Thursday, April 29, 2010

390. கள்ளிக்காட்டுப் பள்ளிக்கூடம்

*

ஜெயலலிதா சொத்து வழக்கில் தீர்ப்பு; தர்மபுரி பஸ் எரிப்பு; 3 கல்லூரி மாணவிகள் அதில் எரிந்து சாம்பலானார்கள்; அ.தி.மு.க. "தலைவர்களுக்குத் தண்டனை" --
இப்படியெல்லாம் ஒரு விஷயம் நம் தெய்வத் திருத் தமிழ்நாட்டில் நடந்தது .. நினைவிருக்கிறதா? அந்த வழக்கு முடிவுக்கு வந்ததும் நம் பதிவர்கள் பலருக்கு 'சத்தியம் வெல்லும்' என்றெல்லாம் தோன்றி ஒரே மகிழ்ச்சியில் திளைத்தார்கள். ஆனால் வழக்கு வழக்கம் போல் தொடர்ந்தது; தொடர்கிறதோ என்னவோ ... தெரியவில்லை. (யாருக்கு வேண்டும் நீதி .. நியாயம்!!) பதிவர்களுக்கு நான் ஒரு சொல் அன்றே - இரண்டு ஆண்டுகளுக்கு முன் - சொன்னேன். கொஞ்சம் வாசித்துப் பாருங்களேன் என் பழைய பதிவை.

அன்றே நான் சொன்னது இன்றுவரை நடந்து வருகிறது. அந்த வழக்கும் முடியவில்லை. தீர்ப்புகள் "திருத்தி எழுதப்பட" காத்திருக்கிறது!. என்ன வழக்குகளோ .. என்ன தீர்ப்புகளோ ... என்ன நீதியரசர்களோ ...  ஒண்ணும் புரிய மாட்டேங்குது  :(

சரி .. இந்தக் கதை எதுக்கு இப்போ அப்டின்னு கேப்பீங்களே ..
எனக்கு முன்னால் பிடிச்ச சீரியல் 'கனாக்காணும் காலங்கள்'. இப்போது 'கள்ளிக்காட்டுப் பள்ளிக்கூடம்". வெறுமனே மாணவக்கூட்டம்.  No மாமியார் கொடூரம்; No  தியாகச் செம்மல்கள்; No ஜாதகக் கோளாறுகள் ...  இன்னும் பல Noக்கள் ..

ஜாலியா போச்சுது. சடார்னு ஒரு திருப்பம். அரசியல்வாதிகள் தங்கள் சுய அரிப்புக்காக மாணவர்கள் போன பஸ்ஸை எரிக்க ... 6 மாணவர்கள் எரிந்து போனார்கள். இப்போது மாணவர்கள் ஆசிரியர்களோடு இணைந்து தொடர்ந்து போராடுகிறார்கள். சினிமா எடுத்தபோது மாநிலம் மாற்றி ஒப்பேத்துனது மாதிரி இல்லாமல் இந்த சீரியலில் இச்சம்பவம் நம்மூரிலேயே நடப்பதாகக் காட்டியிருப்பதற்கே ஒரு "ஓ" போடலாம்.

இதுவரை கதையைக் கொண்டு சென்றதற்கு இயக்குனருக்கு நன்றி சொல்லணும். இப்போது செல்லும் வேகமும் நன்றாக உள்ளது,

எரியும் நெருப்பில் நீரூற்றாமல் சீரியல் செல்லும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து பார்த்து வருகிறேன்.

தயாரிப்பாளர், வசனகர்த்தா, இயக்குனர், விஜய் டி.வி. அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.






6 comments:

  1. நான் இந்த சீரியலை பார்ப்பதே மகிழ்ச்சிக்காகத்தான் ஆனால் தற்போது இந்த காட்சிகள் முடியும் வரை பார்க்க கூடாது என்று உள்ளேன்...

    சீரியலில் மொத்தமா 6பேரை எரித்துவிட்டார்கள்...

    முதல்ல 3 பேரை தர்மபுரி பஸ் எரிப்பிலும் மீதி மூன்று பேரை உங்க ஊர் தினகரன் பத்திரிக்கை அலுவலக எரிப்பிலும் காட்டுவதாகத்தான் இருந்ததாம், ஏன் அஞ்சா நெஞ்சன் பொல்லாப்பு என்று மொத்தமாக 6 பேரையும் தர்மபுரி பஸ் எரிப்பிலேயே முடித்துவிட்டார்கள் போல...

    ReplyDelete
  2. விஜய் டீ.வி. யிலா வருகிறது. பார்க்க முயலுகிறேன்.

    ReplyDelete
  3. குழலி,

    //இந்த காட்சிகள் முடியும் வரை பார்க்க கூடாது என்று உள்ளேன்...//

    இந்தக் காட்சிகளைக் காண்பிக்கும் தைரியத்திற்காகவே நான் பார்க்கிறேன்.

    மாணவர் படையைக் காப்பாற்றும் பாத்திரத்தின் பெயர் தெரியுமா?

    அழகர் ..!

    ReplyDelete
  4. டாக்டர்,

    //பார்க்க முயலுகிறேன்.//

    இப்போதுதான் தங்ஸ்கூட சண்டை போட்டு, 'இதயம்' தாண்டி இந்த சீரியலைப் பார்த்து வருகிறேன். விளம்பர சமயத்தில் மட்டும் கொஞ்சூண்டு 'இதயத்தைக்' காண்பிக்கிறேன் தங்ஸுக்கு ... :)

    ReplyDelete
  5. 真坤 ,

    s .. s .. it is very important.

    真倫
    音坤

    முந்திய பின்னூட்டம்தான் ரொம்ப பிடிச்சிது. அதான் உடனே பதில் போட்டுட்டேன்.

    :)

    ReplyDelete