*
வாசித்தது ...
வாசித்துக் கொண்டிருப்பது ...
வாசிக்க வேண்டியது ...
*
மதங்களைப் பற்றி பல நூல்கள் வாசிக்கும்போது அவ்வப்போது எழும் ஐயங்களைத் தொகுக்க ஓரிடம் வேண்டுமல்லவா? என் பதிவுகளில் அதற்கான ஒரிடம் இது. எனக்குள் எழும் ஐயங்களை இங்கே தொகுத்து வைக்கின்றேன். இதை நீங்கள் வாசிப்பீர்களா இல்லை தவிர்த்து விடுவீர்களா என்பதல்ல .. எனக்கு ஓரிடம் வேண்டும்; அங்கங்கே வாசிப்பதை நூல்களில் வெறும் கோடிட்டு வைத்து விட்டு மறந்து விடுவது போலல்லாமல் தொகுக்க என் இடம் இது.
*
சிறு வயதிலிருந்தே பல சமயச் செய்திகள் மனத்தின் ஆழத்தில் புதைக்கப்படுகின்றன.
அந்த வயதில் நம் மனத்துக்குள் புதைக்கப்படும் அத்தகைய "சமய உண்மைகள்" வாழ்க்கையில் எப்போதும் நிரந்தர இடம் பிடிக்கவே பெரும்பாலும் வாய்ப்பாக ஆகிவிடுகிறது. அந்த "உண்மைகள்" மீது நாம் கேள்விகள் எழுப்பவே எப்போதும் பயப்படுகிறோம்; அது தவரென்று எப்போதும் நமக்குக் கற்பிக்கப்பட்டிருப்பதால் அந்த நினைப்புகளையே "பாவம்" என்று ஒதுக்கி விடுகிறோம். எப்போதாவது எழும் ஐயங்களை ஒதுக்கித் தள்ள நமக்கு ஏற்கெனவே "பாடங்கள்" சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கும்.
உதாரணமாக, கத்தோலிக்க கிறித்துவ, பிரிவினைக் கிறித்துவ பெண்கள் பொட்டு வைத்துக் கொள்வதில் முரண்பாடு உண்டு. அடிப்படைக்காரணம் என்ன என்பது தெரியாமலேயே இதில் முழு வேற்றுமையைக் காண்பிப்பார்கள். சில காதல் திருமணங்கள் கூட இந்த வேற்றுமையால் மணவிலக்கு வரை சென்றதுகூட எனக்குத் தெரியும். சொல்லிக்கொடுத்ததைத் தாண்டாத மக்கள் ....!!
அப்படி சொல்லிக்கொடுக்கப்பட்ட சில "பாடங்கள்".
THE HOLY TRINITY: தம திரித்துவம் என்பர். அதாவது கடவுள் மூன்று ஆட்களாக (தந்தை, மகன், பரிசுத்த ஆவி என்று ... ) இருக்கிறார்; ஆனால் ஒரே கடவுளாக இருக்கிறார். இதை விளக்க யாரும் முயல்வதில்லை. அதற்குப் பதிலாக சின்னப் பிள்ளை கடல் நீரை சிரட்டையால் கடல் கரையின் சிறு பள்ளத்தில் நிரப்ப முயல்வது போன்ற செயல் அது என்று ஒரு கதை சொல்லி அதைப் பற்றி நினைப்பதே தவறு என்று பாடம் சொல்லி விடுவார்கள். அகுஸ்தினார் என்ற புனித / அறிஞருக்கே எட்டாத விஷயம் என்று சொல்லி 'அமுக்கிவிடுவார்கள்'.
ஏசு கடவுள் என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்டதில்லையே. அவரை ஏன் கர்த்தராக்கினீர்கள் என்றெல்லாம் கேட்கக் கூடாது.
ஏசு ஒரு சின்ன மக்கள் கூட்டத்திற்கு - யூதர்களுக்கு - வந்ததாகவும், அவர்களே கடவுளால் 'தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்' எனவும் விவிலியத்தில் பல இடங்களில் இருக்கிறதே என்று கேட்டாலும் பதில் வராது.
மத்தேயு (10: 5,6) இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,
காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திலும் போங்கள். - இதன் பொருள் ஏசு ஒரு சின்ன மக்கள் குழுவிற்கு மட்டும் வந்ததாகத்தானே தெரிகிறது?!
(கத்தோலிக்க விவிலியம்: இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: "பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். மாறாக வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.)
மத்தேயு (10:23) மனுஷ குமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றி முடியாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன். ????????????
(கத்தோலிக்க விவிலியம்: ... மானிட மகனின் வருகைக்கு முன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.)
கத்தோலிக்கர்களின் 'நன்மை' - holy communion - ஒரு அடையாளச் செயல்தானே; அதில் சொல்லப்படுவது போல் ரொட்டித்துண்டு ஏசுவின் ரத்தமாக, சதையாக மாறுவதுண்டா என்று கேட்கப்படக்கூடாது.
ஏசுவிற்குப் பிறகு மரியாளுக்கு குழந்தைகள் பிறந்தன. ஜேம்ஸ் என்றெல்லாம் இருக்கிறதே என்றால் அது பிரிவினைக்காரர்களின் - protestants - கருத்து என்று ஒதுக்கப்படும்.
இதெல்லாம் போதாதென்றால், விவிலியத்தின் ஒவ்வொரு வார்த்தையும் கடவுளின் அருளால், அதுவும் சிறப்பாக பரிசுத்த ஆவியின் 'ஏவுதலால்' எழுதப்பட்டவை என்ற ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.
ஆனால் டா வின்ஸி கோட் கதை வாசித்து சிறிது கிளறிய பின்பே -கிறிஸ்து இறந்து 325 ஆண்டுகளுக்குப் பிறகு Constantine , the great என்ற மன்னன் மூலமாகக் கூட்டப்பட்ட முதல் கிறித்துவர் "மாநாட்டில்"தான் (First Council of Nicaea in 325 A.D.) ஏசு கடவுள் என்பதுவும், இருந்த பல புத்தகங்களிலிருந்து சிலவற்றை மட்டும் விவிலியமாக தேர்ந்தெடுக்கப்பட்டன என்றும் gnostic gospels போன்ற சில நூல்கள் புறந்தள்ளப்பட்டன என்பதுவும் தெரிந்தது. இதைத் தேர்ந்தெடுத்ததும் முழுவதுமான சமயக் காவல்ர்களோ, தலைவர்களோ இல்லாமல் சில அரசியல் காரணங்களுக்காக மன்னவனே முன்னின்று நடத்தியது என்பது தெரிகிறது. ஏசுவின் சகோதரர் ஜேம்ஸ், மரிய மகதலேன், பீட்டர் (ராயப்பர்), Gospel of Thomas, Gospel of Philip, Apocryphon (Secret book) of John ( The Gnostic Gospels, Elaine Pagels (XV-XVI) - இந்த நூல்கள் மறைக்கப்பட்டு வேறு நால்வரின் நூல்கள் மட்டும் ஏன் கரையேறின என்பது தெரியவில்லை.
ஏசுவின் வாழ்க்கையில் 'மறைந்த ஜீவியம்' என்று பல ஆண்டுகளைச் சொல்வதுண்டு. அதன் தேவையோ, காரணமோ என்ன?
மார்க் எழுதிய விவிலியம் ஏசுவிற்குப் பின் 70-80-ன் ஆண்டிலும், லூக், ஜாண் இருவரின் விவிலியம் 90-110 ஆண்டிலும் எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது. இரண்டிலும் சிலுவையில் ஏசுவின் மரணம் வேறு வேறு விதமாகக் கூறப்படுவதின் காரணம் என்ன? (The Gnostic Gospels, Elaine Pagels, pp71)
மத்தேயு (10: 34, 35) பூமியின் மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன். எப்படியெனில், மகனுக்கும் தக்ப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகனுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
????????!!!!!!!!!!!!! இதெல்லாம் ஒண்ணும் புரியலையே ...
(கத்தோலிக்க விவிலியம்: "நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும், தாய்க்கு எதிராக மகளையும், மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன்.)
*
கிறித்தவ மதத்துக்காகவே தன் வாழ்நாளைக் கழித்த அன்னை தெரஸாவின் வாக்கு மூலத்தை கீழே தருகிறேன். அன்னை தெரஸாவின் நிலையே இப்படி என்றால் மற்றவர்களைப் பற்றி சொல்லவா வேண்டும்.
“பதில் கிடைக்காத கேள்விகள் பல எனக்குள் வாழ்கின்றன தேவதூஷணமாகிவிடும் என்பதால் அவற்றை வெளியிட அஞ்சுகிறேன் ஒருவேளை கடவுள் இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் சிந்னைகளை சொர்க்கத்தை நோக்கி எழுப்ப முயல்கிறேன் அங்கோ தண்டிக்கும் வெறுமை அந்தச் சிந்தனைகள் கூரிய கத்திகளாய்த் திரும்ப வந்து என் இதயத்தைக் கிழிக்கின்றன தேவன் என்னை நேசிப்பதாகச் சொல்கிறார்கள் இருப்பினும் எதார்த்தத்தில் இருளும் உணர்ச்சியின்மையும் வெறுமையும் என்னுள் நிறைந்து மேலோங்கியிருப்பதால் எதுவும் என் ஆன்மாவைத் தொடுவதில்லை பரிசுத்த ஆவியின் அழைப்பை ஏற்று குருட்டுத்தனமாக என்னை ஒப்புக்கொடுத்ததன் மூலம் தவறு செய்து விட்டேனோ?”
“என்னுள் ஓங்கி நிறைந்திருக்கும் வெறுமை காரணமாக நான் பார்க்கிறேன், ஆனால் கவனிப்பதில்லை கேட்கிறேன், ஆனால் காது கொடுப்பதில்லை என் நாக்குதான் அசைகிறது, நான் பேசுவதில்லை.”
“என்னை நானே எதற்காக வருத்திக் கொள்கிறேன்? தேவன் இல்லையெனும்போது ஆன்மாவும் இருக்க முடியாது ஆன்மா இல்லையென்றால் யேசுவே நீரும் உண்மையல்ல.”
மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸின் மூத்த உறுப்பனரும், தெரசாவுக்கு ‘புனிதர்’ பட்டம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து வருபவருமான அருட்தந்தை ப்ரியன் கலோடிஜெக் வெளியிட்டுள்ள ‘அன்னை தெரசா - என் ஒளியாய் இரு’ என்ற நூலில் தனது நம்பிக்கையின்மையை வெளியிடும் வண்ணம் தெரசா எழுதிய சுமார் 40 இரகசியக் கடிதங்கள் தொகுக்கப்பட்டதில் ஒரு பகுதி.
அந்த நூலின் சில பகுதிகளை இங்கு காணலாம் ...

மதிபிற்குரிய தருமி அவர்களுக்கு தங்களுடைய கட்டுரையை இன்று படித்தேன்.
ReplyDeleteநம் இரைச்சல் நிறைந்த இடத்தை சொல்லு வழக்கமாக "சந்தை கடை சத்தம்" போல என்று சொல்லுவார்கள்.ஆனால் சந்தைக்குள் சென்று பார்த்தாலே அங்கு வீணான எந்த சத்தமும் இருக்காது.அவரவர் அவர்களுடைய பொருட்களை குறித்த காரியங்களில் மும்முரமாக இருப்பார்கள்.ஆனால் வெளியே இருந்து கேட்கும் பொழுது வெறும் இரைச்சல் போன்ற சத்தம் மட்டுமே கேட்கும்.
எனக்கு இது புரியவில்லை,அது புரியவில்லை என்று சொல்லும் நீங்கள் யாரிடம் இது குறித்த விளாக்கத்தை கேட்டீர்கள்.திரித்துவத்தை குறித்துக்கேட்டால் யாரும் விளக்குவதில்லை என்று சொல்லி ஒரு கதை சொல்லிவிடுவார்கள் என்று சொல்லியுள்ளீர்கள்.யாரோ ஒருவர் உங்களிடம் அப்படி சொன்னதற்காக எல்லோருடைய பதிலும் அப்படித்தான் என்று முடிவு கட்டிவிடக்கூடாது.
பொதுவாக டிரினிட்டி குறித்த அனைத்து விவாதங்களும் ஆங்கில தளங்கள் ஆயிரக்கணக்கில் இணையதளம் எங்கும் உள்ளது.அதை நீங்கள் தேடி வாசித்துள்ளீர்களா?
இயேசு சொன்ன வாக்கியங்களில் கேள்விக்குறியிட்டுள்ளீர்கள் இதன் விளக்கத்தை பெற நீங்கள் முயற்சி செய்தீர்களா?
டாவின்சிகோட் வருவதற்கு முன் தெரியாது என்று சொல்லும் நீங்கள் தெரிந்த காரியம் உண்மையா என்று அறிந்துகொள்ள முயற்சி செய்தீர்களா.சல்மான் ருஸ்டி எழுதிய பிறாகுதான் குரானில் சாத்தான் சொன்ன வசனங்கள் உண்டு என்று அறிந்து கொண்டோம் என்று ஒருவர் சொன்னால் ஒத்துக்கொள்ளூவீர்களா?
நிறைய விசயங்கள்!
ReplyDeleteமத்தேயு (10: 34, 35)
//வாத்தியாரே,
ReplyDeleteஒரு சின்ன சந்தேகம் .நீங்கள் முன்னாள் கத்தோலிக்கர் தானே (ஹி ஹி) ..ஆனால் நீங்கள் மேற்கோள்காட்டும் விவிலிய வார்த்தைகள் கத்தோலிக்கர் உபயோகிக்கும் மொழிபெயர்ப்பு அல்லவே ..ஏன்?
//...யாரிடம் இது குறித்த விளாக்கத்தை கேட்டீர்கள்//
ReplyDelete//...நீங்கள் தேடி வாசித்துள்ளீர்களா?//
//அதை நீங்கள் தேடி வாசித்துள்ளீர்களா?//
//இதன் விளக்கத்தை பெற நீங்கள் முயற்சி செய்தீர்களா?//
//நீங்கள் தெரிந்த காரியம் உண்மையா என்று அறிந்துகொள்ள முயற்சி செய்தீர்களா?//
நிறைய கேள்விகள். முயற்சி செய்யாமல்தானா இத்தனை கேள்விகள் ஒருவன் கேட்க முடியும்.
ஒரு சான்று: மத்தேயு (10: 34, 35)இதற்கான ஒரு விளக்கம் இங்கே:
http://christhunesan.blogspot.com/2009/06/isa-koran-1034.html
விளக்கம் மட்டும்தான் அது. ஆனால் அது நான் ஒத்துக்கொள்ளும் விஷயமா என்றால் ... இல்லை.
நன்றி வால்ஸ்/.
ReplyDeleteநன்றி ஜோ, இரண்டையும் தந்துள்ளேன். முதலிலேயே இப்படி தந்திருக்கலாம். நன்றி.
mmmmmm..........:-))))))))
ReplyDeleteதெய்வமகன் said,
ReplyDelete///////யாரோ ஒருவர் உங்களிடம் அப்படி சொன்னதற்காக எல்லோருடைய பதிலும் அப்படித்தான் என்று முடிவு கட்டிவிடக்கூடாது.///////
ஆதாம் செய்த பாவம் எல்லா மனிதர்களுக்கும் சேர்வதைபோலவும்,
ஏவாள் செய்த பாவம் எல்லா பெண்களுக்கும் சேர்ந்ததைப்போலவும்,
யாரோ ஒரு(கிறித்த)வர் சொன்ன பதிலையே எல்லோரு(கிறித்தவர்களு)டைய பதிலாக எடுத்து கொண்டால் என்ன தவறு?
நீங்கள் "தெய்வமகன்" என்றால் ஏசு தெய்வ மகனில்லையா? ஏன் உங்களுடைய நம்பிக்கைகளை நீங்களே உடைத்து கொள்கிறீர்கள்?
//விளக்கம் மட்டும்தான் அது. ஆனால் அது நான் ஒத்துக்கொள்ளும் விஷயமா என்றால் ... இல்லை.
ReplyDelete//
நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று யாரும் உங்களை கட்டாயப்படுத்த முடியாது.ஆனால் நீங்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்பதனால் விளக்கம் தவறாஅனது ஆகிவிடாது தருமி அவர்களே
"THE HOLY TRINITY: தம திரித்துவம் என்பர். அதாவது கடவுள் மூன்று ஆட்களாக (தந்தை, மகன், பரிசுத்த ஆவி என்று ... ) இருக்கிறார்; ஆனால் ஒரே கடவுளாக இருக்கிறார். இதை விளக்க யாரும் முயல்வதில்லை."
ReplyDeleteThis video is the first thing that came to my mind as soon as I read that- :)
http://www.youtube.com/watch?v=mII6-IyaT3o&feature=player_embedded
"அந்த வயதில் நம் மனத்துக்குள் புதைக்கப்படும் அத்தகைய "சமய உண்மைகள்" வாழ்க்கையில் எப்போதும் நிரந்தர இடம் பிடிக்கவே பெரும்பாலும் வாய்ப்பாக ஆகிவிடுகிறது. அந்த "உண்மைகள்" மீது நாம் கேள்விகள் எழுப்பவே எப்போதும் பயப்படுகிறோம்; அது தவரென்று எப்போதும் நமக்குக் கற்பிக்கப்பட்டிருப்பதால் அந்த நினைப்புகளையே "பாவம்" என்று ஒதுக்கி விடுகிறோம். எப்போதாவது எழும் ஐயங்களை ஒதுக்கித் தள்ள நமக்கு ஏற்கெனவே "பாடங்கள்" சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கும்."
Exactly. This has to be declared as a type of child abuse. Because our cultural practices just forbid children to think and ask questions, which is One of the most basic and much needed skill for the growing minds. Instead they indoctorine kids with all their absurd beliefs and superstitions without any wisdom behind them.
I was a hindu by birth - Nope should correct that - I inherited the hindu faith from my parents/family when I was born. Although my parents were very moderate believers, I did study hinduism throughout my high school and some epics/stories related to hinduism even in my Tamil classes. No surprisingly, nobody stimulated our thinking with arguments/debates/alternate thoughts or theories in relation to for example - Manu neethi or Baghawat geethai.
Much later, when I started to look into these things seriously, I was dumbfounded to say the least. I was also furious at my teachers for not even alerting us to the truth.
BTW,
I saw Christopher Hitchens's book in your pile of books. I thought you might be interested in this.
http://www.youtube.com/watch?v=PvZz_pxZ2lw&feature=player_embedded
THere are five parts of this debate - all available on you tube.
//இயேசு யூதர்களுக்காக மட்டுமே வந்தார்.//
ReplyDeleteபின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். (மாற்கு 16:15,20a)
//holy communion- இல் கொடுக்கப்படும் ரொட்டித்துண்டு ஏசுவின் ரத்தமும் சதையுமாக மாறவில்லை.//
அவர்கள் போஜனம் பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய
சரீரமாயிருக்கிறது என்றார்.
பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; (மத்தேயு 26:26,27)
//விவிலியத்தின் ஒவ்வொரு வார்த்தையும் கடவுளின் அருளால், அதுவும் சிறப்பாக பரிசுத்த ஆவியின் 'ஏவுதலால்' எழுதப்பட்டதா?//
இது அவரவர் நம்பிக்கையை பொறுத்த விஷயம்.
//டா வின்சி கோட்: ஏசு கடவுளாக பின்னர் ஏற்கப்பட்டார், விவிலியத்தின் சில பகுதிகள் புறந்தள்ளப்பட்டன.//
Read: http://www.answering-islam.org/tamil/authors/wales/jesus_paul.html
http://www.titusinstitute.com/gnosticgospels/whyacceptntgospels.php
http://www.thetruthaboutdavinci.com/christian-analysis-of-da-vinci-code.html
//ஏசுவின் வாழ்க்கையில் 'மறைந்த ஜீவியம்' என்று பல ஆண்டுகளைச் சொல்வதுண்டு.//
வெறும் யூகத்திற்கெல்லாம் பதில் கூற முடியாது.
//சிலுவையில் ஏசுவின் மரணம் வேறு வேறு விதமாகக் கூறப்படுகிறது.//
http://www.learnthebible.org/contradictions-in-the-gospels.html
//இயேசு பூமியின் மேல் சமாதானத்தை அனுப்ப வரவில்லை.//
http://www.answering-islam.org/BibleCom/mt10-34.html
http://www.answering-islam.org/Authors/Arlandson/sword.htm
//அன்னை தெரசா இயேசுவை நம்பவில்லை. //
சில சந்தர்ப்பங்களில் கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகம் எல்லாருக்கும் வரக்கூடிய ஒன்றுதான்.
http://www.servelec.net/mothertheresa.htm
தருமி அவர்களே,
விமர்சனம் செய்யும் முன் இரண்டு பக்கமுள்ள கருத்துக்களையும் படித்து விட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள். ஒரு வேளை பைபிள் படிப்பதை கவுரவ குறைச்சலாகவோ
முட்டாள்தனமான செயலாகவோ கருதினால் இணைய தளங்களில் ஏராளமாக கொட்டிக் கிடக்கும் தகவல்களையாவது தெரிந்து கொண்டு எது சரி எது தவறு என்பதை முடிவு
செய்யுங்கள். அதை விடுத்து வெறும் எதிர் கருத்துக்களை மட்டும்தான் எடுத்துக்கொள்வேன் என்று அடம்பிடித்தால் அதை சிறு பிள்ளைத்தனமாகத்தான்
எடுத்துக்கொள்ளமுடியும்.
//ஆதாம் செய்த பாவம் எல்லா மனிதர்களுக்கும் சேர்வதைபோலவும்,
ReplyDeleteஏவாள் செய்த பாவம் எல்லா பெண்களுக்கும் சேர்ந்ததைப்போலவும்,
யாரோ ஒரு(கிறித்த)வர் சொன்ன பதிலையே எல்லோரு(கிறித்தவர்களு)டைய பதிலாக எடுத்து கொண்டால் என்ன தவறு?//
ஆதாம் பாவம் செய்தது கடவுளுக்கு விரோதமாக.கடவுளுக்கு யாரும் பதில் சொல்லவில்லையே.இங்கு மனிதனுக்குத்தானே பதில் சொல்லியுள்ளார்கள்.
//நீங்கள் "தெய்வமகன்" என்றால் ஏசு தெய்வ மகனில்லையா? ஏன் உங்களுடைய நம்பிக்கைகளை நீங்களே உடைத்து கொள்கிறீர்கள்?//
இதில் உடைக்க என்ன உள்ளது.நீங்கள் மிரட்டல் என்று பெயர் வைத்தால் ஊரில் யாரும் மிரட்ட முடியாத இல்லை உங்களுக்கு முன் யாருமே மிரட்டவில்லையா?
//நீங்கள் "தெய்வமகன்" என்றால் ஏசு தெய்வ மகனில்லையா? ஏன் உங்களுடைய நம்பிக்கைகளை நீங்களே உடைத்து கொள்கிறீர்கள்?//
ReplyDeleteஏன்? தெய்வமகனாக ஒருத்தர் தான் இருக்க முடியுமா? (இல்லை, கிருத்துவம் அப்படித்தான் சொல்கிறதா என்று எனக்கு தெரியவில்லை).
நானும் பிதாமகன் தான். நானும் கடவுள் தான். ;)
////ஏசுவின் வாழ்க்கையில் 'மறைந்த ஜீவியம்' என்று பல ஆண்டுகளைச் சொல்வதுண்டு.//
ReplyDeleteவெறும் யூகத்திற்கெல்லாம் பதில் கூற முடியாது.//
இது யூகமா!?
தெரியலைனா தெரியலைன்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே!
பைபிளை முழுதாக கரைத்து குடித்த உங்களுக்கே தெரியல,நாங்க படிச்சு மட்டும் அந்த கேப்புல இயேசு யார் கூட குடும்பம் நடத்திகிட்டு இருந்தார்னு கண்டுபிடிச்சிருவோமா என்ன!?
நீங்க கொடுத்த எல்லா லிங்குலயும் சப்பை கட்டு தான் இருக்கு, விளக்கம் இல்ல!
பைபிளை படிக்கிறவனுக்கு அதன் அர்த்தம் புரியனும், அதை அப்படி எடுத்து கொள்ளக்கூடாது, இப்படி எடுத்து கொள்ளக்கூடாதுன்னா எதுக்கு பைபிள் எல்லாம் கையிலும்!
//நானும் பிதாமகன் தான். நானும் கடவுள் தான். ;)//
ReplyDeleteசீனு,
Oh! god என்று ஒரு படம் பார்த்தேன். நல்ல படம். மேலே சொன்ன வசனம் அதில் வரும்.
ஸ்ரீ,
ReplyDeleteயாருங்க உங்களை இப்படி மோசமா ஒரு படம் பிடிச்சா. அந்த ஆளை மறுபடி நல்லபடியா ஒரு படம் பிடிக்கச் சொல்லுங்க :)
தெய்வமகன்,
ReplyDelete//நீங்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்பதனால் விளக்கம் தவறானது ஆகிவிடாது //
நான் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் எனக்கு அந்த விளக்கம் தவறு என்பதுதான் பொருள்.
//I was also furious at my teachers for not even alerting us to the truth. //
ReplyDeleteha .. haa.. the anylyst,
i tried to be a teacher of another sort!!
thanks for the you tube .... the movies you sent earlier were very good, though i have seen them partially. thanks
மிரட்டலுக்கு நன்றி.
ReplyDeleteராபின்,
ReplyDelete(மாற்கு 16:15,20a) - இதையும் தாண்டி இன்னும் பல சான்றுகளை விவிலியத்திலிருந்தே கொடுத்திருக்கிறேன். மனமிருந்தால் "கண்களைத் திறந்து" வாசியுங்கள்.
//இது அவரவர் நம்பிக்கையை பொறுத்த விஷயம்.//
அதற்குத்தான் கான்ஸ்டாண்டின் நடத்திய அந்தக் கூட்டத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறேன்.
//வெறும் யூகத்திற்கெல்லாம் பதில் கூற முடியாது.//
எதை யூகம் என்கிறீர்கள்?
//சில சந்தர்ப்பங்களில் கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகம் எல்லாருக்கும் வரக்கூடிய ஒன்றுதான்.//
நல்லது.
உங்கள் கடைசி பத்திக்கு: நன்றி
//தெரியலைனா தெரியலைன்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே!
ReplyDeleteபைபிளை முழுதாக கரைத்து குடித்த உங்களுக்கே தெரியல,நாங்க படிச்சு மட்டும் அந்த கேப்புல இயேசு யார் கூட குடும்பம் நடத்திகிட்டு இருந்தார்னு கண்டுபிடிச்சிருவோமா என்ன!?// - பைபிளில் எங்கேயும் இயேசு நாதர் திருமணம் செய்ததாக குறிப்பிடப்படவில்லை. இல்லாத ஒன்றை தெரியவில்லையா என்று கேட்பது அபத்தம்.
//நீங்க கொடுத்த எல்லா லிங்குலயும் சப்பை கட்டு தான் இருக்கு, விளக்கம் இல்ல!// கண்ணை மூடிக்கொண்டால் இருட்டாகத்தான் இருக்கும்.
//பைபிளை படிக்கிறவனுக்கு அதன் அர்த்தம் புரியனும்// பைபிள் எல்லா மொழிகளிலும் உண்டு. தீர்க்கதரிசனங்கள் (prophecies) மட்டுமே சங்கேத மொழியில் இருக்கும். மற்ற எல்லா பகுதிகளும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாகத்தான் இருக்கிறது. அப்படியும் சந்தேகம் இருந்தால் அதற்கென்றே ஏராளமான இணைய தளங்கள் உண்டு, அங்கே சென்று தெரிந்து கொள்ளலாம்.
கடவுள் என்ற முன்முடிவோடு இல்லாமல் திறந்த மனதுடன் படித்தால் உண்மை புரியும்.
//ஓக்! கொட் என்று ஒரு படம் பார்த்தேன். நல்ல படம். மேலே சொன்ன வசனம் அதில் வரும்.//
ReplyDeleteஅப்படியா! பார்த்துட்டு வந்து பேசிக்கிறேன் ;)
//நான் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் எனக்கு அந்த விளக்கம் தவறு என்பதுதான் பொருள்.//
வாத்தியார் தொழில இன்னும் விடவில்லை போல இருக்கு?
வாசிச்சி பார்க்காமலே ஒரு பின்னூட்டம் போட்டுட்டேன். அந்த படம்; Oh! god
ReplyDeleteகிறித்துவ மக்களுக்காகவே எடுத்த படம்! நல்லா இருக்கும். கடவுள் மறுப்பு இல்லை; நல்லா இருக்கும்.
//பைபிளில் எங்கேயும் இயேசு நாதர் திருமணம் செய்ததாக குறிப்பிடப்படவில்லை. இல்லாத ஒன்றை தெரியவில்லையா என்று கேட்பது அபத்தம். //
ReplyDeleteஅந்த கேப்புல அவர் வெளிநாட்டுக்கு படிக்க போனாருக்கும்!
/தீர்க்கதரிசனங்கள் (prophecies) மட்டுமே சங்கேத மொழியில் இருக்கும்.//
அப்ப தீர்க்க தரிசனம் என்பதே சந்தேகம் தானே!
//கடவுள் என்ற முன்முடிவோடு இல்லாமல் திறந்த மனதுடன் படித்தால் உண்மை புரியும். //
திறந்த மனசோடன்னா சட்டையில்லாமயா!?
என்னாங்க இது கதை கதை சொல்றிங்க!
ஒரு விசயத்தை நம்புறதுக்கு அடிப்படை லாஜிக் வேண்டாமா!?
//டா வின்ஸி கோட் கதை வாசித்து சிறிது கிளறிய பின்பே -கிறிஸ்து இறந்து 325 ஆண்டுகளுக்குப் பிறகு Constantine , the great என்ற மன்னன் மூலமாகக் கூட்டப்பட்ட முதல் கிறித்துவர் "மாநாட்டில்"தான் (First Council of Nicaea in 325 A.D.) ஏசு கடவுள் என்பதுவும், இருந்த பல புத்தகங்களிலிருந்து சிலவற்றை மட்டும் விவிலியமாக தேர்ந்தெடுக்கப்பட்டன என்றும் gnostic gospels போன்ற சில நூல்கள் புறந்தள்ளப்பட்டன என்பதுவும் தெரிந்தது//
ReplyDelete//அதற்குத்தான் கான்ஸ்டாண்டின் நடத்திய அந்தக் கூட்டத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறேன்.//
கேட்டிருக்கிறேன் என்கிறீர்கள்.ஆனால் உண்மையில் அந்த சொல்லியிருக்கிறீர்கள்.
நைசியன் கவுன்சிலில் கிறிஸ்தவ மதத்தில் புகுத்தப்பட இருந்த பல தவறான கொள்கைகளை தடுக்கவே கூடியது.இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து பரமேறிச்சென்ற சம்பவத்துக்கு பின் எருசலேமிலும் மற்ற பகுதியிலும் இருந்த சீடர்கள் இயேசுவின் சுவிஷேசங்களை சுமந்தவர்களாக அறிவித்து வந்த பொழுது பலவிதங்களில் கொடுமை செய்யப்பட்டனர்.பலர் படுகொலை செய்யப்பட்டனர்.அந்தக்காலங்களில் அப்போதலர்கள் எனப்படும் இயேசுவின் சீடர்களுக்கு பின் அவர்களை பின்பற்றிய சபை பிதாக்கள் அவரின் சுத்த சுவிஷேசத்திற்காக தங்களையும் அழிக்க ஒப்புக்கொடுத்தனர்.ரோம பேரரசர்களில் வாள்களுக்கும்,நெருப்புகளுக்கும்,சிங்கங்களுக்கும் இரையாகப்போன கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகப்பெரியது.ஆனாலும் கிறிஸ்தவம் பரவுவதை யாராலும் தடை செய்ய முடியவில்லை.
ஆனால் மூன்று நூற்றாண்டுகள் கழிந்த பிறகு தன்னையே கடவுள் என்று வணங்க சொல்லும் ரோமப் பேரரசின் பேரரசனாக இருந்த கான்ஸ்டாண்டின் என்பவர் கிறிஸ்தவனாக மாறினதினால் கிறிஸ்தவம் முதல் முறையாக அரசாங்க மதமாக மாறினது.அதற்குள் இயேசுவின் சீடர்கள் அவர்களுடைய சீடர்கள் ஆகியோர் காலத்தில் தலைதுக்க முடியாமல் இருந்த சில குழப்பவாதிகளுக்கு இச்சந்தர்பத்தில் தங்களின் கைவரிசையை காட்ட முயற்சித்தனர்.இதனை கண்ட அரசன் ஒரு கூட்டத்தை கூட்டினான் அதுவே நைசியன் கவுன்சில்.அதில் முதிர்ந்த சபைபிதாக்கள் எல்லோரும் அழைக்கப்பட்டிருந்தனர்.ஏறாக்குறாஇய 422 பேர் அதில் அடங்குவர்.
அந்த குழுவில் இயேசுவின் சீடர்கள் ,மற்றும் அவர்களின் நேரடி சீடர்கள் ஆகியோ பயன்படுத்திய சுருள்கள் பற்றிய எல்லா கருத்து விளக்கங்களும் எடுத்து சொல்லப்பட்டு அவர்கள் பின்பற்றிய கருத்தையே எல்லோரும் அதாவது இயேசு கிறிஸ்துவின் உண்மை சீடர்கள் மற்றும் அவர்களை பின்பற்றி வாழ்ந்த சபைபிதாக்கள் ஆகியோ உபயோகித்த வேதப்பகுதிகள் மட்டுமே புதிய ஏற்பாடாக தொகுக்கப்பட்டது.அந்த நேரத்தில் குழப்பவாதிகளாக இருந்தவர்கள் சில புத்தகங்களை அதாவது நீங்கள் சொன்ன சில புத்தகங்களும் அங்கு விவாததுக்கு வைக்கப்பட்டு அவைகள் இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் எழுதப்பட்டதோ அல்லது அவர்களின் நேரடி சீடர்களால் அங்கீகரிக்கபட்டதாகவோ இல்லாத காரணத்தினாலும் அவைகள் புதிய ஏற்பாட்டில் சேர்க்கப்பட வேண்டாம் என்று அங்கு கூடியிருந்த பெரும்பான்மையோரால் அங்கீகரிக்கப்பட்டது.எதிர் கருத்துடையவர்களான இரண்டுபேரின் கருத்துகள் மட்டும் ஆதாரமில்லாதபடியினால் தள்ளப்பட்டது.
இதுதான் நைசியன் கவுன்சிலின் தீர்மானம் ஆகும்
//பைபிளை படிக்கிறவனுக்கு அதன் அர்த்தம் புரியனும், அதை அப்படி எடுத்து கொள்ளக்கூடாது, இப்படி எடுத்து கொள்ளக்கூடாதுன்னா எதுக்கு பைபிள் எல்லாம் கையிலும்!//
ReplyDeleteஎந்தப் புத்தகத்தையும் அதை ஆக்கியோன் சொல்லும் வரைமுறைகளோடுதான் அனுக வேண்டும்.நாம் நினைத்த அல்லது ந்மக்கு விளங்கிய விதத்தில் பயன்படுத்தினால் அதன் விளைவுகள் ந்ம்மையே சாரும்
//////////இதில் உடைக்க என்ன உள்ளது.நீங்கள் மிரட்டல் என்று பெயர் வைத்தால் ஊரில் யாரும் மிரட்ட முடியாத இல்லை உங்களுக்கு முன் யாருமே மிரட்டவில்லையா?///////////
ReplyDeleteஇந்த கருத்து மூலம் நீங்களும் கடவுள் என்று சொல்லுகின்றீர்களா?ஏசுவுக்கு பின் பவுல் வந்து சுவிஷேம் எழுதியது போல் உங்களுக்கு பின் பவுல் போல யாராவது உங்களுக்கும் சுவிஷேசம் எழுத வருவார்களா என்ன?
///////(தந்தை, மகன், பரிசுத்த ஆவி என்று ... ) இருக்கிறார்////////
ReplyDeleteதந்தை வானத்தில் இருப்பவர் என்று சொகிறீர்கள்.
மகன் பூமிக்கு வந்தார் என்று சொல்கிறீர்கள்.
இயேசு இறந்த பின் பரிசுத்த ஆவியானார் என்று சொல்கிறீர்கள்.
பரிசுத்த ஆவி என்றால் என்ன?கொஞ்சம் விளக்கம் கொடுக்கமுடியுமா? தெரிந்து கொள்ள வேண்டுமென நினைக்கிறேன்.
ராபின்,
ReplyDelete//பைபிளில் எங்கேயும் இயேசு நாதர் திருமணம் செய்ததாக குறிப்பிடப்படவில்லை.//
பைபிளில் எங்கேயும் இயேசு நாதர் திருமணம் செய்யாததாக குறிப்பிடப்பட்டிருக்கிறதா??????
ROBIN SAID,
ReplyDelete///////கண்ணை மூடிக்கொண்டால் இருட்டாகத்தான் இருக்கும். ////////
கண்ணை துறந்துதான் படித்தோம் எல்லாம் சப்பை கட்டுதான்.
ROBIN SAID,
//////தீர்க்கதரிசனங்கள் (prophecies) மட்டுமே சங்கேத மொழியில் இருக்கும். மற்ற எல்லா பகுதிகளும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாகத்தான் இருக்கிறது. அப்படியும் சந்தேகம் இருந்தால் அதற்கென்றே ஏராளமான இணைய தளங்கள் உண்டு, அங்கே சென்று தெரிந்து கொள்ளலாம்./////////
உங்களுடைய எல்லா தளங்களிலும் கிறித்தவத்துடைய விளக்கங்கள் இருப்பதற்கு பதிலாக மற்ற எல்லா மதங்களைப்பற்றியும் "சாடி"தானே இருக்கின்றீர்கள். பிறகு நாங்கள் எங்கு சென்று விடை தேடுவது.
எங்கே சென்றார்கள் ராபின்,தெய்வ மகன்,இவர்களுக்கு அடுத்தவர்களின் நம்பிக்கையை புண்படுத்தும்போது மட்டும் அல்வா சாப்பிடுவது போல் இனிக்கும் இவர்களுடைய நம்பிக்கையை யாராவது கேள்வி கேட்டுவிட்டால் போதும் அதை செவி தாழ்த்தி கேட்காததைப்போல ஒதுங்கி விடுவார்கள்.இவர்களுடைய பேச்சை யாராவது கவனித்தால் போதும் அவனை மூளை சலவை செய்துவிடுவார்கள்.
ReplyDelete//பைபிளில் எங்கேயும் இயேசு நாதர் திருமணம் செய்யாததாக குறிப்பிடப்பட்டிருக்கிறதா??????// - அருமையான கேள்வி! ஆனால் ஒரு பேராசியரியர் கேட்கும் கேள்வி போல இல்லை, ஒரு குறும்புக்கார மாணவனின் கேள்வி போலதான் உள்ளது. இயேசு நாதரின் வாழ்க்கை வரலாறு, அவர் செய்த அற்புதங்கள், ஊழியங்கள், மரணம், உயிர்த்தெழுதல் என ஒவ்வொன்றும் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் அவர் உண்மையிலேயே திருமணம் செய்திருந்தால் அது குறிப்பிடப்படாமல் இருந்திருக்குமா?
ReplyDelete//இயேசு இறந்த பின் பரிசுத்த ஆவியானார் என்று சொல்கிறீர்கள். // - அப்படி யாரும் இங்கு சொல்லவில்லை.
ReplyDelete//எங்கே சென்றார்கள் ராபின்,தெய்வ மகன்// எங்கே சென்றோம் எங்கள் சொந்த வேலைகளை கவனிக்க சென்றுவிட்டோம். நேரம் கிடைக்கும்போதுதானே பதில் எழுத முடியும். அதற்காக 24 மணி நேரமும் கணினி முன்பு அமர்ந்திருக்க முடியுமா?
//அடுத்தவர்களின் நம்பிக்கையை புண்படுத்தும்போது மட்டும் அல்வா சாப்பிடுவது போல் இனிக்கும் இவர்களுடைய நம்பிக்கையை யாராவது கேள்வி கேட்டுவிட்டால் போதும் அதை செவி தாழ்த்தி கேட்காததைப்போல ஒதுங்கி விடுவார்கள்.// உங்களிடம் இருப்பது காழ்ப்புணர்வும் அறியாமையும் என்பதை புரிந்து கொண்டேன். கிறிஸ்தவ நம்பிக்கையை பற்றி கேள்வி எழுப்பப்டும்போது என் கண்ணில்பட்டால் உடனே பதிலளித்துவிடுவதுதான் என்னுடைய வழக்கம். கிறிஸ்தவ நம்பிக்கையை பற்றிய விவாதங்களிலும் பலமுறை பங்கெடுத்துள்ளேன். எனவே உங்கள் குற்றச்சாட்டு தவறு.
ReplyDelete//இவர்களுடைய பேச்சை யாராவது கவனித்தால் போதும் அவனை மூளை சலவை செய்துவிடுவார்கள்.// இதை எங்களுக்குக் கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். எங்களுடைய பேச்சை கேட்கும்போது உங்களை அறியாமலேயே ஈர்க்கப்பட்டுள்ளீர்கள் அதை ஒப்புக்கொள்ள உங்கள் ஈகோ மறுக்கிறது என்பதும் புரிகிறது. பெயர் 'மிரட்டல்' என்று இருந்தாலும் உங்கள் ஆழ்மனதில் பயம்தான் உள்ளது.
பைபிளையும் உங்கள் மதம் சம்பந்தமான புத்தகங்களைய் ஆழமாகப் படியுங்கள். பைபிள் மற்றும் அதற்கான விளக்க உரைகளும் இணையத்திலேயே இலவசமாக கிடைக்கிறது. இரண்டு மதக் கருத்துக்களையும் படித்துவிட்டு எதை ஏற்றுக்கொள்வது என்பதை முடிவு செய்யுங்கள். அதை விடுத்து ஆத்திரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுவதால் எந்த பயனும் இல்லை. இது உங்களுக்கு மட்டும் சொல்லவில்லை, கிறிஸ்தவத்தை எதிர்க்கும், விமர்சிக்கும் அனைவருக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்.
உங்களை போன்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கேன்றே பல தளங்கள் உள்ளன. உதாரணமாக,
http://christiananswers.net/
http://www.answering-islam.org/
http://www.bible.com/
தமிழில் பைபிள்:
http://www.tamil-bible.com/
மாற்றுக்கருத்துக்களை மட்டும் படித்துவிட்டு ஒரு முடிவுக்கு வராதீர்கள். பைபிளையும் அதன் விளக்க உரைகளையும் படித்துவிட்டும் அதன்பிறகு எது சரி எது தவறு என்பதை முடிவு செய்யுங்கள்.
//எங்கே சென்றார்கள் ராபின்,தெய்வ மகன்//
ReplyDeleteஒரு நாள் பொருங்கள்
// ஒரு குறும்புக்கார மாணவனின் கேள்வி போலதான் உள்ளது//
ReplyDeleteநன்றி!
ஆனாலும் மதாச்சாரியார்களிடம் விவாதம் வைத்த இளவயது காலத்திலிருந்து 30 வய்துவரை என்ன செய்தார் என்பது ஏன் 'மறைந்த ஜீவியம்' என அழைக்கப்படுகிறது? தேவை என்ன?
//இரண்டு மதக் கருத்துக்களையும் படித்துவிட்டு எதை ஏற்றுக்கொள்வது என்பதை முடிவு செய்யுங்கள்.//
ReplyDeleteஉங்களுக்கு பைபிளை தவிர்த்து வேறு ஏதாவது மத முத்தகத்தை படித்துள்ளீர்களா? சில மதங்களில் புத்தகம் என்று ஏதும் இருக்காது. அந் வாழ்க்கையை வாழ்ந்து தான் பர்க்கவேண்டும். செய்தீர்களா?
//மாற்றுக்கருத்துக்களை மட்டும் படித்துவிட்டு ஒரு முடிவுக்கு வராதீர்கள். பைபிளையும் அதன் விளக்க உரைகளையும் படித்துவிட்டும் அதன்பிறகு எது சரி எது தவறு என்பதை முடிவு செய்யுங்கள்.//
அப்படி முடிவு செஞ்சுட்டா, விட்டுடுவீங்களா என்ன? அது சரி! மூளை சலவை செய்யப்பட்டதையே வெ(ற்)றியாகக்தானே நினைக்கிறீர்கள். உங்களிடம் பேசி என்ன ஆகப்போகிறது? ஜெமினி படத்தில் ஒரு வசனம் வரும்.
விக்ரம்: "நாம ரெண்டு பேரும் திருந்திட்டதா சொல்லுவோம்?"
கலாபவன் மணி: "நான் எதுக்கு திருந்தனும்? நான் என்ன தப்பு செஞ்சேன்"னு.
அதாவது, தான் செய்வது தப்புன்னே அவனுக்கு தெரியாத அளவுக்கு மரத்துப் போயுள்ளது.
/////
ReplyDelete//Oh! God என்று ஒரு படம் பார்த்தேன். நல்ல படம். மேலே சொன்ன வசனம் அதில் வரும்.//
அப்படியா! பார்த்துட்டு வந்து பேசிக்கிறேன்
/////
தருமி சார்,
நீங்க சொன்ன அந்த Oh! God படத்தை நேற்று தான் பார்த்தேன். அருமையான படம். ஆனால், இந்த படத்தை பற்றின தகவல்கள் இணையத்தில் சொற்ப அளவிலேயே உள்ளது. அதுவும் கடவுளாக வரும் George Burns, பின்னியிருக்கிறார். மனுஷர் 100 வருஷம் வாழ்ந்திருக்கார்...!!!
இந்த படம் அப்படியே Bruce Almighty மற்றும் Evan Almighty ஆகிய படங்களின் 'pre'quel. கடவுள் திரும்ப திரும்ப வந்து "நோட்" கொடுப்பதும், 27வது தளமும் இன்ன பிறவும்.
படத்தின் மிகப்பெரிய பலமே அதன் வசனங்கள்.
Jerry: I don't belong to any church.
God: Neither do I.
God: "So help me Me."
God: "If it please the court, and even if it doesn't please the court, I'm God, your honor."
God: I can't understand it. Why wouldn't a religious editor believe you?
Jerry: It's not raining outside. It's just in here.
God: Why should I spoil everybody's day?
God: They've figured out so many ways to talk to each other, they're finding nobody can.
God: The divine truth is not in a building or a book or a story. The heart is the temple wherein all truth resides.
Jerry: "Will there be a judgment day for man?"
God: If they mean a doomsday, an end-of-the-world thing...
...I'm certainly not going to get into that. But if you want my personal opinion, I wouldn't look forward to it. There'd be a lot of yelling, and I don't need that anymore than you do.
God: He said I was a comedian playing to an audience who's afraid to laugh.
God: The devil you could believe, but not God?
Jerry: Aren't you coming back?
God: No.
Jerry: Ever?
God: When ever comes, we'll see.
Jerry: Sometimes, now and then...couldn't we just talk?
God: -I'll tell you what. You talk, I'll listen.
//என்ன செய்தார் என்பது ஏன் 'மறைந்த ஜீவியம்' என அழைக்கப்படுகிறது? தேவை என்ன?//
ReplyDeleteRead.
http://www.christadelphia.org/pamphlet/p_mary.htm#10
பைபிள் இயேசு நாதர் இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தார் என்பதை குறிப்பிடவில்லை என்பதால் ஆளாளுக்கு கதை கட்டிவிட ஆரம்பித்துவிட்டார்கள். நல்ல வேலையாக புராணக் கதைகள் (gnostic gospels, etc) எதுவும் பைபிளில் சேர்க்கப்படவில்லை. இல்லை என்றால் பாகன் மதங்களுக்கும் கிறிஸ்தவத்துக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிருக்கும்.
//கிறிஸ்தவ நம்பிக்கையை பற்றி கேள்வி எழுப்பப்டும்போது என் கண்ணில்பட்டால் உடனே பதிலளித்துவிடுவதுதான் என்னுடைய வழக்கம்.//
ReplyDeleteஓ! அப்படியா? அப்படியானால் இங்கேயும் கொஞ்சம் வாங்களேன்.
எப்படி சீனா இந்த அளவு வசனங்களை எழுதிக்கொண்டீர்கள் ... ப்ரம்மாதம்..
ReplyDelete//Jerry: I don't belong to any church.
God: Neither do I.//
//நல்ல வேலையாக புராணக் கதைகள் (gnostic gospels, etc) எதுவும் பைபிளில் சேர்க்கப்படவில்லை.//
ReplyDeleteBible?
//எப்படி சீனா இந்த அளவு வசனங்களை எழுதிக்கொண்டீர்கள் ... ப்ரம்மாதம்..//
ReplyDeleteஅது, படத்தோட ஒன்றி போய் பார்த்தேனா...??? அதான்.
(படத்தை சப்-டைட்டிலோட பார்த்தேனாக்கும். பின்ன, வசனம் கிளியரா புரிய வேண்டாமா?)
Jerry: I don't belong to any church.
God: Neither do I.
மற்றும்
God: "So help me Me."
எனக்கு பிடித்த வசனங்கள்.
/////நீங்க சொன்ன அந்த Oh! God படத்தை நேற்று தான் பார்த்தேன். அருமையான படம். ஆனால், இந்த படத்தை பற்றின தகவல்கள் இணையத்தில் சொற்ப அளவிலேயே உள்ளது. அதுவும் கடவுளாக வரும் George Burns, பின்னியிருக்கிறார். மனுஷர் 100 வருஷம் வாழ்ந்திருக்கார்...!!!//////
ReplyDeleteஅந்த படம் எந்த இணையத்திலுள்ளது என்பதை எனக்கு தெரிய படுத்துங்கள்.நான் பார்க்க ஆவலாய் இருக்கிறேன்.
//////////அதை விடுத்து ஆத்திரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுவதால் எந்த பயனும் இல்லை. இது உங்களுக்கு மட்டும் சொல்லவில்லை, கிறிஸ்தவத்தை எதிர்க்கும், விமர்சிக்கும் அனைவருக்கும் சேர்த்துதான் சொல்கிறேன். /////////////
ReplyDeleteநானே ஒரு மிரட்டல் எனக்கே மிரட்டலா?
சீனு,
ReplyDeleteஎனக்குப் பிடிச்சது:
hey! are you son of god
yes .. i am son of god; you are son of god ...
then about the comments on the preachers - that football thug!!
//பின்ன, வசனம் கிளியரா புரிய வேண்டாமா?)//
ReplyDeleteஅப்போ நீங்களும் என்னை மாதிரிதானா ...?
the analyst,
ReplyDeleteநீங்க கொடுத்த எல்லா படங்களையும் நல்ல connectivity-ல் பார்த்தேன். நன்றாக இருந்தன. நன்றி.
Mr. Deity series are great works.
//அந்த படம் எந்த இணையத்திலுள்ளது என்பதை எனக்கு தெரிய படுத்துங்கள்.நான் பார்க்க ஆவலாய் இருக்கிறேன்.//
ReplyDeleteTorrentz.com site-ல் இருக்கிறது.
http://www.torrentz.com/search?q=Oh+God+1977
இதுகு நீங்க ஒரு சாப்ட்வேரை தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவேண்டும். பின் -க்கு சென்று அந்த படத்தின் சுட்டியை (தனி ஃபைலாக) தரவிறக்கம் செய்யவேண்டும்.
http://www.utorrent.com/downloads
//அப்போ நீங்களும் என்னை மாதிரிதானா ...?//
சேம் ப்ளட்.
//நான் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் எனக்கு அந்த விளக்கம் தவறு என்பதுதான் பொருள்.//
ReplyDeleteஉங்களுக்கு சரியா அல்லது தவறா என்பதல்ல விஷயம்.உங்களுக்கு தவறாகிவிடுவதால் எல்லோருக்கும் தவறாகிவிடாது
//பாகன் மதங்களுக்கும் கிறிஸ்தவத்துக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிருக்கும்.//
ReplyDeleteஅப்படியானால், கிறிஸ்துவின் பிறப்பு (கர்ணனின் பிறப்பு போல்), காற்றை கடலை அடக்கியது, இறந்தோரை, அதுவும் உறவினனான லாசரை உயிர்ப்பித்தது, கண்கள் கொடுத்தது, பிசாசை விரட்டியது, ஐந்து மீன்களையும் ரொட்டியையும் விருந்தாக்கியது, மரணமடைந்து உயிரோடு வந்தது, சிலநாள் தன் துணைவ்ர்களோடு இருந்தது -- இந்த எல்லாமே பாகன் மதங்களோடு வித்தியாசமாக இருப்பதாகவா தோன்றுகிறது????
ஆம் என்றால் என்ன வேறுபாடு?????
ராபின்,
ReplyDeleteநீங்க சொன்ன பகுதியிலிருந்த //Mary had at least four other sons; James, Joses, Simon, Judas, as well as daughters (Matthew 13:55-56, Mark 6:3// என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? கத்தோலிக்க மத மக்கள் இதை ஒப்புக் கொள்வதில்லையே.
ராபின்
ReplyDeleteநீங்கள் குரானையும் இந்து வேதங்களையும் வாசித்து முடித்து விட்டீர்களா? (//இரண்டு மதக் கருத்துக்களையும் படித்துவிட்டு எதை ஏற்றுக்கொள்வது என்பதை முடிவு செய்யுங்கள்.//)
நீங்கள் கொடுத்த வாசிப்பில் இப்படி உள்ளதே ..The apostles were the only authoritative eyewitnesses of Jesus. No other so-called gospels fit these criteria.
1. Jesus gave his apostles, the twelve and Paul, the authority as his witnesses …
பின் எப்படி இதில் பால் சேர்த்துக் கொள்ளப்பட்டார்?
தெய்வமகன்,
ReplyDelete//உங்களுக்கு தவறாகிவிடுவதால் எல்லோருக்கும் தவறாகிவிடாது//
SAME BLOOD !!!
உங்களுக்குச் சரியாகிவிடுவதால் எல்லோருக்கு சரியாகிவிடாது ...
ராபின்,
ReplyDelete//பின் எப்படி இதில் பால் சேர்த்துக் கொள்ளப்பட்டார்?//
இதோடு, ஏசுவின் உடன்புறப்பு ஜேம்ஸ் எழுதிய gospel-யையும் புறந்தள்ளியது ஏன்?
"மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்"
ReplyDeleteரோமர் 8:8
பிறகு ஏன் தேவன், ஏசுவை மாம்சத்தோடு எழுப்பினார்.மாம்சத்தோடு எழுப்பப்பட்டவரை ஏன் நீங்கள் பரிசுத்த"ஆவி" என்று அழைக்கிறீர்கள்.
மிரட்டல்,
ReplyDeleteநீங்க சொன்னதுக்கு ஒரு 'பொழிப்புரை கொடுங்க .. புரியலை!
"நான்தான் என்று அறியும்படி,என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள்,என்னைத் தொட்டுபாருங்கள்;நீங்கள் காண்கிறபடி எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு "ஆவிக்கு" இராதே என்று இயேசு லூக்கா 24:39-வில் சொல்கிறார்.
ReplyDeleteஆவி என்றால் உடல் இருக்காது(இவர்கள் நம்புவதுதான் நான் புதிதாக சொல்லவில்லை).ஆனால் இவர்கள் பரிசுத்த "ஆவி" என்று சொல்கிறார்கள்.மாம்சத்துடன் எழுப்பப்பட்டவரை இவர்கள் எப்படி "ஆவி" என்று சொல்லுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.
பொழிப்புரைக்கு நன்றி, மிரட்டல்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete//பைபிளையும் உங்கள் மதம் சம்பந்தமான புத்தகங்களைய் ஆழமாகப் படியுங்கள்.//
ReplyDeleteஎம்புட்டு ஆழமுன்னு சொல்லவேயில்லையே!?
பைபிளை எம்புட்டு ஆழமா படிச்சாலும், இயேசு இளமை பருவத்தில் யார் கூட குடும்பம் நடத்தினார்ன்னு மேட்டர் இல்லையே!, ஒரு வேளை சென்சார் போர்டு அப்பவே வந்துருச்சோ!?.
கிறிஸ்துவத்தை பற்றி எங்கே உரையாடல் நடந்தாலும் கலந்து கொள்வது சரிதான்! ஆனா அடுத்தவங்களை ஆழமா படிக்க சொல்றதுக்கு முன்னாடி நீங்க தெளிவா யோசிங்க!
/ஏசு கடவுள் என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்டதில்லையே. அவரை ஏன் கர்த்தராக்கினீர்கள் என்றெல்லாம் கேட்கக் கூடாது./
ReplyDeletesuper sir http://madurabeats.blogspot.com/2010/10/jesus-of-india.html
தருமி என்ற புனைப் பெயருக்குப் பதிலாக
ReplyDeleteமதில் மேல் பூனை என்று பெயரை மாற்றிக்கொள்.அதுவே மிகப் பொருத்தமாக இருக்கும் பெயரை வைத்தே மற்றவர்கள் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும் இது போன்ற ஆசாமிகள் ஆதி கிறிஸ்தவர் காலம் முதல் தானும் ஒரு முடிவுக்கு வராமல் மற்றவர்களையும் குழப்பி விடுவதில் நேரத்தை செலவிடுவர். இத்தகைய விதண்டாவாதிகள் ஒரு உண்மையை மறைக்க ஆயிரம் கதைகள் கட்டுவதில் கெட்டிக்காரர்கள். ஒளி செல்லும் பாதையில் இருள் இருப்பதில்லை. பின்னால் தள்ளப்பட்டு விடும். ஆனால் இருக்கும், வெளிச்சம் விலகாத வரை. எது வேண்டும் என்பது தேர்ந்து கொள்ளும் மனதைப்பொறுத்தது.
/மத்தேயு (10: 34, 35) பூமியின் மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன். எப்படியெனில், மகனுக்கும் தக்ப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகனுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். /
ReplyDeleteIs there any group, who follow Jesus,use sword? That is the answer to that statement in Bible. There is no better answer.