தொடர்புள்ள பதிவுகள்:
இது முதல் பதிவு
பரிணாமம் -- 2
*
முன்னுரை:
பிரபஞ்ச வெளியெங்கும் கோடானு கோடி கோளங்கள் பரவிக்கிடக்கின்றன என்பதை நம்பிக்கையாளர்கள் யாவரும் கேள்வி கேட்பதில்லை. அவை நம் கண் முன்னே இருக்கின்றன என்பதை விடவும், கண்ணையும் தாண்டி பிரபஞ்ச வெளியில் பரவிக்கிடப்பதை, வானியலாளர்கள் கண்டு கூறியதை நாமெல்லோரும் ஒப்புக்கொள்கிறோம்.
இப்படி கணக்கிலடங்கா வான் கோளங்களை "கடவுள்" படைத்து அவையனைத்தையும், இப்பிரபஞ்சத்தில் இருக்கும் மிக மிக மிகச் சிறிய நம் உலக உருண்டையையும் அதில் உள்ள அனைத்தையும் மனிதன் என்னும் நமக்காகவே படைத்தான் என்பதை நம்பிக்கையாளர்கள் இறுகப் பற்றிக் கொண்டுள்ளார்கள். மனிதன் கடவுளால் படைக்கப்பட்டான் என்று கூறும் வேத நூல்கள் இததனை வான் கோளங்கள் உள்ளன என்றெல்லாம் சொன்னதாகத் தெரியவில்லை. வழக்கம்போல் சூரியனையும், சந்திரனையும், சூரியக் கோள்களையும்,நட்சத்திரங்களையும் தாண்டி ஏதும் பேசியதாகத் தெரியவில்லை.
பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தை அறிவியல் கோடுபோட்டுக் காண்பித்துக் கொண்டிருக்கிறது. நம்பிக்கையாளர்கள் இந்த வானியலை நம்புகிறார்கள் -- வேறு வழியுமில்லை. ஆனால் கடவுளின் படைப்புக்கு வேதநூல்களின் வார்த்தைகள் தவிர வேறு ஏதும் நிரூபணம் இல்லாவிட்டாலும் அதை நம்புகிறார்கள். அதுதான் உண்மையென்று அறுதியிட்டுக் கூறுகிறார்கள்.
எவ்வளவு அறிவியல் காரணங்கள் கொடுத்தாலும் மனிதன் படைக்கப்படவில்லை; பரிணாமத்தால் உருவானான் என்பதைக் காது கொடுத்தும் கேட்க நம்பிக்கையாளர்களால் முடியாது. பரிணாமம் என்றாலே ஒரு குரங்குக் கூட்டம் ராவோடு ராவாக மனிதனாக உருக்கொண்டது என்பதாகவே அவர்களது விவாதங்கள் ஆரம்பிக்கின்றன. அதோடு, குரங்கிலிருந்து மனிதன் வந்தானென்றால், இன்று குரங்குகள் "குட்டைப்பாவாடை போடாமல்" (நன்றி: வால்பையன்) இன்னும் குரங்குகளாகவே அலைகின்றனவே என்ற அடுத்த விவாதம் தொடர்கிறது.
இதில் பெரிய சோகம், தாங்கள் தாக்கிப் பேசும் பரிணாமம் என்றால் என்ன என்பதை தாங்களாகவோ, அல்லது மற்றவர்கள் கூறும் அதைப் பற்றிய விளக்கங்களைக் கேட்கவோ அவர்கள் தயாரில்லை. மூன்று காலென்றால் மூன்றே கால்தான் ... என்பதே தொடர்கிறது. ஒரு உதாரணம்: மனித விந்து உற்பத்தியாகும் இடம் இதுதான் என்று அறிவியல் கொண்டு சொன்னாலும், இல்லை .. இல்லை .. எங்கள் வேதநூல் சொல்வதுதான் சரியென்ற கூற்றே அவர்களின் விவாதங்களின் கடைசிப்புள்ளியாக உள்ளது.
பதிவுகளில் பரிணாமம் பற்றிக் கூறினாலும் ஏதும் பயனில்லை. என்றாலும், பைபிளில் சொல்வது போல் ...'கண்ணுள்ளவன் பார்க்கக் கடவன்; காதிருப்பவன் கேட்கக் கடவன்' என்ற நினைப்பில் இப்பதிவு ஒரு முயற்சி. ஆனாலும், ஆசிரியராக பரிணாமம் சொல்லிக் கொடுத்துவிட்டு, வகுப்புக்கு வெளியே வந்ததும்,(எங்கள் கல்லூரி வகுப்பறைக்குள்ளேயே சில fossils உண்டு; அதைப்பற்றியெல்லாம் வகுப்பில் கற்பித்து விட்டு ...) வெளியே வந்ததும் fossils என்றெல்லாம் ஒன்றுமில்லை; carbon dating என்பதெல்லாம் சும்மா பம்மாத்து என்று சொன்ன கிறித்துவ ஆசிரிய நம்பிக்கையாளர்கள் சிலரும் எனக்குத் தெரியும் ! நம்பிக்கையாளர்களுக்கு இப்பதிவுகள் எந்த புதிய கோணத்தையும் காண்பிக்கப் போவதில்லை. காண்பிக்கும் கோணத்தையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை.
ஆனாலும் நாமும்தான் 'ஊதுற சங்கை ஊதிவிடுவோமே' என்ற நினைப்பில் இப்பதிவுகள் ...
* * * * *
முகிழ்த்தல் : மாலையில் மொட்டாக இருந்து, காலையில் அழகிய மலராக மாறும் அந்த நிகழ்வே முகிழ்த்தல் என்பது. பரிணாமமும் அதே போல் எப்போது நிகழ்கிறது என்பதே தெரியாமல், மிக நீண்ட காலத் தொகுதியில் சின்னச் சின்ன மாற்றங்களால் இறுதியில் மிகப் பெரும்வேற்றுமையோடு ஒரு புதிய 'இனம்' (species = முற்றிலும் ஒன்றான மரபணுக் குழுமத்தோடும் (genome), தங்களுக்குள் கலவி கொள்ளும் ஓரினம்) தோன்றுதலைக் குறிக்கும் சொல்லே பரிணாமம் என்பது. மிக நீண்ட காலத்தில் நடக்கும் இச்செயலை, 'எங்கே இந்தப் பரிணாமம் நடக்கின்றது; காண்பியுங்கள் பார்ப்போம்' என்று அறைகூவலிடுவதும் கேலிக்குரியதே!)
பரிணாமக் கொள்கைக்குரியவர் டார்வின் என்பவர் மட்டுமல்ல. அவரது காலத்திற்கு முன்பே பலரும் கடவுள் படைத்தாரென்பதை ஒரு கேள்விக்குறியாக்கியுள்ளார்கள். உயிரினங்கள் இப்போதிருப்பது போலவே கடவுளால் படைக்கப்பட்டது என்ற நம்பிக்கையிலிருந்து விலகி, பல ஒப்புநோக்குதல் மூலம் ஓர் உயிரினம் மற்றொரு உயிரினத்திலிருந்து தோன்றியிருக்கலாம் என்பதை Anaximander, Empedocles போன்ற கிரேக்க தத்துவ ஞானிகள் முதலில் கூறினர். பின்பு, 17 -18-ம் நூற்றாண்டு வரையிலும் ஆபிரஹாமிய மத நம்பிக்கையான 'கடவுள் படைப்பு' என்ற நம்பிக்கையே தொடர்ந்து வந்துள்ளது. அந்தக் காலத்தில் Buffon, Maupertuis போன்றவர்கள் புதிய கருத்துக்களை - இன்றைக்கு ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துக்களை - தந்தனர். 1809-ல் லமார்க் (Lamarck) என்பவரின் கருத்துக்களில் ஒரு இனக்கூறு - speices - மற்றொரு இனக்கூறிலிருந்து தோன்றியிருக்கலாம் என்ற கருத்து முதன்மையாக வைக்கப்பட்டது. எளிய ஓருயிரிலிருந்து மற்றொரு complex உயிரி தோன்றியிருக்கலாம் என்பதே அவரது துணிபு. உயிரிகளின் சாஸ்வதத் தன்மை அவரால் முற்றிலும் மறுக்கப்பட்டது. இவருக்குப் பின்னே டார்வினின் பரிணாமக் கொள்கை வந்தது. ஆயினும் அவரது கொள்கையும் ஒரு முழுமையான கொள்கையாக அன்று இல்லை.
* படிமங்கள் (Fossils),
* விலங்கினங்கள் உலகில் பரவியுள்ள முறை (bio-geographical distribution),
* உயிரினங்களின் உள்ளுடல் ஒற்றுமைகள், வேற்றுமைகள் (comparative anatomy),
* உயிரின வளர்ச்சி முறைகள் (embroyology),
* மக்களுக்குப் பயன் படக்கூடிய புதுவினங்களை உருவாக்கும் முறை (selective animal breedings),
* தனது கப்பற் பயணத்தில், அதிலும் Galápagos Islands என்ற தீவில் அவர் கண்ட குருவி போன்ற சின்னப் பறவைகளின் (finches) மாறுபட்ட அலகுகள்,
* மக்கட் தொகையில் நடைபெறும் மாற்றங்கள் பற்றிய மால்த்தஸின் கோட்பாடுகள் --
இப்படி பல பரிமாணத் தொகுப்புகளைத் தேர்ந்தெடுத்து அவைகளைத் தொடர்பு படுத்தி அதன் மூலம் அவர் பெற்ற கருத்துக்களைத் தொகுத்து 1859-ல் ORIGIN OF SPECIES என்ற நூலை வெளியிட்டார்.
அன்று அவர் வைத்த தீக்கங்கு அதன் பின் கொழுந்து விட்டு எரியலாயிற்று.. இன்னும் தொடர்ந்து ஒளியோடு எரிந்து வருகிறது ........
தொடரும் .....
Ref:
THEODOSIUS DOBZHANSKY .............EVOLUTION
அருமை அருமை அருமை!
ReplyDeleteஐயா, நல்ல விஷயம். என்னை போல உள்ள ஆளுங்களுக்கு
ReplyDeleteஇது ரொம்ப யூஸ் புல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.
தொடருங்கள். காத்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
நன்றி வாத்தியாரே
ReplyDeleteபரிணாமம் குறித்த ஒரு அறிவியல் கருத்தரங்கை மாணவர்களுக்காக, நீங்கள், இரஞ்சித்(http://kaiyedu.blogspot.com) போன்ற துறைசார்ந்த வல்லுனர்கள் (பதிவுலகில் நான் அறிந்த) ஏற்பாடு செய்யக்கூடாது?
"பரிணாமம் அறிந்து கொள்ளுதல்" என்பது அனைத்து நம்பிக்கைகளையும் கேள்வி கேட்க வைக்கும் ஆரம்பம். முடிந்தால் சின்ன PDF கோப்பாக ஒன்றைத் தயாரித்து அனைவரும் இலவசமாக தரவிறக்கிக்கொள்ளும் வண்ணம் பகிர்ந்து கொள்ளலாம்.
**
அறிவியல் மற்றும் அன்றாட வாழ்விற்குத் தேவையான அடிப்படைச் சட்ட அறிவு, பொது வாழ்வில் கடை பிடிக்கப்பட வேண்டிய ஒழுங்கு (ட்ராபிக், ரோட்டில் குப்பை போடாமல் இருத்தல், அடிப்படை மனிதப் பண்புகள்) என்று தெருமுனைக் கூட்டங்கள் போடலாம்.
என்ன நடந்தாலும் மானாட மசிராட என்றே பொழுது கழிக்கும் மாக்கள் ,,கதை,கவித ,கருமாதி,சினிமா விமர்சனம் என்று அலையும் இரசிகர் மன்ற இன்டெலக்சுவல் இவர்களிடம் இருந்து இளைய சமுதாயத்தை பிரித்து வழி நடத்த, சாதி,மதம் தாண்டிய நல்ல மென்டோர்கள் தேவை.
**
அய்யா, இப்போது தான் உங்கள் தளத்திற்கு முதலில் வருகிறேன். பரிணாமம் பற்றிய அருமையான கட்டுரை.
ReplyDeleteதங்கள் அளவுக்கு அனுபவம் இல்லாவிட்டாலும்,
"கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை" என்ற உங்கள் கருத்தை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.
அய்யா, உலகில், பிரபஞ்சத்தில் எல்லாமே எதோ ஒரு சக்திக்கு கட்டுப்பட்டு இயங்குகிறது.
கண்ணுக்கு தெரியாத அணுவில் இருந்து, மாபெரும் பிரபஞ்சம் வரை
அந்த சக்தி ஆட்டுவிக்கிறது.
அதனை ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாக கடவுள் என்று கூறுகின்றனர் என்பதே என் எண்ணம்.
இதில் ஐன்ஸ்டீன் அவர்களின் இந்த கருத்தை வழிமொழிகிறேன்.
"To know that what is impenetrable to us really exists, manifesting itself as the highest wisdom and the most radiant beauty which our dull faculties can comprehend only in their primitive forms - this knowledge, this feeling is at the center of true religiousness.
( Albert Einstein - The Merging of Spirit and Science)
// 'ஊதுற சங்கை ஊதிவிடுவோமே' //
ReplyDeleteகேட்டுக்கறோம்! :)
இப்பத்தான் ப்ரோபைல் படம் பார்த்தேன். செம கெத்தா இருக்கீங்க சார் :)
சிறந்த தொடராக இது அமையும்.... இன்னும் எழுதுங்கள்!!
ReplyDeleteஇத... இத ... இததான் நாங்க எதிர்ப்பார்த்தோம்! குடுக்கறத குடுங்க சார், .... வேணுங்கறவங்க எடுத்துக்கட்டும்.
ReplyDeleteபரிணாமம் பற்றிய விரிவான தகவல்களுக்கு நன்றி நண்பரே!
ReplyDeleteநல்லதொரு தொடக்கம். வாழ்த்துகள்.
ReplyDeleteவிவாதம் செய்து தீர்வினை எட்டுவோம் என்பதை விட அறிவியல் அறிந்தவர்கள், சுய சிந்தனை சிந்தனை உள்ளவர்கள் அறிந்துகொள்ளட்டும் என்னும் நோக்கில் கட்டுரை பயணிக்கும் என்று நம்புகின்றேன்.
அன்பின் ஐயா.. நல்லதொரு ஆரம்பம்.. கடவுள் இருக்கிறார் இல்லை என்பதை விடுத்து முழுக்க முழுக்க அறிவியல் ரீதியாக கொண்டு சென்றால் நன்றாக இருக்கும்.. நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆவலோடு இருக்கிறோம்..:-))
ReplyDeleteஅருமை.
ReplyDeleteஅருமை
ReplyDeleteஉருப்படியான விஷயங்களைப் பற்றி வலைத்தளங்களில் யாரும் எழுதுவது இல்லை.. வால்பையன் போன்றவர்கள் இதில் விதிவிலக்கு.. இந்தப் பரிணாமம் பற்றிய தங்கள் அறிமுகம் என்னைப் போன்றவர்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும். அதுவும் 1400 ஆண்டுக்கு முந்திய காலத்தில் நான் வாழ்ந்து கொண்டு இருப்பதால் இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.தங்கள் ஆசிரிய அனுபவம் துணைக்கு இருப்பதாக தெரிகிறது.
ReplyDeleteமேலும் விபரங்கள் அறிந்து கொள்ள தொடர்ந்து எழுதவும்.
வாழ்த்துக்கள்
உங்களைப் போன்ற துறை சார்ந்த ஆசிரியர்கள்தான் எளிதாகவும் விரிவாகவும் விளக்க முடியும்.
ReplyDeleteஎனது பரிணாமம் பற்றிய புரிதலும் வாசிப்பும் மிகவும் மேம்போக்கானதுதான், உங்களது தொடர் நான் உட்பட பலரது புரிதலை மேம்படுத்த உதவும்.
//அறிவியல் மற்றும் அன்றாட வாழ்விற்குத் தேவையான அடிப்படைச் சட்ட அறிவு, பொது வாழ்வில் கடை பிடிக்கப்பட வேண்டிய ஒழுங்கு என்று தெருமுனைக் கூட்டங்கள் போடலாம்.//
கல்வெட்டு அவர்கள் சொல்லியிருப்பதும் யோசிக்க வைக்கிறது.பார்க்கலாம்..
Great start! Looking forward to reading the series.
ReplyDeleteகடவுள் என்ற சொல் எதைக் குறிக்கின்றது என்கின்ற தெளிவு இல்லாமல்தான் பலரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
ReplyDeleteபிரபஞ்சத்தை ஏதோ ஒரு சக்தி நடத்திக்கொண்டு இருக்கிறது என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்கிறோம். அதை எந்தப்பெயரால் குறிப்பிட்டால் என்ன?
பரிணாமம் பற்றி அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என எண்ணுகிறேன்.
ReplyDeleteநல்ல முயற்சி தொடருங்கள்
//உலக உருண்டையையும் அதில் உள்ள அனைத்தையும் மனிதன் என்னும் நமக்காகவே படைத்தான் என்பதை நம்பிக்கையாளர்கள் இறுகப் பற்றிக் கொண்டுள்ளார்கள். மனிதன் கடவுளால் படைக்கப்பட்டான் என்று கூறும் வேத நூல்கள் இததனை வான் கோளங்கள் உள்ளன என்றெல்லாம் சொன்னதாகத் தெரியவில்லை.//
தவறான கருத்து. கீழை மதங்கள் [இந்து, பௌத்தம், சமணம்] பிரபஞ்சத்தில் பல்வேறு நட்சத்திரங்கள், உலகங்கள் உள்ளதாகவும் பல்வேறு உலகங்களில் மனிதர்கள் இருப்பதாகவும், பூமியின் மனிதன் ஒரு துளி தான் என்றும் தெளிவாக அறிவிக்கின்றன.
[பதிவின் மூல கருத்தை தொடரலாம்]
இளவஞ்சி,
ReplyDelete//ப்ரோபைல் படம் பார்த்தேன். //
நித்தம் நித்தம் அனுமார்னு தங்க்ஸ் கூப்பிடுறாங்களேன்னு, உங்க பின்னூட்டம் வாசிக்கச் சொன்னேன்.
'இந்த மாதிரி ஆளுக கூட சேர்ரதாலதான் உங்க புத்தி இப்படி இருக்கு'ன்னு சொல்றாங்களே .. என்ன செய்றது?!
This comment has been removed by the author.
ReplyDeleteமுகுந்த் அம்மா,
ReplyDelete//"கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை" என்ற உங்கள் கருத்தை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.//
இரண்டு பதில்கள் இதற்கு:
1. வளர்ப்பு.
2. நானும் இதே நிலையில் இருந்துதான் இப்போதைய நிலைக்கு வந்தேன்.
வளர்ப்பிலிருந்து கடந்து வந்தது மிக மிகக் கடினமே.
ஐன்ஸ்டீன் பற்றிச் சொல்லியுள்ளீர்கள். தயவுசெய்து இப்பதிவையும் வாசியுங்களேன். ஐன்ஸ்டீனை மேற்கோளிட்டுள்ளேன்.
வால்ஸ்,
ReplyDeleteஆடுமாடு,
M.S.E.R.K.
தேவன் மாயம்
mayakrishnan v
கும்மி
செல்வநாயகி
கா.பா.
அ.வெற்றிவேல்
The Analyst
..........எல்லோருக்கும் மிக்க நன்றி
This comment has been removed by the author.
ReplyDeleteகல்வெட்டு,
ReplyDelete//கருத்தரங்கை மாணவர்களுக்காக, ..ஏற்பாடு செய்யக்கூடாது?//
செய்து வந்த தொழிலே அதுதானே!
//சின்ன PDF கோப்பாக ஒன்றைத் தயாரித்து...//
எப்படி என்றால் கரம் கோர்க்க தயார்.
//தெருமுனைக் கூட்டங்கள் போடலாம்.//
என்னளவில் செய்து வரும் ஒரு வேலைதான். (இப்போது வர வர கொஞ்சம் கொஞ்சம் குறைத்துக் கொள்கிறேன்.) ஆனால் இதெல்லாம் பயனில்லை. பள்ளிகளில் இளமைப் பருவத்தில், தெரு நாடகங்களில் ... இப்படி முயற்சிப்பதே சரியாக இருக்குமென நினைக்கிறேன்.
கா.பா.,
ReplyDelete//முழுக்க முழுக்க அறிவியல் ரீதியாக கொண்டு சென்றால்..//
சொல்றது புரியுது; கட்டுரையின் நோக்கமும் அதுவே.
ஆனாலும் பழைய கதை .. மற்றைய பதிவுகளுக்கான பதில் என்ற சில கோடிகாட்டல் தவறல்ல என்று நினைக்கிறேன்; சரியா?
கையேடு,
ReplyDelete//ஆசிரியர்கள்தான் எளிதாகவும் விரிவாகவும் விளக்க முடியும்.//
அதுக்கு நல்ல ஆசிரியர்கள் வேணுமே .. எங்கே போறது?
உங்கள் கட்டுரையின் ஆழம் நன்கு நினைவிலிருக்கிறது.
டாக்டர்,
ReplyDelete//ஏதோ ஒரு சக்தி நடத்திக்கொண்டு இருக்கிறது..//
இது கொஞ்சூண்டு எஸ்கேப்பிஸமோ??!!
Sabarinathan Arthanari s,
ReplyDelete//பல்வேறு உலகங்களில் மனிதர்கள் இருப்பதாகவும்,..//
நீங்கள் குறிப்பிடுவது நாகலோகம், இந்திர லோகம், பாதாள லோகம், என்பது போன்ற புராணக் கதைகளா .. இல்லை .. நிஜக் கருத்துக்களா? அதுவும் அங்கு 'மனிதர்கள்' இருக்கிறார்களா??!!
//புராணக் கதைகளா .. இல்லை .. நிஜக் கருத்துக்களா?//
ReplyDeleteகதைகளோ தத்துவமோ அவைகள் பூமியையும் அதிலுள்ள மனிதர்களையும் மையப்படுத்தி மட்டும் இல்லை அல்லவா ?
மனிதர்கள் பிரபஞ்சத்தின் துளிகள் என்பதையே கூறுகின்றன.
பிர நட்சத்திர மண்டலங்களும், உலகங்களும் இருக்கும் சாத்திய கூறுகளையே முன் நிறுத்துகின்றன
நன்றி
உடன்பட முடியவில்லை.
ReplyDeleteமன்னிக்கவும் ... நன்றி
அய்யா
ReplyDeleteமுடிந்தால் Dancing wu li masters என்ற புத்தகத்தை படித்து பாருங்கள். அழகாக இயற்பியலையும் கடவுள் நம்பிக்கையையும் இணைத்து இருக்கிறார் Gary Zukav.
அழகிய தொடக்கம் தருமி சார்.
ReplyDeleteசிறந்த, பயனுள்ள தொடராக அமைந்திட நல்வாழ்த்துக்கள்.
//உடன்பட முடியவில்லை.
ReplyDeleteமன்னிக்கவும் ... நன்றி//
Man prefers to believe what he prefers to be true.
அன்பான நண்பர் திரு தருமி,
ReplyDeleteபதிவை இப்பொழுதுதான் படித்தேன். வாழ்த்துக்கள்! நீங்கள் கூறுவது போல இயற்க்கை தேர்வினால் நடக்கும் பரிணாமத்தை ஒரே தளத்திலிருந்து
புரிந்து கொள்ள முடியாது! அது பல ஆதார அறிவியல் விடயங்களை உள்வாங்கிக்கொண்டு புரிந்து கொள்ள வேண்டிய ஒரு அறிவியல் கோட்ப்பாடாகும்! அதை நீங்கள் சரியாக சொல்லி இருக்கிறீர்கள்! அவை, Geology, genes and its impact, fossil studies, dendrochronology, radio metric dating, fundamental physics and chemistry மற்றும் பல! புரிந்தால் மட்டும் போதாது, அதை உள்வாங்கிக்கொண்டு அவை எல்லாம் எப்படி ஒன்றுக்கு ஒன்று பிணைந்து டார்வினியன் பரிணாமத்தை உண்மையன
எப்பொழுதோ நிலை நிறுத்தி விட்டன என்பதை புரியாமல் மதவாதிகள் மற்றும் மதவாதம் செய்யாத நல்லவர்கள் கூட புரியாமல் பேசுகிறார்கள் என்பதை
நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது, சிலசமையம் பரிதாபமாக இருக்கிறது, பல சமையம் ஆத்திரமாக வருகிறது! டாவ்கின்சின் The greatest show on earth படியுங்கள்! அற்புதம் அற்புதம் அற்புதம்! மேலும் Jerry Coyne 's "Why evolution is true" போன வாரம்தான் வாங்கினேன் டாகின்ஸ் recomend செய்துள்ளார்
இந்த புத்தகத்தை! கேள்வி பட்ட வரையில் இது டாகின்சின் புத்தகத்தை விட ஒரு படி மேல் என்று! படித்துவிட்டு எழுதுகிறேன்!!
நன்றி
பயனுள்ள பதிவுகள். தொடரட்டும் உங்கள் அறிவியல் உலக சேவை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteபதிவை இப்பொழுதுதான் படித்தேன். வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்று! குரங்கின் மூளையால் ஒரு தேர்ந்த மொழியை கற்க முடியாது. அதற்கு தேவையான சொல்லகராதி மட்டுமல்ல, மீள்சுழற்சி செயல்பாடும் இல்லை. மனித மூளையால் அது முடியும். ஆனால் அதற்கு தேவையான பயிற்சி தேவை. அதே போல் தான் பல அறிவியல் விசயங்களும். பரிணாமத்தை மற்ற எந்த விலங்கும் புரிந்து கொள்ள முடியாது; ஒரு மனிதனால் முடியும். ஆனால், அதற்கு தேர்ந்த பயிற்சி தேவை. அப்படி பட்ட மூளையையே மனிதன் பரிணாம வளர்ச்சியில் பெற்றுள்ளான். அந்த பயிற்சியை தரும் உங்களுக்கு என் பாராட்டுக்கள்!
ReplyDeleteஇது சார்ந்த என் பதிவு:
http://icortext.blogspot.com/2009/11/blog-post.html