்க பேசினா கேக்கிறதுக்கு நல்லாத்தானிருக்கும். இல்லீங்களா?
வாருங்கள் சுல்தான்.
நலமே இருக்கிறீர்களா? உங்களைப் பார்த்து பல நாள் ஆகிவிட்டதே! நீங்கள் சொல்வதும் சரிதான். நன்கு இயல்பாகப் பேசுபவர்களின் பேச்சைக் கேட்பதே ஒரு மகிழ்ச்சிதான்; இல்லையா?
சுல்தான்,
ரெண்டுல எதை வேணும்னாலும் எடுத்துக்கங்க. சரியா ... :)
வால்சு,
ReplyDelete//இல்லைங்கிறிங்களா?//
இப்படி சொல்வதா இல்லை, இல்லையென்கிறீர்களா? என்பதுதான் கேள்வி.
காவேரி கணேசு,
ReplyDeleteஇப்படி திருமங்கலத்தில் இருந்து கொண்டு மதுரைப் பதிவர் கூட்டமைப்பைப் புறக்கணிப்பது சரியா?
வாங்க, நம்ம கூட்டமைப்பிலும் ஒரு தேர்தல் நடத்திருவோம்! :)
வலை உலக பிரம்மாக்களை பற்றிய ஒரு பதிவு ஒன்னு போட்டு இருக்கேன் ..
ReplyDeleteநீங்க வந்து பார்த்து சில உண்மைகளை சொன்ன நல்லா இருக்கும்
அன்பின் தருமி
ReplyDeleteஅழாகான் பதிவு - அருமையான படங்கள். அவசர வேலை நிமித்தம் ( குடியிருப்பு வளாகத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்) அவசரமாகச் சென்று விட்டேன். சென்ற பிறகு தான் கூட்டம் ஒரு குறிக்கோளுடன் விவாதத்தினைத் தொடங்கி இருக்கிறது. நான் இருந்த வரை உருப்படியாக ஒன்றும் பேசவில்லை.
தனித்தமிழ் பேச நன்றாக இருக்கும் - எழுதுவது சிரமம் இல்லையா அல்லது எழுதுவது நன்று - பேசுவது சிரமம்.
அலுவல் மொழி ஆங்கிலம் - பாதி நேரம் ஆங்கிலம் - அப்புறம் எப்படித் தமிழ் பேசுவது ?
தனித்தமிழ் பேசுவது சிரமமான செயல்தான்.
நல்வாழ்த்துகள் தருமி
நன்றி பவண்டோவிற்கும் புகைப்படத்திற்கும்
துளசியின் மனம் ஏதோ சொல்கிறதே ?
மந்திரன்,
ReplyDeleteஅங்கே போய் பிரம்மாக்களைத் தேடி காணாததால் சொல்லாமல் கொள்ளாமல் திரும்பி வந்துவிட்டேன்.
நன்றி சீனா. அலுவலகத்தில் வேக வேகமாக வேலை முடித்து வந்ததற்கே தனியாக நன்றி சொல்லணும்.
ReplyDeleteஆமாமா, துளசி மனது என்னமோ சொல்லுகிறதுதான்!
இதற்கு மேலும் தூய தமிழில் எழுத வேண்டுமெனில் நான் மறுபடியம் பள்ளிக்குச் சென்று படித்துவிட்டுத்தான் வர வேண்டும்..
ReplyDeleteஎந்தப் பள்ளியில் தூய தமிழை சொல்லித் தருகிறார்கள் என்பதனை கொஞ்சம் விசாரித்து சொல்ல முடியுமா பேராசிரியரே..
என்ன கொஞ்சம் உடம்பு குறைஞ்சலாப்புல இருக்கு.. சரியா சாப்பிடலையா ஸார்..
உ.த.,
ReplyDelete'தூய' நற்றமிழா? இல்லையென்றே யாம் கருதுகிறோம்!
உடம்பு மெலிஞ்சி போச்சா ... யாரு சொன்னா? எங்க பாத்தீங்க.. அதுபாட்டுக்கு அது ஊதிக்கிட்டே போகுதுன்னு கவலைப்பட்டுக்கிட்டு இருக்கேன். நீங்க வேற ..! :(
இதுவும் தப்பு..
ReplyDeleteஇது ஒரு அடையாளம்.முழுவதுமாக தமிழ் எழுத்துக்களைக் கொண்டே எழுதும் வண்ணமே இருக்கிறது..
(சாக்குப் போக்கு கூட சரியாச் சொல்லத் தெரியாத நல்லவன் நான் என்று இப்போதாவது நம்புங்க)
//
தருமி said...
டிபிசிடி / த.பி.கு.தே., (இது எப்படி?)
//
முதல் கட்டமாக தமிழ் எழுத்துக்களைக் கொண்டே எழுதனும்.
இரண்டாம் கட்டம் வடமொழிச் சொற்களை தவிர்க்கனும்
இதைத் தான் நான் சொன்னேன்.
வழக்க மொழியில் எழுதுவதுக் குறித்து எனக்கு ஆட்சேபனை இல்லை.
அதற்காக வழக்கிலே பாதி ஆங்கிலம் தான் பேசுறேன் என்று எழுதும் போதும் அப்படியே எழுதுனா, கோழியா முட்டையா சிக்கலில் சிக்கிக்குவோம்.
மேலும் அதை நான் கடைப்பிடிக்க முயற்சிக்கிறேன்.
எல்லரும் கடைப்பிடிங்க என்றா சொன்னேன். கடைப்பிடிச்சா நல்லா இருக்கும் என்று தானே சொன்னேன். :))
அவருடைய முழுப்பெயர் போட்டதாக தெரியவில்லை என்பதால் சொல்லியிருப்பேன்.. :P
// அய்யா! நான் யாரையும் "இருட்டடிப்பு" செய்யவில்லையே. எல்லார் (எல்லோருக்கும்)பெயர் போட்டது போல அவரு (அவர்) பேரையும் (பெயரையும்) போட்டாச்சே (போட்டாயிற்றே); பாக்கலயா? (பார்க்கவில்லையா?)
//
டி.பி.சி.டி.,
ReplyDelete//அவருடைய முழுப்பெயர் போட்டதாக தெரியவில்லை என்பதால் சொல்லியிருப்பேன்//
"சோலைஅழகுபுரம் - பாலா என்ற பாலக்குமார்"
சொல்லிட்டேன்; ஆனா அவர இந்தப் பக்கமே காணோமே .. என்ன ஆச்சு?
அய்யா,
ReplyDeleteநீண்ட பின்னூட்டம் ஒன்றை எழுத நினைத்து ,முடிவில் தனிப்பதிவாகவே இட்டுள்ளேன்.
http://jaallyjumper.blogspot.com/2009/01/blog-post.html
அவ்வளவுதானா...சாரி, புதுவருடம் எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்ற குழப்பத்தில், பிறந்த மாற்றத்தில் வர முடியவில்லை!
ReplyDeleteஅதான், வீட்டுக்கு வாங்க என்றேன் :-)
//உண்மைத்தமிழன் said...
ReplyDeleteஇதற்கு மேலும் தூய தமிழில் எழுத வேண்டுமெனில் நான் மறுபடியம் பள்ளிக்குச் சென்று படித்துவிட்டுத்தான் வர வேண்டும்..//
டப்பிங்
பேண்ட்டும்தான்
டீஷர்ட்டும்,
சஸ்பென்ஸ்,
திரில்லர்
ஹோட்டல்
காரில்
கேமிராவும்
டார்ச்சர்களும்
கேரவன் வேனுக்கு
போனில்
பார்முலா ரேஸ் கார்
செல்லூலாய்டின்
பிரேம்களிலும்
ஷாட்டுகள்
குளோஸப்பில்
டிராபிக் சிக்னலில்
பைக்கிலிருந்து
ஆட்டோகிராப்
மினரல் வாட்டரை
அட்வைஸ்
ஹீரோவின்
ஸ்னூக்கர் டேபிளில்
டப்பிங்
ஸ்டைலில்
ஆர்
கேரக்டரில்
டச்சப்
ஜெட்வேகத்தில்
டிராலியில்
ரிமோட்
காமெடி
கார்ப்பரேட்
தியேட்டர்காரர்கள்.
டெக்னிக்,
சல்யூட்.
இந்த சொற்களை உரைநடப்பகுதியில் படித்தீர்களா? இல்லை செய்யுள் பகுதியில் படித்தீர்களா? ஏனென்றால் இந்த சொற்கள் உங்களின்
http://truetamilans.blogspot.com/2009/01/blog-post_10.html இந்த இடுகையில் எடுத்தவை. இதற்கும் எதாவது சாக்கு சொல்லாதீர்கள். இதில் சில சொற்களுக்கு சரியான தமிழ்சொற்களை இதே இடுகையில் சில இடங்களில் நீங்களே எழுதியிருக்கிறீர்கள்.
முயற்சி செய்கிறேன் என்று சொல்லிவிட்டு செய்யாமல் விடுங்கள். யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை. சாக்குபோக்கு சொல்லாதீர்கள்.
மதுரை சந்திப்பு தொடர்பாகவும், உமையணண் சொல்லியதை ஒட்டி நான் இட்ட பதிவு
ReplyDeleteஉமையணன் ஸார்..
ReplyDeleteஇப்பத்தான் உங்க பின்னூட்டத்தைப் படித்தேன்..
நீங்க சொல்லியிருக்கும் வார்த்தைகளெல்லாம் சினிமாவி்ல் தினமும் பயன்படுத்தும் வார்த்தைகள்.. அப்படியே பேசி, பேசி பழகிப் போய்விட்டது.. அதுதான் டைப்பிங் செய்யும்போதும் வந்து தொலைகிறது..
அதனால்தான் கொஞ்சம் இலக்கணத் தமிழும், பேச்சுத் தமிழும் கலந்து, கலந்துதான் வருகிறது.. சமாளிப்பெல்லாம் செய்யவில்லை. வேறென்ன செய்ய..?
கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவது குறித்த என் கருத்துகள்
ReplyDelete//தருமி said...
ReplyDeleteகோவி,
இந்த விடயம் பற்றிய பற்றியத்திற்கு நன்றி. இனி இந்த விடயத்தைப் பற்றாமல், இனி பற்றியத்தைப் பற்றலாமென நினைக்கிறேன்.
இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
//
இந்த மறுமொழியைப் பற்றி, என்ன சொல்வது ? எதுபற்றியும், அதுபற்றி அறிந்து கொண்டவுடன், பிடித்து இருந்தால் உடனேயே (பின்)பற்றுபவர் நீங்கள். :)
//அவருடைய முழுப்பெயர் போட்டதாக தெரியவில்லை என்பதால் சொல்லியிருப்பேன்.. :P//
ReplyDeleteநன்றி T.B.C.D !!! :)
//சொல்லிட்டேன்; ஆனா அவர இந்தப் பக்கமே காணோமே .. என்ன ஆச்சு?///
வெளியூர் போயிருந்தேன் அய்யா ,,,
சந்திப்பை பதிந்தமைக்கு நன்றி !!!