Thursday, January 21, 2010

367.ஒரு விமர்சனம்

*

ஒரு விமர்சனம் என்னைப் பற்றி ..


என் 300 வது பதிவு முடிந்ததும் மூவரிடம் என் பதிவுகளைப் பற்றிய ஓர் ஆய்வு கேட்டிருந்தேன். பதிவரல்லாத என் பதிவுகளை வாசித்து வந்த நண்பரின் ஆய்வு சரியான காலத்தில் வந்து சேர்ந்ததால் அதை மட்டும் பதிப்பித்தேன். மற்றொருவரான கபிஷ் எழுதியது சரியான காலத்தில் வரவில்லை. சரி .. அவர்கள் எழுதவில்லை போலும் என்று நினைத்து விட்டு விட்டேன். ஆனால் அவர்கள் சரியான நேரத்தில் எழுதியும் அது எனக்கு கிடைக்காதது பின்புதான் தெரிந்தது. ஆனாலும் அதன்பிறகு மேலும் அவர்களைத் துன்புறுத்தவில்லை.

பின் அவர்களது விடுமுறைப் பயணங்கள் எல்லாம் முடிந்ததும், திரும்பவும் அனுப்பிய பதிவு இது....

அது இப்போது உங்கள் பார்வைக்கு ...





மிழ்ப்பதிவு எழுதுபவர்களில் பாசாங்கு இல்லாமல் , நாகரிகமாக எழுதுபவர்களில் எனக்குப் பிடித்த சிலரில் ஒருவர் என் நண்பர் தருமி . தருமி என்றவுடன் நாத்திகம் நினைவுக்கு வரும் அளவுக்கு அதைப் பற்றிய இடுகைகள் எழுதியிருக்கிறார் , எழுதிக்கொண்டிருக்கிறார் . இவர் கடையில் நாத்திகம் மெயின் மீல்ஸ் என்றால் இட ஒதுக்கீடு , சமூகம்,மலரும் நினைவுகள் , சிவிக் சென்ஸ் முதலானவை மினி மீல்ஸ் :-)
இவருடைய எழுத்தில் கருத்துத் திணிப்போ , உபதேசமோ இல்லாதது இந்த வலைப்பூவை நான் தொடர்ந்து வாசிக்க வைத்தது , முக்கியமாக பிழையில்லாத , தலை சுற்ற வைக்காத எளிய தமிழ் . இட ஒதுக்கீடு பற்றிய இடுகைகள், அதை எதிர்ப்பவர்களுக்கும் படிக்கும் போது எரிச்சலூட்டாத வகையில் ஓரளவுக்கு நடுநிலைமையுடன் எழுதப்பட்டிருந்தன . (இ.ஒ எதிர்ப்பாளர்களில் 10 + 1(இது நான்) பேரிடம் சர்வே எடுக்கப்பட்டது :-)) அந்த அளவுக்கு convincing ஆன write up.

.
எதையும் முன்முடிவுடன் கருத்து தெரிவிக்காமல் , வலைப்பூ தலைப்பில் இருப்பது மாதிரி , கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார் . பதில் கிடைத்ததா ? தன்னுடைய கருத்தை குத்து மதிப்பாக சொல்லாமல் முடிந்த அளவு தரவுகளுடன் தர முயல்கிறார் . மதங்களுக்கு எதிரான இடுகைகளில் உண்மையான மதச் சார்பின்மை வெளிப்படுகிறது .பின்னே எல்லா மதங்களையும் மானா வாரியாக இட ஒதுக்கீடு இல்லாமல் வாரிக் கொண்டிருக்கிறார் அல்லல்லோ :-) கிருஸ்துவ மதத்தைப் பற்றிய இடுகைகளில் சாஃப்ட் கார்னர் இருப்பது மாதிரி எனக்குத் தோன்றவில்லை
இவருடைய சிவிக் சென்ஸ் பற்றிய பதிவுகள் எனக்கு இவர் மீதான மரியாதையை அதிகரித்தது . (வெறும் காகிதப் புலி இல்லை என்பதால் :-)) மலரும் நினைவுகள் பதிவுகளில் ஈகோ இல்லாமல் பலவீனங்களையும் , போலித் தன்னடக்கம் இல்லாமல் சில சற்குணங்களையும் கள்ளமில்லாமல் சொல்லியிருப்பார் .

இவருடைய பதிவுக்கு வரும் பின்னூட்டங்களில் நல்ல ஆரோக்கியமான விவாதங்களைக் காணலாம் . தேவையான இடங்களில், சில சமயங்களில் கொஞ்சம் தேவைக்கு அதிகமாக(வஜ்ரா மற்றும் சிலரிடம்) ஆசிரியர் மாதிரி கண்டிப்பு காண்பிக்கிறார் . காலேஜ் பழக்கம் ?

சில உண்மையான பாராட்டுக்களை சின்னக்குழந்தையின் குதூகலத்துடன் , புன்முறுவலுடன் பெற்றுக் கொள்கிறார் . அந்த மாதிரியான தருணங்கள் கவிதையாக இருக்கிறது .

இவருக்குப் பின்னூட்டம் இடுபவர்களில் பலர் தங்கள் கருத்துக்கு மாற்று கருத்து வந்தால் கன்னா பின்னாவென்று திட்ட வேண்டும் என்ற குறைந்த பட்ச அடிப்படை பின்னூட்ட சென்ஸ் இல்லாத அப்பாவிகளாக இருப்பதால் பின்னூட்டங்களில் பொழுதுபோக்கு கொஞ்சம் மிஸ்ஸிங் .



வாசகி விருப்பம் :
1. வலைப்பூவின் பன்முகத் தன்மை கட்டெறும்பு அளவுக்கு ஆகிவிட்டது . அவ்வளவு நாத்திக வாசம் .
நாத்திக இடுகைகளுக்கும் பின்னூட்ட விவாதங்களுக்கும் செலவிடும் நேரத்தை அவரின் ஆக்கபூர்வ பகுதியான சிவிக் சென்ஸ் , சமூக அக்கறைகளில் பயன்படுத்தினால் இன்னும் பல இடங்களில் மரக்கன்றுகள் மரங்களாகும் , சாலைகளில் குழிகள் நிரம்பும் , விபத்துகள் எண்ணிக்கை குறைக்கப் படலாம் . இப்படி சொல்வதின் மூலம் , நாத்திகம் பற்றிய பதிவுகளுக்கு செலவிடும் நேரம் ஆக்கப் பூர்வமானதாக இல்லை என்ற sweeping statment - ஐ சொல்லவில்லை , அப்படி சொல்ல ஆசை தான் என்ற போதிலும் :)
2. அரசியல் பதிவுகள் எழுதலாம் , திரு மு .க வின் அப்பாவிக் குழந்தை துணையிருக்க பயமேன் ?
நிறைய பேர் மொக்கை எழுதுகிறார்களே என்று தானும் களத்தில் இறங்கி வெற்றிகரமாக தோல்வியைத் தழுவிய தருமிக்கு ஜே ! Better luck next இடுகை . :-)

இவரின் பதிவின் மூலம் , நல்ல ,அன்பான ஆசிரியராக , நல்ல அப்பாவாக ,மனைவிக்குக் கீழ்ப்படிதல் உள்ள கணவராக இருப்பதை அறிய முடிகிறது . ஆசீர்வதிக்கப் பட்டவர்களுள் ஒருவர் தருமி நீங்கள் .

சக மனிதர்களின் மீதும் , நாட்டின் மீதும் அக்கறை கொண்ட நண்பர் தருமி நல்ல ஆரோக்கியத்துடனும் , மகிழ்ச்சியாகவும் நீள் ஆயுள் வாழ எங்கும் நிறைந்த இறையை வேண்டுகிறேன் . நீங்கள் என் நண்பர் என்பதில் பெருமை கொள்கிறேன் .

பி கு 1: ஜிங் சாக் சத்தம் குறைவாக இருக்குமாறு எழுதியிருக்கிறேன் (payment திருப்திகரமாக இல்லை :-) )
பி கு 2: தலைப்பு : எனக்குப் பிடித்த தமிழ் வலைப் பதிவுகள் வரிசைப்படி





*

28 comments:

  1. Wow! யாருங்க இந்த கபீஷ் புட்டுப் புட்டு வைக்கிறாங்க, பெரும்பான்மையான இடங்களில் :) ...

    ஏன், மெயில் மீல்ஸ் இவரு கொடுத்திட்டே இருக்கணுமின்னா, அது செய்றதில இவருக்கு இணை இவருதாங்கிறதாலேதான்.

    நன்றி for the review...

    ReplyDelete
  2. நல்லாத்தான் சொல்லி இருக்காரு..:-)))))))))))

    நானூறாவது பதிவு முடிச்சவுடனே கருத்து கேட்க மூணு பேரத் தயார் பண்ணுணீங்கன்னா.. அங்க ஒரு சீட் ஐயா துண்டு போட்டு இடம் பிடிச்சுட்டார்..:-)))

    ReplyDelete
  3. // நாட்டின் மீதும் அக்கறை கொண்ட நண்பர் தருமி நல்ல ஆரோக்கியத்துடனும் , மகிழ்ச்சியாகவும் நீள் ஆயுள் வாழ எங்கும் நிறைந்த இறையை வேண்டுகிறேன் ///

    वालिमोलिकिरें ... அட சாரிங்க .....'வழிமொழிகிறேன் '

    ReplyDelete
  4. அன்பின் தருமி

    அருமையான ஆய்வு - நடுநிலையில் நின்று ஆய்வு செதிருக்கிறார்.

    பின்னூட்ட மசாலாக்கள் குறைவா - ம்ம் - குறைவுதானோ

    கொடுத்த வாய்ப்பினை நழுவவிட்டதில் வருத்தம் தான்

    நல்வாழ்த்துகள் தருமி

    ReplyDelete
  5. எல்லாம் ஒகே!

    பன்முகதன்மை தான் இடிக்குது, அய்யா அவ்வபோது எழுதினாலும், அதை எழுத பலர் இருக்கிறார்கள் என்பதே என் கருத்து!

    மாதத்துக்கு ஒன்று எழுதினாலும் சும்மா கில்லி மாதிரி எழுதனும்னு
    “தகர” நெடுங்குழைகாதனை வேண்டி கொள்கிறேன்!

    ReplyDelete
  6. நல்ல விமர்சகரா இருக்காங்களே.. சீக்கிரமே எனக்கு 300 வருது கபீஷ் கவனிங்க. ..


    \\குறைந்த பட்ச அடிப்படை பின்னூட்ட சென்ஸ் இல்லாத அப்பாவிகளாக இருப்பதால் பின்னூட்டங்களில் பொழுதுபோக்கு கொஞ்சம் மிஸ்ஸிங் .//

    :)

    வாழ்த்துக்கள் விமர்சிக்கப்பட்டவருக்கும் விமர்சித்தவருக்கும்..

    ReplyDelete
  7. வாவ், ரொம்ப அருமையா உங்களை அவதானித்து எழுதி இருக்கிறார். உங்களுக்கும் அவருக்கும் வாழ்த்துகள்.

    அனுஜன்யா

    ReplyDelete
  8. தருமி போன்ற நேர்மை என்னிடம் இல்லை.

    முழைமையான நாத்திகனாக இருந்த நான், கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ ஒரு இந்து என்று என்னை அடையாளப்படுத்திக்கொள்ளவே பல புறக்காரணிகளால் தள்ளப்பட்டிருக்கிறேன். பின்னர் ஒரு நாள் மாறினாலும் மாறலாம்.

    உங்களின் நேர்மைக்கு , துணிச்சலுக்கு வணக்கம்.

    ReplyDelete
  9. //இவரின் பதிவின் மூலம் , நல்ல ,அன்பான ஆசிரியராக , நல்ல அப்பாவாக ,மனைவிக்குக் கீழ்ப்படிதல் உள்ள கணவராக இருப்பதை அறிய முடிகிறது .//

    :-))

    கபிஷ்,
    ஓகே ஒகே எல்லாம் சரிதான் அதுக்காக இப்படியா பொது இடத்தில்?
    கீழ்ப்படிதல், கீழே விழுதல்,கைகட்டி இருத்தல்....இதெல்லாம் குடும்ப வாழ்க்கையில் ஆம்பளைங்களுக்கு சொல்லாம வர்ர கலை. குடும்ப வாழக்கையில சகஜம்..இருந்தாலும் நீங்க இப்படி பொது இடத்தில் காட்டிக்கொடுக்கக்கூடாது. :-))))))

    .

    ReplyDelete
  10. நன்றி தெ.கா.

    மெயின் மீல்ஸ் நல்லாத்தான் செய்றார், நிறைய கொடுத்தா ஜீரணம் ஆக வேண்டாமோ?

    ReplyDelete
  11. நன்றி கார்த்திகைப் பாண்டியன், ஸ்மைலி தான் சந்தேகத்த கிளப்புது :-)

    ReplyDelete
  12. நன்றி வினையூக்கி :-)

    நன்றி சீனா ஐயா,

    //கொடுத்த வாய்ப்பினை நழுவவிட்டதில் வருத்தம் தான் //

    புரியல :-)

    ReplyDelete
  13. வால்ஸ்,
    இவரோட ஆதிகாலத்து இடுகைகள் பலவகைப் பட்டனவாக இருந்தன. இப்போவெல்லாம் அதிகமா மதம் சம்பந்தப் பட்டவைகள்.

    Anti-religious பதிவுகளைப் படித்து யாரும், மதத்தை உதறி விடுவதில்லை, அது நீண்ட கால thought process. ஒரு மதத்தில் உள்ள சொதப்பல்களை சொல்லும் போது மற்ற மதத்தினர் குஷியாகின்றனர். வெகு சில ஒத்த எண்ணம் உடையவர்களைத் தவிர மற்றவர்களுக்கு பொழுது போக்கு.பதிலாக சில பின்னூஸைப் படித்து மன உளைச்சல் ஏற்படலாம்.(Moderated comments + கொஞ்ச நாளுக்கு முன்னாடி இவரைப் பற்றிய சிலரின் பதிவுகள்+ பின்னூஸ்:-( )

    ஏற்கனவே இதய சிகிச்சையில் இருப்பவருக்கு இது அவ்வளவு நல்லதில்லை என்பதாலும், இந்த பகுதியில் இருந்து கவனத்தைத் திருப்பினால் நல்லது என்று நினைத்தேன். நான் நினைத்தது தவறாகவும் இருக்கலாம்

    ReplyDelete
  14. முத்துலெட்சுமி,
    300க்கு கேட்டது, 367 ஆவது இடுகையா போட்டபிறகுமா? payment க்குத் தக்கபடி விமர்சனம் மொத்தமாகவும், சில்லரையாகவும் எழுதப்படும் :-)
    வாழ்த்துக்கு நன்றிங்கோ

    ReplyDelete
  15. செந்தழல் ரவி,
    நன்றீஸ்

    ReplyDelete
  16. செந்தழல் ரவி,
    நன்றீஸ்

    ReplyDelete
  17. அனுஜன்யா,
    நன்றி ஹை :-)

    ReplyDelete
  18. குகு,
    உங்ககிட்ட நேர்மைக் குறைச்சல்னு எனக்குத் தோணலை :-)
    நாத்திகர்னு/பகுத்தறிவாளர்னு தமிழ்நாட்டுல சொல்லிக்கறதுக்கு நிறையவே தைரியம் வேணும்(தி.க, தி.மு.க ன்னு முத்திரை விழுந்திடுமோன்னு)

    இந்து மதமா, கலாச்சாரமான்னு ஒரு இடுகையை தருமியிடமிருந்து எதிர்பார்க்கிறேன் :-)

    தருமியின் சார்பாக நன்றீஸ் குகு.

    மதம் அல்லாத விஷயங்களிலும் தருமி அப்படித்தான் :-)

    ReplyDelete
  19. இந்த ஆள் திடீர்ன்னு என் பெயரை இழுத்து கோதாவில் கலக்கவிட்டுருக்காரு...
    அவருடைய வலைப்பதிவு முகவரி இருந்தா கொடுங்க...
    அங்கேயே போயி ஞாயத்தக் கேக்குறேன்...

    ReplyDelete
  20. वालिमोलिकिरें = வாலிமொலிகிரெங்

    ReplyDelete
  21. ungalukku payment kamiyavadhu vandhu sendhuchu..
    enakku kudutha cheque bounce ayeduchunga..

    nattamai panjayaatha kootunga..

    ReplyDelete
  22. கல்வெட்டு,

    //கீழ்ப்படிதல், கீழே விழுதல்,கைகட்டி இருத்தல்....இதெல்லாம் குடும்ப வாழ்க்கையில் ஆம்பளைங்களுக்கு சொல்லாம வர்ர கலை//

    எல்லாரும் இந்த கலை கைவரப்பெற்றவர்களில்லை அதனால தனியா குறிப்பிடுவோமேன்னு நினைச்சேன். இப்பத் தெரியுது, மெஜாரிட்டி மக்கள் இப்படித்தான்னு.

    நன்றி :-)

    ReplyDelete
  23. வஜ்ரா,
    என்னுடைய வலைப்பதிவை நீக்கிவிட்டேன். உங்களைப்பற்றி எதுவும் தவறாக குறிப்பிடவில்லை, என்ன ஞாயம் வேணும்னாலும் கேட்டுக்காங்க. பதில் சொல்றேன்.

    நன்றி :-)

    ReplyDelete
  24. வோட்டாண்டி,

    காசு அக்கௌண்ட்ல விழுந்தப்புறந்தான் இடுகையை அனுப்பணும். அதனால தான் 300 வது இடுகையா போடவேண்டியது இவ்வளவு தாமதாமாச்சு.


    சொம்பு, ஆலமரம்,துண்டு எல்லாம் ரெடி. பஞ்சாயத்தக் கூட்டிரலாம். 70:30 டீல் ஓகே யா?

    ReplyDelete
  25. //இந்த ஆள் திடீர்ன்னு என் பெயரை இழுத்து கோதாவில் கலக்கவிட்டுருக்காரு...//

    அதான ... நாம் ரெண்டு பேரும் எப்டி க்ளோஸ் .. இப்படி சொல்லிட்டாங்க! இல்லீங்களா, வஜ்ரா?

    ReplyDelete