Friday, February 12, 2010

376.மதங்கள் -- கிறித்துவம்

*
ஏசு எதற்காக இந்த உலகத்திற்கு வந்தாரென்று கேட்டால் கிறித்துவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எல்லா மக்களையும் பாவங்களிலிருந்து விடுவித்து, (அப்படி விடுபட்டோரை மட்டும்
மோட்சத்திலிருக்கும் தன் பிதாவிடம் (கடவுளிடம்) சேர்ப்பிப்பதற்காகவே வந்தார் என்பார்கள். அந்தப் பிதாவின் குமாரனாக இவ்வுலகிற்கு வந்தார் என்பார்கள். அவர் இந்த உலகத்தில் பிறந்த எல்லோருக்காகவுமே வந்தார் என்பது அவர்கள் ஆழ்ந்த நம்பிக்கை.

ஆனால் என் பழைய பதிவின் 4-வது கேள்வியில் ஒரு பெரிய லிஸ்ட் ஒன்று கொடுத்து, இறுதியாக, சில காரணங்கள் சுட்டிக்காட்டி   //ஒரு ஜாதி அல்லது குலம் காக்க வந்த ஒரு tribal leader என்றே எனக்கு யேசு தெரிகிறார்//  என்று கூறியுள்ளேன்.  யூதர்களின் நம்பிக்கையும் அதுவே.  ஏசுவே பலமுறை யூதர்களே தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்று  சொல்கிறார்.வேறு ஓரிரு சுட்டிகளைக் காண்பித்து ... இல்லை .. இல்லை அவர் உலக மக்கள் அனைவருக்காகவும் வந்தவர் என்று விவாதிப்பதுண்டு. ஆனால் அப்படியாயின் நான் சுட்டிக்காட்டியவைகள் பற்றி என்ன விளக்கம்?

வந்தவர் யாருக்காக வந்தார் என்ற கேள்வியோடு இப்போது இன்னொரு கேள்வியும் சேர்ந்ததாலேயே இப்பதிவு.

லூக்காவின் நற்செய்தி 12- பகுதி 49 - 53

அஞ்சாதீர்கள் என்ற தலைப்பில், ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தன் பேச்சைக் கேட்கக் காத்திருக்கும்போது பேசியவைகள்: அதில் :

49: மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும். (poetic / metaphor என்றெல்லாம் கூறுவார்களே அதே போன்று கவித்துவத்தோடு இதைச் சொன்னதாகக் கொள்வோம்.)

50வது வசனம் நமக்கு இங்கு தேவையில்லாததால் விட்டுச் செல்கிறேன்.

51. மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்.

52. இது முதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர்.

53. தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்."


ஒண்ணும் புரியவில்லை! இதற்காகவா வந்திருப்பார்? புரிந்தவர்களின் விளக்கங்களுக்குக் காத்திருக்கிறேன்...............

இன்னுமொரு கேள்வி:

ஏசு தன் ரத்தத்தையெல்லாம் சிந்தி  நமது பாவங்களுக்காத் தன்னையே தியாகம் செய்து கொண்டார். அவரது ரத்தமே நம்மை ஜீவிக்க வைக்கும் மருந்து; ஆதாமிலிருந்து இன்றைய மனிதன் வரை நாம் செய்த பாவங்களுக்காகவும், இனி பிறக்கப்போகும் மனிதரின் பாவங்களுக்காகவும் சேர்த்தே அவர் தன்னைத் தியாகம் செய்து கொண்டார் - இதெல்லாமே கிறித்துவர்களது நம்பிக்கை. 

லோத், லெவித்தியர், ஆபிரஹாம், தாவூது போன்ற  ஆபிரஹாமிய மதங்களைச் சேர்ந்தவர்கள் போல் அவ்வளவு பெரிய தப்பெல்லாம் நாம் செய்யாவிட்டாலும் மற்ற தப்புகளை நாம் இன்றும் செய்தே வருகிறோம். அவர் இவ்வளவு கஷ்டப்பட்டு நம்மை உய்விக்க வந்து போனபின்பும் நாம் திருந்தவில்லை. அப்படியென்றால், ஏசு சிந்திய ரத்தம், செய்த தியாகம் பயனற்றுப்  போய் விட்டதா? Is his incarnation a failed mission?


*



*

28 comments:

  1. 'வந்த' நோக்கம் நிறைவேறிடுச்சுன்னு நினைக்கணும்!

    ReplyDelete
  2. Why dont you send such queries to an evangelist - such people are aplenty in TN, aren't they?

    They will give you answers in a manner quite convincing to you. Perhaps you may drop your skeptism. You may even become an evangelist yourself - who knows?

    As I understand, Christianity does not flow from Christ unalloyed. He lived a short life and, then was elimianted in a political conspiracy.

    He maintly attracted the fringe sections of the society he lived in - because he identified with them. Such sections were earlier being discriminated againts, and vilified by the Jewish society: in the case of lepers, they were made to live in caves outside the towns and villages and accept their leprosy as scrooge from God for their sins committed, like in Hindusim, the dalits were told the same, in order to accept their outcast status, meekly.

    Christ therefore should be viewed as a man of the poor masses. And, it was not his aim to create a religion for all across the continents. He was not addressing your ancestors in Madurai. If you become a Christian, you should not hold Christ reponsible for your act!

    His followers, chiefly St Paul, did everything in his name: and what we call 'Christianity' was nothing but his imagination. Hold that Sicilian Jew 'guilty', if you dont like Christianity!!

    What is the purpose of a religion? To make people relate to God and enhance their spiritual life so as to give them a wholesome life, on this earth; and a hope for the life after death.

    Skeptics like you or non-believers may scoff at such claim. But religion is not for skeptics. It is for believers.

    If the believers live their life in a way that is acceptable to society, as a whole, including you, the skeptic, then the purpose of a religion is amply served.

    No room for complaint then.

    ReplyDelete
  3. ஒரு வேளை நடக்கிற எல்லா வீட்டுச் சண்டைகளுக்கும் இதுதான் காரணமோ?

    ReplyDelete
  4. இந்த இடுகையை உங்க தங்கமணி படிச்சாங்கன்னா, சாப்பாட்டுக்கு வேற இடந்தான் பாக்கணும் நீங்க. ஒருவேளை இதுக்குத் தான் வந்திருப்பாரோ :-)

    ReplyDelete
  5. இந்த இடுகையை உங்க தங்கமணி படிச்சாங்கன்னா, சாப்பாட்டுக்கு வேற இடந்தான் பாக்கணும் நீங்க. ஒருவேளை இதுக்குத் தான் வந்திருப்பாரோ :-)

    ReplyDelete
  6. // துளசி கோபால் said...

    'வந்த' நோக்கம் நிறைவேறிடுச்சுன்னு நினைக்கணும்!//

    // கபீஷ் said...

    இந்த இடுகையை உங்க தங்கமணி படிச்சாங்கன்னா, சாப்பாட்டுக்கு வேற இடந்தான் பாக்கணும் நீங்க. ஒருவேளை இதுக்குத் தான் வந்திருப்பாரோ :-)//

    ரெண்டுபேரும் ஒரே மாதிரி சொல்றீங்களே!

    ReplyDelete
  7. JAR Fernando

    //Why dont you send such queries to an evangelist - such people are aplenty in TN, aren't they?//

    கேக்காமலா இருந்திருப்போம்! அதில ஒரு வேடிக்கை .. ஒரு கத்தோலிக்க சாமியாரிடம் கேட்க அவர் அவரைவிட சீனியர்கள் (எனக்கும் சீனியர்கள்!) இருவர், 'அடடா .. நம்மள சேர்ந்த ஆளா இருக்காறே அவரைப் பார்க்கணும்னு சொல்லி விட்டாங்க !!

    //He maintly attracted the fringe sections of the society he lived in //
    ஐயா! அதத்தான் நானும் சொல்றேன்.

    //and a hope for the life after death.//
    //If the believers live their life in a way that is acceptable to society,//
    ரெண்டுமே ரொம்ப உதைக்குதுங்க!

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. ஸ்ரீ,
    வீட்டுச்சண்டை பற்றியெலாம் உங்களுக்கெங்கே தெரியப்போகுது! குடுத்து வச்ச ஆளு!!

    ReplyDelete
  10. இன்னமுமா புரிய!
    சண்டை மூட்டி எல்லாரும் அடிச்சிகிட்டு சாவுங்கடான்னு சொல்ல வந்திருக்காரு!


    அதே மாதிரி இங்க ஒரு ஆள் வந்திருக்காரு பாருங்க!

    ReplyDelete
  11. வால்ஸ்,

    கடவுளே! அத நான் அப்பவே படிச்சிட்டேன். என்ன பின்னூட்டம் போடுறதுன்னு தெரியாததால உட்டுட்டேன்.

    ReplyDelete
  12. //கடவுளே! அத நான் அப்பவே படிச்சிட்டேன். என்ன பின்னூட்டம் போடுறதுன்னு தெரியாததால உட்டுட்டேன். //

    ஒரு அல்லேலுயா போட்டு போன முடிஞ்சி போச்சு!
    இதுக்கு என்ன தயக்கம்!

    நீங்க கடவுளேன்னு சொன்னது யாரை!
    கர்த்தரையா? அல்லாவையா!? சிவனையா!?

    ReplyDelete
  13. அப்படி ஒரு வழி இருக்கோ?
    செஞ்சிருவோம்.

    அதென்ன கேள்வி கேட்டா பதில் சொல்ல யாரையும் இரு பதிவிலும் காணோம்!

    ReplyDelete
  14. //a hope for the life after death.//

    யாராவது பார்த்துட்டு வந்து சொன்னாங்களா!?
    செத்ததுக்கப்புறம் ஒரு வாழ்க்கை இருக்குன்னு! எந்த அடிப்படையில் மதம் இதை நம்புது!

    ஒருவன் நல்லவனா, அடுத்தவங்களுக்கு கெடுதல் செய்யாம இருக்குறதுக்காக உருவாக்கபட்ட புனைவு கதையாக இது இருக்கலாம்! ஆனால் தனது மதத்துக்கு எதிரானவர்களை கொன்று குவித்தால் கடவுள் நமக்கு சொர்க்கத்தில் ஸ்பெஷல் இடம் கொடுப்பார் என்று நம்பிக்கை மாறி விட்டதே! இந்த இழவுக்கு சொர்க்கம் கதை இல்லாமலேயே இருந்திருக்கலாமே!

    ReplyDelete
  15. // தருமி said...

    அதென்ன கேள்வி கேட்டா பதில் சொல்ல யாரையும் இரு பதிவிலும் காணோம்!//

    பதில் இருந்தா தானே சொல்றதுக்கு!

    ReplyDelete
  16. //could i be able to knw y u say shivan as so? //

    சிவன் என்ற சொல் உங்களுக்கு கடவுளை குறிக்கிறது என்றால் கம்முனாட்டி என்ற வார்த்தை எனக்கு மரியாதைகுறிய என்று சொன்னால் நம்பவா போறிங்க!

    கம்முனாட்டின்னா என்னான்னு யாராவது சென்னைவாசி வந்து சொல்லுங்கப்பா! அப்படினா என்னானே எனக்கு தெரியாது!

    ReplyDelete
  17. //முசுலீம்கள் மாறும்போது, அது முசுலீம்களின் கோபத்தை உருவாக்கும் என்வே தன் மத மாற்றத்தை வெளிக்காட்டாமல் மறைப்பது தமக்கு நலலது என அவர்கள் நினைத்திருக்கலாம்.

    என்வே, முசுலீம்களில் யாரும் இந்துவாக மாறவில்லை போன்ற தோற்றத்தைத் தரலாம் //


    உண்மை தான்! அவனுக்கும் பெரிய பிரச்சனை வீட்டின் மூலம் வந்தது! அவனது புத்தகங்களை என்னிடம் கொடுத்து வைத்திருக்க சொன்னான்! அப்போது படித்தது தான், ராமகிரிஷ்ண பரமஹம்ஸர் வரலாறு! விவேகானந்தர் வரலாறு, சாராத அம்மையார் வரலாறு இன்ன பிற! ஆனாலும் எனக்கு கடவுள் நம்பிக்கை வரவில்லை என்பது உண்மை! அக்காலத்தில் எல்லாம் தத்துவங்கள் சொல்பவர்கள் தான் கடவுள் அல்லது கடவுளை சென்றடய வழி! இன்றும் ஊரை ஏமாற்றி கொண்டிருக்கும்!
    சத்குரு, நித்தியானந்தர் போன்ற காவி உடைகளை காணலாம்!

    ReplyDelete
  18. சில பின்னூட்டங்கள் இங்கே மாறி வந்துருச்சு!

    ஹிஹிஹி!

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. இன்னுமொரு கேள்வி:

    ஏசு தன் ரத்தத்தையெல்லாம் சிந்தி நமது பாவங்களுக்காத் தன்னையே தியாகம் செய்து கொண்டார். அவரது ரத்தமே நம்மை ஜீவிக்க வைக்கும் மருந்து; ஆதாமிலிருந்து இன்றைய மனிதன் வரை நாம் செய்த பாவங்களுக்காகவும், இனி பிறக்கப்போகும் மனிதரின் பாவங்களுக்காகவும் சேர்த்தே அவர் தன்னைத் தியாகம் செய்து கொண்டார் - இதெல்லாமே கிறித்துவர்களது நம்பிக்கை.

    லோத், லெவித்தியர், ஆபிரஹாம், தாவூது போன்ற ஆபிரஹாமிய மதங்களைச் சேர்ந்தவர்கள் போல் அவ்வளவு பெரிய தப்பெல்லாம் நாம் செய்யாவிட்டாலும் மற்ற தப்புகளை நாம் இன்றும் செய்தே வருகிறோம். அவர் இவ்வளவு கஷ்டப்பட்டு நம்மை உய்விக்க வந்து போனபின்பும் நாம் திருந்தவில்லை. அப்படியென்றால்,ஏசு சிந்திய ரத்தம், செய்த தியாகம் பயனற்றுப் போய் விட்டதா? Is his incarnation a failed mission?

    ReplyDelete
  22. Dear Sam
    Eventhough Jesus was born in a Jewish family, he was able to transcend the narrow barriers of caste, community, race, language etc; and as he proclaimed he became the saviour of mankind and not just Jews (according to the belief of Christians). Thiruvalluvar may be a Tamilian but his ideas are for all mankind.
    Regarding the verses in St. Luke, we don't have to be tied downto the literal meaning of the verses. I have discussed with one or two Bible scholars and they say that itonly refers to the the conflict likely to arise out of of an attempt to disturb the existing orthodox but irrational custom or tradition. For example, when Sati was sought to be abolished there was a lot of opposition to it on grounds of its having been practised for a long time.A father steeped in tradition would clash with his son having a diametrically opposite view. This is true in the case of any human relationship- between father and son, mother and daughter etc;. This is inevitable when existing are sought to be be demolished. This is exactly what Christ wanted to do. He did not believe in following the beaten track or blindly accept what the pharisees or religious . He broke the Sabbath rules, mingled with the social outcasts and did everything possible to prove that he was a rebel in every sense of the term. In fact he was a true revolutionary- one who wanted to bring about a thorough change in the minds of the people. That resulted in bringing about aclash between those who wanted to clingon to the existing system with those who passionately believed in the necessity to bring about a clash may be between a father and a son etc. I think that this is the real meaning of the verses you have quoted.
    And your question whether Christ's sacrifice on the cross for the redemption of mankind from sin has been in vain(judging from the way man has been indulging in sin in a more brazen way in recent times) appears to be justified but we have to keep in mind that it is too premature to come to such conclusions because, the end of time has not come and when it will be, we don't know.
    I don'tknow whether I have touched upon all the points you have raised but I do feel that instead of splitting hairs over such philosophical questions which may be of interest from the academic point of view, it is better that we try to live in such a way that we are helpful and useful to others. This is my opinion.
    I really admire you for kindling the minds of several people through your ideas in the blog.
    D. Samuel Lawrence

    ReplyDelete
  23. DSL,

    //...he was able to transcend the narrow barriers of caste, community, race, language etc;//

    நான் கொடுத்துள்ள விவிலிய மேற்கோள்கள் இதற்கு எதிர்மறையான பொருளைத்தானே தருகி்ன்றன.


    //...conflict likely to arise out of of an attempt to disturb the existing orthodox but irrational custom or tradition//

    But the context does not show any such "inner meaning". this is what we prescribe to that situation.


    //...too premature to come to such conclusions because, the end of time has not come and when it will be, we don't know. ..//

    yes, we dont know !!!

    //..splitting hairs over such philosophical questions which may be of interest from the academic point of view, //

    mine is only an academic interest, of course to prove the invalidity of all religions.

    ReplyDelete
  24. The fact that Christ always identified himself with the poor and the downtrodden, irrespective of their community etc' shows that he cannot be called a tribal leader.

    Thr fire of rebellion and revolution that he wanted to plant in the minds of the people would have definitely resulted in the breakdown of human relationships. This I think is referred to in the verses you have quoted.

    Whether Christ would succeed in his attempt to redeem mankind from sin remains to be seen.
    Anyway, THANK YOU FOR MAKING ME THINK.
    D.Samuel Lawrence

    ReplyDelete
  25. //...irrespective of their community //
    இதை மறுப்பதற்காக என் பழைய பதிவில் உள்ளதை மீண்டும் இங்கு பதிப்பிக்கிறேன்:

    4 *** அடுத்ததாக வந்த ஐயம் ஆழ்ந்த கிறித்துவர்களுக்குக் கோபம் வரவைக்கும் ஐயம்' ஆனால், நானென்ன செய்வது? யேசு இரண்டே இரண்டு வசனங்களைத் தவிர ஏனைய இடங்களில் எல்லாம் தான் இஸ்ரயேலர்களுக்காக மட்டுமே வந்ததாகக் கூறுகிறார்.
    Math 10;5, 6:"....பிற இனத்தாரின்எப்பகுதிக்கும் செல்லவேண்டாம்....மாறாக, வழிதவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்
    John 17;6 "நான் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன்.
    John 17;9 அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல, மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். ...
    இந்த வசனங்கள் தரும் செய்தி என்ன? அவர் தன்னை ஒரு சாதியினரோடு - இஸ்ரயேலரோடு மட்டும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லையா?

    இதைவிட, 'ஐயா, எனக்கு உதவியருளும்' என்று பேய் பிடித்த தன் மகளைக் காப்பாற்ற வேண்டி,தன் முன்னே வந்து நின்ற கானானியப் பெண்ணிடம்(வேற்று ஜாதியைச் சேர்ந்தவள்) "இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்" என்று சொல்ல (Math 15:25) அந்தப் பாவப்பட்ட பெண் மேலும் இரந்து நிற்க, "பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" (Math 15:26)(Mark 7:26)என்று ஒன்றல்ல இரண்டு இடங்களில் தேவகுமாரன் சொன்னதாகச் சொல்கிறது விவிலியம். இந்தப்பகுதிக்கு வழக்கமாகக் கொடுக்கப்படும் விளக்கம் இன்னமும் வேதனையாக இருக்கும். கடவுள் அப்பெண்ணின் நம்பிக்கையைச் சோதிக்கவே அப்படிப் பேசினாராம். எனக்கு இதில் எந்தவித நியாயமோ, லாஜிக்கோ தெரியவில்லை. 'விசுவாசம்' என்ற 'கறுப்புக் கண்ணாடி'யைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் எனக்குத் தெரிவது "ஜாதித் துவேஷமே".

    மேலும், வேற்று ஜாதியினரை ஒதுக்கிவைக்கும் யேசு, தன் உறவினர்களான மார்த்தா, மரியாவின் சகோதரனான லாசர் இறந்தது அறிந்து ...யேசு உள்ளங்குமுறிக் கலங்கி...அப்போது யேசு கண்ணீர் விட்டு அழுதார்...யேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்குச் சென்றார்." John 11:33, 35, 38

    Rev: 7:4-ல் அவரது குலமான இஸ்ரயேல் மக்களைச் சேர்ந்த 12 குலத்தவர்களுக்கு, குலம் ஒன்றுக்கு பன்னிரண்டு ஆயிரம் என்ற கணக்கில் மொத்தம் 1,44,000 பேர் முத்திரையிடப்பட்டு மோட்சத்திற்கு வருகிறார்கள்.


    மொத்தத்தில், ஒரு ஜாதி அல்லது குலம் காக்க வந்த ஒரு tribal leader என்றே எனக்கு யேசு தெரிகிறார்.

    ReplyDelete
  26. //This I think is referred to in the verses you have quoted. //

    i refuted this; since it does not have any correlation with the other things he was talking with his disciples at that time.

    ReplyDelete
  27. Nanraga ulladhu.
    Idhaipolave
    "Madhangal-Hinduthuvam"
    ennum thalaippil kooda eluthiullirgala endru theriyavillai.
    appadi irundhal vilakkavum.

    er.ganesan/ganapathy/coimbatore

    ReplyDelete
  28. Hey Sam,
    Since I am a tubelight I am taking more time to give a 'scholarly reply' to your response.
    Lawrie

    ReplyDelete