*
*
கோலங்கள் அப்டின்னு ஒரு சீரியல். காலங்காலமாய் நடந்துக்கிட்டு இருக்கு. அதில் வர்ர கேமிரா கோணங்களைப் பார்த்தா ரொம்ப கோவமா வந்ததாலே ரொம்ப முந்தியே அதப் பார்க்கிறதை நிப்பாட்டியாச்சி. இருந்தாலும் தங்ஸ் அதில வர்ர ஒரு கேரக்டர் வந்ததும் என்னைக் கூப்பிடுவாங்க. ரொம்ப ஜாலியா இருக்கும் அதில வர்ர 'தில்லா'வைப் பார்க்கிறதுக்கு. மற்ற முக்கிய கேரக்டர்கள் அழுமூஞ்சி அம்மாவும், 'வரட் வரட்' ஆதியும். இந்த அம்மா, ஆச்சி பொடிக்கு சிரிச்சிக்கிட்டே வருவாங்களா, அதில கூட அவங்களை இப்ப பார்க்க முடியாம போச்சு. அதில கூட அவங்க அழுதுகிட்டே விளம்பரம் பண்ணினால் நல்லா இருக்கும்னு தோணுது. அந்த அளவுக்கு இந்த சீரியலில் கிளிசரின் பாட்டிலோடு வந்துக்கிட்டே இருக்காங்க. அந்த ஆதிக்கு நல்ல தொண்டை. இவங்களைப் பார்த்தாலே நிலமை ரொம்ப மோசமா போனதாலதான் அந்த சீரியல் நேரத்தில் ஹால் பக்கமே போறதில்லை. ஆனா, தில்லா ரொம்ப தமாஷான ஆளு. ஒரு ஆளு ஏன் இப்படி பண்றார்; அதை டைரடக்கர் எப்படி அனுமதிக்கிறார் என்றே புரியவில்லை.
நீங்களும் பார்த்துச் சொல்லுங்க ...
*
அந்த சீரியலில் ஒரு 'தோழர்' வந்தார்; செத்துட்டார். தமிழ் நல்லா பேசுவார். டைரடக்கர் அவர் மூலமாக இலங்கைப் பிரச்சனையில் தன் கருத்தை நன்றாக சொல்ல வைத்துவிட்டு சாகடித்து விட்டார்.
*
அரசி சீரியல் என்று நினைக்கிறேன். அதில் உசரமா நல்லதம்பின்னு பேருன்னு நினக்கிறேன். நல்ல உடல்மொழி. குரலும் நல்லா இருக்கும். இந்த மாதிரி ஆட்களெல்லாம் திடீர்னு வந்துட்டு அப்புறம் காணாம போய்றாங்க. இந்த மாதிரி ஆளுகளையெல்லாம் விட்டுட்டு தாங்க முடியாத தர்த்தியான மூஞ்சுகளை அடிக்கடி சீரியல்களில் பார்க்க முடிகிறது. ஏன் இப்படி நம்ம டைரடக்கர்களுக்கு ஒரு டேஸ்ட்!?
பாவம் .. இந்த மாதிரி நல்ல நடிகர்கள்.
*
குரு பூஜைக்காக எங்க ஊரு ஜே .. ஜே ன்னு இருந்திச்சி - வழக்கம் போல. இதுவரை எனக்குத் தெரிஞ்சு இந்த ஒரு குரு பூஜைதான் இருந்தது. ஆனா, இப்போது நாலு குரு்பூஜை இதே சமயத்தில் நடக்குது.
அந்த குருபூஜைகளில் பேருந்துகளில் எறியும் கல்களையும், தீர்த்து எரிக்கும் பெட்ரோல் காசை வைத்தும் வருஷத்து நாலு பள்ளிக்கூடம் கட்டலாம்.
*
*
பழைய ஜார்க்கண்ட் முதலமைச்சர் மது கோடா தண்டிக்கப்படுவார்னு யாராவது நிஜமா நினைக்கிறீங்களா? (CNN-IBN has learnt that during the four days of continuous interrogation, Koda allegedly admitted to stashing away Rs 375 crore in Swiss banks.) அம்மாடி!!
அப்புறம் நம்ம ராசா?
*
லட்சக்கணக்கான கோடி ரூபாய் ஸ்விஸ் வங்கிகளில் இருக்காமே, அதையெல்லாம் என்ன பண்ணப்போறார் ப.சி.?
*
*
//அதில் உசரமா நல்லதம்பின்னு பேருன்னு நினக்கிறேன். நல்ல உடல்மொழி. குரலும் நல்லா இருக்கும். //
ReplyDeleteபஞ்சு அருணாசலத்தின் மகன் என கேள்விப்பட்டேன் ..உண்மையா தெரியவில்லை
அந்த தில்லான் வேடிக்கையானவர் தான்.. முதல்ல எதோ செய்யப்போய் அதுவே ஸ்டைலாகிடுச்சோ என்னவோ.. ( வேறுயாராலாவது மாதத்தில் 1 தடவையாவது அந்த நாடகத்தை நான் பார்க்கும்படியாகிவிடும்)அவரைப்பட்தி ஒரு செய்தியை நான் புத்தகத்தில் படிச்சேன். பல வயதான பெரியவங்களுக்கு பென்சன் பண்ம் சீக்கிரம் ஏற்பாடு செய்து தருவது போன்ற சமூக சேவைகளை செய்வாராம்..
ReplyDeleteஅதானே கோடியை வச்சிட்டு என்ன பண்றதுன்னே நமக்குத் தெரியாது. இதில லட்சக்கணக்கானதையும் சேர்த்துக்கிட்டா...யம்மாடி. தல சுத்துது:)
ReplyDeleteநல்ல பலசரக்கு.............
ReplyDeleteகொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க. குரு பூஜைக்கு பார்ட்டி குடுப்பாங்க.
ReplyDeleteபெரியவரே..
ReplyDeleteஇருக்குற அத்தனை பேரும் அழுதா சீரியல் எப்படி பிக்கப்பாகும்..? காலத்துக்கேத்தாப்புல மாத்திக்க வேண்டாமா? அதுதான் வேணும்னே ஒரு காமெடி கேரக்டரை திணிச்சிருக்காங்க. இவங்கன்னு இல்லீங்கோ.. எல்லா அழுவாச்சி சீரியல்கள்லேயும் ஒரு காமெடி கேரக்டர் வந்தாச்சு..
அரசி சீரியல் நல்லதம்பி கேரக்டரில் நடித்தது பழம்பெரும் இயக்குநர் பஞ்சுஅருணாசலத்தின் மகன் சுப்பு.. சீரியலின் இறுதிக்கட்டத்தில் வந்தார். அந்த நேரத்தில் ரேடனில் அவர் வேலையிலும் இருந்தார். ஆபீஸ் வேலை இல்லாமல் போன போது கூடவே சீரியலில் கேரக்டரும் காணாமல் போய்விட்டது.. இதெல்லாம் சீரியல் உலகத்துல சகஜம் ஸார்..!
அப்புறம் மதுகோடா மேட்டர்.. நிச்சயம் அவர் உள்ள போக மாட்டார்.. சுருட்டினதுல பாதியை ஒழுங்கா கப்பமா கட்டிட்டா தப்பிச்சிரலாம். இவரும் அதை செஞ்சிருவாருன்னுதான் நினைக்கிறேன்..!
மொதல்ல சுவிஸ் பேங்க்ல இருந்து பணத்தை வாங்கினாத்தான அதை என்ன பண்றதுன்னு யோசிக்கிறதுக்கு..? கிடைக்கவே கிடைக்காது.. எழுதி வைச்சுக்குங்க..
ஜோ,
ReplyDelete//பஞ்சு அருணாசலத்தின் மகன் என கேள்விப்பட்டேன் ...
அப்படி இருந்துமா ..?
முத்துலெட்சுமி,
ReplyDelete// ...சமூக சேவைகளை செய்வாராம்..//
பரவாயில்லையே .. அடுத்த முகம்?
வல்லிசிம்ஹன்,
ReplyDelete//....யம்மாடி. தல சுத்துது:)//
ஆனா ஒண்ணுமே நடக்காதான்னு வருத்தமா இருக்கு.
நன்றி ரவி.
ReplyDeleteஅழகேச பாண்டியன்,
ஏன் இப்ப பார்ட்டி கிடையாதா என்ன .. அவங்களுக்குள்ள?
உ.த.,
ReplyDelete//அதுதான் வேணும்னே ஒரு காமெடி கேரக்டரை திணிச்சிருக்காங்க. //
அடப்பாவமே, அவரு ஒரு காமெடி காரக்டரா?
சுப்புக்கு ஒரு சான்ஸ் பாருங்க ...
//பணத்தை வாங்கினாத்தான அதை என்ன பண்றதுன்னு யோசிக்கிறதுக்கு..? //
அத வாங்கிட மாட்டாங்களான்னுதான் ஒரு "அபிலாஷை"!
இப்ப குடுக்கிற பார்ட்டி குருவுக்கு. நமக்கு இன்னும் கொஞ்ச வருஷத்தில் பெஞ்சு மேல அண்டாவை வைச்சு, குவளையில் ஊருக்கே ஊற்றி குடுப்பார்கள். ஏனெனில் குவளை என்பது தமிழ் கலாசாரம். மறந்து போய் தீர்த்தம்னு தலையில் யாரும் ஊத்தாம இருக்கவேண்டும்
ReplyDeleteஅழகேசபாண்டியன்,
ReplyDeleteநீங்க மட்டும் ஒரு வண்டியில இடம் பிடிச்சி பாருங்க .. ராச கவனிப்பு இருக்காது?
மதுரைல வெய்யில் அதிகமோ....
ReplyDeleteமுயன்றால் முடியாததில்லை. ஆனால் தீர்த்தவாடை எனக்கு ஒமட்டும். கள் இருந்தால் சிறப்பு, எந்த வண்டியிலும் ஏறலாம்.
ReplyDeleteசீரியல் பாப்பிங்களா!?
ReplyDeleteகஷ்டம் தான்!
கோடா கதை அடுத்த அரசியல்வாதியின் வழக்கு தானே!
ReplyDeleteசீரியல் பக்கமே போக மாட்டேன் , கோடா - வசமா சிக்கிட்டாருன்னுதான் நினைக்கிறேன்.
ReplyDeleteவால்ஸ், ஸ்ரீ,
ReplyDeleteஅடையறதுக்காக வீட்டுக்கு வர்ரவங்களுக்கும், வீட்டுக்குள்ளே அடைஞ்சி இருக்கிறவங்களுக்கும் உள்ள வித்தியாசம் அது!
1533 எபிசோட் ஓடியிருக்கிறது இந்த ஒற்றைப் புள்ளிக் கோலம்... சாதனைதான்...
ReplyDeleteமதுகோடா உள்ளே போகமாட்டார் என்றுதான் நினைக்கிறேன்...
அம்பேத்கார் "ரொம்ம்ம்ம்ப் நல்ல்லவரு" என்று மீண்டுமொருமுறை நிரூபணம் ஆகும்...